Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிங்களத்தில் இருக்குது ஆனால் சிரந்த தோலுரிப்பு

    • 4 replies
    • 3.2k views
  2. புலிகளுக்கு ஆதரவாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் செயற்படுகின்றன: சிறிலங்கா குற்றச்சாட்டு. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் செயற்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்கா சமாதான செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்துலக மனித உரிமை சட்ட விதிகள் அனைத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீறுகின்ற போது அனைத்துலக நிறுவனங்கள் அதனை புறக்கணித்து விடுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளனர். ஆனால் செத்துப்போன கனவை அடைவதற்காக அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்த…

    • 2 replies
    • 1.4k views
  3. வே.பிரபாகரனின் சர்வதேச பிரசாரத் தலைவர் டி.பிரபாகரன் [17 - May - 2007] அமெரிக்காவில் முன்னைய செய்மதித் தொலைக்காட்சி மற்றும் தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக இயங்கிவருவதும் வாஷிங்டன் பிரதேசத்தில் அமைந்துள்ளதுமான `இன்ரெல்சற்' (INTELSAT) செய்மதி சேவையின் தலைமை நிருவாக அதிகாரியாகிய பிலிப் ஸ்பெக்ரர் அண்மையில் வாஷிங்டனிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்று தூதரக அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது புலிகள் இயக்கம் இன்ரெல்சற் சேவையைப் பயன்படுத்துவதை கடந்த ஏப்ரல் 21, 22 ஆம் திகதி வார இறுதியில் நிறுத்திவிடப் போவதாகக் கூறியிருந்தார். ஆயினும் ஏப்ரல் 22 ஆம் திகதி கடந்து மே 5 ஆம் திகதி வரையில் சுமார் இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் அவ்வாறு `இன்ரெல…

  4. பள்ளியாவத்தை தீவு கடலில் மூழ்கியது 60 குடும்பங்கள் காப்பாற்றப்பட்டன [17 - May - 2007] - கே.பி.மோகன் - புத்தளம், கற்பிட்டி பள்ளியாவத்தை தீவு நேற்று புதன்கிழமை மாலை கடலினுள் மூழ்கியுள்ளது. இப் பகுதியில் ஏற்பட்ட திடீர் கடற்கொந்தளிப்பையடுத்தே இந்தச் சிறிய தீவு கடலினுள் மூழ்கியது. இந்த திடீர் அனர்த்தம் காரணமாக பள்ளியாவத்தை தீவில் வாழ்ந்து வந்த 60 க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளன. உயிரிழப்புகள் எதுவும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளனர். வாயு மண்டலத்தில் ஏற்பட்டிருந்த அதிக உஷ்ணமும் கடும் காற்றும் காரணமாகவே இந்த நிலைமை தோன்றியதாகவும் இது சுனாமி நிலைமை அல்ல. சாதாரண வளி மண்டல அமுக்கம் உருவாகும் போது கடல…

  5. இலங்கை மீது அமெரிக்காவுக்கு கேந்திர முக்கியத்துவம் கருதிய கரிசனை இல்லை [17 - May - 2007] * வாஷிங்டனின் முன்னாள் தூதுவர் லன்ஸ்டெட் அமெரிக்காவிற்கு இலங்கை குறித்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நோக்கங்களோ அல்லது பொருளாதார நலனை அடிப்படையாகக் கொண்ட அக்கறையோ இல்லையென கொழும்பிற்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்டெட் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் அமெரிக்காவின் பங்களிப்பு குறித்து ஆசியா பவுண்டேஷனுக்கு அளித்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தென்னாசியாவின் ஏனைய நாடுகளுடன் உள்ளது போன்று கேந்திர நலன்களை அடிப்படையாகக் கொண்ட இராணுவ உறவு இலங்கையுடன் அமெரிக்காவிற்கு கிடையாது என தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்…

    • 2 replies
    • 1.7k views
  6. பதில் காணமுடியாத பல கேள்விகளை கிளப்பியிருக்கும் புலிகளின் விமானத் தாக்குதல்கள் [17 - May - 2007] -காலிங்க செனிவிரத்ன- கொழும்பு, தலைநகருக்குள்ளேயும் சுற்றுவட்டாரங்களிலும் இராணுவ, பொருளாதார இலக்குகளில் விமானத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திய பிரிவினைவாத போராளிகளான விடுதலைப்புலிகள் இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கென தனி நாடொன்றை உருவாக்கிக் கொள்வதற்கான தங்கள் போராட்டத்தில் முழுமையான யுத்தமொன்றைத் தொடுப்பதற்குப் போதிய ஆற்றல் தங்களிடம் இருப்பதை நடைமுறையில் காண்பித்துள்ளார்கள். ஆனால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தத் தீவு நாட்டில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் புதிதாக ஆரம்பிக்கப்ப…

    • 4 replies
    • 2.6k views
  7. நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கார் கிளிநொச்சி செல்லும் சாத்தியம் [Wednesday May 16 2007 08:43:48 PM GMT] [virakesari.lk] கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கார் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகின்றது. தூதுவரின் இந்த விஜயம் ஏற்கனவே திட்டமிடப்பட்டது எனவும் புதிய திருப்பங்கள் எதனையும் இந்த விஜயத்தின் மூலம் எதிர்பார்க்கமுடியாது எனவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. எவ்வாறாயினும் யுத்தநிறுத்த உடன்படிக்கை தொடர்பாக இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸ்கர் க…

  8. சிறிலங்கா இராணுவத்திற்கும் அதிரடிப்பைடயினருக்கும் ஆட்சேர்ப்பு [வியாழக்கிழமை, 17 மே 2007, 05:25 ஈழம்] [க.திருக்குமார்] கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் பெரும் ஆட்சேர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடத்தப்பட்ட வெற்றிகரமான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து இந்த மாதத்தின் முற்பகுதியிலும் இராணுவத்தின் வான்நகர்வுப் பிரிக்கேட், மற்றும் கவச வாகனப் பிரிக்கேட் ஆகியவற்றிற்கான ஆட்சேர்ப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதிலும் உள்ள நிலையங்களில் ஆட்சேர்ப்பு…

  9. புலி ஆதரவாளர்கள் மீது தமிழ் நாட்டில் கண்காணிப்பு தமிழ் நாட்டில் இருந்து செயற்பட்டு வரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களது நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குற்றப் புலனாய்வுப் பிரிவு திணைக்களத்தினால் இந்தப் பணி மேற்கொள்ளப் பட்டு வருவதாக தமிழ்நாடு பொலிஸ் பணிப்பாளர் நாய கம் டி.முகர்ஜி தெரிவித்தார். ""கியூ பிரிவினர் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். 1967ஆம் ஆண்டின், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப் புச் சட்டத்தின் கீழ் சிலரைக் கைது செய்வதற்கான ஆரம்ப வேலைகள் அதிகளவில் தேவைப்படுகின்றன.'' என்றார் அவர். ஆனால் எந்த அமைப்புக்கள் பொலி ஸாரின் கண்காணிப்பின் கீழ் உள்ளன என்பதை முகர்ஜி தெரிவிக்கவில்லை. இதேவேளை, விடுதலைப் புலிகள் வசம் உள்ளார்கள் என்று தமிழ்நாட்டுப…

  10. பாக்கிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் யாழ் விஜயம் யாழ் குடாநாட்டில் உள்ள சிறீலங்கா படைகளின் தளங்களை நேற்று காலை பாக்கிஸ்தான் புலனாய்வுதுறை, வான்படை ஆகியவற்றை சேர்ந்த மூன்று அதிகாரிகள் சென்று பார்வையிட்டு கலந்தாலோசனை நடாத்தியுள்ளார்கள். இவர்கள் உலங்கு வானூர்தியில் தென்மராட்சி வரணி, சாவகச்சேரி வடமராச்சி பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் உள்ள படைத்தளங்களுக்கு சென்று பாதுகாப்பு நிலவரங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்கள். பதிவு

  11. வியாழன் 17-05-2007 02:31 மணி தமிழீழம் [மயூரன்] தென்னிலங்கையில் அமைதிப்போராட்டம் சிறிலங்கா படைகளின் பின்புலத்தில் தென்னிலங்கையில் ஆட்கடத்தல்கள், பணப்பறிப்புக்கள் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி நேற்று கொழும்பில் தமிழ் - முஸ்லீம் - சிங்கள சமூகங்களை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்ட பொதுமக்களின் உறவினர்களும் அமைதிப்போராட்டம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்கள். இவ் அமைதிப்போராட்டத்தில் மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சிறீதுங்க விஜயசூரிய, கடந்த ஆண்டு மட்டும் கொழும்பிலும் புறநகர் பகுதியிலும் 140 பொதுமக்கள் கடத்தப்பட்டதாகவும் 18 பேர் சடலமாக மீட்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பதிவு

  12. புலிகள் இயக்கத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் அங்கம் வகிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனித்து தமிழர்களின் அமைப்பு என்று இன்று கூறிவிட முடியாது. அதில் சிங்களவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். நாட்டில் இன்று கடத்தல் சம்பவங்கள் படிப்படியாகக் குறைந்துள்ளன. இதில் பல்வேறு குழுக்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம். அவர்களை இனங்கண்டு கைது செய்வோம் என்றும் அவர் சொன்னார். அலரிமாளிகையில் நேற்று தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்து நாட்டின் நிலைவரம் குறித்து கலந்துரையாடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். பத்திரிகை ஆசிரியர்களின் கேள்விகளுக்குப்…

  13. வான்புலிகள் தாக்குதல் எதிரொலி: சிறிலங்கா கட்டளைத் தளபதிகள் மீது விசாரணை நடத்த வலியுறுத்தல் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா கட்டளைத் தளபதிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தி: விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் தொடர்பாக அதிகளவான பேனா மைகள் எழுதித் தீர்ந்து விட்டன. ஆனால் இன்று வரை அதற்கான ஒரு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகளின் வான்படை மற்றும் அதன் ஓடுதளம் தொடர்பாக அரசு தனக்கு தெரியும் என கூறியிருந்தது. அப்படியானால் விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க அரசு என்ன நடவடிக்கையை எடுத்திருந்தது? முதலாவதாக செயற்திறன் …

  14. பூசா தடுப்பு முகாமில் "சிங்களப் புலிகளுடன்" சட்டத்தரணிகள் சந்திப்பு [புதன்கிழமை, 16 மே 2007, 19:33 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவின் காலியில் பூசா தடுப்பு முகாமில் உள்ள 13 அரசியல் கைதிகளை 5 சட்டத்தரணிகள் குழு சந்தித்துப் பேசியது. புதிய ஜனநாயக் கட்சி உறுப்பினர் - 5 சிங்களப் புலிகள் என இராணுவத்தினரால் குற்றம் சுமத்தப்பட்ட சிங்களவர்கள்- 7 மற்றும் கிழக்கு மகாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் ஆகியோரை சட்டத்தரணிகள் குழு சந்தித்தது. சட்டத்தரணிகள் இ.தம்பையா, எஸ்.தேவராஜா, மகிந்த ஜயவர்த்தன, திலக் விஜயசிங்க, சிறிநாத் பெரேரா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். புதினம்

  15. புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பைத் தடை செய்ய சிறிலங்கா தீவிர முயற்சி [புதன்கிழமை, 16 மே 2007, 19:22 ஈழம்] [சி.கனகரத்தினம்] அமெரிக்கா வாசிங்ரனில் இயங்கும் இன்ரல்சட் செய்மதி ஊடாக புலிகளின் குரல் வானொலிச் சேவை தொடர்ந்து நடைபெற்று வருவதனை எதிர்த்து சிறிலங்கா அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளது. இம்முறைப்பாடு தெரிவிக்கப்படு முன்னர் சிறிலங்கா தூதரகத்தின் மூலம் இன்ரல்சட் நிறுவனத்திற்கு புலிகளின் வானொலிச் சேவையை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும் இவ்வோண்டுகோளை அலட்சியப்படுத்தி விட்டு அது தனது சேவையைத் தொடர்ந்தும் நடத்தி வந்தது. இன்ரல்சட் நிறுவனத்திற்குச் சொந்தமான செய்மதி மூலம் புலிகள் சட்டவிரோதமாக ஒலிபரப்புச் சேவை நடத்தி வருகின்றனர் எனவும் அதற்கு இட…

  16. ஜே.வி.பி.க்கு பிரித்தானிய தூதுவர் அழைப்பு [புதன்கிழமை, 16 மே 2007, 17:46 ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கை தொடர்பான பிரித்தானியாவின் நடவடிக்கைகளை மிகக் கடுமையான விமர்சித்து வருவது தொடர்பாக ஜே.வி.பி.யினருடன் விவாதிக்க பிரித்தானிய தூதுவர் அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியா நாடாளுமன்றில் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த மூன்று மணி நேர விவாதம் நடத்தப்பட்டது. இலங்கைக்கு பிரித்தானிய நாடாளுமன்ற குழு பயணம் மேற்கொள்ளும் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரும் அமைதிக் குழுப் பொறுப்பாளருமான சு.ப.தமிழ்ச்செல்வனை பிரித்தானியா நாடாளுமன்றத்துக்கு அழைத்து புலிகளின் நிலைப்பாட்டை விளக்க வாய்ப்பளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. …

  17. பூநகரியில் எறிகணை வீச்சு: பாடசாலை மாணவன் பலி [புதன்கிழமை, 16 மே 2007, 18:54 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டம் பூநகரி மக்கள் குடியிருப்பு மீது சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் பாடசாலை மாணவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கிளாலி சிறிலங்காப் படை முகாம் பின்தளத்தில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணியளவில் எறிகணைகள் ஏவப்பட்டன. இந்த எறிகணைகள் பூநகரி - மன்னார் வீதியில் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் குடியிருப்பு மீது வீழ்ந்து வெடித்தன. இதில் பூநகரி கவாக்குளத்தைச் சேர்ந்த சிறீ விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் கனகரத்தினம் மோகன்ராஜ் என்ற பாடசாலை மாணவனே கொல்லப்பட்டுள்ளார். …

  18. சிறிலங்கா விமானப்படையின் விமானம் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல். திருகோணமலை கடற்படைத்தளத்தை அண்டிய பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் சந்தேகத்திற்கு இடமான விமானம் ஒன்றை அவதானித்துள்ள சிறிலங்கா கடற்படையினர் உடனடியாக விமானப்படை தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு இந்த விமானம் பற்றி அறிவித்துள்ளனர். உடனடியாக இந்த விமானம் சிறிலங்கா வான்படையினரது அல்ல என சிறிலங்கா விமானப்படையினர் தெரிவித்தபோது கடற்படையினர் விமானத்தை நோக்கி சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல்களால் சட்டென உயர பறந்த விமானம் பின்னர் அவசர அவசரமாக விமானப்படை கட்டுப்பாட்டு தலை…

    • 2 replies
    • 1.8k views
  19. புலிகளுடனான அரசாங்கத்தின் இரகசிய ஒப்பந்தம் குறித்து முக்கிய தகவல் உள்ளது: ஐ.தே.க. [புதன்கிழமை, 16 மே 2007, 17:50 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கும் இடையே அரச தலைவர் தேர்தல் தொடர்பாக இரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது குறித்து முக்கிய தகவல் தம்மிடம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ரூ. 200 மில்லியன் பணம் கொடுக்கப்பட்டதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியராச்சி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி…

  20. துறைமுகம் மற்றும் வானூர்தித்துறை அமைச்சராக மகிந்தவின் சகோதரர் நியமனம் [புதன்கிழமை, 16 மே 2007, 17:14 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவின் வானூர்தி மற்றும் துறைமுக அமைச்சராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். மகிந்தவின் அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்புக்கு முன்னர் சமல் ராஜபக்ச, அமைச்சராகப் பதவியேற்றார். இப்பதவியேற்பின் போது ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்ப, மகிந்தவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சந்திரபால லியனக ஆகியோர் உடனிருந்தனர். மகிந்தவின் அமைச்சரவையில் நீர்ப்பாசனம் மற்றும் நீர்மேலாண்மை அமைச்சராக இதுவரை சமல் ராஜபக்ச பொறுப்பு வகித்து வந்தார். மகிந்தவுடன் முரண்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து …

  21. அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை: மகிந்த ராஜபக்ச அறிவிப்பு [புதன்கிழமை, 16 மே 2007, 17:01 ஈழம்] [ப.தயாளினி] அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்க இயலாத சிறிலங்கா அரசாங்கத்துக்கு பிரித்தானிய நிதி உதவியை இடை நிறுத்தி உள்ளது. அதேபோல் அமெரிக்காவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மகிந்த கூறியுள்ளதாவது: தாமாக முன்வந்து விருப்பத்தின் பேரில் கொடுக்கப்படும் நிதி உதவியை நாம் பெற்றுக்கொள்ளலாம். இல்லையெனில் அதனை நாம் மறந்துவிட்டு நமது வேலையைச் செய்ய வேண்டும். நாம் உதவ…

  22. கொள்ளையனை துரத்தி பொலிஸார் சூடு அப்பாவி குடும்பஸ்தர் உயிரிழந்தார் வவுனியா காமினி வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொள்ளையனொருவனைத் துரத்திச் சென்ற பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிக் குடும்பஸ்தரொருவர் கொல்லப்பட்டுள்ளார். பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த சனிக் கிழமை இரவு இடம்பெற்ற கொள்ளை முயற்சியின்போது மூவர் பிடிபட மேலும் சிலர் தப்பியிருந்தனர். இவ்வாறு தப்பியவர்களில் ஒருவர் காமினி வித்தியாலயத்திற்கு அருகில் வீடொன்றிலிருப்பதாக நேற்று மாலை பொலிஸாருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது. இதையடுத்து மாலை 5.30 மணியளவில் மேற்படி வீட்டைப் பொலிஸார் சுற்றிவளைத்தபோது அந்தக் கொள்ளையன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இதையடுத்து பொ…

  23. வான் தாக்குதலுக்கு செய்மதி நிழற்படங்களைப் பயன்படுத்தினர் புலிகள் - இந்தியன் எக்ஸ்பிறஸ். தமிழீழ விடுதலைப் புலிகள் செய்மதிப் நிழற்படங்களின் உதவியுடனேயே வான் தாக்குதல்களை மேற்கொண்டதாக இந்தியன் எக்ஸ்பிறஸ் செய்தி நாளேடு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் தமக்கான இலக்குகளை தேர்ந்தெடுக்க வர்த்தக செய்திமதியின் தொழிற் நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆற்றலையும் பெற்றுள்ளதாகவும் அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -Pathivu-

  24. வெள்ளைவத்தையில் வட பகுதியைச் சேர்ந்த 20 பேர் கைது. கொழும்பு வெள்ளைவத்தைப் பகுதியில் சிறீலங்காப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் வட பகுதியைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நான்கு யுவதிகளும் உள்ளடங்குகின்றனர். நேற்று மாலை 5 மணிக்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வெள்ளைவத்தை காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தங்களை அடையாளப் படுத்தத் தவறியதாலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளைவத்தை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். -Pathivu-

  25. இந்திய மீனவரை இலங்கை கடற்படை சுடுவதாக கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி குற்றச்சாட்டு இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினரே சுட்டுக் கொல்வதாக குற்றம் சாட்டியுள்ள இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி ராமன் பிரேம்சுதன், அண்மையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லையென்றும் கூறினார். இந்திய கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள ராமன் பிரேம்சுதன் திங்கட்கிழமை அடையாறிலுள்ள கடற்படைத்தளத்தில் வைத்து வழங்கிய பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவேயுள்ள பாக்கு நீரிணைப் பகுதியில் கடற்படையினரின் கண்காணிப்பு அதிகரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.