ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
கடந்த ஞாயிறு முதல் இச்சடலங்கள் கரையொதுங்கத் தொடங்கியது முதல் நேற்று வியாழக்கிழமை வரை ஏழு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை புங்குடுதீவுக் கரையில் ஒரு சடலமும், திங்கட்கிழமை, எழுவை தீவுக்கடற்கரையில் ஒரு சடலமும், புதன்கிழமை காலை நெடுந்தீவில் ஒரு சடலமும், மாலை மண்கும்பானில் ஒரு சடலமும் கரையொதுங்கின. நேற்று வியாழக்கிழமை காலை புங்குடுதீவுக் கரையில் ஒரு சடலமும், நெடுந்தீவுக் கரையில் ஒரு சடலமும் கரையொதுங்கின. இதேவேளை புங்குடுதீவிலும், எழுவைதீவிலும் கரையொதுங்கிய இரண்டு சடலங்களும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுடையவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. புங்குடுதீவில் கரையொதுங்கிய சடலம் செந்தில்குமார் நடராஜா என்பவரது என்றும் எழுவை தீவில் கரையொதுங்கிய சடலம் கணேஷ…
-
- 1 reply
- 467 views
-
-
இடம்பெயர்ந்தோர் முகாமில் உள்ள விடுதலைப்புலிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டம் – சொல்கிறது சிறிலங்கா புலனாய்வுத்துறை வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் திட்டமொன்று குறித்த தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள், முகாம்களில் உள்ள புலிகளின் உறுப்பினர்களை பல வழிகளின் மூலம் தாம் வசிக்கும் நாடுகளுக்கு அழைப்பிற்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. விடுதலைப்புலிகளும் படையினருக்கும் இட…
-
- 0 replies
- 688 views
-
-
கிழக்கு மாகாண பட்டதாரிகள் தனிநாடு கோரவில்லை எனவும் தாம் பெற்ற கல்வி தகுதிக்கு ஏற்ற தொழில் வாய்ப்புகளை கோருவதாகவும் ஜே.வீ.பீயின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பனருமான அனுரகுமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் ஆயிரத்து 700 பேர் கடந்த 22 நாட்களாக மட்டக்களப்பு நகரில் தொடர்பு உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கம் இது குறித்து இதுவரை உரிய கவனத்தை செலுத்தாமையானது பாரிய பிரச்சினையாகும். 22 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள பட்டதாரி இளைஞர் யுவதிகள் தனிநாடு கேட்கவில்லை. தாம் பெற்ற…
-
- 0 replies
- 531 views
-
-
இஸ்ரேலிய அரசாங்கம், இலங்கை கடற்படையினருக்கு வழங்கியுள்ள சார் ரக யுத்த கப்பல்களில் கப்ரியல் கடல் ஏவுகணைகளை பொருத்த இலங்கை கடற்படையினர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படையில் முதல் முறையாக இலங்கை கடற்படையில் ஏவுகணை முதல் முறையாக சேர்த்துக் கொள்ளப்பட உள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. விடுதலைப்புலிகள் இலங்கைக்கு கூலிப் படையினர் அடங்கிய கப்பல் ஒன்றை அனுப்பி வைக்க இடமிருப்பதால், நாட்டின் கடற்பகுதியை பாதுகாப்பதற்காக இந்த அதி தொழிற்நுட்பத்தை கொண்ட ஏவுகணைகள் கடற்படையினருக்கு தேவைப்பட்டதாகவும் இந்த கப்ரியல் ஏவுகணை மூலம் கப்பல் ஒன்றை அழிக்க முடியும் எனவும் கடற்படைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இலங்கை கடற்படையினரிடம் ஏவுகணைகள் இருந்த ப…
-
- 0 replies
- 503 views
-
-
யாழ் மாவட்ட மாநகரசபைத் தேர்தலில் ஆளும் ஐ.முன்னணி அரசு வெல்லும் அல்லது வெல்ல வைக்கப்படும் என அரசில் அங்கம் வகிப்பவரும் ஈபிடிபி அமைப்பின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா சுமார் 2 ஆயிரம் பேர் முன்னிலையில் உரையாற்றும் போது கூறியதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இன்றைய தினம் யாழ் நகரில் அமைந்துள்ள சுரேஸ் பிரேமச்சந்திரனின் அலுவலகத்தில் ஊடகவிலாளர் மகாநாடு ஒன்று இடம்பெற்றது. இந்தத் தேர்தலை ஜனநாயக தேர்தலாகக் கருத முடியாதெனவும் அரசு எவ்வாறாயினும் மோசடிகள் மூலம் இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டி வருவதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினாhர். தமிழ்ச் தேசி…
-
- 0 replies
- 390 views
-
-
தமிழ்நாடு செய்தியாளர் நமணன் 24/07/2009, 11:57 தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் - சீமான் சீற்றம் இலங்கையின் வடக்கு கிழக்கில் சிங்களவர்களை குடியேற்றுவதை, இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் வலியுறுத்திள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்கள் சுமார் மூன்றரை இலட்சம் பேரை முள்வேலிக்குள் அடைத்து வைத்துவிட்டு, சிங்களவர்களை அந்தப் பகுதியில் குடியமர்த்த சிறீலங்கா அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே தமிழர்களை குடியமர்த்த இருப்பதாகக் கூறிவரும் சிறீலங்கா அரசு, தமிழர் தாயகத்தில் சிங்களவர்களை குடியமர்த்தி வருவதாகத் தெரிவித்தா…
-
- 0 replies
- 549 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 24/07/2009, 11:55 அரச வைப்பகங்களிடம் இருந்து அரசு 18.5 பில்லியன் கடன் பெற்றுள்ளது சிறீலங்கா அரசு இரண்டு முக்கிய அரச வைப்பகங்களிடம் இருந்து 18.5 பில்லியன் கடன் பெற்றிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மிக மோசமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஜனவரி மாதம், இந்தக் கடன் பெறப்பட்டிருப்பதாக, துணை நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். இனவாதக் கட்சியான ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிறேமசிறி மானகே, நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை வைப்பகத்திடம் இருந்து 11.79 பில்லியனும், மக்கள் வைப்பகத்திடம் இருந்து 6.7 பில்லியனும் கடனாகப் பெறப…
-
- 0 replies
- 423 views
-
-
ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்துவந்த துரோகத்தை இந்தியா தொடரப்போகின்றதா? திகதி: 24.07.2009 // தமிழீழம் போர் நிறைவு பெற்றுவிட்டால் அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு தொடர்பாகவே அதிக அக்கறைகள் காண்பிக்கப்படுவதுண்டு. ஆனால் சிறீலங்காவில் நடைபெறுபவை மறுதலையானவை. இறுதிக்கட்ட கடும் சமரில் 25,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், 20,000 இற்கு மேற்பட்ட மக்கள் ஊனமடைந்தும், 50,000 இற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் உள்ளதுடன், ஏறத்தாள மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட தடை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். உலகின் ஜனநாயகம் தொடர்பாக கூச்சலிடும் எந்த ஒரு சக்தியும் இந்த மக்கள் தொடர்பாக காத்திரமான ஒரு நடவடிக்கையை இதுவரையில் மேற்கொள்ளவில்லை. வன்னியின் 15,…
-
- 0 replies
- 347 views
-
-
தமிழ்நாடு செய்தியாளர் நமணன் 24/07/2009, 11:39 பெங்களுர் வானூர்தி நிலையத்தில் ஈழத்தமிழர் கைது இந்தியாவின் பெங்களுர் வானூர்தி நிலையம் ஊடாகப் போலியான கடவுச்சீட்டு. மற்றும் வதிவிட அனுமதி என்பவற்றுடன் பயணிக்க முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் காலை லண்டன் புறப்பட இருந்த வானூர்தியில் பயணிக்க முயன்றபோது கைது செய்யப்பட்ட நபர், தனது பெயர் மாங்குடி கணபதி என விசாரணையின்போது தெரிவித்துள்ளார். இருப்பினும் 33 அகவையுடைய குறிப்பிட்ட நபரது பெயர் ரத்னா நிக்கொல்சன் என பின்னர் தெரிய வந்துள்ளதாக, இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இவர் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து தமிழ்நாட்டில் தஞ்சம் கோரிய பின்னர் வேலூரில் வசித்து வந்திருப்பதாகவ…
-
- 0 replies
- 395 views
-
-
தமிழீழ விடுதலையை நோக்கி... (२4-००7-२००9) அன்புக்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் பேசும் உள்ளங்களே! தமிழீழ விடுதலைப் போராட்டம் இதுவரை காலமும் கொடியதொரு பாதையில் பயணித்து, தற்போது அதள பாதாளத்தில் யாருமற்ற அநாதையாக கிடக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு கடைசிவரை நம்பிக்கையாக, தூணாக, உறுதுணையாக இருந்த ஆணிவேர் தமிழீழ தேசியத் தலைவர் அதிமேதகு வே.பிரபாகரன் தற்போது ....! ஆனால் தங்களை தமிழ் மக்களது பிரதிநிதிகளாக காட்ட அரசி்ன் கைப்பொம்மைகளான சில தமிழ் கட்சிகள் நம்மில் கலந்திருக்கின்றனர். அவர்களை பிரித்தறிந்து எங்கள் சுயநிர்ணய உரிமைக்காய் அறவழியில் எங்களை நாங்கள் வெளிக்கொணர வேண்டும். வரும் வடக்கின் தேர்தல்கள் எங்கள் எதிர்காலத்திற்கு பெரியளவில் நிர்ணய தன்மை கொண்டிராதுவிட்டால…
-
- 1 reply
- 984 views
-
-
முகாம்களில் இருப்பவர்களை வெளியில் எடுக்க முயல்வோரின் கவனத்திற்கு வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள் பணம்பெற்றுக்கொண்டு வெளியேற அனுமதிக்கும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதை நாம் அறிவோம். இவ்வாறு செட்டிக்குளம் தடுப்புமுகாமில் இருந்து இரண்டு தமிழர்கள் சில தினங்களுக்கு முன்னர் வெளியேவந்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பாக கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்தவேளை, அங்கு வந்த புலனாய்வுத் துறையினர் அவர்களை கைதுசெய்துள்ள சம்பவத்தை சிலர் அறிந்திருக்கக்கூடும். இதன் பின்ணணியில் விடுவித்த பாதுகாப்பு அதிகாரிகளே சம்மந்தப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது செட்டிக்குளம் முகாமில் பணத்தைவாங்கிக் கொண்டு விடுவிப்பதுபோல விடுவித்துவிட்டு பின்னர் அவர…
-
- 1 reply
- 888 views
-
-
அவுஸ்திரேலிய அனைத்து மத குழுவின் ஏற்பாட்டில் 'விடியலிற்கான நம்பிக்கை' எனும் அனைத்து மத பிரார்த்தனைக் கூட்டம் நாளை மெல்பேர்ணில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. மெல்பேர்ண் சென். பற்றிக்ஸ் கதற்ரல் தேவாலயத்தில் நாளை சனிக்கிழமை பிற்பகல் 1:45 நிமிடமளவில் இந்நகழ்வு நடைபெறும் என்று அவுஸ்திரேலிய அனைத்து மத குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரலாற்றின் இருண்டகாலப் பகுதியின் ஊடாகப் பயணிக்கும் தமிழ் இனத்தின் ஒற்றுமைக்காகவும், சுபீட்சத்துக்காகவும் இடம்பெறும் இந்த நிகழ்வில் இந்து சமய மற்றும் கிறிஸ்தவ சமயப் பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளன. நிகழ்வில் அவுஸ்திரேலிய மதத்தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் மற்றும் …
-
- 1 reply
- 369 views
-
-
அனைத்துலக செய்தி நிறுவனமான அசோசியேட்டற் பிறசின் (ஏபி) கொழும்புச் செய்தியாளர் ரவி நெஸ்மானின் விசாவை நீடிக்க மறுத்ததற்கு சிறிலங்கா அரசு நம்பத்தகுந்த காரணங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று எல்லைகளற்ற ஊடக அமைப்பு கேட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 229 views
-
-
http://www.expressbuzz.com/edition/story.a...=rSY%7C6QYp3kQ=
-
- 1 reply
- 866 views
-
-
சிறிலங்காவிற்கு இரஷ்யா 5 இலட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவி UNHCR சிறிலங்காவில் அமுல்படுத்தவுள்ள மனிதாபிமானத் திட்டங்களிற்கான நிதித்தேவையில் 5 லட்சம் அமெரிக்க டொலர்களை ரஷ்யா அரசு பங்களிப்புச் செய்ய முன்வந்துள்ளது. இலங்கையில் தற்போதுள்ள மனிதாபிமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கெனத் திட்டமிடப்படுகின்ற இந்த செயற்பாடுகளில் தமது பங்களிப்பும் சேர்வதால் அரசும், இலங்கை மக்களும் இதனால் பலனடைவார்கள் என எதிர்பார்ப்பதாக ரஷ்ய அரசு கூறியுள்ளது. இந்த விவரங்கள் ஜெனீவாவிலுள்ள ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவரும் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியுமான டாக்டர் தயன் ஜெயதிலகாவுடன் தொடர்புகொண்ட ஐ.நா வுக்கான ரஷ்ய தூதுவரும் ரஷ்யாவின் நிரந்தர பிரதிநிதியுமான வலெரி லொச்சினினால் வழங்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 487 views
-
-
அப்போதைய அரசின் தேவைகளுக்காகவே தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர, குற்றப் புலனாய்வுத்துறையினர் தனது இந்தத் தொடர்புகள் பற்றியே தன்னிடம் நேற்று விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். குற்றப் புலனாய்வுத்துறைக்கு நேற்று வியாழக்கிழமை அழைக்கப்பட்ட மங்கள சமரவீர, அங்கு வைத்து நீண்ட நேரம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். அவரிடம் இருந்து விரிவான வாக்குமூலம் ஒன்றையும் காவல்துறையினர் பெற்றுக்கொண்டனர். இந்த விசாரணைகளின் முடிவில் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை மங்கள சமரவீர தெரிவித்தார். தன்மீதான விசாரணைகள் தொடர்பாக அங்கு…
-
- 0 replies
- 374 views
-
-
யாழ்ப்பாண மாவட்டக்கடற்கரைகளில் இனி சுற்றுலா செல்ல முடியுமாம் Post-LTTE, Jaffna beaches get ready for tourists Colombo, July 22 (IANS) For decades it lay at the heart of Sri Lanka’s Tamil conflict. Now that the Tamil Tigers have been crushed, Jaffna’s once tranquil beaches are getting ready for tourists from far and wide. The Tamil residents of Jaffna peninsula, in the island’s very northern tip, are hoping that the beaches would badly revive their battered economy and improve their own living standards. Sri Lankan officials are brimming with confidence. They feel that Jaffna’s beaches, once opened, would be a valuable addition to local and foreign…
-
- 0 replies
- 781 views
-
-
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான பிரதான வீதியான ஏ-9 வீதி பொதுமக்களின் பாவனைக்காகத் திறக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்தபோதிலும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு போக்குவரத்துச் சபை பேருந்துகளோ அல்லது தனியார்துறை வாகனங்களோ பயணம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு இதுவரையில் அனுமதி வழங்கவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வருபவர்களுக்கான அனுமதி மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லவிரும்புபவர்கள் தொடர்ந்தும் வானூர்திச் சேவையை அல்லது கப்பல் சேவையைத்தான் பயன்படுத்த வேண்டும் என சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் உதய நாயணக்கார தெரிவித்திருக்கின்றார். பாதுகாப்பு அமைச்சின் அனும…
-
- 0 replies
- 371 views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீளக்குடியமர்த்துவதற்காக சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அந்நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம அனைத்துலக சமூகத்துக்கு நேற்று விளக்கிக் கூறியுள்ளார். தாய்லாந்தில் நடைபெறும் 'ஏசியன்' அமைப்பின் பிராந்திய மாநாட்டில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய அமைச்சர் ரோகித போகல்லாகம, போரினால் இடம்பெயர்ந்திருக்கும் 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களையும் மீளக்குடியேற்றுவதுதான் சிறிலங்கா அரசின் முன்பாகவுள்ள முன்னுரிமை கொடுக்கப்படும் விவகாரமாகவுள்ளது எனத் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் வாழ்விடங்களுக்குத் திரும்ப வேண்டும் என்பதும், அவர்களின் வழம…
-
- 0 replies
- 276 views
-
-
சிறிலங்கா இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 1,815 பேருக்கு பொது மன்னிப்பை வழங்கி அவர்களை மீண்டும் இராணுவச் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது. வெலிக்கடைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 296 views
-
-
யாழ்ப்பாண மாநகர சபைக்கு அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தல் பணிகளுக்காக சிறிலங்காவின் தென்பகுதியில் இருந்து 80 சிங்கள தேர்தல் அதிகாரிகளை அனுப்பிவைப்பதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதன் மூலம் தேர்தலில் மோசடிகள் இடம்பெறக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதாகவும் எச்சரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. யாழ். மாநகர சபைக்கான தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணத்திலேயே தேவையானளவு தேர்தல் அதிகாரிகள் உள்ளதாகத் தெரிவித்த ச…
-
- 0 replies
- 340 views
-
-
செய்தியாளர் மயூரன் 22/07/2009, 13:46 காலி மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுப் படுகொலை காலி மாவட்ட மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினருமான துஷ்யந்த செனவிரத்ன இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை உந்துருளியில் வந்த ஆயுததாரிகளே பெலகஹா சந்தையில் வைத்தே இவர் சுட்டுக்கொல்லபட்டுள்ளார். தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற வழியில் பிள்ளைகளுக்கு வணிக நிலையம் ஒன்றில் உணவை வாங்க வாகனத்தை விட்டு இறங்கிய போதே அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பதிவு
-
- 1 reply
- 426 views
-
-
பாகிஸ்தான் சிறையிலுள்ள இந்தியர்களைக் கருத்தில் எடுப்பதுபோல தம்மை இந்தியா கருத்தில் எடுப்பதில்லை – சிறிலங்கா சிறையிலுள்ள இந்தியர்கள் இலங்கையில் பல ஆண்டுகளாக இந்திய வம்சாவழியி மக்கள் சிலர் சிறைவைக்கப்பட்டுள்ளமை வெளியுலகிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களில் சிலர் 16 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எந்தக்குற்றமும் இளைக்காத இவர்கள் ஏன் சிறையில் இருக்கிறார்கள் என்பது அரசுக்கே தெரியாது. தமது கோரிக்கைகளையோ முறைப்பாடுகளையோ காதில் வாங்கிக் கொள்ளாத இந்திய அதிகாரிகளைக் குறை சொல்கின்ற, இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் தமக்கான மனிதாபிமான வழிமுறைகளைக் கண்டுபிடிக்கும் முனைப்பில் தற்போது உள்ளார்க…
-
- 1 reply
- 450 views
-
-
யப்பானிய நிகழ்ச்சியொன்றில் இந்திய அமைச்சரிடம் தமிழுணர்வாளர்கள் ஈழம் பற்றி கேள்வி யப்பான் டோக்கியாவில் இந்திய தூதரக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்தியாவின் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனிடம் அங்குள்ள தமிழுணர்வாளர்கள் அருள் மற்றும் பாலமுருகன் ஆகியோர் ஈழமக்கள் பிரச்சினை பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்கள் எழுப்பிய கேள்வி பதில்கள்: கேள்வி: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தி.மு.க ஈழத்தமிழர் நலனுக்காக நாங்களும் பாடுபடுவோம் தனி ஈழம் அமைய பாடுபடுவோம் என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால் தேர்தலுக்கு பிறகு அதைப்பற்றி பேசவே இல்லையே அது ஏன்? தயாநிதிமாறன்: “நாங்கள் எதுவும் செய்யாமல் இல்லை, இப்போது கூட மத்திய அரசு மூலமாக 500 கோடி கொடுத்துள்ளோம் என்றார்.” கேள்வி: போரி…
-
- 1 reply
- 1k views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள பிரதான நகரான காலி மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் துசாந்த செனிவிரட்ன சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கோரிக்கை விடுத்துள்ளது. தென்மாகாண சபைக்கு விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலைப் பொறுத்தவரையில் இந்தப் படுகொலை ஒரு பாரிய அச்சுறுத்தலாகவே இருக்கப்போகின்றது என ஐ.தே.க.வின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்த்தன நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயதான துசாந்த செனிவிரட்னவையே தென்மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக ஐ.தே.க. தெரிவுசெய்திருந்…
-
- 0 replies
- 311 views
-