Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வலி.வடக்கு ஊறணி பிரதேசம் தைப்பொங்கலன்று உரிமையாளர்களிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளது வலி. வடக்கு ஊறணி பிரதேசம் தைப்பொங்கலன்று உரிமையாளர்களிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்றையதினம் அறிவித்துள்ளார். கடற்றொழிலை நம்பி வாழும் குடும்பங்களின் நலன் கருதியும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாகவும், ஊறணி கடற்கரைப்பகுதி எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் செல்வதற்கான எல்லைக் கட்டுப்பாடுகள் இராணுவத்தினராலோ அல்லது கடற்படையினராலோ விதிக்கப்பட…

  2. வெள்ளி கிரகத்தை இன்று தெளிவாக பார்க்க முடியும்.! இலங்கையில் வெள்ளிக் கிரகத்தை இன்று தெளிவாக பார்க்க முடியும் என ஆர்த்தர் சீ க்ளார்க் மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று மாலை 6.30 இல் இருந்து இரவு 9 மணி வரையில் இதனை மேற்கு வானில் தெளிவாக பார்க்க முடியும். http://www.virakesari.lk/article/15380

  3. இராணுவ வாகனம் இளைஞன் மீதும் பொலிஸ் வாகனம் தாதி மீதும் மோதல் : வவுனியாவில் சம்பவம் வேகமாகச் சென்ற இராணுவ வாகனம் ஒன்று இளைஞர் ஒருவர் மீதும், பொலிஸ் வாகனம் தாதி ஒருவர் மீதும் மோதிய சம்பவம் வவுனியாவில் இருவேறு பகுதிகளில் பதிவாகியுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு முன்பாக இன்று (12) பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞன் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள கராஜ் ஒன்றில் பணிபுரியும் 25 வயதுடைய நிம்புஜோர்ஜ் என்றஇளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். …

  4. வெளிநா­டு­க­ளு­க்கு 10301 ஏக்கர் காணி­களை வழங்­கிய மஹிந்த இன்று கூச்சலிடு­கிறார் லசந்த கொலை வழக்கு விசா­ர­ணையில் திருப்­தி­யில்லை என்­கிறார் ராஜித (ரொபட் அன்­டனி) முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தனது ஆட்­சி­யின்­போது வெளிநா­டு­க­ளுக்கு 10301 ஏக்கர் காணி­களை வழங்­கி­யுள்ளார். அவற்றில் விற்­பனை செய்­யப்­பட்ட காணி­களும் உள்­ளன. அவ்­வாறு செய்­தவர் இன்று அபி­வி­ருத்தி செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக கூச்சலிடு­கின்றார் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். லசந்த படு­கொலை தொடர்­பான விசா­ர­ணைகள் திருப்­தி­க­ர­மாக இல்லை என்ற குற்­றச்­சாட்டை நானும் முன்­வைக்­கின்றேன் என்றும் அவர் குறிப்­பிட்டார். …

  5. வவுனியாவில் 10ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்க விண்ணப்பபடிவம் விநியோகம் வவுனியா மாவட்டத்தில் 10 ஆயிரம் பொருத்து வீடுகளை வழங்குவதற்கு கிராமசேவையாளர்களூடாக விண்ணப்பப்படிவம் விநி யோகிக்கப்பட்டு வருகின்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சினால் இவ்விண்ண ப்பப்படிவங்களின் விநியோகம் அரசாங்க அதிபரின் சிபாரிசுக்கு அமைவாக இடம்பெற்று வருகின்றது. கிராமசேவையாளர்களுக்கு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர், கிராமசேவையாளர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. …

  6. விமல் கைதானார்.! முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டார். http://www.virakesari.lk/article/15286

  7. ரவிராஜ் தீர்ப்பை இரத்து செய்ய சட்டமா அதிபர் கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பை ரத்துச் செய்து விட்டு, வழக்கு விசாரணைகளை மீண்டும் நடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிடுமாறு கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அறங்கூறனர் சபையின் முன் வழக்கை விசாரித்த விசேட மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கு சம்பந்தமான சட்டரீதியான விடயங்களை போதுமான வகையில் தெளிவுப்படுத்தவில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கூறியுள்ளார். அத்துடன் வழக்கு விசாரணைகளை நள்ளிரவு வரை நடத…

  8. இன­வா­தத்தை தூண்­டா­ம­லி­ருப்­பது கடி­ன­மாயின் கடலில் குதி­யுங்கள் இன­வா­தி­களை வலுப்­ப­டுத்­திய காலம் மறைந்­து­விட்­டது என்­கிறார் மனோ (க.கம­ல­நாதன்) தமிழ், சிங்­கள, முஸ்லிம் என இன­வா­திகள் எவ ராக இருப்­பினும் அவர்­களை அர­சாங்கம் கண்­டு­கொள்­ளாது, அவர்­களை வலுப்­ப­டுத்­திய காலம் மறைந்து போய்­விட்­டது. எனவே, இன­வா­திகள் நாட்டை சீர­ழிக்க இட­ம­ளிக்கக் கூடாது. அவ்­வாறு இன­வாதம் பேசி நாட்டை சீர­ழிக்­காமல் இருப்­பது தமக்கு கடினம் என்று நினைப்­ப­வர்கள் கடலில் சென்று குதி­யுங்கள் என தேசிய சக­வாழ்வு, நல்­லி­ணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். ஹெக்டர் கொப்­பே­க­டுவ கம­நல ஆராச்சி மத்­திய நிலை­யத்தின் கே…

  9. பெற்றோரின் ஆத்ம சாந்திக்காக சோளம் பயிரிட்டு பசுக்களுக்கு உணவாக்கிய தேரர் (எம். செல்வராஜா பதுளைநிருபர்) பெற்றோரின் ஆத்ம சாந்திக்காக புண்ணியம் தேடும் வகையில் அரை ஏக்கரில் முழுமையாக பயிரிட்ட சோளப் பயிர் முழுவதையும் பசுக்களுக்கு உண­வா­கக்­கொ­டுத்­து தேரர் ஒருவர் தானம் செய்துள் ளார். மெதகமை, கொட்டபோவதேவஹிரி விகாரையின் விகாராதிபதியான பியரட்ன தேரரே தனது பெற்றோரின் ஆத்மசாந்திக்காக இவ்வாறு தானம் செய்துள்ளார். இத் தேரர் அரை ஏக்கர் காணியில் தாமே நிலத்தை சீர்ப்படுத்தி சோளப் பயிர் செய்து அதில் விளைந்தவற்றை பசுக்கள் உண்பதற்கு வாய்ப் பளித்தார். …

  10. 'மீண்டும் ஜனாதிபதியானால் நாட்டில் வித்தியாசமாக எதனை செய்வீர்கள் ?' : பதிலளித்தார் மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வாய்ப்பு கிடைத்தால் நாட்டில் வித்தியாசமாக எதனை செய்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, நாட்டை யார் ஆட்சி செய்தாலும் தற்போதைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்ற சரியானதை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கேள்வி உங்களுடைய தம்பி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவ…

  11.  ஜனாதிபதித் தேர்தல் 2020இல் இல்லை -ஜே.ஏ.ஜோர்ஜ், ப.பிறின்சியா டிக்சி “புதிய அரசியலமைப்பின் ஊடாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து விட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, ஜனாதிபதித் தேர்தல் 2020ஆம் ஆண்டு நடைபெறாது” என, சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோது, அதில் பங்கேற்றிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “நிறைவேற்று அதிகாரம்…

  12. தனித்தே ஐ.தே.க. களமிறங்கும் (எம்.எம்.மின்ஹாஜ்) அடுத்த தேர்­த லின் போது தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி தனித்தே போட்­டி­யிடும். எனினும் தேசிய அர­சாங்க கொள்­கையில் மாற்றம் ஏற்­ப­டாது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். கம்­ப­ஹாவில் விசேட சந்தை கட்­ட­டத்­தொ­கு­தியை நேற்று முன் தினம் திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில், இலங்­கையின் பொரு­ளா­தாரம் யுத்­தத்­தினால் ஒரு­புறம் வீழ்ச்சி அடையும் போது மறு­புறம் எல்லை மீறிய கடன் பெற்­ற­தனா…

  13. தற்போதைய காலநிலையை கருதி பாடசாலை நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கோரிக்கை நாடளாவிய ரீதியில் நிலவும் அசாதாரண காலநிலையைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளை ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்ற த்தைக் கொண்டுவருவது குறித்து கல்வி அமைச்சு சாதகமாகப் பரிசீலிக்க வேண்டுமென கோரிக்கையொன்று முன்வைக்கப்ப ட்டுள்ளது. இது தொடர்பான கோரிக்கையை இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விடுத்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாடளாவிய ரீதியில் தற்போது மிகவும் குளிரான காலநிலை நிலவுகிறது. குளிர்காலநிலை காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படு கின்றன. பாடசாலை மாணவர்கள் …

  14. கிளிநொச்சியில் வேகமாக பரவுகிறது டெங்கு .கிளிநொச்சியில் கடந்த முதலாம் திகதி முதல் நேற்று வரை 23 பேருக்கு டெங்கு தொற்றியுள்ளதாக மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஏழு பேருக்கு காணப்பட்ட டெங்கு நேற்றுமுன்தினம் பத்தாம் திகதி 14 பேருக்கு காணப்பட்டது. ஆனால் நேற்று 11 ஆம் திகதி 23 உயா்ந்திருக்கிறது. நாளுக்குநாள் வேகமாக பரவுகிறது டெங்கு எனவே பொது மக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கடந்த பத்து நாட்களில் ஆயிரம் பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. http://o…

  15.  ‘விமலின் வாயை மூடவே முடியாது’ “கைதுசெய்து, வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்சவை, ஏழு சிறைகளுக்கு அனுப்பினாலும் அவருடைய வாயை மூடவே முடியாது” என்று, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வாடகை அடிப்படையில் அமர்த்தப்பட்ட 40 வாகனங்களை தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், செவ்வாய்க்கிழமை (10) கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 24ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். …

  16. இராணுவத்திற்கு புனர்வாழ்வா? கொதிக்கிறார் சரத்வீரசேகர இராணுவம் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தின் நல்லிணக்க செயலணி முன்வைத்துள்ள யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையினால் இராணுவத்துக்கு பாரிய அவமானம் ஏற்படும் என முன்னாள் சிரேஷ்ட கடற்படை அதிகாரி ரியல் அட்மிரல் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார். உலகில் எந்தவொரு நாட்டிலும் அந்நாட்டின் இராணுவம் புனர்வாழ்வளிக்கப்பட்டதில்லை. இராணுவம் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் எனக் கூறுவதாயின், இராணுவத்திலுள்ளவர்கள் மனநோயாளர்களா? எனவும் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார். இராணுவத்துக்கு எதிரான மிகப் பயங்கரமான யோசனைகள…

  17. ஊழல் குற்றச்சாட்டு: வட மாகாண அமைச்சர்களுக்கு எதிராக 23 பேர் சாட்சியம்! வட மாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கென வடக்கு முதல்வரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் முன்னிலையில் 21 பேர் சாட்சியமளித்துள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக பல ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்காக வடக்கு முதல்வரால் ஓய்வுபெற்ற நீதியரசர்கள் இருவரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவானது கடந்த இரு தினங்களாக மேற்கொண்ட விசாரணையில், நேற்று 9 பேரும் நேற்று முன்தினம் 14 பேரும் சாட்சியமளித்துள்ளனர். நான்கு அ…

  18. வவுனியாவில் வறட்சி காரணமாக குடிநீர் இன்றி மக்கள் அவதி வவுனியாவில் பல இடங்களில் கடும் வறட்சி காரணமாக கிணற்றுக்குள் தண்ணீர் இன்றி மக்கள் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றனர். செட்டிகுளம் பாவற்குளம் 6ஆம் யூனிட்டில் அதனை அண்டிய பகுதியிலுள்ள பொதுமக்கள் அப்பகுதியிலுள்ள பொதுக்கிணற்றில் வறட்சியின் காரணமாக குடிநீர் வற்றியுள்ளது இதன் காரணமாக குடி நீரினைப் பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாக நேற்றைய தினம் பாவற்குளம் பகுதியில் அடிக்கல் நாட்டும் நிகழ்விற்குச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வன்னி மவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர். அப்பகுதியிலுள்ள பொதுக்கிணற்றிலே பல காலங்கள…

  19. இந்தியர்கள் இருவர் கைது.! இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு 53 கிலோ கிராம் கஞ்சா கொண்டு வந்த இரு இந்திய பிரஜைகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/15361

  20. கண்டியில் 3 நோயாளர்கள் திடீர் மரணம் : 69 ஆவது சிகிச்சை பிரிவு மூடல் : நோயாளர்கள் அதிரடியாக வெளியேற்றம்: காரணம் வெளியாகியது.! கண்டி போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் 69 ஆவது சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களில் 3 பேர் திடீரென உயிரிழந்ததையடுத்து, குறித்த சிகிச்சைப் பிரிவில் இருந்த ஏனைய நோயாளர்கள் வெளியேற்றப்பட்டு குறித்த சிகிச்சைப் பிரிவு நேற்று மாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் மூன்று பேர் கடந்த ஞாயிற்றுக் கிழமை திடீரென உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மேற்கொண்ட மருத்துவ சோதனையில் குறித்த நபர்கள் இன்ஃபுலுவென்சா ஏ எச்1என்1 என்ற…

  21. மஹா வம்சத்தின் புதிய பதிப்பு ஒன்று நாளை வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜோர்ஜ் டெர்னரினால் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட மஹாவம்ச பிரதியே இவ்வாறு நாளை வெளியிடப்படவுள்ளது. மத்திய கலாச்சார நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். காலி கோட்டை துறைமுக அதிகாரசபையின் சுற்றுலா பங்களாவில் நாளை மாலை 5.00 மணிக்கு நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. பிரதமரின் ஆலோசனைக்கு அமைய மஹாவம்ச நூல் வெளியீடு நடைபெறவுள்ளது. இலங்கையின் வரலாறு பற்றி தெரிந்து கொள்வதற்கான ஆய்வு நூலாக மஹாவம்சம் கூறப்படுகின்றது. மஹானாம…

  22. இலங்கையில் வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு உட்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இன்று புதன்கிழமை தமிழர்கள் கலந்து கொண்ட கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட சமூக ஆர்வலர்களின் ஒன்றியத்தினால் ஏற்பாட்டில் திருகோணமலை நகரில் சட்ட உதவி மையத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு , வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் உருவாக்கல், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுல், சகல அரசியல் கைதிகளும் வி்டுதலை செய்தல், உள் நாட்டில் நடந்தேறிய சித்திரவதைகள் , படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட…

  23. கனடாவுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர். அந்நாட்டு ஊடகங்களுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். புலம் பெயர் தமிழர்கள் தொடர்பாகவும், விசா கோரிக்கைகள் தொடர்பான முக்கிய தகவல்களையும் இதன்போது ஊடகங்களுடன் பகிர்ந்துக் கொண்டார். வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு கனடாவின் ஒத்துழைப்பின் அவசியம், கனடாவுடன் மேற்கொள்ளவுள்ள இரட்டைநகர் ஒப்பந்தம் தொடர்பாகவும் இதன்போது விவாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது http://www.tamilwin.com/politics/01/131008?ref=home

  24. நல்லிணக்க பொறிமுறை குறித்த செயலணியின் பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்த பரிந்துரையின் ஊடாக படையினருக்கு பாரிய அவமரியாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட கடற்படை அதிகாரியான ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். உலகின் எந்தவொரு நாட்டிலும் படையினருக்கு புனர்வழ்வு அளிக்கப்பட்டதில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையின் ஊடாக படைவீரர்கள் விசரர்கள் என்றே கருதுகின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இராண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.