ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
'உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் விமல்' விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு, மாகாநாயக்க தேரர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, மேலும் தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/194021/-உண-ண-வ-ரதத-த-க-க-வ-ட-ட-ர-வ-மல-#sthash.vmneElIt.dpuf விமலின் உண்ணாவிரதம் பெரும் தல…
-
- 0 replies
- 177 views
-
-
வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் திருவுருவச்சிலை திறப்புவிழா! வன்னி பெருநிலப்பரப்பில் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை திறப்புவிழா நாளை மாலை 3 மணியளவில் மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு சமாதி அமைந்துள்ள பிரதேசமான ஒட்டுசுட்டான் கற்சிலைமடு சிலையடி பகுதியில் திறந்து வைக்கப்படவுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் நிதியொதுக்கீட்டில் பண்டாரவன்னியன் அறங்காவற்கழகத்தால் குறித்த திருவுருவசிலையானது அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சர் த.குருகுலராசா பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இந்த விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்ற…
-
- 1 reply
- 835 views
-
-
12 பேரின் உயிரைக் காவுகொண்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் : உதவி புரிந்தவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை! புறக்கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 2008 ஆம் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது, விடுதலை புலிகள் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கியதாக கூறப்படும் நபரொருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பியசேன ரனசிங்க இன்று பிறப்பித்துள்ளார். கனகசபை தேவதாசன் என்ற நபருக்கே இவ்வாறு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் பேஸ்போல் அணி வீரர்கள் 8 ப…
-
- 2 replies
- 429 views
-
-
எந்தவொரு இராணுவ வீரரையும் சந்தேக நபராக்க நான் தயாரில்லை: ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் மனித உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் எந்தவொரு இராணுவ வீரரையும் சந்தேக நபராக ஆக்குவதற்கு நான் தயாராக இல்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார். குருணாகலையில் நேற்று (29) நடைபெற்ற பாடசாலை கட்டடத் திறப்புவிழாவொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: “தாய்நாட்டுக்காகப் போரிட்ட வீரர்களைக் காப்பது ஒரு அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும். ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் நான் எனது கடமையைச் செவ…
-
- 0 replies
- 165 views
-
-
போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்த சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, சிறிலங்காவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் யு.ஆர்.டி .சில்வா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முதல் முறையாக வெளிநாட்டு நீதிபதிகளை போர்க்குற்ற விசாரணையில் ஈடுபடுத்தும் பரிந்துரை முன்லைக்கப்பட்ட போதே, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன். வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்காவுக்கு அழைத்து வருவதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்படவில்லை. இது தொடர்பான சட்டத்தரணிகள் சங…
-
- 0 replies
- 194 views
-
-
கோத்தாவினால் மைத்திரியை வெற்றி கொள்ள முடியாது – இசுரு தேவப்பிரிய அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்தி்ரிபால சிறிசேனவே வெற்றி பெறுவார் என்றும், கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். ‘2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் மைத்திரிபால சிறிசேனவே தெரிவு செய்யப்படுவார். முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மிகவும் விரும்பப்படும் ஒருவராக மைத்திரிபால சிறிசேன இருக்கிறார். அவரிடம் கோத்தாபய ராஜபக்சவிடம் இல்லாத அரசியல் ஆளுமையும், அனுபவமும் இருக்கிறது. கோத்தாபய ராஜபக்ச திறமையான…
-
- 0 replies
- 150 views
-
-
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், பதுளை மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9இல் இருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 6இல் இருந்து 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்படுவது வழக்கமாகும். http://www.puthinappalakai.net/2017/03/29/news/22240
-
- 0 replies
- 138 views
-
-
ஏமாற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் முஸ்லிம்களின் பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக இணைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையொப்பமிட்டமைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்துள்ளனர். மன்னார், மரிச்சுக்கட்டி, பாலைக்குழி மற்றும் கரடிக்குழி பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட நிலையில், நல்லாட்சி அரசாங்கமும் எங்களுக்கு நல்லதை செய்யாமல், பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த காணியினை கொள்ளை அடிக்கும் சூழ்சிகளை செய்துள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவ…
-
- 0 replies
- 194 views
-
-
ஒரே நாட்டிற்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டும்; இலங்கையர் என்ற அடையாளம் வேண்டும் நாட்டைப் பிரிக்காமல் ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை் ஏற்படுத்துவதற்கு அதிகாரத்தை பரவலாக்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கூறுகின்றார். மருதானை சுதுவெல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த சிலை ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் போது நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது எவ்வாறு என்று சிந்த…
-
- 0 replies
- 185 views
-
-
16 மாதங்களில் சிறிலங்கா கடற்படை ஈட்டியுள்ள 3 பில்லியன் ரூபா வருமானமாம்? தமிழீழம் கடந்த 16 மாதங்களில் வணிகக் கப்பல்களுக்கு அளித்து வந்த பாதுகாப்புச் சேவையின் மூலம், சிறிலங்கா கடற்படை, 3 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது. காலியில் உள்ள நிலையத்தில் இருந்தே இந்த வருமானம் பெறப்பட்டுள்ளது. சிறிலங்காவை அண்டிய கடற்பரப்பு வழியாகப் பயணம் மேற்கொள்ளும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்புச் சேவைகளை வழங்கியதன் மூலம் இந்த வருமானம் ஈடுடப்பட்டுள்ளது. முன்னர் அவன்ட் கார்ட் நிறுவனத்தினால் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், இந்த பாதுகாப்பு சேவை சிறிலங்கா கடற்படையிடம், கடந்த 2015நொவம்பர் மாத நடுப்பகுதியில் கையளி…
-
- 0 replies
- 193 views
-
-
சீனாவின் அம்பாந்தோட்டை விவகாரம் : இந்தியா மௌனம் காப்பது வியப்பளிக்கின்றது : கோத்தபாய ராஜபக்ஷ (லியோ நிரோஷ தர்ஷன்) அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதமான பங்குகளை 99 ஆண்டுகளுக்கு சீனாவிற்கு வழங்கவுள்ளது. இந்தியா மௌனம் காப்பது வியப்பாக உள்ளது என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்துவதற்கு யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று நாம் டில்லிக்கு கூறியிருந்தோம். ஆனால் அதனை அன்று இந்தியா நம்பவில்லை. இதற்காக ஆட்சி மாற்றத்திற்காக செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தின் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ…
-
- 1 reply
- 331 views
-
-
ஏல சபையிலுள்ள அனைத்து நிர்வாக உறுப்பினர்களையும் நீக்குவதற்கு தீர்மானம்! : மத்திய வங்கி ஆளுனர் (பா.ருத்ரகுமார்) நல்லாட்சி அரசாங்கத்தினால் பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வினைத்திறனான முறையில் தனது விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் ஏல சபையிலுள்ள அனைத்து நிர்வாக உறுப்பினர்களையும் நீக்குவதற்கு மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தீர்மானித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற சர்ச்சைக்குறிய பிணைமுறி ஏலம் தொடர்பில் மத்திய வங்கியின் ஏல சபை உறுப்பினர்கள் பினைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளனர். எனவே இதன்பின்னர் ஆணைக்குழுவின் விசாரணைகளை உறுதிப்படு…
-
- 0 replies
- 138 views
-
-
வடமாகாணத்தில் நாளை போராட்டங்கள் எஸ்.நிதர்ஸன் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்டச் செயலகங்களுக்கு முன்பாக, வேலையற்ற பட்டதாரிகளால் நாளை (30) கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இப்போராட்டங்களுக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. கடந்த 27ஆம் திகதி முதல், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக, காலவரையறையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி, வடமாகாணத்தின் 5 மாவட்டச் செயலகங்களுக்கும் முன்பாக நாளை போராட்டங்களை நடத்தவுள்ளதாக…
-
- 0 replies
- 224 views
-
-
காணாமற்போனோர் விவகாரத்துக்கு அரச தலைமைகளுடன் பேசித் தீர்வு - வடக்கு முதல்வர் தெரிவிப்பு'' “அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் அல்லது தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி காணாமற்போனோர் விவகாரத்துக்கு தீர்வைப் பெ அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் அல்லது தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி காணாமற்போனோர் விவகாரத்துக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், காணாமற்போனோரின் உறவினர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். காணாமற்போனோரின் உறவினர்களின் சங்…
-
- 0 replies
- 181 views
-
-
காணி விடுவிப்புக் குறித்து மைத்திரி சம்மந்தன் பேச்சு காணிகள் விடுவிப்புத் தொடர்பாக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையே அரச தலைவர் செயலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. எனினும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிய வருகின்றது. புதிய அரசமைப்புத் தொடர்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே அரச தலைவர் செயலகத்தில் நேற்று முன் தினம் இரவு சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பு முடிவடைந்த பின்னர், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை, தனியாகச…
-
- 0 replies
- 264 views
-
-
“வடக்கு மாத்திரமின்றி தெற்கும் அதிகாரத்தை கோருகிறது” : பிரதமர் - எம்.எம்.மின்ஹாஜ் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் போது நாட்டை பிரிக்காமல் எப்படி அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். நாங்கள் யாரும் நாட்டை பிரிப்பதாக கூறவில்லை. ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்ந்தளித்து ஒவ்வொரு பிரதேச மக்களும் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கும் தன்னுடை மத வழிபாடுகளை முன்னெடுப்பதற்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் மாத்திரம் கோரவில்லை. மாறாக தென் மாகாண முதலமைச்சரும் அதிகாரத்தை பகிர்ந்…
-
- 0 replies
- 229 views
-
-
ஸ்ரீ லங்கா ஏயார்லைன்ஸ்க்கு இன்னுமொரு பங்காளி ஸ்ரீ லங்கா ஏயார்லைன்ஸை, அரசாங்க – தனியார் பங்குடமையாக மாற்றும் நோக்கில், ஏற்கெனவே தெரிவுசெய்யப்பட்ட ரெக்ஸாஸ் பசுபிக் குழுமத்துக்கு மேலதிகமாக, இன்னுமொரு பங்காளியைத் தேட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அரசாங்க முயற்சியாண்மை அபிவிருத்தியமைச்சர் கபீர் ஹாஸிம், நேற்றுத் (28) தெரிவித்தார். அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரிய போது கிடைத்த 14 விண்ணப்பங்களிலிருந்து ரெக்ஸாஸ் பசுபிக் குழுமம் தெரிவானது. ஆனால், அரசாங்கம் வேறுபல விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்தைகளை நடத்தி வருகின்றது என அமைச்சர் தெரிவித்தார். அது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீ லங்கா ஏயார்லைன்ஸை, புனரமைப்பதற்காக நியமிக்…
-
- 0 replies
- 338 views
-
-
யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம் -எஸ்.திருச்செந்தூரன், எஸ்.நிதர்ஸன் யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்கள், விரிவுரைகளைப் புறக்கணித்து அமைதி போராட்டமொன்றை இன்று முன்னெடுத்து வருகின்றனர். கலைப்பீட முதலாம் வருட மாணவர்களக்கு, நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்வின் போது வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் உள்ளிட்ட 13 பேருக்கு, வகுப்புத் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அனைத்து வருட கலைப்பீட மாணவர்களும் வாய்களை துணியால் கட்டி அமைதி வழியாக இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்ததோடு இந்த போராட்டத்தில் நிர்வாகத்துக்கு எதிராக, “உ…
-
- 0 replies
- 247 views
-
-
ஜனாதிபதி எம்மையும் திரும்பிப் பார்க்கவேண்டும் நாங்களும் இந்த மண்ணின் பிரஜைகள்தானே? கேப்பாப்புலவு மக்கள் குமுறல் (கே.குமணன்) கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த கிராமத்தையும் வீடுவாசல்களையும் கையகப்படுத்தி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அவற்றை விடுவிக்கவேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் நேற்று 28 ஆவது நாளாக தீர்வின்றி தொடர்ந்தது. கடந்த முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத் தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 28 ஆவது நாளாக போராட்…
-
- 0 replies
- 123 views
-
-
2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணை : 2 வருட கால அவகாசத்தில் முழுமையாக அமுலுக்கு வரும் அனைத்து தரப்புடனும் இணைந்து திட்டவரைபு உருவாக்கப்படும் என்கிறார் மங்கள சமரவீர (லியோ நிரோஷ தர்ஷன்) போர் குற்றங்கள் தொடர்பான விசாரணை பொறிமுறையின் இறுதி வடிவமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதாகவும் உலக நாடுகளின் நம்பகத்தன்மையை பாதுகாப்பதாகவுமே அமையும். அதே போன்று கறுப்பு ஆடுகளை அடையாளம் காணக்கூடியதாகவும் இருக்கும். எனவே எமக்கு வழங் கப்பட்டுள்ள இரண்டு வருடகால அவகாசத்திற்கான செயற்றிட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.…
-
- 0 replies
- 130 views
-
-
ஆட்சி மாறினால் சாட்சி சொன்ன அனைவரையும் அடைப்போம் - கடற்படையின் முன்னாள் தளபதி வீரசேகர லண்டனில் இருந்து கொதிப்புப் பேட்டி இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் சாட்சியமளித்த அனைவரையும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் சிறையில் தள்ளுவோம் என்று அச்சுறுத்தியிருக்கிறார் கடற்படையின் முன்னாள் தளபதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர. ஜெனிவாவில் அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தவர்களைப் பெயர் குறிப்பிட்டு அவர்களையெல்லாம் சிறையில் அடைபோம் என்றும் அவர் கூறினார். ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம். நடைமுறைப்ப…
-
- 1 reply
- 780 views
-
-
நேரம் கூடிவரும் போது சந்திப்போம்: இலங்கை மக்களுக்கு ரஜினி கடிதம் நேரம் கூடிவரும் போது சந்திப்போம் என இலங்கை மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ரஜினி குறிப்பிட்டுள்ளார். ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கையில் மக்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டு வீடுகளை வழங்குவதாக இருந்தது. ஆனால், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க அப்பயணத்தை ரத்து செய்துவிட்டார். ரஜினியின் இலங்கை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன் மற்றும் வேல்முருகன் ஆகியோரைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், தனியார் தொலைக்காட்சியில் வ…
-
- 1 reply
- 315 views
-
-
மாகாணக் கல்வி அமைச்சரின் பயண விவரங்கள் தர மறுப்பு - சிறப்புரிமை மீறலாம் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பிலான விவரங்களை வெளியிடுவது சிறப்புரிமை மீறல் எனத் தெரிவித்து, வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தனது பயண விவரங்களைப் பகிரங்கப்படுத்துவதற்கு மறுத்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சராக த.குருகுலராஜா பதவியேற்ற பின்னர், வெளிநாடுகளுக்கு எத்தனை தடவை பயணம் மேற்கொண்டார் ? என்ன நோக்கத்துக்காகப் பயணம் மேற்கொண்டார் ? பயணத்துக்கான செலவு விவரம் உள்ளிட்ட விடயங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகக் கோரப்பட்டிருந்தது. இதற்கு…
-
- 0 replies
- 250 views
-
-
இறுதிப் போரில் இடம்பெற்றவை போர்க்குற்றமா? நீதிமன்றமே தீர்மானிக்க முடியும் என்கிறார் மங்கள இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகச் சொல்லப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்களா? இல்லையா? என்பது தொடர்பில் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றமே தீர்மானிக்கமுடியும். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” இவ்வாறு அயலுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். கொழும்பில் அயலுறவுத்துறை அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, …
-
- 0 replies
- 166 views
-
-
ரஜினியின் இலங்கை பயணம் ரத்தானதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெயர்ந்த மக்களுக்கென வவுனியா சின்னடம்பனில் லைக்கா நிறுவனத்தினால் புதிதாக அமைக்கபட்டுள்ள வீடுகளைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் வருகை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கான அழைப்பை ஈழத்துக் கலைஞர்கள் என்ற அமைப்பு விடுத்திருந்தது. யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைக் கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்…
-
- 7 replies
- 1.1k views
-