ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
கொழும்பு காலி முகத்திடலில் முப்படைகளின் பங்கேற்புடன் சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் தின ஓட்டம்! Published By: Digital Desk 1 07 Mar, 2026 | 03:14 PM சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் தின நினைவு சாலை ஓட்டம் - 2026, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் வழிகாட்டுதலின் கீழ், பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு கவுன்சில் மற்றும் இலங்கை கடற்படையின் ஒருங்கிணைப்பிலும், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவின் தலைமையிலும், சனிக்கிழமை (07) காலை கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் வெற்றிகரமாக நடைபெற்றது. சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் பிரான்சில் 1948 பெப்ரவரி 18 ஆம் திகதி நிறுவப்பட்டதுடன், இது மாநிலங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்கவும், விளையாட…
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான் சாகசக் கண்காட்சி ஆரம்பத்தில் ஜனாதிபதி பங்கேற்பு Published By: Vishnu 07 Mar, 2026 | 05:27 AM இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் ரத்மலானை, இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விமானப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி, வான் சாகசங்களையும் கண்டுகளித்தார். விமானப்படை அருங்காட்சியகத்தில் ஜனாதிபதி சிறப்பு நினைவுக் குறிப்பை இட்டதுடன், இந்நிகழ்…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
சாய்ந்தமருதில் மூழ்கிய பாரிய மீன்பிடிப் படகு! Mar 6, 2026 - 10:00 AM அம்பாறை, கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில், இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. இச்சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த படகு கடற்கரை ஓரமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த போதிலும், எதிர்பாராத விதமாக இயந்திரம் மற்றும் வலைகளுடன் கடலில் மூழ்கியுள்ளது. சாய்ந்தமருதைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான இந்தப் படகில் இருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரம் மற்றும் வலைகள் சேதமடைந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. -அம்பாறை நிருபர்…
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும் யாழ். இராணுவ படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானிக்கவில்லை - பாதுகாப்பு பிரதி அமைச்சர் 06 Mar, 2026 | 02:18 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யானது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிப்பின் போது சகல விடயங்களும் விரிவாக ஆராயப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்ததன் பின்னரே காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்த…
-
-
- 1 reply
- 192 views
- 1 follower
-
-
இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணம் அதிகரிப்பு: பெப்ரவரி மாதத்தில் 729 மில்லியன் டொலர் வரவு! இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களிடமிருந்து 729 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது கடந்த 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் (548.1 மில்லியன் டொலர்) ஒப்பிடுகையில் 180.9 மில்லியன் அமெரிக்க டொலர் அல்லது சுமார் 33 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஜனவரி மாதத்தில் 751.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகப் பதிவாகியிருந்தது. அதனுடன் ஒப்பி…
-
- 0 replies
- 101 views
-
-
அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் - சுஜீவ சேனசிங்க 06 Mar, 2026 | 05:17 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.அமெரிக்காவின் செயற்பாடுகள் இலங்கைக்கும் அச்சுறுத்தலாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஈரான் கப்பல் விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட க…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்! Mar 2, 2026 - 09:51 AM இந்த அரசாங்கத்தினால் சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு விசாரணையை நடத்தினால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விடயமாக இருக்கட்டும், பொறுப்பு கூறல் விடயமாக இருக்கட்டும் நிரந்தரமான ஒரு தீர்வை அரசு வழங்கக் கூடியதாக இருக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மொட்டு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டுக் கட்சியாக அல்லது கூட்டணியாக இலங்கை தமிழரசு கட்சி செல்லும் என்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திற்குட்பட்ட ரமேஷ்புரம், கணபதி நகர், ஐயன்கேணி ஆகிய அறநெறி பாடசாலைகளில் க…
-
- 0 replies
- 82 views
- 1 follower
-
-
இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான் கப்பல் விவகாரத்தில் சாமர சம்பத் தஸநாயக்க சாடல்! 06 Mar, 2026 | 03:47 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இந்தியாவின் அழைப்பில் வந்த ஈரான் கப்பலை இந்தியா நினைத்தால், அங்கு நிறுத்தி வைத்திருக்கலாம். இந்தியாவுக்கு அதற்கான உரிமை இருந்தது. ஆனால் இந்தியா, அதனை எமது பக்கம் திருப்பிவிட்டு, தப்பித்துக்கொண்டுள்ளது. அதனால் அரசாங்கம் யாரையும் அதிகம் நம்பி செயற்படக்கூடாது என எதிர்க்கட்சி உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்தக்கு நீடித்துக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங…
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை கடற்பரப்பு கண்காணிக்கப்படுகிறது ; உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர 06 Mar, 2026 | 06:37 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை கடற்பரப்பில் மார்ச் 2ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இந்த அரசாங்கம் முழுமையாக செயற்படுத்துகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இந்த அரசாங்கம் முழுமையாக செயற்படுத்துகிறது பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்…
-
- 2 replies
- 164 views
- 1 follower
-
-
ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்! 07 Mar, 2026 | 11:09 AM இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையின் வசம் உள்ள ஈரானிய மாலுமிகளை மீண்டும் ஈரான் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கையைக் கோரியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு அப்பால் உள்ள சர்வதேசக் கடற்பரப்பில் ஈரானுக்குச் சொந்தமான 'ஐரிஸ் டெனா' என்ற போர்க்கப்பல் மூழ்கியது. அதிலிருந்து மீட்கப்பட்ட மாலுமிகள் மற்றும் தற்போது இலங்கையின் பொறுப்பில் உள்ள 'ஐரிஸ் புஷெர்' என்ற மற்றொரு ஈரானியக் கப்பலின் பணியாளர்கள் ஆகியோரை மீண்டும் ஈரானுக்கு அனுப்பக் கூடாது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக …
-
-
- 4 replies
- 215 views
- 1 follower
-
-
ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் Published By: Vishnu 06 Mar, 2026 | 08:18 PM சர்வதேச ரீதியில் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்களைக் கண்டித்து, கொழும்பு தேவட்டகா பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 'பாலஸ்தீனத்தின் நண்பர்கள்' (Friends of Free Palestine) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இலங்கைக்கான ஈரானிய தூதுவர் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்
-
-
- 3 replies
- 245 views
- 1 follower
-
-
சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை - 19 பேர் கைது 06 Mar, 2026 | 05:55 PM சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்காக உள்ளூர் கடல் பகுதிகளில் கடந்த பெப்ரவரி 16 முதல் 28 வரை கடற்படையினர் எடுத்த நடவடிக்கைகளில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உரிமம் இல்லாமல் சுழியோடி மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், 2 டிங்கிகள், 3 படகுகள் மற்றும் 7 பாரம்பரிய படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கிழக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகளால் திருகோணமலை கதிரவேளி, கோட்பே, கோகிலாய், மூதூர், நோர்வே தீவு மற்றும் மன்னார் தால்பாடு மற்றும் இ…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் 4 பெண்கள் கைது Published By: Digital Desk 3 06 Mar, 2026 | 05:06 PM மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டு திட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதன்கிழமை (04) இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண் உட்பட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்தையும் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர் நேற்று வியாழக்கிழமை (05) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் படி, வீட்டிலிருந்து தாலிக்கொடி, சங்கிலி, காப்பு உள்ளிட்ட சுமார் 15 பவுன…
-
- 0 replies
- 111 views
- 1 follower
-
-
உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் Published By: Digital Desk 3 06 Mar, 2026 | 10:43 AM மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேலிய படைகளுக்கிடையில் தீவிரமடைந்து வரும் போர் காரணமாக, உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிரடியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதன் நேரடித் தாக்கம் இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச காப்புறுதி நிறுவனங்களான கார்ட், ஸ்கல்ட், மற்றும் லண்டன் பி&ஐ கிளப் போன்றவை பாரசீக வளைகுடா பிராந்தியத்திற்கான 'போர் கால இடர் காப்புறுதியை' மார்ச் மாதம் 05 ஆம் திகதி முதல் இரத்து ச…
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத் குற்றச்சாட்டு Published By: Vishnu 06 Mar, 2026 | 06:05 AM (க.சிவலிங்கமூர்த்தி) நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே அமைந்துள்ளன என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில்; கடந்த காலங்களில் மக்கள் எரிவாயுவுக்காக நீண்ட வரிசைகளில் நின்றன…
-
- 1 reply
- 138 views
- 1 follower
-
-
இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரான் கடற்படை கப்பல் : 208 கப்பற் பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை Published By: Vishnu 06 Mar, 2026 | 06:57 AM இலங்கையின் கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரானிய கடற்படை கப்பலான IRIS Bushehr-இல் பணியாற்றியிருந்த 208 கப்பற் பணியாளர்களையும் இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கை கடற்படையினரின் தகவலின்படி, இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ஏற்பட்ட அவசர நிலையைத் தொடர்ந்து குறித்த ஈரானிய கடற்படை கப்பலில் இருந்த அனைத்து 208 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கப்பலில் இருந்த பணியாளர்கள் தற்போது கொழும்பு நோக்கி கர…
-
- 14 replies
- 754 views
- 1 follower
-
-
மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே Mar 5, 2026 - 08:16 PM தற்போது தடுப்புக்காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக இன்று (05) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பெயரிடப்பட்டுள்ளார். அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளின் கீழ் சுரேஷ் சலேயை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்க…
-
- 3 replies
- 229 views
- 1 follower
-
-
குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம். குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் “ஆலயத்திற்குச் சென்ற பயணிகள் படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த படகில் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் உடனடியாக ஈடுபட்டுள்ளனர். இதில் மூன்று பேர் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மே…
-
- 4 replies
- 270 views
- 1 follower
-
-
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்! Published By: Digital Desk 1 06 Mar, 2026 | 10:52 AM இலங்கை மின்சார சபையின் செயல்பாடுகள் மற்றும் கடமைகளைத் தனித்தனியாகப் பிரித்து, ஆறு துணை நிறுவனங்களை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது அதன்படி, மின்சார உற்பத்தி, கடத்தல் (Transmission), விநியோகம் மற்றும் கட்டமைப்பு செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் வகையில் ஆறு தனித்தனி துணை நிறுவனங்கள் உருவாக்கப்படவுள்ளன. சில குறிப்பிட்ட சரத்துக்களைத் தவிர, 2024ஆம் ஆண்டின் 3…
-
-
- 7 replies
- 326 views
- 1 follower
-
-
வடக்கில் கால்நடை விவசாயத்திற்கு ‘மௌனப் பேரழிவு’ – எம்.பி. அடைக்கலநாதன் Published By: Vishnu 06 Mar, 2026 | 05:39 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு 'மௌனப் பேரழிவு' தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக, கடந்த 48 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் ஆடுகள் கோழிகள் உயிரிழந்துள்ளன. இது வெறும் விலங்குகளின் இழப்பு மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கிராமியப் பொருளாதாரத்தின் முழுமையான வீழ்ச்சியாகும். என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இல் விச…
-
- 0 replies
- 87 views
- 1 follower
-
-
ஜனாதிபதி விசேட ஊடகவியலாளர் சந்திப்பு : மத்திய கிழக்கு மோதலில் நடுநிலை – நிலம், கடல், வான்வழி பயன்பாட்டிற்கு அனுமதி இல்லை Published By: Vishnu 06 Mar, 2026 | 05:08 AM தற்போதைய மத்திய கிழக்கு மோதலின் போதும் சர்வதேச ரீதியிலான எந்தவொரு மோதல்களின் போதும் நாம் நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டிலே இருந்தோம். எமது நிலம், எமது கடற்பரப்பு, எமது வான் பரப்பு என்பவற்றை மோதல்களின் போது எந்த வகையிலும் எந்தவொரு நாட்டிற்கும் சார்பாகவோ எந்தவொரு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலோ பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். மோதல் ஆரம்பமான சந்தர்ப்பம் முதல் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் எமது அறிவிப்புகள் என்பன எமது நிலைப்பாட்டிற்குட்பட்டதாகவே முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையிலே இர…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
தமிழ் இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு பற்றி ஆராய்ந்து நீதியை நிலைநாட்டுக - சிறிதரன் Published By: Vishnu 06 Mar, 2026 | 04:14 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யுத்தம் முடிவடைந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியிடம் பல தமிழ் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. அந்த குழந்தைகளுக் கு என்ன நேர்ந்தது. ஊடகவியலாளர் இசைப்பிரியா உட்பட பல தமிழ் பெண்கள் பகிரங்கமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை. இந்த அரசாங்கம் கடந்த கால ஊழல் மோசடிகள், படுகொலைகள் பற்றி ஆராய்வதை போன்று தமிழ் இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு பற்றி ஆராய்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என இலங்…
-
- 0 replies
- 66 views
- 1 follower
-
-
சுரேஷ் சலே வழங்கிய ஆயுதங்கள் குறித்து விசாரணை செய்க - சாணக்கியன் எம்.பி வலியுறுத்தல்! 05 Mar, 2026 | 05:19 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கிழக்கு மாகாணத்தில் புலனாய்வு பிரிவு ஊடாக சேவையாற்றிய போது இஸ்லாமிக் சென்டர் அமைப்புக்கு வழங்கிய ஆயுதங்கள் மற்றும் பிற்பட்ட காலங்களில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அமர்வின் போத…
-
- 1 reply
- 169 views
- 1 follower
-
-
கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் - இதுதான் காரணம் 05 Mar, 2026 | 06:42 PM மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல், தப்பிச் சென்றுள்ளது. அந்த வாகனத்தை துரத்திச் செல்லும் முயற்சியில், பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் வைத்து, வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டபோது 6600 மில்லி கிராம் ஹெரோயினுடன் வாகன சாரதி மற்றும் உதவியாளர் என இருவர் புதன்கிழமை (4) கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு 10.30 மணியளவில் கரடியனாறு கித்துள் பகுதியில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி மண் ஏற்றிக்கொண்டு பயணித்த கனரக வாகன…
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல கடமையேற்பு Published By: Digital Desk 3 05 Mar, 2026 | 05:07 PM வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல இன்று வியாழக்கிழமை (05) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் மற்றும் திட்டமிட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குதல் ஆகிய பணிகளுக்காக விசேட அதிரடிப்படையுடன் இணைந்து செயற்படும் இந்த விசேட பிரிவுக்கு அவர் தலைமை தாங்கவுள்ளார். வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல கடமையேற்பு
-
- 0 replies
- 90 views
- 1 follower
-