ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு இந்திய நிறுவனங்கள் பல ஆர்வம் காட்டி வருகின்றன. சில நிறுவனங்கள் ஏற்கனவே தமக்கான இடங்களை அடையாளப்படுத்தி தமது திட்டங்களுக்கான அனுமதியையும் சிறிலங்கா அரசிடம் இருந்து பெற்றுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 398 views
-
-
இந்துசமுத்திரத்தில் கேந்திர நிலையங்களில் அமைந்துள்ள துறைமுகங்களில் ஒன்றான காங்கேசன் துறைமுகத்தை புதுப்பித்து அமைக்கும் பொறுப்பை இந்தியாவிடம் கையளிக்க இலங்கை அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. அதன் தொடக்கமாக துறைமுகம் எவ்வாறு புனருத்தாரணம் செய்யப்பட வேண்டும் என இலங்கை விரும்புகிறது, எதிர்பார்க்கிறது என்பது குறித்த நீண்ட அறிக்கையை இலங்கை துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகாரசபை திட்ட வரைவு ஒன்றை, விரிவான அறிக்கை ஒன்றை இந்தியாவிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை அண்மையில் கொழும்பிலுள்ள இந்தியத்தூதரக அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.1995 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளிடம் இருந்து அரச படைகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதிலிருந்து காங்கேசன்துறைமுகப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத…
-
- 0 replies
- 984 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் உருவாக்கத் திட்டமிடப்படும் எதிரணிக் கூட்டமைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் உள்ளடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 380 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான அறிக்கை இராஜாங்கத் திணைக்களத்தால் நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால், பணிகள் முடியாத காரணத்தால் திட்டமிட்டபடி அதனை நேற்று தாக்கல் செய்ய முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கையில் தமிழ் மக்களின் நிலைமைகளைப் பார்வையிட்டு வர தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அங்கு அனுப்பி வைக்குமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 544 views
-
-
சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அமெரிக்கா மீண்டும் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது. பொதுமக்கள் மத்தியில் இருந்து விடுதலைப் புலிகளை வடிகட்டும் நடவடிக்கைகளையும் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளையும் விரைவுபடுத்தினால் மக்களை முகாம்களில் தடுத்து வைக்க வேண்டி இருக்காது எனவும் அது சுட்டிக்காட்டி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 547 views
-
-
கனேடியப் பிரஜையான இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவரின் விடுதலைக்காக கனேடிய அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று தெரிய வருகிறது. கனேடியப் பிரஜையான ஆர்.துஸியந்தன் (வயது 35) என்கின்ற கணினி தொழில்நுட்ப நிபுணர், கடந்த ஐந்து மாத காலமாக அவசரகாலச் சட்டத்தின் கீழ் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி கொழும்பில் வைத்து சிவில் உடையில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவால் வலுக்கட்டாயமாக வாகனமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்டார் என்றும், சுமார் 5 மணித்தியாலங்களின் பின்னர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கனேடியப் பிரஜையான துஷியந்தனின் விடயத்தில் கனேடிய அரசு தலையிட வேண்டுமென கன…
-
- 0 replies
- 603 views
-
-
ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பிலிப் அல்ஸ்டனை இலங்கைக்கு வரவழைப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை. அவர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு எவ்விதமான நம்பிக்கையும் கிடையாது என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுத்த வேண்டுகோள்களை இலங்கை அரசாங்கம் அலட்சியம் செய்துவிட்டது என்று ஐ.நா.வின் விசேட நிபுணர் பேராசிரியர் பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் சிவில் யுத்தத்தின் இறுதி மாதங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் பல சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கென இலங்கைக்…
-
- 0 replies
- 873 views
-
-
மேற்குலக நாடுகளுக்கு சிறிலங்காப் பொருட்களை விற்பனை செய்வதற்கான ஏற்றுமதி வரிச் சலுகையை (ஜி.எஸ்.பி. பிளஸ்) நீக்க வேண்டாம் என்று கொழும்பு கத்தோலிக்க பேராயர் மல்கொல்ம் றஞ்சித் ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளானர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 466 views
-
-
சிறிலங்காவில் 5 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யச் சென்றிருக்கும் தமிழக வேளாண் விஞ்ஞானி முருகேச பூபதியும், அவருக்கான பதிலும் வடக்கின் வசந்தம் திட்டத்துக்காக சிறிலங்கா சென்றுள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருகேச பூபதியின் பேட்டியும் அவருக்கான சில பதில்களையும் எழுத்தாளர் மாதவி கொடுத்துள்ளார். தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ப.முருகேச பூபதி அவர்களிடம் 22.09.2009 தினமலர் நாழிதழ் எடுத்த பேட்டியில் இருந்து : “இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஐந்து லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்வது தொடர்பான ஆய்வு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் அடிப்படையில், அந்நாட்டுக்கு நவீன வேளாண் கருவிகள், விதை ரகங்கள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசால் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட திசநாயகத்துக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பெரும் ஆதரவுக்குரல் எழவில்லை என தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான 'தினமணி' சாடியுள்ளது. இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அந்த நாளேட்டில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் வருமாறு: இலங்கைப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் என்பவருக்கு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு, ஆசிய மனித உரிமைக் கழகம் கண்டனம் தெரிவித்தது. உலகப் பத்திரிகை தினத்தன்று பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த இலங்கைத் தமிழரின் பெயரையும் குறிப்பிட்டு, உலகம் முழுவதும் பத்திரிகைகளின் வாய்மூட ந…
-
- 0 replies
- 628 views
-
-
ஈழத் தமிழர்கள் மீதான அவலங்கள் நீடித்தால் இலங்கையில் தொழில் முதலீடு செய்யமாட்டோம் என்று இந்திய மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 392 views
-
-
சிறிலங்கா துணைப் படைக் குழுவின் தலைவர்களில் ஒருவரான கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகம் நாளை மறுநாள் அக்கரைப்பற்றில் திறக்கப்படவிருக்கும் நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்றுவரும் தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களால் அம்பாறை மாவட்டத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று காவல்துறை நிலையத்துக்கு அருகிலேயே முதலமைச்சரின் உப அலுவலகத்தை திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிராக கடந்த சில வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டமையால் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நாளை மறுநாள் இதனைத் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் உண்ணாநிலைப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. க…
-
- 0 replies
- 559 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறிலங்காவில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தம்மை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளையில், இவர்கள் பல்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் இவர்களை அரசியல் கைதிகளாக நடத்த முடியாது என நீதித்துறை பிரதி அமைச்சர் வி.புத்திரசிகாமணி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். வெலிக்கடை சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள 266 கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றை அண்மையில் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து அவர்கள் அரசிடம் கையளித்துள்ள மனுவில் தம்மை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தார்க…
-
- 0 replies
- 496 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் எனச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெரும்தொகையான தமிழ் இளைஞர்கள் விசாரணைகள் எதுவும் இன்றி பல வருட காலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர்களுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 508 views
-
-
இலங்கைப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் என்பவருக்கு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு, ஆசிய மனித உரிமைக் கழகம் கண்டனம் தெரிவித்தது. உலகப் பத்திரிகை தினத்தன்று பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த இலங்கைத் தமிழரின் பெயரையும் குறிப்பிட்டு, உலகம் முழுவதும் பத்திரிகைகளின் வாய்மூட நடத்தப்படும் அத்துமீறல்கள் குறித்துப் பேசினார். இந்தியாவில் சில பத்திரிகைகள் தலையங்கம் எழுதின. அத்தோடு முடிந்துபோனது. அவர் செய்த குற்றம் என்ன? இலங்கை அரசைக் கண்டித்து "நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு' என்ற ஆங்கில இதழில், அவர் கட்டுரை எழுதியதுதான் மிகப் பெரிய குற்றம். இதற்காக 2008 மார்ச் மாதம் கைத…
-
- 0 replies
- 829 views
-
-
இந்தியாவின் நெறிப்படுத்தலுடனும் பல்வேறு உலக நாடுகளின் யுத்த வளங்களுடனும் சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதும் அந்த யுத்த களத்திலிருந்து தப்பிப் பிழைத்த தமிழீழ மக்களின் அவலங்கள் 120 நாட்கள் கடந்த நிலையிலும் தீர்ந்தபாடில்லை. முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த அவலங்களிலிருந்து மீள வகையின்றித் தவிக்கும் 300000 தமிழர்கள் இன்று வதை முகாம்களுக்குள் வைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்படு
-
- 0 replies
- 749 views
-
-
தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு ...அன்று நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது. "இனவிடுதலைப் போராட்டம்" என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும்போதுதான் விடுதலைக்கான மக்கள் புரட்சியும் அதன்மூலமான விடுதலையும் சாத்தியப்பட…
-
- 3 replies
- 3.2k views
-
-
http://www.thedipaar.com/news/news.php?id=...mp;cat=articles
-
- 1 reply
- 699 views
-
-
சிறிலங்காவுடன் இந்திய வர்த்தக உறவு வலுக்கிறது சிறிலங்காவுடன் இந்திய தொழில், வர்த்தக நிறுவனங்களின் உறவு வலுத்து வருகிறது. சிறிலங்காவில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் பலவற்றுக்கு சிறிலங்கா அரசின் ஒப்புதலை இந்திய நிறுவனங்கள் பெற்றுவிட்டன. எஞ்சிய திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திட்டங்களைத் தீட்டத் தொடங்கியிருக்கின்றன. லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள பல மாடி வர்த்தக வளாகம் கட்டும் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. இத்தகவலை சிறிலங்கா முதலீட்டு வாரிய இயக்குநர் சி. இக்னேஷியஸ் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் ஏற்கெனவே மேற்கொண்டுள்ள இதே போன்ற திட்டப்பணி அடுத்த ஆண்டில…
-
- 0 replies
- 535 views
-
-
ஈழத்தமிழர் பிரச்சினையை திசைதிருப்ப கருணாநிதி முயற்சி: பழ.நெடுமாறன் உயிருக்கு ஆபத்து என்று கூறி ஈழத்தமிழர் பிரச்னையை முதல்வர் கருணாநிதி திசைதிருப்ப முயல்கிறார் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஏதிலி முகாம்களில் வதைபடும் 3 லட்சம் இலங்கைத் தமிழர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் “உயிருக்கு ஆபத்து’ என்று ஓலமிடும் முதல்வர் கருணாநிதியின் செயலால் உலகத் தமிழர்கள் வேதனை அடைந்துள்ளனர். அதனை சுட்டிக்காட்டியதற்காக என் மீது பாய்கிறார். குண்டர் சட்டத்தைக் காட்டி மிரட்டுகிறார். தமிழர்களின் வெறுப்புக்கும், கோபத்துக்கும் ஆளாகும் போதெல்லாம் தனது உயிருக்…
-
- 0 replies
- 452 views
-
-
நல்லவேளையாக கருணாநிதி இன்டர்நெட் காலத்தில் கடிதத்தை புறா காலில் கட்டி அனுப்பவில்லை – தேமுதிக அவைத்தலைவர் தே.மு.தி.கவின் 5ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி சென்னையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இலங்கை தமிழர்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார். தமிழகத்தில் இன்றைக்கு இலஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. பஸ் டிரைவர் வேலைக்கு ரூ.2.50 லட்சம் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கையில் கடைசியாக 56 ஆயிரம் தமிழர்கள் சிறீலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டனர். இதை மத்திய அரசும், தமிழக முதல்வரும் கண்டுகொள்ளவில்லை. இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றால் அவர்கள் …
-
- 1 reply
- 1k views
-
-
http://www.thedipaar.com/news/news.php?id=...mp;cat=articles
-
- 0 replies
- 776 views
-
-
27.09.2009 அன்று யேர்மனியில் நடைபெறவிருந்த தடையுடைப்போம் எழிச்சிப் பேரணி தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதனை மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம். இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்; http://www.eeladhesam.com/index.php?option...n&Itemid=50 நன்றி ஈழதேசம்.கொம் யேர்மனி கிளை
-
- 1 reply
- 844 views
-
-
வடக்கின் வசந்தம் என்ற பெயரில் மகிந்த அரசு சில திட்டங்களை வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதற்கமைய ஆனையிறவு ரயில் நிலையத்தை நவீன மயப்படுத்தும் திட்டம் ஒன்றும் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டத்தின் கட்டுமான பணிகளுக்காக பாடசாலை மாணவர்களிடம் இருந்தும் நிதி சேகரிக்கப்படுகிறது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நிதி சேகரிப்பு எதிர்பார்த்ததை விட வரவேற்புப் பெற்றிருப்பதாகவும், இப்போது 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை சேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனையிறவு ரயில் நிலையத் திட்டத்துக்கு நிதியுதவி வழங்க விரும்பும் மாணவர்கள் குறைந்த பட்சமாக 2 ரூபா செலுத்தலாம் எனக் கூறியுள்ள கல்வி அமைச்சு இந்த நிதி பங்களிப்பில் வட மாகாண மாணவர்கள் தவிர்…
-
- 3 replies
- 1.7k views
-