ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
யுத்தத்தில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு நாட்டில் நிலவிய மூன்று தசாப்தகால யுத்தத்தில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தி ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின், புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுத்தம் காரணமாக 50 வீதமான தமிழர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவரை மேற்கோள்காட்டி தி ஐலண்ட் …
-
- 3 replies
- 463 views
-
-
வீதியில் 20 நாட்களை கழித்துள்ள நிலையில் விரக்தியின் உச்சத்துக்கு சென்றுவிட்டோம் கேப்பாப்புலவு மக்கள் கவலையுடன் தெரிவிப்பு (கே.குமணன்) கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. கேப்பாப்புலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இந்த போராட்டம் இரவுபகலாக தொடர்கின்றது. .எமது கோரிக்கைக்கு இதுவரையில் அரசாங்கமோ ஏனையவர்களோ எந்தவித பதில்களும் வழங்காது எம்மை வீதியில் விட்டுள்ளது. எமக்கு எமது நிலங்கள் வ…
-
- 0 replies
- 128 views
-
-
அரசியல் தீர்வில் முஸ்லிம்களையும் உள்வாங்கவேண்டியது அவசியம் ஜெனிவாவுக்கு படையெடுத்துள்ள வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் மகஜர் (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைக்கும் நோக்கில் வட மாகாண முஸ்லிம் சிவில் சமூக ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஜெனிவா சென்றுள்ளனர். வட மாகாண முஸ்லிம் சிவில் சமூகத்தின் பிரதிநிதிளான ரமீஸ்ட காஸின் ஹரீஸ் மற்றும் எம்.ஏ. ஜென்சிலா ஆகியோர் ஜெனிவாவில் முகாமிட்டுள்ளனர். இதன்போது இலங்கையில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்…
-
- 0 replies
- 202 views
-
-
ஜெனிவா மனித உரிமை பேரவை ; இலங்கை தொடர்பான விசேட உப குழு கூட்டத்தில் கடுமையான சர்ச்சை (வீடியோ இணைப்பு) (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உப குழு கூட்டத்தில் இலங்கையிலிருந்து சென்றிருந்த பிரதிநிதி சரத் வீரகேசரவுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து முன்னாள் எம்.பி. சரத் வீரகேசர ஒரு யுத்த குற்றவாளி என்றும் சுவிஸ் அரசாங்கம் கைது செய்ய வேண்டும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமை பிரதிநிதி மணிவன்னன் பத்மநாதன் தெரிவித்ததையடுத்து சர்ச்சை நிலை ஏற்பட்டது. இலங்கை தொடர்பான…
-
- 1 reply
- 486 views
-
-
இலங்கைக்கு 8 தண்ணீர் பவுசர்களை வழங்கிய இந்திய அரசு வறட்சி நிவாரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு 8 தண்ணிர் பவுசர்களை இந்திய அரசாங்கம் வழங்கி வைத்துள்ளது. இந்நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்தியத் உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 25 மில்லியன் ரூபா பெறுமதியான 8 தண்ணீர் பவுசர்களினையும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார செயலர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரின் விஜயத்தின்போது 8 தண்ணீர் பவுசர்கள் மற்றும் 100 மெற்றிக்…
-
- 0 replies
- 232 views
-
-
கொட்டாஞ்சேனையில் ஆவா குழு உறுப்பினர்கள் இருவர் கைது யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரை கொட்டாஞ்சேனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கைக்குண்டு, ஒரு கத்தி மற்றும் இரு வாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த சட்டவிரோத குழுவான ஆவா குழுவுடன் கொட்டாஞ்சேனையில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ள இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/18056
-
- 0 replies
- 266 views
-
-
எனது தலைமையில் மரணப் படை செயற்பட்டதா ? : பதிலளித்தார் கோத்தா யுத்தக் காலப்பகுதியில் எனது தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டதாக தெரிவிப்பது முற்றிலும் பொய்யான விடயம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்துள்ளார். இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது, கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்ட ஊடகவியலாளர்களையும் அரசியல் விமசர்களையும் மரணப் படையை கொண்டு கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச தேசிய புலனாய்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஊடாக இரகசிய சிறப்பு படை பிரிவு ஒன்றை இயக்கியதாகவும் குறித்த இரகசிய பிரிவானது தனது அதிகாரத்துக்கு அப்பால் செயற்பட்டுள்ளதாக…
-
- 0 replies
- 319 views
-
-
நாளை புதன்கிழமை சிறிதளவு தவறினாலும் தூக்குமேடை உறுதி : பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அரசாங்கத்தின் இரட்டை வேடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. போர்க்குற்ற விசாரணைகள் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் நடைபெறுவது உறுதியாகும் வகையிலேயே புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். பொது மக்களை ஏமாற்றும் வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் போலியான தரவுகளை வெளிப்படுத்தி வருகின்றமை மிகவும் மோசமானதொரு நிலையாகும். எனவே …
-
- 1 reply
- 548 views
-
-
யாழில் அதிபர், மற்றும் ஆசிரியர் ஒருவரால், நாசமாகும் கல்லூரி – காதோடு காதாக –அராலியூர் குமாரசாமி:- பக்கத்து காணிக்குள் கள்ளத் தனமாக இறங்கி இளநீர் பிடுங்கி குடித்த அனுபவம் இருக்குதா. மாங்காய் பிடுங்கித் தின்ற அனுபவம் இருக்குதா. இளவயதில் தான் இப்படியான காரியங்களை செய்திருப்போம். வயது வந்து இப்படியான காரியங்களைச் செய்ய மனம் விடாது பாருங்கோ. ஊருக்குள் கெட்ட பெயர் வந்துவிடும் என்ற காரணத்தால் ஆசையிருந்தும் அதனை அடக்கிக் கொண்டிருப்போம். ஆனால் இப்பொழுது இளம் வயதினரைவிட வயது வந்தவர்கள் அதிகம் பேர் இப்படியான காரியங்களில் இறங்கிவிடுகின்றனர். அதுவும் படித்து உயர் பதவிக்கு வந்தவர்கள் அரச நிர்வாக அதிகாரிகள் செய்வதைப் பார்க்கின்ற போது தான் இந்தக் கண்றாவியை நாமு…
-
- 0 replies
- 502 views
-
-
'முல்லைத்தீவில் அதிவேக சிங்கள குடியேற்றம்' -சுப்பிரமணியம் பாஸ்கரன் “வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டமானது, மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், படையினருக்கான நில சுவீகரிப்புக்கள், கடல்வள சுறண்டல்கள், பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ மயமாக்கல் போன்றவற்றினால் விழுங்கப்பட்டு வருகின்றது. முழுமையாக விழுங்கப்படுவதற்கு முன்னர், மாவட்டத்தையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (19) விஜயம் செய்த ஆகியோரிடம் மக்கள் இதனைத் தெரிவித்துள்ளன…
-
- 1 reply
- 719 views
-
-
பிரபா உயிருடன் உள்ளார் எனக் கூறப்படும் கருத்தால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - ஜாதிக ஹெல உறுமய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு உள்ளதாக பழ.நெடுமாறனும், அமைச்சர் ப.டெனிஸ்வரனும் அடித்துக் கூறுகின்றனர். இவர்களின் கருத்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதால் வடக்கில் இருந்து இராணுவத்தை மாத்திரமல்ல இராணுவ முகாம்களையும் அகற்றக் கூடாது. இவ்வாறு ஜாதிக ஹெல உறுமய தெரிவித்தது. ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த வர்ணகுலசூரிய மேலும் கூறிய தாவது, பிரபாகரன் இறுதிப் …
-
- 0 replies
- 311 views
-
-
துணிவிருந்தால் காணாமற்போனோர் உயிருடன் இல்லை என்று கோத்தபாய எம் முன் சொல்லட்டும் பார்ப்போம் - போராடும் உறவினர்கள் ஆவேசம் எங்கள் பிள்ளைகளை நாங்கள்தான் இராணுவத்திடம் கையளித்தோம். அவர்கள் சரணடைந்ததைக் கண்ட சாட்சியாக இன்னமும் நாங்கள் உயிருடன்தான் இருக்கின்றோம். இராணுவத்திடம் ஒப்படைத்த பிள்ளைகள் இறந்து போனார்கள் என்று எப்படிச் சொல்லுவீர்கள். துணிவிருந்தால் நேரில் எங்கள் முன்வந்து சொல்லுங்கள் பார்க்கலாம். இவ்வாறு காணாமற்போனோரின் உறவினர்கள் கோபாவேசத்துடன், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ‘காணாமற்போனவர்…
-
- 0 replies
- 226 views
-
-
கலந்தாலோசனை அமர்வுகளை நடத்திய போது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை காணப்பட்டது : ஜே.மஜித் (வீடியோ இணைப்பு) (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதன் மூலமே ஜெனிவா பிரேரணையையும் ஏனைய விடயங்களையும் அமுல் படுத்திக்கொள்ள முடியும் அதாவது அரசாங்கத்திற்கு இந்த கால அவகாச பகுதியில் அழுத்தங்களை பிரயோகித்து பரிந்துரைகளை அமுல்படுத்திக்கொள்ள முடியும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். ஜெனிவா வளாகத்தில் நேற்று நடைபெற்ற நல்லிணக்க செயலணியின் அறிக்கை தொடர்பான விசேட உபக்குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்ட…
-
- 0 replies
- 210 views
-
-
லசந்த எவ்வாறு கொல்லப்பட்டார்? : நீதிமன்றத்தில் புதிய தகவலை வெளியிட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க துப்பாக்கிச்சூட்டில் உயிரிழக்கவில்லையென கல்கிசை நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். லசந்த விக்ரமதுங்க சிறப்பு ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டுள்ளதுடன், அவரது மூளையின் பகுதிகள் பிரித்து எடுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லசந்தவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். …
-
- 0 replies
- 266 views
-
-
கொழும்பு அரசுக்கு நேர அட்டவணையும் கடும் கண்காணிப்பும் கட்டாயம்வேண்டும் - இப்படி வலியுறுத்துகிறார் ஸ் ரீபன் ரப் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் செயன்முறையை செயற்படுத்த இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படும் போது, அதற்கான கால அட்டவணையையும் வலுவான கண்காணிப்பையும் ஐ.நா. உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ் ரீபன் ரப். “ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதன் ஊடாக, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுப்பு நாடுகள்…
-
- 0 replies
- 379 views
-
-
எம் பிரச்சனைகளை கேட்க நேரமில்லையா வடக்கு முதல்வருக்கு - கேப்பாப்பிலவு மக்கள் கேள்வி ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவதற்கு முதலமைச்சருக்கு நேரம் இருக்கின்றது. எங்களின் குறைகளைக் கேட்டதற்குத்தான் அவருக்கு நேரமில்லையா?.இவ்வாறு கேப்பாபிலவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கேள்வி எழுப்பினர். கேப்பாபிலவில் நில விடுவிப்புக்காக தொடர் போராட்டத்தை மக்கள் முன்னெ டுத்துள்ளனர். நேற்று 19 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கேப்பாபிலவில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு நேற்று நேரில் சென்றார். அங்கு வைத்த…
-
- 0 replies
- 361 views
-
-
ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. கொலை: பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்க மறியல் நீடிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று இவர்களை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமா…
-
- 0 replies
- 286 views
-
-
வாள்வெட்டு சந்தேகநபருக்கு டெங்கு நோய் யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கொழும்பில் கைதுசெய்யப்பட்ட மூவரில் ஒருவருக்கு டெங்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நோய்த்தொற்றுக்குள்ளான சந்தேகநபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலங்களாக இடம்பெற்ற பல வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் 3 பேர் பொலிஸாரினால் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்தநிலையில் அவர்கள் மூவரும் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர…
-
- 0 replies
- 285 views
-
-
இராணுவத்திடம் சரணடைந்தோரை பார்த்தவர்கள் எவருமேயில்லை இப்படிச் சொல்கிறார் கோத்தபாய கிராமத்துத் தமிழர்களுக்கு நாட்டின் அரச தலைவர், தலைமை அமைச்சர் ஆகியோரின் பெயரே தெரியாது. இப்படியானவர்கள், இராணுவ அதிகாரியைச் சுட்டிக்காட்டி, அவரிடமே தங்களின் குடும்பத்தவர் கள் சரணடைந்தனர் என்று எப்படித் தெரிவிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, போரின் இறுதிக் கட்டத்தில் படையினரிடம் சரணைடைவதைப் பார்த்தவர்கள் எவ ரும் இல்லை என்றும் குறிப்பிட்டார். கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித…
-
- 0 replies
- 362 views
-
-
காணாமற்போனவர்களில் எவருமே உயிருடனில்லை : கோத்தபாய சொன்னார் என்கிறார் நவநீதம்பிள்ளை “காணாமற்போனவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பான முழுமையான விவரங்கள் இல்லாதபோதிலும், விசாரணை களை ஆரம்பித்து நீதியை நிலைநாட்ட முடியும். அப்போதைய பாதுகாப்புச் செய லர் கோத்தபாய ராஜபக்சவிடம், காணாமற்போனவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை உறுதி செய்வதற்கான விசாரணை களை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். ‘காணாமற்போனவர்கள் இறந்து விட்டார்கள். அதனை அவர்களது உறவினர்கள் ஏற்கத் தயாரில்லை’ என்று எனக்கு அவர் பதிலளித்தார்” இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 351 views
-
-
சண்முகதாசனை விட்டு ஏன் பிரிந்தேன்.? காரணத்தை கூறுகிறார் ஜனாதிபதி (ப. பன்னீர்செல்வம்) எனது அரசியல் குரு தோழர் சண்முகதாஸன் ஆவார். அவரது பாசறைக்குள்ளேயே அவருக்கெதிராக கேள்வி கேட்டு கட்சியை விட்டு வெளியேறியவன் நான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். லெனின், கார்ல் மாக்ஸ், மகாத்மா காந்தியின் புகைப்படங்கள் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தல மாநாட்டு அறையில் இன்றும் உள்ளன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/17972
-
- 0 replies
- 467 views
-
-
“பணமிருந்தால் எந்தவொரு சமூக விரோதியும் அரசியலுக்கு வர முடியும்” நிலைமை மாறிவிட்டது என்கிறார் ஜனாதிபதி (ப. பன்னீர் செல்வம்) பணமிருந்தால் எந்தவொரு சமூக விரோதியும் அரசியலுக்கு வர முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தியது 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பே ஆகும் எனக் குற்றஞ்சாட்டிய ஜனாதிதி மைத்திரிபால சிறிசேன, ஒரு நாட்டின் வரலாற்றை அழிப்பது மன்னிக்க முடியாத குற்றமென்றும் குறிப்பிட்டார். கொழும்பு, மருதானை டார்லி வீதியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியினால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கல்வி பயிலும் கலாசாலையின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வ…
-
- 0 replies
- 144 views
-
-
விரைவான முன்னேற்றத்தை மீண்டும் வலியுறுத்தவுள்ள செய்ட் அல் ஹுசேன் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக முன்வைத்த எழுத்துமூல அறிக்கை தொடர்பான விவாதம் நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதன்போது விவாதத்தின் ஆரம்பத்தில் இலங்கை தொடர்பான அறிக்கையை உத்தியோகப்பூர்வமாக வெளியிடவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார். அதன்பின்னர் பதிலளிக்க உரிமை உள்ள நாடு என்றவகையில் இலங்கையின் வதிவிடப்பிரதிநி ரவிநாத் ஆரியசிங்க ஹுசைனின் உரைக்கு பதிலளித்து உரையாற்றுவார். தொடர்ந்து மனித உரிமை உற…
-
- 0 replies
- 187 views
-
-
சீனவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் சீனவின் பாதுகாப்பு அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார். தனது 21 உயர்மட்ட அங்கத்தவர்களுடன் இலங்கைக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சினாவின் பாதுகாப்பு அமைச்சர் சங் வன்குவான், இங்கிருந்து நேபாளத்திற்கும் தனது குழுவினருடன் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கையில் தங்கியிருக்கும் காலங்களில் சீனபாதுகாப்பு அமைச்சர் சங் வன்குவான், அரச அதிகாரிகள், உயர்மட்டத் தலைவர்களையும் குறிப்பாக இராணுவ அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதேவேளை, இரு நாட்டு இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதே சீன பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவரத…
-
- 0 replies
- 251 views
-
-
குடும்பத்தலைவர் மீது யாழில் வாள்வெட்டு யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் குடும்பத் தலைவரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் நேற்றிரவு பருத்தித்துறை அல்வாய் மகாத்மா வீதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் அப் பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய கந்தசாமி என்ற நபரே தலையில் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.சம்பவத்தின்போது காயமடைந்தவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேருக்கும் மேற்பட்ட கும்பலொன்றே வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்…
-
- 0 replies
- 312 views
-