Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மே மாதம் வரையில் நாட்டில் உணவிற்கு தட்டுப்பாடு நிலவிக்கூடும் எதிர்வரும் 2017ம் ஆண்டு மே மாதம் வரையில் நாட்டில் உணவிற்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.நாட்டில் நிலவி வரும் கடுமையான வரட்சி காரணமாக இவ்வாறு உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மே மாதத்தின் பின்னரே நெல் விளைச்சல் பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எனவே, இந்தக் காலம் வரையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் என தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/archives/12121

  2. முப்படையினருக்கு ஜனாதிபதி விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் முப்படையினருக்கும் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளது. பலாலி இராணுவ முகாமில் இருந்து இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளது. இந்த உரையாற்றும் போது முப்படைகளின் தளபதிகளும் பலாலி இராணுவ முகாமில் பிரசன்னமாகியிருப்பர் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://globaltamilnews.net/archives/12116

  3. தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் 'சு.க.வுக்கு தோல்வியில்லை' கவிதா சுப்ரமணியம், வி.யுகாந்தினி 2017ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியே வெற்றிபெறும் என்றும் அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், அக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் எம்.எச்.எம்.மன்சூர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, “மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று, எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதியுடன் 2 வருடம் கழிந்துவிட்டது. பிறக்கவுள்ள 2017ஆம் ஆண்டு, வெற…

  4. சோதனையிட சென்ற இலங்கை அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் கொடுத்த தண்டனை : திருகோணமலையில் சம்பவம் திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளை சோதனையிடுவதற்காக சென்ற இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் அதிகாரிகள் நான்கு பேரை, இந்திய எண்ணெய் கூட்டுதாபனத்தின் அதிகாரிகள் சிலர் தடுத்து வைத்துள்ளனர். சோதனைக்கு சென்ற இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் அதிகாரிகளை சுமார் அரை மணித்தியாலம் தடுத்து வைத்து பின்னர் விடுவித்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். http://www.virakesari.lk/article/14901

  5.  'பிரபாகரன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பாா்' -எஸ்.என்.நிபோஜன் “விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவா் பிரதமராகியிருப்பாா்”என சிறுவா், பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கடந்த செப்டெம்பா் மாதம் தீயினால் எரிந்து அழிந்துபோன கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு நட்டஈடு இன்றைய தினம், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். - See more at: http://www.tamilmirror.lk/188764/-ப-ரக-ரன-இர-ந-த-ர-ந-த-ல-ப-ரதமர-க-ய-ர-ப-ப-#sthash.T2ee9sUe.dpu…

  6. இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை நேற்றைய தினம் கொழும்பில் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை நேற்றைய தினம் கொழும்பில் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஊடகவியலாளர்களுக்கு சிற்றுண்டியாக அப்பம் வழங்கியதுடன் நிகழ்வில் தானும் அப்பத்தை உண்பதைப் படத்தில் காணலாம். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது இந்த அப்பம் தொடர்பான விவகாரம் சூடுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-30#page-1

  7. கனடா செல்­கிறார் விக்கி (ஆர்.ராம்) வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் எதிர்­வரும் ஜன­வரி மாதம் நான்காம் திகதி கன­டா­வுக்கு பய­ண­மா­க­வுள்ளார். 16ஆம் திகதி வரை யில் கன­டாவில் தங்­கி­யி­ருக்­க­வுள்ள முத­ல­மைச்சர் இரட்டை நகர ஒப்­பந்­ததம் ஒன்றில் கைச்­சாத்­தி­ட­வுள்­ள­தோடு பல்­வேறு நிகழ்­வு­க­ளிலும் பங்­கேற்­க­வுள்ளார். முத­ல­மைச்­சரின் கனே­டிய பயணம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, கன­டியத் தமிழ் சமூ­கத்­தினர் இதற்­கான ஏற்­பா­டு­களை செய்­ய­வுள்­ளனர். அதன் பிர­காரம் ஜன­வரி மாதம் ஆறாம் திகதி கன­டாவைச் சென்­ற­டை­ய­வுள்ள முத­ல­மைச்சர் மறுநாள் ஏழாம் திகதி கன­டாவில் உள்ள அனைத்து ஊட­கங்­க­ளுக்­கு­மான சந்­திப்பில் பங்­கே…

  8. என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீடு நடைமுறைப்படுத்தப்படும் – டிஎம் சுவாமிநாதன் என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீடு நடைமுறைப்படுத்தப்படும் என மீள்குடியேற்றம், புனா்வாழ்வு, சிறைசாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சா் டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார் இன்று 28-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடந்த செம்ரெம்பா் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு நட்ட ஈட்டினை வழங்கி விட்டு உரையாற்றும் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா். மேலும் வீட்டுத்திட்டத்தின் பொழுது இப்பொழுது பல பிரச்சனைகள் காணப்படுகின்றன. மண் இல்லை ,வேலை…

  9. வடக்கு உட்பட இலங்கையில் மூன்று பயிற்சி முகாம்கள் அவுஸ்திரேலிய ஒத்துழைப்பு அமைப்பு நடத்துகின்றது 2016-12-29 21:34:10 அவுஸ்­தி­ரே­லிய அரசின் அனு­ச­ர­ணை­யுடன் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள ஆசிய விளை­யாட்­டுத்­துறை ஒத்­து­ழைப்புத் திட்­டத்தின் கீழ் இலங்­கையில் மெய்­வல்­லு­நர்­துறை சார்ந்த மூன்று பயிற்சி முகாம்கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. வட மாகா­ணத்­துக்­கான பயிற்சி முகாம் துரை­யப்பா விள­யாட்­ட­ரங்கில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. உள்ளூர் பயிற்­று­நர்­க­ளுக்கு வெளி­நாட்டு பயற்­று­நர்­க­ளைக்­கொண்டு பயிற்சி முகாம்­களை நடத்தும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ரவின் தூர­நோக்கு திட­டத்­திற்கு அமைய இந்தப் பயிற்ச…

  10. வவுனியா ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக இரண்டு தினங்கள் காத்திருக்கும் பொதுமக்கள் - விசேட விலைக்கழிவு அறிவித்தலால் சம்பவம் (சதீஸ் ) புதுவருடத்தை முன்னிட்டு விலைக்கழிவில் ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாக வவுனியாவிலுள்ள பிரபல்ய ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த இரண்டு தினங்களாக இங்கு வரும் பொதுமக்களுக்கு ஆடைகள் விற்பனைக்கு வழங்கப்படவில்லை. வவுனியா கண்டி வீதியிலிருக்கும் பிரபல்யமான ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக கடந்த இரண்டு தினங்களாக மக்கள் கூட்டங் கூட்டமாக அலைமோதுகின்றனர். புதுவருடத்தை முன்னிட்டு விலைக்கழிவில் ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனி…

  11. அடுத்த வருடம் மார்ச் மாதம் மீள்குடியேற்றம் பூர்த்தி யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அடுத்த வருடம் மார்ச் மாத காலப் பகுதிக்குள் நிறைவு செய்ய முடியும் என, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தற்போது வரை 4600 ஏக்கர் நிலப்பரப்புகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இலங்கையிலுள்ள 31 நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள சுமார் ஆயிரம் குடும்பங்கள் வரை இன்னும் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். இவர்களை மீள்குடியேற்ற காணிகளை பெற்றுக் கொடுப்…

  12. நாடு பிரிக்கப்படுவதற்கு எதிராக சிங்கள மக்களை அணிதிரள அழைக்கிறார் ஞானசாரதேரர் நாட்டின் தலைவர்கள் பௌத்தர்கள் அல்லது சிங்களவர்கள் அல்லாதவர்களின் ஆலோசனை க்கு அமைய செயற்படுவதாக பொதுபல பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கல பொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டைப் பிளவுபடுத்தும் புதிய யாப்பு ஒன்றிற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றி ணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். “தற்போது நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக நாட்டை பிளவடையச் செய்யும் அதேவேளை நாட்டின் வளத்தை வெளிநாடுகளுக்கு விற்ப னை செய்வதற்கு எதிராக நாம் ஒரு வேலைத்திட்டத்தை உடனடியாக செ…

  13. ரவிராஜ் தீர்ப்பின்மூலம் சர்வதேசத்தில் நெருக்கடி ஏற்படும்-எச்சரிக்கிறார் சமன்ரத்னபிரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை குறித்த நீதிமன்றத் தீர்ப்பு சர்வதேச அரங்கில் இலங்கைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு ஒத்து ழைத்த மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சமன் ரத்னப்பிரிய எச்சரித்துள்ளார். குறிப்பாக இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் உட்பட மோசமான மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி நீதியை நிலை நாட்டும் பொறுப்பை தற்போதைய ரணில் – மைத்திரி தலைமையிலான அரசாங்க…

  14. பின்னணியில் யார்? முக்கிய கட்சியையும் உறுப்பினர்களையும் தாக்கி அவதூறு செய்திகளை பரப்பியவர் சிக்கினார் வவுனியாவில் கடந்த சில தினங்களாக முகநூல் மற்றும் இணையத்தளங்களில் வவுனியாவில் செயற்படும் அரசியல் கட்சி ஒன்றினை இலக்குவைத்து கட்சியின் செயலாளர் மீதும் தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் மீதும் அவதூறு செய்திகளை பரப்பி வந்த நபர் ஒருவர் இன்று பொலிஸாரிடம் சிக்கினார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களாக மின்னஞ்சல் ஊடாக நூற்றிக்கு மேற்பட்டவர்களுக்கு குறித்த அரசியல் கட்சியினை அவதூறு படுத்தியும், குறித்த கட்சியின் செயற்பாடுகளை இழிவு படுத்தியும் கட்சியின் தலைவரின் படத்துடன் செய்தி வெளியிட்ட நபர் ஒருவர் மீது இன்று காலை வவுனியா …

  15. 2017ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதே எனது திட்டம் என சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று சிறீலங்காவில் பணியாற்று வெளிநாட்டு ஊடகங்களுடனான ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்புத் தொடர்பில் அரசாங்கம் கருத்து வெளியிட்ட பின்னர் தான் தனது கருத்தை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்த அவர், சீன அரசாங்கத்துக்கு தற்போதைய அரசாங்கம் காணிகளை வழங்குவதற்கு தான் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் ஊடகவியலாளர்களுக்கு மகிந்த ராஜபக்ஷ அப்பம் வழங்கியிருந்தார். ஏனென்றால், 2015ஆம் ஆண்டு விருந்தொன்றில் மைத…

  16. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இன்று கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு வரவிருந்த விமானங்கள் இதுவரை வந்துசேரவில்லையென விமானநிலைய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் அங்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையே எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, டுபாய், குவைத், கட்டார் மற்றும் ஓமான் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சிறீலங்கா வரும் விமானங்கள் மேலும் தாமதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், டுபாயிலிருந்து இன்று காலை 5.30 மணியளவில் வருகைதரவிருந்த யு.எஸ்.208ஆம் இலக்க விமானம் இதுவரை வந்துசேரவில்லையெனவும், இன்று அதிகாலை 3.55 மணிக்கு சாஜாவிலிருந்து வருகை தரவிருந்த ஜீ. 9501 ஆம் இலக்க விமானமும் இதுவரை வந்துசேரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. …

  17. தென்னிலங்கையிலிருந்து வடக்கு மாகாணத்துக்குள் கொண்டுவந்து விற்பனை செய்யப்படும் செயற்கைக் கள்ளுக்கு தடைவிதிக்கும் தீர்மானம் நேற்று நடைபெற்ற வடக்கு மாகாணசபையின் அமர்வில் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மாகாணசபைக்குட்பட்ட பனை, தென்னைவள கூட்டுறவுச் சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் கள்ளுக்கும் உடனடி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை மன்றில் முன்மொழிந்து கருத்துத் தெரிவிக்கையில், மாகாண பனை, தென்னைவள அபிவிருத்திச் சங்கங்கள் அதன் அங்கத்தவர்களால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பனஞ்சாறு சார் பொருட்களை விற்பனை செய்வதற்கு உருவாக்கப்பட்டவை. இருப்பினும் சில பனை, தென்னைவள அபிவிருத்திச் சங்கங்கள் மிகவும் செயற்கை…

  18. கச்சதீவில் மிதக்கும் துறைமுகம் -செல்வநாயகம் கபிலன் வருடாந்த திருவிழாவுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக கச்சதீவில் மிதக்கும் துறைமுகம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் என்.வேதநாயன், தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,“ சுற்றுலாதுறை அமைச்சின் நிதியுதவியுடன் 7 மில்லியன் ரூபாய் செலவில் மிதக்கும் துறைமுகம் அமைக்க உத்திதேசிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு ஆலய பங்குத்தந்தை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இத் துறைமுகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு வருடாந்த திருவிழாவுக்கு இலங்கை, இந்திய பக்தர்கள் வருவது வழமை. இங்கு துறைமுகம் இன்மையினால் கடற்படையினரின் பாரிய மிதவை படகு மூலம் ப…

  19. மன்னாரில் மீனவர்கள் வீதி மறியல் போராட்டம்! ஒருவர் தீக்குளிக்க முயற்சி Published on 2016-12-29 15:54:39 மன்னார் தாழ்வுப்பாடு கிராம மீனவர்கள் தமது நிறந்தர தொழிலாக சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று (28) முதல் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் சுருக்கு வலையினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதி மறுத்துள்ள நிலையில் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் நேற்று காலை முதல் தாழ்வுபாட்டு கிராமத்தில் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக குறித்த கிராமத்தில் இருந்து மன்னார் நகருக்குச் செல்லும் அரச போக்குவரத்துச் சேவைகள் நீண்ட நேரம் தடைப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகை…

  20. ஜே.என்.பியின் தலைவர் விமல் வீரவன்ச கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அரச வாகனங்கள் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது நாளாகவும் விமல் வீரவன்சவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இன்றைய தினம் விசாரணை நடத்த உள்ளனர். விமல் வீரவன்சவிடம் எழுப்பிய கேள்விகளில் நான்கில் ஒரு பகுதிக்கே நேற்றைய தினம் பதிலளித்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/archives/11943 விமல் வீரவன்ச நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். நீதிமன்றினால் வழங்கப்ப…

  21. சம்­பந்தன் மீதான பாராட்டும் அவ­ரது நியா­ய­மான நிலைப்­பாடும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தொடர்பில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்கள் தொடர்ந்தும் பாராட்­டுக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் விட­யத்தில் அவர் மிகுந்த விட்டுக் கொடுப்­புடன் செயற்­பட்டு வரு­வ­தா­கவும் அவர்கள் பாராட்­டு­கின்­றனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன கூட அண்­மையில் நடை­பெற்ற கூட்­ட­மொன்றில் உரை­யாற்­றும்­போது எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­தனின் நிலைப்­பாட்­டினை வர­வேற்று வந்தார். இதேபோல் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் சம்­பந்­தனின் நிலைப்­பாட்­டிற்கு பல தட­வைக…

  22. கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புகளுக்கு தடை? -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் புதன்கிழமை (28) மாலை நேர வகுப்புக்கள் முடிந்து மாணவிகள் வீதிய சென்ற வேளை சில இளைஞர்கள் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்டுள்ளனர். இவ்விடயம் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அத்துடன், பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மாலை 5.30 மண…

  23. மன்னார் கட்டுக்கரையில் மீட்கப்பட்ட தொல்லியல் சின்னங்கள் யாழ்.பல்கலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது கட்டுக்கரை தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் சின்னங்கள் காட்சிப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. யாழ்.பல்கலைகழக தொல்லியல் அருங்காட்சியகத்தில் காலை 9.30 மணியளவில் கண்காட்சிக்கூடம் திறந்து வைக்கப்பட்டது. கண்காட்சி கூடத்தை யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் திறந்து வைத்தார். http://globaltamilnews.net/archives/12065

  24. யாழ் போதனா வைத்தியசாலை சூழலில் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு காணி தந்துவ வேண்டுமென வைத்தியசாலை தரப்புகள் எதிர்பார்ப்பு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 2017 ஆம் வருட பட்ஜட்டில்; வடமாகாணத்தில்; சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு ரூபா 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை கிழக்கு மாகாணத்திலும் தென்பகுதியிலும் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு தலா ரூ 1000 மில்லியன் அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுவர் வைத்தியசாலையானது மாகாணத்திலுள்ள போதனா வைத்தியசாலையுடன் இணைந்ததாகவே அமைக்கப்பட இருப்பதால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அண்மையாக இவ் வைத்தியசாலை அமையும். இதற்காக போதனா வைத்தியசாலை சுற்றாடலில் அண்ணளவாக 1.5 ஏக்கர் பரப்பளவான காண…

  25. மீனவர்களின் படகு கவிழ்ந்தது : மட்டக்களப்பில் மற்றுமொரு சம்பவம்!! மட்டக்களப்பில் தொழில் நிமிர்த்தம் கடலுக்கு சென்று வரும் போது இன்று 29 காலை வியாழக்கிழமை ஆத்துவாயில் வைத்து அலியா படகு என்று அழைக்கப்படும் பெரிய படகு கவிழ்த்துள்ளது. காத்தான்குடியை சேர்ந்த படகில் சென்ற மீனவர்கள் 3 பேரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். படகில் பிடித்து வைத்திருந்த மீன்கள் அனைத்தும் கடலில் போனதுடன் அவர்களது வலைகளும் கடலில் போயுள்ளது. இதை தொடர்ந்து அங்கு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு படகின் உதவியுடன் மீனவர்கள் உயிர் தப்பியதுடன் படகு பாரிய சேதமடைந்துள்ளது. இதேபோன்று கடந்த 20 ஆம் திகதி தொழில் நிமிர்த்தம் கடலுக்கு சென்ற சுவிஸ் கிரா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.