Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் பிரித்தானிய பொதுத்தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு செய்தி ஒன்றை விடுத்துள்ள தொழிற்கட்சி சுயநிர்ணயத்துக்கான உரிமையையும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமாக தமது சொந்த எதிர்காலத்தை தீர்மானிப்பதன் உரிமையையும் அங்கீகரித்துள்ளது. ஸ்ரீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பில் ஐ நா தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கும் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படுவதற்கும் தனது முழுமையான ஆதரவை தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் பட்சத்தில் சிறிலங்காவுக்கான ஆயுத விற்பனை நிறுத்தபப்டும் என்றும் உறுதியளித்துள்ள தொழிற்கட்சி இனிமேல் பல்கலைக்கழகங்களில் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகளை செலவுசெய்யாமல் மாணவர்கள் இலவசமாக படிப்பதற்கும் ஆவண செய்துள்ளது. தமிழ் ம…

    • 0 replies
    • 377 views
  2. அமெரிக்க கொடிகளை ஏந்தி போராடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் : 100 ஆவது நாளில் ஊர்வலம் நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகின்றோம் என கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊர்வலம் ஒன்றினை இன்று மதியம் மேற்கொண்டனர். வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 100 ஆவது நாளை அடைந்தது. இதனை முன்னிட்டு வவுனியா கந்தசாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து பசார் வீதி ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அதனூடாக கண்டி வீதிக்கு சென்று தமது போராட்ட தளத்தை வந்தடைந்தனர். ஊர்வலத்தில…

  3. பாதிக்கப்பட்ட மக்களுடன் சம்­பந்தன் தென்­னி­லங்­கையில் அனர்த்தம் இடம்­பெற்ற பகுதிகளுக்கு இன்­றைய தினம் எதிர்க் கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் நேரடியாக சென்று பார்­வை­யிட்டுள்ளார். அதே வேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கியுள்ளார். Tags http://www.virakesari.lk/article/20591

  4. வவுனியாவில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் ஊர்வலத்தை புறக்கணித்த மக்கள் பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன என நீதி கோரி வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் 100 ஆவது நாள் ஊர்வலத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணித்துள்ளனர். இன்று காலை 11 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது. இதில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கரா ஆகியோர் கலந்து கொண்டனர். இருப்பினும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஊர்வலத்தில் அவர்கள் கலந்து கொள்ளது திரும்பிச் சென்று விட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 'நாம் அமெரிக்காவி…

  5. ரூ.22 மில். அன்பளிப்பு சீன பௌத்த சங்கத்தால் கையளிப்பு சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, சீன பௌத்த சங்கம் 22 மில்லியன் ரூபாய் நிதி அன்பளிப்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (03) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்துக் கையளித்தது. Sri Guanguan தேரர் உள்ளிட்ட சீன பௌத்த சங்கத்தின் தேரர்கள், இந்த நிதி அன்பளிப்பை, ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வண. கல்லேல்லே சுமனசிறி தேரரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். சீன அரசாங்கமானது தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிவரும் இத்தகைய ஒத்துழைப்புக்களினால் இருநாட்டிற்கும் இடையி…

  6. மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான சட்டம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் – கிழக்கு முதலமைச்சர் கிழக்கில் மதஸ்லங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீதும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போர் மீதும் சட்டம் கடுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியகட்டசகரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் திருகோணமலை பெரிய கடை ஜும் ஆ பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்து அது தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். …

  7. வெளி­நாட்டு தூது­வர்­க­ளு­ட­னான முஸ்லிம் சிவில் சமூ­கத்தின் சந்­திப்பு நாட்டில் சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ரான இன­வாத செயற்­பாடுகள் அதி­க­ரித்­துள்ள நிலையில் இத்­த­கைய இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து ஏழு நாடு­களின் தூது­வர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான பொது­ப­ல­சேனா அமைப்­பி­னரின் செயற்­பா­டுகள் தீவி­ர­ம­டைந்­தி­ருந்­தன. பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­ட­துடன் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்கள் மீதும் தொடர்ச்­சி­யான தாக்­கு­தல்கள் இடம்­பெற்று வந்­தன. முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­கவும் இஸ்லாம் மதத்­தினை நிந்­…

  8. நிவாரண நடவடிக்கையில் விபத்திற்குள்ளான ஹெலிக்கொப்டரை விமானப்படை மீட்டுச் சென்றது - படங்கள் இணைப்பு Published by Priyatharshan on 2017-06-03 09:13:21 அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்றகாலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்ட போது விபத்திற்குள்ளான எம்.ஐ. 17 என்ற ஹெலிக்கொப்டர் இலங்கை விமானப்படையினரால் விபத்திற்குள்ளான பகுதியில் இருந்து மீட்டெடுத்துச் செல்லப்பட்டது. சீரற்றகாலநிலையால் பத்தேகம பிரதேசத்தில் இடம்பெயர்ந்த கிராமம் ஒன்றுக்கு நிவாரணப் பொருட்களுடன் இலங்கை விமானப்படைக்கு சொந்ததமான ஹெலிகொப்டர் ஒன்று தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பத்தேக பிரதேசத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. இதன்போது குறித்த ஹெலிகொப…

  9. கொலைகள் புரிந்த இராணுவத்தினரை தண்டிக்காதது ஏன்? இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் சர­ண­டைந்து காணா­மற்­போ­ன­வர்­கள், இரா­ணு­வத்­தி­ன­ரால் கொலை செய்­யப்­பட்­டி­ருக் க­லாம் என்று முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா தெரி­வித்­துள்­ளார், எனவே அதற்­கு­ரிய ஆதா­ரங்­க­ளை­யும் வெளி­யி­ட­வேண்­டும். இரா­ணு­வம் அவர்­க­ளைக் கொலை செய்­து­விட்­டது என்­றால், குற்­றத்தை மேற்­கொண்­ட­வர்­க­ளுக்­குத் தண்­ட­னையை வழங்­க­வேண்­டி­ய­து­தானே! இவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளைத் தேடும் அவர்­க­ளது உற­வி­னர்­கள் நேற்­றுக் காட்­ட­மா­கத் தெரி­வித்­த­னர். காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் வடக்கு – கிழக்­கில் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்டு …

  10. திருகோணமலை பெரியகடை ஜூம்ஆ பள்ளி வாயல் மீது இன்று அதிகாலை (03) இனந்தெரியாத நபர்களினால் பெற்றோல் குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. நோன்பை நோற்றுவிட்டு தொழுகைக்காக பள்ளி வாயலுக்கு சென்ற பிரதேச மக்கள் பள்ளி வாசல் மீது தீ வைக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்டதையடுத்து பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 அழைப்பு விடுத்து தெரியப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது. பெற்றோல் நிரப்பப்பட்ட நான்கு போத்தல்கள் காணப்படுவதாகவும் பள்ளி வாசலின் காபட் மற்றும் பாய்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இடத்திற்கு விரைந்த துறைமுக பொலிஸார் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்…

  11. மகிந்த ராஜபக்ஷ காலத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்டிருந்த கருத்து சரியாக இருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் சந்திரிக்கா பண்டாரநாயக் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ராஜபக்ஷ காலத்து இராணுவத்தினரின் பழக்கத்தின்படி சரணடைந்த அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால், அப்போது அவர்களைப் பொறுப்பேற்றிருந்தால் அவர்கள் அனைவரையும் கொன்றிருப்பார்களேயன்றி இவ்வளவு காலமும் தடுத்து வைத்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவித்திருந்தார். அவரின் கருத்துத் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு தமிழ்த் த…

  12. ’50 வருடங்களில் யாழ்ப்பாணம் பாலைவனமாகும்’ 'வடக்கும் கிழக்கும், பாரியதொரு வரட்சிக்கு முகங்கொடுக்கவுள்ளன. இன்னும் 50 வருடங்களில், யாழ்ப்பாணம் ஒரு பாலைவனமாக மாறிவிடும். அந்தளவுக்கான அழிவுகள் இடம்பெற்றுள்ளன' என்று, நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 'தாயகப் பூமி என்று கூறிக்கொண்டிருப்பவர்கள், முதலில் தாம் வாழும் பூமியைக் காத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும், அமைச்சில் இன்று (50) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, அவர் கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/’50-வருடங்களில்-யாழ்ப்பாணம்-பாலைவனமாகும்’/175-197869

  13. சிறுபான்மை இனங்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை இலங்கையில் சிறுபான்மை இனங்களை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து மேற்கொள்ளப்படும் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலையை வெளியிட்டுள்ளது. இத்தகைய செயல்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முஸ்லிம் சமூகத்தை மாத்திரமன்றி நாட்டின் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயற்படுபவர…

  14. ஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை அரசியல் பிரமுகர் தடுக்கின்றார் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை, அரசியல் பிரமுகர் ஒருவர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஞானசார தேரரை கைது செய்ய நான்கு காவல்துறை குழுக்கள் கடந்த வாரம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவினால் இந்த காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன, மத வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுவதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், ஞானசார தேரர் கைதாவதனை உயர் அரசியல்வாதியொருவர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. …

  15. ’மாற்றத்தை எமது மனதிலேயே தேடுவோம்’ “பிளாஸ்டிக் பைகளின் சொகுசுக்குப் பழக்கப்பட்ட எங்களுக்கு அவற்றைக் கைவிடுவதற்கு மனம் இல்லாமல் இருக்கிறது. பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்று சந்தைக்கு வராமல் அவற்றைக் கைவிட முடியுமா என்றும் பலர் கேட்கிறார்கள். பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்று வேறு எங்கேயும் இல்லை. எமது மனங்களில்தான் இருக்கிறது. பிளாஸ்டிக் பைகளைக் கைவிட வேண்டும் என்று நாம் மனதளவில் உறுதியாகத் தீர்மானித்தால் மாற்று தானாக வரும்” என்று, வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன. யாழ். திருக்குடும…

  16. திருமலையில் மாணவர்கள் பகிஷ்கரிப்பு தமிழ்ப்பாடசாலைகள் ஸ்தம்பிதம் நீதிவழங்கக்கோரி ஆர்ப்பாட்டமும் தொடர்கிறது (மூதூர்,சேனையூர்,திருமலை மேல­திக நிரு­பர்கள்) மூதூர் பெரியவெளியில் பாட­சாலை மாண­வி­க­ளான சிறு­மிகள் மூவர், துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்குக் கண்­டனம் தெரி­வித்து, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள அனைத்துத் தமிழ் பாட­சா­லை­க­ளிலும் மாண­வர்கள் நேற்று வகுப்பு பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­ட­துடன் ஆசி­ரி­யர்கள் பாட­சா­லைக்கு வருகை தரா­ததால் பாட­சா­லைகள் இயங்­காது ஸ்தம்­பி­த­மா­கின. இந்தப் பகிஷ்­க­ரிப்­பிற்­கான அழைப்­பினை கிழக்கு மாகாண தமிழர் ஆசி­ரியர் சங்கம் விடுத்­தி­ருந்­தது. இத­ன­டிப்­ப­டையில் திரு­கோ­ண­மலை கல்வி…

  17. புலிகளை அதிகம் விரும்பும் மகிந்த இல்லையேல் அவரால் அரசியல் செய்ய இயலாது என்கிறது ஜே.வி.பி. வடக்­குத் தமி­ழரை விட­வும் மகிந்­தவே புலி­கள் மீண்­டும் வரு­வதை அதி­கம் விரும்­பு­ கின்­றார். புலி­கள் இல்­லை­யென்­றால் அவ­ரால் அர­சி­யல் செய்ய முடி­யாது. புலி­கள் மீண்­டும் வரு­வார்­கள் என்ற பயத்தை மகிந்த தெற்­கில் உரு­வாக்­கிக்­கொண்டு இருக்­கின்­றார் என்று மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டை மாறிமாறி ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் தங்களது இயலாமையை நிரூபித்துள்ளன. அமைச்சர்களே மரத்தை வெட்டுகின்றார்கள்; மண்ணை அள்ளுகின்றார்கள்; வாகன வரி அனுமதியை விற்கின்றார்கள்;…

  18. அனர்த்தம் இடம்பெற்ற இடங்களுக்கு சம்பந்தன் தலைமையிலான குழுவினர் விஜயம்! தென்னிலங்கையில் அனர்த்தம் இடம்பெற்ற இடங்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை நேரில்சென்று பார்வையிடவுள்ளனர். அண்மைக்காலமாக நீடித்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக 208உயிர்களைக் காவு கொண்டுள்ள பாரிய அனர்த்தம் தென்னிலங்கையில் நிகழ்ந்திருந்தது. தென்னிலங்கையின் காலி, மாத்தறை மாவட்டங்களும், இரத்தினபுரி, களுத்துறைமாவட்டங்களும் இந்த அனர்த்தத்தின் காரணமாக முழுமையாக சீர்குலைந்துள்ளன. மழையுடன் கூடிய காலநிலை தொடர்கின்ற நிலையில் அனர்த்தத்தால் ஏற்பட்ட பகுதிகளைநேரில் சென்று பார்வையி…

    • 0 replies
    • 334 views
  19. குரூரமான போரின் கசப்பான அனுபவங்களை நினைவுகூருவதுடன், மீண்டும் அவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படாதவாறு செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகும். : ஜனாதிபதி Published by RasmilaD on 2017-06-03 08:52:23 பூமியை குருதியால் தோய்த்த மூன்று தசாப்த கால குரூரமான போரின் கசப்பான அனுபவங்களை நினைவு கூருவது போன்றே மீண்டும் அவ்வாறான அனர்த்தம் நாட்டில் ஏற்படாதவாறு செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி தெரிவித்தார். எவ்வாறான விமர்சனங்கள் வந்தாலும் அவ்வாறான துர்ப்பாக்கிய காலத்தின் இருளிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டு, அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழக்கூடிய சமாதானமான நாட்டைக் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்பு…

  20. தென்பகுதி மக்களுக்கு கிளிநொச்சியிலிருந்து நிவாரண பொருட்கள் Published by Priyatharshan on 2017-06-03 09:38:03 நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட செயலகமும் பிரதேச செயலகங்களும் இணைந்து கிளிநொச்சி வாழ் மக்கள் மற்றும் வர்த்தகர்கள் வழங்கிய உணவுப்பொருட்களை நேற்றைய தினம் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகமின் தலைமையில் சென்ற உத்தியோகத்தர்கள் காலி மாவட்ட செயலகத்தில் கையளித்தனர். உலர் உணவு, மருத்துவப் பொதிகள் மற்றும் ஆடைகள் உட்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதிக்கு மேற்பட்ட நிவாரணப்பொருட்கள் மூன்று பார ஊர்திகளில் எடுத்து செல்லப்பட்டன. இப்பெருந்தொகையான நிவாரணப்பொருட்களை வழங்கிய மாவட்ட ம…

  21. வெள்ளம் மண்சரிவினால் 7600 கர்ப்பிணித்தாய்மார் பாதிப்பு Published by RasmilaD on 2017-06-03 09:57:04 (பா.ருத்­ர­குமார்) வெள்ளம் மற்றும் மண்­ச­ரி­வினால் 7600 கர்ப்­பிணிதாய்மார்­களும் ஒரு இலட்­சத்து ஐம்­ப­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட பெண்­களும் ஒரு இலட்­சத்து 89 ஆயிரம் சிறு­வர்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடு­களின் இலங்­கைக்­கான வதி­விட அலுவலகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் சுகா­தார அமைச்சின் கோரிக்­கைக்­கேற்ப ஐக்­கிய நாடு­களின் குடும்ப கட்­டுப்­பாட்டு அமைப்­பினால் சிறு­வர்­க­ளுக்­கான 10 ஆயிரம் உள்­ளாடை அடங்­கிய பொதி­யையும் கர்ப்­பிணி தாய்மார்களுக்­கான 2000 உள்­ளாடை அடங்­கிய பொதியும் வழங்க…

  22. கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவியை கருத்தமர்வு எனக்கூறி அப்பாடசாலையில் கணிதபாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றமையானது பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது குறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது என அழைத்து சென்றுள்ளார் எனவும் ஆசிரியருக்கு பலதடவைகள் தொடர்பை ஏற்படுத்திய பொழுதும் மாணவி கருத்தரங்கில் இருக்கின்றார் சிறிது நேரத்தில் எடுங்கள் எனக் கூறுகின்றாரே தவிர மாணவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என தர்மபுரம் காவல் நிலையத்தில் மாணவியின் சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து சில மணிநேரத்துக்குள் மாணவியையும் ஆசிரியரும் விஸ்வமடு பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ள…

    • 0 replies
    • 413 views
  23. சக்தி டிவி செய்திகள் 8PM (02/06/2017)

  24. இலங்கையில் இயல்பு நிலைக்கு திரும்பும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Image captionமாத்தறை மாவட்டத்திற்கு அமைச்சர் ரவூப் `ஹக்கீம் விஜயம் இந்த அனர்த்தங்கள் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்திருந்த குடும்பங்களில் பெரும்பாலானவை தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஏற்கனவே அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் 25 ஆயிரம் குடும்பங்களை …

  25. கிளிநொச்சி படையினரால் நூறு மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் குறைந்த வருமானத்தை கொண்ட நூறு மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ,மல்லாவி, பூநகரி, விசுவமடு பிரதேசங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாணவா்களுக்கு புத்தக பை பயிற்சி கொப்பிகள் தண்ணீர் போத்தல், என்பவற்றோடு, காலணி கொள்வனவு செய்வதற்கு ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன. கிளிநொச்சி இரணைமடு தாமரைத் தடாக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் பாடசாலைகளின் அதிபா்கள் ஆசிரியர்கள் மாணவா்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனா். …

    • 2 replies
    • 388 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.