Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை செய்ய தீர்மானம் கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை செய்வதாக இன்று 06-04-2017 தீர்மானிக்கப்பட்டுள்ளது . கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் செய்யப்படுகின்ற சிறுபோக நெற்செய்கை இவ்வருடம் குளத்து நீர் பத்தடியில் காணப்படுவதனால் குளத்தின் நீரின் அளவை கருத்திற் கொண்டு கிளிநொச்சி மருதநகர் பகுதியை அண்மித்த பகுதிகளில் சுமார் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது இன்றையதினம் கிளிநொச்சி கோவிந்தன்கடைச் சந்தியில் அமைந்துள்ள இரணைமடு திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் இரனைமடுத் திட்டப்பணிப்பளரும் பிர…

  2. கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலொன்றில் தீ! (படங்கள்) கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலொன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த பனாமா நாட்டுக்கு சொந்தமானதென கருதப்படும் சரக்கு கப்பலே இவ்வாறு தீ பரவலுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் கடற்படை குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததுள்ளதாக தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/18719

  3. குற்றப்பணம் கைமாறும் நியதி சட்டத்திற்கு வடமாகாண சபை அங்கீகாரம். நீதிமன்ற குற்றப்பணங்களையும், தண்டப்பணங்களையும் கைமாற்றும் நியதிச்சட்டம், வடமாகாண சபையில் இன்று (06) அங்கிகரிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 90ஆவது அமர்வு, யாழ். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டடத்தொகுதியில், வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. நீதிமன்றங்களினால் அறவிடப்படும் குற்றப்பணங்கள் மற்றும் தண்டப்பணங்களை, வடமாகாண உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கான ஒரு நிதியச் சட்டத்தினை உருவாக்கும் நோக்கில், முதலமைச்சரினால் குறித்த நியதிச்சட்டம் கொண்டுவரப்பட்டது. வடமாகாண முதலமைச்சரினால் கொ…

  4. மீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியாவிடமிருந்து நல்ல சமிக்ஞை ; அமைச்சர் மஹிந்த அமரவீர (எம்.சி.நஜிமுதீன்) மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியா மிகுந்த கரிசனை காட்டி வருகிறது. எனவே அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அந்நாட்டுப் பிரதிநிதிகள் நாளை இலங்கைக்கு வருகைதருகின்றனர். அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை உட்பட அமைச்சு மட்ட பேச்சுவார்த்தைகளும் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. ஆகவே மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். “சீ நோர்” நிறுவனம் மீன்பிடித்துறைக்கு நவீன வசதி கொண்ட படகுச் சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படகினை மீன்பிடித்துறைக்கு உத்தியோகபூர்வமாக…

  5. இருவருக்கு அவைத்தலமை -எஸ்.நிதர்ஸன் வடமாகாண சபை அவைத தலைவர் மற்றும் பிரதி அவைத் தலைவர் ஆகியோர் சபையில் இல்லாத நிலையில், மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர், சபைக்குத் தலைமை தாங்கலாம் என, வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் அமர்வு, இன்று (06) இடம்பெற்றது. இதன்போது, வடமாகாண சபை அவைத்தலைவர் மற்றும் பிரதி அவைத்தலைவர் சபையில் இல்லாத நிலையில், மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் சபையினை தலைமை தாங்கலாம் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டார். இதேவேளை கடந்த சபை அமர்வின் போது, அவைத்தலைவர் சி.…

  6. இழு­த்­த­டிக்­காமல் மிகத் தௌிவாக செயற்ப­டு­வ­தற்­கா­ன ­அவகா­சமே இது - ரணிலிடம் அழுத்திக் கூறியது பன்னாட்டு மன்னிப்புச் சபை ஜ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் வழங்­கப்­பட்ட கால அவ­கா­சத்தை, கால இழுத்­த­டிப்­புக்­கா­கப் பயன்­ப­டுத்­தக் கூடாது. தீர்­மா­னத்­தில் சொல்­லப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களை முழு­மை­யாக நிறை­வேற்ற வழங்­கப்­பட்ட காலத்தைப் பயன்­ப­டுத்த வேண்­டும். இவ்­வாறு கொழும்பு அர­சின் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் அழுத்­தம் திருத்­த­மாக எடுத்­து­ரைத்­துள்­ள­தாக, பன்­னாட்டு மன்­னிப்­புச் சபை­யின் செய­லர் சயில் செட்டி தெரி­வித்­தார்.இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள சயில் செட்டி தலை­மை­யி­லான குழு­வி…

  7. போர்க் குற்றம் இல்லை எனில் அவகாசம் கோரியது ஏன்? எஸ்.நிதர்ஸன் இலங்கையில் இடம்பெற்ற போரின்போது, போர்க் குற்றம் இடம்பெறவில்லை என்றால், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று, இலங்கை அரசாங்கம் கால அவகாசத்தைக் கோரியது ஏன் என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யுத்தத்தின் போது யார் குற்றமிழைத்தாலும், அது மனித குலத்துக்கு எதிரான குற்றமே. எனவே, இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றும், முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அரசாங்க அமைச்சர்களுள் ராஜித சேனாரத்ன, தமிழ் மக்களுக்கு வேண்டியவர். அவர், யுத்தக் குற்றம் தொடர்பில் எதைக் கூறினார் என்று எனக்குத் தெரியாது. எங்களுடைய பத்திரிகைகள்…

  8.  ‘தமிழ் அமைச்சர்கள் ஒத்து ஊதுகின்றனர்’ தமிழர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில், ஜனாதிபதி, பிரமருடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வை பெற்றுக்கொடுக்காமல், அரசாங்கத்துக்கு ஒத்து ஊதுகின்ற செயற்பாடுகளையே தமிழ் அமைச்சர்கள் மேற்கொள்கின்றனர் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இன்றைய நல்லாட்சியில் எந்தவிதமான நல்ல விடயங்களும் தமிழ் மக்களுக்கு நடப்பதாக தெரியவில்லை என்றும் அந்த காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஜனநாயக மக்கள் காங்கிரஸ் நிர்வாக செயலாளரான என்.ரவிகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் போனோ…

  9. கால அவ­கா­சத்தில் உள்­ளக விசா­ரணை ஊடா­கவே உண்­மைகளை கண்­ட­றிவோம் சர்­வ­தேச விசா­ர­ணைக்கோ கலப்பு நீதி­மன்­றத்­துக்கோ இட­மில்லை என்­கி­றது அர­சாங்கம் (ஆர்.யசி ) உண்­மை­களை கண்­ட­றியும் நகர்வில் உள்­ளக பொறி­மு­றையின் மூல­மா­கவே தீர்வு ஒன்று பெறப்­படும்.எமக்கு வழங்­கப்­பட்­டுள்ள கால அவ­கா­சத்தில் இறுதி யுத்­தத்தின் போது காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் மற்றும் சுமத்­தப்­பட்­டு­வரும் யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உள்­ளக ரீதியில் விசா­ர­ணையை முன்­னெ­டுத்து உண்­மை­களை கண்­ட­றிந்து அறிக்­கையை சமர்ப்­பிப்போம் என்று அர­சாங்கம் தெரி­வித்­தது. கலப்பு நீதி­மன்றம் ஒன்றை உரு­வாக்க எந்த விதத்­திலும் அர­சாங்கம் தயா­ராக இல்லை. இலங்­கையின் நீதி…

  10. வாழ்வாதார அபிவிருத்தி உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும்: ஆஸி. அமைச்சரிடம் முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் கோரிக்கை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அவுஸ்திரேலிய அமைச்சர் கொன்சீட்டா ப்யரவான்ரி, வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது. அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் கொன்சீட்டா ப்யரவான்ரியின் முதல் இலங்கை விஜயம் இதுவாகும். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் வடக்கின் நிலைமைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்ற…

  11. இந்திய அமைதிப்படையின் மீறல்களை இந்தியாவிடம் கொண்டு செல்வோம் – அனைத்துலக மன்னிப்புச்சபை சிறிலங்காவில் தங்கியிருந்த போது, ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்திய அமைதிப்படையினர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டால், அதுகுறித்து இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அனைத்துலக மன்னிப்புச்சபையின் பொதுச்செயலர் சலில் ஷெட்டி கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். சிறிலங்காவில் தங்கியிருந்த 1987இற்கும் 1990இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு இந்திய அமைதிப்படையினர் பொறுப்பாக இர…

    • 0 replies
    • 360 views
  12. சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்களை அகற்ற முடியாது – சிறிலங்கா பிரதமர் தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்பதால், சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்கள் அகற்றப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிலாவத்துறையில் உள்ள கடற்படை முகாமை அகற்றி அங்கு மக்களை மீளக்குடியேற்ற வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சல்மானும், முள்ளிக்குளத்தில் உள்ள கடற்படைத் தளத்தை அகற்றி அங்கு மக்களைக் குடியமர்த்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாள்ஸ் நிர்மலந…

    • 0 replies
    • 291 views
  13. இந்தியப் படகுகளை விடுவிக்கவே கூடாது - மன்னார் மாவட்ட மீனவர் சங்கம் போர்க்கொடி அர­சுக்­காக மட்­டுமே கருத்­து­ரைக் கும் சில மீன­வர் அமைப்­பு­க­ளின் தலை­வர்­கள் கொழும்பு சென்று மீன­வர்­க­ளின் விருப்­புக்கு மாறாக இந்­திய இழு­வைப் பட­கு­களை விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கியமை கண்டனத்துக்குரியது. இவ்­வாறு மன்­னார் மாவட்ட மீன­வர் சங்­கங்­க­ளின் தலை­வர் யஸ்­ரின் சொய்சா தெரி­வித்­தார். வடக்­குக் கட­லில் இடம்­பெ­றும் இந்­திய மீன­வர்­க­ளின் அத்­து­மீ­றிய மீன்­பிடி மற்­றும் இலங்­கை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இந்­திய பட­கு­களை விடு­விப்­பது உள்­ளிட்ட பல விட­யங்­கள் தொடர்­பில் பேச்சு இடம்­பெ­ற­வுள்­ளது. அது தொடர்­பி­லான…

  14. 5 வருடங்களில் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற 6,176 பேர் கைது இலங்­கை­யி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மாக வெளி­நாடு செல்ல முற்­பட்ட குற்­றச்­சாட்­டில் 6 ஆயி­ரத்து 176 பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று சட்­டம், ஒழுங்கு அமைச்­சர் சாகல ரத்­நா­யக்க தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுப் புதன் கி­ழமை வாய்­மூல விடைக்­கான கேள்வி - பதில் நேரத்­தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வாசு­தேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக் குப் பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, குற்றப் பரிசோதனைத் திணைக்களத்தால் நிறுவப்பட்டுள்ள கடல் வழியாகச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்வதைத…

  15. இலங்கைக்கு எதிராக பயண எச்சரிக்கை விடுக்க முடியாது – அரசாங்கம் இலங்கைக்கு எதிராக பயண எச்சரிக்கை விடுக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. H1N1 காய்ச்சல் பரவல் காரணமாக கட்டார் அரசாங்கம் இலங்கைக்கு தமது நாட்டுப் பிரஜைகள் பயணம் செய்வது தொடர்பில் பயண எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் இந்த பயண எச்சரிக்கையானது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நோய்த் தொற்றுத் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையானது அசாதாரண நிலைமை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamil…

  16.  ‘கடைசி ஆசையைக் கூறியதால் கண்களை பிடுங்கினர்’ ஜே.ஏ.ஜோர்ஜ் இலங்கையில் படுகொலைக் கலாசாரம், 1954ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டு, 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது” என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவஞானம் சிறிதரன், “தமிழீழத்தைக் கண்களால் காண்பதே தங்களின் கடைசி ஆசையாகும் என்று நீதிமன்றத்தில் கூறியமையால், சிறைக்குள்ளேயே கண்கள் பிடுங்கியெடுக்கப்பட்ட நிலை அன்று காணப்பட்டது” என்றும் கூறினார். “கடந்த காலத்தில் தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒரு பகுதியினருக்கு ஒருவ…

  17. திருகோணமலையில் இடம்பெற்ற தேசிய யொவுன் புரய 2017 நிகழ்வுக்காக சென்ற ஜெனாதிபதியை அங்குள்ள அரசியல் தலைவர்கள் கிண்ணியா வைத்தியசாலைக்கு ஐனாதிபதியை கூட்டி சென்றது தமது வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் திருகோணமலைக்கு வந்த ஜனாதிபதியை த.தே.கூட்டமைப்பின் தலைவர் திருகோணமலை பத்திரகாளி கோவிலுக்கு அழைத்து கோவில் கோபுரத்தை உயர்துவதற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். வடகிழக்கில் காணாமல்போன உறவுகள் மாதங்களை கடந்து போராடுகின்றனர்,நிலவிடுவிப்புக்காக போராடுகின்றனர்,வேலைவாய்ப்புக்காக போராடி வருகின்றனர் ஆனால் இதில் எவற்றுக்குமே ஜெனாதிபதியை அழைத்து சென்று தீர்வுபெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக ஆலையங்களுக்கு அழைத்து முடிசூட்டி கௌரவிப்பதையும், பிறந்தநாள…

    • 0 replies
    • 447 views
  18. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு. முதலாவது சந்தேக நபருக்கு எதிராக புதிய வழக்கு புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபருக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் புதிய வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள சந்தேக நபர்களில் முதலாவது சந்தேக நபர் , “தம்மை பழிவாங்கும் நோக்குடன் பொய் குற்றசாட்டு சுமத்தி கைது செய்து உள்ளதாகவும் , தாம் வெளியில் வந்த பின்னர் அவரை கண்டால் வெட்டுவோம். ” என கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து கொலை மிரட்டல் விடுத்தி…

  19. "யாழ்ப்பாணத்தில் பிடிப்படும் போதைப்பொருட்களின் பின்னணியில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் உடந்தை" (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) யாழ்ப்பாணத்தில் பிடிப்படும் போதைப்பொருட்களின் பின்னணியில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் உடந்தையாக உள்ளனர். கேரள கஞ்சா கிலோ கணக்கில் கைப்பற்றும் பொலிஸார் ஏன் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை. போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் நாடகம் அரகேற்றப்படுகின்றது. வடக்கில் பாதுகாப்பு படையினரை நிலைநிறுத்துவதற்காக நாடகம் அரகேற்றப்படுகின்றது. இதன் பின்னணி இடம்பெயர்ந்தவர்களை அகதி முகாம்களில் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கான நாடகமா என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் கேள்வி எழுப்…

  20. சீன உயர் அரசியல் ஆலோசகர் இலங்கை வருகிறார் சீன உயர் அரசியல் ஆலோசகர் யூ ஸெங்செங், நேற்று முதல் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இலங்கை மற்றும் பாகிஸ்தான் செல்லவுள்ளாரென, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின், தேசியக் குழுவின் தவிசாளராக உள்ள ஆலோசகர் யூ ஸெங்செங், இலங்கை சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாகிஸ்தான் மேல் சபைத் தலைவர் மியன் ரஸ நபானி ஆகியோரின் அழைப்பின் பேரில், இந்த இரண்டு நாடுகளுக்கும் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரதிநிதி…

  21. "முள்ளிக்குளம் கடற்படை முகாம் அமைந்துள்ள காணி பொது மக்களுக்கு சொந்தமானது" : மக்களின் துயரத்தை பிரதமர் அறிவாரா? (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முள்ளிக்குளம் கடற்படை முகாம் அமைந்துள்ள காணி பொது மக்களுக்கு சொந்தமானது. தமது பூர்வீக நிலத்தை இழுந்து வாழும் மக்களின் துயரத்தை பிரதமர் அறிவாரா? மக்களின் துயரங்களை புரிந்து கொண்டு பொறுப்பு வாய்ந்த பதவியில் உள்ளவர் என்ற வகையில் பிரதமர் பதில் வழங்க வேண்டும். முள்ளிக்குளம் காணி தொடர்பில் பிரதமர் அளித்த பதில் பிரதமர் ஒருவர் அளித்த பதில் அல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான நேரடியான…

  22. 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து முன்னோக்கிய செயற்பாடுகளை எடுங்கள் பிரதமரை நேரில் சந்தித்த டக்ளஸ் எம்.பி கோரிக்கை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முன்னோக்கிய செயற்பாடுகளை எடுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் நேரடியாக கோரிக்கை விடுத்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்த 13 இற்கு அப்பால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதியதொரு விடயம் முன்வைக்கப்படுமானால் அதற்கு எமது கட்சி ஆதரவளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நா…

  23. சந்தேகநபரின் பிள்ளைகள் தொடர்பில் விசாரணை எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் 1ஆவது சந்தேகநபரின் பிள்ளைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு, சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று (05) உத்தரவிட்டார். மாணவி, 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி, வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன. குறித்த வழக்கு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் புதன்கிழமை (05), விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. …

  24. சுமந்திரன் கொலை முயற்சி சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை மேலும் 14 தினங்களுக்கு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில், நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம…

  25. இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் நல்லாட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த போட்டி தொடர்பில் தற்போது இணையத்தளத்தில் பலராலும் பேசப்பட்டு வருகின்றது. மொரட்டுவ பல்கலைகழக மாணவர்களால் குறித்த போட்டியின் போது மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமே இதற்கு காரணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சைட்டத்திற்கு எதிராக இவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு கிரிக்கெட் வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்கவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் முட்டாள் தன்மையிற்கு எல்லையில்லையா ? என்று பதிவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.