Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்தம் கொழும்புக்கும் பரவுகிறது ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை. ஹிக்கடுவைக்குச் சமீபமாக ஹினிகம வில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்புச் சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான திஸ்ஸ அத்தநாயக்க நேற்று "உதயனு'க்குக் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: வடக்கு கிழக்கில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் கொழும்பிற்குப் பரவி அதனைத் தொடர்ந்து தெற்கிற்கும் சென்றுள்ளது. இந்த நிலைமையை இப்படியே விட்டால் இது நாடு முழுவதும் பரவி நாட்டை முற்றாக அழித்துவிடும். இவ்வாறான நிலைமைகள் ஏற்படலாம் என்று தெரிந்து அதனைத் தடுப்பதற்காகவே நாம் அரசுடன் பொது இணக்…

  2. கொடகம பஸ் குண்டுவெடிப்பையடுத்து பெருமளவு உல்லாச பயணிகள் வெளியேற்றம் கடந்த சனிக்கிழமை ஹிக்கடுவ கொடகமவில் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து ஹிக்கடுவை உனவட்டுன உல்லாச ஹோட்டல்களில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் பலர் உடனடியாக அறைகளைக் காலி செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வீழ்ச்சி கண்டிருந்த சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்புவதில் வெற்றி கண்டு வருகின்றசூழ்நிலையில் உல்லாச பயணிகளின் முக்கிய கேந்திரங்களிலொன்றாக விளங்கும் ஹிக்கடுவையில் ஏற்பட்டிருக்கும் இந்த குண்டுவெடிப்பு அசம்பாவித சம்பவமானது உல்லாச பயணத்துறைக்கே அச்சுறுத்தல் விடுப்பதாக அமைந்துள்ளது என ஹிக்கடுவை நகரசபை …

  3. தேர்தலில் ஜே.வி.பி. தனித்தே போட்டியிடும் விஜித்த ஹேரத் எம்.பி. தெரிவிப்பு. அரசாங்கம் திடீரென பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தினால் அதனை எதிர்கொள்வதற்கு ஜே.வி.பி. தயாராகவே இருக்கின்றது. பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறுமானால் அதில் எமது கட்சி தனித்தே போட்டியிடும். எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது அர்த்தமற்ற விடயமாகும் என்று ஜே.வி.பி.யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். -Tamilwin-

  4. ஏங்சுலா மக்கரல் ஒரு நவநாசி: ஜாதிக ஹெல உறுமய ஆலோசகர் சம்பிக்க ரணவக்க. ஜேர்மனியின் ஆட்சியாளரான கிறிஸ்தவ கட்சித்தலைவி ஏங்சுலா மக்கரல் ஒரு நவநாசி என்று ஜாதிக ஹெல உறுமய ஆலோசகர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியதாவது: ஜேர்மனியின் புதிய ஆட்சியாளர் ஒரு நவநாசி. அவர் ஹிட்லருக்கு சார்பானவர். அதனால் தான் அவர் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்படுகிறார். அவர்களுக்கு சார்பாக செயற்பட்டு சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் இயங்குகின்றார். சிறிலங்காவிற்கு எதிராக பொருளாதார நெருக்கடிகளையும் கொடுக்க அவர் முயல்கின்றார் என்றார் சம்பிக்க ரணவக்க. -Puthinam-

    • 4 replies
    • 1.7k views
  5. யாழ் குடாநாட்டின் வடமராட்சி பகுதியில் கைக்குண்டுத் தாக்குதல். செவ்வாய் 09-01-2007 02:42 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் குடாநாட்டின் வடமராட்சி பகுதியில் நேற்று பரவலாக பல இடங்களில் கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பிற்பகல் முதல் மாலை வரையிலான காலப்பகுதியினுள் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிகண்டி ஆலடிப்பகுதி, யாழ்ப்பாண வைத்தியசாலை வீதியின் முதலாம் கட்டைப்பகுதி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் நுளைவாயில் மற்றும் கரவெட்டி வதிரிப் பகுதி களிலேயே இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. எனினும் இந்த தாக்குதல்கள் குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை.

  6. இலக்கு வைக்கப்படும் மக்கள் புலிகளுக்கெதிரான போர் என்ற போர்வையில் தினமும் அப்பாவித் தமிழர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர். விமானத் தாக்குதல், ஷெல் தாக்குதல், துப்பாக்கிச்சூடு, ஆட்கடத்தல், காணாமல் போதலென இது தொடர் கதையாகிவிட்டது. வடக்கு - கிழக்கில் யுத்தம் தீவிரமடைந்த நிலையில் அப்பகுதிகளிலிருந்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் வெளியேறிவிட்டது. யுத்தம் முடிவுக்கு வரும்வரை அவர்கள் மீண்டும் பழைய இடங்களுக்குத் திரும்பும் சாத்தியமில்லை. வெறுமனே எழுதப்பட்டதொரு ஆவணமாக மட்டுமே போர் நிறுத்த உடன்படிக்கையிருந்த நிலையில் வடக்கு - கிழக்கிலிருந்து கண்காணிப்புக் குழு விலகியதன் மூலம் நாட்டில் போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டது மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள…

  7. சிறிலங்கா தொடர்பான அலன் றொக்கின் அறிக்கை ஜனவரி 15 இல் ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் சமர்ப்பிப்பு. சிறிலங்கா தொடர்பான விவகாரங்களை ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் சபையினால் சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்டிருந்த சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி அலன் றொக் சிறிலங்கா தொடர்பான தமது இறுதி அறிக்கையினை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கண்டிப்பாக தமக்கு எதிரானதாகவே இருக்கும் என்று எதிர்வு கொண்டுள்ள சிறிலங்கா அரச தரப்பு வட்டாரங்கள், இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் முன்னர் இது சம்பந்தமாக தம்மாலான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. சிறுவர் …

  8. அம்பாறை காஞசிரங்குடா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் சிறீலங்கா விசேட அதிரடிப்படையனர் ஊடுருவி தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தபோது இடம்பெற்ற மோதலில் 3 அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாக அம்பாறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல் சுமார் ஒருமணிநேரம் நீடித்ததாக அங்கிரந்து கிடைக்கம் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை திருக்கோவில்இ காஞ்சிரங்குடா இராணுவமுகாங்களில் இருந்து இவ்வாறு பலதடவைகள் இராணுவத்தினர் ஊடுருவி தாக்க முயல்வது தெரிந்ததே. நன்றி : பதிவு அதே சமயம் இன்று இரவு சக்தி செய்திகளில் இராணுவ பேச்சாளன் அம்பாரை காஞ்சிரங்குடா புலிகளின் பாசறையை விஷேட அதிரடிப் படைகள் இன்று மாலை கைப்பற்றியதாகவும் அங்கு ஜெனரெட்டர்கள், ஆயுதங்கள் ஒரு அரச சார்பற்ற…

  9. போர் நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து புலிகளை உடனடியாக தடைசெய்யவேண்டும்: பௌத்த அமைப்புகள். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை பிரகடனப்படுத்த வேண்டுமென தென்னிலங்கை பௌத்த அமைப்புகள் சில நேற்று ஞாயிற்றுக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளன. ஹிக்கடுவையிலும் நிட்டம்புவையிலும் கடந்த இரண்டு நாட்களில் பஸ்களில் குண்டு வெடித்த சம்பவங்களை அடுத்து ஒன்று கூடியுள்ள பௌத்த அமைப்புகளே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதுடன் பௌத்த சமயத்தவர்களுக்கும் நாட்டை பாதுகாக்க முன்வருமாறு அறைகூவல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக தேசிய பிக்கு முன்னனியின் முக்கியஸ்தரான வக்கமுல்லே உதித்த தேரர் கூறியதாவது; "…

  10. Started by kajankk,

    சந்திரிகா : மாமா என்ன நடக்கிறது வன்னியில? மாமா : பயப்படாதே மருமோளே இன்னும் ஒரு கிலோ மீட்டர் தான் பாக்கி. முக்கால் வாசி புலி குளோஸ் சந்திரிகா : மாமா என்ன நடக்கிறது வன்னியில? மாமா : மருமோளே இதோ முல்லை தீவு தெரியுது. புலி எல்லாம் பலி. சந்திரிகா : மாமே (மொகத உனே வன்னியே) என்ன நடக்கிறது வன்னியில? மாமா : ஐயோ மருமோளே என் கோவணத்த காணயில்லை. தமிழிச்சியிட சேலைய சுத்திக் கொண்டு தான் கொழம்பட ஓடி வாரேன். கொழபட வந்து அடியின்ட அகலத்த சொல்லுறன். மறந்து விட மாட்டோம். சரித்திரம் திரும்பும் விரைவில் எம் புலிகள் சாதனை படைப்பர். அன்று ஈழத்தில் சிங்களம் எக்காளமிட இருக்காது.

    • 0 replies
    • 1.1k views
  11. தென்மராட்சி பகுதியில் ஊரடங்கு உத்தரவு திங்கள் 08-01-2007 15:07 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறிலங்கா இராணுவத்தினரால் ஞாயிறு மாலை 6 மணிமுதல் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவித்தலை பலாலி இராணுவத்தில் இருந்து ஒலிபரப்பாகும் இராணுவ வானொலியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொடிகாமம் சிறீலங்கா காவல் நிலையமும் மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. ஊரடங்கானது கச்சாய், உசன், கொடிகாமம், மீசாலை தெற்கு ஆகிய மக்கள் செறிவாக வாழும் பகுதிகளிலும் மற்றும் முகமாலை, கிளாலி, கச்சாய் கடற்கரையோர பகுதிகளிலும் அமுலில் உள்ளதாக அறியமுடிகிறது. இதேவேளை இவ் ஊரடங்கு பிறப்பித்தலுக்குரிய காரணம் எதுவும் அறியப்படவில்லை

  12. அதிகரிக்கும் வன்முறைகள்: போர் நிறுத்த கண்காணிப்புக் குழு கவலை. தமிழீழ விடுதலைப் புலிகளாலும் அரசாங்கப் படைகளாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதையிட்டு இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தன்னுடைய ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திருக்கின்றது. தம்முடைய இணையத்தளத்தில் தனியான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் கண்காணிப்புக் குழு, இரட்டை பேரூந்து குண்டு வெடிப்புககள், மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட விமானப்படைத் தாக்குதல் மற்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கிளைமோர் தாக்குதல்கள் என்பவற்றைச் சுட்டிக்காட்டி, போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கின்றது என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நினைவ…

  13. வாகரையில் காயமடைந்தவர்கள் கடல்வழியாக கொண்டு செல்லப்பட்டனர். எழுதியவர் மட்டு செய்தியாளர் பாக்கியராசா Monday, 08 January 2007 வாகரையில் காயமடைந்த பொதுமக்களை தரைவழியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினருக்கு அனுமதி வழங்க மறுத்ததையடுத்து வாகரையிலிருந்து வாழைச்சேனைக்கு படகுகள் மூலம் நோயாளர்கள் எடுத்துச்செல்லப்பட்டனர். படகுகள் மூலம் ஐந்து பேர் மட்டுமே எடுத்துச்செல்லப்பட்டதாகவும

    • 0 replies
    • 883 views
  14. வத்தளையில் குண்டு வைத்து மின்மாற்றி தகர்ப்பு. சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து வடக்குப் பக்கமாக 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வத்தளையில் அடையாளம் தெரியாத நபர்களினால் குண்டு வைத்து மின்மாற்றி தகர்க்கப்பட்டுள்ளது. வத்தளை மருதானைச் சந்தியில் எலகந்த என்ற இடத்தில் உபநிலையமாக இருந்த மின்மாற்றி இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.58 மணியளவில் தகர்க்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -Puthinam-

  15. யாழில் பாடசாலை மாணவர்களின் பஸ் தீக்கிரை வீரகேசரி இணையத்தளம் வட பிராந்தியத்திற்கு சொந்தமான போக்குவரத்து சபையின் பஸ் ஒன்று இன்று திங்கள் காலை இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. வடக்கு புன்னாலை கட்டுவானில் இருந்து இன்று காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு யாழ் கஸ்தூரியார் வீதியில் பயணித்து கொண்டிருந்த வேளை இனந்தெரியாத நபர்கள் பஸ்ஸினை வழிமறித்து பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் இருந்து கீழ் இறக்கி பஸ்ஸிற்கு தீமூட்டியுள்ளனர்.. இதனால் பாடசாலை மாணவர்கள் எவருக்கும் காயமேதும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு உடன் விரைந்த தீயணைப்பு படையினர் தீயினை முழுமையாக கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். யாழ் பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதல…

  16. இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை சிறிலங்கா விஜயம் நாளை செவ்வாய்க்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை செல்லவுள்ளார். இலங்கை செல்லும் இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைசந்தித்து பேசவுள்ளார். இலங்கையின் தற்போதைய நிலை சமாதான முயற்சி குறித்து இலங்கை தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது பதிவு.கொம்

  17. முற்றும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் மஹிந்தர் ` மன்னாரில் அப்பாவித் தமிழ் மக்களை உடல் சின்னா பின்னமாக்கிக் கொன்றொழிக்கும் வகையில் இலுப்பைக்கடவை படகுத்துறை குடியிருப்பு மீது இலங்கை விமானப்படை கண் மூடித்தனமான குண்டு வீச்சை நடத்தியதும், அதில் கொல் லப்பட்ட அப்பாவித் தமிழ் சிவிலியன்களைப் புலிகளாகச் சித் திரிக்கத் தென்னிலங்கைத் தலைமை முயன்றதும், அதைத் தொடர்ந்து தென்னிலங்கையில் வெடித்த இரு மோசமான பஸ் குண்டு வெடிப்புகளில் தெற்கின் அப்பாவி மக்கள் படுகொலை யுற, மேலும் பல டசின் கணக்கானோர் மோசமாகப் படுகாய மடைந்தமையும் கடந்த வாரத்தின் துன்பியல் நிகழ்வுகள். மர ணங்கள் மலிந்த சாவுப் பூமியான இலங்கைத் தீவின் கறை படிந்த வரலாற்றின் மோசமான பக்கங்களில் பதிவு செய்யப்படும் பலநூறு க…

  18. வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசங்களில், தமிழ் மக்கள், சிறிலங்கா இனவெறி இராணுவத்தினரால் கொன்று குவிக்கப்படும் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிறிலங்கா விமானப்படையினரின் கண்மூடித்தனமான அப்பாவித் தமிழர் குடியிருப்புக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், இன்று தொடக்கம் எதிர்வரும் புதன்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் தொடர்பான பல அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஹர்தால் தொடர்பாக தெரிவிக்கையில், இன்று தொடக்கம் புதன்கிழமை வரை சகல வர்த்தக நிறுவனங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களையும் மூடி இந்தக் ஹர்த்தாலை முழுமையாக அனுஷ்டிக்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்…

  19. திருமலை தமிழர்புனர்வாழ்வுக்கழக காரியாலயம் நேற்றிரவு 10.30 மணியளவில் சிறிலங்காப் படையினரின் துணைஆயுத கூலிக் கும்பலினால் சூறையாடப்பட்டுள்ளது. அங்கிருந்த கணணிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் பக்ஸ் மெசின், போட்டோக் கொப்பி மெசின் மற்றும் ஒரு தொகைப் பணம் அத்துடன் தளபாடங்கள், காரியாலய ஆவணங்கள் என அத்தனையும் ஆயுதக் கும்பலால் களவாடப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வார காலத்துக்குள் வவுனியா, மற்றும் கொழும்பு அலுவலகமும் காவற்துறையினரால் சோதனையிடப்பட்டு ஆவணங்களும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. ஏற்கனவே கடந்த வருடம் யாழ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பல முறை குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகி ஊழியர் பலர் காயமடைந்தமைகுறிப்பிடத்தக்க

  20. அம்பாறை சென்றல்காம்ப் பகுதியில் நேரக்கணியக் குண்டு வெடித்தில் பொதுமக்கள் ஆறுபேர் படுகாயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விவசாய இரசாயன விற்பனைநிலையமொன்றிற்கு அருகில் இன்று காலை 10.30மணிக்கு இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏ.எம்.எம்.கருண், ஆதம் லெப்பை நபீர், ஆதம் லெப்பை நௌசாத், எஸ்.தர்மலிங்கம், டபிள்யூ.குலதுங்க, ஐ.எம்.அபேரத்ன ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். சென்றல் காம்ப் பகுதி அம்பாறை கல்முனையிலிருந்து 20கீலோமீற்றர் மேற்காக அமைந்துள்ளது http://www.sankathi.org/news/index.php?opt...58&Itemid=1

  21. கட்டில்கள் நிறைந்த வாட்டின் ஓரமாக விளையாடிக்கொண்டிருந்;தான் ஆறு வயது நிரம்பிய விதுரன் அவனைச்சுற்றிலும் ஓரிரு விளையாட்டுப்பொருட்கள் சிதறிக்கிடந்தன ஆனாலும் அவனது புலன்கள் அந்தமையத்தில் குவியப்படவில்லையென்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது தான் விளையாடிய மணல்மேடுகளிலும் அலைகளுக்கு ஓட்டம் காட்டிய கடற்கரையிலும் தடம்பதித்த அந்த பிஞ்சுக்கால்கள் ஆஸ்பத்திரி தரையில் சோர்வோடு பதிந்திருந்தன. உதயகுமார் விதுரன் (06) காயமடைந்தவர்களை சுமந்திருந்த கட்டில்கள் நிறைந்த ஆஸ்பத்திரி வாட்டிற்குள் தான் இருப்பதை சிந்திக்க திராணியற்று விளையாடிக்கொண்டிருந்தவனிடம

  22. எதனையும் சந்திக்க நாங்கள் தயார்: விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன். எதனையும் சந்திக்க நாங்கள் தயார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள வேளையில், எந்தச் சவாலையும் எவ்வளவு காலத்துக்குள்ளும் நாங்கள் எதிர்கொள்ளத் தயார் என்று விடுதலைப் புலிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். வடக்கு - கிழக்குப் பகுதிகளில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வன்முறைகளில் புத்தாண்டின் முதல் இரண்டு நாட்களில் மட்டும் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜனவரி முதலாம் நாள் 10 கொலைகள் பதிவாகின. நேற்று 15-க்கும் அதிகமானோர் மன்னா…

    • 98 replies
    • 15.4k views
  23. வாகரை களமுனையில் நிற்கும் வரிப்புலி வீரனின் குரல் "புலி பசித்தாலும் புல்லுண்ணாது" இது வெறும் மொழியல்ல. மூதாதயர் அனுபவத்தில் உரைத்த முதுமொழி, சாவைக்கூட சந்திப்போம், சரணடைய மாட்டோம். இது வேங்கை மொழி. வரலாற்றில் நடந்த மொழி. வாகரையிலும் அது தான் நடக்கிறது. நிகழ்காலத்தில் நிலவுகின்ற நிகழ்ச்சி நிரல் என்ன? ஊடகங்களில் உலா வரும் செய்திகள் பதில் சொல்லும். இராணுவத்தளபதி சரத்பொன்சேகா உரைக்கின்றார் 'இன்னும் இரண்டு மாதங்களில் கிழக்கில் புலிகளை முடக்கி விடுவோம்" என்று. இந்த வசனங்கள் களத்தில் நிற்கும் நாங்கள் அடிக்கடி அறிபவை தான். சரத்போன்சேகா சொல்வதை படை சாதித்து காட்ட தயாரா அன்பது தான் கேள்வி? இல்லை என்பதே பதில். ஏன் தெரியுமா? சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடுமா? நிச்ச…

  24. இன்று முதல் சிறிலங்காவில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமுலாக்கப்படுகிறது. சிறிலங்காவின் தென்பகுதியில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதையடுத்து, நாடு முழுவதிலும் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. பேரூந்து மற்றும் தொடரூந்துகளில் பயணம் செய்பவர்களின் நலனைக்கருத்திற்கொண்டே இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்றுத் தெரிவித்திருக்கின்றார். கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நித்தம்புவ மற்றும் ஹிக்கடுவ பிரதேசங்களில் தனியார் பயணிகள் பேரூந்து வாகனங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்தே புதிய பாதுகாப்பு ஏற்பா…

  25. சிங்கள மயமாகும் தமிழ்க் கிராமங்கள் -கே.சௌந்தரம்- வவுனியா பறையனாலங்குளம் வீதியில் பூவரசன்குளத்திற்கு மேற்காக பொலிஸாரின் திட்டமிட்ட நடவடிக்கையினால் தமிழ் கிராமமொன்றிற்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் இதேபோன்று ஏற்கனவேயும் பல செயற்பாடுகள் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளன. ஒன்று ஏடிபல படை நடவடிக்கை மூலம் வவுனியா - பறையனாலங்குளம், மதவாச்சி - மன்னார் ஆகிய இரு வீதிகளையும் கைப்பற்றிய படையினர் பறையனாலங்குளத்தை சப்புமல்புர என பெயர்மாற்றம் செய்து பறையனாலங்குளம் சந்தியில் உள்ள படைமுகாமில் பெயர்ப்பலகை ஒன்றை நட்டு அதனை அப்போதைய பாதுகாப்பு துணை அமைச்சர் அனுருத்த ரத்வத்தையினால் திரைநீக்கம் செய்து விழா கொண்டாடினர். இதனை பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.