ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பின் பாதுகாப்பை என்றுமில்லாதவாறு அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியத்திற்கு தேவை அனுதாபங்களல்ல... -தாரகா (தாயகம்)- சமீபத்தில் விடுதலைப் புலிகளின் அசியல்துறைத் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் சிறிலங்கா விமானப் படையின் தாக்குதலொன்றில் தற்செயலாக கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகளின் அதிர்ச்சி வைத்தியமான அனுராதபுரத் தாக்குதலால் நிலை குலைந்து போன சிறிலங்காவின் ஆளும் பிரிவினர், தமிழ்ச்செல்வன் அவர்கள் மீதான தாக்குதலை தமது நீண்டநாள் தாக்குதல் நகர்வுகளுக்கு கிடைத்த வெற்றியென கொண்டாடினர். தமது ஆட்சியை தக்க வைப்பதற்கு இராணுவ வெற்றிகளை மட்டுமே நம்பியிருக்கும் மகிந்த அணியினர், தமிழ்ச்செல்வன் அவர்களது மறைவை பெரியளவில் கொண்டாடியதில் நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தமிழ்ச்செல்வன் அவர்களது இழப்பு த…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளின் செயற்பாடுகளுக்குப் பயந்து நாம் ஒருபோதும் அடங்கிவிடமாட்டோம் அரசாங்கம் அறிவிப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயந்து, நாம் ஒருபோதும் அடங்கிவிடமாட்டோம். அவர்களை அழித்து, ஒழிக்கும் படை நடவடிக்கை தொடரும். அதுவரை நாம் ஓயமாட்டோம். இந்த நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியுடன் இருக்கின்றது என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார் தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற திடீர் தேடுதல் வேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழ். குடாநாட்டில் இரு பாடசாலை மாணவர்களை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 875 views
-
-
வட தமிழீழத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சிறீலங்காச் சிங்கள அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள தமிழினப் படுகொலையின் ஓரங்கமாக அப்பாவி மாணவச் செல்வங்களினதும் பொதுமக்களினதும் உயிர்கள் பறிக்கப்பட்டது குறித்து வன்னி மக்கள் தங்கள் எதிர்ப்பையும் கண்டனங்களையும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் சர்வதேச சமூகத்துக்குச் சொல்லிக் கொண்டுள்ளனர். வன்னியில் அரச தொழிலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அரச பயங்கரவாதத்தின் கொடூர செயலால் மரணித்த அப்பாவி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செய்யும் வகையில் இன்று கறுப்புப்பட்டி அணிந்து பணிகளுக்கும் பாடசாலைகளுக்கும் சென்றனர்..! வன்னி மக்களின் எதிர்ப்பின் ஒரு பகுதி இங்கே.. இவர்கள் சிறீலங்காவின் கொடிய பயங்கரவாதிகளான மகிந்த மற்றும் கோத்…
-
- 0 replies
- 968 views
-
-
தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், இரங்கல் கூட்டங்கள் நடத்துவதற்கு தமிழ்நாடு காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை நீதிமன்றில் பெரியார் திராவிடர் கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய நிதி சேகரித்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை அமெரிக்கா தடை செய்து விட்டது என்று பெருமை பேசுவதில் எந்தப்பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. அமெரிக்காவைப் போன்று இங்கும் புலிகள் இயக்கத்தையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையும் உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என ஜே.வி.பி உறுப்பினர் விமல் வீரவன்ஸ நேற்று நடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றம் நேற்றுக் காலை கூடிய போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்குகள் மற்றும் அதனோடு தொடர்புடைய குழுகளின் செயற்பாடுகள் என்பனவற்றை ஐக்கிய அமெரிக்கா தடை செய்து முடக்கி வைத்ததுள்ளது. அதற்காக …
-
- 10 replies
- 2.9k views
-
-
தேசியப் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சு மூலமாக தீர்வு எட்டப்படும் வரை புலிகளால் ஒருபோதும் தன்னைக் கொலை செய்யவே முடியாது என்றும், புலிகள் தன்னைக் கொலை செய்ய மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றியளிக்காது என்றும் அமைச்சன் டக்கிளசு நேற்று கூறினார். டக்ளஸ் நேற்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துத் தம்மை கொலை செய்ய மேற்கொள்ளபட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் முயற்சி தொடர்பாக விளக்கினர். அப்போதே அவர் மேற்கண்டவர்று கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் :- இன்று புதன்கிழமை நான் மக்களைச் சந்த்த்த அவர்களின் குறை நிறை??? களைக் கேட்டறியும் நாளடாகும். இந்தத் தினத்தில் நான் நிச்சயம் அமைச்சில் இருப்பேன் என்று புலிகளுக்குத் தெரியும். அதே போல நான் கால…
-
- 12 replies
- 4.8k views
-
-
நுகேகொட பிரதேசத்தில் தற்போழுது குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் விரைவில் ஜானா
-
- 49 replies
- 8.6k views
-
-
பாகிஸ்தானை விட இலங்கையிலேயே அதிகளவில் மனித உரிமை மீறல்கள் 30.11.2007 / நிருபர் குளக்கோட்டன் பாகிஸ்தானை விட அதிகளவிலான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெறுவதனால் இதனை பொதுநலவாய அமைப்பு கவனத்தில் எடுக்க வேண்டுமென கம்பஹா மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரஸ்தாபிக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகளை பயங்கரவாதியென அரசாங்கம் முத்திரை குத்துவதுடன் ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றதெனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்மகாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 981 views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களால் படுகொலை செய்யப்படும் தமிழ் மக்களுக்கு இரங்கல் தெரிவிக்க மறுத்த சிறிலங்கா நாடாளுமன்றம் கொழும்பு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோருக்கு இன்று இரங்கல் தெரிவித்து தனது பேரினவாத வெறியை வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
கொள்ளுப்பிட்டியில் குண்டு ஒன்று வெடித்ததாக தகவல் ஒன்று கொழும்பிலிருந்து வந்துள்ளது? உண்மையா? மேலதிக தகவல்கள் தெரியவில்லை.
-
- 11 replies
- 2.7k views
-
-
"ஈழத்தமிழருக்கு இந்தியா துரோகம்-தமிழகம் பொறுத்துக்கொள்ளாது" திருப்பூர் மாநாட்டில் வைகோ முழக்கம் உலகில் முதலில் தோன்றிய மொழி எது என்று கேட்டால் அது தமிழ்தான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். என்று பிறந்தது என்று அறிய முடியாத தமிழ் மிகுந்த பாரம்பரியத்தைப் பெற்றிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கான வரலாற்றைப் பெற்றிருக்கிறது என்பது மட்டுமல்ல அந்த மொழி சார்ந்த இன மக்களின் நாகரிகம் உலகிலுள்ள அத்தனை நாகரிகங்களையும் விஞ்சியது. காலத்தாலும் விஞ்சியது இதுதான். இதற்கு அடிப்படை. -நாகரிகம் உயர்ந்திருக்கிறது என்று சொன்னால் அவன் வாழும் இடம், அவன் வசிக்கும் இடம், அவன் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, உறைந்திடும் உறையுள், அவன் சார்ந்திருக்கக் கூடிய சுற்றுப்புறத்தில்…
-
- 1 reply
- 2.3k views
-
-
வவுனியாவிற்கான ரயில் சேவை (யாழ்தேவி) நேற்று வியாழக்கிழமை நனபகல் முதல் இடைநிறுத்தபட்ட மதவாச்சிவரையே சேவைகள் நடைபெறுகின்றது. வவுனியாவுக்கான ரயில் சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளாக நேற்று காலை வவுனியா புகையிரத நிலையத்திற்கு அறிவிக்கபட்டுள்ளது. இதன்படி மறு அறிவித்தல் வரை கொழும்புக்கும் மதவாச்சிக்குமிடையிலே ரயில் சேவை நடைபெறும். கொழும்பிலிருந்து மதவாச்சி வரும் ரயில்கள் அங்கிருந்தே கொழுமபுக்குப் புறப்படும். நேற்று நண்பகல் முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளதுடன் பயணிகள் எவருக்கும் பயணச்சீட்டு வழங்க வேண்டாமென வவுனியா ரயில நிலைய அதிபருக்கு புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியாவிலிருந்து இ.போ.ச மற்றும தனியார் பஸ்களில் பயணம் செய்வோர் தகுந்த காரண…
-
- 0 replies
- 890 views
-
-
வியாழன் 29-11-2007 20:12 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பு , கிளிநொச்சி தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம் கொழும்பு மற்றும் கிளிநொச்சி மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து இன்று வியாழக்கிழமை வெளியிட்ட பத்திரிகை செய்திக் குறிப்பிலேயே இக்கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பில் கடையொன்றினுளும், பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற சிற்றூர்தி மீது மேற்கொள்ளகப்பட்ட தாக்குதல்களுக்கும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த இன முரண்பாடுகளுக்கு சமாதான வழியிலேயே தீர்வு எய்தப்படவேண்டும் எனவும் இராணுவ வழியில் அல்ல எனவும் அதில் மேலும் அச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php…
-
- 7 replies
- 2k views
-
-
இலங்கைப் பிரச்னை: ஐரோப்பா தலையிட நெடுமாறன் கோரிக்கை டர்பன்: இலங்கைப் பிரச்னையில் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்தார். நிகழ்ச்சி ஒன்றுக்காக டர்பன் சென்றுள்ள அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கை அரசின் தவறான கொள்கைகளால் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து பசி, பட்டினியால் வாடுகின்றனர். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அங்கு நடைபெறும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். -குமுதம்
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்பு தாக்குதலுக்கு கண்டனம்- வன்னி மோதலில் பொதுமக்கள் சிக்குவது குறித்து கவலை: ஐரோப்பிய ஒன்றியம் [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 09:03 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வன்னி, கொழும்பு ஆகிய மோதல் நிகழுமிடங்களில் பொதுமக்களும் சிக்கிக் கொள்வது குறித்து கவலைப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய தூதரகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் திட்டமிட்ட வகையிலான பொதுமக்களின் மீதான தாக்குதல்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் …
-
- 3 replies
- 1.4k views
-
-
புலம்பெயர் தமிழர்களால் மாவீரர் நாள் உரை தயாரிக்கப்பட்டது என அனைத்துலக சமூகம் சொல்கிறது: பசில் [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 08:54 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் மாவீரர் நாள் உரையானது புலம்பெயர் தமிழர்களால் தயாரிக்கப்பட்டது என அனைத்துலக சமூகம் தன்னிடம் கூறியதாக மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், அவரது ஆலோசகருமான பசில் ராஜபக்ச கூறியுள்ளார். கொழும்பு ஊடகவியலாளர்களிடம் பசில் ராஜபக்ச இன்று வியாழக்கிழமை கூறியதாவது: மக்களின் உயிர்களைக் காப்பாற்றவும், பொதுமக்களின் சொத்துக்களுக்கு ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்கும் மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். இன்றைய சூழ்நிலையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியம். பி…
-
- 3 replies
- 1.8k views
-
-
http://www.tamilcanadian.com/page.php?cat=365&id=4468 கடந்த வருடம் எழுதப்பட்டிருந்தாலும் இன்றும் இது பொருந்துகிறது.
-
- 0 replies
- 1.7k views
-
-
வியாழன் 29-11-2007 16:16 மணி தமிழீழம் [மயூரன்] மட்டக்களப்பில் இரு சிங்களவர் சுட்டுக்கொலை இன்று மதியம் 12 மணியளவில் மட்டக்களப்பு ஜயங்கேணிப்பகுதியில் இருசிங்களவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர்கள் 42 அகவையுடைய டொடான் ரட்ணசிறி குணதிலக 22 அகவையுடைய கேவா பொன்சேகா டில்றுக் பொன்சேகா எனவும் தெரியவருகிறது. இதனையடுத்து மட்டக்களப்பு சிறீலங்கா படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.4k views
-
-
இரு நாட்டுப்பற்றாளர்களின் இறுதி வணக்க நிகழ்வு [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 08:42 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] நாட்டுப்பற்றாளர் இசைவிழிசெம்பியன் மற்றும் ம.சுரேஸ்லின்பியோ ஆகியோரது இறுதிவணக்க நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் தலைலைமயில் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 10:25 மணியளவில் நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளா பா.நடேசன் ஏற்ற, நாட்டுப்பற்றாளர் இசைவிழி செம்பியனின் புகழுடலுக்கு கணவர் செம்பியன் சுடரேற்றி மலர்மாலை சூட்டினார். நாட்டுப்பற்றாளர் சுரேஸ்லிம்பியோவின் புகழுடலுக்கு துணைவியார் சுடரேற்றி மலர்மாலை சூட்டினார். புலிகளின்குரல்…
-
- 0 replies
- 887 views
-
-
அம்பாறை பக்கி மிட்டியாவில் நிலக்கண்ணி வெடியில் சிக்கி 4 அதிரடி படையினர் காயம் வீரகேசரி இணையம் அம்பாறை பக்கியாமிட்டியவில் இன்று புதன்கிழமை முற்பகல் அதிரடிப் படையினரை இலக்கு வைத்து நிலக் கண்ணி வெடித் தாக்குதல் இடம் பெற்றுள்ளது . இதில் 4 விசேட அதிரடிப்படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . காயமடைந்த அதிரடிப்படை வீரர்கள் அம்பாறை பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை பக்கிமிட்டியா , கோவில் சந்தியில் இராணுவத்தினர் பயணித்த பவள் வாகனத்தை இலக்கு வைத்து இன்று முற்பகல் 10.30 மணியளவில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்லது . இதனையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட…
-
- 3 replies
- 2.5k views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரன் நேற்று முன்தினம் ஆற்றிய உரை வெறும் ஓலங்களும், கெஞ்சல்களும் நிறைந்ததுதான். நேற்று நாடாளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய வேளை விமல் வீரவன்ஸ இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் :- புலிப் பயங்கரவாதத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் வெளியிடப்பட்ட 'நம்பிக்கையின்மையின் வெளிப்பாட்டின் மீது' ஒரு சில காரணங்களுக்காகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். எந்த முறையிலாவது நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தாலும் பிரபாகரனுடைய மாவீரர் தின அறிக்கை, அவரது நம்பிக்கையின்மையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. அது வேதனை தரக்கூடிய படுதோல்வியிலிருந்து மீள்வதற்காக, வெளியிலிருந்து உதவிக்காகக் கெஞ்சும் நிர்காகதியான ஒருவரது ஓலமேயல்லாது வேறோன்றுமல்ல. ந…
-
- 7 replies
- 2.6k views
-
-
இலங்கை தாக்குதல்களுக்கு கனடா கண்டனம்- அனைத்துத் தரப்பும் வன்முறைகளைக் கைவிட வலியுறுத்தல் [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 11:15 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைத் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கனடா. அனைத்துத் தரப்பினரும் வன்முறையைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கனடாவின் வெளிவிவகார அமைச்சு நேற்று புதன்கிழமை (28.11.07) வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் வன்முறை அதிகரித்து வருவதற்கு குறிப்பாக எதிர்பாராத விதமாகவோ அல்லது இலக்கு வைத்தோ பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கனடா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.. இனங்களுக்கு அப்பால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக…
-
- 5 replies
- 2k views
-