ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
வவுனியாவை பிரம்டன் நகருடன் சகோதர நகரமாக்குவது தொடர்பான தகவல்களில் உள்ள தவறுகளால் பிரம்டன் நகர முதல்வர் லிண்டா ஜெப்ரி அவர்கள் மிகவும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளதாக பத்திரிகைகள் சுட்டிக் காட்டியுள்ளன. முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரம்டன் நகர மேயரைச் சந்திக்கச் சென்ற அன்று முதல்வர் நகரசபையில் பிரசன்னம் தரமால், விடுமுறை எடுத்துச் சென்றத சம்பவம் இடம்பெற்றிருந்ததோடு, அன்றைய தினம் கவுன்சில் கூட்டமும் இடம்பெறவில்லையென்ற போதும் “அடையாளத்திற்கான ஒரு சம்பிரதாய கூட்டமாக” சிலரைச் சந்தித்து விட்டு முதலமைச்சர் சென்ற நிகழ்வானது இந்த விவகாரத்தை ஏற்கனவே அடையாளம் காட்டியிருந்தது. பிரம்டன் மேயர் தனது வவுனியாவை இணை நகரமாக்குவது தொடர்பான விவகாரத்தில் வீழ்ச்சியைச் ச…
-
- 3 replies
- 565 views
-
-
யாழ். ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞன் ஒருவரை தற்போது பொலிஸார் தேடி வருகின்றனர். முச்சக்கரவண்டியொன்றில் தனித்திருந்த குறித்த பெண்ணின் வீட்டுக்குள் சென்று அவர் மீது குறித்த இளைஞனும் தாக்குதல் நடாத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. கொலை இடம்பெற்ற போது யாழ். ஐந்து சந்திப்பகுதியைத் தற்காலிக வசிப்பிடமாகவும், புத்தளத்தைப் பிறப்பிடமாகவும் கொண்ட முஹம்மட் பரீன் (வயது-33) என்பவர் அப்பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பொலிஸார் குறித்த நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் இவர் தலைமறைவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. …
-
- 0 replies
- 473 views
-
-
கொழும்பில் சீனாவின் புதுவருட கொண்டாட்டம் சீனா தனது புதுவருடக் கொண்டாட்டத்தை அடுத்த மாதம் இலங்கையில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது. வசந்த திருவிழா என்ற ழைக்கப்படும் சீனப் புதுவருடவிழா சீனா்களுக்கு மிக முக்கியமானதொரு கொண்டாட்டமாகும். இலங்கை- சீன நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் 60வருட கால நிறைவைக் காண்பது, இந்த வருடத்தின் முக்கிய நிகழ்வாகும். அதேபோல றபர்-அரிசி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திட்டு 65வருடங்கள் நிறைவு பெறுகின்றன.. பல இசை நிகழ்வுகள், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள் , திரைப்பட விழா போன்றன சீன அதிகாரிகளால் ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளன. பெப்ரவரி6ந் திகதி இடம்பெறு…
-
- 1 reply
- 318 views
-
-
நல்லூர் ஆலய சூழலில் அடையாள உண்ணாவிரத போராட்டம் வவுனியாவில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழில் இன்றைய தினம் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடுமாறு கோரி வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நான்காவது நாளாக இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் நல்லூர் ஆலய சூழலில் அடையாள உண்ணாவிரத போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னேடுக்கப்ப…
-
- 4 replies
- 438 views
-
-
மருதங்கேணியில் சுழல்காற்று -கே.மகா மருதங்கேணி, கட்டைக்காடு கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட சுழல்காற்றினால், கடற்கரையில் நின்ற படகுகள் தூக்கி வீசப்பட்டு சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, இப்பகுதியில் உள்ள திருமண மண்டமும் சேதமாகியுள்ளதாக வடமராட்சி, கட்டைக்காடு, கடற்தொழிலாளர் சங்க தலைவர் ஜேம்ஸ் கிறிஸ்துராஜா தெரிவித்துள்ளார். இதேபோன்று, முல்லைத்தீவு கடற்பகுதியில், மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/190458/மர-தங-க-ண-ய-ல-ச-…
-
- 0 replies
- 274 views
-
-
நல்லாட்சியின் திட்டங்களை மகிந்த காலத்து அதிகாரிகள் குழப்புகின்றனர்-யாழில் அமைச்சர் மங்கள நல்லாட்சி அரசாங்கம் பழைய அரசுடன் போராட வேண்டி உள்ளது. நல்லாட்சி அரசாங்கம் புதிய திட்டங்களை கொண்டுவந்தாலும் பழைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அதனை முறியடிக்கின்றனர். எத்தடை வரினும் எமது திட்ட்ங்களை நிறை வேற்றுவோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகத்தினை யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் தனதுரையில் மேலும் தெரி விக்கையில் வெளிநாட்டு வெளிவிவகார கொன்சில…
-
- 0 replies
- 274 views
-
-
நல்லாட்சி அரசிற்கு வழங்கும் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் ; அனந்தி சசிதரன் நல்லாட்சி அரசானது தமிழ் மக்கள் எதிர்பார்த்தவற்றை நிறைவேற்றாது தொடர்நதும் இழுத்தடித்து ஏமாற்றி வருவதால் நல்லாட்சி அரசிற்கு வழங்கி வருகின்ற ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகவியிலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சனைகள் குறித்துப் பேசுவார்கள் தங்கள் ப…
-
- 0 replies
- 286 views
-
-
பலத்த பாதுகாப்புடன் ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர் ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேக நபர்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாலின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். ஊர்காவற்துறை கரம்பெண் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் ஏழு மாத கர்ப்பிணி பெண் நேற்று செவ்வாய்க்கிழமை கொள்ளையர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டு இருந்தார். குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் சுழிபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவரை மண்டைதீவு சந்தியில் வைத்து கைது செய்திருந்தனர். …
-
- 0 replies
- 428 views
-
-
உலக டிஜிட்டல் மாநாடு இலங்கையில் :கூகுள், பேஸ்புக் தலைவர்கள் பங்கேற்பர் உலகின் முன்னணி நிறுவனங்கள் பங்கு பற்றும் டிஜிட்டல் மாநாட்டை இவ் வருடம் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த மாநாடானது எதிர்வரும் மார்ச் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக , தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. மாநாட்டில் கூகுள், பேஸ்புக் , சோசல் கெப்பிட்டல் மற்றும் இன்பொயிஸ் முதலான உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் பங்கு பற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்மைப்பு வசதிகள்…
-
- 0 replies
- 506 views
-
-
காணாமல் போனோர் தொடர்பில் விபரங்களை திரட்ட மனித உரிமை செயலகத்தில் அணி திரண்ட இளைஞர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக 40ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து இலங்கை மனித உரிமை செயலகத்தில் அணி திரண்டுள்ளனர். குறித்த இளைஞர்கள் மனித உரிமை செயலக அதிகாரிகளிடம் காணாமல் போனோர் தொடர்பில் கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தமது உறவுகள் காணாமற் போயுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் விசாரணைகள் தற்போது எந்த கட்டத்தில் உள்ளது தொடர்பாகவும், கடந்த 8 வருடங்களாக மக்களுக்கான பதில் வழங்கப்படாமைக்கான காரணம், மற்றும் வவுனியாவில் காணாமற் போனோரின் விபரங்களையும் கேட்டறிந்துள்ளனர். காணாமற் போனோரின் விபரங்கள் தங்…
-
- 0 replies
- 359 views
-
-
இந்திய குடியரசு தின விழா... யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதகரத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 68 ஆவதுகுடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை (26) கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதகரத்தில் கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி இந்நிகழ்வில் கலந்துகொண்டார். சிவபூமி இல்லம், வட்டுக் கோட்டை இந்துக்கல்லூரி, கைதடி நவீல்ட் இல்லம், தேவிபுரம் இனிய வாழ்வு இல்லம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவிகளின் கலை நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன. (படங்கள்: எம்.றொசாந்த்…
-
- 0 replies
- 481 views
-
-
புத்திர சோகத்தில் ஈழம்: அரசென்ன? நாமே கண்டுகொள்ளாதிருக்கிறோம்! – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஈழத்தை இன்றுவரை வாட்டிக்கொண்டிருக்கிற விடயம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் கண்ணீர். தீர்வு கிடைக்கும் வரை வாட்டுகிற விடயமாகவே இது இருக்கும். போர் முடிந்து எட்டு ஆண்டுகளை அண்மிக்கும் காலத்திலும் இறுதிப் போர்க்காலத்திலும் அதற்கு முன்பாகவும் காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் என்று பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் கதி என்னவென்று அறிய முடியாமல் இருக்கிறது. மிக மர்மமும் மிகக் கொடூரமான மனித உரிமை சார்ந்த விடயமாகவும் இன ஒடுக்குமுறையின் பாற்பட்ட விடயம…
-
- 0 replies
- 312 views
-
-
நல்லூர் ஆலய சூழலில் போராட்டங்கள் நடத்த தடை நல்லூரில் கோவிலைசூழ போராட்டங்கள் நடத்துவதற்கு தடைவிதித்து பதாகைகள் இரவோடு இரவாக நாட்டப்பட்டுள்ளன. காணாமற் போனோரின் உறவுகள் வவுனியாவில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் இன்றைய தினம் நல்லூரில் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். ஆயினும் நேற்று இரவோடு இரவாக நல்லூரில் தடை பதாகைகள் நாட்டப்பட்டுள்ளன. அப்பதாகையில் "கோவில் வளாகத்திற்குள் கூட்டங்கள் போராட்டங்கள் நடைபெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 486 views
-
-
-
- 0 replies
- 276 views
-
-
வவுனியா புனர்வாழ்வு நிலையத்திலிருந்து மூவர் சமூகத்துடன் இணைவு வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வினைப் பூர்த்தி செய்த மூவர் இன்று சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர். கார்த்திகேசு நாதன் (முல்லைத்தீவு), குழந்தைவேல் தயாபரன் (கிளிநொச்சி), கணபதிப்பிள்ளை யோகராசா (மட்டக்களப்பு) ஆகியோரே சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் வவுனியா புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி, பூந்தோட்டம் புனர்வாழ்வு பணியகப் பணிப்பாளர், பின்இணைப்பு அதிகாரி, சம்யத்தலைவர்கள், பூந்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என பலரும் கலந்து கொண்டனர். இதேவேளை, சமூகயமப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் உறவினர்கள் மற்றும் இப்பு…
-
- 0 replies
- 491 views
-
-
அநாதரவான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள கூட்டு எதிரணி பிரதமர் பரிகாசம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) கூட்டு எதிரணியினர் தற்போது செய்வதறியாது அநாதரவாகியுள்ளனர்.பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல் யானை சரணாலயத்தை பற்றி பேசுகின்றனர். எதிர்வரும் 27ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள எதிரணியின் கூட்டத்தில் அரசாங்கத்தில் இருந்து எவரும் வருகை தரமாட்டார்கள். ஆகவே யாரும் இல்லாத அநாதைகளாக பொது எதிரணியினரின் நிலை காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமிசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதகைிழமை வாய்மூல விடைக்கான வினாவின் போது கூட்டு எதிரணி எம்.பி கனக்க ஹேரத் பின்னவல யானை ச…
-
- 0 replies
- 676 views
-
-
கூட்டு எதிரணியின் அரச எதிர்ப்புப் பேரணி நாளை பெருந்திரளானோர் பங்கேற்பர்;கூட்டு எதிர்க்கட்சி அறிவிப்பு (எம்.சி.நஜிமுதீன்) ஐந்து பிரதான காரணிகளை முன்னிலைப்படுத்தி கூட்டு எதிர்க்கட்சி நாளை நுகேகொடையில் பாரியளவான பேரணியை நடத்தவுள்ளது. அதில் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களும் கலந்துகொள்ள இருந்தனர். இருந்தபோதிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பையடுத்து அவ்வாறானவர்கள் அப்போரணியில் கலந்துகொள்ளாமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமமே தெரிவித்தார். …
-
- 0 replies
- 388 views
-
-
விரைவில் சில அதிரடி அரசியல் தீர்மானங்கள் மக்கள் பிரதிபலனை காணமுடியும் என்கிறார் ராஜித (ரொபட் அன்டனி) நாட்டில் விரைவில் அதிரடி அரசியல் தீர்மானங்கள் எடுக்கப் படும். அதில் ஒரு தீர்மானமே இவ்வாரம் எடுக்கப்பட்டது. அதாவது விசேட ஆணைக்குழு அமைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானமே அதுவாகும். மேலும் பல அதிரடித் தீர்மானங்கள் விரை வில் எடுக்கப்படும். அதன்போது பிரதிபலன்களை நீங்கள் காணலாம் என்று இணை அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே …
-
- 0 replies
- 214 views
-
-
குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனையை வழங்கவே ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம் ஜனாதிபதி அறிவிப்பு; கடந்தகால சம்பவங்கள் குறித்தும் விசாரிக்கப்படும் என்கிறார் (ரொபட் அன்டனி) குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன தெரிவித்தார். கடந்த ஏழு அல்லது எட்டு வருட காலங்களாக நடைபெற்ற பிணைமுறி தொடர்பான சம்பவங்கள் குறித்தும் இவ்வாறான ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அமைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். …
-
- 0 replies
- 190 views
-
-
காணாமல் போனோரை எங்கு சென்று தேடுவது அமைச்சரவை பேச்சாளர் கேள்வி (ரொபட் அன்டனி) காணாமல்போனவர்களை எங்கு சென்று தேடுவது? காணாமல்போனவர்கள் தொடரபில் உள்ள ஒரே தீர்வு அவர்கள் குறித்து தேடிப்பார்ப்பதாகும். ஒரு சில நாட்களில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. காணாமல்போனவர்களை தேடவும் முடியாது. அனைவரும் இறந்துவிட்டதாக சான்றிதழ் வழங்கவும் முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ண தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் பின்னர் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த போது …
-
- 0 replies
- 203 views
-
-
வவுனியாவில் உணவு தவிர்ப்பிற்கு ஆதரவாக முச்சக்கரவண்டி சாரதிகள் மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணி காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட உணவுத் தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து 4வது நாளாகவும் இடம்பெற்று வருகிறது. அதேவேளை, இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டிச் சாரதிகள் 500ற்கு மேற்பட்டோர் ஒன்றிணைந்து பேரணியாக பிரதான பஜார் வீதி வழியாக மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக உணவு தவிர்ப்பு மேற்கொள்ளப்படும் இடத்திற்குச் சென்று தமது ஆதரவினை வழங்கியுள்ளனர். அதேநேரம் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்ற வவுனியா வர்த்தகர் சங்க உறுப்பினர்கள், உரிமையாளர்கள் உணவு தவி…
-
- 0 replies
- 514 views
-
-
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை – அரசாங்கம் ருத்ரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை எந்தவொரு உலக நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனைத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகும் எனவும், எந்தவொரு புலி ஆதரவு அமைப்பிற்கும் ஆதரளிக்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/archives/15135
-
- 2 replies
- 629 views
-
-
கதவடைப்புக்கு அழைப்பு -எஸ்.நிதர்ஷன் ஊர்காவற்துறையில், கர்ப்பிணி பெண்ணொருவர் அடித்து கொலை செய்யப்பட்டமை தொடர்பில், விரைவான விசாரணையை நடாத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமாறு கோரி, நாளைய தினம் ஒரு மணிநேர கதவடைப்பை மேற்கொள்ளுமாறு வட மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அது தொடர்பில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில், “தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்புக்குப் பின் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதை தினம் தினம் நடைபெறும் குற்ற செயல்கள் நிரூபிக்கின்றன. அரச இயந்திரம், இவ்வாறான குற்றங்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்காமையே, இந்தக் குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக அமைகின்றன. அத்துடன், …
-
- 0 replies
- 267 views
-
-
கிளிநொச்சி, முல்லைத்தீவில் உண்ணாவிரதத்துக்கு அழைப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், வவுனியாவில் நடாத்தப்படும் உணவுத்தவிர்ப்பு போராட்டத்துக்கு, ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாளை காலை 9 மணியில் இருந்து, மாலை 3 மணிவரை அடையாள உண்ணாவிரதப் போராட்டம், கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் தலைவர்கள். பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள், பொதுஅமைப்பினர், இளைஞர்கள் அனைவரையும் கலந்துக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இதேவேளை, நாளை காலை 9 மணிக்கு, முல்லைத்தீவு மாட்டச் செயலகத்துக்கு முன்னால், மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்த ஏற்…
-
- 0 replies
- 270 views
-
-
கொச்சிக்கடையில் 14 பேர் கைது எம்.இஸட்.ஷாஜஹான் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை செய்த பிரதான நபரையும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 13 பேரையும் கைதுசெய்துள்ளதாகவும் போதைப்பொருளை விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ஜீப் வண்டியையும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோய்னையும் கைப்பற்றியுள்ளதாகவும் கொச்சிக்கடைப் பொலிஸார், இன்று (26) தெரிவித்தனர். இது தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவிக்கையில், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் ஹெரோய்ன் பாவனையில் ஈடுபடுவேரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை, நேற்று ஆரம்பிக்கப்பட்ட போது, ஹெரோய்ன் பாவனையில் ஈடுபட்ட 13…
-
- 0 replies
- 266 views
-