ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க யாழ்.பல்கலைக்கு திடீர் மூடுவிழா news யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் எந்தவித காரணங்களும் இல்லாது மூடப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 16ம் திகதி முதல் 21 ம் திகதி வரை பல்கலைக் கழக செயற்பாடுகள் அனைத்தும் இடம்பெறமாட்டாது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் குறித்த திகதிக்கு முன்னதாக பல்கலை விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களும் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் தினம் மே மாதம் 18 ம் திகதி தமிழர்கள் மத்தியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையால் யாழ்.பல்கலையிலும் நினைவுகூரலாம் என்ற காரணத்தினால் இவ்வாறான விடுமுறை அ…
-
- 0 replies
- 479 views
-
-
சிறுமி விபூசிகா தாயாரை பார்வையிட்டுள்ளார் : 06 மே 2014 பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தாயான பாலேந்திரன் ஜெயக்குமாரியைப் பார்வையிடுவதற்காக அவரது மகளான பாலேந்திரன் விபூசிகா நேற்று திங்கட்கிழமை சென்நுள்ளார். இவரை கரைச்சி பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி திருமதி விஜயகுமாரி சுரேஸ் அழைத்துச் சென்றுள்ளார். விபூசிகா தனது தாயாரினைப் பார்ப்பதற்கான அனுமதியை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் கடந்த புதன்கிழமை கோரியிருந்தார். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் மார்ச் 13 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினையடுத்து, சந்தேகநபர் ஒருவர் ஒளிந்திருந்ததாகக் கூறப்படும் வீட்டிலிருந்து விபூசிகாவும் தாயாரும் கிளிநொச்சி காவற்துறையினரினால் கைது …
-
- 1 reply
- 477 views
-
-
இலங்கை அரசின் தடைப்பட்டியலில் உள்ளவர்கள் குறித்து மத்திய உளவுத்துறை தமிழகத்தில் விசாரணை! [Wednesday, 2014-05-07 09:54:14] இலங்கை அரசாங்கத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றிய விவரங்கள், பின்புலத்தை ஆராயும் நடவடிக்கையில் இந்திய மத்திய உளவுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பயங்கரவாதிகள் எனக் கூறி இலங்கை அரசால் தடை விதிக்கப்பட்ட 424 பேரில், 32 பேர் தமிழகத்தில் அகதிகளாக வசித்து வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் இடம்பெற்றுள்ள பெயர் பட்டியலை ஏற்றுக் கொள்வதாக இந்தியா அண்மையில் அறிவித்ததால், அவர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, இலங்கை தடை விதித்துள்ள நபர்கள் பற்றிய விவரங்கள், பின்புலத்தை ஆராயும…
-
- 0 replies
- 420 views
-
-
கொழும்பு: இந்தியா- இலங்கை இடையிலான, விரிவான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, நேற்றுடன் முடிவடைந்தது. இலங்கை தலைநகர், கொழும்புவில் நடந்த இரண்டு நாள் பேச்சில், இந்திய வெளியுறவு துறை இணை செயலர் அமன்தீப் சிங் தலைமையில், அணுசக்தி துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இலங்கையின், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறை செயலர் தாரா விஜயதிலகே தலைமையில், அந்நாட்டு அணுசக்தி கமிஷன் மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 'இரு நாடுகளுக்கு இடையில் நடந்த இந்த பேச்சு, சுமுகமாக முடிந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த மாதிரி வடிவம் தயாரிக்கப்பட்டு, அதற்கு, விரைவில், இந்தியாவில் நடக்கவுள்ள கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும்' என,…
-
- 1 reply
- 378 views
-
-
-ஏ.ஜே.எம்.ஹனிபா சாய்ந்தமருது தோனா ஆற்றை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு ஜேர்மன் நாட்டு நகரம் ஒன்றின் நிதியுதவியை பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். சாய்ந்தமருது தோனா ஆற்றின் பாதுகாப்பு மற்றும் அதன் அபிவிருத்தி தொடர்பில் திணைக்களத் தலைவர்களுடனான கூட்டம் கல்முனை மாநகரசபையில் திங்கட்கிழமை (05) நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'பல வருடங்களாக சுத்தப்படுத்தப்படாது துர்நாற்றம் வீசுகின்ற தோனா ஆற்றைச் சுத்தப்படுத்துவதற்கு நாம் எடுத்த முயற்சிகள் வெற்றியளித்துள்ளன. எனது இந்த முய…
-
- 0 replies
- 366 views
-
-
கனேடியப் பாடசாலையில் புலிகொடிக்குத் தடை! [sunday, 2014-05-04 09:43:33] கனேடிய பாடசாலையொன்று புலிக்கொடியை தடை செய்துள்ளது. தென் கிழக்கு ஒன்டாரியோவில் உள்ள இந்த உயர்தரப் பாடசாலை, வளாகத்திற்குள் மாணவர் புலிக்கொடியை கொண்டு வரக்கூடாது என அறிவித்துள்ளது. தரம் 12 இல் கல்வி கற்கும் குமார் மார்க்கண்டு என்ற மாணவர் இரண்டு தடவைகள் பாடசாலையில் நடைபெற்ற ஆண்டு நிகழ்வுகளின் போது புலிக்கொடியை ஏந்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இம்முறை நடைபெற்ற ஆண்டு நிகழ்வில் புலிக்கொடியை ஏந்திச் செல்லக் கூடாது என பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை, குறித்த கொடிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு கிடையாது என அவரது தந்தை தெரிவித்துள்ளார். கொடி ஒன்றைக் கூட பாடசாலைக்கு கொண்டு செல்ல மு…
-
- 21 replies
- 1.5k views
-
-
இலங்கை இராணுவத்தின் எடுபிடி வேலைகளிற்கான ஆட்சேர்ப்பில் அரசாங்கத்தின் எடுபிடிகளாக மாறியிருப்போர் பங்கெடுப்பது இறந்து போன ஆத்மாக்களிற்கு மக்களிற்கு செய்கின்ற துரோகமென கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளாh.; இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பெரும் பிரச்சாரங்களுடன் இலங்கை பொலிஸ் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் இளைஞர்கள் பலர் தற்போது அதிலிருந்து விலகி வருகின்றனர். நிலைவரம் அவ்வாறு மோசமாகவுள்ளது. தற்போது இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படும் தமிழ் இளைஞர் யுவதிகள் கூட எடுபிடிகளாகவே இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். வறுமையினை காரணங்காட்டியோ அல்லது அச்சுறுத்தியோ இவ்வாட்சேர்ப்பு நடத்த…
-
- 0 replies
- 362 views
-
-
அணுத் திட்டம் குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை:- 06 மே 2014 அணுத் திட்டம் குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிவில் நோக்கங்களுக்காக அணுத் திட்டம் தொடர்பில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெற்றுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்றைய தினமும் இன்றைய தினமும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் சிறி அமர்டீப் சிங் கில் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரும், தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்;சின் செயலாளர் தாரா விஜேதிலக்க தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இரு தரப்ப…
-
- 0 replies
- 406 views
-
-
அவுஸ்திரேலியா வாழ் பெற்றோர்கள் இலங்கை உட்பட ஏனைய நாடுகளிலிருந்து குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் பிரகாரம் இலங்கை, வியட்நாம், கம்போடிய, கென்யா, பல்கேரியா, லட்வியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து குழந்தைகள் தத்தெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் தத்தெடுப்பதற்கு தகுதியான குழந்தைகள் குறித்த விபரங்கள் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, தென்னாபிரிக்காவில் இருந்தும் குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபட் தெரிவித்துள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php…
-
- 0 replies
- 536 views
-
-
நாட்டில் பெரும்பான்மை இனத்தைப் போன்று சம அதிகாரத்துடன் வாழக்கூடிய சமஷ்டி முறையிலான ஆட்சிமுறையே வேண்டும், அபிவிருத்திகள் அல்ல. இவற்றையே எமது மக்கள் கேட்கின்றனர் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா. நடராசா தெரிவித்தார். தந்தை செல்வா அவர்களின் நினைவு தினம் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் கிராமத்தலைவர் அ. கந்தவேள் தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிiமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மீள்கட்டுமானம், மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வெளிநாட்டு நிதியினைக் கொண்டு ஒரு சிலருக்கு நிவாரணங்களை வழங்கி தங்களின் சொந்த இடங்களில் நிம்மதியாக இருக்கின்றார்கள் என சர்வதேசத்தினை பூச்சாண்டி காட்டி நிற்கின்றது அரசு.…
-
- 0 replies
- 239 views
-
-
பசுக்களை செயற்கையாக சினைப்படுத்துவதற்குரிய உபகரணங்களை வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனிடம் சேவாலங்கா நிறுவனம் திங்கட்கிழமை (05) வழங்கியது. மல்லாவியிலுள்ள சேவாலங்கா நிறுவன அலுவலகத்தில் சேவாலங்காவின் துணைத்தலைவர் பேராசிரியர் அ.நவரட்ணராஜா தலைமையில் 15 மில்லியன் ரூபா உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் உறைநிலைச் சுக்கிலம், இனப்பெருக்க ஓமோன்கள், செயற்கை சினைப்படுத்தலுக்கான உபகரணங்கள் உள்ளன. 95 விழுக்காடு பசுக்கன்றுகள் பிறப்பதற்கான நிகழ்தகவைக் கொண்ட தெரிவுசெய்யப்பட்ட விந்தணுக்களைக் கொண்ட சுக்கிலத்தை சேவாலங்கா நிறுவனம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து உறைநிலையில் வரவழைத்து வழங்கியுள்ளது. இது தொடர்பில் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவிக்கையில், 'உள்ளூர்ப…
-
- 0 replies
- 341 views
-
-
நாட்டின் நலனுக்காக தேசிய சக்திகள் வகுத்துள்ள பாதையில் அரசாங்கம் வரத் தவறினால் தாம் தமது பாதையில் தனியாகச் செல்லப்போவதாக அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். கொழும்பு சுகததாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அமைசச்சர் விமல் வீரவன்ச இந்த எச்சரிக்கையை விடுத்தார். அரசாங்கத்துக்கு 12 அம்சக் கோரிக்கை ஒன்றை முன்வைக்கும் தீர்மானம் ஒன்றும் இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டது தெரிந்ததே. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே தின ஊர்வலத்திலோ கூட்டத்திலோ பங்கு கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்த விமல் வீரவன்ச, சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய முறையி…
-
- 2 replies
- 426 views
-
-
மிகப் பெரிய இராணுவ மருத்துவமனையை திறந்து வைத்தார் ஜனாதிபதி மகிந்த! - அமெரிக்காவில் கூட இல்லாத வசதிகளாம். [Monday, 2014-05-05 19:25:53] கொழும்பு நாராஹேன்பிட்டியில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய இராணுவ மருத்துமனையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்துள்ளார். ஆயிரத்து 24 இராணுவத்தினர் உள்ளக நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெறும் வசதிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில், ஆயிரம் இராணுவத்தினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் வெளிவாரியாக சிகிச்சை பெறவும் வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்றுகாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த மருத்துவமனையை திறந்து வைத்தார். இதையடுத்து நடந்த நிகழ்வில் உரையாற்றிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க,அமெரிக்கா தனது நாட்டுக்காக போராடும் இர…
-
- 4 replies
- 555 views
-
-
மகிந்த அரசாங்கத்தையும் அவர்களின் ஆதரவாளர்களையும் துரத்தும் முள்ளிவாய்க்கால் மே18 காய்ச்சலினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழகம் நிர்வாகம் மாணவர்கள் ஒன்று திரள்வதை தடுக்க எதிர்வரும் 16 ம் திகதி முதல் நான்கு நாட்களிற்கு பல்கலைக்கழகத்தை இழுத்து மூடுவதாக அறிவித்துள்ளது. பதிவாளரது ஒப்பமிடப்பட்ட குறித்த சுற்றுநிரூபம் இன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒட்டப்பட்டுள்ளது. குறிப்பாக விடுதி மாணவர்களையும் வெளியேற உத்தரவிட்டுள்ள நிர்வாகம் 20ம திகதி மதியத்தின் பின்னரே விடுதிகளுள் மாணவர்கள் உட்புக முடியுமெனவும் அறிவித்துள்ளது.மீண்டும் 21 ம் திகதி விரிவுரைகள் ஆரம்பமாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரணமேதும் தெரிவிக்கப்படாது பல்கலைக்கழகம் இழுத்து மூடப்படுவதால் வெளியிட…
-
- 1 reply
- 427 views
-
-
ஆயுதக் குழுக்களை வளர்த்து விட்டுப் பிராந்தியத்தில் அழிவை ஏற்படுத்திய இந்தியாஇ போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கூட ஈழத் தமிழருக்கு காத்திரமான தீர்வைப்பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் வி.மகாலிங்கத்துக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர் சிற்றம்பலம், ஈழத் தமிழருக்கு இந்தியா மீதுள்ள அதிருப்தியைத் துணைத்தூதுவர் மகாலிங்கம் மத்திய அரசிடம் எடுத்துக்கூற வேண்டும். எமது பிராந்தியத்தில் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கி அந்தக் குழுக்களை மோதவிட்டு எமது இனத்தை அழிக்கும் நடவடிக்கைக்கு இந்தியா து…
-
- 2 replies
- 483 views
-
-
இந்த நாட்டில் மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு தவ்ஹீத் மற்றும் பொதுபல சேனா ஆகிய அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவ்விரு அமைப்புகளையும் தடைச்செய்யுமாறு மத விவகாரங்கள் தொடர்பிலான முரண்பாடுகளை ஆராய்வதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் பிரிவில் முறையிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் ஆலோசனை சபையினாலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த இரு அமைப்புகளும் பொது மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/109470-2014-05-06-14-14-34.html
-
- 1 reply
- 389 views
-
-
சர்வதேசத்தின் நம்பிக்கையை இழக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தேசிய சமாதானப் பேரவையின் முன்னாள் தலைவர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார். அரசாங்கம் அண்மையில் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், 424 தனிப்பட்ட நபர்களையும் தடை செய்திருந்த போதிலும், இதற்கான உரிய நியாயங்களை சர்வதேசத்திடம் அழுத்தமாக முன்வைக்கத் தவறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் குறித்த அமைப்புக்களையும் தனிப்பட்ட நபர்களையும் தடை செய்யும் இலங்கையின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறித்த அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருப்பதாகவும், தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செய…
-
- 0 replies
- 174 views
-
-
குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர்- கிளிநொச்சி நகரத்தில் உள்ள சில காணிகளை தெற்கிலிருந்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் கையகப்படுத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான காணி என்று கூறியே குறித்த காணிகளை கையகப்படுத்தியிருப்பதாக காணிக்குச் சொந்தமானவர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் முகாமிட்டிருந்த மற்றும் அவர்களின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருந்த சில காணிகளே இவ்வாறு கையகப்படுதப்பட்டுள்ளன. முன்னதாக இந்தக் காணிகளில் இராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர். பின்னர் குறித்த காணிகளை பெரும்பான்மையினர் கையகப்படுத்தியுள்ளனர். இந்தக் காணிகள் பொதுமக்களுக்குச் சொந்தமானவை. இதன் உரிமையாளர்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்த…
-
- 0 replies
- 278 views
-
-
இந்தியாவின் கடற்படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமொன்றை இலங்கையர் முன்னெடுத்தார் 06 மே 2014 இந்தியாவின் இரண்டு முக்கிய கடற்படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமொன்றை சாகீர் ஹூசெய்ன் என்ற இலங்கையர் முன்னெடுத்து வந்ததாக தமிழக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுப் பிரிவின் சார்பில், இலங்கையின் கண்டியைச் சேர்ந்த சாசீர் ஹூசெய்ன் கடமையாற்றி வந்தார் என்ற சந்தேகத்தின் பேரில், தமிழக காவல்துறையினர் அண்மையில் அவரை கைது செய்திருந்தனர். சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்த அனுமதியளிக்குமாறு காவல்துறையினர் நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தென் மாநிலங்களான கொச்சி மற்றும் விசாக பட்டிணம் ஆகிய கடற்படைத் தளங்கள் மீது தாக்குத…
-
- 1 reply
- 571 views
-
-
கொழும்பில் இயங்கும் நான்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள்! - அமெரிக்க இரகசிய ஆவணம் கூறுகிறது. [Tuesday, 2014-05-06 09:52:14] கொழும்பு நகரில் கடும்போக்குடைய 4 அடிப்படைவாத அமைப்புகள் இயங்கி வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்க தூதரகத்தில் விசாரணை அதிகாரியாக பணியாற்றிய எம்.ஐ.காதர் என்பவர் இந்த அமைப்புகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ரகசியமான ஆவணத்தின் அடிப்படையில் சர்வதேச தொடர்புகளை கொண்டுள்ள 13 இஸ்லாமிய அமைப்புகள் இலங்கையில் செயற்பட்டு வருகின்றன. மிகவும் இரகசியமானது என்ற தலைப்பிட்டு இந்த இரகசிய தகவல்கள் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து இராஜாங்க திணைக்களத்திற்கு அனு…
-
- 1 reply
- 652 views
-
-
பொலிஸார் இருவரை கடத்தி துப்பாக்கிப்பிரயோகம்: ஒருவர் பலி செவ்வாய்க்கிழமை, 06 மே 2014 07:04 குருநாகல், முத்தெட்டுகல எனுமிடத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரை கடத்திய கொள்ளை கோஷ்டியினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளதாகவும் மற்றொருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். படகமுவ காட்டில் வைத்தே இவர் கொலைச்செய்யப்பட்டுள்ளதாகவும் இருவரின் சீருடைகளும் கழற்றப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/109346-2014-05-06-01-35-49.html
-
- 2 replies
- 521 views
-
-
இலங்கைத்துறைப் பகுதி படையினரால் சுற்றி வளைப்பு செவ்வாய்க்கிழமை, 06 மே 2014 10:28 -ஏ.எச்.ஏ. ஹுஸைன் திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்கள் இன்று செவ்வாய் அதிகாலை முதல் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது. இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். 15 வயதிற்கு மேற்பட்டவர்களை தாங்கள் விசாரிக்கப்போவதாகவும் இதற்கு பொது மக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறும் படையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்ததன் பின்னர் இந்த சுற்றி வளைப்பு இடம்பெற்றுவருகின்றது. இலங்கைத்துறை, ஈச்சிலம்பற்று, புன்னையடி, கல்லடி இலங்கைத்துறை முகத்துவாரம் போன்ற கிராமங்கள் இந்த சுற்றி வளைப்புக்கு உள்ளாகி…
-
- 0 replies
- 554 views
-
-
உலக இளைஞர் மாநாடு இன்று ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்! - துவக்கி வைக்கிறார் ஜனாதிபதி மஹிந்த. [Tuesday, 2014-05-06 09:39:17] உலக இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகிறது. இன்று காலை 11.30 மணியளவில் இந்த மாநாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைக்கவுள்ளார். இம் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் கலாநிதி ஜோன் டபிள்யூ ஆஷி மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி அஹமட் அல்ஹெந்தாவி ஆகியோர் விசேட பிரதிநிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர். நேற்று மாலைவரை 15 நாடுகளைச் சேர்ந்த இளைஞர் விவகார அமைச்சர்கள் இலங்கை வந்து சேர்ந்துள்ளதாக உலக இளைஞர் மாநாட்டின் பேச்சாளர் தெரிவித்தா…
-
- 0 replies
- 402 views
-
-
தென்கொரியாவில் இலங்கையர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு news தென்கொரியாவின் க்வான்ஜூன் அசுன் என்னும் இடத்தில் இலங்கையர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான தஹாம் அமரசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, வேலை செய்யும் இடத்தில் சக இலங்கையர் ஒருவரின் கத்தி குத்துக்கு இலக்காகியே இவர் உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பில் மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 06 மே 2014, செவ்வாய் 10:05 மு.ப - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=166732960906205233#sthash.rYgMCYh3…
-
- 0 replies
- 414 views
-
-
தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு ஆதரவாக கொழும்பில் கையெழுத்து வேட்டை! Top News [Tuesday, 2014-05-06 09:54:07] இலங்கையில் தகவலறியும் உரிமைச்சட்டத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரும் மனுவில் கையெழுத்து பெறும் நடவடிக்கை கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று நடைபெற்றது. கடந்த 3 ஆம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட உலக பத்திரிகை தினத்தையொட்டி ஊடக சுதந்திர நடவடிக்கை குழு இந்த இந்த கையெழுத்து வேட்டை, போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஐதேக தலைவர்கள் கரு ஜெயசூரிய, திஸ்ஸ அத்தநாயக்க, தமிழ்த் தேசியக் கூடமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். http://seithy.com/breifNews.php?newsID=108780&category=TamilNews&langua…
-
- 0 replies
- 291 views
-