Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மீண்டும் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது:இலங்கை ராணுவம் நடவடிக்கை! ராமேஸ்வரம்: ஏற்கெனவே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படாத நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்ற 68 படகுகளையும் 3 மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி 6 மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம், உண்ணாவிரதம், முற்றுகை போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த குடியரசு தினத்தன்று நாகப்பட்டினத்தில் 6 மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதன் பின்னரும் மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து 29 ம் தேதி…

  2. அரசாங்கத்தின் முடிவுகள் வெளிவருகின்றன ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் முடிவுகள் யாவை என்பது இப்போது அனைவருக்கும் தெரியவந்துக்கொண்டிருக்கின்றன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/165032/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%A9#sthas…

  3. ராஜபக்ச குடும்பத்தாரின் அனுபவமும் முதிர்ச்சியும் இல்லாமல் போகாது;முகநூலில் எச்சரித்த மகிந்த! தாம் உள்ளிட்ட தனது முழுக் குடும்பத்தையும் கைதுசெய்து சிறையில் அடைத்தாலும், கடந்த 1936ஆம் ஆண்டுமுதல் இருந்துவரும் அனுபவமும் முதிர்ச்சியும் ராஜபக்ச குடும்பத்தாருக்கு ஒருபோதும் இல்லாமல் போகாதென, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமது இளைய மகன் யோசித்த ராஜபக்ச கைதுசெய்யப்பட்டதையடுத்து, தமது முகநூலில் மகிந்த இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களின் செல்வாக்கு தமக்கு அதிகரித்து காணப்படும் நிலையில், அதனை முடக்கும் வகையில் இவ்வாறான கைதுகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட…

  4. புதிய கட்சியின் தலைவராக பசில் நியமிக்கப்படுவதை எதிர்க்கும் நாமல்! புதிய கட்சியின் தலைமப் பொறுப்பிற்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நியமிக்கப்படுவதனை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்த்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினால் உருவாக்கப்பட உள்ள புதிய கட்சியின் தலைமைப் பதவி பசில் ராஜபக்ஸவிற்கு வழங்கப்படக் கூடாது என நாமல் ராஜபக்ச கடும் ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளார். பசில் ராஜபக்ச கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டால் தாம் அந்தக் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் புதிய கட்…

  5. போதைப்பொருள் கடத்தல்;இலங்கையருக்கு இந்தியாவில் 14 வருட சிறை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு, சென்னை மேலதிக சிறப்பு நீதிமன்றம் 14 வருடங்கள் சிறைத்தண்டனையும் 140,000 இந்திய ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு ஆடைக்குள் மறைத்துவைத்து 3.735 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கடத்திய குற்றத்திற்காக ஸ்ரீகிருஷ்ணா மற்றும் ஸ்ரீசவல் ஆகிய இருவர் சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், குறித்த இருவரும் பல போலி கடவுச்சீட்டு மற்றும் போ…

  6. வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கான வீட்டுத்திட்டம் பெப்ரவரியில் ஆரம்பம் வடக்கு கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றப்பட்டவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்கான வீட்டுத்திட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக எண்ணாயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளதோடு, அந்த வீடுகளுக்கான பயனாளிகளை தெரிவுசெய்யும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். குறித்த வீட்டுத்திட்டத்திற்கான நிதி, அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சின் செயலாளர், …

  7. தமது சந்தேகத்திற்கு இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை;சுன்னாகம் மக்கள் விசனம் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நிலவும் குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். சுன்னாகம் பகுதியில் கிணற்று நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக தகவல் வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலம் கடந்துள்ள நிலையில், இன்றும் மக்கள் மத்தியில் நிலவும் அந்த குழப்ப நிலை தணியவில்லை. யாழ். சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக 2014 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தகவல்கள் வெளியாகியிருந்தன.இதனைத் தொடர்ந்து பல்வேறு…

  8. வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை நாட்டில் நல்லாட்சி அரசு ஆட்சி நடாத்தி வந்தாலும், தமிழர்கள் இன்னமும் அதனை முழுமையாக அனுபவிக்கவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை இணைத் தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாற…

  9. சகோதரியைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரிய போது செஞ்சிலுவைச் சங்கம் மறுப்பு [ Sunday,31 January 2016, 06:51:42 ] காணாமல்போன தனது சகோதரியைத் தேடித் தருமாறு கோரிக்கை விடுத்த போது தனிநபரைத் தேடித் தர முடியாது என செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்ததாக காணமல்போன பெண்ணின் சகோதரன் குற்றம்சுமத்தியுள்ளார். ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கிளிநொச்சி – அம்பாள்குளத்தைச் சேர்ந்த பாக்கியநாதன் தர்மினி என்ற 17 (2009ஆம் ஆண்டு) வயதான சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார். இறுதியாக 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி யுத்தத்தின்போது காயமடைந்…

  10. போதைப்பொருள் குற்றச்சாட்டு! இலங்கையருக்கு தமிழகத்தில் 14 வருட சிறை [ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2016, 05:55.26 AM GMT ] தமிழகத்தில் ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த இலங்கையர் ஒருவர் உட்பட்ட இரண்டு பேருக்கு 14 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சென்னை விசேட மேலதிக நீதிமன்றம் இந்த தண்டனையை நேற்று அறிவித்துள்ளது. 14 வருட சிறைக்கு அப்பால் 140, 000 ரூபா அபராதமும் இந்த இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை செலுத்த தவறினால் இருவரின் சிறைத்தண்டனை காலம் ஒருவருடத்தால் நீடிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஸ்ரீகிருஸ்ணன் மற்றும் ஸ்ரீஸாவல் ஆகியோர் 3.735 கிலோகிரா…

  11. 200 மில்லியன் ரூபாய் பெறுமதி போதைப் பொருளுடன் ஒருவர் கைது [ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2016, 04:55.26 AM GMT ] 200 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான 20.9 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதான இவர்ää நேற்று இலங்கையின் தென்பகுதி அம்பலாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் குறித்த இளைஞர் சிறிய தொகை ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்தமைக்காகவே கைது செய்யப்பட்டார். எனினும் பின்னர் விசாரணைகளின்போது அவர் பெருந்தொகை போதைப்பொருளை வைத்திருந்தமை கண்டறியப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர் இன்று காலி பலப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். …

  12. பெர்லின் செல்லும் ஜனாதிபதிக்கு முன்னொரு போதுமில்லாத பாதுகாப்பு! [Sunday 2016-01-31 08:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் 23ம் நாள் ஜேர்மனிக்கு செல்லவுள்ளார். பெர்லின் நகருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கு பலத்த பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜேர்மனியிலிருந்து அவர் ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் 23ம் நாள் ஜேர்மனிக்கு செல்லவுள்ளார். பெர்லின் நகருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கு பலத்த பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜேர்மனியிலிருந்து அவர் ஒஸ்ரியாவ…

  13. மலையகத்தில் ஜமீன் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது - வடிவேல் சுரேஷ் [ Sunday,31 January 2016, 05:57:39 ] மலையகத்தில் நடைபெற்று வந்த ஜமீன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் 7 பேர் அரசியல் பீடம் ஏறியுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். அக்கரப்பத்தனை - பெங்கடன் சின்னத்தோட்டத்தில் மலையக வரலாற்றில் முதன்முறையாக ஒரே இடத்தில் 114 வீடுகளை அமைக்கும் நவீன கிராமத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த அரசியல் மாற்றத்திற்கு மக்கள் அளித்த வாக்குகளே காரணம் எனவும், மாற்றத்துடன் வாழ வேண்டும் எனவும…

  14. யுத்த இரகசியங்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளரிடம் வழங்கப்படாது – ஜனாதிபதி 31 ஜனவரி 2016 யுத்த இரகசியங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரிடம் வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் உள்ளிட்ட படையினரின் யுத்த இரகசியங்கள் தொடர்பிலான எந்தவொரு தகவல்களையும் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னிடம் வழங்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த இரகசியங்களை அம்பலப்படுத்துமாறு மனித உரிமைப்பேரவை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆழ ஊடுறுவித் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய யுத்த இரகசியங்கள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு கோரப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், இந…

  15. இஸ்ரேலிய முகவர்களும் இலங்கை மருத்துவர்களுடன் இணைந்து சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்! [ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2016, 12:45.05 AM GMT ] இஸ்ரேலிய முகவர்களும் இலங்கை மருத்துவர்களுடன் இணைந்து சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் வெளிச்சமாகியுள்ளது. 2012ம் ஆண்டு இஸ்ரேலிய நீதிமன்ற அறிக்கையில் அந்நாட்டு முகவர்களுக்கும் இலங்கை மருத்துவர்களுக்கும் இடையில் சிறுநீரக வர்த்தகம் தொடர்பிலான தொடர்பு பேணப்பட்டமை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த 65 வயதான ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான எட்வட் சான்டலர் என்ற நபர் சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த …

  16. புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை! - ஜனாதிபதி உறுதி [Sunday 2016-01-31 08:00] இலங்கையில் சமஸ்டி முறை ஆட்சிக்கு இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கையில் சமஸ்டி முறை ஆட்சிக்கு இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின…

  17. புதிய யாப்பு : அரசாங்கம் சம்பந்தனுடன் பேச்சு நடத்தும் என்கிறது கூட்டமைப்பு [ Sunday,31 January 2016, 03:30:21 ] புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக சரியான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. புதிய யாப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளதாகவும் சமஷ்டி முறையிலான தீர்வுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதன் மூலம் முழுமையாக இனப்பிரச்சினையை தீர்த்து விடமுடியாது என்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. …

  18. வடக்கின் போர்க்களங்களை நோக்கி செல்லவுள்ள செய்ட் அல் ஹூசைன் [ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2016, 03:40.03 AM GMT ] பெப்ரவரி 5ஆம் திகதி இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன், வடக்கு நோக்கி விஜயம் செய்யவுள்ளார். இதன்போது அவர் வடக்கில் இறுதிப்போர் இடம்பெற்ற இடங்களை பார்வையிட்டு, போரினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களையும் சந்திக்கவுள்ளார். இந்த நிலையில் செய்ட் அல் ஹூசைன் எதிர்வரும் 9ஆம் திகதி வரை இலங்கையில் இருப்பதாகவும், அன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின்போது ஐக்கிய நாடுகள் பரிந்துரை தொடர்பிலான நடைமுறைப்படுத்தல்களை அரசாங்கம் அவருக்கு தெ…

  19. யோஷித்த ராஜபக்ஷ கைது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசாரணைகளுக்காக கடற்படை தலைமையகத்துக்கு இன்று காலை 10.30 மணியளவில் அவர் சென்றிருந்தார். விசாரணைகளை அடுத்து, கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/165012/%E0%AE%AF-%E0%AE%B7-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B7-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.9ybfO48L.dpuf யோஷித ராஜபக்‌ஷ சற்றுமுன்னர் கைத…

  20. யோஷித்த கைது செய்யப்பட்ட பின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 2016-01-30 22:03:40 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது இரண்டாவது மகன் யோஷித்த ராஜபக்ஷவை சந்தித்துவிட்டு திரும்பிச்சென்றபோதுபிடிக்கப்பட்ட படம் இது. சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக யோஷித்த ராஜபக்ஷ, அந்நிறுவனத்தின் தலைவர் ரொஹான் வெலிவிட்ட, முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷாந்த ரணதுங்க உட்பட ஐவர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களை பெப்ரவரி 11 ஆம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறு கடுவெல நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. …

  21. மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மட்டக்களப்பில் புனர்வாழ்வு மையம் புனர்வாழ்வு பெற்று வீடு திரும்பிய பின்னர் அவர்கள் தங்களால் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவசியம் ஏற்பட்டால் அவர்கள் மீண்டும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார் இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணங்களில் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு உதவுவதற்காக புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. போருக்குப் பின்னர் இந்தப் பகுதிகளில் மதுப் பாவனை அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக, மதுவுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் மையம் ஒன்றை கிழக்கு மாகாணத்தில் …

  22. சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை! [ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2016, 01:39.23 AM GMT ] சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள், படைவீரர்கள் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குணவர்தன கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தார…

  23. பணம் சம்பாதிக்கும் வெளிநாட்டு தொலைபேசி அழைப்பு;மக்களே எச்சரிக்கை தெரியாத வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் பணம் சம்பாதிக்கும் மோசடிதிட்டமே பதில் வழங்காதிருக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக கூறி வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் மக்களை திசை திருப்பி மோசடி செய்து பணம் சம்பாதிக்கும் வழிமுறையாக இது காணப்படுகிறது என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி அவ்வாறான தொலைபேசி அழைப்புக்களை தடுப்பதற்கு விஷேட வேலைத்திட்டம் ஒன்று தற…

  24. தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டால் ஜனாதிபதிக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டு! - எச்சரிக்கிறார் கம்மன்பில [Saturday 2016-01-30 07:00] தமிழ் மொழியிலும் தேசியகீதம் இசைக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் என்று உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டின் அரச கரும மொழி தமிழாக இருந்த போதிலும் அங்குள்ள மக்கள் வங்காள மொழி தேசிய கீதத்தையே பாடுகின்றனர். அதேபோன்று இலங்கையின் அரசியலமைப்பு விதிகளின் பிரகாரம் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க முடியாது. தமிழ் மொழியிலும் தேசியகீதம் இசைக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டு ம…

  25. புதிய அரசியல் யாப்பு தீர்வல்ல - நியூயோர்க் டைம்ஸ் [ Friday,29 January 2016, 12:26:24 ] ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தற்போது உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பு, யுத்த குற்ற விசாரணைக்கான நீதிப் பொறிமுறைக்கான மாற்றீடாக அமையாது என நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ”ஸ்ரீலங்காவில் நீதிக்கான தருணம் இது” என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் (Editorial) நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இவ்வாறு கூறியுள்ளது. ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்ட விபரங்கள் வருமாறு… 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட கொடுமையான யுத்தத்தால் சிதைவுற்ற நாட்டை வழமைக்கு கொண்டுவருதல் மற்றும் பொறுப்புகூறல் தொடர்பில் புதிய யுகமான அரசாங்கத்தை ஸ்தாபிப்பார் என்ற நம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.