ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
செய்தியை செய்தியாகப் பிரசுரியுங்கள்: சி.வி.கே -எம்.றொசாந்த் செய்தியை செய்தியாக பிரசுரியுங்கள் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, நேற்று வியாழக்கிழமை (25), கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 'கடந்த மாகாண சபை அமர்வின் போது ஆளும் கட்சி உறுப்பினர் பா.கஜதீபன் கூறாத கருத்து ஒன்று பத்திரிக்கை ஒன்றில் பிரசுரமாகி இருந்தது. அது தொடர்பில் என்னிடம் இருந்த அன்றைய மாகாண சபை அமர்வின் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகளை பரிசீலித்த போது குறித்த மாகாண சபை உறுப்பினர் …
-
- 0 replies
- 387 views
-
-
இலங்கையில் கடந்த மூன்று வருடத்தில் 9657 பேர் தற்கொலை இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் 9 ஆயிரத்து 657 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் அமைச்சு தெரிவித்தது. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, 2013, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தற்கொலைகளின் எண்ணிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பி னர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சட்டமும் ஒழுங்கும் அமைச்சு சபையில் சமர்ப்பித்த பதிலிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டு ள்ளது. இதன்படி, 2013ஆம் ஆண்டு 752 பெண்களும், 2 ஆயிரத்து 703 ஆண்களும், 2014ஆம் ஆண்டில் 660 பெண்க…
-
- 0 replies
- 309 views
-
-
யாழில் ரூபா 60 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா பிடிபட்டது! யாழ்.செம்பியன்பற்று பகுதியில் மதுவரி திணைக்களமும் கடற்படையினரும் இணைந்து இன்று அதிகாலை வேளையில் 30 கிலோ கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் 39 வயதையுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி 60 இலட்சத்துக்கும் அதிகம் என பொலிஸார் தெரி வித்துள்ளனர். http://onlineuthayan.com/news/16752
-
- 0 replies
- 311 views
-
-
இராணுவம் வெளியேறியது! வவுனியா-குடியிருப்பு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, வவுனியா பாதுகாப்பு சேனை தலைமையகத்தி ற்கு சொந்தமான இராணுவ முகாமில் அமைந்துள்ள கட்டடத்தில் இருந்து இராணுவத்தினர் வௌியேறினர். இதன்படி அந்த கட்டடத்தை மீள வவுனியா மாவட்ட செயலகத்திடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளதாக, மாவட்ட செயலாளர் ரோஹன புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார். சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் குறித்த கட்டடம் இராணுவ முகாமுக்காக கையளிக்கப்பட்டதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் குறித்த கட்டடத்தை மீள பெற்றுத் தருமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்க ப்பட்டிருந்ததாகவும் மாவட்ட செயல…
-
- 0 replies
- 547 views
-
-
10 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத் தடை! மாணவர்கள் சிலர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை பீடத்தின் 10 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த 10 பேருக்கும் இரு வாரங்களுக்கு இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேரா தனை பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.. கடந்த 22ஆம் திகதி இரவு அந்த பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை பீடத்தைச் சேர்ந்த இரு மாணவக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஐவர் காயமடைந்தனர். இவர்கள் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்க ப்பட்டமை கு…
-
- 0 replies
- 346 views
-
-
விவசாய அமைச்சுக்கு எதிரான பிரேரணை சபையில் இடைநடுவில் மீளப் பெறப்பட்டது: வடமாகாண சபையில் சில மாதங்களாக தடைபட்டுக்கொண்டு இருந்த பிரேரணை சபைக்கு கொண்டுவரப்பட்டு இடைநடுவில் வாபஸ் பெறப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே உறுப்பினர் ஒருவர் பிரேரணை முன் மொழிந்து கருத்து தெரிவித்துக் கொண்டு இருந்த வேளை ஏனைய உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பினால் பிரேரணை இடைநடுவில் வாபஸ் பெறப்பட்டது. வடமாகாண விவசாய அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள திணைக்களங்கள் என்பவற்றில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளது என கடந்த பெப்ரவரி மாதம் 9ம் திகதி ஆளும் கட்சி உறுப்பினர் ஜீ.ரீ.லிங்கநாதன் குற்ற…
-
- 0 replies
- 445 views
-
-
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத் தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாலை இவ்வாறு இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது. இலங்கை இளைஞர் என்ற குழுவொன்று இணையத்தை முடக்கி சிங்களத்தில் சில விடயங்களை இணையத்தில் பிரசுரித்துள்ளது. அன்புற்குரிய ஜனாதிபதி அவர்களே! கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை ஏப்ரல் மாதத்தில் நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் வருத்தமளிக்கின்றது. இந்தக் காலப்பகுதியில் சிங்கள தமிழ் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுவதனால், குறித்த காலப்பகுதியில் பரீட்சை நடத்துவது வருத்தமளிக்கின்றது. எனவே இந்த தீர்மானத்தை மீள் பரிசீ…
-
- 0 replies
- 334 views
-
-
வர்த்தகரின் கொலைக்கு 40 மில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல் காரணமா? - வெள்ளவத்தை வர்த்தகர் தொடர்பில் பாரிய சந்தேகம்; : சீ.சீ.ரி.வி.கமராக்கள் பல சோதனைக்கு பம்பலபிட்டி , கொத்தலாவல எவனியூ பகுதியில் வைத்து கடத்தப்பட்ட நிலையில் மாவனல்லையில் வைத்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் கடத்தல் மற்றும் படுகொலைக்கு 40 மில்லியனுக்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல் ஒன்றினை மையப்படுத்தி இடம்பெற்றதா என பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் வெள்ளவத்தை பிரதேசத்தின் பிலபல வர்த்தகர் ஒருவரிடம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை நாடத்தி வருவதாக விசாரணைகளுக்கு பொறுப்பான் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 220 views
-
-
ஆஸி. ஊடக குற்றச்சாட்டுக்கு ஜனாதிபதி மறுப்பு : நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கு பணிப்புரை அவுஸ்திரேலிய செய்தி இணையத்தளத்தில் வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மைத்திரிபால சிறிசேன 2009ஆம் ஆண்டு விவசாய மற்றும் கமத்தொழில் சேவைகள் அமைச்சராக பணியாற்றியபோது, அவரது செயற்குழுவின் உறுப்பினர் ஒருவர் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுடன் ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று (Sydney morning Herald) செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அவ்வாறான நடவடிக்கைகளுக்கு தான் சம்பந்தப்படவோ ஒத்துழைப்பு வழங்கவோ இல்லையென்றும், தனது அரசியல் வாழ்க…
-
- 0 replies
- 295 views
-
-
இனவாத செயற்பாட்டில் தெற்கில் மகிந்த ,வடக்கில் விக்கி தெற்கில் மஹிந்தவும், வடக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இனவாத செயற்பாடுகளையே மேற்கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தெற்கில் மஹிந்தவின் இனவாத செயற்பாடுகளைப் பலப்படுத்தும் வகையில் விக்னேஸ்வரன் வடக்கிலிருந்து ‘சமஷ்டி’ என்ற விடயத்தைக் கொண்டு வருகின்றார். குறிப்பாக மஹிந்தவின் இனவாத அரசியல் பயணத்துக்கு தூண்டுதலை ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ்வரனின் செயற்பா…
-
- 0 replies
- 241 views
-
-
முல்லை மாவட்டத்தை கவனிப்பார் எவருமில்லை-வடமாகாண பிரதி அவைத்தலைவர் கவலை வடமாகாணத்தில் ஒரு மாவட்டத்துக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதனால் தான் பிரதேசவாத கருத்துக்கள் தோற்றம் பெறுவதாக வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதன் வடமாகாண சபை அமர்வில் தெரிவித்தார். 'இராணுவ ஆக்கிரமிப்பு, சுவீகரிப்பில் ஐந்து மாவட்டத்தில் உள்ள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தனியே யாழ். மாவட்டத்தை சேர்ந்த வலி. வடக்கு மக்களின் காணி சுவீகரிப்பு பற்றியே பேசப்படுகின்றது. அதனால் அந்த காணி விடுவிக்கப்படுகின்றது. ஆனால், இதுவரைக்கும் முல்லைத்தீவு மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு, காணி சுவீகரிப்பு பற்றி யாரும் பேசுவதில்லை. அங்கே ஒர…
-
- 0 replies
- 265 views
-
-
யாழ் வரும் ஐ.நா.பொதுச் செயலர் மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் சந்திப்பார்! உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ-மூன், யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதுடன், அங்கு இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கீ-மூனின் ஆசிய நாடுகளுக்கான விஜயம் குறித்து, நியூயோர்க்கில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பான் கீ மூன், இலங்கையின் மனித உரிமைகள், அபிவிருத்தி விவகாரங்கள், அமைதியை ஊக்குவித்தல் மற்றும் சமூகங்களிடைய…
-
- 0 replies
- 221 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி சர்ச்சை: கிழக்கு மாகாணத்திலும் மருத்துவ சோதனை இலங்கையில் புனர்வாழ்வு பெற்று விடுதலையான கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலிகளுக்கும் மருத்துவ பரிசோதனை தேவை என்ற கோரிக்கை கிழக்கு மாகாண சபையிலும் முன்வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை இம்மாத அமர்வுக்காக வியாழக்கிழமை அவைத் தலைவர் சந்திரதாஸ் கலப்பதி தலைமையில் கூடிய போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான கோ. கருணாகரம் இது தொடர்பான பிரேரனையொன்றை முன்வைத்திருந்தார் ''கடந்த சில மாதங்களில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணிக்கு பொறுப்பாகவிருந்த தமிழினி உட்பட 100-க்கும் அதிகமான முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் மர்மமான முறையில் இறந்து கொண்டிருப்பதாக அறியக் க…
-
- 0 replies
- 339 views
-
-
மரக்கறி தோட்டத்தில் தரையிறக்கம் August 25, 2016 ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பயணித்த தனியார் ஹெலிக்கொப்டர் ஒன்று, நுவரெலியாவிலுள்ள மரக்கறி விவசாய நிலமொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, சஜித் பிரேமதாஸ மற்றும் பிரதி அமைச்சர் இந்திக்க பண்டார ஆகியோரே குறித்த ஹெலிக்கொப்டரில் பயணித்துள்ளனர். நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவே அவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையில், நுவரெலியா - சீதாஎலிய பகுதியில் இன்று காலை 09.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, அந்த ஹெலிக்கொப்டரில் பயணித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்னர…
-
- 0 replies
- 499 views
-
-
வடக்கு கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படப்போவதில்லை வடக்கு கிழக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படப்போவதில்லை. தேசிய பாதுகாப்பு விடயத்தில் இன்றும் அச்சுறுத்தல் உள்ளது என இராணுவத் தளபதி லேப்.ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்தார். இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவதும், அறுபதாயிரம் பொதுமக்கள் காணாமல்போனதாக கூறுவதும் முழுப்பொய். அதேபோல் விடுதலைப்புலி முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்படவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும் எனவும் அவர் தெரிவித்தார். கொழும்பு பாதுகாப்பு மாநாடு தொடர்பில் இன்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும…
-
- 0 replies
- 413 views
-
-
புலிகளின் துப்பாக்கிகள் மீட்பு! விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டவை என சந்தேகிக்கப்படும் 30 துப்பாக்கிகள் ஓமந்தை பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. ஓமந்தை இறம்பைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றை சுத்திகரிக்கும் போது குறித்த துப்பாக்கிகள் மண்ணுக்குள் புதைந்திருப்பதை அவதானித்த காணி உரிமையாளர், ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் எல்.எம்.யி ரக துப்பாக்கிகள் 30ஐ மீட்டுள்ளனர். இனி பயன்படுத்த முடியாத நிலையில் குறித்த துப்பாக்கிகள் காணப்படுவதுடன் நீதிமன்ற அனுமதிப் பெற்று திங்கட்கிழமை(29) குறித்த இடத்தை தோண்டவுள்ளதாக ஓமந்தை பொலிஸ் வட்டாரத் தகவல்க…
-
- 0 replies
- 430 views
-
-
காணாமல் போனோர் சட்டமூலத்தில் திருத்தங்கள்-பிரதமர் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் சட்டமூல த்தில் திருத்தங்களை கொண்டு வர முடியுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளு மன்றத்தில் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட சட்ட மூலத்தில் மேற்கொள்ள வேண்டிய 31 திருத்தங்களை தாங்கள் முன்வைத்ததாக கூட்டு எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். எனவே, இந்த சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த பின்னணியில் இன்று நாடாளுமன்றம் கூடிய போது, கருத்துக்களை…
-
- 0 replies
- 299 views
-
-
அரசியல்கைதி ஆனந்தராஜா தப்பியோட்டம்! யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான இராசையா ஆனந்தராஜா, வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சியை சேர்ந்த 37 வயதுடைய இராசையா ஆனந்தராஜா என்ற அரசியல் கைதியே நேற்றிரவு பத்து மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்று ள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 31 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அரசியல் கைதியான இராசையா ஆனந்தராஜா, 2012 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார். இதன்பின்னர் மீண்டும் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2…
-
- 0 replies
- 370 views
-
-
மைத்திரி காலத்தில் எதிர்பாரத்த விளைவுகள் எட்டப்படவில்லை: உடனடியாக அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் தீவிரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் நடவடிக்கை வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து துரிதமாக செயற்படவில்லை எனவும் சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் 11,000 கைதிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இந்த அரசாங்கம் பெறுப்பேற்று 18 அல்லது அதற்கும் அதிக மாதங்கள் ஆகின்ற போதும் நாம் எ…
-
- 1 reply
- 350 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் இன்று காலை முதல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், ஒலிவாங்கி மூலம் ஒலிபரப்புச் செய்துவருவதால் அங்கு பதட்டமான சூழல் உருவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக சில சிங்கள மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கற்றல் செயற்பாடுகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர். சிங்கள மாணவர்களை இடைநிறுத்தியமையைக் கண்டித்து குறித்த போராட்ட நடைபெற்று வருகின்றது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அத்துமீறி உபவேந்தரின் அலுவலகத்துக்குள் புகுந்ததுடன், ஒலிவாங்கி மூலம் ஒலிபரப்புக்கொண்டிருப்பதால் பல்கலைக்கழகத்தில் இன்று கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்…
-
- 0 replies
- 449 views
-
-
வன்னி மண்ணின் இறுதி மாவீரனும் மன்னனுமான பண்டாரவன்னியன் 213 ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இன்றைய நாளில்தான், முல்லைத்தீவில் அமைந்திருந்த வெள்ளையனின் இராணுவ முகாமை அழித்து அதில் இரண்டு பீரங்கியை பண்டாரவன்னியன் கைப்பற்றியதாகவும், அந்த நாளே பண்டாரவன்னியனின் நினைவுநாளாக அனுட்டிக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று, பண்டாரவன்னியனின் 213ஆவது ஆண்டு நினைவு நிகழ்வை பண்டாரவன்னியன் நற்பணி மன்றமும் வவுனியா நகரசபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது பண்டாரவன்னியனுக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது. http://thuliyam.com/?p=39041
-
- 0 replies
- 451 views
-
-
எங்கள் தீவகப் பெருநிலம் இன்று ஆட்களின் ஆரவாரமின்றி இனம்புரியாத சோகத்துடன் இருப்பதை அங்கு செல்பவர்கள் உள்ளூர உணர்ந்திருப்பர்.தன்னுறவு மீளவும் வரவில்லையே என்ற வேதனைதான் தீவகத்தின் பொலிவிழப்புக்குக் காரணமென்று கூடச்சொல்லலாம். யாழ்ப்பாணத்தின் தென்பால் அமைந்த தீவகம் ஒரு அற்புதமான பிரதேசம். விருந்தோம்பல் உபசாரம், உறவுகளைப் பேணும் உன்னதம், இன்சொல்லால் வரவேற்கும் இங்கிதம், சமூகத்தை மதிக்கும் பெருந் தன்மை, மொழிப்பற்று, ஆன்மிக சிந்தனை என மனித வாழ்வுக்குத் தேவையான அத்தனை விழுமியப் பண்பாடுகளையும் கொண்ட பிரதேசமாக தீவக மண்ணை அடையாளம் காணமுடியும். கதிரவன் மேற்றிசையில் உறங்கலான் என்றதும் பண்ணை வீதியில் வேகமெடுக்கும் கார்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு தொடர் காட்சியாக அலங…
-
- 2 replies
- 527 views
-
-
நல்லூரில் யுவதிக்கு அலைபேசி இலக்கத்தை கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் சிக்கினார். நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஆலயத்துக்கு வந்த யுவதி ஒருவருக்கு தனது அலைபேசி இலக்கத்தைக் கொடுத்து உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்ட சம்பவம்,நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. இதற்காக ஆலயசூழலில் 750 பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையிலும், பொலிஸ் சீருடையிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறே, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் உப பொ…
-
- 0 replies
- 399 views
-
-
வடக்கு,கிழக்கில் 32ஆயிரம் ஏக்கர் காணி இராணுவம் வசம்! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 32,107 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசமுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 7022 ஏக்கர் காணி தனியாருக்கு சொந்தமானவை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்துள்ளார். இவற்றில் 460 ஏக்கர் காணியை இந்த வருடத்திற்குள் விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த வருடத்திற்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 2758 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கத்தினால் வ…
-
- 0 replies
- 386 views
-
-
காலியில் சுவரில் நடக்கும் அபூர்வ திறமை படைத்த சிறுமி (காணொளி இணைப்பு) காலி வந்துரம்ப -பன்வில பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியொருவர் சுவரில் நடந்து பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றார். அபூர்வ திறமையொன்றை தன்னகத்தே கொண்டுள்ள குறித்த சிறுமி எவ்வித துணையும் இன்றி சுவரில் ஏறும் திறமையை கொண்டுள்ளார். காலி – வந்துரம்ப மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 3 இல் கல்வி கற்கும் ரங்கமினி யசஸ்தி என்ற சிறுமியே இவ்வாறு சுவரில் ஏறும் ஆற்றல் படைத்தவராவார். சிறுமிக்கு இரு தங்கைகள் உள்ளதாகவும் சிறுவயது முதல் இந்த திறமை அவரிடம் காணப்படுவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். …
-
- 0 replies
- 350 views
-