ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
ஜனாதிபதி சென்ற ஹெலிகொப்டர் கொட்டகலையில் அவசரமாக தரையிறக்கம் (க.கிஷாந்தன்) கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு பயணித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஹெலிகொப்டர் சீரற்றகாலநிலையால் கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து தலவாக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்திற்கு ஜனாதிபதி வாகனத்தில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/15656
-
- 0 replies
- 282 views
-
-
முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்ப்பதில் 30 இலட்சம் ரூபா மோசடி: கொழும்பு முன்னணி பாடசாலையொன்றின் ஆசிரியர் கைது (எம்.நேசமணி) முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக பெற்றோர்களிடமிருந்து முப்பது இலட்சம் ரூபா பணத்தை,மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் கொழும்பிலுள்ள பிரதான தேசிய பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரை பொலிஸ் மோசடி விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களை குறித்த பாடசாலையில் இணைத்துக் கொள்வதற்காக, அம்மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து 30 இலட்சம் ரூபா பணத்தினை குறித்த ஆசிரியர் மோசடியாக பெற்றுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 215 views
-
-
கிளிநொச்சி அக்கராயன்குளத்தை அண்மித்த கிராமங்களில் ஒன்றுதான் அமைதிபுரக் கிராமம். இந்த கிராமத்தை இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி நோக்கி படையெடுக்கும் போது முற்றும் முழுதாக அழித்துவிட்டதாக அயல் கிராம பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். விவாசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட குறித்த கிராமத்து மக்கள் சொந்த உழைப்பில் பாடுபட்டு கட்டப்பட்ட மாளிகைகள் எல்லாம் யுத்தக் குண்டுகளால் அழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் மன உளைச்சலடைந்த பிரதேசவாசிகள் மீள தமது ஊருக்கு திரும்ப மறுத்து வருகின்றனர். இறுதி யுத்தத்தின் பின்னர் குறித்த கிராமத்து மக்கள் மீளக் குடியேறுவார்கள் என்று நினைத்து கிறிஸ்தவ கெவிமாதா கோயில் ஒன்று அங்கு அமைக்கப்பட்டது. ஆனாலும் பொதும…
-
- 0 replies
- 533 views
-
-
யாழ்.குடாநாட்டில் இன்று (21) பிற்பகல்-03 மணி தொடக்கம் தற்போது வரை பரவலாகக் கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாரி காலம் போல இடைவிடாது கொட்டும் மழையால் யாழ்.குடாநாட்டின் தாழ் நிலப் பகுதிகள் பலவற்றிலும், பல்வேறு வீதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழை வெள்ளம் தேங்கி நிற்பதை அவதானிக்க முடிகிறது. கடும் மழையுடன் அவ்வப்போது பலத்த காற்றும் வீசுகிறது. இதேவேளை,இன்று காலை-09 மணி முதல் நண்பகல்-12 மணி வரையும் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பொழிந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/132635?ref=hom…
-
- 0 replies
- 502 views
-
-
திருகோணமலை துறைமுக விவகாரம்: சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் இலங்கை-இந்தியா இடையே எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, திருகோணமலை துறைமுக அபிவிருத்தியை இந்தியா வசம் ஒப்படைக்க இலங்கை-இந்திய அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, டெல்லி சென்றுள்ள அமைச்சர் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியை சீனா வசம் ஒப்படைத்திருக்கும் நிலையில், சீனா மற்றும் இந்தியாவுடன் சமமான உறவு நிலையைக் கடைப்பிடிக்க எண்ணியே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவ…
-
- 0 replies
- 311 views
-
-
பனங்கட்டி என்ற ஒரு சிறந்த மருத்துவப்பண்டம் கற்பகதருவின் கொடையில் என்று முன்பெல்லாம் தேனீர் அருந்துவதற்கு பனங்கட்டியையே அனுமானமாக கொள்வர். ஆடிப்பிறப்பில் ஆடிக்கூழ்; ஆடி அமாவாசையில் களி இவற்றிற்காக நம் தமிழ் மண்ணில் பனங்கட்டி வியாபாரம் களைகட்டும். அந்தள விற்கு பனங்கட்டிக்கு மவுசு அதிகம். இப்போது பனங்கட்டி வாங்குவார் இல்லை என்பதோடு விலையும் அதிகமாயிற்று. இவை ஒருபுறம் இருக்க, கருப்பணியை நன்றாக காய்ச்சி பனங்கட்டி தயாரிப்பது வழக்கம். நம் கிராமத்து குடிசைக் கைத்தொழிலாக பனங்கட்டி உற்பத்தி நடைபெற்றது. கருப்பணியை காய்ச்சும் போது அது நன்றாக கொதித்தெழும். அவ்வாறு கொதித்தெழுவதை தணிப்பதற்காக கருப்பணி காய்ச்சப்படும் சட்டிக்குள் ஏதாவது போடவேண்டும். நம் முன்னோர்களின் …
-
- 0 replies
- 533 views
-
-
தம்மை விடுதலை செய்ய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை : பல வருடங்களாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கண்டி போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 தமிழ் அரசியல் கைதிகளை கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட போதே அவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எம்மை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் நீதிமன்றங்களில் உள்ள ந…
-
- 0 replies
- 252 views
-
-
வெளிச்சமின்றி வரும் திருட்டு மண் டிப்பர்களை தடுப்பார்களா உரியவர்கள்? குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் முல்லை – பரந்தன் வீதியில் வெளிச்சம் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக மண் ஏற்றி வரும் மண் டிப்பர்களை உரியவர்கள் தடுத்து நிறுத்துவார்களா என்று மக்கள் கேட்கின்றனர். அண்மையில் யாழ் பல்கலைக்கழக ஊடக வள நிலையத்தின் இதழியல் டிப்ளோமாதாரியான மாணவர் ஒருவர் மண் டிப்பர் மோதி பலியானார். புளியம்பொக்கனை கண்டாவளைபகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது 24) எனும் இளைஞனே இவ்வாறு பலியானார். தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக் கட்டுப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் நடந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் …
-
- 0 replies
- 245 views
-
-
தேசிய மட்டத்தில் சாதனை படைத்தது கிளிநொச்சிக்கு பெருமையே -மேலதிக அரச அதிபா் சத்தியசீலன் 2016 இடம்பெற்ற போட்டிகளில் தேசிய மட்டத்தில் மேசை பந்து போட்டியில் தங்கப்பதகம் வென்றமை மற்றும் ஏனைய போட்டிகளிலும் வெள்ளி வெண்கல பதக்கங்களை வென்றமை கிளிநொச்சிக்கு பெருமை சோ்த்த விடயம் என மாவட்ட மேலதிக அரச அதிபா் எஸ். சத்தியசீலன் தெரிவித்துள்ளாா் கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சாதனையாளா் கௌரவிப்பு நிகழ்வின் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா் அவா் மேலும் தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதன்முதலாக றோல் போல் விளையாட்டை அறிமுகப்படுத்தி அதனை முதல் முதலாக நேரடியாக பாா்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திய தந்த ஏற்பாட்டாளருக்கு நன…
-
- 0 replies
- 240 views
-
-
மதச்சார்பற்ற நாடாகவே இலங்கை இருக்க வேண்டும் அன்னை திரேசாவின் நினைவு நிகழ்வில் சம்பந்தன் (ரி.விருஷன்) இலங்கை மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். அனைத்து மக்களும் விரும்பக்கூடியதும் பாரபட்சம் அற்றதும் சமய அங்கீகாரத்துடன் கூடிய மதச் சார்பின்மையில் நாம் இணைந்து செயற்பட வேண்டும் அதுவே நாட்டில் சிறந்த சுழலை ஏற்படுத்தும் 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் உள்ள சமய புறக்கணிப்பு இனியும் ஏற்பட்டுவிடக்கூடாது. அனைத்து மக்களும் இணைந்து வாழக்கூடிய சமய சுதந்திரம் நிச்சயம் பெறப்பட வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். அன்னை திரேசாவின் நினைவு தின நிகழ்வு நேற்று …
-
- 1 reply
- 402 views
-
-
இந்தியாவுக்கு திருமலை துறைமுகம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கம் இன்னும் அடையாளம் காணவில்லையென பாதுகாப்புத் துறை விசேட நிபுணரான ஓய்வு பெற்ற கேணல் சுசந்த செனவிரத்ன தெரிவித்துள்ளார். திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி குறித்து அவர் தெரிவிக்கையி லேயே இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவுக்கு திருகோணமலைத் துறைமுகம் தொடர்பில் வரலாற்று நெடுகிலும் ஒரு அவதானம் இருந்து வருகின்றது. இவ்வாறு வழங்குவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். http://onlineuthayan.com/news/22945
-
- 1 reply
- 259 views
-
-
யாழ். நகரப்பகுதியில் பொலிஸாரின் தேவைக்காக திரைமறைவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நில அளவை திணைக்கள அதிகாரி கூறியதை அடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் ஒப்புதல் இல்லாமல் யாழில் எந்த காணிகளும் சுவீகரிக்கப்படக் கூடாது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று காலை யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் இந்த ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களின் முன்மொழிவுகள் செ…
-
- 1 reply
- 328 views
-
-
நல்லிணக்க முயற்சியின் காலதாமதம் நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளில் காண்பிக்கப்பட்டுவரும் இழுத்தடிப்புக்கள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை குறைப்பதாகவே அமைந்திருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து புதிய நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெற்றிருந்தது. இந…
-
- 0 replies
- 275 views
-
-
மீண்டும் தலைதூக்கியிருக்கும் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை! ஐம்பதுக்்கு ஐம்பது என்ற அதிகாரக் கோரிக்கை சுமார் 70, வருடங்களுக்கு முன்பாக அதாவது இலங்கையின் சுதந்திர யாப்பு என்று வர்ணிக்கப்படுகின்ற சோல்பரி அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் எமது முன்னைய தலைவர்களால் முன்வைக்கப்பட்டு தோற்றுப்போன விவகாரமென்பதை நாம் மறந்துவிட முடியாது. யுத்த மோதல்களில் சிக்கியிருந்த மக்கள் அராங்கப் படைகள் நடத்திய இத்தகைய தாக்குதல்களினால் காயமடைந்து, அவர்களின் உயிர்களைக் காப்பதற்காகச் செயற்பட்டிருந்த வைத்தியசாலைகள் மீதும் இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இத்தகைய தாக்குதல…
-
- 0 replies
- 273 views
-
-
நிதிநகரத்தை உருவாக்க கடலுக்குள் நிலப்பரப்பு உருவாக்கும் பணிகள் இவ்வருடத்தில் நிறைவு கொழும்பு நிதி நகரத்தை உருவாக்குவதற்காக மணல் அகழும் கப்பல்கள் மூலம் கடலுக்குள் நிலப்பரப்பை உருவாக்கும் செயற்பா டுகள் இடம்பெற்று வருகின்றன. இதற்காக கடலில் இருந்து 28 வீத நிலப்பரப்பு உருவாக்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய நிலப்பரப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்கப்பட்டு விடும் என்றும் சீன துறைமுக பொறியியல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெருநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று கொழும்பு துறைமுக நகர திட்ட த்தை ஆய்வு செய்யச் சென்றிருந்த போது சீன அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட…
-
- 0 replies
- 184 views
-
-
பிரேரணைகளால் சாதனை படைத்த வடமாகாணசபை வடமாகாண சபையில் 81 கூட்டத் தொடர்களில் 321 பிரேரணைகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகி ன்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் அமைக்கப்பட்ட வட மாகாண சபையில் இடம்பெற்ற கூட்டத்தொடர்க ளிலேயே இவ்வாறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் அதிகமான தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் எதிரானவை எனவும் கூறப்படுகின்றது. இந்த பிரேரணைகளில் அதிகமானவை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்படுகின்றது http://onlineuthayan.com/news/22947
-
- 0 replies
- 288 views
-
-
யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள் அச்சிட்ட 5 பேர் கைது யாழ்ப்பாணத்தில் போலி நாணயத் தாள்களை அச்சிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வல்வெட்டித்துறை பகுதியில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. போலி நாணயத் தாள்களை அச்சிடும் கணினி மற்றும் ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்கள் நான்கு என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 18 முதல் 27 வயதெல்லைக்கு உட்பட்ட ஐந்து இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் புதுக்குடியிருப்பு நீதவானின் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். http://globaltamilnews.net/archives/14539
-
- 0 replies
- 339 views
-
-
உலக தலைவர்கள், வர்த்தக பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்திய பிரதமர் ரணில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல் (நமது நிருபர்) உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக சுவிற்சர்லாந்து சென் றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று டெவோஸ் நகரில் வெளிநாட்டுத் தலைவர் கள், வெளிவிவகார அமைச்சர்கள், பிரபல சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்புகளின் போது இலங்கையுடனான நட்புறவு தொடர்பிலும் பலமிக்கதோர் இலங்கையை கட்டியெழுப்புவதற்கான நிலையான அபிவிருத்தி வேலைத்திட்…
-
- 0 replies
- 297 views
-
-
தமிழ் மக்களை மீண்டும் படுகுழியில் தள்ளாது அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை (ரி.விருஷன்) தமிழ் மக்களை மீண்டும் படுகுழியில் தள்ளாது அபிவிருத்தியிலும் வேலைவாய்ப்பிலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். வடக்கு மக்கள் புலிகளுக்கு வாக்களித்தார்கள் என்பதற்காகவும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தார்கள் என்பதற்காகவும் கடந்த ஆட்சியினரால் வீதிக்கு இறக்கப்பட்டனர். இந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது. வடமாகாணத்திற்கு பூரண அதிகாரங்கள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்று சிறுவர் விவகார இராஜா…
-
- 0 replies
- 330 views
-
-
பௌத்த மதம், ஒற்றையாட்சியில் எந்த மாற்றமும் இடம்பெறாது (பா.ருத்ரகுமார்) புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற பதத்திலும் பௌத்த மதத்துக்கு உள்ள முன்னுரிமை தொடர்பிலும் எவ்விதமான மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. கருத்து வேறுபாடுகள் முன்மொழிவுகளை எல்லாம் பாராளுமன்றத்தில் பேசித்தீர்த்துக்கொள்ளலாம். அரசாங்கத்திடம் இது தொடர்பில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார். நிதியமைச்சர் லொத்தர் சீட்டுக்களுக்கு விலை அதிகரித்தமையை ஜனாதிபதி நிராகரித்து 20 ரூபாய் என மீண்டும் நிர்ணயித்தமை ஜனநாயத்தின் சிறப்பான பண்பாகும். இவ்வாறு எடுத்…
-
- 0 replies
- 380 views
-
-
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மோசடி குறித்து சர்வதேச விசாரணை மத்திய வங்கி மோசடிக்கு எதிராக நிதி புலனாய்வு பிரிவில் முறைப்பாடு என்கிறார் கபீர் (எம்.எம்.மின்ஹாஜ்) முன்னைய ஆட்சியின் போது ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறு வனத்தில் நடந்த மோசடிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெற்று வருகின்றது. இந்த விசாரணையின் முடிவில் உண்மை நிலவரம் தெரியவரும் என அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார். அத்துடன் முன்னைய ஆட்சியின் போது முன்னெடுக்கப்பட்ட மத்திய வங்கி மோசடிகள் குறித்து விரைவில் விசேட நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யவுள்ளோம். மேலும் முன்னைய ஆட்சியின் போது அரச நிறுவனங்களில் இருந்த…
-
- 0 replies
- 149 views
-
-
இலங்கைக்கு கால அவகாசம் வழங்க மற்றுமொரு பிரேரணை 34 ஆவது கூட்டத் தொடரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கொண்டுவர முயற்சி? (ரொபட் அன்டனி) மனித உரிமை விவகாரத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முறைமையை பரந்துபட்ட ரீதியில் முன்னெடுக்கவும் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கும் வகை யில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 ஆம்திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதிவரை நடைபெ…
-
- 0 replies
- 418 views
-
-
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நட்டஈடு வழங்கும் அலுவலகம் விரைவில் சுவிடன் வட்டமேசை கலந்துரையாடலில் அறிவித்தார் மங்கள (நமது விசேட நிருபர்) நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு அமைக்கப்பட்ட செயலணி தனது அறிக்கையை அரசாங்கத் திடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதுடன் அதற்கு அமைவாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நட்டஈடு வழங்கும் அலுவலகத்தை அமைப்பது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான முக்கிய வேலைத்திட்டங்கள் …
-
- 0 replies
- 415 views
-
-
சிறுபான்மையினருக்கு புதிய தேர்தல் முறையில் அநீதி இழைக்க இடமளியோம் திருத்தங்கள் இல்லையேல் பழைய முறைமையில் தேர்தல் என்கிறது ஐ.தே.க. (எம்.எம்.மின்ஹாஜ்) சிறுபான்மையினருக்கு அநீதியான தேர்தல் முறைமையை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம். சிறுபான்மை இனத்தவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புதிய தேர்தல் முறைமையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இல்லையேல் பழைய முறைமையின் பிரகாரமே தேர்தல் நடத்த வேண்டி ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார். இது தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவு…
-
- 0 replies
- 382 views
-
-
அரசியலமைப்பில் சகலரதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் செயிட் அல் ஹுசைனிடம் உத்தரவாதமளித்தார் பிரதமர் ரணில் (நமது விசேட நிருபர்) அனைத்து மக்களினதும் உரிமைகளை புதிய அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். மக்களின் உரிமைகள் தொடர்பில் அனைத்து நிறுவனங்களினதும் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குவதற்கான அத்தியாயம் தொடங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனிடம் உறுதியளித்திருக்கிறார். உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் சுவிட்ஸர்லாந்தின் டேவோஸ் நக…
-
- 0 replies
- 577 views
-