ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
புதுக்குடியிருப்பில் வான் குண்டுத்தாக்குதல்: 4 பேர் பலி- 10 பேர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 03:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று நடத்திய மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். [2 ஆம் இணைப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு] புதுக்குடியிருப்பு நகர மையத்தில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உள்ளடங்கலான பகுதிகள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9:50 மணியளவில் குண்டுத்தாக்குதலை நடத்தின…
-
- 0 replies
- 633 views
-
-
சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்கள் என்ன வடிவில் உலா வந்தாலும் எமது கடற்கரும்புலிகள் உடைப்பார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 906 views
-
-
இத்தாலி பொங்கு தமிழ் நிகழ்வினை குழப்ப சிறிலங்கா தூதரகம் முயற்சி [ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 08:00 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] இத்தாலியில் நடைபெறும் பொங்கு தமிழ் நிகழ்வினை குழப்பும் முயற்சியில் அந்நாட்டில் உள்ள சிறிலங்காத் தூதரகம் ஈடுபட்டுள்ளது. இத்தாலி மிலானோ நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வினை குழப்பும் முயற்சியிலேயே சிறிலங்கா தூதரகத்துடன் இணைந்து அங்கு வாழும் சிங்களவர்களும் ஈடுபட்டுள்ளனர். முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்படும் இந்நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியினை இறக்கச் செய்யுமாறு இத்தாலிய காவல்துறையினரிடம் சிறிலங்கா தூதரகத்தினரும், சிங்களவர்களும் முறையிட்டுள்ளனர். அவர்களின் முறைப்பாட்டினை பொங்கு தமி…
-
- 0 replies
- 926 views
-
-
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நேற்று அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் தமிழர்கள் அணிதிரண்ட பொங்கு தமிழ் நிகழ்வு பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 773 views
-
-
-
சிறீலங்கா படையின் வான்வழித் தாக்குதலில் 2 பொதுமக்கள் பலி: 5 பேர் காயம் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான யுத்த விமானங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் குடியிருப்பு மீது கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் இருபொதுமக்கள் கொல்லப்பட்டும் நான்கு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. -பதிவு
-
- 4 replies
- 1.1k views
-
-
குமாரபுரம் பாடசாலை மீது சிறிலங்கா வான் படை குண்டுத்தாக்குதல். மாணவர்கள் தெய்வாதினமாக உயிர் தப்பினர் SLAF fighter jets bomb preschool in Kumarapuram [TamilNet, Sunday, 15 June 2008, 05:48 GMT] Two Sri Lanka Air Force (SLAF) Kfir fighter jets, in four sorties, bombed the Kaaththaan preschool area in Kumarapuram, Paranthan in Ki’linochchi Saturday around 1:10 p.m when the school children, teachers and parents were gathered for the school’s sports meet to begin, sources in Ki’linochchi said. 35 children, 2 teachers and the parents narrowly escaped death in the bombing which caused damage to the school building and ten houses, the sources added. The children, teach…
-
- 0 replies
- 918 views
-
-
யாழை நோக்கி புலிகள் பாரிய நடவடிக்கை: புலனாய்வுத் தகவலால் உயர் விழிப்பு நிலையில் படையினர் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 09:21 மு.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் நோக்குடன் எதிர்வரும் 19 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்துள்ள தகவலை அடுத்து குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படைகள் முழுநேர உயர் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் கல்முனை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்குச் சென்ற குடாநாட்டு மீனவர்களிடம் விடுதலைப் புலிகள் இத்தகவலை தெரிவித்து, இழப்புக்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் குடாநாட்டின் க…
-
- 1 reply
- 1.5k views
-
-
அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களின் எரிபொருள் செலவிற்காக இந்த வருடம் 1163 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் பாதுகாப்பு படையினரின் எரிபொருள் செலவீனங்களுக்காக 750 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில் சேவைக்காக 270 கோடி ரூபாவும், எஞ்சிய 150 கோடி ரூபாக அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் எரிபொருள் செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் என்பவற்றினால் சுமார் 10,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக நிதியமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 901 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது. நாட்டின் சமகால அரசியல் போக்கில் ஐக்கிய தேசியக் கட்சித்தலைவரால் தனித்து நின்று போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலையிருப்பதாகச் சுட்டிக்காட்டும் அரசியல் தரப்புகள், அதன்காரணமாக அவர் சந்திரிகாவுடனும், மங்கள சமரவீரவுடனும் இணைந்து புதிய கூட்டணியை அமைக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கின்றன. அதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பிரசாரங்களில் ஈடுபடுவார் எனவும், அவரது வருகை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பலமாக அ…
-
- 0 replies
- 797 views
-
-
வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கு தேர்தலை நடத்த 40 கோடி ரூபா செலவாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து கொடுப்பனவுகள், கடமையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான ஊதியம், எரிபொருள் கொடுப்பனவு உட்பட அனைத்து செலவினங்களுக்காகவும் இந்த பணம் செலவிடப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் 20 கோடி ரூபா செலவானதுடன் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு 6 கோடி ரூபா செலவானதாகவும் தேர்தல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதே வேளை வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து இலங்கை 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுள்ளது இதற்கிடையில், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் தாம் கவனம் செலுத்த…
-
- 0 replies
- 677 views
-
-
தொடக்கத்தில் மடு மீதும் பின்னர் மன்னாரில் அடம்பன் பிரதேசத்தின் மீதும் இருந்த படையினரின் தீவிர கவனம் இப்போது மணலாறு போர் அரங்கை நோக்கித் திரும்பியிருக்கிறது. மணலாறு போர் அரங்கில் படைத்தரப்பு தமது உச்சகட்ட படைவலுவைப் பயன்படுத்தி முன்னேளறும் நடவக்ககைளை ஆரம்பிரத்ததிருக்கிறது. இதையடுத்து 'மணலாறு' 'மரணஆறு' ஆக மாறிவருகிறது. கடந்த வாரம் சிங்கள நாளிதழான தினமினவுக்கு அளித்த பேட்டியொன்றில் பிரபாகரன் ஒளிந்திருக்கும் முல்லைத்தீவை படையினர் நான்கு முனைகளில் நெருங்கி வருகின்றனர். இன்னும் 21 கி.மீ. தூரத்துக்கு முன்னெறிச் சென்றால் படையினர் இறுதி இலக்கை அடைந்துவடுவர். அத்;துடன் பதுங்குகுழியில் ஒளிந்திருக்கும் பிரபாகரனை படையினர் பிடித்து விடவார்;' என்று சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்…
-
- 2 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் புலிகள் வலிந்த தாக்குதலை நடத்தத் திட்டமிட் டிருப்பதால், குடாநாட்டில் பாதுகாப்பு நடை முறைகளை இறுக்கமாகப் பேணவுள்ளதாக யாழ். படைகளின் கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி அறிவித்துள்ளார். கடந்த புதனன்று பலாலியில் உள்ள யாழ். படைத் தலைமையகத்தில், குடாநாட்டில் இருந்து வெளியாகும் நாளிதழ்களின் ஆசிரிய பீடப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தச் சந்திப்பின்போது குடாநாட்டின் பாது காப்பு நடைமுறைகள் எந்தளவுக்கு இறுக்கப் படவுள்ளன என்பது குறித்தும் அவர் விவரித் திருந்தார். ஊரடங்குச் சட்டம் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறைப் படுத்தப்படும். இதற்கு முன்னர் இரவு 9 மணி முதல் அதிகாலை 4.30 மண…
-
- 6 replies
- 1.9k views
-
-
கண்டி, கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் சிங்கள இனவெறியரசின் மாணவர்கள் மீதான அட்டூழியங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. பெராதெனிய, மொறட்டுவ பல்கலைக் கழகத்திற் கல்வி கற்கும் மாணவர்கள் தொடர்ந்தும் இராணுவ மற்றும் காவற்துறையினரின் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றார்கள். பல்கலைக் கழக மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு செல்லும் இரணுவத்தினரும், காவற்துறையினரும் சந்தேகத்தின் பேரிலான கைது, விசாரணைக்காக அழைத்துச் செல்லுதல் என்று கூறி தமிழ் மாணவர்களை தொடர்ந்தும் கைது செய்து வருவதோடு அவர்கள் மீதான தாக்குதல்களையும் நடாத்தி வருகின்றனர். பல்கலைக் கழக மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு இரவு வேளையில் செல்லும் இராணுவ உடை தரித்தவர்களும், அவர்களுடன் செல்லும் சில சிங்கள காடைக்கும…
-
- 0 replies
- 977 views
-
-
வெளியுறவு ஆணையாளர்: Benita.Ferrero-Waldner@ec.europa.eu துணை வெளியுறவு ஆணையாளார்: Joao-Luis.Aguiar-Machado@ec.europa.eu வெளியுறவுச் செயளாளர்: Helen-C- P.Campbell@ec.europa.eu சர்வதேச வர்த்தக ஆணையாளர்: Peter.Mandelson@ec.europa.eu ஏனைய உறுப்பினர்கள்: Julian.Wilson@ec.europa.eu Catriona.Carmody@ec.europa.eu, Peter.Power@ec.europa.eu, Michael.Jennings@ec.europa.eu, Peter.Hill@ec.europa.eu
-
- 5 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் கருத்துக்களில் இருவேறுபட்ட நிலைப்பாடுகள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 637 views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 886 views
-
-
எட்டுக் கோடித் தமிழர்களும் குரல்கொடுத்தால், தமிழீழத்தை உலகம் அங்கீகரிக்கும் என, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் கூறியுள்ளார். இன்று பொங்கு தமிழாக, டென்மார்க் மண்ணில் அணிதிரண்ட புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகளை நோக்கி, தமிழீழ தாயகத்தில் இருந்து காணொளி நேரஞ்சல் வடிவில் உரையாற்றிய, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கி, தமிழீழ தனியரசுக்கு அங்கீகாரம் பெற்று , விடுதலையை வென்றெடுப்பதற்கான பொறுப்பு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களையே சார்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கும் வாழும் எட்டுக் கோடி தமிழ் மக்களும், தமிழீழ விடுதலைக்காக ஒருமித்துக் குரல்கொடுக்கும் பட்சத்தில், அதற்கு செவிசாய்த்து தமிழீழ தனிய…
-
- 2 replies
- 1k views
-
-
இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்காததன் விளைவாகவே இலங்கை இனப்பிரச்சினை இழுபடுவதாக வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜீ தெரிவித்தார். பெங்களுரில் வாழும் கலை அமைப்பின் சர்வதேச மத்திய நிலையத்தில் வைத்து விரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கி செவ்வியின் ஒரு பகுதி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை தற்போது கூட நாம் சந்தித்துப் பேசுவதற்கு விருப்பம் கொண்டுள்ளோம். அவருடன் நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்ளவே விரும்புகிறோம். இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு வெறுமனே அரசியல் ரீதியான அனுகுமுறை மூலம் தீர்வு கண்டு விட முடியாது. தீர்வை நோக்கிய பயணத்தில் மனமாற்றமும் பரஸ்பர நம்பிக்கையும் உறுதியான அடித்தளமாக அமைவதன் மூலமே இலகுவாக வெற்றியை நோக்கி பய…
-
- 0 replies
- 796 views
-
-
பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன் நிபந்தனையாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று மஹிந்த கோரியிருப்பது நடைமுறைச்சாத்தியமானது அல்ல. ஆயுத மோதல் ஒன்றில் சம்பந்தபட்டுள்ள எந்வொரு தரப்பும் ஆயுதங்களைக் கைவிடுவது என்பதும் சரணடைவது என்பதும் நடைமுறையில் ஒன்றேதான். என த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்று உறுப்பினர் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது : ஆயுத மோதல் ஒன்றில் ஈடுபட்டு வந்திருக்கும் போராட்ட அமைப்பு ஒன்று ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு போனதாக வரலாறு கிடையாது. இலங்கை இனப்பிரச்சினைக்கு ஆயதங்கள் மூலம் தீர்வு காண முடியாது என்பதை கடந்த இருபத்தைந்து வருடகால வரலாறு நிரூபித்து நிற்கின…
-
- 0 replies
- 775 views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 577 views
-
-
சிறிலங்காவிற்கான வர்த்தக ஏற்றுமதிச் சலுகையான ஜிபிஎஸ் பிளஸ் உடன்பாட்டை நீடிப்புச் செய்வதற்கு உதவுமாறு பிரித்தானியாவிடம் ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மன்றாட்டமாக கேட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 500 views
-
-
வடபோர் அரங்கில் போர் முனைப்பு தீவிரமடைந்திருக்கும் இவ்வேளையில் தென்னிலங்கையிலும் அரசியல் போர் உக்கிரமடைகிறது. "தேசத்துரோகி' நாமத்தை எவர் நெற்றியில் ஒட்டலாமென்கிற பெரும் போரொன்றை ஆளும் தரப்பும் எதிர்த் தரப்பும் கட்டவிழ்த்து விட்டுள்ளன. படையினருக்கு ஏற்படும் இழப்புக்களை தமது அரசியல் இலாபத்திற்காக எதிர்க்கட்சியினர் பயன்படுத்துவதாக விசனமடையும் அதிகாரத் தரப்பின?ன் கோபத்திலும் சில உண்மைகள் பொதிந்திருக்கின்றன. ஆயினும் துரோகிப் பட்டம் சுமத்தும்போது அதைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலை ஏனைய பெரும்பான்மையினக் கட்சிகள் பெற்றிருக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம். தமிழ் ஊடகத்துறை நசுக்கப்படும்போது மௌனம் காத்த பேரினவாத எதிர்க்கட்சிகள், ஒட்டுமொத்த ஊடகத்திற்கும் அரசாங்…
-
- 0 replies
- 503 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் கொலைப் பட்டியலில் மேலும் 27 ஊடகவியலாளர்களின் பெயர்கள் உள்ளதாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகத்துறை உரிமைகளுக்கான பேச்சாளருமான தயாசீலி ஜெயசேகர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 530 views
-
-
இந்த ஆண்டுக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களின் பொருட்டு அரசாங்கம் வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் திரட்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வருடாந்த கடன் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் முன்னணி சர்வதேச வங்கிகளிடமிருந்து இலங்கை இந்தக் கடன் தொகையைத் திரட்டியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான விடயங்களுக்கே இந்த நிதி செலவிடப்படவுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் தாம…
-
- 4 replies
- 911 views
-