ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142738 topics in this forum
-
பாலியல் வன்முறை மேற்கொள்ளமுயன்ற படை சிப்பாய் மக்களால் நையப்புடைப்பு. வடமராட்சி குடத்தனைப்பகுதியில் உள்ள வீட்டில் தனிமையில் இருந்த பெண் ஒருவர் மீது பாலியல் வன்முறை மேற்கொள்ள முயன்ற சிறிலங்கா படைச்சிப்பாய் ஒருவர் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார். www.sankathi.com
-
- 0 replies
- 1.2k views
-
-
வாகரைக்கு நவம்பர் 29-க்குப் பின்னர் உணவு அனுப்பப்படவில்லை: யூனிசெஃப் [ஞாயிற்றுக்கிழமை, 24 டிசெம்பர் 2006, 18:37 ஈழம்] [கி.தவசீலன்] மட்டக்களப்பு வாகரைப் பகுதிக்கு கடந்த மாதம் 29 ஆம் நாளுக்குப்பின்னர் உணவுப் பொருட்கள் எவையும் அனுப்பப்படவில்லை என யுனிசெஃப் தெரிவித்துள்ளது. உணவு பொருட்கள் நவம்பர் மாதம் அனுப்பப்பட்ட பின்னர் இன்று வரை சிறிதளவு உணவுப் பொருட்கள் கூட அங்கு அனுப்பி வைக்கப்படவில்லை என யுனிசெஃப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தவிர கடத்தல்கள், காணாமல் போதல்கள், படுகொலைகள் அதிகரித்துள்ளன என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை உள்நாட்டில் இடம்பெயரும் மக்கள…
-
- 1 reply
- 991 views
-
-
அடுத்த மாதம் சிறிலங்கா அரசு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கிறது [புதன்கிழமை, 27 டிசெம்பர் 2006, 13:24 ஈழம்] [பா.பார்த்தீபன்](eelampage.com) இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீர்வை முன்வைக்க அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி குழுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசு தனது தீர்வுத்திட்டத்தை அடுத்த மாதம் முன்வைக்கவுள்ளதாக அனைத்து கட்சிக்குழுவின் தலைவரும் விஞ்ஞான தொழில்நுட்பத்துறை அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இந்த திட்டம் மாகாணங்களுக்கான தனியான அதிகாரங்களை கொண்டுள்ளது. தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னதாக ஜனவரி இரண்டாம் வாரம் அனைத்து கட்சிக்குழு கூடவுள்ளது. அதன் போது மேலும் விவாதங்கள் நடத்தப்படும…
-
- 4 replies
- 1.2k views
-
-
அடுத்த மாதம் கொழும்பு செல்கிறார் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சசை சந்தித்து பேச்சு நடத்துவதற்காக இந்தியாவின் வெளிவிவாகரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விமானம் மூலம் அடுத்த மாத முற்பகுதியில் கொழும்பு செல்லவுள்ளார். எதிர்வரும் ஏப்பிரல் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை வழங்குவதற்காகவே அவர் கொழும்பு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த பயணத்தின் போது அமைதி முயற்சிகளின் தற்போதைய நிலைமையும் வடக்கு-கிழக்கில் ஏற்பட்டுள்ள மனித அவலங்களும் விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ச…
-
- 2 replies
- 1k views
-
-
முல்லைத்தீவு கடலில் தத்தளித்த ஜோர்தான் நாட்டு சரக்குக் கப்பலில் இருந்து விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட மாலுமிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் இன்று கையளிக்கப்பட்டு அவர்கள் கொழும்பு நோக்கி பயணிக்கின்றனர். முல்லைத்தீவு கடலில் இயந்திரம் பழுதடைந்த நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த ஜோர்தான் நாட்டின் "ஃபாரா - 3" சரக்குக் கப்பலின் மாலுமிகளை விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் நேற்று முன்தினம் காப்பாற்றிக் கரை சேர்த்திருந்தனர். கடல் புலிகளால் காப்பாற்றப்பட்ட இந்த மாலுமிகள், கிளிநொச்சி குளக்காட்சி விடுதியில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். அதேவேளையில் இந்த மாலுமிகளை அவர்தம் குடும்பத்தினருடன் இணைப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரை இவர்கள் சந்திக்க…
-
- 23 replies
- 5.3k views
-
-
கொசோவா பிராந்தியத்தை சேர்பியாவை விட பலம்வாய்ந்த நாடாக உருவாக்கப் போகிறேன் என்று கூறிய கொசோவா ஜனாதிபதி இப்ரஹிம் ரகோவா இந்த வருடம் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவ்வாறு இவர் புற்றுநோய் வாய்ப்பட்டு இருப்பதுபற்றி அவருடைய ஆதரவாளர்களாகிய பிரிவினைவாதிகள் முன்கூட்டியே அறிந்திருந்தனர். இப்ரஹிம் ரகோவா, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவுடன் கொசோவாவின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவர் ஆகும். இவ்வாறு இவர் கொசோவாவின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றது கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியிலேயே ஆகும். ஆயினும், இந்த வருட ஆரம்பத்தில் அவர் புற்று நோயால் இறந்து விட்டார். கொசோவாவை சேர்பியாவை விட பலமான நாடாக ஆக்கப் போவதாக கூறிய அவர…
-
- 3 replies
- 2.1k views
-
-
வவுனியாவில் பூங்காவில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொலிஸார் ஒருவர் பலியாகியுள்ளார். [Wednesday December 27 2006 09:00:09 AM GMT] [யாழ் வாணன்] (tamilwin.com) வீதி சோதனையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்தே இக் கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. கிளைமோர் வெடித்தையடுத்து சம்பவ இடத்திற்கு விசேட அதிரடி படையினர் விரைந்து தேடுதல் மேற்கொண்டுள்ளனர். வுனியா மாவட்ட நீதவான் எம்.இளஞ்செழியனும் வெடிப்பு இடம் பெற்ற இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். சம்பவத்தின்போது பலியான பொலிஸாரின் உடல் வவுனியா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 887 views
-
-
இரத்தினபுரி வெல்லுப்பிட்டியவில் கைக்குண்டு வீச்சு 5 பேர் காயம். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இரத்தினபுரி- வெல்லுப்பிட்டியவில் எரிபொருள் நிலையத்தின் மீது கைக்குண்டு வீசப்பட்டதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் காவத்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். www.pathivu.com
-
- 0 replies
- 690 views
-
-
முஸ்லிம் வர்த்தகர் சுட்டுக் கொலை புறக்கோட்டையில் நேற்று மாலை சம்பவம் [Wednesday December 27 2006 08:23:26 AM GMT] [thinakkural.com] கொழும்பு, புறக்கோட்டை ஓல்கொட் மாவத்தை இரண்டாம் குறுக்குத் தெருவில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகரொருவர் உயிரிழந்துள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இரண்டாம் குறுக்குத் தெருவில் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் முஸ்லிம் வர்த்தகரொருவர் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்த புறக்கோட்டை பொலிஸார், இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட முஸ்லிம் வர்த்தகர், புறக்கோட்டையில் நடை பாதையில்…
-
- 0 replies
- 896 views
-
-
ஆழிப்பேரலை மீள்கட்டுமானப் பணிகள் புறக்கணிப்பு: சிறிலங்கா அரசு மீது கொபி அனான் சாடல். ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணிகளை இலங்கையில் இடம்பெற்று வரும் போர் சீரழித்துள்ளது என்று ஓய்வுபெற்றுச் செல்லும் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் தெரிவித்துள்ளார். ஆழிப்பேரலை பேரனர்த்தம் இடம்பெற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்ற நேற்று செவ்வாய்க்கிழமை (26.12.06) அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்பு வேலைகள் தடைப்பட்டுப் போவதை நிறுத்த எந்தத் தரப்பினரும் முயற்சிக்கவில்லை. அமைதி முயற்சிகளில் அனுசரணைப் பணியை மேற்கொண்டு வரும் நோர்வே, ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்பு நிதியை சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புல…
-
- 1 reply
- 766 views
-
-
ஜோர்தான் கப்பல் மீட்டு தருமாறு சிறிலங்கா அரசிடம் கப்பலின் கப்படன் கோரிக்கை [Tuesday December 26 2006 03:12:53 PM GMT] [யாழ் வாணன்] விடுதலை புலிகளால் சர்வதேச செஞ்சிலுமை சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டு கொழும்பு வந்த ஜோர்தானிய நாட்டு கப்பலின் 25 சிப்பந்திகளும் இன்று செவ்வாய்கிழமை சந்தித்தனர். இதன் போது கருத்துத் தெரிவித்த ஜோர்தானிய கப்பல்கள் பாரா (3) இன் கப்டன் ஆர். அப்துல்லா ஆறு படகுகளில் வந்த விடுதலைப் புலிகள் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர் . இதனையடுத்து புலிகள் கப்பலினை நங்கூர மிட முயற்சித்தனர் எனினும் அது கைகூடவில்லை எனவே கப்பலில் இருந்த 25 சிப்பந்திகளையும் கப்பலினை விட்டு இறக்கி கப்பலில் இருந்து தொலைத் தொடர்பு சாதனங்களை அகற்றினர…
-
- 4 replies
- 2.2k views
-
-
ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை இந்தியாஇ இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிட்டு வடக்கு- கிழக்கு மாகாணங்களை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சித்தால் கடந்த காலங்களைப் போன்று பார்த்துக் கொண்டிராமல் இம்முறை சிங்களவர்கள் ஆயுதமேந்தி போராடுவார்களென ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது. அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை இனப் பிரச்சனையானது வடக்கு- கிழக்கு பிரிக்கப்படாமல் அரசியல் தீர்வொன்றின் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் நிலைப்பாடென சுட்டிக்காட்டியிருந்தமை தொடர்பாக கேட்கப்பட்டபோதே ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரான சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையி…
-
- 8 replies
- 2.1k views
-
-
ஏறாவூரில் கடத்தப்பட்ட 19 பேரில் 5 பேர் காவல்துறையிடம் சரண் கருணா ஒட்டுக் கூலிக்குழுவினரால் கடந்த 20ம் திகதி கடத்தப்பட்ட தனியார் பேரூந்தில் காத்தான் குடியில் இருந்த கொழும்பு நோக்கி பயணித்த 19 இளைஞர்களில் 5 வர் தப்பி சென்று ஏறாவூர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 31 அகவையுடைய நாகமணி ஜெகதீஸ்வரன், 24 அகவையுடைய பலிபொடி கோவிந்தன், 20 அகவையுடைய கந்தசாமி கோவிந்தன், 21 அகவையுடைய செல்லத்துரை பிறேமலதா, 25 அகவையுடைய ஜயாதுரை ரஜீவன் ஆகிய ஐவருமே சிறீலங்கா காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக அறியமுடிகிறது. அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தங்கள் கண்களை கட்டிய நிலையில் பேருந்தில் இருந்து இறக்கி வாகனம் ஒன்றில் ஏற்றி சென்றதாகவும் ஏன…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஊர்காவற்துறை இராணுவ சோதனைச் சாவடி மீது கைக்குண்டு தாக்குதல் [Tuesday December 26 2006 03:09:06 PM GMT] [யாழ் வாணன்] யாழ் ஊர்காவற்துறை சத்திர சந்தி அருகிலுள்ள இராணுவ சாவடி மீது இன்று செவ்வாய் 11.45 மணியளவில் இடம் பெற்ற கைக்குண்டு தாக்குதலில் 4 பொது மக்கள் காயமடைந்துள்ளனர். காய மடைந்தவர்கள் அராலி கிழக்கை சேர்ந்த சகோதரர்களான அழகரட்ணம் கோணேஸ்வரன் (24) அழகரச்ணம் முரனீஸ் வரன் [26] மற்றும் வண்ணார் பண்ணை வீதியைச் சேர்ந்த கந்தசாமி செல்வமலர் (66) யாழ் வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஜெயசிந்திரா வைத்தியசாலை தரப்பு அடையாளம் செய்துள்ளனர் . காயமடைந்த இவர்கள் யாழ் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் . இக் கைக்குண்டு தாக்குதலில் இ…
-
- 0 replies
- 841 views
-
-
'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் பற்றிய புரிதல் -சி.இதயச்சந்திரன்- வடகிழக்கு இணைந்த நிலப்பரப்பு தமிழர் தாயகமாகும். இவ்விணைப்பு பாலசிங்கம் அவர்களின் பிறப்பிலுமுண்டு. இவர் பிறப்பே தாயகக் கோட்பாட்டைச் சுமந்துள்ளது. பொதுவாக மக்கள் வயச் சிந்தனையாளர்களே ஊடகப் பணியில் தம்மை இணைப்பார்கள். வளரும் நிலையில், மக்களை நோக்கிய பார்வையைப் பெறுகிறார்கள். வளர்ந்த இடமான கரவெட்டி, இடதுசாரி சிந்தனைகளின் விதைநிலம். சமூக உட்கொடுமைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த மாக்சிசவாதிகள் நிறைந்த சிவப்பு மண் அது. கருத்துக்கள் பாலர் மீதும் பரவியதால், மக்கள் நலச் சிந்தனைகள் முன்னுரிமை பெற்றன. வேற்றுமொழிச் சிந்தனைகளும், செய்திகளும் இவரால் தமிழாக்கமடைந்து, வீரகேசரி மூலம் மக்களைச் சென்…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிக்குன்குன்யா காய்ச்சலுக்கு உரிய பராமரிப்பின்றி யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் பலர் மரணம் [Tuesday December 26 2006 07:33:54 AM GMT] [யாழ் வாணன்] யாழ். குடாநாட்டில் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக சிக்குன்குன்யா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதுடன், சரியான பராமரிப்பின்மையால் இந்நோய் காரணமாக மரணத்தைத் தழுவும் வயோதிபரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக யாழ். பதில் நீதிவான் மு. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். தான் மேற்கொண்ட பல மரண விசாரணைகளை மேற்கோள் காட்டியே அவர் இந்த அதிர்ச்சி தரும் இத்தகவலை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக என்றுமில்லாதவாறு வயோதிபர்கள் மரணமடைவது அதிகரித்து வருகிறது. எனினும் இது குறித்து சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள்…
-
- 0 replies
- 685 views
-
-
மேலதிக சிகிச்சைக்கு அனுமதியில்லை வாகரையில் மற்றுமொருவர் மரணம். - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 26 னுநஉநஅடிநச 2006 09:32 மட்டக்களப்பு வாகரை மருத்துவமனையிலிருந்து மேலதிக சிகிச்சைக்குச் செல்லமுடியாத சூழ்நிலையில் மேலும் ஒருவர் வாகரைமருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார். திருமலை சம்பூரைச் சேர்ந்த கணபிதிப்பிள்ளை என்பவர் கடந்த மூன்று நாட்களாக வாகரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை அங்கிந்து மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை மருத்துவமனைக்கு அனுப்பவேண்டி நிலை எற்பட்டது. இது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போர். நிறுத்தக்கண்காணிப்புக் குழு ஆகியோருக்கு வைத்தியசாலைவட்டாரங்கள் தெரியப்படுத்திய போதும் அவர்கள் இது தொடர்பாக எந்த…
-
- 0 replies
- 530 views
-
-
மருந்துப் பொருட்கள் அனுப்பப்படவில்லை வாகரை மருத்துவமனை மூடப்படலாம் - மருத்துவமனைப் பொறுப்பதிகாரி எச்சரிக்கை. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 26 னுநஉநஅடிநச 2006 09:08 சிறிலங்காப் படையினர் தொடர்ந்து ஏ-15பாதையை மூடியிருக்கின்றனர். வாகரை மருத்துவமனைக்கு மருந்துப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படவில்லை மருத்துவமனை பணியாளருக்கான சம்பளமும் அனுப்பிவைக்கப்படவில்லை இதனால் மருத்துவமனை மூடப்படும் அபாயநிலை தோன்றியுள்ளது என வாகரை மருத்துவமனைப் பொறுப்பதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்காப் படையினரின் முற்றுகையில் சிக்கியிருக்கும் வாகரையில் ஒரே ஒரு மருத்துவமனை காணப்படுகின்றது. இந்த மருத்துவமனை ஆழிப்பேரலையின் தாக்கத்தின் பின்னர் பகல் வேளையில் இத்தாலிய செங்சிலுவ…
-
- 0 replies
- 536 views
-
-
அம்பாறை பகுதியில் குடும்பப் பெண் சுட்டுக்கொலை நேற்று திங்கட்கிழமை இரவு 7.35 அளவில் இனம்தெரியாத ஆயுததாரிகளால் 48 அகவையுடைய பரமேஸ்வரி லீலாவதி என்ற குடும்பப்பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் குறிப்பிட்ட ஆயுததாரிகள் அவரது 25 வயது மகனை தேடி வீட்டிற்கு சென்றதாகவும் அவர் வீட்டில் இல்லாததால் அவரது தாயாரை சுட்டுக் கொன்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 896 views
-
-
அம்பாறையில் கருணா கூலிக்குழு அலுவலகம் சேதமாக்கப்பட்டுள்ளது கடந்த திங்கட்கிழமை இரவு 9.45 மணியளவில் அம்பாறை 15ம் காலணியில் கருணா ஒட்டுக் கூலிக்குழு அலுவலகம் மீது ரொக்கற் உந்துகணைத்தாக்குதலும், கைக்குண்டு தாக்குதலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் கருணா கூலிக்குழுவின் அலுவலகம் முற்றாக சேதமடைந்துள்ளதாக அறியமுடிகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 842 views
-
-
யுத்த நிறுத்தமும் பேச்சு வார்த்தையுமே சுனாமி மீள்கட்டுமாகத்திற்கான உடனடித்தேவைகள் - பில் கிளிங்ரன் வோசிங்ரன் போஸ்ட் இதழுக்கு என எழுதிய கட்டுரை ஒன்றில் முன்னாள் அமெரிக்க தலைவரும் தற்போதைய ஐ.நா சிறப்புப் பிரதிநிதியுமான பில் கிளிங்டன் இலங்கையில் சுனாமியின் மீள்கட்டுமானத்திற்கு பேச்சுவார்த்தையும் போர்நிறுத்தமும் மிக அவசரமும் அவசியமானது எனறும் தெரிவித்தார். நீண்ட கால நெருக்கடியில் சிக்கியிருந்த ஆச்சே மாநிலத்தின் இரு பிரிவினரையும் நெருக்கடிக்கு தீர்வுகான இவ் அனர்த்தம் வழிகோலிய போதும் இலங்கையில் அது இடம்பெறாதது ஒரு துன்பியல் நிகழ்வு எனவும் குறிப்பிட்டார். ஆனால் இதேவேளை விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சுனாமி மீள்கட்டுமான பொதுக் கட்டமைப்பு சிறீலங்கா பேரினவா…
-
- 0 replies
- 755 views
-
-
ஜோர்தானிய கப்பலில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் எடுத்து வரப்படவில்லை:- சிறிலங்கா அரசு முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய ஜோர்தானிய கப்பலில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் எடுத்து வரப்படவில்லை என சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமோடர் திசாநாயக்கா தெரிவித்துள்ளார். "ஃபாரா- 3" கப்பலில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை தருவித்திருக்கலாம் என எழுந்த சந்தேகம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். சென்னையில் இருந்து 260 கடல் மைல் தொலைவில் உள்ள காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து 14,000 மெற்றிக் தொன் அரிசியே கப்பலில் ஏற்றப்பட்டதாக இந்திய துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார். "ஃபாரா - 3" கப்பல் நிறுவனத்தின் …
-
- 0 replies
- 1.1k views
-
-
காக்கைதீவு நவாந்துறைப்பகுதியில் மோதல். நேற்று இரவு 8.30 மணியளவில் காக்கைதீவு நாவாந்துறைப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் 6 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக மற்றும் 9 சிறிலங்கா இராணுவத்தினர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக அவர்களில் இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இராணுவத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை இத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 6 விடுதலைப்புலிகளின் உடல்களை யாழ்பாணம் ஆசிரியர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடற்கரையோர கிராமமான காக்கைதீவு பகுதியில் விடுதலைப்புலிகள் ஊடுருவ முயன்ற போதே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தாக்குதல் தொடர்பில் விடுதலைப்புல…
-
- 1 reply
- 984 views
-
-
சுனாமியின் 2ம் ஆண்டு நிகழ்வில் சிறீலங்கா வான்கலங்கள் தாக்குதல் சிறீலங்கா இராணுவத்தின் கிபிர் வான்கலங்கள் இன்று செவ்வாய் காலை 9.25 மணியளவில் வாகரை கதிரவேலி வாழைச்சேனைப் பகுதியல் விக்னேஸ்வர் ஆலயத்தில் சுனாமியின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் மீது தாக்குதல்கள் நிகழ்த்தியுள்ளன. இதேவேளை மாங்கேணி, கஜவத்தை சிறீலங்கா இராணுவ முகாம்களில் இருந்தும் பலத்த எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகிறது. இத்தாக்குதலில் 5 வீடுகள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com
-
- 0 replies
- 845 views
-
-
யாழ் மோதல் சம்பவங்களில் 3 இரணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் 9 பேர் வரை காயம் [Tuesday December 26 2006 08:27:33 AM GMT] [யாழ் வாணன்] இலங்கை யாழ் பகுதியில் வீதியோர குண்டு வெடிப்பு சமபவத்தில் 3 இரணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அரசு பாதுகாப்பு செய்தி தெரிவித்துள்தாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமை யாழ்பாணத்தில் தானியங்கி கருவி மூலம் வெடிக்கப்பட்ட குண்டிலேயே 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 9 இராணுவத்தினர் வேறு ஒரு சம்பவத்தில் காயமடைந்துள்ளனர் என இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com
-
- 2 replies
- 1.3k views
-