ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143493 topics in this forum
-
நெடுந்தீவு கடற்பரப்பில் மூன்று இந்திய மீனவர்கள் கைது -செல்வநாயகம் கபிலன் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இந்திய மீனவர்களை கடற்படையினர், நெடுந்தீவு கடற்பரப்பினுள் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வளதுறை திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப்பணிப்பாளர் ப.ரமேஸ்கண்ணா தெரிவித்தார். கோட்டைப்பட்டிணம், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து விசைப் படகில் வந்த குறித்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதோ கைது செய்யப்பட்டுள்ளனர். இராமையா பாலசுப்பிரமணியம் (வயது 33), கலைஞன் சந்தோஸ்குமார் (வயது 28), சந்திரன் பார்த்தீபன் (வயது 19) ஆகிய மூவருமே இவ்வாற…
-
- 1 reply
- 525 views
-
-
இம்முறை சுதந்திர தின விழா காலிமுகத் திடலில்! [Monday 2016-01-18 07:00] இலங்கையின் 68 ஆவது தேசிய சுதந்திர தின விழா இம்முறை கொழும்பு காலி முகத்திடலில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்த சுதந்திர தின விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சபாநாயகர் கரு ஜெயசூரிய உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்வுள்ளனர். இலங்கையின் 68 ஆவது தேசிய சுதந்திர தின விழா இம்முறை கொழும்பு காலி முகத்திடலில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான…
-
- 0 replies
- 558 views
-
-
மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி இங்கிலாந்து செல்ல உதவிய இலங்கை 18-01-2016 09:09 AM மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், தனது சிகிச்சைக்காக ஐக்கிய இராச்சியத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அவ்வாறு செல்வதற்கு, இலங்கையின் அழுத்தமும் காரணமாக அமைந்ததாக, அவரது மனைவி லைலா நஷீட் தெரிவித்துள்ளார். பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், முள்ளந்தண்டுப் பிரச்சினைகள் காரணமாக அவதிப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கான சிகிச்சைகளையும் பெற்றுவந்தார். அவருக்கான மேலதிக சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும், அதற்காக அனுமதிக்குமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. …
-
- 0 replies
- 367 views
-
-
'புதிய அரசியல் சாசனத்தால் பௌத்தம் பாதிக்கப்படாது' ரணில் உறுதி இலங்கையில் பௌத்த மதத்துக்கு எந்த பாதிப்புகளும் புதிய அரசியல் சாசனத்தின் மூலம் ஏற்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்தார். புதிய அரசியல் சாசனத்துக்கு அனைத்து தரப்பு கருத்துக்களும் கேட்கப்படும் என்கிறார் ரணில் நாட்டில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியல் சாசனத்தின் மூலம் பௌத்த மதம் பாதிக்கப்படும் என சிலர் கூறிவந்த நிலையில், பிரதமரின் இந்த வாக்குறுதி வந்துள்ளது. அதேபோல புதிய அரசியல் சாசனத்தின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் ஆபத்துக்கள் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்…
-
- 4 replies
- 620 views
-
-
மகிந்தவின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை வேறிடத்துக்கு மாற்றக் கோருகிறது தந்தை செல்வா அறங்காவலர் குழு! [Monday 2016-01-18 07:00] தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள, வீதி புனரமைப்பு தொடர்பான மகிந்த ராஜபக்சவின் பெயர் பொறித்த நினைவுக் கல்லை வேறிடத்துக்கு மாற்றுமாறு தந்தை செல்வா அறங்காவல் குழு, வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு யாழ். காங்கேசன்துறை வீதி புனரமைப்பு செய்யப்பட்ட போது இந்த நினைவுக் கல் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் பெயர்களை பொறிக்கப்பட்ட வீதி புனரமைப்பு தொடர்பான நின…
-
- 0 replies
- 426 views
-
-
இன்று சுவிஸ் பயணமாகிறார் ரணில்! [Monday 2016-01-18 07:00] சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சுவிட்சர்லாந்து செல்லவுள்ளார். பிரதமருடன் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் சுவிட்சர்லாந்து செல்கின்றனர். இந்த மாநாடு எதிர்வரும் 20 முதல் 23 ஆம் திகதி வரையில் சுவிஸர்லாந்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச பொருளாதார மாநாட்டிற்கு வரலாற்றில் முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=149477&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 382 views
-
-
புதிய அரசியலமைப்பு 13ஐத் தாண்டக் கூடாது - முட்டுக்கட்டை போடுகிறார் மஹிந்த! [Monday 2016-01-18 07:00] புதிய அரசியலமைப்பினூடாக அதிகாரப் பரவலாக்கலானது எக் காரணம் கொண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்வதாக இருக்கக்கூடாது. அத்துடன் மாகாணங்களை இணைப்பதாகவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். புதிய அரசியலமைப்பினூடாக அதிகாரப் பரவலாக்கலானது எக் காரணம் கொண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்வதாக இருக்கக்கூடாது. அத்துடன் மாகாணங்களை இணைப்பதாகவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். நாரேஹன்பிட்டி அபேராம விஹாரையில் நேற்றுமுன்தினம் நட…
-
- 0 replies
- 298 views
-
-
அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான மக்கள் கருத்தறியும் செயற்றிட்டம் ஆரம்பம் [ Monday,18 January 2016, 03:07:07 ] ஸ்ரீலங்காவிற்கான புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. யாப்பு உருவாக்கம் தொடர்பில் முதல் கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் மக்களின் கருத்துக்களை அறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் மக்களின் கருத்துகளை கேட்டறியும் செயற்றிட்டம் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பு - 02 ஸ்டெப்பல் வீதி…
-
- 0 replies
- 318 views
-
-
இந்தியக் கடற்படையின் பாய்க்கப்பல்களும் கொழும்பு வந்தன – சீனாவுடன் போட்டி? [ திங்கட்கிழமை, 18 சனவரி 2016, 04:13.14 AM GMT ] சீனக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருக்கும் நிலையில், இந்தியக் கடற்படையின் இரண்டு கடற்பயணப் பயிற்சிப் பாய்க்கப்பல்கள் இரண்டும் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்தியக் கடற்படையின் கடற்பயணப் பயிற்சிக் கப்பல்களான, தரங்கினி மற்றும் சுதர்சினி ஆகியன, பயிற்சிப் பயணமாகவே நேற்று கொழும்புத துறைமுகம் வந்தன. இந்தியக் கடற்படைக் கப்பல்களுக்கு சிறிலங்கா கடற்படை மரபுப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று வரை கொழும்புத் துறைமுகத்தில் இந்தக் கப்பல்கள் தரித்து நிற்கும். இதன்போது, இந்தி…
-
- 0 replies
- 326 views
-
-
வீதியோரமாக நின்ற லொறியை மோதித்தள்ளியது யாழ் சொகுசு பஸ்: ஸ்தலத்தில் ஒருவர் சாவு, 8 பேர் காயம்! [ திங்கட்கிழமை, 18 சனவரி 2016, 04:07.26 AM GMT ] யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த நெல் லொறியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்தனர். வவுனியா - ஈரப்பெரியகுளம் - கல்குண்டான் மடுவில் நேற்று குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் விபத்துக் குறித்து தெரியவருவதாவது, கிளிநொச்சியில் இருந்து நெல் ஏற்றிக் கொண்டு மருதங்கடவலை நோக்கிச் சென்ற போது, பின் ரயர் காற்றுப் போனது. இதனால் லொறியை வீதியோரமாக நிறுத்தி ரயர் மாற்றிக் கொண்டிருந்த போதே சொகுசு பஸ் லொறியை மோதியது. …
-
- 0 replies
- 289 views
-
-
நாட்டை பிளவுபடுத்த இடமளிக்கப்போவது இல்லை; பிரதமர் விசேட அறிவிப்பு [ Sunday,17 January 2016, 07:43:21 ] நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவது இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். http://ibctamil.com/news/index/17113
-
- 1 reply
- 302 views
-
-
காணாமல்போனோர்: பிரதமரின் கருத்துக்கு பிரஜைகள் குழு கண்டனம் காணாமல்போனவர்களில் பலர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தை ரணில் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார் (உறவினர்கள் போராட்டம்-கோப்புப் படம்) இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போர்க்காலத்தில் காணாமல்போனவர்களில் பலர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ள கருத்தை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினர் கண்டித்திருக்கின்றனர். பிரதமரின் இந்தக் கருத்தை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அந்தோனி சகாயம் பிபிசி தமிழோசையிடம…
-
- 1 reply
- 339 views
-
-
விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? சண்டே லீடர், சிலுமின: 17 ஜனவரி 2016 வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நேரிடும் என மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடமாகாணசபை உறுப்பினர்களுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட உள்ளது. கடந்த வாரமும் இவ்வாறான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக இன்றைய சந்திப்பு நடைபெறும் எ…
-
- 2 replies
- 381 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பலர் மஹிந்தவுக்கு ஆதரவு இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல மக்கள் பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்ஷகவுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்டத்தில் பலர் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவே செயல்படுவது என அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்கள பிரதேச உள்ளுராட்சி சபைகளின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவர்களும் உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றிலேயே இந்த ம…
-
- 0 replies
- 442 views
-
-
அரசியலமைப்பு வரைபுக்கான நிபுணர் குழு நியமனம் மலையக தமிழ் மக்களை பிரதானப்படுத்தி, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே அமைந்துள்ள ஏழு மாகாணங்களிலும் வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்களின், அதிகார பகிர்வு உட்பட்ட அரசியல், சமூக, கலாசார அபிலாஷகளை வரைபாக தொகுத்துத் தரும் பணியை தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிபுணர் குழு முன்னெடுக்கவுள்ளது. சமூக ஆய்வாளர் பி. முத்துலிங்கம், பேராசிரியர் எம். சின்னதம்பி, பேராசிரியர் சந்திரசேகரன், பேராசிரியர் டி. தனராஜ், பேராசிரியர் மூக்கையா, கலாநிதி எஸ். சந்திரபோஸ், சட்டத்தரணி கணபதிபிள்ளை, விரிவுரையாளர் எஸ். விஜயசந்திரன், விரிவுரையாளர் கௌரி பழனியப்பன், சிரேஷ்ட அரச பணியாளர் எம். வாமதேவன், ஆய்வாளர் கௌதம் பாலசந்திரன், வண…
-
- 0 replies
- 362 views
-
-
அரசியல் வியாபாரிகள் மொஹமட் பாதுஷா முஸ்லிம்களின் அரசியல், வியாபாரிகளின் அரசியலாலும் அரசியல் வியாபாரிகளாலும் நிரப்பப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் நன்றாகப் பணம் உழைத்திருக்கின்றார்கள். ஆனால், மக்கள் மனங்களை சம்பாதித்தவர்கள் நிகழ்கால அரசியலில் மிக மிகக் குறைவு. இவர்கள் வியாபாரிகள் என்பதற்கு இதுவே போதுமான, மிக எளிய உதாரணமாகும். சமூக விடுதலை உணர்வுள்ள தலைவர்கள் என்றால், அவர்கள் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்படாதவர்களாக இருக்க வேண்டும். மக்களுக்காக அவர்கள் எதையும் தியாகம் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். மக்களுக்கு ஏதாவது அநியாயம் இழைக்கப்படுகின்ற போது, தன்னுடைய சமூகம் நெருக்குவாரங்களை சந்திக்கின்ற போது, அதற்க…
-
- 0 replies
- 480 views
-
-
மகிந்தவின் மனைவிக்கு வழக்கு [ ஞாயிற்றுக்கிழமை, 17 சனவரி 2016, 06:30.12 AM GMT ] முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவிற்கு எதிராக தற்போதைய வெளிவிவகார அமைச்சு வழக்குத் தொடர உள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சீனா வழங்கிய நிதியை சிராந்தி, அரச வழங்கியில் வைப்புச் செய்யாது தனியார் வங்கியில் வைப்புச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிராந்தியின் நடவடிக்கை குறித்து நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட உள்ளது. இதேவேளை,இந்த முறைப்பாடு தொடர்பிலான ஆவணங்களை வெளிவிவகார அமைச்சு திரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilwin.com/show-RUmuyBSbSWis5D.html
-
- 0 replies
- 516 views
-
-
ஜெனிவா உறுதிமொழிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானிய அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் [ ஞாயிற்றுக்கிழமை, 17 சனவரி 2016, 06:10.30 AM GMT ] [ புதினப்பலகை ] ஜூன் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்றும், பொறுப்புக்கூறல் தொடர்பான உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தெரிவித்தார். சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஹியூகோ ஸ்வைர் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். “வடக்கில் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் வௌ்ளியன்று கலந்து கொண்டேன். …
-
- 0 replies
- 298 views
-
-
தமிழரசுக் கட்சி நியாயமெனின் 'சிங்கலே' எப்படி தவறாகும்? இலங்கை தமிழரசு கட்சி என்று ஒரு இனத்தின் அடையாளத்தை மையமாகக் கொண்டு அரசியல் கட்சியொன்றை அமை ப்பது நியாயமென்றால் 'சிங்கலே' என்ற வாசகத்துடன் அமைப்பொன்றை உருவாக் குவது எந்தவகையில் தவறாகும் என பொது பலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பினார். இந்த அரசாங்கம் சிங்கள மக்களை உதாசீனப்படுத்தி தான்தோன்றித்தனமாகசெயற்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் விரக்தியடைந்துள்ள சிங்கள இளைஞர்கள் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து தமது அடையா ளத்தினை பாதுகாப்பதற்காக உருவாக்கப் பட்ட ஒரு அமைப்ப…
-
- 0 replies
- 390 views
-
-
மீண்டு(ம்) வருமா மஹிந்த யுகம்? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறது மைத்திரி - சந்திரிகா அணி. மஹிந்த ராஜபக்ஷவின் இப்போதைய நகர்வுகள் தான் இத்தகையதொரு முடிவுக்குச் செல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து தூக்கியெறியப்பட்டு விட்டதாகவே பலராலும் கருதப்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை கட்சியின் யாப்புக்கு அமைய, மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்த பின்னர், அவரால் கட்சியின் மீது செல்வாக்குச்…
-
- 0 replies
- 562 views
-
-
மகிந்தவையும் மைத்திரியையும் இணைக்க முயற்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் இணைக்க மீளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான ஜோன் செனவிரட்ன மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்து வருகின்ற இந்த இருவரும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சவாலாக அமையும் என தெரிவித்துள்ளனர். அத்தோடு,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைந்து தே…
-
- 0 replies
- 277 views
-
-
அரசியல் யாப்பு தொடர்பில் இன்று பிரதமரின் விசேட அறிவிப்பு புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார். இன்று முற்பகல் 10 மணி அளவில் அலரிமாளிகையில் இருந்து இந்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், புதிய அரசியல் யாப்பு தொடர்பான மக்கள் கருத்து கோரும் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொழும்பில் அமைந்துள்ள அரசியல் யாப்பு தொடர்பான மக்கள் கருத்து கோரும் குழுவின் செயலகத்தில், பொது மக்கள் தங்களின் கருத்துக்களை முன்வைக்க முடியும். இதற்காக தொலைபேசி, தொலைநகல் மற்றும் அஞ்சல் ஆகியன மூலம் தொடர்பு கொள்ள முடியும். 011…
-
- 0 replies
- 294 views
-
-
தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்குரிய விடை இன்னமும் கிடைக்கவில்லை முப்பது ஆண்டு அகிம்சைப் போராட்டமும், முப்பது ஆண்டுகால ஆயுதப்போராட்டமுமாக மொத்தமாக 60ஆண்டுகள் துன்பங்களுடன் காத்திருந்தும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு உரிய விடை இன்னமும் கிடைக்கவில்லை. உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய அரசியல் யாப்பும் சரியான தீர்வை வழங்கும் என்பதற்கான சாதகமான நிலையும் தென்படவில்லை என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 60ஆண்டு காலம் மனம் தளராமல் இருக்கும் மக்களை இன்னும் பல ஆண்டுகள் வரை காத்திருக்க வைக்காமல் அவர்களின் அரசியல் உரிமைகளை கையளிக்கும் ஏற்பாடுகளுக்கு உலக அரசியல் இடமளிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு என்றும் விமர்சகர…
-
- 0 replies
- 223 views
-
-
நடப்பாண்டில் இரண்டு தேர்தல்களை நடத்த அரசாங்கம் தீர்மானம் [ ஞாயிற்றுக்கிழமை, 17 சனவரி 2016, 04:25.39 AM GMT ] இந்த ஆண்டில் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளதுடன், சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. புதிய அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு இந்த ஆண்டு பூர்த்தியாகும் முன்னதாக நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டுக்குள்ளேயே நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தெரிவுக்குழு ஒன்றின் ஊடாக இந்த ய…
-
- 0 replies
- 206 views
-
-
தெமட்டகொடை பேஸ்லைன் வீதி மஞ்சள் கடவையில் விபத்து; தாயும் மகளும் பலி [ Sunday,17 January 2016, 05:58:02 ] தெமட்டகொடை - பேஸ்லைன் வீதியில் மஞ்சள் கடவையினூடாக பாதையை கடக்க முற்பட்ட போது இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு 8.50 அளவில் மஞ்சள் கடவையை கடக்க முற்பட்ட தாயொருவையும் மகளையும் காரினால் மோதிவிட்டு சிறுவனொருவன் தப்பிச்செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்தில் 10 வயது மகளும் 47 வயதுடைய தாயொருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த…
-
- 0 replies
- 384 views
-