ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142739 topics in this forum
-
அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்: விடுதலைப் புலிகள். மன்னாரில் அப்பாவிப் பொதுமக்கள் மீதான விமானத் தாக்குதலுக்காக இலங்கை அரசாங்கம் மிக மோசமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்குமென விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள இலுப்பைக்கடவை படகுத்துறை பகுதியின் குடிமனைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை விமானப் படையினர் நடத்திய கடும் தாக்குதலில் 20 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எனினும், கடற்புலிகளின் முகாம்களே விமானப் படையினரின் துல்லியமான தாக்குதலுக்கிலக்கானதாகவும் 30 இற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் அரசும் படைத்தரப்பும் கூறி வருகின்றன. …
-
- 0 replies
- 752 views
-
-
வட-கிழக்கு பிரிப்பானது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான சத்தியத்தை பின் தள்ளியுள்ளது. அரசியலமைப்பு உடனடியாக திருத்தப்படவேண்டும் என்கிறார் பிரதியமைச்சர் டிலான் பெரேரா நாட்டின் அரசியலமைப்பு உடனடியாக திருத்தப்படவேண்டும் அல்லது மாற்றப்படவேண்டும். அரசியல் தீர்மானங்களை மாற்றும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளமை ஆரோக்கியமான விடயமல்ல. இந்த அரசியலமைப்பு தொடர்ந்து இருந்தால் நாட்டின் இனப்பிரச்சினையை தீர்க்கவும் முடியாது. அரசாங்கத்தால் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளவும் முடியாது என்று நீதி மற்றும் நீதிமன்ற மறுசீரமைப்பு விவகார பிரதியமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். எமது அரசியலமைப்பில் அதிகமான குறைபாடுகள் காணப்படுகின்றன. வடகிழக்கு பிரிப்பானது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான சாத்திய…
-
- 0 replies
- 601 views
-
-
கல்வியமைச்சின் முன் அனுமதியை பெற வேண்டும்! கல்வியமைச்சின் அனுமதியின்றி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் பாடசாலை விடயங்களில் தலையீடு செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் ஆரியரத்ன ஹேவாகே தெரிவித்தார். கல்வியமைச்சில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்; உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் பாடசாலைகளில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது தமது நிகழ்ச்சி திட்டங்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பயன்படுத்துவது என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. எக்காரணம் கொண்டும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள…
-
- 0 replies
- 882 views
-
-
நாட்டின் ஒரு பகுதியை பிரித்துக் கொடுக்க தென்னிலங்கை மக்கள் ஒரு போதுமே விரும்பமாட்டார்கள். இந்த நாட்டில் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அதற்காக அரசு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க அம்பாந்தோட்டையில் 150 வீடுகளை கடல்கோளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கூறினார். சர்வதேச `கெயர்' நிறுவனம் இந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது. பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க தொடர்ந்து பேசுகையில்; "சமாதானப் பேச்சுவார்த்தைகளை குழப்பியது யார்? அரசாங்கமா விடுதலைப் புலிகளா என்பதை நாடு அறியும். அரசாங்கம் சமாதானப் பேச்சுகளுக்கு எப்போதுமே தயாராகவுள்ளது. ஆ…
-
- 0 replies
- 1.2k views
-
-
யுத்தத்தாலன்றி சமாதானத்தாலேயே விடுதலைப் புலிகள் பலமிழப்பு [05 - January - 2007] [Font Size - A - A - A] விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவ பலம் குறிப்பிடும்படியான அளவுக்குக் குறைந்து போனது சமாதான நடவடிக்கைகள் பலமாக இருந்த காலகட்டத்திலேயே என்பதை மறந்து விடக் கூடாது. இந்த வகையில் புலிகள் அமைப்புக்கு இராணுவ ரீதியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திய நிகழ்வு கருணா குழுவினர் வெளியேறியதே. 2002 இல் சமாதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே கருணா குழுவினர் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினர். இவ்வாறு கருணா குழுவினர் வெளியேறியதற்கு சமாதான நடவடிக்கைகளே முக்கிய பின் புலமாக அமைந்தது. சமாதான காலத்திலேயே அவர்கள் அதுவரை வாழ்ந்த யுத்தத்தோடு இணைந்த வாழ்க்கையை விட வேற…
-
- 0 replies
- 792 views
-
-
சமுர்த்தி வங்கியில் 96 இலட்சம் மோசடி நுவரெலியாவிலுள்ள சமுர்த்திஅபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் உட்பட 19 பேர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அந்த வங்கி சீல் வைக்கப்பட்டுள்ளது. 1900 வாடிக்கையாளர்களை கொண்ட நுவரெலிய சமுர்த்தி அபிவிருத்தி வங்கியில் 96 இலட்சம் ரூபா பண மோசடி இடம்பெற்றிருப்பது தெரியவந்ததையடுத்தது சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையினால் அது சீல்வைக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் வங்கியின் முகாமையாளர் உட்பட 19 பேர் தொடர்புபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சீல் வைப்பு சம்பவத்தையடுத்து வங்கியை தீ மூட்ட முயற்சித்த இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். வங்கியிலுள்ள ஆவணங்களை தீக்கிரையாக்கும் நோக்குடனேயே வங்கியை தீ மூட்ட…
-
- 3 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவில் விமானதாக்குதல் நிஷாந்தி (வீரகேசரி) முல்லைதீவில் சிலாவத்துறையில் ஸ்ரீலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் வெள்ளிக்கிழமை விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளன. சிலாவத்துறையிலுள்ள வடுதலைப்புலிகளின் கடற்படையின் தளமொன்றை தாக்கியழித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகமத்திய நிலையம் தெரிவித்துள்ளது எனினும் தாக்க்குதலின் போதான சேத விபரம் இன்னும் தெரியவரவில்லை.
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு உணவுடன் கப்பல் [வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007, 02:17 ஈழம்] [காவலூர் கவிதன்] சென்னை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு உணவுப்பொருட்களுடன் புறப்படும் கப்பல், வியாழக்கிழமை இரவு காங்கேசன்துறையைச் சென்றடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரிசி, உருளைக்கிழங்கு, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசி உணவுப்பொருட்களுடன், தனியார் நிறுவனத்தினால் நேரடியாக தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகள், யாழ் அரசாங்க அதிபரூடாக விநியோகிக்கப்படுமென, கொழும்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து யாழ் குடாநாட்டுக்கு உணவுப்பொருட்கள் நேரடியாக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்திருப்பதாக, சிறீலங்கா அரசு கடந்த சில வாரங்களாகச் சொல்லிவந்த…
-
- 1 reply
- 1k views
-
-
மன்னாரில் முன்னகர்வு முறியடிப்பு வெள்ளி 05-01-2007 04:13 மணி தமிழீழம் [மகான்] நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் கொக்குபடையான் பகுதியூடாக முன்னகர முற்பட்ட சிறீலங்கா படைமுயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் முறியடிப்பு தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாதசிறீலங்கா இராணுவத்தினர் முன்னகர்வை கைவிட்டு ஓட்டமேடுத்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 942 views
-
-
கடந்த வருடத்தில் இலங்கையில் 829 எயிட்ஸ் நோயாளர்கள் கண்டுபிடிப்பு 04.01.07. கடந்த வருடத்தில் இலங்கையில் 829 எயிட்ஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர் என இலங்கை எயிட்ஸ் தடுப்பு பிரிவு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் கொழும்பில் ஆகக்கூடிய எயிட்ஸ் நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் கொழும்பிற்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் அதிக நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து சென்றவர்களும் உல்லாசப்பிரயாணிகளுமே இலங்கையில் அதிகம் எயிட்சை பரப்பிவருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடத்தில் எயிட்ஸ் தாய்மார் பெற்ற பிள்ளைகள் 20பேர் இறந்துள்ளனர் என்றும் பிறக்கும் போதே எயிட்ஸ் நோயுடன்…
-
- 0 replies
- 813 views
-
-
வடக்கு கிழக்கு நிலைமை தொடர்பாக பாராளுமன்றத்தில் செவ்வாய் விவாதம்04.01.07 வடக்கு கிழக்கு நிலைமை பற்றி எதிர்வரும் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் விசேட விவாதம் ஒன்று நடைபெற உள்ளது. கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற போது இம்முடிவு எடுக்கப்பட்டது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் வடக்கு கிழக்கு நிலமைகள் தொடர்பாக விவாதம் ஒன்றிற்கு நேரம் ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து செவ்வாய்கிழமை வடக்கு கிழக்கு நிலமை தொடர்பாக விவாதத்தை வைத்துக்கொள்வதென சபாநாயகர் அறிவித்துள்ளார். www.tamilwebradio.com
-
- 0 replies
- 759 views
-
-
தவறான இலக்குகள் மீதான குண்டுவீச்சை நிறுத்துங்கள்! பொதுமக்களைக் கொல்வதை ஏற்கமுடியாது என்கிறது ஐ.தே.க. 04.01.07. மன்னார் படகுத்துறைக் கிராமம் மீது நேற்றுமுன்தினம் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட அப்பாவிப் பொது மக்கள் உயிரிழக்கக் காரணமாக அமைந்த விமானத் தாக்குதலை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கருத்துக் கூறுகையில் ""விமானப்படையினரால் செவ்வாய்க்கிழமை மன்னார் படகுத் துறைப் பகுதியில் மேற்கொள் ளப்பட்ட விமானத் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் இறந் தனர் என்று தெரிவிக்கப்படுகின் றது. இதையிட்டு நாம் கவலையடைகிறோம். புலிகளைத் தாக்க விரும்பினால் இலக்…
-
- 0 replies
- 896 views
-
-
சிங்கள ஊடகத்தில் வந்த செய்தி தினக்குரல் பத்திரிகையில் இருந்து ஆனந்தசங்கரியா இப்படி? தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி புதிய கதை ஒன்றைச் சொல்லுகிறார். இம்முறை அவர் கூறும் கதை யாதெனில், வடக்கும், கிழக்கும் வேறாகப் பிரிக்கப்படக் கூடாது என்பதாகும். அவருடைய இந்தக் கூற்று பல வருடங்களுக்குப் பின்னர் வீ.ஆனந்த சங்கரியும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் சமமான கருத்தை உடையவர்களாக இருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் காட்டுவதாகவே எந்த ஒருவருக்கும் தென்பட இடமுண்டு. வீ.ஆனந்தசங்கரி நீண்ட காலமாக தமிழ் மக்களின் குடியியல் உரிமைகளுக்காகத் தோன்றிப் பேசி வந்த ஒரு அரசியல் வாதியாகும். புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் குடியுரிமைகளை குரூரமான…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் கடத்தல் [வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007, 02:18 ஈழம்] [காவலூர் கவிதன்] யாழ். கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த அருணகிரிநாதன் நிருபராஜ் (வயது 25) புதன்கிழமையிலிருந்து காணாமல் போயுள்ளதாக, அவரது உறவினர் யாழ் மனிதஉரிமை அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளனர். தங்களது குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாணவன், யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானத்துறையில் இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்ததாகவும
-
- 0 replies
- 733 views
-
-
இணையத்தளங்களுக்கு சிங்களஅரசால் எச்சரிக்கை! ஒட்டுக்குழு ஒன்றின் இணையத்தில் சுட்ட செய்தியொன்று|| புலிகள் தொடர்பான தவறான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிலின் நடவடிக்கை சட்டத்தின் கீழ் குற்றமாகும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் புலிகள் தொடர்பான தவறான தகவல்களை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றதென தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. புலிகள் பற்றிய தவறான தகவல்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மாத்திரமின்றி பொதுவான சட்டத்தின் கீழும் குற்றமாகக் கருதமுடியுமென ஊடக மையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார். இலங்கையின் நடைபெறும் உண்மையான சம்பவங்களை சர்வதேச சமூகத்திற்கு அறியத் தருவது அனைத்துப் பிரஜைகளின் பொறுப்பாகும். ஊடக சுதந்…
-
- 0 replies
- 970 views
-
-
புதிய ஐ. நா செயலாளருக்கு தமிழர்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் - சோழன் Thursday, 04 January 2007 22:41 ஐயா, முதற்கண் உங்களது ஐ. நா செயலாளருக்கன வெற்றிக்கு இலங்கைத் தமிழர்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த சமயத்தில் எமது இலங்கைத் தமிழர்களது சொல்லொனா துன்பங்களை உங்கள் முன் வைக்க வேண்டும் என தமிழ் மக்கள் உணர்கிறார்கள். எமது தாய்மார்கள், பிள்ளைகள், மற்றும் சகோதர சகோதரிகளை படுகொலைகளையும் பல்வேறுபட்ட இனோரன்ன கொடுமைகளையும் இலங்கைப் பயங்கரவாத அரசு தமிழ் மக்களுக்கு எதிராக தினமும் நடத்திக்கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாது அவர்களை மிகவும் கொடுமையான பட்டினிச்சாவுக்குள்ளும் திட்டமிட்டு தள்ளிவிட்டு கொண்று குவித்துக் கொண்டு இருக்கின்றது. இலங்கை அர…
-
- 0 replies
- 829 views
-
-
தமிழீழத் தேசிய அடையாள அட்டை வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை – பாதுகாப்பு அமைச்சு. அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கிய அடையாள அட்டைகளுடன் வருபவர்களை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் துரித சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை பாதுகாப்பு அதிகாரிகள் சந்திப்பொன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ள நிலையிலேயே இவ்வறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தமிழீழ தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளனர். அடையாளமாக புலிகளின் தலைவர் பிர…
-
- 0 replies
- 944 views
-
-
வாகரை மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: ஐ.நாவிடம் ஜெயானந்தமூர்த்தி அவசர கோரிக்கை. வாகரைப் பகுதியை மக்கள் வாழ்வதற்கு ஏற்ற பாதுகாப்பான பகுதியாக உறுதிப்படுத்த சிறிலங்கா அரசை வற்புறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். சிறிலங்காப் படையினரின் பீரங்கித் தாக்குதல், எறிகணைத் தாக்குதல், வான் குண்டுவீச்சுத் தாக்குதல்களிலிருந்து வாகரையில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் சபை வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். வாகரை மக்களின் பாதுகாப்புக்காக, வாகரை மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்புற…
-
- 0 replies
- 683 views
-
-
முல்லைத்தீவில் கிபிர் தாக்குதல். இன்று காலை 7.15 மணியளவில் சிறீலங்காவின் கிபிர் விமானங்கள் முல்லைத்தீவு கரையோர பகுதிகளில் குண்டுதாக்குதல்களை நிகழ்த்தியுள்ளன என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் செய்திகளை வெளியிட்டுள்ளன. இத் தாக்குதல் தொடர்பாள சேதவிபரங்கள் இன்னமும் பெறப்படவில்லை. -pathivu-
-
- 1 reply
- 1k views
-
-
வவுனியாவில் கிளேமோர்த் தாக்குதல். - பண்டார வன்னியன் Thursday, 04 January 2007 13:14 வவுனியாவில் சிறிலங்காப் படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து இன்று காலை 10.30மணியளவில் கிளேமோர்த்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் இரண்டு சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளேமோர்த் தாக்குதலின் பின்னர் அப்பகுதயில் சிறிலங்காப் படையினர் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டுள்ளனர். http://www.sankathi.org
-
- 0 replies
- 774 views
-
-
* மல்வத்த மகாநாயக்கரிடம் இராணுவத் தளபதி தெரிவிப்பு கிழக்கில் புலிகளின் பலம் பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் அவர்களது பலத்தை மேலும் பெருமளவில் கட்டுப்படுத்தி அப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு சுதந்திரமாக வாழும் நிலையை ஏற்படுத்தவும் நாம் திட சங்கற்பம் பூண்டுள்ளோம் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேக்கா மல்வத்த மகா நாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டின் புதிய பிறப்பையடுத்து இராணுவத் தளபதி நேற்று செவ்வாய்க்கிழமை காலை கண்டி ஷ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிப்பட்டதுடன் தியவதன நிலமேயுடனும் உரையாடினார். பின்னர் இராணுவத் தளபதி கண்டி மல்வத்த பௌத்த பீடத்திற்கு சென்று மகாநாயக்கர் திப்பட்டுவாவே சித்தார்த்த ஷ்ரீ சுமங…
-
- 4 replies
- 1.8k views
-
-
அரசுடன் இணையும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள்: ரணில் எதிர்கொள்ளும் புதிய பிரச்சினை. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி தலைவர்கள் பலரும் விரைவில் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசில் இணைந்து, அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என வெளியாகியிருக்கும் செய்திகள் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பெரும் தலையிடியைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றது. இம்மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்வதற்கு திட்டமிட்டுள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இவ்விதம் அரசுடன் இணைந்துகொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கும் தயாராகவிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணித் தலை…
-
- 0 replies
- 826 views
-
-
வாகரைநோக்கி சிறிலஙௌகாப் படையினர் எறிகணைவீச்சுத் தாக்குதல். மேலும்.
-
- 0 replies
- 795 views
-
-
மன்னார் வான் குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த இருவர் மரணம். [வியாழக்கிழமை, 4 சனவரி 2007, 04:40 ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னார் இலுப்பைக்கடவை படகுத்துறை கிராமத்தில் சிறிலங்கா வான் படையினர் நடத்திய கொடூர குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்த தாயும் அவரது 18 மாதக் குழந்தையும் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் திருமதி.மாலினி உதயகுமார் (வயது 27), அவரது பெண் குழந்தையான தர்சிகா உதயகுமார் (18 மாதம்) ஆகியோர் என்று கிளிநொச்சி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குண்டுவீச்சுத் தாக்குதலில் காயமடைந்த அவரது கணவர் உதயகுமாரும் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
-
- 0 replies
- 786 views
-
-
மவுஸாகல நீர்த்தேக்கத்தை படம் பிடித்த இரு தமிழ்ப் பெண்கள் கைது. மஸ்கெலிய மவுஸாகல நீர்தேக்க அணைக் கட்டை புகைப்படம் எடுத்த தமிழ் பெண்கள் இருவரை மஸ்கெலிய பொலிசார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். அதியுயர் பாதுகாப்பு வலயமான மவுஸாகல நீர்த்தேக்கப் பகுதிகளில் புகைப்படங்கள் எடுக்கவோ, ஒளிப்பதிவு செய்யவோ கூடாது என்று விளம்பர பலகைகள் இருக்கின்ற போதும் அந்த உத்தரவுகளை மீறி அவ்விருவரும் புகைப்படம் எடுத்ததாக மஸ்கெலிய பொலிசார் தெரிவித்தனர். தாய், மகளான இவ்விருவரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டவர்கள் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. இவ்விருவரும் சிவனொலி பாத மலைக்கு யாத்திரை மேற்கொண்டு விட்டு வீட்டுக்கு திரும்பிக…
-
- 0 replies
- 822 views
-