ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
நல்லாட்சியால் நான்காயிரத்து 300 மில்லியன் ரூபா விரயம் (எம்.சி.நஜிமுதீன்) 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இவ்வருடத்தில் ஈட்ட வேண்டியுள்ளதால் அம்பந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். எனினும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நான்காயிரத்து 300 மில்லியன் ரூபா நிதி விரயமாக்கப்பட்டுள்ளது. அந்நிதி விரயமாக்கப்பட்டிருக்காவிடத்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்பதை மத்திய வங்கியின் ஆளுநருக்கு கூறிக்கொள்ள விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரவித்தார். …
-
- 0 replies
- 171 views
-
-
2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேறு விபரங்கள் இதோ.... 2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பெறுபேறுகள் தபால் மூலம் பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தவிர டயலொக் கையடக்க தெலைபேசி ஊடாகவும் மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம். Exams என டைப் செய்து இடைவௌி விட்டு சுட்டெண்ணை பதிவு செய்து 7777 என்ற என்ற எண்ணுக்கு அனுப்பவும். வௌியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின்படி, முதலாவது இடத்தை கொழும்பு விசாகா மகா வித்த…
-
- 3 replies
- 426 views
-
-
தேர்தல்களுக்கு தயாராகுங்கள் இவ்வருடத்தில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலும் நடத்தப்படும். ஆகையினால், அத்தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதற்குத் தயாராகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி அதிகாரத்தின் கீழுள்ள ஏழு மாகாண சபைகளின் முதலமைச்சர்களை, தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், திங்கட்கிழமை (27) இரவு சந்தித்தபோதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல்களில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது பலமிக்கதொரு கட்சியாகக் களத்தில் இறங்கவேண்டும் என்றும் பலவீனமான தொகுதி அமைப்பாளர் சகலரும் இரண்டொரு மாதங்களுக்குள் நீக்கப்…
-
- 0 replies
- 164 views
-
-
ஊடகவியலாளர் நொயரை கடத்திய வான் மீட்பு ஊடகவியலாளர் கீத் நொயரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வானை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை பகுதியில் வைத்தே, இந்த வான் மீட்கப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/193932/ஊடகவ-யல-ளர-ந-யர-கடத-த-ய-வ-ன-ம-ட-ப-#sthash.fSAIFaN3.dpuf
-
- 0 replies
- 311 views
-
-
சர்வதேச நீதிபதிகளை தேவை இல்லை – மங்கள இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளை உள்வாங்கி விசாரணை செய்யும் தேவை இல்லை என்று வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறினார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். http://www.dailyceylon.com/119741
-
- 0 replies
- 186 views
-
-
மோடி கண்டிக்கு வருகைதருவார் : மல்வத்த மகாநாயக்க தேரருடனான சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தின நிகழ்விற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யும் போது கண்டி நகருக்கும் வருகை தருவார் என இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்த போது தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் நேற்று கண்டிக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு தொடர்பில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். …
-
- 0 replies
- 113 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுக திட்டம் நெருக்கடியில்.! (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற சீனாவின் முக்கிய பிரதான இரு பாரிய திட்டங்களான துறைமுகர் நகர் மற்றும் அம்பந்தோட்டை துறைமுகம் மற்றும் சுதந்திர வர்த்தக வலய திட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் முக்கிய நகர்வுகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது. துறைமுக நகர் திட்டத்தின் ஒப்பந்தத்தில் காணப்பட்ட சர்ச்சைக்குறிய விடயங்கள் திருத்தப்பட்டு ஒப்பந்தம் இரு தரப்பினராலும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார். எனினும் சீனாவின் அம்பாந்தோட்டை திட்டங்களில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சர…
-
- 0 replies
- 208 views
-
-
சிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை ஐந்து இராணுவத்தினருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை - யாழ்ப்பாண நீதிவான் உத்தரவு யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி யில் இளைஞர்கள் இருவர் காணாமல் ஆக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் உள்ள 5 இராணுவத்தினருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு யாழ்ப்பாண நீதிவான் மன்று நேற்று உத்தரவிட்டது. சுருக்கமுறையற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறும் மன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டது. இந்த வழக்கு நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக அறிக்கை…
-
- 0 replies
- 525 views
-
-
அரச தலைவருக்கு வடக்கு முதல்வர் அவசர கடிதம் வடக்கு மாகாணத்தில் பல இடங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வடமாகாணத்தில் எதுவுமே நடக்காதது போன்று, எந்தவித கரிசனையும் இல்லாமல் அரசு இருப்பதால், மக்களின் வேதனை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே, அது தொடர்பில் உறுதியான கருத்தை அரச தலைவர் வெளிப்படுத்த வேண்டும்” என, கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதமொன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளார். இக் கடிதம் தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் மக்கள் தொடர்ச்சியான ப…
-
- 0 replies
- 265 views
-
-
எனக்கு கீழ் கொலைக் கும்பல் இருந்தது என்பது நகைப்புக்குரியது கோத்தபாய கூறுகிறார் (பா.ருத்ரகுமார்) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு வருவது தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் சர்வதேச ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார், அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலுக்கு வருவதற்கு விருப்பமில்லாத போதும் நாட்டின் நலனுக்காகவும் மக்களுக்கு சேவையாற்றவும் அரசியல் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமைய…
-
- 0 replies
- 414 views
-
-
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியே தீருவோம் பிக்குகள் தலைமையிலான நான்கு அமைப்புக்கள் சூளுரை (க.கமலநாதன்) நாட்டின் தற்போதைய அரசாங்கத்தினர் வளங்களை சீனாவிற்கும் இந்தியாவிற் கும் விற்பனை செய்கின்றனர், மறுபுறத்தில் வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் புலிகளும் தமிழ்ப் பிரிவினைவாத அமைப்புக்களும் மீண் டும் தலைதூக்கியுள்ளன. எனவே தற்போதைய ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய அவசியம் தோன்றியுள்ளதை நாம் உணர்ந்துள்ளோம். எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள்15 பிக்குகள் சங்கங்களை திரட்டிக்கொண்டு தற்போதைய ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்புவோம் என பொதுபல…
-
- 0 replies
- 242 views
-
-
இலங்கைக்கு இதுவே இறுதி கால அவகாசம் - இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்பதில் நம்பிக்கையீனம் அதிகரித்துச் செல்கின்றது. தற்போது வழங்கப்பட்ட கால அவகாசமே இலங்கைக்கு வழங்கப்படும் இறுதிக் கால அவகாசமாக இருக்கும். இவ்வாறு இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் ஹென்ஸ் வோக்கர் தெதர்கோன் யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றுத் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை மாணவர்களை, பல்கலைக்கழகத்தில் தூதுவர் நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது சட்டத்துறை மாணவர்கள், ஜெனிவாத் தீர்மானம், நிலைமாறு கால நீதிப் பொறிமுறை, புதிய அரசமைப்பு உர…
-
- 1 reply
- 361 views
-
-
வடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்களே – வடக்கு முதல்வர் தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் வடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்களே என வட மாகாண முதலைமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இது பற்றி தெரிவித்துள்ளார். சிங்களாதீப ஜாதிக பெரமுன என்ற அரசியல் கட்சியின் தலைவராக செயற்பட்டு வரும் டொக்டர் சூரியா குணசேகரவினால் ஊடகம் ஒன்றின் ஊடாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். பௌத்த மத வரலாறு ஆரம்பிக்கப்பட முன்னதாகவே இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர் எனவும் அதற்கான வரலாற்று சான்றுகள் பல இருக்கின்றன. இந்திய துணைக் கண்டனத்தின்…
-
- 1 reply
- 350 views
-
-
183 கிலோ கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டு - சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் யாழ். மேல் நீதிமன்றால் நிராகரிப்பு 183 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை உைடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவரின் பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்றும் நிராகரித்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாவனை குறைவடைந்து வரும் இந்தத் தருணத்தில் சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் கட்டளையிட்டார். பர…
-
- 0 replies
- 258 views
-
-
பன்னாட்டை நிராகரித்து செயற்படமுடியாது அரசு தீர்மானத்தை அப்படியே நிறைவேற்றவேண்டும் - என்கிறார் பாக்கியசோதி கொழும்பு அரசின் தலைவர்கள் கூறுவதைப் போன்று பன்னாட்டுச் சமூகத்தை நிராகரித்துச் செயற்பட முடியாது. பொறுப்புக் கூறல் விடயத்தில் ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளதை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவை இலங்கைக்கு இருக்கின்றது. இவ்வாறு மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும், நல்லிணக்கச் செயலணியின் பொதுச் செயலருமான பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்றிருந்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத…
-
- 0 replies
- 225 views
-
-
விரைவில் வரும் பொருளாதார தடை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையானது தமது இராஜதந்திர வெற்றியென அரசாங்கம் மார்தட்டிக்கொள்கின்றது. இருப்பினும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையானது யுத்த குற்ற நீதிமன்றத்தினை உள்நாட்டில் நிறுவ வேண்டும் என்பதற்கான அழுத்தத்துக்காக மட்டுமேயேயாகும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஐக்கிய நாடுக…
-
- 0 replies
- 454 views
-
-
‘தண்ணீர்மட்டும் குடித்தால் விமலுக்கு பெரும் ஆபத்து’ கைதியான விமல் வீரவன்ச எம்.பி, தண்ணீரை மட்டுமே பருகினால் அவருடைய சிறுநீரகங்கள் மற்றும் குடல் ஆகியவை குணப்படுத்த முடியாத அளவுக்குப் பாதிப்படைந்து விடும் என்று, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் குத்தித்துள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்சவை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலர், நேற்று (27) சென்று பார்வையிட்டனர். இதன்போதே வைத்தியர்கள் மேற்கண்டவாறு தெரிவித்ததாக ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்தனர். தண்ணீரை மட்டுமே குடித்துக்கொண்டு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு அவர் முயற்சித்தால், …
-
- 0 replies
- 224 views
-
-
நியூசிலாந்து செல்லும் வழியில் ஆச்சேயில் அகப்பட்ட தமிழ் அகதிகளின் அவலநிலை படகொன்றின் மூலம் 43 புகலிடக் கோரிக்கையாளர்கள் நியூசிலாந்திற்குப் புறப்பட்ட வேளையில் படகின் இயந்திரம் பழுதடைந்து இந்தோனேசிய கரையை அடைந்ததாக இப்படகில் பயணம் செய்தவரும், இந்த வாரம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றைப் பிரசவித்தவருமான தாயொருவர் தெரிவித்தார். இத்தாய் ஆண் குழந்தையைப் பிரசவித்து ஒரு சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இவரது குடும்பத்தை இந்தோனேசிய அதிகாரிகள் தடுப்பு முகாமிற்கு அனுப்பியுள்ளனர். இந்தோனேசிய குடிவரவு வாகனம் ஒன்றில் இக்குடும்பத்தினர் ஏற்றிச் செல்லப்படும் காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 வயதான சிவரஞ்சினி பகீதரன் மற்றும் இவரது கணவரான 34 வயத…
-
- 0 replies
- 314 views
-
-
வடக்கில் மேலும் நான்காயிரம ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்:- வடக்கில் மேலும் நான்காயிரம ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். யாழ். மாவட்ட செயகத்தில் நேற்று இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இருபதாயிரம் ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவற்றில் இரண்டாயிரம் ஏக்கர் காணி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மேலும் நான்காயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளர்h. மேலும் எதிர்வ…
-
- 0 replies
- 161 views
-
-
போரில் ஆங்காங்கே குற்றங்கள் நிகழ்ந்தன – ஒப்புக்கொள்கிறார் கோத்தா போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை நேற்று கோல்பேஸ் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசியலில் நுழைவதற்கு விரும்பாவிடினும், நாட்டுக்குச் சேவையாற்றும் வாய்ப்பை நிராகரிக்கமாட்டேன். நான் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பேன் என்பது நிச்சயமில்லை. ஆனால், அரச…
-
- 0 replies
- 265 views
-
-
மாலிக்கு செல்லும் படையால் காங்கேசன்துறையில் மக்கள் பதட்டம்:- மாலியில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றச் செல்லவுள்ள இராணுவத்தின் அணியொன்று காங்கேசன்துறையில் களப்பயிற்சி ஒத்திகையை திடீரென ஆரம்பித்ததால் மக்கள் பதட்டமடைந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான இந்தப்; பயிற்சி எதிர்வரும் 4ஆம் திகதி அம்பாந்தோட்டையில் நிறைவடையவுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து கடற்கரையோர வீதியின் ஊடாக பருதித்துறை நகருக்குள் திடீரென இராணுவத்தின் தொடர் வாகன அணி பிரவேசித்தமையினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அடையாளம் பொறிக்கப்பட்ட 68 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கடற்கரையோர வீதியின் ஊடாகச் சென்றதாகவும் மாலி…
-
- 0 replies
- 429 views
-
-
அரசியலில் விருப்பமில்லை; ஆனால் சந்தர்ப்பத்தை தவறவிடுவதில்லை அரசிலுக்கு வருவதற்கு விருப்பிமில்லை என்ற போதிலும் நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை தவறவிடுவதில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இலங்கையிலுள்ள சர்வதேச ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஒரு அரசியல்வாதியல்ல என்று கூறினார். தனக்கு அரசியல் தெரியாது என்பதுடன், அரசியல் நடவடிக்கைகளில் தான் க…
-
- 0 replies
- 217 views
-
-
வடமாகாண முதலமைச்சர் - சுவிஸ் குழுவினர் சந்திப்பு எஸ்.நிதர்ஸன் வடக்கில் மக்கள் தங்களுடைய உரிமையைக் கேட்டுப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்ற போதும் அந்தப் போராட்டங்கள் தொடர்பில், அரசாங்கம் போதிய கரிசனை காட்டவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சுவிஸ்நாட்டுத் தூதுவரிடம் எடுத்துக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஐயம் செய்திருந்த இலங்கைக்கான சுவிஸ்நாட்டுத் தூதுக் குழவினர், வடக்கு மாகாண முதலமைச்சரை, அவரது அலுவலகத்தில் நேற்று (27) மாலை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே, முதலமைச்சர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அங்கு …
-
- 0 replies
- 254 views
-
-
அரசாங்கத்தை எச்சரிப்பதற்கு ஐயாவுக்கு சங்கரி ஐடியா இரு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், எதிர்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்வேன் என, இராஜினாமாக் கடிதத்தை எழுதிவைத்துகொண்டு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்குமாறு, எதிர்க்கட்சி தலைவரான இரா. சம்பந்தன் எம்.பிக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு (ஐயா) நேற்று (27) அவர், கடிதமொன்றையும் எழுதி அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் மக்கள், தங்க…
-
- 0 replies
- 181 views
-
-
தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் இதன்பொது நீண்டநேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. எதிரில் நடைபெற உள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற வகையில் ஒருபோதும் தேர்தலை பிற்போடுவதற்கு தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது கூறியுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=89741
-
- 0 replies
- 168 views
-