ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142742 topics in this forum
-
பிரதியமைச்சர் மேர்வின் மீது ஏற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு யுத்தத்தை நிறுத்த வலியுறுத்தி ஐக்கிய மக்கள் இயக்கத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பு நுகேகொடை சந்தியில் நடத்தப்படவிருந்த பொதுக் கூட்டம் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் சென்ற கோஷ்டியினால் குழப்பப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.இச்சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் தாக்கப்பட்டுள்ளனர். நுகேகொடை சுப்பர்மார்க்கெட் சந்தியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்தப் பொதுக் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. யுத்தத்தை உடன் நிறுத்தி அதிகாரப் பரவலாக்கல் மூலம் வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியே இந்தப் பொதுக் கூட்டம் நடைபெறவிருந்தது. க…
-
- 1 reply
- 932 views
-
-
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவிக்கான போட்டியில் இலங்கைக்கான வாய்ப்பை இந்தியா நாசமாக்கியதாக ஜயந்த தனபால தெரிவித்த குற்றச்சாட்டை இந்திய இராஜதந்திரி சசிதரூர் நிராகரித்திருக்கிறார். இலங்கை வேட்பாளருக்கு சிறிதளவு வாய்ப்பு இருக்குமென்று தான் கருதியிருந்தால் இந்த போட்டிக்குள் நுழைந்திருக்கவே மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகள் ஒன்றுபட்டு ஒரு வேட்பாளரின் பின் அணி திரண்டிருப்பது கட்டாயமானது. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் பரந்தளவு ஆதரவு இருப்பது சந்தர்ப்பம் கிடைப்பதற்கு அவசியமானதாகுமென தனபாலவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில் சசி தரூர் தெரிவித்திருக்கிறார். உறுதியான ஆதரவை எந்த வேட்பாளர் பெற்றிருக்கிறார் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்…
-
- 0 replies
- 1k views
-
-
சிங்களத்தில் ஏசினால் கண்காணிப்புக் குழுவிற்கு விளங்குமா? ஹெகெலிய ரம்புக்வெல மீது விமல் வீரவன்ச சீற்றம். - பண்டார வன்னியன் Wednesday, 10 January 2007 12:20 யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை தேவையில்லாமல் தொடர்ந்தும் கடைப்பிடிக்காமல் கண்காணிப்புக் குழுவினரையும் நாட்டை விட்டு வெளியேற்றி புலிப் பயங்கரவாதத்தை தோற்கடிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும் என ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தம் புலிகளுக்கு சம அந்தஸ்த்து வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐந்து வருட காலம் நிறைவடையப்போகின்றது. இவ்வாறு அதி…
-
- 0 replies
- 1k views
-
-
இருசாராரும் சமாதான பேச்சுவார்த்தைக்கு வருவதன் மூலமே இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும்: இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் - பண்டார வன்னியன் Wednesday, 10 January 2007 12:27 கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் யுத்தம். இலங்கையில் எவ்வித நன்மையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. எனவே உடனடியாக யுத்தத்தை முற்றாக நிறுத்தி சம்பந்தப்பட்ட இரு சாராரும் சமாதான பேச்சு வார்த்தைக்கு வருவதன் மூலமே பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வினை எட்ட முடியும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளக் தெரிவித்தார். நேற்று காலை கண்டி டி.எஸ்.சேனாநாயக்கா ஞாபகார்த்த பொது நூலகத்தில் அமைந்துள்ள அமெரிக்க கோனரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவ…
-
- 0 replies
- 730 views
-
-
தென்னிலங்கையில் பொதுப்போக்குவரத்தினை தவிர்க்கும் மக்கள் தென்னிலங்கையில் அண்மையில் பேரூந்துகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களை தொடர்ந்து அரச பேரூந்து மற்றும் தொடரூந்துகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக அரசு அறிவித்த போதும் மக்கள் பொதுப்போக்குவரத்துச் சேவையினை பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது. தனியார் பேரூந்து நிறுவனங்களின் தகவல்களின் படி தாக்குதலின் பின்னர் மக்கள் பேரூந்தை பயன்படுத்துவது 35 வீதம் குறைந்துள்ளதுடன் தொடரூந்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையிலும் கணிசமான வீழ்ச்சி காணப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் தமது சொந்த வாகனங்களை பயன்படுத்துகின்றனர். அரசின் பாதுகாப்பு உறுதிமொழிகளை மக்கள் நம்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. பயணிகளின் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியல் தீர்வு முயற்சியை விரைவுபடுத்துங்கள்: மகிந்தவிடம் பிரணாப் முகர்ஜி சிறிலங்கா அரசு இராணுவ நடவடிக்கைகளை தீவிரமாக்கிய அதே சமயம் இனப்பிரச்சனைக்கு அரசியல் வழிகளில் தீர்வு காணும் நடவடிக்கைகளை மந்தமாக்கியுள்ளது என்று நேற்று செவ்வாய்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3-5 வரை நடைபெறவுள்ள 14 ஆவது சார்க் மாநாட்டிற்கான அழைப்பிதழை மகிந்த ராஜபக்சவிடம் கையளிப்பதற்காக நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறிலங்கா சென்றிருந்தார். இந்த பயணத்தின் போது, இலங்கையில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பான இந்திய அரசின் கருத்தையும் வெளியுறவுத்துறை அமைச்ச…
-
- 0 replies
- 920 views
-
-
தனது அரசியல் நிலையை ஸ்திரப்படுத்த யுத்த வெற்றிகளை நாடுகிறார் மஹிந்தா கிழக்கில் புலிகளைத் தோற்கடித்து,இந்த மாகாணத்தை முற்றாக விடுவித்த பின்னர், அதனால் கிடைக்கும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தவும் யுத்த வெற்றிகளைத் தமது அரசியல நிலைமையை ஸ்திரப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திட்டமிட்டிருக்கின்றார் எனத் தெரிகின்றது. லண்டனிலிருந்து வெளியாகும் ‘தபினான்ஸியல் டைம்ஸ்’ பத்திரகையில் ஜோ.லெகி என்பவர் வரைந்த அரசியல் கட்டுரையில் இவ்வாறு மதிபாய்வு செய்யபட்டிருக்கின்றது. அக் கட்டுரையின் முக்கிய சாராம்சங்கள் வருமாறு : ஜனாதிபதி மஹிந்தத தனது வெற்றிக்குத் தாமே இரையகும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியவராகியிருக்கின்றா…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாடாளுமன்றத்தில் நேற்று விமல் வீரவன்ஸ அறிக்கை விடுத்து உரை. தேசத்திற்கு விரோதமான முறையில் செய்து கொள்ளபட்ட – புலிகள் தொடர்ந்தும் வன்முறை நடவடிக்கைகளை முன்னெடுததுச் செல்லக் கருவியாகப் பயன்படுத்துகின்ற – சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடாப்பட்டு 5 வருடங்களை நிiவு செய்கின்றது. ஐந்து வருடங்கள் முடிவடையும் முன் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை அரசு கிழித்தெறிய வேண்டும். இவ்வாறு ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ நேற்று நாடாளுமன்றில விசேட அறிக்கையொன்றில் வெளியிட்டு உரையாறுகையில் கூறினார். ... \\யுத்த நிறுத்த ஒப்பந்தம் சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது. அமைதிப் பே…
-
- 0 replies
- 914 views
-
-
வாளைச்சேனையில் கருணா குழுவினர் மூன்று முகாம்கள் தாக்கியழிப்பு: 20க்கு மேற்பட்டோர் பலி! பலர் காயம். செவ்வாய் 09-01-2007 22:43 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] மட்டக்களப்பு வாழைச்சேனையில் அமைந்துள்ள கருணா ஒட்டுக்குழுவினரின் மூன்று முகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் எம்மிடம் கருத்துரைத்துள்ளார். அவர் மேலும் கருத்துரைக்கையில்....... நேற்றிரவு (செவ்வாய்) 8.30 மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 20 தொடக்கம் 25 வரையிலான ஒட்டுக்குழுவினர் பலியாகியதோடு மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவித்த அவர் இது தொடர்பில் முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ள…
-
- 2 replies
- 1.7k views
-
-
இனப் பிரச்சினையில் தலையிட இந்தியாவுக்கு உரிமையில்லை: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகின்றார் இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக படுகொலைகள் பாலியல் வல்லுறவுகளை நடத்திவரும் இந்திய அரசாங்கத்துக்கு இலங்கையின் வடக்கு - கிழக்குப் பிரச்சினையில் தலையிடுவதற்கு எவ்வித உரிமையும் இல்லை என ஜே.வி.பி. தெரிவித்திருக்கின்றது. நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜே.வி.பி. நாடர்ளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினையை இந்திய அரசு போர் ரீதியாகக் கையாள்கின்றது. காஷ்மீர், குஜராத் பகுதிகளில் இந்திய இராணுவத்தினரால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின…
-
- 0 replies
- 840 views
-
-
தமிழ் - முஸ்லிம் நல்லுறவை துணை இராணுவக்குழுவினர் சீரழிக்கின்றனர்: ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லுறவை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினர் சீரழித்து வருவதாகவும் அரசு அவர்களை கட்டப்படுத்த வேண்டும் என்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: கருணா குழுவினரது செயற்பாடுகளை அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றது. அந்த குழுவினர் தொடர்பாக செய்யப்படும் முறைப்பாடுகளை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். வாகரையிலிரு…
-
- 1 reply
- 993 views
-
-
செவ்வாய் 09-01-2007 16:50 மணி தமிழீழம் [சிறீதரன்] கொழும்பை அண்டிய பகுதிகளில் 40 தமிழர்கள் கைது இன்று செவ்வாய்கிழமை கொழும்பை அண்டிய புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 40 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். வத்தளையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பை தொடர்ந்தே மிருவாங்கொட, நிகம்பு, வத்தளை, கம்பகா ஆகிய பகுதிகளில் திங்கட்கிழமை இரவு, மற்றும் செவ்வாய் கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போNது கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். பதிவு
-
- 1 reply
- 1.2k views
-
-
வெருகலை நோக்கி படையினர் எறிகணைத் தாக்குதல்: ஒருவர் பலி- 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் காயம் திருகோணமலை மாவட்டம் வெருகல் சூரநகர்ப் பகுதியை நோக்கி சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இரு சிறுவர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணியளவில் இடம்பெற்றது. ஈச்சிலம்பற்றுப் பகுதியிலிருந்து வாகரைக்கு இடம்பெயர்ந்திருந்த பொதுமக்களில் 550 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ஈச்சிலம்பற்றுப் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கதிரவெளி மற்றும் வாகரைப் பகுதியில் உணவுத் தட்டுப்பாடு தொடர்வதாலும் தொடர் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதனாலும் வாகரையை நோக்க…
-
- 1 reply
- 870 views
-
-
சர்வதேச சமூகத்தின் மீதும் குற்றப் பொறுப்பு விழுகிறது நிட்டம்புவவிலும், ஹிக்கடுவவுக்கு அருகில் மீட்டியகொட விலும் கடந்த வாரத்தில் இருபது மணி நேர வித்தியாசத்தில் இடம்பெற்ற இரு வேறு பஸ் குண்டு வெடிப்புகளில் அப்பாவிப் பொதுமக்கள் 21 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். 75 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கின்றனர். இக்குண்டு வெடிப்புகள் விடுதலைப் புலிகளின் சதி நாச வேலை என்று அரசு குற்றம் சுமத்தியிருக்கின்றது. ஆனால், புலி களோ அதை மறுத்துள்ளனர். இந்தக் குண்டு வெடிப்புகளுக் கும், தங்களுக்கும் தொடர்பு ஏதுமில்லை என அவர்கள் தெரி வித்துள்ளனர். ""புலிகளுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன், எவ்வித ஆதாரங்களும் அற்ற நிலையில் இத்தகைய குற்றச்சாட்டு புலிகள் மீது சுமத்…
-
- 0 replies
- 1k views
-
-
அமைதிப் பேரணியில் பங்கேற்றோர் மீது அமைச்சர் தலைமையிலான குழுவினர் தாக்குதல். கொழும்பில் அமைதிப் பேரணியில் பங்கேற்றோர் மீது சிறிலங்கா அமைச்சர் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தினர். ஐக்கிய மக்கள் இயக்கத்தின் சார்பில் நுகுகொட சந்தியிலிருந்து போருக்கு எதிரான அமைதிப் பேரணி இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அமைதிப் பேரணியில் பங்கேற்றோர் மீது அமைச்சர் மெர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள் பலர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ராவய ஊடகவியலாளர் அஜித் செனிவிரத்ன, அமைதிப் பேரணியினரின் மேடையை நோக்கி நான…
-
- 0 replies
- 851 views
-
-
யாழில் இளம் பெண்ணொருவர் காணமற்போயுள்ளார். யாழ் வைத்தியசாலையில் நோயுற்றிருந்த தமது உறவினரை கடந்த 5ம் திகதி பார்க்கச் சென்ற யாழ் தென்மராட்சி மந்துவில் பகுதியைச்சேர்ந்த வசந்தகுமார் பிரியா(26) என்ற இளம்பெண்ணொருவர் காணமற்போயுள்ளார். கடந்த காலங்களில் பாடசாலைக்குச் சென்ற கிருஷாந்தி, தமது உறவினர் வீட்டுக்குச் சென்ற தர்சினி ஆகியோர் இதேபோன்று காணமற்போய் பின்னர் சிறிலங்காப் படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட
-
- 0 replies
- 842 views
-
-
பிரணாப் முகர்ஜியின் கருத்துக்கள் கொழும்பில் எடுபடுமா? போரை முடிவுக்குக் கொண்டுவந்து விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு காணவேண்டிய தேவை குறித்தும், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் எனவும் இன்று கொழும்பு வரும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புக்குத் தெரிவித்தாலும், அதனைச் செவிமடுக்கும் நிலையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இல்லையென கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுப்பதற்காகவே பிரணாப் முகர்ஜி வருகை தருகின்ற போதிலும், இலங்கையின் இன நெருக்கட…
-
- 3 replies
- 1.7k views
-
-
இழப்புக்கள் தமிழர்களுக்குப் புதிதல்லத் தான், ஆனாலும் இவை மனதைப் வருடுகின்றன! http://uk.news.yahoo.com/09012007/46/photo...s-vavuniya.html http://news.yahoo.com/photo/070109/ids_pho...r3474478506.jpg
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசு வேண்டுமென்றே பொதுமக்களை தாக்குகிறது: ஐ.நா [திங்கட்கிழமை, 8 சனவரி 2007, 18:36 ஈழம்] [பூ.சிவமலர்] சிறிலங்கா அரசு வேண்டுமென்றே பொதுமக்கள் மீது இலக்கு வைத்து தாக்குவதாக கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, நாடு முழுவதும் பொதுமக்களுக்குப் பாதுகாப்புத் தேவை என்று அறைகூவல் விடுத்துள்ளது. அண்மையில் கொழும்பில் 20 உயிர்கள் வரை பலி வாங்கிய பேரூந்து குண்டுவெடிப்புக்களை சுட்டிக்காட்டியிருக்கும் அந்த அறிக்கை, பாதிப்படையக்கூடிய மக்களில் அதிக பாதிப்படையக்கூடியவர்கள் வாகரையில் வாழும் மக்கள் என்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியுள்ளது. வாகரை மக்களுக்கு உதவ ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் தயாராக உள்ளன. ஆனால் வாகரைக்…
-
- 8 replies
- 2.2k views
-
-
வடக்கு கிழக்கு பிரிப்பு தொடர்பில் மக்கள் பொதுப்பணிப்புறக்கணிப்பு. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் நேற்று திங்கட்கிழமை சிறீலங்கா இராணுவத்தால் வடக்கு கிழக்கு பிரிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முடிவு தொடர்பாகவும் தொடர் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களால் மக்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் மக்கள் பொதுப்பணிப் பறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். மட்டக்களப்பு காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, செங்கலடி, வாழைச்சேனை, கொக்கட்டிச்சோலை, கரடியனாறு ஆகிய பகுதிகள் அரசாங்க திணைக்களங்கள், வங்கிகள், பாடசாலைகள், மற்றும் சிறீலங்கா போக்குவரத்து சபை போன்றனவும் மூடப்பட்டிருந்தன. தமிழ் முஸ்லீம் பகுதிகளில் அரசாங்கத்திற்கு சொந்தமான திணைக்களங்கள், வங்கிகள் ஆகியன கல்முனை, கதிரவெளி ஆகியபகுதி…
-
- 1 reply
- 1.2k views
-
-
மன்னார்: குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்றவர் சுட்டுக்கொலை [செவ்வாய்க்கிழமை, 9 சனவரி 2007, 14:20 ஈழம்] [கி.தவசீலன்] நோய் வாய்ப்பட்ட அயலவரின் குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்ற 23 வயது இளைஞர் ஒருவர் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 834 views
-
-
விமானத் தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி ஐ.நா. செயலாளருக்கு கடிதம்: வன்னி கத்தோலிக்க திருச்சபை இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியில் பொதுமக்கள் மீது இடம்பெறும் கொடூரமான விமானத் தாக்குதலை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு நீதி மற்றும் சமாதான துணை ஆணைக்குழுவின் வன்னி கத்தோலிக்க திருச்சபைகளின் பொறுப்பாளர் வண. ஜேம்ஸ் பத்திநாதன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது. நாளுக்கு நாள் இலங்கை தமிழ் மக்கள் பூண்டோடு அழிக்கப்படுகினறனர். இது குறித்து முன்னாள் செயலாளர் நாயகமான கொபி அனானின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். இலங்கை விமானப்படையினரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பொதுமக்கள் பய…
-
- 0 replies
- 793 views
-
-
ஒரு பல்குழல் ஏவுகணை குண்டுத் தாக்குதல் நடாத்த 100 சிங்களவர் வேலையற்றவர்கள் ஆகின்றார்கள் எழுதியவர் சாத்வீகன் Tuesday, 09 January 2007 இலங்கையில் தற்பொழுது நடைபெற்றுவரும் யுத்தம் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதுகாப்பிற்காக செலவிடப்படும் தொகை பன்மடங்காக அதிகரித்து வருவதால் நாடு தாங்க முடியாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கடந்த வருடத்தை விட இந்த வருடம் பாதுகாப்புச் செலவீனம் 28 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த அவர் 2008ம் ஆண்டு பாதுகாப்பு் செலவீனம் 143.46 பில்லியன் ரூப…
-
- 0 replies
- 1.3k views
-
-
இன்று காலை 10.10 மணியளவில் வவுனியா ஓமந்தை முன்னரங்கநிலைகளில் மோதல்கள் இடம்பெற்றள்ளது. இம் மோதல்களில் தமிழீழ விடுதலைப்புலிகளில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா இராணுவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் வவுனியா சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை வீரச்சாவடைத்த விடுதலைப் புலி உறுப்பினரின் உடலத்தை வவுனியா வைத்தியசாலையில் சிறீலங்கா காவல்துறையினரிடம் கையளித்துள்ளதாக அறியமுடிகிறது. கடந்த ஞாயிற்றுக் மற்றொரு சம்பவத்தில் நிருயகுளம், செட்டிக்குளம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடலம் ஒன்று 38 அகவையுடைய அருளம்பலம் தவீந்திரன் இனம் காணப்பட்டுள்ளார். http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=1&
-
- 0 replies
- 1k views
-
-
இராணுவத் தீர்வுக்கு அரசு முயல்வதாக குற்றஞ்சாட்டுகிறார் ஐ.தே.க. செயலாளர். பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வைக் காணும் முயற்சிகளை மேற்கொள்வதில் அரசாங்கம் தீவிரம் காட்டாமல் இராணுவ நடவடிக்கைகளிலேயே முனைப்புக்காட்டி வருவதாகத் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, வடக்கு - கிழக்கு மட்டுமன்றி தெற்கு உட்பட முழு நாடும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகச் சுட்டிக் காட்டியிருக்கின்றது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒரு வழியில் மட்டும் தேடப்பட வேண்டும். ஆனால், அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வென்று கூறிக்கொண்டு போரிலும் முனைப்புக் காட்டுகின்றது. இதன் காரணமாக சமாதான முயற்சிகள் மேலும் பின்தள்ளப்படக்கூடிய அபாயம் இருக்கின்றது எனவும் அக்கட்சி தெரிவித்திருக்க…
-
- 0 replies
- 834 views
-