ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
கொக்குவிலில் இளைஞர் குழு அட்டகாசம் நால்வர் படுகாயம் யாழ்.கொக்குவில் பகுதியில் கும்பல் ஒன்றின் தாக்குதலால் இரண்டு வீடுகள் மற்றும் வர்த்தக நிலையம் ஒன்று சேதமாகி உள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று முன்னதாக வர்த்தக நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டு வர்த்தக நிலையத்தை சேதமாக்கினர். அதன் பின்னர் வீதியால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியினை மறித்து தாக்கி முச்சக்கர வண்டியினை சேதமாக்கியதுடன் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டனர். பின்னர் அருகில் இருந்த வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டனர். அ…
-
- 0 replies
- 269 views
-
-
முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை இந்திய மீன்பிடி றோலர்கள் படையெடுப்பு முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை இந்திய றோலர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்தார். இரவு கடற்றொழிலுக்குச் சென்ற முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் மீன்பிடி படகுகளை அவதானித்ததாகவும் இன்று அதிகாலையே அவை இந்திய றோலர்கள் என முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் உறுதிப்படுத்திய நிலையில் இத்தகவலை உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தி இருப்பதாகவும் மாவட்டச் செயலர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கு இத்தகவலை அறிவ…
-
- 0 replies
- 268 views
-
-
நந்திக்கொடிக்கு முதலிடம் உண்டு என்கிறார் மனோ இலங்கையராக வாழ வேண்டுமாயின் எமது மதம், மொழி என அனை த்து அம்சங்களும் சிங்கள பௌத்தம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு மாறிவிட்டது. எனவே இன்று சிங்க கொடிக்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்தும் நந்திக்கொடிக்கும் வழங்கப்பட வேண்டும் என தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு கதிரேசன் வீதி கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் அறநெறி பாடசாலையினை அங்குரார்பணம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்…
-
- 0 replies
- 511 views
-
-
பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படுமி சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்ற நீதிவான் நீதிபதியும் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதியுமான எம் .முஹைதீன்முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவைப் பிறப்பித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் …
-
- 0 replies
- 416 views
-
-
பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் : விசாரணைகளில் புதிய தகவல்கள் பல அம்பலம் (எம்.எப்.எம்.பஸீர்) கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் பல புதிய தகவல்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குற் றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் இடம்பெறும் விசாரணைகளிலேயே இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஏற்கனவே பிரகீத் எக்னெலிகொட வெலி க்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து கடத்தப்பட்டு கிரித்தல இராணுவப் புலனாய்வு முகாமில் …
-
- 0 replies
- 494 views
-
-
முல்லைத்தீவில் - ஒட்டுசுட்டான் நகரின் மத்தியில் முத்து ஐயன்கட்டு நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான இராணுவத்தினரின் முகாமிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் அந்தப் பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்டுகின்றது. குறித்த விடயம் தொடர்பாக எந்த நடவடிக்கையையும் பிரதேச சபை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன், முல்லைத்தீவில் உள்ள 64 ஆவது படைப்பிரிவு முகாமில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் மக்கள் பாதிப்பை எதிர் நோக்குவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த வீதியால் பயணிப் போர் பெரும் அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும் சுகாதாரச் சீர்கேடுகளும் ஏற்படுகின்றதாக கூறப்படுகின்றது. இதேவேளை, பிரதேச சபை இது தொடர…
-
- 0 replies
- 294 views
-
-
வீட்டுத் திட்டத்துக்கான பயனாளிகளைத் தெரிவு செய்யும்போது வழமையாகப் பின்பற்றப்படும் நிபந்தனைகள் எதுவும் முன்நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்துக்கான பயனாளித் தெரிவின்போது பின்பற்றப்படவில்லை. இதனைக் கவனத்தில் எடுக்காமல் முன்நிர்மாணிக்கப்பட்ட வீட்டுக்கான விண்ணப்பப் படிவங்களை ஏற்றுக்கொள்ளுமாறு மீள் குடியேற்ற அமைச்சு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. முன்நிர்மாணிக்கப்பட்ட - பொருத்து வீட்டுக்கான விண்ணப்பங்கள் மக்களிடம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மீள்குடியேற்ற அமைச்சின் அலுவலர்கள் எனத் தெரிவிக்கும் நபர்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் இதனை வழங்குகின்றனர். விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்ட மக்கள் அதனைப் பூரணப்படுத்தி கிராம சேவையாளர்கள் ஊடாகப் பிரதே…
-
- 0 replies
- 274 views
-
-
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் மேலோங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் மெரினா கடற்கரையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பிரபல்யமாக பார்க்கப்படுகின்றது. மெரினா கடற்கரையோரத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பெண்ணொருவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்துடன் போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் இவரின் உருவப்படத்துடன் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஏன் கலந்து கொள்கிறீர்கள் என கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு குறித்தப் பெண் ”இவர் இல்லாமல் தமிழருக்கு உணர்வு எப்படி வரும்” என பதிலளித்துள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய பெண் பிரபாகரனின்…
-
- 1 reply
- 438 views
-
-
தமிழர்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் தனது சுயலாபத்திற்காக பிரபாகரன் தட்டிக்கழித்து விட்டார் – என்கிறார் டக்ளஸ் தேவானந்தா: தேவானந்தா:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தமிழர்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் தனது சுயலாபத்திற்காக பிரபாகரன் தட்டிக்கழித்து விட்டார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் தலைமைகள் அனைத்தும் தமிழ் மக்களுக்காக பேரம் பேசும் சந்தர்ப்பங்கள் கிடைத்த வேளை எல…
-
- 3 replies
- 319 views
-
-
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் நந்தினி பேக்கரி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வாள்வெட்டு கும்பல் ஒன்று புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டித்தள்ளியுள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை 04.30 மணியளவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியிலுள்ள 5 வீடுகளுக்குள் புகுந்த இந்த மர்ம கும்பல், வீடுகளில் இருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை நடாத்திவிட்டுச் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://www.tamilwin.com/community/01/132733?ref=home
-
- 3 replies
- 507 views
-
-
தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்! தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கக்கோரி தமிழகம் எங்கும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், நேற்றைய தினம் அலங்கா நல்லூரில் இரவிரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மாணவர்களை இன்று காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனால் தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கொதித்தெழுந்தனர். சென்னையில் பெரும் போராட்டம் முற்றியது. மாணவர்களை விடுதலை செய், பீட்டாவை தடை செய், எங்கள் கலாச்சாரத்தை அழிக்காதே, தமிழ் நாடு தனிநாடாகும் போன்ற கோசங்களை எழுப்பி மாணவர்களும், இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந் நிலையில் தமிழக இளைஞ…
-
- 27 replies
- 4k views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-22#page-6
-
- 0 replies
- 479 views
-
-
அழுத்தங்கள் வந்தாலும் அரசியலிலிருந்து ஒதுங்கமாட்டேன் -மகிந்த எப்படியான பலமிக்க நாடுகள் எவ்வளவு அழுத்தங்களை கொடுத்தாலும் தான் அரசியலில் இருந்து விலகவோ, ஒதுங்கவோ போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது அரசியலை நாட்டு மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியை அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எப்போதும் நாட்டு மக்களுடனேயே அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் வெளிநாடுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய…
-
- 0 replies
- 319 views
-
-
கிளி .காந்தி சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுவர்கள் மாயம் கிளிநொச்சி – உருத்திரபுரம் காந்தி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரி விக்கப்படுகிறது. இவர்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக காந்தி சிறுவர் இல்லத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்கள் 14 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுவர்கள் தமக்கு கல்வி கற்க விருப்பம் இல்லை எனவும், கல்வி கற்குமாறு தம…
-
- 0 replies
- 509 views
-
-
கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் டெங்கு ஒழிப்பு திட்டம் கொட்டாஞ்சேனை புனித லுஸியஸ் தேவாலய வளாகத்தில் இன்று இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு திட்டத்தில் பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை பொது மக்களின் ஒத்துழைப்புடன் நடந்த திட்டத்தில் கலந்துக்கொண்டார். http://www.virakesari.lk/
-
- 0 replies
- 305 views
-
-
இலங்கையில் அமெரிக்க இராணுவ பயிற்சி ஐக்கிய அமெரிக்கா கடற்படை கப்பல் 'ஹோப்பர்' இலங்கைக்கு நான்கு நாட்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கை இராணுவத்திற்கான விசேட பயிற்சிகளையும் வழங்கியுள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தக்கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றுள்ளனர். நான்கு நாட்கள் துறைமுகத்தில் தரித்திருக்கவுள்ள இக்கப்பலின் சிப்பந்திகள் மற்றும் இரு நாட்டு கடற்படையினருக்கும் மத்தியில் நிலவும் நட்புறவினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றும் முகமாகவே குறித்த விஜயம் அமைந்துள்ளது. மேலும் ஹோப்பர் கப்பல் இம்மாதம் 23ம…
-
- 0 replies
- 234 views
-
-
மற்றுமொரு முன்னாள் போராளி கைது கிளிநொச்சி திருவையாறு பகுதியில் வசிக்கும் காராளசிங்கம் குலேந்திரன் என்னும் முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டு காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடமை யாற்றி வருகின்றார். இவ்விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி மாலை ஊற்றுப்புலத்தில் தனது சகோதரியுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட பின்னர் இரவாகியும் வீட்டிற்கு திரும்பாமையினால் வீட்டார் சந்தேகம் கொண்டுள்ளனர். மறு நாள் காலை குறித்த முன்னாள் போராளி பயங்…
-
- 1 reply
- 553 views
-
-
வடக்கு மாகாண 11 ஆவது குத்துச்சண்டை போட்டி முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது. இதில் முல்லைத்தீவு மாவட்டம் 27.5 புள்ளிகளின்படி முதலிடம் பெற்று 4 தங்கம், 3 வெண்கலம், 2 வெள்ளி பதக்கங்களுடன் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிகொண்டுள்ளது. பிரபாகரனின் நிர்வாகத்தினால் தற்காப்பு கலை பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியரர் ஒருவர் தற்பொழுது தற்காப்பு கலை ஆர்வளர்களுக்கு பயிற்சியினை வழங்கி வருகின்றார். இந்நிலையில் இந்த குத்துச்சண்டை போட்டி நேற்று(20) முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது. குறித்த போட்டியில் வவுனியா மாவட்டம் 19.5 புள்ளிகளையும், யாழ் மாவட்டம் 25 புள்ளிகளையும், முல்லைத்தீவு மாவட்டம் 27.5 புள்ளிகளையும் பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கி கொண்டுள்ளது. …
-
- 0 replies
- 377 views
-
-
வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட ஓமந்தைப் பொலிஸ் பகுதியில் உள்ள பெரியமடு அரச காட்டுப் பகுதியில் அனுமதியின்றி நுழைந்து சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டி உழவு இயந்திரம் மூலம் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை சந்தேக நபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஒமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, ஓமந்தையில் உள்ள பெரியமடு காட்டுப்பகுதியில் இருந்து பெறுமதியான முதிரை மரங்களை வெட்டிக் கடத்தப்படுவதாக கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து, ஓமந்தை வட்டார வன…
-
- 0 replies
- 340 views
-
-
சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரியினால் பல்கலைக்கழகங்கள் "இருண்ட காலம்” ஒன்றை அனுபவிக்கும் நாள் மிக தொலைவில் இல்லை என தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றினை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அனுப்பியுள்ளனர். அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நம் நாட்டில் மருத்துவர் ஒருவராக பணியாற்ற பதிவு செய்ய வேண்டிய இரண்டு அத்தியாவசிய தேவைக ளின் அடிப்படையில் முதலாவது இலங்கை மருத்துவ சபையின் ஒப்புதலின் படி எந்த அரசாங்கத்திற்கும் மருத்துவதுறைப் பயிற்சி குறித்தும் அவர்களது சேவைகள் குறித்தும் நோயாளர்களின் உயிர்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டிய கடமையுள்ளது. இதனை உறுதி ச…
-
- 0 replies
- 393 views
-
-
வடக்கு முதல்வர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் இல்லை – வட மாகாண சபை உறுப்பினர் றயிஸ் வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் வடபுல முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் முஸ்லிம்களை புறக்கணித்து வட மாகாணசபையின் அரசியலை அரங்கேற்றுவதாகவும் சிலர் சமூக வலைத்தளம் ஊடாகவும், பத்திரிகை அறிக்கைகள் மூலமாகவும், தனிப்பட்ட ஊடகங்கள் மூலகமாகவும் விமர்சித்து வருவதை வடக்கு மாகாண சபை உறுப்பினர் முகமது றயீஸ் மறுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது வடக்கு முதல்வர் ஒருபோதும் வடக்கு முஸ்லிம்களின் எதிராளி அல்ல முஸ்லிம்கள் தொடர்பாக முதலமைச்சர் கரிசனையுடன் செயற்படுகின்றார் என்பதற்கு பல உதாரணங்களை எ…
-
- 0 replies
- 400 views
-
-
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தையிட்டி கிராமத்திற்கு அங்கஜன் இராமநாதன் சென்றுள்ளார் தையிட்டி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று(21) மாலை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கிராமத்திற்கு சென்று நிலைமைகளை நேரடியாக அவதானித்தார். குறிப்பாக கிராம மக்களின் குல தெய்வமான தையிட்டி பிள்ளையார் ஆலயத்தை பார்வை இட்டதுடன் மக்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார். மேலும் அப்பகுதியில் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களையும் சந்தித்து அவர்களுக்கான சந்தை வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். 0 http://globaltamilnews.net/archives/14709
-
- 0 replies
- 334 views
-
-
பிரதமர் பதவி தேடி வந்தபோதிலும் அதனை மகிந்தவிற்கு விட்டுக்கொடுத்த மைத்திரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பதவிக் காலத்தில் பிரதமர் பதவியை மைத்திரிபால சிறிசே னவுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்ட போது, அந்த பதவியை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேன கூறியதாக அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது அவர் அதனை நினைவு கூர்ந்துள்ளார். பீ. திஸாநாயக்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவரது பிரத்தியேக செயலா ளராக பணிப்புரிந்தார். …
-
- 0 replies
- 282 views
-
-
மகிந்த-முதலமைச்சர்கள் சந்திப்பு நிறைவு முன்னாள் ஜனாதிபதிக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் இன்று காலை ஆரம்பமான கலந்துரையாடல் நிறைவடை ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கலந்துரையாடலில் ஆறு முதலமைச்சர்கள் கலந்துகொண்டதாக தெரிிவக்கப்படுகிறது.வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன இந்த கலந்துரையாடலுக்கு சமூகமளித்திருக்கவில்லையென கூறப்படுகின்றது. அவசியமான தேவையொன்றின் நிமித்தம் தான் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளவில்லையென அவர் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகி ன்றது. இதேவேளை தான் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு முன்னணியிலுள்ள எந்தவொரு நபருடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத…
-
- 0 replies
- 260 views
-
-
யாழில் 2.8 மி.மி மழைவீழ்ச்சி -எஸ்.திருச்செந்தூரன் நாட்டின் அனைத்து இடங்களிலும் வரட்சியைத் தொடர்ந்து, மழை பெய்வதுடன் யாழில் 2.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி, சனிக்கிழமை பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் யாழில் மழை பெய்து வரும் நிலையில் குடாநாட்டின் சில பகுதிகளில் சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் மாலை 5.30 வரையில் 2.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/190115/ய-ழ-ல-ம-ம-மழ-வ-ழ-ச-ச-#sthash.mtvWrzlu.dpuf
-
- 0 replies
- 326 views
-