Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புல்லுமலையில் பலியான 4 படையினரின் சடலங்கள் ஐ.சி.ஆர்.சி. யூடாக ஒப்படைப்பு மட்டக்களப்பு புல்லுமலைப் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட விசேட அதிரப்படையினரில் நால்வரது சடலங்கள் நேற்றுக் காலை புலிகளால் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை புல்லுமலைப் பகுதி நோக்கி இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் முன்னேற்ற முயற்சியொன்றில் ஈடுபட்டனர். இதற்கெதிராக புலிகள் கடுமையான பதில் தாக்குதலை நடத்தியதில் பல படையினர் கொல்லப்பட்டதுடன் ஆறு அதிரடிப்படையினரின் சடலங்களையும் தாங்கள் கைப்பற்றியதாக புலிகள் தெரிவித்திருந்தனர். இதில், மிக மோசமாகப் பழுதடைந்த இரு சடலங்களை புலிகள் நேற்று அடக்கம் செய்த அதேநேரம், நான்கு சடல…

  2. அம்பாந்தோட்டை பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதிலும் தமிழ் மக்களை அழிப்பதிலுமே அரசு அக்கறை காட்டுகிறது -சபையில் கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் - டிட்டோ குகன், ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற்று அம்பாந்தோட்டை பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதிலும், தமிழ் மக்களை அழிப்பதற்கென வெளிநாடுகளில் இருந்து நவீன ஆயுதங்களை கொள்வனவு செய்து குவிப்பதிலுமே ஆர்வம் காட்டி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் கடந்த வெள்ளிக்கிழமை சபையில் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் வெள்ளி நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா …

  3. தேசபக்தி என்பது அயோக்கியர்களின் புகலிடம்' என்ற கூற்று நான் பலமுறை மேற்கோளாகக் கேட்டது. எனினும் யாருடைய கூற்று என்று நினைவில்லை. தேசபக்தி மட்டுமல்லாமல் மொழி, மதம் என்பனபோன்ற மனித அடையாளங்களில் எதைப் பற்றியும் காட்டப்படும் தீவிரமான பக்தியும் பற்றும் பெரும்பாலும் பரப்பானவையாகவும் குறுகிய நோக்கங்களுக்கான மூடுதிரையாகவுமே இருந்துள்ளன. எங்கெல்லாம் தேசமும் இனமும் மொழியும் மதமும் புனிதப்படுத்தப்பட்டு அவற்றின் நலன் மனிதரது அடிப்படையான உரிமைகளையும் தேவைகளையும் உணர்வுகளையும் மறுக்கிற அளவுக்குப் போகிறதோ அங்கு சமூகப் பற்றுக்குப் பதிலாகச் சமூகத்தைச் சின்னாபின்னமாக்கக் கூடிய வெறித்தனம் ஆட்சி செலுத்துகிறது. ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தேசப்பற்றும் இனப்பற்றும் மொழி உணர்வும் மத உணர்வும் …

  4. அரசியலில் இப்படியும்.. நடவடிக்கை சீனவிஜயத்தைத் தொடர்ந்து நாடு திரும்பிய அதிகார அதிபர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டாராம். அத்துடன், நாட்டினுள் இடம்பெற்ற ஆள் கடத்தல்கள், கொலைகள் என்பன தொடர்பாகவும் அரசின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றிலும் ஈடுபட்டாராம். இதன் போது பல தகவல்களை அதிகார அதிபர் பெற்றுக் கொண்டுள்ளாராம். சந்திப்பு பச்சைக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் வெளிநாட்டுத் தூதுவர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றதாம். இதன் போது நீலக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய இருவர் ரகசிய ஒப்பந்தமொன்று குறித்து தூதுவர்களுக்கு விளக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப…

  5. கிழக்கில் ஒரு ஜெயசிக்குரு? -விதுரன்- மட்டக்களப்பில் பாரிய படை நகர்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கிலிருந்து புலிகளை அப்புறப்படுத்தும் கடைசி படை நடவடிக்கையே, மட்டக்களப்பிலிருந்து புலிகளை வெளியேற்றும் தாக்குதலென படைத்தரப்பு கூறுகிறது. ஆனாலும், இது எந்தளவுக்கு சாத்தியப்படுமென்பதை அங்கு புலிகள் மேற்கொள்ளும் பதில் தாக்குதல்கள் அரசுக்கு தெளிவுபடுத்தும். தெற்கில் அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிழக்கில் சில வெற்றிகள் தேவைப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டதாக மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிரிகள் தற்போது வெளியிடும் தகவல்கள் மகிந்தவுக்கு ப…

  6. மட்டக்களப்பில் இரு நாட்களில் 1-1/2 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு [ மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி கடந்த வியாழக்கிழமை முதல் இடம்பெற்று வரும் பாரிய படை நகர்வுகளையடுத்து ஒரு இலட்சத்து 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடு வாசல்களை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர். இந்தப் படை நடவடிக்கை மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 30 வீதமான மக்கள் கடந்த இரு நாட்களில் பாரிய இடப்பெயர்வைச் சந்தித்துள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் படுவான்கரை பகுதி நோக்கி கடந்த வியாழக்கிழமை மிகக் கடுமையான ஷெல் தாக்குதலையும் பல்குழல் ரொக்கட் தாக்குதலையும் நடத்தியவாறு …

  7. வடமராட்சி கரையோரப் பிரதேசங்களில் குடும்பப் புகைப்படம் எடுக்குமாறு மக்களை படையினர் வற்புறுத்து வடமராட்சி கரையோரப் பிர தேசங்களில் வசிப்போரை குடும் பப் புகைப்படங்களை எடுத்து வீட்டில் பார்வைக்கு வைக்குமாறு இராணுவத்தினர் கோரியிருக்கின்றனர். ஒவ்வொரு குடும்பமும் எல்லா உறுப்பினர்களையும் சேர்த்து படம் எடுத்து அதில் ஒரு பிரதியை கிராம அலுவலரிடமும் ஒரு பிரதியை இராணுவ முகாமிலும் வழங்க வேண்டும் என்றும் மூன்றாவது பிரதியை நன்கு தெரியக் கூடியவாறு வீட்டில் பார்வைக்கு தொங்கவிட வேண்டும் என்றும் இராணுவத்தினர் பணித்திருக் கின்றனர் என்று கரையோர மக்கள் கூறுகின்றனர். படையினரின் இந்த உத்தரவினால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர் http://www.tamilwin.com/article.php?artiId...;tok…

  8. 9 போராளிகள்- 4 தேசிய துணைப்படை வீரர்களின் வீரச்சாவு அறிவித்தல்கள் தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 9 போராளிகளினதும் 4 தேசிய துணைப்படை வீரர்களினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விபரம் வருமாறு: 09.03.2007 இல் யாழ். நாகர்கோவில் பகுதியில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது தேசிய துணைப்படை வீரர்கள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். தேசிய துணைப்படை வீரர் 2 ஆம் லெப். ஜேசுதாஸ் என்று அழைக்கப்படும் ப.சி.ஐயாத்துரைகமம் 160 ஆம் கட்டை பரந்தன், கிளிநொச்சியைச் சேர்ந்த முனியாண்டி ஜேசுதாஸ், தேசிய துணைப் படை வீரர் வீரவேங்கை ரவிக்குமார் என்று அழைக்கப்படும் இலக்கம் 92 ரயர் கடையடிச் சந்தி விநாயகபுரம் கிளிந…

  9. தமிழக மீனவரை இலங்கைக் கடற்படை தாக்குவதை கண்டித்து நாளை சென்னையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் மாநில மீன்பிடி அமைச்சர் தலைமை வகிப்பார் பாக்குநீரிணையில் வைத்துத் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களைக் கொன்றும்இ தாக்கியும் வரும் இலங்கைக் கடற்படையினரின் அட்டகாசத்தைக் கண்டித்துஇ தமிழகத்தின் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளது. நாளை திங்கட்கிழமைஇ சென்னையில் உள்ள இலங்கையின் பிரதித் தூதரகத்தின் முன்னாள் நடத்தப்படவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மீன்பிடித்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி தலைமை வகிப் பார். மின்சக்தித்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியும் கண்டன ஊர்வலத்தில் பங்கு பற்றுவார். பாக்குநீரிணைக் கடற்பிரத…

  10. அம்பாறையில் கிளேமோர்த் தாக்குதல் விசேட அதிரடிப்படையினர் இருவர் பலி. - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 11 ஆயசஉh 2007 12:31 அம்பாறை பகுதியில் கிளேமோர்த் தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது. அம்பாறை கல்முனை பட்டிருப்புப் பகுதியில் இன்று காலை 8.55 மணியளவில் ரோந்து சென்ற சிறிலங்காப் படையினரின் விசேட அதிரடிப்படையினரை இலக்கு வைத்து கிளேமோர்த் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் இரண்டு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. http://sankathi.org/news/index.php?option=...29&Itemid=1

    • 0 replies
    • 668 views
  11. புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - தமிழக பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை. விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவே பணம் மற்றும் பொருள் களை உதவி செய்பவர்கள் மற்றும் சட்டவிரோதமாக ஆதரவு கொடுப்பவர்கள் மீது பாரபட்சமின்றிக் கடும் நடவடிக்கை எடுக் கப்படும். தமிழக காவல்துறை பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.முகர்ஜி மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்தவொரு அரசியல் கட்சி மற்றும் தனி இயக்கங்களைச் சேர்ந்தவர்களாயினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஆயுதங்களைக் கடத்தியது தொடர்பாக 16 இலங்கைத் தமிழர்கள் உட்பட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அண்மைக் காலமாக நிலவிவரும் ப…

    • 10 replies
    • 2.1k views
  12. இதய பூமி... இறுதிப் போரின் தொடக்கப் புள்ளியா? நோர்வே அனுசரணையாளர்கள் இன்னமும் சமாதானக் களத்தில் இருக்கிறார்களென்பதை உலகிற்கு நினைவூட்ட, தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் கிளிநொச்சிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். தற்போதைய களநிலவரம் குறித்து புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் சலிப்புறாமல் நீண்ட விளக்கமொன்றை அவருக்கு அளித்துள்ளார். மட்டக்களப்பு எறிகணைச் சம்பவத்தின் பின் வருத்தத்தையும் கவலையையும் தெரிவித்த புலிகள், அரசியல் ரீதியில் பலவீனமானதொரு நிலையில் இருப்பதாக கற்பிதம் கொள்வதால், இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இனியொரு பேச்சுவார்த்தையை எங்கிருந்து ஆரம்பிப்பது என்கிற சிக்கலான நிலைமைக்குள் அனுசரணையாளர்கள் புதையுண்டு போயுள்…

    • 2 replies
    • 1.4k views
  13. சிறிலங்காவின் 57 ஆவது படைப்பிரிவின் உருவாக்கமும் ஆசிவேண்டிய பூசைகளும். சிறிலங்கா இராணுவம் புதிய படைப்பிரிவான 57 ஆவது படைப்பிரிவை உருவாக்கியுள்ளது. ஒவ்வொன்றும் லெப். கேணல் தர அதிகாரிகளின் வழிநடத்தலில் உள்ள மூன்று பிரிகேட்டுக்களை கொண்ட இந்த படைப்பிரிவு பிரிகேடியர் எஸ்.ஆர்.மணவதுகே தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, படையினரின் உயிர்களுக்கும், இராணுவத்தளபதியின் உயிருக்கும் பாதுகாப்பு வேண்டியும், தமது நடவடிக்கைகள் வெற்றியடைய வேண்டும் என்று வேண்டியும் சிறிலங்கா இராணுவத்தினர் ஒரு வாரகால பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதம் 2 ஆம் நாள் ஆரம்பமாகிய பூசைகள் இந்த வாரம் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தின் புத்த பா…

  14. Started by Iraivan,

    காலக்கணிப்பு http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=090307

    • 0 replies
    • 915 views
  15. இலங்கைகடல் எல்லையில் மீன்பிடித்த தமிழ் நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் கருணாநீதி ஆவேசம்

    • 1 reply
    • 1.3k views
  16. கடத்தல்களுக்கான பொறுப்பை சிறிலங்கா அரசு ஏற்க வேண்டும்: அனைத்துலக மன்னிப்புச் சபை ஜஞாயிற்றுக்கிழமைஇ 11 மார்ச் 2007இ 05:29 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்கள்இ படுகொலைகள்இ தடுத்து வைத்தல்இ மனித உரிமை மீறல்கள் போன்றன தொடர்பாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் பதிலை தரவேண்டும் என அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளதுடன் சிறிலங்காவில் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்துலக மன்னிப்புச்சபை சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: …

    • 1 reply
    • 789 views
  17. இராணுவத்தை தேடியழிக்கும் நடவடிக்கை தொடர்கிறது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக வெற்றிகரமான முறியடிப்புத் தாக்குதலை நடத்திய விடுதலைப் புலிகள், நேற்று மாலை வரை தேடியழிக்குக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினருக்கு எதிரான இந்த முறியடிப்புச் சமர் நேற்றிரவுவரை தொடர்ந்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத சிறப்பு அதிரடிப் படையினர், பின்வாங்கி சிதறி ஓடியுள்ளனர். நேற்றைய முறியடிப்புத் தாக்குதலில் 36ஆம் கிராமம், வாதகல்மடு, நல்லதண்ணி ஓடை, அடைச்சகல் ஆகிய பகுதிகளில் இருந்து படையினர் விரட்டி அடிக்கப்பட்டனர். தொடர்ந்து சிறப்பு அதிரடிப் படையினரைத் தேட…

    • 0 replies
    • 1.1k views
  18. ஞாயிறு 11-03-2007 03:16 மணி தமிழீழம் [தாயகன்] மட்டக்களப்பு புல்லுமலை முறியடிப்புச் சமரில் கப்டன் குட்டியழகி என்ற பெண் போராளி வீரச்சாவடைந்திருந்தார். இவரது வித்துடல் விடுதலைப் புலிகளின் முழுப் படைய மதிப்புடன் நேற்று மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. நன்றி : பதிவு

  19. 'இலங்கைத் தீவில் இன அழிப்பே இடம்பெறுகிறது': விடுதலைப் புலிகளின் மனித உரிமைகளுக்கான பேச்சாளர். "இலங்கைத் தீவில் தற்போது இடம்பெறுவது மனிதவதை, மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பனவற்றிற்கும் அப்பால், இன அழிப்புக் கூறுகளைக் (Genocide) கொண்டுள்ளது" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான பேச்சாளர் திருமதி. செல்வி தெரிவித்துள்ளார். "ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் அமைப்பின் (UN Human rights council) 4 ஆவது கூட்டத்தொடர், தமிழீழத் தாயகப் பகுதிகளில் இடம்பெறும் பெரும் மனிதவதை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக தீவிர கவனத்தைச் செலுத்தி தாக்கமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்றும் அவர் நம்பிக்கை தெரி…

  20. விசாரணை, விடுதலையை வலியுறுத்தி வெலிக்கடைக் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம். - பண்டார வன்னியன் Saturday, 10 March 2007 15:45 கொழும்பு வெலிக்கடைச் சிறையில் உள்ள 42 தமிழ்க்கைதிகள் இன்று காலை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். விசாரணைகளை துரிதமாக நடத்தி தம்மை விடுதலைசெய்ய வேண்டும் எனவும் தம்மீதான விசாரணைகள் தாம் கைதுசெய்யப்பட்ட மாவட்டத்திலேயே நடத்தப்படவேண்டும். என்ற இரு கோரிக்கைகள் இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் தம்மீதான விசாரணைகள் நடத்தப்படும்போது சாட்சிகள் கொழும்புக்கு வருவதில் பெரும் இடர்பாடுகளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இருப்பதை உண்ணாவிரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பாக சிறிலங்க…

  21. அளவெட்டியில் கிணற்றில் இருந்து பல்கலைக்கழக மாணவியின் சடலம் மீட்பு. யாழ் அளவெட்டிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம், கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கற்கை நெறியின் முதலாம் ஆண்டு மாணவியான 21 வயதுடைய மயூறா என்பவரது சடலமே நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது. -Pathivu-

    • 4 replies
    • 2.4k views
  22. புலிகளின் பகுதியை நோக்கி மட்டக்களப்பில் பாரிய படை நகர்வு [10 - March - 2007] * உக்கிரமான தாக்குதலால் ஆயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர்வு மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி நேற்று முன்தினம் வியாழக்கிழமை பாரிய படை நகர்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேநேரம், இடம்பெற்ற உக்கிரமான தாக்குதலில் பொதுமகனொருவர் கொல்லப்பட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர். இத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்துள்ளனர். …

    • 5 replies
    • 2.3k views
  23. மூதூர் படுகொலைகள்: சிறிலங்கா அரசை சாடியுள்ளது அனைத்துலக சட்டவியலாளர் ஆணைக்குழு ஜளுயவரசனயல ஆயசஉh 10 2007 06:18:06 யுஆ புஆவுஸ ஜயாழ் வாணன்ஸ திருணோமலை மூதூரில் தொண்டர் அமைப்பின் பணியாளர்கள் 17 பேரை படுகொலை செய்தவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்பதை நாம் நம்புகிறோம். ஆனால் அதனை உறுதிப்படுத் முடியாது என அனைத்துலக சட்டவியலாளர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்டில் படுகொலை செய்யப்பட்ட பணியாளர்களின் வழக்கை விசாரித்த அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் போன்றவர்களை சந்தித்த பின்னர் அனைத்துலக சட்டவியலாளர் ஆணைக்குழுவின் அவதானிப்பாளரான மைக்கேல் பிரபாம் ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது:…

    • 0 replies
    • 791 views
  24. தென்மராட்சி படையினரின் நிலைகள் மீது எறிகணை வீச்சுத்தாக்குதல். - பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 10 ஆயசஉh 2007 10:35 தென்மராட்சிப் பகுதியிலுள்ள சிறிலங்காப் படையினரின் முகாம்கள் விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. நேற்றைய தினமும் படைமுகாம்கள் பல புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகின. படையினரின் தாக்குதலுக்கு பதிலடியாக விடுதலைப்புலிகளின் தாக்குதல் இடம்பெற்று வருகின்றது. இந்தவகையில் நேற்றுக் காலையும் மிருசுவில், உசன், வரணி, ஆகிய பகுதிகளிலுள்ள படைமுகாம்கள் புலிகளின் எறிகணை வீச்சுத் தாக்குதலுக்கு இலக்கானமை குறிப்பிடத்தக்கது. மேலும் கிளாலிப்பகுதியில் நேற்ற முன்தினம் இரவு இடம்பெற்ற தாக்குதல்களில் படையினர் பாரிய இழப்புக்கள…

    • 1 reply
    • 1.3k views
  25. தொடர் தாக்குதல்களால் சுடுகாடாக மாறியுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேசம். சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் வான் மற்றும் எறிகணை வீச்சுத் தாக்குதல்களினால் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசம் சுடுகாடாக மாறியுள்ளது. பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் இருந்து கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மோதல்கள் வெடித்த பின்னர் மக்கள் முற்றாக இடம்பெயர்ந்தனர். இப்பிரதேசத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பல வழிபாட்டு ஸ்தலங்கள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் கட்டடங்கள் என்பன எறிகணை மற்றும் வான் தாக்குதல்களினால் அழிக்கப்பட்டுள்ளன. மக்கள் குடியிருப்புக்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. மக்கள் இடம்பெயர்ந்து இருப்பதன் காரணமாக பச்சிலைப்பள்ளி பிரதேசம் சிறிலங்காப் படையிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.