ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
முல்லையில் 11 பாடசாலைகள் அபிவிருத்திக்கு 11 கோடி ஒதுக்கீடு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 11 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.இதற்காக 11 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதிபர் விடுதி, ஆசிரியர் விடுதி, ஆய்வு கூடம், வகுப்பறை கட்டடம் என்பன அபிவிருத்திசெய்யப்படவுள்ளன. பாலி நகர் மகாவித்தியாலயம், பாரதி வித்தியாலயம், யோகபுரம் வித்தியாலயம், குமுழமுனை வித்தியாலயம், மாங்குளம் மகாவித்தியாலயம், இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலயம், புதுக்கு…
-
- 0 replies
- 188 views
-
-
இளம் சமுகத்திடையே வேகமாக பரவிவரும் எச்.ஐ.வி. இலங்கையில் அண்மைக்காலமாக இளம் சமூகத்தினர் மத்தியில் எச்.ஐ.வி. எயிட்ஸ் வைரஸ் பரவி வருவது அதிகரித்துள்ளது.15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட இளம் வயதினர் மத்தியில் இந்த வைரஸ் அதிக ளவில் பரவி வருகிறது. பாதுகாப்பற்ற உடல் உறவு காரணமாகவே இலங்கையில் 95 வீதமானவர்களுக்கு எச்.ஐ.வி எயிட்ஸ் வைரஸ் பரவியுள்ளதாக சமூக மருத்துவம் தொடர்பான விசேட நிபுணர் ஜானகி வித்தியா பத்திரண தெரிவித்து ள்ளார். நாட்டில் உள்ள அனைத்து தேசிய மற்றும் ஆதார வைத்தியசாலைகளில் இயங்கும் பாலியல் நோய் தொட ர்பான பிரிவில் எச்.ஐ.வி. தொற்று இருக்கின்றதா என்பது அறிய பரிசோதனைகளை மேற்கொள்ள லாம் என அவர் …
-
- 1 reply
- 424 views
-
-
ஜேர்மனில் இருந்து வந்தவர் சடலமாக மீட்பு -க.அகரன் வவுனியா, பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீட்டிலிருந்து 59வயது ஆண், சடலமாக செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார். ஜேர்மனியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய விக்கிரமரட்ன குணசிறி, என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜேர்மனுக்கு சென்றிருந்த இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், கொழும்பில் சத்திரசிகிச்சை செய்துக்கொண்டுள்ளார். அதனையடுத்து, மீண்டும் ஜேர்மனுக்கு சென்றுவிட்டார். எனினும், அங்குள்ள காலநிலை ஒத்துக்கொள்ளாததால் நாடு திரும்பிய அவர், பத்தினியார் மகிழங்குளத்தில்…
-
- 1 reply
- 352 views
-
-
வெள்ளத்தில் மிதக்கும் பொம்மைவெளி -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே-87 கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கும் பொம்மைவெளி கிராம மக்கள், மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மழை வெள்ளம் காரணமாக இப்பிரதேசத்தில் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே இதற்கு முக்கிய காரணம்' என யாழ். பொம்மைவெளி பள்ளிவாசல் நிர்வாக செயலாளர் எம்.றிஸ்வான், குறிப்பிட்டார். மேலும், வெள்ள நீர் பாதிப்புக்குள்ளாக மக்களின் நிலமையை கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் …
-
- 3 replies
- 379 views
-
-
தையிட்டியில் வெடிபொருள் மீட்பு. மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட தையிட்டி கிழக்கில் இரண்டு மிதிவெடிகளும் , வெடிக்காத நிலையில் மண்ணில் புதையுண்ட நிலையில் எறிகணை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 26 வருடங்களுக்கு பின்னர் அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட தையிட்டி கிழக்கில் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட காவலரண் ஒன்றில் இருந்தே மேற்படி வெடி பொருட்கள் கண்டெடுக்கப் பட்டு உள்ளது. குறித்த பகுதியில் மக்கள் மீள் குடியேறி தமது காணிகளை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குறித்த பகுதிகளில் வெடி பொருட்கள் காணப்படும் அபாயம் இருப்பதனால் அவதானமாக தமது காணிகளை துப்பரவு செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுகொண்ட…
-
- 0 replies
- 377 views
-
-
புதியவகை போதைப் பொருளுக்கு அடிமையாகும் மாணவர்கள் புகையிலை மற்றும் சுண்ணாம்பு கலந்த புதியவகை போதைப் பொருளுக்கு மாணவர்கள் அடிமையாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளில் மேலதிக வகுப்புக்கு நகரங்களுக்கு செல்லும் உயர்தர வகுப்பு மாணவர்களே பாதிக்கப்படுவதா கவும் பாடசாலை நிறைவடையும் நேரத்தில் இறக்குவானை நகரத்தில் இந்த போதைப் பொருள் விற்பனை மும்முரமாக நடை பெறுவதாகவும் தெரியவருகின்றது. மாணவர்கள் சிலரின் நடவடிக்கைகளில் மாற்றத்தை கண்டுபிடித்த பொலிசார் அவர்களை பரிசோதித்த போது மாணவர்க ளிட மிருந்து இந்த விசேட போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். வெற்றிலை விற்பனை செய்யப்படு…
-
- 0 replies
- 306 views
-
-
யாழில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் கடந்த நான்குநாட்களாக யாழில் தொடர்ச்சியாக பெய்துவரும் தொடர்மழை மேலும் இரு நாட்களுக்கு தொடரும் என வளிமண்ட லவியல்திணைக்களத்தின் யாழ்ப்பாண பொறுப்பதிகாரி எஸ் . பிரதீபன் தெரிவித்துள்ளார். கடந்த 19 ஆம் திகதியிலிருந்து இன்று 22 ஆம் திகதிவரையாழ் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக கனமழைபெய்துவருகின்றது. 19 ஆம் திகதிகாலை 8.30 மணியிலிருந்து 20 ஆம் திகதிகாலை 8.30 மணிவரை 97.7 மில்லிலீற்றர் மழைவீழ்ச்சியும், 20 ஆம் திகதிகாலை 8.30 மணியிலிருந்து 21 ஆம் திகதிகாலை 8.30 மணிவரை 138.3 மில்லிலீற்றர் மழைவீழ்ச்சியும், 21ஆம்திகதிகாலை 8.30 மண…
-
- 0 replies
- 278 views
-
-
"அலரிமாளிகையை சுற்றிவளைத்து போராட்டம் நடத்த மக்கள் தயாராக வேண்டும்" பிரதமர் ரணில் விக்ரமசிங்க அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியில் இருத்துவதற்கு சூட்சுமமான முறையில் அரசியலமைப்பிலும் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில குற்றம்சாட்டினார். "பிணைமுறி மோசடியில் பிரதமரின் வகிபாகம்" எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வை ஊழல் எதிர்ப்பு மத்திய நிலையம் நேற்று கொழும்பிலுள்ள பொது நூலக கேட்போர்கூடத்தில் நடத்தியது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/13733
-
- 0 replies
- 236 views
-
-
'மனித தொடையை ஊட்டியோரே கலாசாரம் பற்றி பேசுகின்றனர்' அழகன் கனகராஜ் 'மனிதர்களை பச்சை, பச்சையாக கொன்றொழித்து, அவர்களின் தொடைகளை இறைச்சியாக்கி, கொல்லப்பட்டவர்களின் தாய் மற்றும் தந்தையினருக்கு ஊட்டியோரே கலாசாரம் பற்றி இன்று பேசுகின்றனர்' என்று கலாசார பிரதியமைச்சர் பாலித தெவரபெரும தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற, வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கலாசார பிரதியமைச்சர் பதவிக்கு நான் தகுதியில்லை என்று, எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்…
-
- 0 replies
- 375 views
-
-
தமிழர்களை கள்ளத்தோணியில் வந்ததாக கூறுகின்றவர்கள் மகா வம்சத்தை படித்து இந்த நாட்டில் பௌத்த மதம் எப்படி வந்தது என்பதை உணர்ந்து கொள்வார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குடியிருப்பு கனிஸ்ட வித்தியாலய முப்பெருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பாடசாலை அதிபர் எம்.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த 35 வருடகாலமாக தமிழ் மாணவர்கள் கல்வியைபெறுவதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டது. ஆனால் இன்று இந்த நாட்டில் மாணவர்கள் தங்குதடையின்றி கல…
-
- 0 replies
- 278 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் தொடர்பான உள்ளகத் தகவல்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை, இந்தியாவின் முன்னாள் சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ளார். இந்தியாவின் வெளிவிவகாரச் செயலராக 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை பதவி வகித்த சிவ்சங்கர் மேனன், அந்தப் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், 2010 ஜனவரி தொடக்கம் 2014 மே மாதம் வரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியிருந்தார். இவர் இந்திய வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும் செயல்முறைகள் தொடர்பான உள்ளகத் தகவல்கள் அடங்கிய நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். “Choices: Inside the Making of Indias Foreign Policy”,( வாய்ப்புகள் –…
-
- 3 replies
- 472 views
-
-
தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி – களமாடி, வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. கடந்த காலங்களைப் போலல்லாது தமிழர் தாயகப் பிரதேசத்திலும், மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் இம்முறை நினைவேந்தல் செய்யப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் 1989ஆம் ஆண்டிலிருந்து மாவீரர் வாரம் நினைவு கூரப்பட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து, போர்க்களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூருவதற்காக நவம்பர் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர் தாயகத்தில் இருந்தபோது, மாவீரர் வாரம் பேரெழு…
-
- 2 replies
- 352 views
-
-
இன, மத மோதலை தூண்டுபவர்களை கைது செய்ய விசேட பிரிவு மத மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் குரோதப் பேச்சுக்கள், அறிக்கைகள் விடுதல் போன்றவற்றி னால் மக்களைத் தூண்டி விடும் விதமாக செயற்படும் நபர்களை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவ டிக்கை எடுக்கும் விதத்தில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களைத் தூண்டி விடுபவர்களை விசாரணை செய்ய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் குறித்த பிரிவில் இருந்து விசாரணைகளை மேற்கொள்வார். மதம், இனங்களுக்கிடையில் அகௌரவத்தை ஏற்படுத்தும் விதத்தில் மக்களை தூண்டி விடுபவர்கள் பற்றி விசாரணைகள் தற்பொ…
-
- 0 replies
- 213 views
-
-
படுகொலை செய்யப்பட்ட எமது பிள்ளைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். நாங்கள் வீடு ஒன்றிற்காக அமைச்சரை சந்திக்க வரவில்லை என சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் தந்தையார் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கஜன், சுலக்சனின் பெற்றோருக்கு இராணுவத்தின் உதவியுடன் வீடமைத்து வழங்கப்படுமென அமைச்சர் சுவாமிநாதன் இன்றைய தினம் யாழ்.பல்கலையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பில்அமைச்சரிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பொலிசாரின் துப்பாக்கிசூட்டு பிரயோகத்தில் படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கஜன் மற்றும் சுலக்சனின் பெற்றோர்களை மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்…
-
- 4 replies
- 955 views
-
-
மட்டக்களப்பு செங்கலடியில் இன்று காலை (22) அமைதி பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் இனவாத செயற்பாடகளைக் கண்டித்தே குறித்த பேரணி நடைபெற்றுள்ளது. ஆலயகுருக்கள், பூசகர்கள், தர்ம கர்த்தாக்கள் இந்து அமைப்புக்களின் பிரதிநிஜதிகள் பொதுமக்கள் இணைந்து அமைதிப் பேரணியை நடத்தியுள்ளனர். குறித்த பேரணியில் தமிழ்த் தேசியகச் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/125469?ref=home
-
- 1 reply
- 368 views
-
-
ஹாவா குழுவின் பின்னணியில் அரசியல் சக்திகள் இருப்பதாக தென்படவில்லை – பாதுகாப்புச் செயலாளர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹாவா குழுவின் பின்னணியில் அரசியல் சக்திகள் இருப்பதாக தென்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஹாவா குழுவினை கட்டுப்படுத்த இராணுவத்தை ஈடுபடுத்தப் போவதில்லை எனவும் ஹாவா குழு ஒர் பயங்கரவாத குழுவல்ல எனவும் இதனால் இராணுவத்தினரை பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஹாவா குழுவினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது காவல்துறையினர் உதவிகளை கோரினால் அதற்கான உதவிகளை வழங்க படையினரை ஈடுபடுத்த முடியும் என குறிப்பிட்டு…
-
- 1 reply
- 212 views
-
-
மட்டக்களப்பில் தொடர்ச்சியான மழையால் வெள்ள அபாயம்! வவுணதீவு பாலத்தின் மேலாக நீர்:படகுச் சேவையும் ஆரம்பம் 2016-11-22 10:49:31 (செங்கலடி, காங்கேயனோடை நிருபர்கள், எஸ்.சதீஸ்) மட்டக்களப்பில் கடந்த சில தினங்களாக பெய்த மழைகாரணமாக மட்டக்களப்பு நகரை இணைக்கும் வலையிறவு – வவுணதீவு பாலத்தின் வீதியால் ஒரு அடிக்கு மேல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இவ் வீதியால் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உபட்ட சித்தாண்டி சந்தனமடு ஆற்றின் இறங்கு துறைக்கான படகுச் சேவை நேற்று முதல் ஆரம்பிக…
-
- 0 replies
- 253 views
-
-
கிழக்குப் பல்கழைக்கழக வந்தாறுமூலை வளாகத்தினுள் அமைந்துள்ள வங்கி நிறுவனமொன்றின் பணமெடுக்கும் தன்னியக்க இயந்திரத்திர கட்டடத்தினுள் இன்று அதிகாலையில் முதலை ஒன்று புகுந்ததனால் பணமெடுக்க வந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறித்த முதலை சுமார் 6 அடி நீளமுடையது. கிழக்கு பல்கழைக்கழத்தினுடைய அதிகளவான மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பாவிக்கும் ஏ.டி.எம் இயந்திர பகுதியில் முதலை புகுந்தமை சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, குறித்த முதலை பொலிசாரின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அண்மைக் காலமாக மட்டக்களப்பின் பல இடங்களிலும் முதலைகள் கிராமப் பகுதிகளினுள்ள முதலைகள் புகுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்த சம்பவம்…
-
- 0 replies
- 288 views
-
-
வவுனியாவடக்கில் யானைகள் பெரும் அட்டகாசம் வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் நேற்றுமுன்தினம் (20.11.2016) இரவு தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த இரண்டு ஏக்கர் பப்பாசி மரங்களுக்கு சேதம் விளைவித்துள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. நேற்று முன்தினம் இரவு நெடுங்கேணி சிவாநகர் ஐயனார் கோவில் பகுதியிலுள்ள தோட்டங்களுக்குள் உட்புகுந்த காட்டு யானை கள் அங்கிருந்த பயிர்கள் பப்பாசிச் செய்கைகளுக்குள் உட்புகுந்து சேதம் விளைவித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து ள்ளனர். இந்த யானைகள் அடிக்கடி இவ்விடத்திற்கு வந்து இங்குள்ள பயிர்களுக்கு சேதம் விளைவித்து வருவது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்தி…
-
- 0 replies
- 246 views
-
-
இராணுவ புரட்சியென்ற தினேஸின் கருத்தை நியாயப்படுத்துகிறார் மகிந்த இராணுவப் புரட்சி தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்து இராணுவத்தை எந்த வகையிலும் அகௌரவப்படுத்துவதன்று என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். கேகாலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். நாட்டில் இன்று பொலிஸ் ஆட்சியுள்ளது. இதுபோன்ற நிருவாகம் உள்ள உலக நாடுகள் எல்லாவற்றிலும் இராணுவ ஆட்சியொன்று நடைபெற்றுள்ளது. இது இலங்கையிலும் ஏற்படலாம் என்றே அவர் கூறியுள்ளார் எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறி…
-
- 0 replies
- 232 views
-
-
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்தியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் விடுதலை வேங்கை அமைப்பினரால் இன்று முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக தமிழக மற்றும் புதுவை மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், சிறை பிடிப்பதும் தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் காரைக்கால், நாகை மீனவர்கள் கோடியக்கரை அருகே இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், உலக மீனவர் ந…
-
- 0 replies
- 224 views
-
-
எனது தலையீடு இனி இருக்காது சட்டமா அதிபர் திணைக்களம் பார்த்துக்கொள்ளும் என்கிறார் பிரதமர் (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான கோப் குழுவின் அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளேன். இனிமேல் சட்டமா அதிபர், சபாநாயகர் ஆகியோரே அதிகாரம் செலுத்துவர். எனது பொறுப்பை நான் உரிய முறையில் நிறைவேற்றி விட்டேன். தற்போதைய சட்டமா அதிபர் மீது திருப்தி இல்லாவிட்டால் சரத் என்.சில் வாவையோ அல்லது மொஹான் பீரிஸையோ நியமித்து விசாரணையை முன்னெடுக்க முடியும். அதனை கட்சித் தலைவர்கள் தீர்மானிக்கட்டும். எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. என் மீது வழக்கு தொடர்ந்தாலும் கவலையில்லை என பிரதமர் ரணில் வ…
-
- 0 replies
- 265 views
-
-
ஜனாதிபதியின் சிறப்பு நாள் எதுவென உங்களுக்கு தெரியுமா.? அனைத்து பதவிகளையும் துறந்து அரசாங்கத்திலிருந்து வெளியேறிய அன்றைய நாள் தமது அரசியல் வாழ்வில் சிறப்பானதொரு நாள் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மகாவலி அதிகார சபையின் புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற அலுவலர்களுடன் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போமே ஜனாதிபதி; மேற்கண்டவாறு தெரிவித்தார். தனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரையும் ஒரேவிதமாக நடத்துவது ஒரு நாட்டின் ஜனாதிபதியின் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுயாதீனம், பக்கச்சார்பின்மை மற்றும் நடுநில…
-
- 0 replies
- 214 views
-
-
தற்கொலை அங்கி, ஐ.எஸ் கதை, பிக்குவின் இனவாதம் : இராணுவ புரட்சியை ஏற்படுத்த இனவாதிகள் எடுத்து கொண்ட ஆயுதங்களாகும் - சிவில் அமைப்புக்கள் எச்சரிக்கை இனவாதிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு எடுத்துக்கொண்டுள்ள கருவியே இராணுவ புரட்சி சதித்திட்டமாகும். வடக்கில் தற்கொலை அங்கி கண்டெடுக்கப்பட்டமை, ஐ.எஸ் தொடர்பில் கூறப்பட்ட கருத்துக்கள், பிக்குவின் இனவாத கருத்துக்கள் போன்ற வரிசையில் தற்போது ஆட்சியை கைப்பற்ற இனவாதிகள் எடுத்துக்கொண்ட ஆயுதமே இந்த இராணுவ புரட்சி கதையாகும். இவ்வாறான கருத்துக்கள் கண்டிக்கத்தக்கதும் வெட்கப்படகூடியவைலயாகும் என்று சிவில் அமைப்புக்கள தெரிவித்துள்ளன. மேலும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழலை அழிக்கும் செயற்பாடு பக்கச்சார்புடையதாக…
-
- 0 replies
- 266 views
-
-
இராணுவ சட்டத்தின் கீழ் முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்க முடியுமானால் ஜனாதிபதியிடம் தெரிவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தை சேர்ந்த முன்னணி அதிகாரி ஒருவரை மேற்கொள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் கமால் குணரத்னவுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குணரத்ன, சமூகங்களுக்கு மத்தியில் அழுத்தங்களை உருவாக்குவதற்கான சதி முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 275 views
-