Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோத்தாவினால் மைத்திரியை வெற்றி கொள்ள முடியாது – இசுரு தேவப்பிரிய அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்தி்ரிபால சிறிசேனவே வெற்றி பெறுவார் என்றும், கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். ‘2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் மைத்திரிபால சிறிசேனவே தெரிவு செய்யப்படுவார். முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மிகவும் விரும்பப்படும் ஒருவராக மைத்திரிபால சிறிசேன இருக்கிறார். அவரிடம் கோத்தாபய ராஜபக்சவிடம் இல்லாத அரசியல் ஆளுமையும், அனுபவமும் இருக்கிறது. கோத்தாபய ராஜபக்ச திறமையான…

    • 0 replies
    • 149 views
  2. யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், பதுளை மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9இல் இருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 6இல் இருந்து 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்படுவது வழக்கமாகும். http://www.puthinappalakai.net/2017/03/29/news/22240

    • 0 replies
    • 137 views
  3. ஏமாற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் முஸ்லிம்களின் பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக இணைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையொப்பமிட்டமைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்துள்ளனர். மன்னார், மரிச்சுக்கட்டி, பாலைக்குழி மற்றும் கரடிக்குழி பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட நிலையில், நல்லாட்சி அரசாங்கமும் எங்களுக்கு நல்லதை செய்யாமல், பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த காணியினை கொள்ளை அடிக்கும் சூழ்சிகளை செய்துள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவ…

    • 0 replies
    • 193 views
  4. ஒரே நாட்டிற்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டும்; இலங்கையர் என்ற அடையாளம் வேண்டும் நாட்டைப் பிரிக்காமல் ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை் ஏற்படுத்துவதற்கு அதிகாரத்தை பரவலாக்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கூறுகின்றார். மருதானை சுதுவெல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த சிலை ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் போது நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது எவ்வாறு என்று சிந்த…

    • 0 replies
    • 184 views
  5. 16 மாதங்களில் சிறிலங்கா கடற்படை ஈட்டியுள்ள 3 பில்லியன் ரூபா வருமானமாம்? தமிழீழம் கடந்த 16 மாதங்களில் வணிகக் கப்பல்களுக்கு அளித்து வந்த பாதுகாப்புச் சேவையின் மூலம், சிறிலங்கா கடற்படை, 3 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது. காலியில் உள்ள நிலையத்தில் இருந்தே இந்த வருமானம் பெறப்பட்டுள்ளது. சிறிலங்காவை அண்டிய கடற்பரப்பு வழியாகப் பயணம் மேற்கொள்ளும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்புச் சேவைகளை வழங்கியதன் மூலம் இந்த வருமானம் ஈடுடப்பட்டுள்ளது. முன்னர் அவன்ட் கார்ட் நிறுவனத்தினால் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், இந்த பாதுகாப்பு சேவை சிறிலங்கா கடற்படையிடம், கடந்த 2015நொவம்பர் மாத நடுப்பகுதியில் கையளி…

    • 0 replies
    • 192 views
  6. சீனாவின் அம்பாந்தோட்டை விவகாரம் : இந்தியா மௌனம் காப்பது வியப்பளிக்கின்றது : கோத்தபாய ராஜபக்ஷ (லியோ நிரோஷ தர்ஷன்) அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதமான பங்குகளை 99 ஆண்டுகளுக்கு சீனாவிற்கு வழங்கவுள்ளது. இந்தியா மௌனம் காப்பது வியப்பாக உள்ளது என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்துவதற்கு யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று நாம் டில்லிக்கு கூறியிருந்தோம். ஆனால் அதனை அன்று இந்தியா நம்பவில்லை. இதற்காக ஆட்சி மாற்றத்திற்காக செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தின் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ…

  7. ஏல சபையிலுள்ள அனைத்து நிர்வாக உறுப்பினர்களையும் நீக்குவதற்கு தீர்மானம்! : மத்திய வங்கி ஆளுனர் (பா.ருத்ரகுமார்) நல்லாட்சி அரசாங்கத்தினால் பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வினைத்திறனான முறையில் தனது விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் ஏல சபையிலுள்ள அனைத்து நிர்வாக உறுப்பினர்களையும் நீக்குவதற்கு மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தீர்மானித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற சர்ச்சைக்குறிய பிணைமுறி ஏலம் தொடர்பில் மத்திய வங்கியின் ஏல சபை உறுப்பினர்கள் பினைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளனர். எனவே இதன்பின்னர் ஆணைக்குழுவின் விசாரணைகளை உறுதிப்படு…

  8. வடமாகாணத்தில் நாளை போராட்டங்கள் எஸ்.நிதர்ஸன் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்டச் செயலகங்களுக்கு முன்பாக, வேலையற்ற பட்டதாரிகளால் நாளை (30) கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இப்போராட்டங்களுக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. கடந்த 27ஆம் திகதி முதல், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக, காலவரையறையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி, வடமாகாணத்தின் 5 மாவட்டச் செயலகங்களுக்கும் முன்பாக நாளை போராட்டங்களை நடத்தவுள்ளதாக…

  9. காணா­மற்­போ­னோர் விவ­கா­ரத்­துக்கு அரச தலை­மை­க­ளு­டன் பேசித் தீர்வு - வடக்கு முத­ல்வர் தெரி­விப்பு'' “அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் அல்­லது தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் பேசி காணா­மற்­போ­னோர் விவ­கா­ரத்­துக்கு தீர்­வைப் பெ அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் அல்­லது தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் பேசி காணா­மற்­போ­னோர் விவ­கா­ரத்­துக்கு தீர்­வைப் பெற்­றுக் கொடுக்­கும் நோக்­கில், காணா­மற்­போ­னோ­ரின் உற­வி­னர்­க­ளின் விவ­ரங்­கள் பெறப்­பட்­டுள்­ளன” இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். காணா­மற்­போ­னோ­ரின் உற­வி­னர்­க­ளின் சங்…

  10. காணி விடுவிப்புக் குறித்து மைத்திரி சம்மந்தன் பேச்சு காணி­கள் விடு­விப்­புத் தொடர்­பாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்­கும் இடையே அரச தலை­வர் செய­ல­கத்­தில் சந்­திப்பு நடை­பெற்­றது. எனினும் முடி­வு­கள் எது­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்று தெரிய வரு­கின்றது. புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் அனைத்­துக் கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் இடையே அரச தலை­வர் செய­ல­கத்­தில் நேற்று முன் தினம் இரவு சந்­திப்பு நடை­பெற்­றது. இந்­தச் சந்­திப்பு முடி­வ­டைந்த பின்­னர், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, தனி­யா­கச…

  11. “வடக்கு மாத்திரமின்றி தெற்கும் அதிகாரத்தை கோருகிறது” : பிரதமர் - எம்.எம்.மின்ஹாஜ் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் போது நாட்டை பிரிக்காமல் எப்படி அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். நாங்கள் யாரும் நாட்டை பிரிப்பதாக கூறவில்லை. ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்ந்தளித்து ஒவ்வொரு பிரதேச மக்களும் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கும் தன்னுடை மத வழிபாடுகளை முன்னெடுப்பதற்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் மாத்திரம் கோரவில்லை. மாறாக தென் மாகாண முதலமைச்சரும் அதிகாரத்தை பகிர்ந்…

  12. ஸ்ரீ லங்கா ஏயார்லைன்ஸ்க்கு இன்னுமொரு பங்காளி ஸ்ரீ லங்கா ஏயார்லைன்ஸை, அரசாங்க – தனியார் பங்குடமையாக மாற்றும் நோக்கில், ஏற்கெனவே தெரிவுசெய்யப்பட்ட ரெக்ஸாஸ் பசுபிக் குழுமத்துக்கு மேலதிகமாக, இன்னுமொரு பங்காளியைத் தேட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அரசாங்க முயற்சியாண்மை அபிவிருத்தியமைச்சர் கபீர் ஹாஸிம், நேற்றுத் (28) தெரிவித்தார். அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரிய போது கிடைத்த 14 விண்ணப்பங்களிலிருந்து ரெக்ஸாஸ் பசுபிக் குழுமம் தெரிவானது. ஆனால், அரசாங்கம் வேறுபல விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்தைகளை நடத்தி வருகின்றது என அமைச்சர் தெரிவித்தார். அது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீ லங்கா ஏயார்லைன்ஸை, புனரமைப்பதற்காக நியமிக்…

  13. யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம் -எஸ்.திருச்செந்தூரன், எஸ்.நிதர்ஸன் யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்கள், விரிவுரைகளைப் புறக்கணித்து அமைதி போராட்டமொன்றை இன்று முன்னெடுத்து வருகின்றனர். கலைப்பீட முதலாம் வருட மாணவர்களக்கு, நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்வின் போது வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் உள்ளிட்ட 13 பேருக்கு, வகுப்புத் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அனைத்து வருட கலைப்பீட மாணவர்களும் வாய்களை துணியால் கட்டி அமைதி வழியாக இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்ததோடு இந்த போராட்டத்தில் நிர்வாகத்துக்கு எதிராக, “உ…

  14. ஜனா­தி­பதி எம்­மையும் திரும்பிப் பார்க்­க­வேண்டும் நாங்­களும் இந்த மண்ணின் பிர­ஜை­கள்­தானே? கேப்­பாப்பு­லவு மக்கள் குமுறல் (கே.குமணன்) கேப்­பா­ப்பு­லவு பூர்­வீக கிராம மக்கள் தமது சொந்த கிரா­மத்­தையும் வீடு­வா­சல்­க­ளையும் கைய­கப்­ப­டுத்தி நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் அவற்றை விடு­விக்­க­வேண்டும் எனக்­கோரி முன்­னெ­டுத்­துள்ள தொடர் போரா­ட்டம் நேற்று 28 ஆவது நாளாக தீர்­வின்றி தொடர்ந்­தது. கடந்த முதலாம் திகதி முதல் கேப்­பா­பு­லவில் அமைந்­துள்ள முல்­லைத்­தீவு இரா­ணுவத் தலை­மை­யக பிர­தான நுழை­வா­யி­லுக்கு முன்­பாக கூடாரம் அமைத்து இவர்­களின் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்த நிலையில் 28 ஆவது நாளாக போராட்…

  15. 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரே­ரணை : 2 வருட கால அவ­கா­சத்தில் முழு­மை­யாக அமு­லுக்­கு ­வரும் அனைத்து தரப்­பு­டனும் இணைந்து திட்­ட­வ­ரைபு உரு­வாக்­கப்­படும் என்­கிறார் மங்கள சமரவீர (லியோ நிரோஷ தர்ஷன்) போர் குற்­றங்கள் தொடர்­பான விசா­ரணை பொறி­மு­றையின் இறுதி வடி­வ­மா­னது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­வ­தா­கவும் உலக நாடு­களின் நம்­ப­கத்­தன்­மையை பாது­காப்­ப­தா­க­வுமே அமையும். அதே போன்று கறுப்பு ஆடு­களை அடை­யாளம் காணக்­கூ­டி­ய­தா­கவும் இருக்கும். எனவே எமக்கு வழங் ­கப்­பட்­டுள்ள இரண்டு வரு­ட­கால அவ­கா­சத்­திற்­கான செயற்­றிட்டம் விரைவில் முன்­னெ­டுக்­கப்­படும் என வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.…

  16. ஆட்சி மாறினால் சாட்சி சொன்ன அனைவரையும் அடைப்போம் - கடற்­ப­டை­யின் முன்­னாள் தள­பதி வீர­சே­கர லண்­ட­னில் இருந்து கொதிப்­புப் பேட்டி இலங்­கைக்கு எதி­ராக ஜெனி­வா­வில் சாட்­சி­ய­ம­ளித்த அனை­வ­ரை­யும் ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் சிறை­யில் தள்­ளு­வோம் என்று அச்­சு­றுத்­தி­யி­ருக்­கி­றார் கடற்­ப­டை­யின் முன்­னாள் தள­ப­தி­யும் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரியர் அட்­மி­ரல் சரத் வீர­சே­கர. ஜெனி­வா­வில் அர­சுக்கு எதி­ரான கருத்­துக்­க­ளைத் தெரி­வித்­த­வர்­க­ளைப் பெயர் குறிப்­பிட்டு அவர்­க­ளை­யெல்­லாம் சிறை­யில் அடைபோம் என்­றும் அவர் கூறி­னார். ஐ.நா. தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த விட­மாட்­டோம். நடை­மு­றைப்­ப­…

  17. நேரம் கூடிவரும் போது சந்திப்போம்: இலங்கை மக்களுக்கு ரஜினி கடிதம் நேரம் கூடிவரும் போது சந்திப்போம் என இலங்கை மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ரஜினி குறிப்பிட்டுள்ளார். ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கையில் மக்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டு வீடுகளை வழங்குவதாக இருந்தது. ஆனால், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க அப்பயணத்தை ரத்து செய்துவிட்டார். ரஜினியின் இலங்கை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன் மற்றும் வேல்முருகன் ஆகியோரைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், தனியார் தொலைக்காட்சியில் வ…

  18. மாகாணக் கல்வி அமைச்­ச­ரின் பயண விவ­ரங்­கள் தர மறுப்பு - சிறப்­பு­ரிமை மீறலாம் வெளி­நாட்டுப் பய­ணங்­கள் தொடர்­பி­லான விவ­ரங்­களை வெளி­யி­டு­வது சிறப்­பு­ரிமை மீறல் எனத் தெரி­வித்து, வடக்கு மாகாணக் கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராஜா தனது பயண விவரங்­களைப் பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தற்கு மறுத்­துள்­ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்­ச­ராக த.குரு­கு­ல­ராஜா பத­வி­யேற்ற பின்­னர், வெளி­நா­டு­க­ளுக்கு எத்­தனை தடவை பய­ணம் மேற்­கொண்­டார் ? என்ன நோக்­கத்­துக்­கா­கப் பய­ணம் மேற்­கொண்­டார் ? பய­ணத்­துக்­கான செலவு விவ­ரம் உள்­ளிட்ட விட­யங்­கள் தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடா­கக் கோரப்­பட்­டி­ருந்­தது. இதற்­கு…

  19. இறு­திப் போரில் இடம்­பெற்­றவை போர்க்­குற்­றமா? நீதி­மன்­றமே தீர்­மா­னிக்க முடி­யும் என்­கி­றார் மங்­கள இலங்­கை­யில் நடந்த இறு­திக்கட்­டப் போரின் போது இடம்­பெற்­ற­தா­கச் சொல்­லப்­ப­டும் மனித உரிமை மீறல்­கள், போர்க்­ குற்­றங்­களா? இல்­லையா? என்­பது தொடர்­பில் விசா­ர­ணை­க­ளின் பின்­னர் நீதி­மன்­றமே தீர்­மா­னிக்­க­மு­டி­யும். குற்­ற­மி­ழைத்­த­வர்­கள் தண்­டிக்­கப்­பட வேண்­டும்” இவ்­வாறு அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தார். கொழும்­பில் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சில் நேற்று மாலை நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, …

  20. ரஜினியின் இலங்கை பயணம் ரத்தானதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெயர்ந்த மக்களுக்கென வவுனியா சின்னடம்பனில் லைக்கா நிறுவனத்தினால் புதிதாக அமைக்கபட்டுள்ள வீடுகளைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் வருகை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கான அழைப்பை ஈழத்துக் கலைஞர்கள் என்ற அமைப்பு விடுத்திருந்தது. யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைக் கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்…

    • 7 replies
    • 1.1k views
  21. நல்லாட்சியால் நான்காயிரத்து 300 மில்லியன் ரூபா விரயம் (எம்.சி.நஜிமுதீன்) 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இவ்வருடத்தில் ஈட்ட வேண்டியுள்ளதால் அம்பந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். எனினும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நான்காயிரத்து 300 மில்லியன் ரூபா நிதி விரயமாக்கப்பட்டுள்ளது. அந்நிதி விரயமாக்கப்பட்டிருக்காவிடத்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்பதை மத்திய வங்கியின் ஆளுநருக்கு கூறிக்கொள்ள விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரவித்தார். …

  22. 2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேறு விபரங்கள் இதோ.... 2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பெறுபேறுகள் தபால் மூலம் பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தவிர டயலொக் கையடக்க தெலைபேசி ஊடாகவும் மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம். Exams என டைப் செய்து இடைவௌி விட்டு சுட்டெண்ணை பதிவு செய்து 7777 என்ற என்ற எண்ணுக்கு அனுப்பவும். வௌியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின்படி, முதலாவது இடத்தை கொழும்பு விசாகா மகா வித்த…

    • 3 replies
    • 425 views
  23. தேர்தல்களுக்கு தயாராகுங்கள் இவ்வருடத்தில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலும் நடத்தப்படும். ஆகையினால், அத்தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதற்குத் தயாராகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி அதிகாரத்தின் கீழுள்ள ஏழு மாகாண சபைகளின் முதலமைச்சர்களை, தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், திங்கட்கிழமை (27) இரவு சந்தித்தபோதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல்களில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது பலமிக்கதொரு கட்சியாகக் களத்தில் இறங்கவேண்டும் என்றும் பலவீனமான தொகுதி அமைப்பாளர் சகலரும் இரண்டொரு மாதங்களுக்குள் நீக்கப்…

  24. ஊடகவியலாளர் நொயரை கடத்திய வான் மீட்பு ஊடகவியலாளர் கீத் நொயரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வானை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை பகுதியில் வைத்தே, இந்த வான் மீட்கப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/193932/ஊடகவ-யல-ளர-ந-யர-கடத-த-ய-வ-ன-ம-ட-ப-#sthash.fSAIFaN3.dpuf

  25. சர்வதேச நீதிபதிகளை தேவை இல்லை – மங்கள இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளை உள்வாங்கி விசாரணை செய்யும் தேவை இல்லை என்று வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறினார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். http://www.dailyceylon.com/119741

    • 0 replies
    • 185 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.