Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிங்கள இராணுவதுணை ஆயுததாரி தற்கொலை கருணா கூலிக்குழுவால் இராணுவத்துணைக்குழுவில் இணைக்கப்பட்ட 16 வயதுடைய பொலநறுவை மட்டக்களப்பு எல்லைக்கிராமத்தை சேர்ந்த சிங்கள சிறுவன் அசிறி சம்பத் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. இவர் தொடர்பாக பெற்றோர் காவல்துறையில் முறையிட்டதை அடுத்து இவரது வழக்கு நீதிமன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை இவர் காவல்துறையினரிடம் இருந்து எடுத்த கைத்துப்பாக்கி மூலமே தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. -பதிவு

  2. அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐ.நா. வரை செல்லும் அவலம் [20 - June - 2007] * வரலாற்றில் துரதிர்ஷ்டம் என்கிறது ஐ.தே.க. -எம்.ஏ.எம். நிலாம்- இலங்கை நிலைவரங்கள் தொடர்பாக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐ.நா. சபை வரை செல்லும் நிலை உருவாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டின் அரசியல் வரலாற்றில் இது பெரும் துரதிர்ஷ்ட சம்பவமெனவும் விசனம் தெரிவித்திருக்கின்றது. முன்னொருபோதுமில்லாத விதத்தில் எமது நாட்டில் ஒழுங்கீனமானதொரு ஆட்சி நடந்து கொண்டிருப்பதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட…

  3. கச்சத் தீவை மீட்டால்தான் காப்பாற்ற முடியும் மீனவர்களை! கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை அத்துமீறி துப்பாக்கியால் சுட்டதில் மீனவர் ஒருவர் குண்டடிபட்டு அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது! ராமேஸ்வரத்தில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 780 படகுகளில் சென்று கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடந்துள்ளது. இதில் குண்டடிபட்ட குணபாலன், ராமேஸ்வரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். இலங்கையுடன் நல்லுறவை ஏற்படுத்தும் பொருட்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நமக்குச் சொந்தமான கச்சத் தீவு …

  4. தொண்டர் அமைப்பு பணியாளரைகாணவில்லையென முறைப்பாடு யாழ்ப்பாணத்தில் மிதிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த டென்மார்க் நாட்டின் தொண்டர் அமைப்பின் பணியாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வலிகாமம் குப்பிழானை சேர்ந்த சிவராசா விமலராசா (20 வயது) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - வீரகேசரி

  5. புதன் 20-06-2007 13:35 மணி தமிழீழம் [மயூரன்] தேசியத் தலைவரின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை திரட்டுவதில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு தீவிரம் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை இந்திய புலனாய்வு பிரிவு தீவிர அக்கறை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது மும்பாயை சேர்ந்த இந்திய புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவரை மேற்கொள் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படைப் பிரிவினை சார்ள்ஸ் அன்ரனியே வழி நடத்துவதாகவும் அவர் விமானப்பயிற்ச்சி உடப்பட நவீன தாக்குதல் உத்திகள் பலவற்றை இஸ்ரேலிய உளவு அமைப்பான மோசட் மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள…

  6. நஞ்சு கலந்த உணவை உட்கொண்ட படையினர் ஒன்பது பேர் மயக்கம் Written by Ellalan - Jun 19, 2007 at 02:09 PM யாழ். பொலிகண்டி படை முகாமில் நேற்று காலை படையினருக்கு வழங்கப்பட்ட உணவில் நஞ்சுத் தன்மை இருந்ததால் அதனை உட்கொண்ட படையினர் ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் இதில் ஒரு படைச்சிப்பாய் இறந்துள்ளார். மயக்கமடைந்த படையினர் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என தெரிவிக்கப்படுகின்றது. சங்கதி

  7. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு வீரகேசரி நாளேடு இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.இராமேஸ்வரத்

    • 4 replies
    • 1.6k views
  8. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்

    • 1 reply
    • 1.5k views
  9. இனிவரும் காலங்களில் சிறீலங்கா போர்நிறுத்த கண்காணிப்பு குழு அறிக்கை வெளியிடமாட்டாது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவிக்கையில் இனிவரும் காலங்களில் சிறீலங்கா போர்நிறுத்த கண்காணிப்புக்குழு அறிக்கைகளை வெளியிடமாட்டாது எனவும் அவர்கள் முறைப்பாடுகளை மாத்திரம் பெற்றுக்கொள்வார்கள் எனவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார். கண்காணிப்புக்குழுவின் தலைவரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தாம் வெளியிடும் அறிக்கைகளுக்கு மதிப்ளிப்பதில்லை எனவும் இனிவரும் காலங்களில் தாம் முறைப்பாடுகளை மாத்திரம் பதிவு செய்வதாகவும் யாரையும் கண்டித்து அறிக்கைகளை வெளியிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். 2002 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இலங்கை …

    • 6 replies
    • 1.7k views
  10. Posted on : Wed Jun 20 6:25:39 EEST 2007 இலங்கை கேட்கும் ஆயுத உதவிகளை வழங்குவதற்கு இந்திய அரசு தயார் இராணுவத் தளபதிகள் மாநாட்டில் அந்தோனி இலங்கை அரசு கேட் கும் அனைத்து இராணுவ உதவி களையும், தளபாடங்களை யும் வழங்க இந்திய அரசு தயாராகவே உள்ளது என அறிவித்திருக்கின்றார் அந் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ. கே. அந்தோனி. இராணுவத் தளபதிகளின் ஒருங்கி ணைப்பு மாநாடு புதுடில்லியில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. அதனைத் தொடக்கிவைத்து உரைநிகழ்த்தியபோதே அந்தோனி மேற்கண்ட தகவலையும் கசிய விட்டார் என டில்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபடும் நோக்கில் "ராடர்' உள்ளிட்ட கருவி களை எம்மிடம் இலங்கை கேட்டிருக்கின் றது. அதற்கமைய அவர்களுக்குத்…

    • 5 replies
    • 1.6k views
  11. எமக்காய் உரத்துக் குரல் கொடுங்கள் உறவுகளே......: நெளரு தீவு தமிழ் அகதிகள் கண்ணீர் வேண்டுகோள் [புதன்கிழமை, 20 யூன் 2007, 15:26 ஈழம்] [சி.கனகரத்தினம்] ஐக்கிய நாடுகள் சபையால் அனைத்துலக அகதிகள் நாள் கடைபிடிக்கப்படும் இன்றைய நாளில் நெளரு தீவில் (அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு) "இலங்கை அகதிகள் தடுப்பு முகாம்"-இலிருந்து தமிழீழ உறவுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் கண்ணீர் வேண்டுகோள்: இலங்கை அகதிகள் தடுப்பு முகாம், நெளரு 20.06.2007 எமது உறவுகளுக்கு, நீங்கள் எங்களுக்கான உதவிகளை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதனை நாம் அறிவோம். அதற்காக முதலில் உங்களுக்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் உங்களுக்கு எழுதிக்கொள்…

  12. கடந்த 10 வருடங்களின் பாதுகாப்புச் செலவு 1,404 பில்லியன் ரூபாய்கள் [புதன்கிழமை, 20 யூன் 2007, 17:54 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அரசானது கடந்த 10 வருடங்களில் பாதுகாப்புக்கு 1,404 பில்லியன் ரூபாய்களை செலவு செய்துள்ளது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்காவின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: 1996 ஆம் ஆண்டில் இருந்தான 10 வருட காலத்தில் அரசுகள் 1,404 பில்லியன் ரூபாய்களை பாதுகாப்புக்கு செலவிட்டுள்ளன. இதில் அதிகளவான தொகை கடந்த வருடமே செலவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான மொத்த பாதுகாப்புச் செலவு 244 பில்லியன் ரூபாய்கள். 2005 ஆம் ஆண்டுக்கான…

    • 1 reply
    • 1.1k views
  13. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் அரசியல்வாதிகளின் அணுகுமுறையும் [20 - June - 2007] -இஸ்மாயில் பி.ம ஆரிஃப்- நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைக் கொண்டு வருவதற்கான இலங்கையின் அரசியலமைப்பு 1977 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் நான்காம் திகதி நிறைவேற்றப்பட்டது. ஏனைய பல அரசமைப்புகளிலிருந்து பல சிறப்பம்சங்கள் உள்வாங்கப்பட்டன. அன்று ஐ.தே.க. தம்மால் பாராளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தேர்தல்களுக்கு நீண்ட காலத்துக்கு முன்பே அறிந்திருந்தது. ஆனால், இஷ்டப்படியும் சுதந்திரமாகவும் எதனையும் நிறைவேற்றத்தக்க மிகப்பெரிய ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலம் தம்மீது உதயமாகும் என்று ஒருபோதும் எதிர்பார்த்திருக்காது. 1977 ஆம் ஆண்டில் ஐ…

  14. சந்திரிகா மீண்டும் அரசியலில் ஈடுபட ஜனாதிபதி வழங்கிய உயர் பாதுகாப்பு [19 - June - 2007] தற்போது லண்டனில் வசித்து வரும் ஷ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகளாகிய யசோதாவுக்கு கடந்த 15 ஆம் திகதி லண்டனில் திருமணம் நடந்தது. இவ்வாறு யசோதாவை மணம் முடித்திருப்பவர் றொஜர் வாக்கர் என்னும் வைத்திய கலாநிதியாகும். வெள்ளை இனத்தவரும் பிரிட்டிஷ் பிரஜையுமாகிய இவர் லண்டனிலுள்ள சென்ற் ஜோன் வைத்தியசாலையில் தற்போது பணியாற்றி வருகின்றார். கடந்த 15 ஆம் திகதி லண்டனில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இவருடைய திருமண வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் உறவினர்கள் மட்டுமன்றி ஷ்ரீலங்காவையும் லண்டனையும் மற்றும் வெளிநாடுகளையும் சேர்ந்த பிரமுக நண்பர்களும் கல…

  15. மகிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் நாளை பலப்பரீட்சை. மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை பலப்பரீட்சை நடைபெற உள்ளது. அரசாங்கம் அமைத்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழலுக்கு மகிந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு தாவிய 17 பேருக்கான அமைச்சகங்களை அமைக்க 65,756,100 ரூபாவுக்கான கூடுதல் நிதி நிலை அறிக்கையை மகிந்த அரசாங்கம் நாளை தாக்கல் செய்ய உள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை இந்த கூடுதல் நிதி நிலை அறிக்கைக்கு எதிராக வாக்களிக…

    • 11 replies
    • 2.1k views
  16. Posted on : 2007-06-20 தமிழர்களின் தனித்துவ உரிமைகளை ஏற்காத தீர்வினால் பயனே இல்லை ""நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மாவட்ட மட்டத்திலேயே பகிர்ந்தளிக்கலாம் என்ற தனது நிலைப்பாட்டில் இருந்து பிரதான ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விட்டுக்கொடுத்து இறங்க வேண்டும். பெரும்பாலான கட்சிகள் முன்வைத்துள்ள மாகாண மட்ட அதிகாரப்பரவலாக்கல் திட்டத்தை அக்கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணும் முயற்சி முறிந்துபோகும்.'' இப்படித் தெரிவித்திருக்கின்றார், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது ஸ்ரீலங்கா சுத…

  17. தொடரும் சிங்களப் பாசம்: தமிழக மீனவர்களை காட்டிக் கொடுக்கும் "இந்து" தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "இந்து" நாளிதழ் தனது சிங்களப் பாசத்தை வெளிக்காட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் மீது அபாண்டமாக பழிசுமத்தி காட்டிக் கொடுக்கும் துரோகத்தனத்தைச் செய்துள்ளது. இராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது கடந்த ஜூன் 17 ஆம் நாள் சிங்கள மீனவர்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழக மீனவர்களின் படகு தகர்க்கப்பட்டு 4 பேர் படுகாயமடைந்தனர். சிங்கள மீனவர்கள் நடத்திய இந்த வெறியாட்டத்தில் இராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பிரவீன்குமார் (வயது 20), பாலமுருகன் (வயது 35), சூசை(வயது 45), போதகராஜ் (வயது 30) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். சிறிலங்கா அரசாங்…

    • 2 replies
    • 1.3k views
  18. அதிகாரப்பகிர்வு யோசனையை அமுல்படுத்த விடமாட்டோம் அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் அமைந்த தீர்வு யோசனையை சர்வகட்சி பிரதிநிதிகள் குழு வெளியிட்டால் நாங்கள் வீதியிலிறங்கி போராட்டம் நடத்துவோம். இந்த நாட்டில் ஒருபோதும் அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனையை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று ஜே. வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனை இன்னும் ஆறு வாரங்களில் வெளியிடப்படும் என்று சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது : அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனையை…

  19. "சிங்கள ஹிட்லர்களின் கருதுகோள்" -சபேசன் (அவுஸ்திரேலியா)- சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வசித்து வந்த தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றி, வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பிய சிறிலங்கா அரசின் செய்கையை, அமெரிக்க அரசு உட்படப் பலரும் கண்டித்துள்ளனர். ஜே.வி.பி உட்படப் பல சிங்கள அரசியல் கட்சிகளும், சிறிலங்கா அரசின் இச்செயலைக் கண்டித்துள்ளன. ~இச் செயல், தமிழர்களை நாடு கடத்துவதற்கு ஒப்பானது| - என்கின்ற வகையில் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ~வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள், தமிழர்களின் தாயகப்பகுதி என்ற உண்மையை, இந்த வெளியேற்றம், நிரூபணம் செய்து விட்டது| என்ற தர்க்கமும் இப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றது. ~நாடு கடத்தல், தமிழர் தாயகத்திற்கான நிர…

    • 0 replies
    • 911 views
  20. குடும்பிமலை பாலமடு நோக்கிய படைநகர்வு முறியடிப்பு மட்டக்களப்பு குடும்பிமலை பாலமடு நோக்கிய சிறீலங்காப் படையினரின் வலிந்த படைநகர்வு இன்று விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 10 மணியளவில் எறிகணைச் சூட்டாதரவுடன் பாலமடு நோக்கி பெருமளவு சிறீலங்காப் படையினர் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டபோது போராளிகள் படையினரை வழிமறித்து சமராடி படையினரை விரட்டியடித்துள்ளனர். 6 மணி நேர சமர்களின் பின்னர் பலத்த இழப்புக்களுடன் சிறீலங்காப் படையினர் தமது பழைய நிலைகளுக்குத் தப்பியோடியுள்ளனர். இன்றைய மோதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் இதுவரை வெளியாகவில்லை. இதேநேரம் இன்று மாலை 6 மணியளவில் குடும்பிமலை திருமாவடி எனும் மற்றொரு பகுதியில் சிறீலங்க…

    • 0 replies
    • 1.3k views
  21. போர் நிறுத்த மீறல்கள், கள நிலைமைகளை உள்ளடக்கிய விசேட அறிக்கையொன்றை இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்துச் செல்லும் போர் நிறுத்த மீறல்கள் மற்றும் கள நிலைமைகளின் உண்மைத் தன்மையை உள்ளடக்கிய அறிக்கையொன்றை இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொபினோர் மேர்ஸன் மேலும் கூறியதாவது: நோர்வே தலைநகர் , ஒஸ்லோவில் எதிர்வரும் 25,26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் பரிசீலிப்பதற்க…

    • 0 replies
    • 969 views
  22. வளைந்து கொடுக்காத மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன்: கோத்தபாய ராஜபக்ச. தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்- வளைந்து கொடுக்காத மனிதர். நிலங்களைக் கைப்பற்றுவது இராணுவத்தின் இலக்கல்ல. விடுதலைப் புலிகளை பலவீனமாக்குவது தான் எமது நோக்கம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு வார ஏடு ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: முன்னைய ஈழப் போர்களின் போதைய இராணுவ நடவடிக்கைகளுக்கும் தற்போதைய நிலைமைக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இராணுவ உத்தி என்பது இராணுவத்தினர் தொடர்பானது. இராணுவத்தினருக்கு நான் சுதந்திரம் அளித்திருக்கிறேன். இராணுவ உத்தியை வகுப்பது என்பது முற…

    • 6 replies
    • 2.1k views
  23. மகிந்தவின் கட்சி உடைந்தது: மங்கள - சிறீபதி இணைந்து புதிய கட்சி தொடக்கம். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி உடைந்துள்ளது. கட்சியின் அதிருப்தியாளர்கள் இணைந்து "சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மகாஜன பிரிவு)" என்ற புதிய கட்சியை உருவாக்கியுள்ளனர். மகிந்தவினால் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி ஆகியோர் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் லொக்கு பண்டாரவுக்கு "சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மகாஜன பிரிவு)" சார்பில் மங்கள சமரவீரவினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்: 1. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பி…

  24. நோர்வேயை வெளியேற்ற வேண்டும் டொனி பிளேயரை இணைத்துக்கொள்ளக்கூடாது: ஜே.வி.பி. சமாதான செயற்பாடுகளில் இந்தியா, ஜப்பான் உட்பட எந்த நாடும் தலையிடக்கூடாது என்கிறது ஜே.வி.பி. பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயர் தனது பதவிக் காலம் முடிந்தபின்னர் இலங்கையின் சமாதான செயற்பாடுகளில் மத்தியஸ்தராக செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். வெளிநாட்டவர்கள் இலங்கையின் பிரச்சினையில் ஆரம்பத்திலிருந்து தலையிட்டமையின் காரணத்தினாலேயே நாடு இன்று இக்கட்டான நிலையில் உள்ளது என்று ஜே.வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். நோர்வேயையும் சமாதான செயற்பாடுகளிலிருந்து வெளியேற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் …

  25. செவ்வாய் 19-06-2007 15:19 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் மருத்துவமனையில் கப்பம் கேட்கும் காவல்துறை யாழ்ப்பாண மருத்துவமனையில் நிலைகொண்டுள்ள காவல்துறையினர் பொது மக்களிடம் கப்பம் கேட்டு துன்புறுத்திவருவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றார்கள். யாழ்ப்பாண மருத்துவமனையில் வளாகத்தில் ஒரு காவல்துறை நிலையம் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது குறிப்பிட்ட காவல் நிலையம் போதனா வைத்திய சாலைக்கு கொண்டுவரப்படும் திடீர் மரணங்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் கூடிய காணம் அடைந்தவர்களின் நலனுக்காக இந்த காவல் துறை நிலையம் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும் கூட தற்போது யாழ் குடா நாட்டில் இடம் பெறும் இனம் தெரியாதவர்களின் துப்பாக்கிச் சூட்டு மரணங்கள் மற்றும் தற்கொலைகள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.