ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
வன்னியில் தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள வதை முகாம்களின் மிக மோசமான நிலை காரணமாக அங்கு மக்கள் மத்தியில் பதற்ற நிலை அதிகரித்து வருவதுடன், சிறிலங்காப் படையினருடன் முரண்பாடுகளும் ஏற்பட்டு வருகின்றன எனத் தெரிவித்திருக்கின்றனது மனித உரிமைகள் கண்காணிப்பகம். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 571 views
-
-
சிறிலங்காவுக்கு நன்மை ஏற்படக்கூடிய வகையிலும் நாட்டின் இறைமையை பாதுகாக்கும் விதத்திலும் வெளியுறவுக் கொள்கை அமையப்பெற வேண்டும் என மனித உரிமைகள் மற்றும் பேரிடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 364 views
-
-
வன்னித் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 306 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவிற்கு வழங்கிவரும் ஏற்றுமதிக்கான வரிச் சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 361 views
-
-
தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, முகாம் நிலை தொடர்பாக சுதந்திரமாக தகவல்களை அறிய அனுமதிக்கப்படுமா? [சனிக்கிழமை, 10 ஒக்ரோபர் 2009, 06:23 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] போருக்குப் பின்னர் இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து உண்மையைக் கண்டறிவதற்காக தி.மு.க. அணியைச் சேர்ந்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் இன்று சனிக்கிழமை கொழும்பு செல்கின்றனர். இருந்தபோதிலும், இவர்கள் வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கு அரசின் முக்கிய அமைச்சர்களுடனேயே அழைத்துச் செல்லப்படவிருப்பதாகவும் சுதந்திரமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் நம்பிக்கையான வட்டாரங்களில் இரு…
-
- 0 replies
- 607 views
-
-
பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி "..பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது..." தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாகி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி............ * அன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன. அன்றைய சமூக அமைப்பு…
-
- 0 replies
- 3.3k views
-
-
வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு எச்சரிக்கிறோம் – இயக்குநர் சீமான் [காணொளி]தமிழினத்தை இழிவுபடுத்திப் பேசிய சிறீலங்கா துணைத்தூதரை நாட்டை விட்டு வெளியேற்றா விட்டால் தமிழ் இன உணர்வாளர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று “நாம் தமிழர் இயக்கத்தின்’ தலைவர் நடிகர் சீமான் எச்சரித்துள்ளார். வீடியோ காண: http://www.meenagam.org/?p=12877 இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் தமிழர் இயக்கமே நேரடி நடவடிக்கையில் ஈடுபடும் என்று அதன் பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர். சென்னையில் உள்ள சிறீலங்கா துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இயக்குனர் சீமா…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தமிழர்களைப் பதிவு செய்வதற்கு சிறிலங்கா தரைப்படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையடுத்து வர்த்தகர்கள் பெரிதும் அச்சமடைந்திருக்கின்றார்கள். கொழும்பு நகரில் உள்ள கோட்டை, புறக்கோட்டை, கொம்பனி வீதி, வெள்ளவத்தை, ஆமர் வீதி, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி, தெகிவளை, கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் வர்த்தகத்தில் ஈடுபடும் தமிழர்களுக்கு படையினரால் இதற்கான பதிவு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமது வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை எதற்கான படையினருக்குக் கொடுக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பி இருக்கும் தமிழ் வர்த்தகர்கள், இது குறித்து வாழ்க்கை தொழில், தொழில்நுட்பப் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் முறைப…
-
- 0 replies
- 563 views
-
-
சிறிலங்காவின் தென்மாகாண சபைக்காக இன்று நடைபெறும் தேர்தலைத் தொடர்ந்து அரச தலைவர் பதவிக்கான தேர்தல் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு தான் விரும்புவதாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். பொதுத் தேர்தலை நடத்தி அரசியலமைப்பைத் திருத்துவதற்கு தேவையாகவுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கே தாம் விரும்புவதாகவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அவருக்கு நம்பிக்கையான சிலருடன் உரையாடும்போது கருத்து தெரிவித்திருக்கின்றார். அரச தலைவர் பதவியில் தொடந்திருப்பதற்கு தனக்கு மேலும் இரு வருடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ச, இந்தப் பதவிக்காலத்துக்குத் தொடர்ந்திருப்பதா அல்…
-
- 0 replies
- 571 views
-
-
போருக்குப் பின்னர் இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து உண்மையைக் கண்டறிவதற்காக தி.மு.க. அணியைச் சேர்ந்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் இன்று சனிக்கிழமை கொழும்பு செல்கின்றனர். இருந்தபோதிலும், இவர்கள் வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கு அரசின் முக்கிய அமைச்சர்களுடனேயே அழைத்துச் செல்லப்படவிருப்பதாகவும் சுதந்திரமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்திருக்கின்றது. வடபகுதியில் இந்தக் குழுவினர் மேற்கொள்ளவிருக்கும் பயணங்கள் அனைத்தும் அரசினால் 'வழிகாட்டப்படும்' பயணங்களாகவே இருக்கும். வவுனியா மு…
-
- 0 replies
- 571 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த சிங்களக் குடியேற்றவாசிகளை மீண்டும் அப்பகுதிகளில் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் மீள்குடியேற்றுவதற்கு சிறிலங்கா அரசு துரித ஏற்பாடுகளைச் செய்துவருகின்றது. சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் மோசமடைந்திருந்த காலப்பகுதியில் சுமார் 15 வருடங்களுக்குமுன்னர் மணலாறு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களையே மீளக் குடியேற்ற அரசு இப்போது தீர்மானித்துள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்படி 325 சிங்கள குடும்பங்கள் விரைவில் மீளக் குடியேற்றப்படவுள்ளன. மணலாறு பிரதேசத்தைச் சேர்ந்த கொன்னேவ, கம்பிலிவெவ, வெஹரவெவ, கொஹம்பகஸ்வ…
-
- 0 replies
- 706 views
-
-
சிறிலங்காவின் தென்மாகாண சபைக்கு இன்று நடைபெறவிருக்கும் தேர்தலில் காலி மாவட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டியிடும் மனுசா நாணயக்கார நேற்று மாலை இடம்பெற்ற படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றைத் தொடர்ந்து தமது ஆதரவாளர்களுடன் நேற்று மாலை வெள்ளிக்கிழமை வீடு திருப்பிக்கொண்டிருந்த போதே அவரது வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது. அவரது வாகனத்தின் மீதும் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. உந்துருளி ஒன்றில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகளே நாணயக்காரவின் வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்து அதன்…
-
- 0 replies
- 536 views
-
-
சிறிலங்கா அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் அங்கு பணிபுரிந்த ஐந்து மருத்துவர்களில் நான்கு மருத்துவர்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளையில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மருத்துவர்களில் மற்றொருவர் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வட மாகாணத்துக்கான மேலதிக மாகாணப் பணிப்பாளராக மருத்துவர் த.சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டிருக்கின்றார
-
- 1 reply
- 723 views
-
-
இயக்குநர் சீமான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது. முன்னதாக அவர் புதுக்கோட்டை மாரீஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், ’’தேசிய இனத்தின் அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தைத்தான் பிரபாகரன் நடத்திவந்தார்.அதைத்தான் நாங்களும் செய்து வருகிறோம். இனி போராடி பலனில்லை என்று சில அமைப்புகள் கொஞ்சம் அமைதி காக்கின்றன. ஆனால் நாம் தமிழர் இயக்கம் அமைதியாக இருக்காது. பொதுவாக நேற்று வரை நடந்து வந்த ஈழ போராட்டத்தில் இப்போது சிறிது இடைவெளி இருக்கு. இன்னும் நான்கு மாதங்கள் அல்லது நான்கு வருடங்களில் ஈழ போராட்டம் முன்…
-
- 70 replies
- 5.8k views
-
-
சொந்த விருப்பு வெறுப்புகளால் இந்திய நலனுக்கெதிராகச் செயல்பட்ட வெளியுறவுத்துறை - இந்திய ஆய்வாளர் Indian strategic analyst writes on 'lost leverage' [TamilNet, Friday, 09 October 2009, 11:58 GMT] “Today, India stands more marginalized than ever in Sri Lanka. Its natural constituency—the Tamils—feels not only betrayed, but also looks at India as a colluder in the bloodbath. India already had alienated the Sinhalese majority in the 1980s,” writes Professor Brahma Chellaney of the Centre for Policy Research, New Delhi, in a forthright article appeared in Forbes, Friday. Welcoming his admissions and responding to him, Tamil circles said that who ever now addresses the …
-
- 1 reply
- 759 views
-
-
சிறிலங்கா அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் அங்கு பணிபுரிந்த ஐந்து மருத்துவர்களில் நான்கு மருத்துவர்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 438 views
-
-
தென்மாகாண சபைக்கு சனிக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலில் காலி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டியிடும் மனுஷா நாணயக்கார நேற்று மாலை இடம்பெற்ற படுகொலை முயற்சி ஒன்றிலிருந்து மயிரிழையில் உயிர்தப்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 938 views
-
-
லண்டனில் அம்சா தனது வேலையை கன கச்சிதமாக செய்கிறார். பாகம் 1 http://www.yarl.com/forum3/index.php?showtopic=64833
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழ்நாட்டிலிருந்து ஒரு பாராளமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று இலங்கை சென்று இடைத் தங்கல் முகாம் எனப் படும் வதை முகாம்களைப் பார்வையிடவிருப்பதாக அறிந்து யாரும் மகிழ்ச்சி அடைய வில்லை. இப்படிப் பலர் செல்கிறார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை. வன்னி முகாம்களைப் பற்றி மோசமான தகவல்கள் வெளிவந்த போது தமிழ்நாட்டிலிருந்து ஒரு பார்ப்பன நாய் முகாமிற்கு சென்றுவிட்டு அங்கு முகாம்கள் சிறப்பாக நடப்பதாக மாபெரும் பொய்யை கூறியதை யாரும் மறக்கவில்லை. இப்போது மீண்டும் வன்னி முகாம்களைப் பற்றி மோசமான தகவல்கள் வெளிவருகின்றன. அண்மையில் வந்த செய்தி: குடிப்பதற்கு அல்லது குளிப்பதற்கு நீர் இல்லை. நாங்கள் இங்கு இறக்கப் போகிறோம். மெனிக் பார்ம் முகாம் எங்கிலும் எங்களை விடுவியுங்கள் என்ற பரித…
-
- 3 replies
- 1.5k views
-
-
இடம் பெயர்ந்தோருக்கான வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்களில், இரண்டு கால்களையும் இழந்த மாணவர் ஒருவர் யாழ். மருத்துவ பீடத்தில் இணைந்துள்ளதாகப் பல்லைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார். இந்த மாணவருக்கு யாழ். மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தனியான வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவருடன் இருந்து அவரது தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்
-
- 2 replies
- 1k views
-
-
சென்னை குரேம்பேட்டையில் கருணாநிதியைக் கண்டித்து சுவரொட்டி சென்னை குரேம்பேட்டை தொடர்வண்டி நிலையத்தில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைக் கண்டித்து ”தமிழர் பேரவை” என்ற அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சிக்கும் அச்சுவரொட்டியில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழினப் பகைவன் கருணாநிதியின் நச்சு அரசியலுக்கு சாவுமணி அடிப்போம்! கருணாநிதியே! தெலுங்கனாய்ப் பிறந்து தமிழனாய் நடித்து, உழைக்கும் மக்களைப் பிரித்தாளுகிறாய்! திராவிட அரசியலால் தமிழ் இனத்தைச் சீரழித்தாய்! ஆங்கிலவழிக் கல்வியால் தமிழை அழித்தாய்! பணத்தினால் வாக்குரிமையின் வலிமையை அழித்தாய்! தொலைக்காட்சியைத் தொடங்கிப் பண்…
-
- 1 reply
- 1.5k views
-
-
குடாநாட்டில் தொல்லியல் பகுதிகளாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள கேந்திர நிலையங்களை புனரமைத்தல் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளல் எனும் பேரில் குடா நாட்டில் உள்ள பெளத்த சின்னங்களை புனரமைத்தல் மற்றும் தொல்லியல் இடங்களை பெளத்தத்திற்கு சார்பாக மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு தேரோ ஒருவரை மகிந்த நியமித்துள்ளார். வரப்பிற்றிய ராகுல தேரர் என்பவர் இவ்வாறு நியமிக்கப்பட்டவர் ஆவார். பிரதேச செயலகத்தில் முதலாம் தர சமூகசேவைகள் அதிகாரியாகப் பணியாற்றிய தேரர், வடக்கில் சமூக சேவை அதிகாரியாக பணியாற்ற மகிந்தவிடம் விண்ணப்பித்திருந்தாகவும். மகிந்தவின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய அவர் வடக்கில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. யாழ். பிரதேச செயலக சமூக சேவைகள் அதிகாரியாக அவர் கடந…
-
- 1 reply
- 1.1k views
-
-
தேசபக்தி அயோக்கியர்களின் கடைசி முகமூடி:ஆழியூரான் அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்த சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் நடந்த இறுதி லீக் போட்டி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களாலும் பரபரப்பாக கவனிக்கப்பட்டது. காரணம், அதில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால்தான் இந்தியாவால் அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பைப் பெற முடியும். புள்ளிகள் அடிப்படையில் நடந்த போட்டியின் நிலைமை அவ்வாறு இருந்தது. அன்றைய தினத்தில் பெரும்பான்மையான இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானின் வெற்றிக்காக பாரதமாதாவை நெக்குருகி வேண்டிக் கொண்டிருந்தன. தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் ‘எப்படியாவது பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிடாதா?‘ என்று ஏங்கித் தவித்தார்கள். சென்ன…
-
- 2 replies
- 1.5k views
-
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை ஜனாதிபதியையோ இராணுவத்தினரையோர கொண்டுசெல்ல இயலாது. அரசியல் இலாபத்தை தேடிக்கொள்வதற்காகவே அரசாங்கம் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை பொதுமக்களிடையே பரப்பி வருகின்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். யுத்தத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு கடந்த முப்பது ஆண்டு காலமாக உயிர்தியாகம் செய்த இராணுவ வீரர்கள் இன்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அரசாங்கத்திற்கு எதிராகவோ, இராணுவத்தினருக்கு எதிராகவோ சர்வதேச மட்டத்தில் …
-
- 0 replies
- 641 views
-
-
வவுனியா, கோவில்குளம் சிவன் கோவிலில் தங்கவைக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய்மார்களின் குடும்பத்தினர்களைக் கொண்ட 300 பேருக்கு யாழ்ப்பாணம் செல்வதற்குப் நேற்று முன்தினம் (07) வவுனியா ஈரப்பெரியக்குளம் சோதனைச் சாவடியில் படையினர் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரியவருகிறது. யாழ்ப்பாணத்திலுள்ள தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான உரிய இராணுவத்தினரின் அனுமதியை எதிர்பார்த்து இவர்கள் கடந்த சில தினங்களாக வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கல்யாண மண்டபத்தில் தங்கியிருந்தனர். இவர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைப்பதற்காக நேற்றுமுன்தினம் காலை வவுனியா செயலக அதிகாரிகள் பஸ்களில் ஈரப்பெரியக்குளம் சோதனைச் சாவடிக்கு அழைத்துச்சென்ற போதிலும் இவர்களுகு;கான அனுமதி இன்னும் வந்து சேரவில்லை என்பதால் இ…
-
- 0 replies
- 797 views
-