Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தற்போதைய வெளிவிவாகர அமைச்சர் மங்கள சமரவீர வெளிவிகார அமைச்சினை தொடாந்தும் தக்கவைப்பதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார்.வெளிவிவாகர அமைச்சு பதவி பறிக்கப்படுமானால் அரசில் இருந்து வெளியேறப் போவதாக கடும் எச்சரிக்கையினையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார் இந்த நிலையில் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் வெளிவிவகார அமைச்சு பதவிக்கு ஆர்வம் காட்டி வருகின்றார் அரசாங்கத்துடன் இணையவுள்ள ஐக்கிய தேசிய கட்;சியின் மாற்றுக் குழுவினருக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத் தரப்பிற்கும் இணைப்பு பாலமாக திகழும் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொரொகொட வெளிவிவாகர அமைச்சினை பெறுவதில் அதிக அக்…

  2. புரிந்துணர்வு ஒப்பந்தமா? கட்சித்தாவலா? மகிந்த முடிவு எடுக்கட்டும்: ஐ.தே.க அரசின் பக்கம் எமது உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டால் அரசிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவடைந்து போகும் என அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நடைபெறவுள்ள சந்திப்பில் தெரிவிக்கவுள்ளதாக அறியப்படுகின்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை அரசின் பக்கம் உள்வாங்குவது தொடர்பாக மகிந்த, தனது அமைச்சர்களுடன் ஆராய்ந்தாக வெளிவந்த தகவல்களை அடுத்து, கடந்த 11 ஆம் நாள் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த செயற்குழுக் கூட்டத்தில் செயற்குழுத்தலைவர் ருக்மன் சேனநாயக்க, பொதுச்ச…

  3. ஈரானுக்கு அணுவாயுத விற்பனை: சிறிலங்காவிற்கு தொடர்பு [ஞாயிற்றுக்கிழமை, 14 சனவரி 2007, 13:29 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் உயர்ந்த தொழிலதிபர் ஹரி ஜெயவர்த்தனா சர்வதேச அரங்கில் அணுவாயுத பேரத்தில் ஈடுபட்டு தற்போது சிறையில் உள்ள சிறிலங்காவை சேர்ந்த தொழிலதிபரான புகாரி சயீட் அபு தகீர் என்பவரிடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகிஸ்தானின் அணுகுண்டின் தந்தை என வர்ணிக்கப்படும் கலாநிதி அப்துல் காடீர் கான் எழுதிய கடிதத்தின் மூலம் முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவிற்கும் ரணிலுக்கும் இந்த விடயம் தெரிந்திருந்தது எனவும் கூறப்படுகின்றது. கானும் தகீரும் ஈரான், லிபியா, வடகொரியா பேன்றவற்றிற்கு அணுவாயுத தொழில்நுட்பத்தை …

  4. காத்தான்குடி ஆரையம்பதி ஐந்தாம் கட்டையில் நேற்றுக் காலை ஏற்பட்ட முறுகல் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு பிரிவினரக்கும் இடையிலான மோதல் ஒன்றின் போது கருணா அணியினர் முஸ்லிம் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயொகம் செய்துள்ளனர் அத்துடன் ஈருருளிகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தியதாக மட்டக்களப்பு சிரேஸ்ட காவல்துறை அதிகாரி மெக்சி புரக்டர் தெரிவித்தார் இதனையடுத்து இரண்டு தரப்புக்கும் இடையில் இணக்கம் ஏற்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார் எனினும் காத்தான்குடி நகரில் வியாபார தளங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன. பிரதேசத்தில் அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். pathivu.com http://www.pathivu.com/inde…

    • 0 replies
    • 1.3k views
  5. இனமோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்: இத்தாலி அமைச்சர். இத்தாலி அரசின் வெளிவிவகாரப் பிரதியமைச்சர் கியாணி வெனாட்டி அண்மையில் சிறிலங்காவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஜனாதிபதியை சந்தித்துள்ளார். இதன்போது சிறிலங்காவில் மீண்டும் நல்லதொரு சூழ்நிலை ஏற்பட தமிழீழ விடுதலைப் புலிகளோடு சிறிலங்காஅரசு பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதாக சர்வதேச ஜக்கிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கடந்த 20 வருடகால இனமோதல்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் வலியுருத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு இத்தாலி அதியுச்ச மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாகவும் வடக்கு கிழக…

  6. ஸ்கொட்லண்ட் யார்ட் காவல்துறையினர் விசாரணையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் படுகொலையை குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை ஸ்கொலண்ட் யார்ட் காவல்துறையினர் முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். இதுதொடர்பில் பிரித்தானிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கொழும்பில் சிறீலங்கா காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கடந்த 10 நாட்களுக்கு ஸ்கொட்லண்ட்யார்ட் காவல்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது திட்டமிட்டபடி பணிகள் முடிவடைந்த நிலையில் நாடு திரும்பும் ஸ்கொட்லண்ட் யார்ட் காவல்துறை அணியினர் சிலதடயங்களை இலண்டனிற்கு எடுத்து வந்து ஆய்வுக்கு உட்படுத்துவார்கள் என பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது. -Pathivu-

  7. அரசாங்கத்துடன் இணைவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பூரண இணக்கத்தை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினருக்கும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பசில் ராஜபக்ஷ உள்ளடங்கிய அரச தரப்பு குழுவினருக்கும் இடையில் இதற்கான பேச்சுவார்த்தை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. வெள்ளியிரவு 8.30 மணிக்கு ஆரம்பித்த இந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்தது. பேச்சுவார்த்தையின் இறுதியில் விருந்துபசாரமும் இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அரச தரப்பி…

  8. யாழ் வேம்படியில் விசாரணைக்காகச் சென்ற இளைஞன் சிறிலங்காப் படையினரால் சுட்டுக்கொலை. யாழ்ப்பாணம் வேம்படி சிறிலங்காப் படையினரின் முகாமிற்கு விசாரணைக்காகச் சென்ற இரு இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வேம்படியில் அமைந்துள்ள சிறிலங்காப் படையினரின் முகாமிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டதற்கிணங்க இரு இளைஞர்கள் நேற்று காலை 11.00மணியளவில் சென்றிருந்தனர். இவ்வாறு விசாரணைக்காகச் சென்ற இவ்விரு இளைஞர்கள் படை முகாமிற்குச் சென்ற சிறிது நேரத்தில் இவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொண்டார். நேற்று இராணுவ முகாமிற…

  9. சந்திரிகா நடத்திய இரகசியக் கூட்டம். சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உயர்நிலை அமைச்சர்களுக்கும் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரதுங்காவிற்கும் இடையிலான இரகசியச் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இச்சந்திப்பு நேற்று சனிக்கிழமை சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்காவின் இல்லத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலைமைகள் ஆராயப்பட்டதுடன், மகிந்த ராஜபக்சவினால் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசில் சேர்க்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், அமைச்சரவை மறுசீரமைப்பு, வெளியுறவுத்துறைச் செயலாளர் பதவிக்கான நியமனத்தில் மங்கள சமரவீரவின் பரிந்துரை ஓரங்கட்டப்பட்டது என்பனவும் விவாதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. …

  10. திருமலை துறைமுகம் யார் வசமோ அவர்கள் பக்கம் சாயப்போகும் சர்வதேசம். இலங்கையின் இனப்பிரச்சினை இப்போது தீர்ந்து விடாது என்ற கருத்து வலுப்பெற்றுள்ள இத்தருணத்தில் கூடவே பாரிய முழுமையான யுத்தத்திற்கான அறிகுறிகளும் வெகுவாக தோற்றம் பெற்று நிற்கின்றது. சமாதானத்திற்கான அறிகுறிகள் தொலைதூரம் சென்றுகொண்டிருக்கும் இவ்வேளை சர்வதேசமும் அப்படியே செல்வதாகவே உணரப்படுகின்றது. ஏனெனில் இன்றைய சூழலில் நடைபெறும் யுத்த நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் எத்தனையோ மடங்கு சிறியதான அசம்பாவிதங்கள் நடைபெறுகையில் அழுத்தங்களை அழுத்தமாக தெரிவித்த சர்வதேசம் இப்போது அழுத்தங்களை ஊடகங்களுக்கேனும் கொடுப்பது இல்லை. ஒரு துப்பாக்கி ரவை சுடப்பட்டால் அதனை யுத்தநிறுத்த மீறலாக பதிவு செய்து அறிக்கைகளை வெளியிடும் போர் நி…

    • 6 replies
    • 3.9k views
  11. ஞாயிற்றுக்கிழமை, 14 சனவரி 2007, 04:35 ஈழம் (அ.அருணாசலம்) நோர்வே ஓஸ்லோவின் அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிப்பது குறித்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கையில் அது மற்றுமொரு பின்னடைவை சந்தித்துள்ளது. அனைத்துக்கட்சி குழுத்தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரனவினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத்திட்ட அறிக்கையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த பிழையானது என நிராகரிக்க முடிவு செய்துள்ளார். கோபமடைந்த மகிந்த, நாட்டைப் பலவீனப்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்ததுடன், அரசு வெளிப்படையாகவே விதாரனவின் திட்டத்தை கைவிட முடிவெடுத்துள்ளதகவும் கூறப்படுகின்றது. விதாரனவின் அறிக்கையில் வடக்கு - கிழக்கு பிரிப்பு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களில் விவாதிக்க வேண்டும் என தெரி…

  12. சிறிலங்கா அரசாங்கத்தினால் ஏ-9 பாதை மூடப்பட்ட பின்னர் 2006 ஆண்டில் யாழ். குடாநாட்டில் உணவுப்பொருட்களின் விலைகள் 800 விகிதத்தால் உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. வடக்கு - கிழக்கு நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மீன், மரக்கறி, முட்டை என்பவற்றின் விலைகள் பூச்சியத்தில் இருந்து 100 விகிதமாகவும் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகரித்துள்ளது. யாழ். குடாநாட்டில் மீனின் விலை 800 விகிதத்தால் உயர்ந்துள்ளது. அரிசி, பருப்பு, பாண் மற்றும் மண்ணெண்ணை அகியவற்றின் விலைகள் கடந்த இரு வாரங்களில் ஓரளவு உறுதித்தன்மைக்கு அல்லது குறைவடையும் நிலைக்கு வந்துள்ளன. எனினும் தேங்காய் எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்…

  13. அதிகாரப் பகிர்வு பற்றி தமிழர் தரப்பிலிருந்து தெளிவான உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் நாடாளுமன்றில் நேற்று ஹக்கீம் அறிவிப்பு. வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் நிபந்தனையின்றி ஆதரவு தரவேண்டும் என்றுகொருவதை ஏற்க முடியாது. இணைந்த வடக்கு, கிழக்கிற்குள் முஸ்லிம்களுக்கு வழங்கபடும் அதிகாரம் என்ன என்பது பற்றித் தமிழர் தலைமைகள் தெளிவான உறுதி மொழிகளைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இணைப்புக்கு ஆதரவு கோரினால் ஒருபோதும் நிபந்தனைகளற்ற முறையில் முஸ்லிம்கள் இணைப்புக்கு ஆதரவு வழங்க முன் வரமாட்டார்கள். சுடர் ஒளி தலைப்புச் செய்தியின் ஒரு பகுதி நன்றி சுடர் ஒளி 11 ஜன 2007

    • 7 replies
    • 2.2k views
  14. சனி 13-01-2007 19:37 மணி தமிழீழம் [செந்தமிழ்] யாழ்பாணத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை யாழ்பாணம் 1ம்குறுக்கு தெரு, வேம்படி மகளீர் பாடசாலைக்கு முன்பாக உயர்பாதுகாப்பு வலயத்தில் இன்று சனிக்கிழமை காலை 11.15 மணியளவில் இளைஞர் ஒருவர்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இராணுவத்தை தாக்க முற்பற்ட போது அவர்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கொல்லப்பட்ட இளைஞரின் உடலமானது யாழ்பாண ஆசிரியர் வைத்தியசாலை இனம்காணப்படவதற்காக வைக்கப்பட்டுள்ளது அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பதிவு.கொம்

  15. வாகரை வாழ் மக்களை வாழ வைக்க அரிய சந்தர்ப்பம் CANADATRO&CTR சேர்ந்து வாகரை வாழ் மக்களை வாழவைக்க உடனடி நிவாரண நிதி சேகரிக்கிறார்கள்.வெளி நா டுகளில் உள்ளவர்கள் கடனட்டை மூலமாக நிதி கொடுக்கலாம்.தொடர்புகளுக்கு CTR24.COM.CTR NO 1 416 264 1423 TRO 1416 4185697

  16. யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சிறீலங்கா படையினர் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை. நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் அமைந்துள்ள 513வது இராணுவமுகாமினுள் படையினர் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக இராணுவ முகாம் அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதேவேளை சம்பவ இடத்துக்கு விஐயம் செய்த யாழ்மாவட்ட நீதிபதி திருநாவுக்கரசு இராணுவமுகாம் அலுவலர்களின் முரண்பாடான தகவல்களும் ஆதாரங்களின் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். -Pathivu-

    • 1 reply
    • 1.2k views
  17. இலங்கைக்கு இத்தாலியின் நிதி உதவி மு.சுப்பிரமணியம் இத்தாலி அரசு சிறிலங்காவில் மீண்டும் நல்லதொரு சூழ்நிலை ஏற்பட தமிழீழ விடுதலைப்புலிகளும் சிறிலங்கா அரசும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கேட்டூள்ளது சர்வதேச ஜக்கிய ஊடகம் தெரிவித்துள்ளது. அண்மையில் இத்தாலிய வெளிவிவகார பிரதி அமைச்சர் கியாணி வெனாட்டி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவை சந்தித்து பேசியுள்ளார் . 20 வருடகால இன மோதல்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் வலியுருத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாலிய வெளிவிவகார பிரதி அமைச்சர் அதியுச்ச மனிதாயின நடவெடிக்கைகளும் உதவும் முகமாகவும் வடக்கு கிழக்கு மோதல்களில் இடம் பெயர்ந்து வாழும…

  18. சித்திரைப் புதுவருடத்துக்கு முன்னர் கிழக்கில் புலிகளின் பலம் முற்றாக ஒழிப்பு [12 - January - 2007] [Font Size - A - A - A] எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நிகழும் சிங்கள, தமிழ் புதுவருட தினக் கொண்டாட்டங்களிற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் பலத்தை முற்றாக ஒழிப்பதே பாதுகாப்புப் படையினரின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு கிழக்கில் புலிகளின் பலம் முறியடிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ளூராட்சி நிர்வாகத்தை ஆரம்பிப்பதற்கும் கூடுதல் அதிகாரங்கள் கொண்ட மாகாண சபையை அமைப்பதற்கும் அதற்காக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கும் சாத்தியம் உள்ளது. கிழக்கு மாகாணப் பிரதேசங்களை புலிகள் இயக்கத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து …

  19. இராணுவத்தினரிடம் பாதுகாப்புக்கோரும் துணை இராணுவக்குழு. தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான தாக்குதல்களை அடுத்து சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் கிழக்கில் உள்ள தமது அரசியல் அலுவலகங்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்குமாறு அரசைக் கேட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை மாவட்டங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்த கருணா குழுவினரின் ஐந்து அலுவலகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததாகவும் ஆறு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் தமது உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய முழுப்பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று கருணா குழுவினரின் பேச்சாளர் அசா…

  20. [11 - January - 2007] [Font Size - A - A - A] பிரித்தானிய உள்நாட்டு அமைச்சகம் 2006 மார்கழி மாதம் 13 ஆம் திகதி ஸ்ரீலங்காவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்குவதாக தீர்மானித்தது. பிரித்தானியாவில் வாழுகின்ற இலங்கைத் தமிழர்களிடம் மட்டுமல்ல இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியிலும் இந்தச் செய்தி மிகுந்த பரபரப்பை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலிருந்து ஸ்ரீ லங்கா நீக்கப்பட்டமை இலங்கையருக்கு ஏதோ வதிவிட உரிமை உடனடியாக வழங்கப்படப் போவது போன்ற மாயையை ஒரு சிலர் ஏற்படுத்தி வருகின்றார்கள். இதனை நம்பி பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் ஒரு பாரிய அலை வீசுவதாக அறியப்படுகிறது. இலங்கையில் இன்று உள்ள போர்க்காலச் சூழ…

    • 2 replies
    • 1.5k views
  21. வாகரை நோக்கி படையினர் எறிகணைத் தாக்குதல்: ஐவர் படுகாயம். திருமலை கல்லாறு இராணுவ முகாமிலிருந்து இன்று மதியம் 12.30மணியளவில் படையினர் வாகரை பகுதி பாற்சேனைக் கிராமம் மீது எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர் இத் தாக்குதலில் ஐந்து அப்பாவிப் பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். புன்னையடியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் சுஜீகரன் (13) அவரது சகோதரரான விக்கினேஸ்வரன் திலகராசா (16) கதிரவெளியைச்சேர்ந்த பொன்னையா தியாகராசா (36) அதே கிராமத்தைச் சேர்ந்தவர்களான கந்தையா சிவராசா (47) வீரபத்திரன் வைரவலிங்கம் (42) ஆகியோரே படையினரின் எறிகணை வீச்சில் படுகாயமடைந்த நிலையில் வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகரைக்கும் வெளியிடங்களிற்குமான தரைவழிப்பாதை (ஏ-15) படையினரால் மூடப்ப…

  22. சிறீலங்காவிற்கான நிதிநிறுத்தம் தொடர்பில் வெளியான தகவல் குறித்து ஜேர்மனிய தூதரகம் விளக்கம். சிறீலங்காவிற்கு நிதியுதவிகள் நிறுத்தம் தொடர்பில் வெளியான செய்திகள் தவறானவை என கொழும்பில் உள்ள ஜேர்மனிய தூதரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் போர்நிறுத்த மீறல்கள் தொடர்பாகவும், ஏனைய இடையூறுகள் காரணமாகவும், கடந்த ஆண்டு ஜேர்மனியின் அனுசரணையின் கீழ் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்க முடியவில்லை எனவும் இதனால் மேலதிக நிதியொதிக்கீடுகளை மேற்கொள்வதை இடைநிறுத்தியுள்ளதாகவும் அக்குறிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால உதவிகள் கடந்த காலங்களை போலல்லாது புதிய அணுகுமுறையின் கீழ் வழங்கப்படும் என்றும் இதற்கமைய வடக்குகிழக்கில் பாதிக்கப்பட…

  23. கொழும்பு வந்த பிரணாப் முகர்ஜி தெளிவாகப் புரிந்த "ஒரு விடயம்" இலங்கைக்கு சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெளிவாகப் புரிந்துகொண்ட ஒரு விடயத்துடன் நாடு திரும்பியிருக்கின்றார். அதாவது கொழும்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுக்கள் அண்மைக்காலத்தில் நடைபெறும் சாத்தியங்கள் இல்லை என்பதே அவர் புரிந்துகொண்ட ஒரு விடயம் என 'ஐ.ஏ.என்.எஸ்' செய்திச்சேவை தெரிவித்திருக்கின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் புதுடில்லியில் நடைபெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்க கொழும்புக்கு வருகை தந்த பிரணாப் முகர்ஜி, மகிந்த ராஜபக்சவுடன் தனியாகப் பே…

  24. வெள்ளி 12-01-2007 21:27 மணி தமிழீழம் (பதிவு நிருபர்) போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை மனித உரிமை மீறல்கள் விடயத்தில் தெற்காசியாவில் ஏனைய நாடுகளை வி;ட முதலிடம் பெற்றுள்ளதாக கியுமன் ரைட்ஸ் வோட்ச் எனப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் கடந்த வருடம் மோசமாகி இருந்தன. தெற்காசியாவில் இலங்கை கடந்த வரும் மனித உரிமைமீறல் விடயத்தில் முதல் இடம்பெறுவதற்கான காரணம்இ தமிழிழ விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களேயாகும். இதன்போது சர்வதேச மனித நேய சட்டங்களும் மற்றும் மனித உரிமை விடயங்களும் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. படையினரால் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் மீத…

  25. சனி 13-01-2007 05:03 மணி தமிழீழம் [மயூரன்] நெதர்லாந்து சோவா நிறுவனம் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் சிங்கள தீவிரவாதத்தை தூண்டும் செயல்கள் என ஐரோப்பிய ராஐதந்திரிகள் கண்டனம் வெளியிட்டுள்ளார்கள். ரொய்ட்ரர் செய்திச் சேவைக்கு செவ்வி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஐதந்திரி ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சீறீலங்கா அரசாங்கம் முன்வைப்பது ஆத்திரமூட்டும் செயல் என கண்டனம் வெளியிட்டுள்ளார். மனிதநேய பணிகள் தேவைப்படும் இடத்தில் இவ்வாறு குற்றச்சாட்டுகள் முன்வைப்பது மனிதநேயபணிக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ராஐதந்திரி சுட்டிக்காட்டியுள்ளார். நெதர்லாந்து அரசாங்கமும், ஐரோப்பிய ஒன்றி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.