ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
முன்னைய அரசு இரவில் விழுந்த குழியில் இன்றைய அரசு பகலில் விழப் போகிறது - கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவிப்பு எஸ்.கணேசன் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டமை எமது நாட்டுக்கு ஆபத்தானது. இறுதியில் சர்வதேச விசாரணையிலேயே அனைத்தும் வந்து முடியும் என சிரேஷ்ட அரசியல் ஆலோ சகரும் முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியுமான கலாநிதி தயான் ஜய திலக தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் புதிய அரசாங்கங்கள் பதவியேற்றுள்ளன. எனவே இந்த அரசாங்கங்கங்களுடன் …
-
- 0 replies
- 238 views
-
-
காணாமல் போனவர்கள் தொடர்பில் உறுதியான முடிவுவேண்டும் முன்னாள் ஜனாதிபதியிடம் அருட்தந்தை கோரிக்கை எம்.நியூட்டன், ரி.விரூஷன் பொருளாதாரத்துக்கு மட்டும் முக்கி யத்துவத்தை வழங்காது காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என் பது தொடர்பிலும் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகளை விரைவாக அவர்களிடம் கையளிக்கப் படவும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அச்சுவேலிப் பங்குத்தந்தையும் மனித உரிமைகள் ஆர்வலருமான அருட் தந்தை ஜெயக்குமார் அடிகளார் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொட…
-
- 0 replies
- 267 views
-
-
12 இந்திய மீனவர்கள் கைது.! அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரின் ஒத்துழைப்புடன் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த இந்த மீனவர்களை கைது செய்துள்ளனர். இந்த மீனவர்கள் பயணித்த இரண்டு மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீனவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/18286
-
- 0 replies
- 178 views
-
-
யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் வரும்போது நல்லதொரு முடிவுடன் வருவேன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எம்.நியூட்டன், ரி.விரூஷன் யாழ்ப்பாணத்துக்கு நான் மீண்டும் வரும்போது காணிகளை இழந்த மக்களுக்கு நல்லதொரு முடிவுடனேயே வருவேன் என தேசிய ஒருமைப்பாட் டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்றையதினம் வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, தெல்லிப்பழை பிர தேச செயலக பிரிவின் கீழுள்ள பளை வீமன்காமத் தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான அடிக்கல் லை நாட்டி வைத்த பின்னர் அங்கிருந்த மக்களு டன் உரையாற்றி…
-
- 0 replies
- 201 views
-
-
சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது அனைத்து தேர்தல்களையும் ஒத்தி வைத்து விட்டு அவசரமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றும் நோக்கில் இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்களுக்கு முன்னதாக இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் கடந்த தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு இணங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/arch…
-
- 1 reply
- 322 views
-
-
புலம்பெயர் உறவுகள் தாயகத்தில் பணியாற்ற முன் வரவேண்டும் – வட மாகாண முதலமைச்சர் புலம்பெயர் உறவுகள் பணியாற்ற முன் வரவேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உலக வங்கியின் நிதியில் முன்னெடுக்கப்பட இருக்கும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களிற்கு பொறியியலாளர்கள் பற்றாக் குறையாகவுள்ளதனால், புலம்பெயர் உறவுகள் பணியாற்ற முன் வரவேண்டும் என அவர் பொறியியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உலக வங்கியின் நிதி திட்டம் தொடர்பில், உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் வட மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இந்த வேண்டுகோளினை …
-
- 0 replies
- 198 views
-
-
ஜெனீவாக் கூட்டத்தொடரையொட்டி வடக்கில் நடந்தவை – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நிலாந்தன்:- கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சரஸ்வதி மஹாலில் ஒரு கூட்டம் நடந்தது. மாசற்ற அரசியலை நோக்கிய ‘மார்ச் 12 இயக்கத்தால்’ அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 2015 மார்ச் மாதம் அதாவது ஆட்சி மாற்றத்தின் பின் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மேற்படி மார்ச் 12 இயக்கத்தின் பிரகடனம் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இலங்கையில் தேர்தல் செயற்பாடுகளைக் கண்காணிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்து வரும் பவ்ரல் அமைப்பு மேற்படி மார்ச் 12 இயக்கத்தின் அடித்தளமாகக் காணப்படுகின்றது. இதில் சர்வோதயம், கியூடெக் உட்பட பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக…
-
- 0 replies
- 249 views
-
-
விமல் வைத்தியசாலையில்.! பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச திடீர் சுகயீனம் காரணமாக சிறைசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனக்கு பிணை வழங்கக் கோரி விமல் வீரவங்ச கடந்த புதன்கிழமை முதல் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/18281
-
- 0 replies
- 204 views
-
-
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்! கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. மூன்று ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படை, மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்ததோடு, கற்கள் மட்டும் பாட்டில்கள் கொண்டு தாக்கியுள்ளனர். இதனால், காயம் ஏற்பட்ட மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பியுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 300-க்கும் குறைவான விசைப்படகுகள் கொண்டே கடலுக்குச் சென்றள்ளனர். இதையடுத்து, இச்சம்பவம் நடந்திருப்பது மீனவர்கள் இடையே அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/84585-rameshwaram-fishermen-attacked-by-sri-lankan-navy.html
-
- 0 replies
- 259 views
-
-
மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் – தயான் ஜயதிலக்க மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென முன்னாள் ராஜதந்திரியும் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாட்டாளருமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். மங்கள சமரவீர படைவீரர்களை காட்டிக் கொடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் கலப்பு நீதிமன்ற விசாரணையை ஒப்புக் கொண்டமை, மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவை இழிவுபடுத்தியமை உள்ளிட்ட பல்வேறு முக்கிய குற்றச் செயல்களில் மங்கள சமரவீர ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தேவைகளுக்கு அமைய மங்கள சமரவீர செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். http://glo…
-
- 0 replies
- 287 views
-
-
அல்வாய் பகுதி வாள்வெட்டில் இருவர் கைது யாழ் வடமராட்சி அல்வாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ் வடமராட்சி அல்வாய் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதியவர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தார். எனினும் இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட எவரும் கைது செய்யப்படாததையடுத்து அப்பகுதி மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படி கோரி பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த திங்கட்கிழமை இரவு தஞ்சம் புகுந்தனர். மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தி தரப்படும் எனற…
-
- 0 replies
- 369 views
-
-
இலங்கையர்கள் அறுவரை சவுதியில் காணவில்லை சவுதி அரேபியாவில் பணி புரிந்து வந்த 6 இலங்கையர்கள், அங்கு காணாமல் போயுள்ளனரென, அவர்களது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பணியகத்தின் ஊடகச் செயலாளர் நளின் ராஜபக்ஷ தெரிவித்தார். அக்கறைப்பற்றைச் சேர்ந்த எம்.எச்.றிப்னாஸ், இரத்தினபுரியைச் சேர்ந்த ஏ.எஸ்.எம். ஷாஜஹான், கிருல்லவைச் சேர்ந்த பி.ஜி. காமினி, ஆதிமலையைச் சேர்ந்த கே.பி.கே சந்திராவதி, கல்லடியைச் சேர்ந்த என்.எப்.றீடா மற்றும் கலேன்பிடுனுவெவவைச் சேர்ந்த பி.ரி. மொஹமட் றியாஸ் ஆகியோரே காணாமல் போயுள்ளனரென, வெளிநாட்டு வேலைவாய…
-
- 0 replies
- 219 views
-
-
கூட்டமைப்புக்கு கருணா சவால் -ஏ.எச்.ஏ. ஹுஸைன் “நாங்கள் ஆட்சியிலிருந்தபோது புதிய மதுபானசாலைகள் அமைப்பதில்லை என்று உறுதியான தீர்மானம் எடுத்து, அதனை அமுல்படுத்தினோம்” என, முன்னாள் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். மேலும், ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் ஆளுமை, சாணக்கியம் இருந்தால் கும்புறுமூலை மதுபான உற்பத்தித் தொழிற்சாலையின் நிருமாணப் பணிகளை நல்லாட்சியிடம் சொல்லி நிறுத்திக் காட்டுங்கள் பார்ப்போம்” என்றும் சவால் விடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய கல்குடா – கும்புறுமூலை மதுபான உற்பத்தித் தொழிற்சாலை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில…
-
- 2 replies
- 323 views
-
-
23 தடவைகள் வெளிநாடு சென்ற அதிகாரி சிக்கிக்கொண்டார் – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி பக்கத்து வீட்டுப் பெடியன் அவன் வீட்டில் செய்கிற வேலை எங்கட வீட்டை உடைக்கிற மாதிரி இருந்தது. அப்படி என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக பக்கத்து வீட்டை போனன் அவனோ மேசை மீது ஒரு கதிரை வைத்து ஏறி நின்று சுவரில் ஆணி அறைந்து கொண்டிருந்தான். ‘என்ன தம்பி சுவரில் ஆணி ஏறுதில்லையோ சுத்தியலால உந்த அடி அடிக்கிறீர்’ என்றேன் அவனோ. ‘ஆணியும் பலமாய் இருக்கு சுவரும் பலமாய் இருக்குது ஒன்றும் விட்டுக் கொடுக்கிற மாதிரியில்லை அதுதான் மாங்கு மாங்கென்று மாங்கிறன். ஏதோ ஒரு முடிவு வரத்ததானே வேண்டும்’ என்றான். நானோ ‘ஆணி அடித்து என்ன செய்யப் போறீர்’ என்று கேட்டேன். அவனோ ‘ படம் கொளுவத்தான்…
-
- 0 replies
- 397 views
-
-
பிரிட்டன் எம்.பிக்கள் போல ஒன்றித்துச் செயற்படுங்கள் - இலங்கை எம்.பிக்களுக்கு ரணில் புத்திமதி பிரிட்டன் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்பாக இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின்போது அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து செயலாற்றிய விதத்தை எமது நாட்டிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் உதாரணமாகக் கொண்டு தேவையான சந்தர்ப்பங்களில் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும்.இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுச் சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் அமரர் ரட்ணசிறி விக்கிரம நாயக்கவுக்கு அனுதாபம் த…
-
- 0 replies
- 351 views
-
-
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை சந்தித்தார் முதலமைச்சர் எஸ்.நிதர்ஸன் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வெள்ளிக்கிழமை (24) மாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கடந்த 27ஆம் திகதி முதல், கால வரையறையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பட்டதாரிகள் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த தரப்பினர்கள் இதுவரையில் சந்தித்துக் கலந்துரையாடவில்லை என்றும் பலரும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும் பட்டதாரிகள் குற்…
-
- 0 replies
- 228 views
-
-
'கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி தான் வெளியேற வேண்டும்' எஸ்.நிதர்ஸன் "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி தான் வெளியேற வேண்டும். அதிலிருக்கக் கூடிய ஏனைய கட்சிகளல்ல" எனத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முண்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், "தமிழரசுக்கட்சி அவ்வாறு வெளியேறி ஏனையோர் கூட்டமைப்பை கொண்டு நடத்துவதற்கு வழிசமைக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார். நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போது, தமிழரசுக் கட்சியை தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்ற நிலையில், அதிலிருந்து வெளியேறுவீ…
-
- 0 replies
- 474 views
-
-
'இலங்கையை பாதுகாப்பது கேள்விக்குறியாக்கியுள்ளது' -எஸ்.நிதர்ஸன் “இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதி விசாரணை, பொறுப்புக் கூறல் இடம்பெறாது என தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்திருக்கின்ற நிலையிலும் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாத்து காலத்தை வீணடித்து தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளையும் நியாயமான தீர்வுகளையும் கிடைக்காமல் எட்டச் செய்வது தான் ஐ.நா தீர்மானத்தின் நோக்கமாக இருக்கலாமே தவிர, இதன் ஊடாக நிச்சயமாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த விசாரணையோ அந்த விசாரணையோடு தமிழ் மக்கள் எதிர்பார்த்த தீர்வுகளோ அவர்களுக்கு கிட்டுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை…
-
- 0 replies
- 353 views
-
-
முள்ளிக்குளம் நில மீட்பு போராட்டம்: அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தொடர்கிறது எஸ்.றொசேரியன் லெம்பேட் தமது பூர்வீக நிலங்களில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி, மன்னார் மாவட்டம் - முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம், 3ஆவது நாளாக இன்று சனிக்கிழமையும் தொடர்கின்ற போதும், கடற்படையினர், முகாமை விட்டு வெளியில் வந்து மக்களைத் தொடர்ச்சியாகப் புகைப்படமெடுத்து, அச்சுறுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற, மக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கைக் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு, தங்களை மீ…
-
- 0 replies
- 198 views
-
-
வில்பத்துவுக்கு வடக்கிலுள்ள காடுகள் இணைக்கப்பட்டன வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய அனைத்து வனப்பகுதிகளும் இணைக்கப்பட்டு தனியான பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்கள் இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் '3ஏ' பிரிவின் கீழ் 'மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்' என பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால…
-
- 0 replies
- 650 views
-
-
காலவரையறையை வரவேற்கின்றோம் : அரசாங்கம் வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் என்கிறது கூட்டமைப்பு ஜெனிவாவில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் வெற்றிகரமான அமுலாக்கம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என புதிய பிரேரணை ஊடாக அரசாங்கத்துக்கு கொடுத்துள்ள கால வரையறையை வரவேற்பதாக என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறை வேற்றப்பட்ட 34/L 1 பிரேரணை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ் தேசிய கூட்டமைப்பானது, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப…
-
- 0 replies
- 126 views
-
-
மட்டு. மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுமதி அளித்தவர் யார்? விமர்சிப்பதோடு நின்று விட வேண்டாம் என்கிறார் மட்டு. ஆயர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுமதி அளித்த உயர் அதிகாரிகளும் அதன் பிண்ணியிலுள்ள அரசியல் பிரமுகர்களும் யார் என்பது வெளிவரவில்லை. இவை வெளிக் கொணரப்பட வேண்டும். கிழக்கின் முதலமைச்சரும், வெளிநாட்டு மூலதன ஊக்குவிப்பு அமைச்சரும் இவைகள் தங்களுக்கு தெரியாதென கைவிரிக்கின்றனர். இது நாடகமா? யதார்த்தமா? என்பது மக்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிப்பதோடு நின்று விடக் கூடாது என மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி. வண. கலாநிதி ஜோசப் …
-
- 0 replies
- 151 views
-
-
ஐ.நா.அதிகாரிகளை கொண்ட குழுவினர் 6 தடவைகள் இலங்கை வருவர் : பிரேரணை அமுலாக்க விடயங்கள் மதிப்பீடு செய்யப்படும் இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பிர காரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் ஆறு தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். மேலும் இந்த புதிய பிரேரணையை அமுலாக்கம் செய்வதற்காக 362000 டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின்…
-
- 0 replies
- 158 views
-
-
ஜெனிவாவில் எதிரொலித்த காணி விவகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களிடம் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் விரைவாக மீள்வழங்கப்படவேண்டுமென மிகவும் தீவிரமாக வலியுறுத்தியுள்ளன. குறிப்பாக விவாதத்தில் உரையாற்றிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையில் காணி விடுவிப்பு என்ற விடயத்தை முன்வைப்பதற்கு மறக்கவில்லை. முதலில் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாள…
-
- 0 replies
- 370 views
-
-
2008 ஆம் ஆண்டில் 11 பேர் கடத்தல்: லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சியைக் கைது செய்யுமாறு உத்தரவு 2008 ஆம் ஆண்டு கொழும்பில் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் நான்காவது சந்தேகநபரான லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சியை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் இன்று இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரைக் கைது செய்வதற்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவர் கைது செய்யப்படாமை ஏன் என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த சந்தேகநபரைக் கைது…
-
- 0 replies
- 240 views
-