Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய அரசியலமைப்பு தொடர்பில் 7306 பேரே கருத்து தெரிவிப்பு புதிய அரசியலமைப்பு மற்றும் இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான நீதிமன்றத்தை அமைத்தல் என்பன தொடர்பில் இலங்கையிலுள்ள கோடிக்கணக்கான மக்களில் 7306 பேர் மாத்திரமே கருத்துத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் மக்கள் கருத்துக் கணிப்புக்கென நியமித்த குழு வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் மேல் மாகாணத்திலும், வட மேல் மாகாணத்திலும் 250 பேருக்கும் குறைவானோரே கருத்துத் தெரிவித்துள்ளனர். இக்குழுவின் செயலாளரினால் நடாத்தப்படுகின்ற அரச சார்பற்ற அமைப்பு மேற்கொண்ட கருத்த…

  2. அனைவர் வாழ்விலும் சந்தோஷம், அமைதி இனிக்கட்டும் : முன்னாள் ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி சர்க்கரை பொங்கலைப் போல அனைவரின் வாழ்விலும் சந்தோஷமும் அமைதியும் இனிக்கட்டும். எம் மக்கள் அனைவரும் சந்தேசமாக தைப்பொங்கலை கொண்டாடி மகிழுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிவைத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் அனுப்பிவைத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, புதுப்பானை, புத்தரிசி, வாழை, கரும்பு, மாவி விலைத் தோரணம், இளம் இஞ்சி, இளநீர், மங்கல மஞ்சள் என இனிக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள். சர்க்கரைப் பொங்கல், புது ஆடை, கோயில் தரிசனம் என எம் மக்கள் அனைவ…

  3. தமிழ் மக்களின் செய் நன்றி மறவா பண்பே எடுத்துக்காட்டப்படுகின்றது : தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி உழவுத் தொழிலும் உலகமும் உயிர்வாழ மழையைத் தரும் சூரியன் உள்ளிட்ட இயற்கைச் சூழல் மீதும் கமத்திற்கு கை கொடுத்து, பசிக்குப் பால் கொடுக்கும் கால்நடைகள் மீதும் தமது மனமார்ந்த பக்தியையும், கௌரவத்தையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழ் மக்கள் தைத்திருநாளை கொண்டாடுவதன் மூலம் அம்மக்களின் செய் நன்றி மறவா பண்பே எடுத்துக்காட்டப்படுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், …

  4. யாழ் குடாநாட்டில் தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று(12) அதிகாலை 5 மணி முதல் பல்வேறு பகுதிகளிலும் தைப்பொங்கல் வியாபாரம் களைகட்ட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ். நகர் மற்றும் அதனை அண்டியுள்ள வியாபார நிலையங்கள், குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள், சுன்னாகம், மருதனார் மடம், சங்கானை பொதுச் சந்தைகள் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து மிகவும் ஆர்வத்துடன் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளனர். பொங்கலுக்குத் தேவையான பானைகள், அகப்பைகள், அரிசி, கரும்பு, பழ வகைகள், புத்தாடைகள், …

  5. வவுனியா - பனிக்க நீராவி கிராமத்தில் வசித்த முன்னாள் போராளியான தேவசகாயம் மரியதாஸ் அண்மையில் திடீரென மரணித்த நிலையில், கஷ்டத்துடன் வாழ்ந்த அவரது குடும்பத்திற்கு இன்று(13) உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த உதவியை வழங்கியுள்ளது. அத்துடன், மிகுந்த கஷ்டத்துடன் வாழ்ந்து வரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கரவண்டியும், அவரது குடும்பத்திற்கு புத்தாடைகள், பொங்கல் பொருட்கள், 15 நாட்களுக்கான உலர் உணவு பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த உதவி திட்டம் சாந்த நாயகி நற்பணி மன்றத்தின் நிதி உதவியில் தமிழ் விருட்சம் அமைப்பு வழங்கியதாக தெரிவிக்கப்பட…

  6. தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பியவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் முல்லைத்தீவில் கலந்துரையாடல் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்து மீண்டும் தாயகம் திரும்பியுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று இன்று முல்லைத்தீவில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது இந்தியாவில் பிறந்தவர்களுடைய பிறப்பு சான்றிதழ், வீட்டுத்திட்டங்கள் வழங்குவது மற்றும் வாழ்வாதர உதவிகளைச் செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது. தற்போது தமிழகத்தில் சுமார் ஒரு இலட்சம் அகதிகள் வாழ்வதாக ஈழ அகதிகள் மறுவாழ்வுக் கழகம் தெ…

  7. தாயகம் திரும்பியவர்களின் நிறைவேறா எதிர்பார்ப்புகள்: நடவடிக்கை எடுக்குமா அரசாங்கம்? inS கோர யுத்தத்தின் போது இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்ற பலர், பல்வேறு எதிர்பார்ப்புக்களின் மத்தியில் தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். எனினும், அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பல வருடங்கள் கடந்த நிலையில், இன்று வரை நிறைவேறாமை கவலைக்குரிய விடயமாகும். வவுனியா – தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர், எதிர்காலத்தை வளமாக்கும் கனவுடன், இந்தியாவில் இருந்து 2012 ஆம் ஆண்டு சொந்த மண்ணிற்கு வந்துள்ளார். …

  8. மாகாண சபைகளின் வருமானம் மாகாண சபைகளின் அபிவிருத்திக்கே பயன்படுத்துவதற்கான சட்டமூல நடைமுறை வேண்டும் மாகாண சபைகளின் மூலம் ஈட்டப்படும் வருமானத்தை மாகாண சபைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக கிடப்பில் போடப்பட்டுள்ள சட்டமூலத்தை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே வறுமை தலைவிரித்தாடும் மாகாணமாக கிழக்கு மாகாணம் உள்ள நிலையில் அங்கு ஈட்டப்படும் வருமானமும் மத்திய அரசுக்கு செல்வதால் கிழக்கு மாகாணத்துக்கு நிதி வழங்குவதில் காட்டப்படும் பாரபட்சத்துடன் மாகாணத்தை அதள பாதாளத்துக்கு இட்டுச்செல்லும் நிலைமையே ஏற்படும் எனவும் அவர் தெரி…

  9. முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுங்கள் : நாட்டுமக்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக முப்படையினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (13) முற்பகல் இலங்கை சீனக்குடா விமானப்படைக் கல்லூரியில் நடைபெற்ற விமானப்படை பயிலுனர்களை அதிகாரம் பெற்றவர்களாக நியமித்தல் மற்றும் விமானப்படை வீர்ர்கள் …

  10. கிளிநொச்சியில் டெங்கு வேகமாக பரவுவதாக எச்சரிக்கை : 28 பேர் பாதிப்பு கிளிநொச்சியில் டெங்கு காச்சல் வேகமாக பரவிவருவதாகவும், கடந்த 01.01.2017 ஆம் திகதியில் இருந்து 13.01.2017 ஆம் திகதி வரைக்கும் சுமார் 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிக்கிறது என்று மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். டெங்கு கட்டுப்பாட்டை குறைப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் சிரமதான பணிகளை மாவட்ட சுகாதார பிரிவினர், இராணுவத்தினருடன் சிவில் பாதுகாப்பு திணைக்களம், பிரதேச சபை என்பன சிரமதான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் சிவில் பாதுகாப்பு திணைக்கள நாடகக் குழுவினரால் டெங்கு விழிப்புணர்வு நாடகங்களும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது …

  11. சந்திரசிறி அடாத்தாக பெற்றநிதி மீளவும் வடமாகாண சபைக்கு வட மாகாண திணைக்களங்களில் இருந்து 2013ம் ஆண்டில் முன்னாள் ஆளுநர் சந்திரசிறியினால் சட்ட முரணாகப் பெற்று க்கொ ள்ளப்பட்ட 110 மில்லியன் ரூபாவும் தற்போதைய ஆளுநரால் வட மாகாண சபையிடம் மீளக் கையளிக்கப்பட்டது. 2013ம் ஆண்டிற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் காலத்தின்போது மாகாணத் திணைக்களங்களில் இருந்த நிதியினை முன்னா ள் ஆளுநர் சட்ட முரணாக ஆளுநர் நிதியத்திற்குத் திருப்பியிருந்தார். அவ்வாறான நிதி 2013ம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை க்கான தேர்தல் காலத்தில் மகிந்த அணிக்கான தேர்தல் பிரசாரங்களிற்கும் அதனோடு இணைந்த செலவிற்கும் பயன்படு த்தப்பட்டதான குற்றச்சாட்டுகள் எழுந்தன. …

  12. யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை வழக்கில் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் கடும் எச்சரிக்கை! யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கோரப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய குற்றப்புல னாய்வுப் பிரிவினருக்கு யாழ். நீதவான் சதீஸ்கரன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி யாழ் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் நள்ளிரவு 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணி த்த மாணவர்கள் இருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடையாதாக சந்தேகிக்கப்படும் யாழ் பொலிஸார் ஐவரும் குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வ…

  13. தனுஷ்கோடி கடலில் கைது செய்யப்பட்ட இலங்கையர் யார்? பொலிஸார் தீவிர விசாணை மன்னார் பேசாலை பகுதியில் இருந்து ட்யூக் என்பவர் சட்டவிரோதமாக படகு மூலம் இராமேஸ்வரம் செல்ல முயன்ற போது தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்பகுதியில் தனுஷ்கோடி பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இராணுவ பிரச்சனை காரணமாக அவர் வந்துள்ளாரா? அல்லது வேறு எதும் அமைப்பில் உள்ளவரா என்ற கோணத்தில் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/15400

  14. அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை தோற்கடிக்க வெளிநாட்டுச் சதி-அமைச்சர் அர்ஜூன சந்தேகம் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை தோற்கடிக்க வெளிநாட்டுச் சதி ஒன்று இருக்கலாம் என்று துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார். பதுரகொடவில் மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘தாய்லாந்தில் சீனாவின் நிதியுதவியுடன் கால்வாய் அமைக்கும் பணி நிறைவடைந்தால், தெற்காசியாவின் முக்கியமான நாடு ஒன்று இலங்கைக்கான வர்த்தகத்தை இழக்கும். அந்த நாடே, அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை எதிர்க்கின்ற பின்னணியில்…

  15. பொலிஸார் நியாயமற்ற முறையில் நடந்து கொள்கின்றனர் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளின் போது சில தரப்பினருடன் பக்கச்சார்பான முறையில் பொலிஸார் நடந்துகொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார். சிலருக்கு பிணை வழங்கியும், சிலரின் விளக்கமறியலை நீடித்தும் பொலிஸார் நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாக அவர் கூறினார். சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களை நலம் விசாரிக்க தங்காளை சிறைச்சாலைக்கு சென்றிருந்த அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார். அத்துடன் ஹம்பாந்தோட்டை மோதல் சம்பவத்தை ஆரம்பித்தவர்களுக்கு எதிராக முதலில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ…

    • 0 replies
    • 226 views
  16. A H1 N1 நோய் தொடர்பில் பீதியடையத் தேவையில்லை இன்புளுவன்சா A H1 N1 நோய் தொடர்பில் வீணாக பீதி ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனினும் சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், நீண்ட கால நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போன்றவர்களுக்கு இந்த நோய் ஏற்பட்டால் அபாயம் இருப்பதாக கண்டி பொது வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் துஷ்மந்த மெதகெதர கூறினார். கண்டி பொது வைத்தியசாலையில் சிறுநீரக பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த 03 நோயாளர்கள் அண்மையில் உயிரிழந்திருந்தது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு இன்புளுவன்சா A H1 N1 நோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. எவ்வாறாயினும் தற்போது அந்த நோய் தொற்றைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து…

    • 0 replies
    • 185 views
  17. தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மாற்றத்தை தடுப்பது குறித்து பேச்சு கொழும்பு 08 ஆம் இலக்க நீதிமன்றத்தில் இடம்பெறும் தமிழ் அரசியல் கைதிகள் 38 பேரின் வழக்குகள் ஹோமாகம நீதிமன்றிக்கு மாற்றப்படுவதை தடுப்பது குறித்து நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுடன் கலந்துரையாடுவதாக தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் பேச்சாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு சிறப்பு நீதிமன்றத்தில் இடம்பெறும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை ஹோமாகம நீதிமன்றிற்கு மாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும்,…

  18. மஹிந்தவின் கருத்துக்கு ரணில் பதில் ஐரோப்பிய சங்கத்தினால், GSP+ வரிச் சலுகை, நிறுத்தப்பட்டதால், இலங்கைக்கு எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார் அவரது கருத்துக்கு பதிலளித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, GSP+ வரிசலுகை கிடைத்தமை 500 மில்லியன் மக்கள் கொண்ட பாரிய சந்தையை கைப்பற்ற உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 'இலங்கை 2003ஆம் ஆண்டு 2,500 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெற்றிருந்தது. 2015ஆம் ஆண்டில், GSP+ வரிச்சலுகையை இழந்த நிலையில், 4,800 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றிருந்தது. எனினும், அதே வருடம் பங்களாதேஷ் வரிச்சலுகையை தனியாக அனுப…

  19.  40 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர் தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் தங்கவைக்கபட்டிருந்த இலங்கை அகதிகள் 40 பேர் இன்று இலங்கையை வந்தடையவுள்ளனர். ஐக்கிய நாடுகளிள் அகதிகளுக்காக உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட நடவடிக்கைகையை அடுத்து இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 14 குடும்பங்களை சேர்ந்த இந்த அகதிகள், திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள முகாம்களில் இருந்தவர்களே நாடு தி…

  20. மஹிந்­தவும் நாமலும் எதிர்ப்­பினை உடன் வாபஸ் பெறுவது அவசியம் அம்­பாந்­தோட்டை அபி­வி­ருத்தி குறித்து பிர­தமர் அறி­விப்பு (எம்.எம்.மின்ஹாஜ்) அம்­பாந்­தோட்டை கைத்­தொழில் பேட்டை வல­யத்­திற்கு பாரிய எதிர்ப்­பினை வெளி­யிட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க் ஷவும் அம்­பாந்­தோட்டை மகா­நா­யக்க தேரர்­க­ளிடம் சென்று எதிர்ப்­பினை மீளப்­பெற வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவின் 50 ஆவது பிறந்த தினத்தை முன்­னிட்டு அம்­பாந்­தோட்டை திஸ்­ஸ­ம­ஹ­ரா­மவில் கஜ­ச­ம­ர­கம என்ற புதிய கிரா­மத்தை மக்­க­ளுக்கு கைய­ள…

  21. காணாமல் போயி­ருந்த 4 கல்­முனை மீன­வர்­களும் மாலை­தீவில் மீட்பு ஹக்கீம், ஹரீஸின் தீவிர முயற்­சிக்கு பலன் (சாய்ந்­த­ம­ருது மேல­திக, புதியகாத்தான்குடி, பால­முனை மேல­திக, இஸ்­லா­மாபாத், அட்டா­ளைச்­சேனை நிரு­பர்கள்) டிசம்பர் மாதம் 24ஆம் திகதி இரண்டு இயந்­திர பட­கு­களில் கட­லுக்கு சென்று காணாமல் போன கல்­மு­னையை சேர்ந்த இரண்­டா­வது தொகுதி மீன­வர்கள் நால்­வரும் மற்­றைய பட­குடன் நேற்று வியா­ழக்­கி­ழமை அதி­காலை மாலை­தீவு கரை­யோரப் பாது­காப்பு படை­யி­னரால் காப்­பாற்­றப்­பட்­டுள்­ளனர். இத்­த­க­வலை மாலை­தீ­வுக்­கான இலங்கைத் தூதுவர், தன்­னுடன் தொடர்பு கொண்டு உறு­திப்­ப­டுத்­தி­ய­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான …

  22. சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பட்ட கருத்துக்கள்- லண்டனில் அமைச்சர் மங்கள உள்ளூர் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பட்ட கருத்துக்கள் நிலவுவதாகத் நேற்றிரவு லண்டனில் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டுள்ளார். பிரிட்டனிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர, லண்டன் சத்தம் ஹவுசில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றிலேயே இதனைத் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனில் பிரதமர் திரேசா மே பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் முதல் முறையாக உத்தியோகபூர்வ விஜயமொ ன்றினை மேற்கொண்டுள்ள வெளிநாட்டமைச்சர் மங…

  23. வட மாகா­ணத்தில் அத்­து­மீ­றிய கைது­களும் படை­யி­னரின் கெடு­ப­ிடி­களும் தொடர்­கின்­றன கன­டாவில் முதல்வர் சி.வி.; தேசிய, சர்­வ­தேச பொறி­மு­றைகள் வேண்டும் என்­கிறார் (நமது விசேட நிருபர்) நீதியை நிலை­நாட்­டு­வதில் தேசிய, சர்வ தேச பொறிமுறைகள் முறை­யாக கடை­ப் பி­டிக்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்திய வடக்கு மாகாண சபை முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் வடக்கில் தற்­போதும் அத்­து­மீ­றிய கைது­களும் சட்­டத்­திற்கு புறம்­பான பாது­காப்பு படை­யி­னரின் கெடு­ப­ிடி­களும் தொடர்­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். கனடா நாட்டின் பிரம்ரன் நக­ர­மா­னது வடக்கு மாகா­ணத்தின் வவு­னியா நக­ருடன் இரட்டை நகர ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­ட­வுள்­ளது. இந்…

  24. ஒற்றையாட்சியை நீடிப்பதற்கு ஜனாதிபதி பதவி அவசியம் (ரொபட் அன்­டனி) நாட்டின் ஒற்­றை­யாட்சி முறைமை நீடிக்­கப்­ப­ட­வேண்­டு­மானால் ஜனா­தி­பதி முறைமை நீடிக்­கப்­ப­ட­வேண்டும். அதில் திருத்­தங்கள் செய்­யலாம். ஆனால் அந்த முறைமை நீடிக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என்று கூட்டு எதி­ர­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது எப்­போ­துமே மக்­களின் நலனைக் கருத்தில் கொண்டு செயற்­ப­டு­வ­தில்லை. அதி­க­மான தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளி­யி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர் என்­பதை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு மறந்­து­வி­டக்­கூ­டாது எனவும் தினேஷ் குண­வர்த்­தன சு…

  25. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கியே தீருவோம் பாராளுமன்றத்தை பலப்படுத்தும் முறைமை வரும் என்கிறது ஐ.தே.க. (எம்.எம்.மின்ஹாஜ்) நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நாம் நீக்­கியே தீருவோம். தற்­போதே அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் பாரா­ளு­மன்ற முறை­மை‍யை கொண்டு வரு­வ­தற்கு அனைத்து ஏற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். புதிய தேர்தல் முறைமை விவ­கா­ரத்தில் அவ­ச­ரப்­பட்டு எத­னையும் செய்ய முடி­யாது. இது எதிர்­கா­லத்தில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் விட­ய­மாகும். எனினும் எல்லை நிர்­ணய அறிக்­கையில் விரைவில் ஐக்­கிய தேசியக் கட்சி பிர­தி­நிதி கைச்­சாத்­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.