ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
ஜனாதிபதி மகிந்தவுக்கு சந்திரிகா அனுப்பிய கடிதத்தை மறைத்தாரா செயலாளர் லலித் வீரதுங்க? [Monday, 2014-03-17 07:54:53] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கக் கோரி எந்தவிதமான வேண்டுகோளும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவால் இதுவரையில் விடுக்கப்படவில்லையென ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 11ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெற்காசிய கொள்கைகள் மற்றும் ஆய்வு கற்கை நிலையத்தின் தலைவியென்ற ரீதியில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், இலங்கையில் மத …
-
- 1 reply
- 354 views
-
-
கடந்த 13.03.2014 அன்று முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு 25க்கும் மேல்பட்ட பெண்களை அழைத்த இராணுவத்தினர், அவர்களுக்கு ஒப்பனை (மேக்கப்), மற்றும் முகச்சீரமைப்பு (பேசியல்) அழகு சாதனப்பொருள்களை வழங்கியுள்ளனர். முள்ளியவளை, கணுக்கேணி, மாமூலை, நீராவிப்பிட்டி, வற்றாப்பளை, கேப்பாப்பிலவு பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு 12.03.2014 அன்று சென்ற இராணுவத்தினர், 20 முதல் 40 வயது வரையான பெண்களை நாளை (13.03.2014) 2.00 மணிக்கு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு வருமாறும், பரிசுப்பொருள்கள் வழங்க இருப்பதாகவும், போக்குவரத்து ஒழுங்குகள் (இலவச பேரூந்து வசதி) செய்யப்பட்டுள்ளன என்றும் கூறிச்சென்றுள்ளனர். மறுநாள் இந்நிகழ்வில் கலந்து கொண்ட 25க்கும் மேல்பட்ட பெண்களுக்கு இராணுவ அதிகாரி…
-
- 0 replies
- 728 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஜெனிவா பயணம்! - சர்வதேச விசாரணையை வலியுறுத்துவர். [Monday, 2014-03-17 07:16:18] ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 25 வது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று கொழும்பிலிருந்து ஜெனிவா பயணமாகியுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரே ஜெனிவாவுக்கு நேற்று பயணமாகினர். இவர்கள், அங்கு கூட்டங்கள், சந்திப்புகளில் பங்கேற்று இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தவுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=105835&category=Ta…
-
- 0 replies
- 303 views
-
-
இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கை நேரம் இரவு 10.05ற்கு கைதான இவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருட்தந்தை பிரவீன் தனியாக விசாரணைக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ருக்கி பெர்னாண்டோ கொழும்பை தளமாக கொண்ட மனித உரிமைகள் ஆவண மையத்தின் (INFORM) மனித உரிமைகள் ஆலோசகராக கடமை ஆற்றுகிறார். (Human Rights adviser,…
-
- 4 replies
- 872 views
-
-
யாழ்.நகரை அண்டிய பகுதியளில் உள்ள தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து ஆபாச படச் சீடிக்களை விற்பனை செய்து வந்த இரண்டு சீடி ( இறுவெட்டு ) விற்பனை நிலையங்கள் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முற்றுகையிடப்பட்ட இரண்டு சீடிக்கடைகளிலும் இருந்து 25 மேற்பட்ட சீடிக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவங்கள் தொடர்பாக மேலும் தெரியவருவது. யாழ்.நாவலர் வீதியில் அமைந்துள்ள உயர்தர தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றான பொருளியல் கல்லூரிக்கு முன்பாக அமைந்திருந்த சீடிக்கடையும், கன்னாதிட்டிப் பகுதியில் அமைந்துள்ள சயன் கோல் தனியார் கல்விநிலையத்திற்கு அருகில் இருந்த மற்றுமொரு சீடி விற்பனை நிலையத்த…
-
- 0 replies
- 406 views
-
-
இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப்பும், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் 1984 ம் ஆண்டு சண்டே இதழுக்காக, முதன் முதலாக செவ்வி கண்டவர் அனிதா பிரதாப். இந்திய இராணுவம் சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் போர் இடம்பெற்ற பகுதிகளில் தனது ஊடகப் பணியை மேற்கொண்டிருந்த அனிதா பிரதாப், தனது அனுபவங்கள் தொடர்பாக “இரத்தத்தீவு” என்ற நூலையும் எழுதியவர். இந்தியா ருடே மற்றும் ரைம் சஞ்சிகைகளில் பணியாற்றிய அனிதா பிரதாப், 1999 ஆம் ஆண்டுவரை சி.என்.என். தொலைக்காட்சியின் தெற்காசியப் பிரிவின் செய்திப் பணிப்பாளராக கடமையாற்றினார். இவர் தற்போது, ஆம் ஆத்மி கட்சி மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைத் தொடர்ந்து, அ…
-
- 0 replies
- 434 views
-
-
சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தில் இராணுவ மேலாதிக்கம் நிறுவப்பட்ட நிலையில், அங்கு தமிழ் மக்களிடையே சிங்கள பௌத்த கலாசாரம் திணிக்கப்பட்டு வருகிறது. வடக்கு மாகாணத்தில், மீள்கட்டமைப்பு என்ற போர்வையில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், சிறிலங்கா இராணுவம் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றி வருகிறது. தமிழர்களின் நாளாந்த வாழ்வில், கலாசார ஆதிக்கத் திணிப்பை அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது, என்று கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்கு வடக்கு, கிழக்கில் இருந்து வந்திருந்த, தமிழ் மக்கள் தெரிவித்தனர். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், “பொது இடங்களில் தமிழின் பயன்பாடு விரைவில் அழிந்து போய் விடும் என்று நாம் அஞ்சுகிறோம். பாடசா…
-
- 0 replies
- 431 views
-
-
மட்டக்களப்பில் அமெரிக்காவுக்கு எதிராக அடையாள உண்ணாவிரதம் இருந்த அருமைலிங்கம் திடீர் மரணம்! [saturday, 2014-03-15 08:59:09] அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் நேற்று மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்திய முன்னாள் மாநகரசபை உறுப்பினர் அருமைலிங்கம் திடீரென மரணமானார். முன்னாள் ஈ.பி.டி.பி.உறுப்பினரும், தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிப்பவருமான அருமைலிங்கம், மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு அருகில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கெடுத்திருந்தார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு எத…
-
- 6 replies
- 658 views
-
-
யாழ்ப்பாணத்தில் இராணுவத்துக்கு இளைஞர்களைத் திரட்டும் பணி சத்தம் சந்தடியின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சியில் வரணியிலும் யாழ். நகரத்தில் கரையோர ஊர்களிலும் கடந்த சில நாள்களாக இந்த நடவ டிக்கை தீவிரமாக இடம் பெற்று வருகின்றது. இளைஞர்கள் தாமாக முன்வந்து இராணுவத்தில் இணைவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று வரணியில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட இராணுவத்தினர் தெரிவித்தனர். அதேநேரம் இராணுவத்தினர் கட்டாயப் படுத்தி அழைத்து அங்கிருந்த விண்ணப்பங்களில் தம்மி டம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டனர் என்று ஒருசிலர் குற்றஞ்சாட்டினர். தரைப்படையின் மகளிர் தொண்டர் படையணிக்கு ஆள்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விளம்பரம் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் வன்னியில் இத்தகைய விளம்ப…
-
- 0 replies
- 423 views
-
-
வடமாகாணசபை முறையாக செயற்படுவதற்கு ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் ஒத்துழைத்துச் செயற்பட்டிருந்தால் வடமாகாணத் தமிழ்ப்பேசும் மக்களுக்கு உருப்படியான ஒரு அரசியல் சமிஞ்ஞையை வெளிக்காட்டியிருக்க முடியும் என நீதியரசரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகனின் ஆசிரியர் தலையங்கத்தின் தரிசனம் நூல்வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற போதே பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் - அரசாங்கம் தென்னிலங்கைச் சிங்களக் கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்தினால் அடுத்த தேர்தலில் சிங்கள வாக்குகளைப்…
-
- 0 replies
- 374 views
-
-
திங்கள், மார்ச் 17, 2014 - 10:34 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் தமிழ் கலாசாரத்தை முற்றாக அழிப்பதற்கு நடவடிக்கை! பாடசாலைகளில் நிகழ்வுகளுக்குத் தடைவிதிப்பு! இலங்கையில் தமிழ் கலாசார பாராம்பரியத்தை முற்றாக அழிப்பதற்கான அனைத்து வகையான நடவடிக்கைகளையும், இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்அடிப்படையில் வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமிழ் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று அரசாங்கத்தினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கையின்படி, தமிழ் வரலாறு, தமிழ் கலாசாரம் என்பவற்றை வெளிப்படுத்தும் வகையான நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழியை கட்டாய …
-
- 0 replies
- 554 views
-
-
துண்டுப்பிரசுரம் ஒட்டுவதற்கு மறுப்பு தெரிவித்த இ.போ.ச பேரூந்து மீது யாழில் தாக்குதல்! [Monday, 2014-03-17 08:47:36] யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்றுக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது மடத்தடியில் வைத்து இன்று (17) காலை வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், அதில் பயணம் செய்த பெண் மற்றும் குழந்தை ஆகியோர் காயமடைந்ததுடன், பேரூந்தின் முன்பக்க கண்ணாடிகளும் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பேரூந்து - பேரூந்து நிலையத்தில் தரித்து நின்றிருந்த வேளை அங்கு வந்த சிலர் பேரூந்தில் துண்டுப்பிரசுரம் ஒட்டுவதற்கு முயற்றுள்ளனர். எனினும் அதனை சாரதியும் நடத்துனரும் அதற்கான …
-
- 0 replies
- 339 views
-
-
வடமாகாண சபையினர் கையாலாகாதவர்கள் என்பதனை மக்கள் மனதில் விதைக்க அரசாங்கம் முனைகிறது: மகிந்த அரசாங்கத்தை துகிலுரித்துக் காட்டும் விக்னேஸ்வரனின் வியத்தகு உரை:- வடமாகாணசபை முறையாக செயற்படுவதற்கு ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் ஒத்துழைத்துச் செயற்பட்டிருந்தால் வடமாகாணத் தமிழ்ப்பேசும் மக்களுக்கு உருப்படியான ஒரு அரசியல் சமிஞ்ஞையை வெளிக்காட்டியிருக்க முடியும் என நீதியரசரும் வடமாகாண முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வீரகேரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகனின் ஆசிரியர் தலையங்கத்தின் ஷஷதரிசனம்||; நூல்வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற போதே பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெர…
-
- 2 replies
- 1.5k views
-
-
பின்லேடன் படத்துடன் போராட்டம் நடத்த விட்டிருப்பார்களா? – மேற்குலகம் குறித்து ரம்புக்வெல புலம்பல். [sunday, 2014-03-16 18:36:24] ஜெனிவாவில் சில நாடுகளின் நடவடிக்கைகளை பார்க்கும் போது அந்நாடுகளின் இரட்டை நிலைப்பாடுகளை காணக்கூடியதாக உள்ளது என இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஒசாமா பின்லேடனைபோல் ஒரு பயங்கரவாதியாகவே பார்க்க வேண்டும். ஜெனிவாவில் விடுதலைப் புலிகளின் தலைவரின் படங்களை ஏந்தியவாறு தமிழர்கள், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை யாரும் எதிர்க்கவில்லை.இதே போன்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒசாமா பின் லேடனின் ஆதரவாளர்களினால் நடத்தப்பட்டிருந…
-
- 1 reply
- 452 views
-
-
அமெரிக்காவின் திருத்திப்பட்ட இரண்டாவது பிரேரணை சமர்ப்பிப்பு சொற்பதங்கள் வலுவுடையதாக மாற்றம்: சுமந்திரன் எம்.பி. ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள இரண்டாவது பிரேரணையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள பல்வேறு யோசனைகள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதுடன், சில சொற்பதங்கள் வலிமையாக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் வீரகேசரிக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் ஜெனீவாவிலிருந்து நேற்று தொடர்புகளை மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறுகையில், வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்கா திருத்தப்பட்ட தனது இரண்டாவது பிரேரணையினை சமர்ப்பித்திருந்தது. இந்தப் பிரேரணையில் நாம் வலியுறுத்தியமைக்கமைய பல விடயங்கள் சேர்த்த…
-
- 2 replies
- 949 views
-
-
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன் வைக்கப்படவுள்ள தீர்மானத்தின் இரண்டாவது வரைவு திட்டமிடப்பட்டபடி வெளியானது. இந்த வரைவு, இலங்கையில் நடந்த மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என் பதைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. முதலாவது வரைவில் திருப்தி யில்லை என்று தமிழர் தரப்பில் எழுப்பப்பட்ட கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் தூதர்களைக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரை யாடியபோது வலியுறுத்திய விடயங்களும் இரண்டாவது வரைவில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று ஜெனிவாவில் நிற்கும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.…
-
- 1 reply
- 429 views
-
-
-க.கிஷாந்தன் சிவனொளிபாதமலையிலுள்ள இரும்பு வேலிகளை அகற்றி அதற்கு பதிலாக நிர்மாணிக்கப்பட்ட தங்கம் முலாம் பூசப்பட்ட வேலிகள், பௌர்ணமி தினமான இன்று (16), சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தேரர் பெங்கமுவே தம்மதின்ன தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. தங்கம் முலாம் பூசப்பட்ட வேலிகள் நல்லதண்ணி, கல்பருக்ஷ விகாரையிலிருந்து சிவனொளிபாதமலை உச்சிக்கு யாத்திரிகர்கள் மூலமாகவும் பொலிஸார் மூலமாகவும் கொண்டுசென்று பொருத்தப்படும் நடவடிக்கைகள் கடந்த சில நாட்களில் நடைபெற்று முடிந்தன. இந்நிலையில், இந்த வேலிகளுக்கு கடந்த சில நாட்களாக விசேட பூஜைகள் இடம்பெற்றதோடு செங்கல் மற்றும் ஏனைய பொருட்களால் கட்டப்பட்ட மதில்களை அகற்றி கருங்கல் மூலம் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 422 views
-
-
அத்துமீறும் இந்திய மீனவர்கள் மீது இனிக் கடும் நடவடிக்கையாம்! – இலங்கை அரசு அறிவிப்பு. [sunday, 2014-03-16 18:13:12] இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசிக்கின்ற இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. மீன் பிடிப்பதற்காக வருகின்ற மீனவர்களை விட, அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளின் உரிமையாளர்களே இந்த அத்துமீறலுக்கு முக்கிய பொறுப்பு என்றும், அதனால், கைதுசெய்யப்படுகின்ற மீனவர்கள் சிறைகளில் தடுத்து வைத்து பின்னர் குறிப்பிட்ட காலத்தில் விடுதலை செய்கின்ற வேளையில், அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளைப் பறிமுதல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. இருநாட்டு மீனவர்க…
-
- 0 replies
- 272 views
-
-
அனைத்து முஸ்லிம் நாடுகளும் தமக்கே ஆதரவு என்கிறார் ஜனாதிபதி மஹிந்த! [sunday, 2014-03-16 08:46:42] உண்மையை உணர்ந்துள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் எமக்கு ஆதரவாகவே உள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். காலி நகரில் முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இலங்கையின் உண்மை நிலையை உணர்ந்துள்ள சகல முஸ்லிம் நாடுகளும் சர்வதேச ரீதியில் எமக்கெதிரான நெருக்குதல்களின் போது ஒன்றிணைந்து எமக்காக குரலெழுப்பி ஆதரவளித்து வருகின்றன. காலத்துக்குக் காலம் தமது தற்காலிக வெற்றி இலக்கைக் கருத்திற் கொண்டு சிலர் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவது இயல்பு. எனினும் தாய்நாட்டுக்கு எதிராக செயற்பட்டு மீண்டும் இந்த நாட்டை அழிவுக்குள்ளாக்குவதற்கு ஒருபோதும் எவருக்கும் இடமளிக்க முடியாது…
-
- 0 replies
- 274 views
-
-
கிழக்கில் முதலமைச்சர் பதவியைத் தராது போனால், ஆதரவை விலக்குவோம்! – ஹக்கீம் எச்சரிக்கை. [sunday, 2014-03-16 07:58:45] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கிழக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டால், கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவு வாபஸ் பெறப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எச்சரித்துள்ளார். கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை தலா இரண்டரை ஆண்டுகளுக்கு பகிர்ந்து கொள்வதென ஆளும்கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணங்கியிருந்தன.இதன்படி முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த ஒருவரும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவரும் முதலமைச்சராக பதவி வகிப்பார்கள் என …
-
- 0 replies
- 305 views
-
-
தெற்கு அரசியலுக்காக, வடக்கில் ஆயுதப்போராட்டத்தை உயிர்ப்பிக்க முனைகிறது அரசாங்கம்! – சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு. [sunday, 2014-03-16 07:51:41] இந்த அரசாங்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஆயுதப் போராட்டத்தையும் வலிந்து இழுக்கும் தேவை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா நகரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “ஜனநாயக ரீதியான போராட்டத்தை சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரியின் விடுதலைக்கு குரல் கொடுக்கவேண்டும் என நாம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின…
-
- 0 replies
- 244 views
-
-
இலங்கை நிலைமைகள் குறித்து சீனாவுக்குத் திருப்தியாம்! – தூதுவர் வூ ஜியான்வோ கூறுகிறார். [sunday, 2014-03-16 07:43:55] இலங்கையின் நிலைமைகள் திருப்திகரமானதாக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கையின் எல்லா பகுதிகளிலும் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளமை வெளிப்படையாக தெரிகிறது என்று சீனத் தூதுவர் வூ ஜியான்வோ தெரிவித்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.“கொழும்பை மட்டும் மையப்படுத்தி அபிவிருத்தி மேற்கொள்ளப்படவில்லை.பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்படுள்ளன. இலங்கை சிறந்த வேகத்தில் முன்னேற்றமடைந்து செல்கிறது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக …
-
- 0 replies
- 194 views
-
-
ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! – அரச, இராணுவத் தரப்புகள் ஏற்பாடு. [sunday, 2014-03-16 07:37:36] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அரச ஆதரவாளர்களாலும், இராணுவப் புலனாய்வாளர்களாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாணசபை உறுப்பினர் தர்மபால மற்றும் அந்தக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பி.சுமதிபால ஆகியோர் ஜெனிவா பிரேரணைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னின்று ஒழுங்கு செய்திருந்தார்கள்.இதில் பங்கேற்ற ஆண்களும் பெண்களும், அரசாங்கத்துக்கு ஆதரவாக…
-
- 0 replies
- 288 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மூலம், புதுடெல்லிக்கு அறிக்கை ஒன்றை கொடுத்தனுப்பியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிப்பது உறுதி என்ற போதிலும், கடைசி நேர முயற்சியாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மியான்மரில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசியிருந்தார். இதன் பின்னரே, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு பதிலளித்துள்ளது என்பது பற்றிய விபரங்களைப் பட்டியலிடும் விரிவான அறிக்கை ஒன்றை, சிறிலங்கா அதிபர் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இரண்டு நாள் பயணமாக புதுடெல்லி சென்றிருந்த பாதுகாப்புச் செயலர…
-
- 1 reply
- 299 views
-
-
ஹங்வெல்லவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொரளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரசாத் சிரிவர்தன ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வெட்டிய மரம் இவர் மீது விழுந்ததைத் தொடர்ந்து இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/103390-2014-03-16-07-42-48.html
-
- 0 replies
- 241 views
-