ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142726 topics in this forum
-
இலங்கை பிரச்னையில் நேரடியாக இந்தியா தலையிட மறுப்பு சென்னை: "இலங்கை பிரச்சனையில் இந்தியா நேரடியாக தலையிடாது. இது தான் இந்தியாவின் நிலைப்பாடு. அதே நேரத்தில் அங்கு அமைதி நிலவ வேண்டும்; தமிழர்கள் நிம்மதியுடன் வாழ தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது,"என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக அறிவித்தார். நாடு முழுவதும் உள்ள பாஸ்போர்ட் அதிகாரிகளின் ஆண்டு மாநாடு சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை பிரச்னை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து திட்டவட்ட பதில் அளித்தார். அவர் அளித்த பேட்டி; போலீஸ் விசாரணையின்றி பாஸ்போர்ட் வழங்குவதால் பாதுகாப்புத் தன்மை இருக்காதே? 'தட்கல்' திட்டத்தின் கீழ் …
-
- 3 replies
- 1k views
-
-
சிறிலங்கா இராணுவ பயிற்சி நிறைவு விழாவில் மகிந்த. தியத்தலாவை இராணுவப் பயிற்சிக்கல்லூரியிலிருந்து 60 சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் இன்றையதினம் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர். இந்நிகழ்விற்கு சிறிலங்காவின் ஜனாதிபதியும் முப்படைகளின் பிரதம தளகர்த்தருமாகிய மகிந்த ராஜபக்ச பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத்தளபதி உட்பட பெருமளவு உயர்நிலை அதிகாரிகளும் தளபதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக சிறிலங்கா இராணுவத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. www.sankathi.com
-
- 0 replies
- 770 views
-
-
யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசிகள் இயங்கின? யாழ்குடா நாட்டின் சிலபகுதிகளில் நேற்றுமுன்தினம் கைத்தொலைபேசிகள் அச்சுவேலி, புத்தூர், ஆவரங்கால், இடைக்காடு, பத்தமேனி, வளளாய், நவக்கிரி போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் நண்பகலுக்கு பின் இயங்கியதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. www.pathivu.com
-
- 0 replies
- 832 views
-
-
பாலசிங்கம் புதைக்கப்படவில்லை- விதைக்கப்பட்டிருக்கிறார்: கருணாநிதி மகள் கனிமொழி தமிழீழத் தேசத்தின் குரலான அன்ரன் பாலசிங்கம் புதைக்கப்படவில்லை- விதைக்கப்பட்டிருக்கிறார் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும் கவிஞருமான கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் தமிழீழத் தேசத்தின் குரலுமான அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு தமிழ்நாட்டின் தென்னவன் கலைமன்றம் சார்பில் இரங்கல் கூட்டம் திராவிடர் கழகத் தலைமையககமான பெரியார் திடலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும், கவிஞருமான கனிமொழி கலந்துகொண்டு பேசியதாவது: ஈழத்தமிழர்களது சோகங்களின் குரலாக, மொழியாக விளங்கியவர் பாலசி…
-
- 7 replies
- 1.8k views
-
-
கல்லாறு, கரடிக்குளம், மாங்கேணி முகாம்களில் இருந்து ஒரேதடவையில் வாகரைக்கிராமங்களை நோக்கி சிறீலங்கா படையினர் பாரிய ஆட்டிலறி தாக்குதலை 8 மணிநேரத்திற்கு மேலாக மேற்கொண்டுள்ளனர். வாகரை வைத்தியசாலைக்கு மிக அண்மையாகவும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. வாகரையை சிறீலங்கா படையினர் கிறீஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக இருநாட்களுக்குள் கைப்பற்றிவிடுவோம் என்று ஊடகத்தினர் மத்தியில் சிறீலங்கா இராணுவத்தளபதி லெப்.nஐனரல் சரத்பொன்சேகா சூளுரைத்திருந்தமை தெரிந்ததே.
-
- 2 replies
- 1.4k views
-
-
வடக்கு கிழக்கை பிரித்து திருகோணமலையினை மேலும் தனியாக பிரிக்கவும் நடவடிக்கை! வடக்கு, கிழக்கை பிரிக்குமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கை மூன்று நிர்வாக அலகாக பிரிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது இந்த நடவடிக்கையில் வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கமைய வடக்கு, கிழக்கு மற்றும் திருகோணமலையென நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டு வட மாகாணத்துக்கான நிர்வாக மையம் வவுனியாவிலும் கிழக்கு மாகாணத்துக்கான நிர்வாக மையம் கல்முனையிலும் திருகோணமலை தனியொரு நிர்வாக மையமாகவும் செயற்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. திருகோணமலையின் நிர்வாகச் செயற்பாடுகளை ஓய்வு…
-
- 3 replies
- 1.2k views
-
-
கிழக்கு மாகாண ஆளுநராக ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம நியமனம்.கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநராக ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கரம நேற்று ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மொஹான் விஜயவிக்கிரம வடக்குகிழக்கு மாகாண ஆளநராக இதுவரை பதவி வகித்து வந்தார். இந்தநிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இணங்க வடக்குகிழக்கு மாகாணங்களை தனித்தனியாக பிரிக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே கிழக்கு மாகாணத்திற்கான ஆளநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் வடக்கு மாகாணத்திற்கான பதில் ஆளநராகவும் விஜயவிக்கிரம நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கிடையில் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வடக்கு கிழக்கில் மூன்று நிர்வாக அலகுகளை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள…
-
- 0 replies
- 616 views
-
-
வாகரையில் இடம்பெயர்ந்த மக்கள் சென்ற வாகனம் விபத்து 7 பேர் காயம்வாகரையில் இடம்பெயர்ந்த மக்கள் பிரயாணம் செய்த வாகனம் காத்தான்குடியில் விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயம். வாகரையில் இடம்பெற்றுவரும் கடுமையான தாக்குதல்கள் காரணமாக அங்கிருந்து பெருவாரியான மக்கள் இடம் பெயர்ந்துவரும் நிலையில், மட்டக்களப்பு நகரில் பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களில் அவர்கள் தங்கிவருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வாகரைப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து வாழைச்சேனைக்கு வந்து பின்னர் அங்கிருந்து ஆரயம்பதியில் உள்ள முகாமொன்றுக்கு சிற்றூர்தி ஒன்றில் செல்லும்போது காலை 9.30 மணியளவில் காத்தான்குடி மத்திய பிரதேச பிரதான வீதியில் அவ்வாகனம் விபத்துக்குள்ளானதாக …
-
- 0 replies
- 728 views
-
-
தென்னாசிய நாடுகள் வரிசையில் மனித உரிமையை மீறும் நாடுகளில் இலங்கை 6வது இடம் தெற்காசிய நாடுகளிடையே மனி உரிமைமீறல்கள் விடயத்தில் இலங்கை 6 வது இடத்தை பெற்றுள்ளதாக தெற்காசிய மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய அமைப்பில் 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் மனித உரிமை மீறல் விடயத்தில் 6 இடத்தை இலங்கை வகிப்பதாக அந்த அறிக்கையில் குறி;ப்பிடப்பட்டுள்ளது. புதுடில்லியில் நேற்று நடைபெற்ற இந்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றிய மனித உரிமைகள் ஆசிய நிலையத்தின் தலைவர் சுஹாஸ் சக்மா, இலங்கையில் 2002 ஆம் செய்துக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்படுதல் காரணமாக தமிழர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் அப்பாவி மக்கள் ஆகியோர் காணாமல் போகும் சம…
-
- 0 replies
- 3.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் புதிய மருத்துவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு கட்டாய சேவை - பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 23 னுநஉநஅடிநச 2006 11:16 யாழ்ப்பாணத்தில் புதிதாக நியமனம் பெறும் வைத்தியர்கள் அங்கு 2 வருடங்கள் பணியாற்றவேண்டுமென்பது கட்டாயமென சுகாதார அமைச்சு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக சுகாதார பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் மேலும் தெரிவிக்கையில்; பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சுகாதார அமைச்சு குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து வைத்தியர்களாக பட்டம் பெற்று வெளியேறுபவர்களில் அநேகர் அங்கு பணியாற்ற விரும்புவதில்லை. இதனால் யாழ…
-
- 0 replies
- 599 views
-
-
யாழ் வடமராட்சியில் படைமுகாம் மீது துப்பாக்கிப் பிரயோகம். - அச்சத்தில் மக்கள் இடப்பெயர்வு. - பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 23 னுநஉநஅடிநச 2006 17:49 யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் மானாண்டிப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் முகாம் மீது இனம்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் 10நிமிடங்கள் வரைநீடித்துள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஓரு படைச்சிப்பாய் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ள
-
- 0 replies
- 740 views
-
-
அடுத்த வருட ஆரம்பத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு - மகிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு காணமுடியுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பொது வைபவம் ஒன்றில் பேசும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வருட முற்பகுதியில் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அடுத்த வருட முற்பகுதியில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனையைச் சமர்ப்பிக்கும். ஜனவரி அல்லது பெப்ரவரியில் இத்தீர்வு ஆலோசனை வரைவை சர்வகட்சி மாநாடு முன்வைக்கும். எப்படியிருந்தும் அரசு புலிகளுக்கு எதிரான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும். நாங்கள் சமாதானத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். எனினும், ஆயுத வன்முறையி…
-
- 2 replies
- 1.4k views
-
-
* ஐ.நா.பொதுச்சபையில் நிறைவேற்றம் தமக்கு எதிரிகள் என்று கருதப்படுவோரை பலவந்தமாக கடத்திச் சென்று அவர்களை இரகசிய சிறைச் சாலைகளில் அடைத்து வைக்கும் அல்லது கொன்றுவிடும் நாடுகளைத் தடை செய்யும் புதிய உடன்படிக்கையொன்றை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை உருவாக்கியுள்ளது. பலவந்தமாக காணாமற்போதலிலிருந்து சகலரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனம் என்ற இந்த உடன்படிக்கைக்கு 192 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இந்த உடன்படிக்கையில் உறுப்பு நாடுகள் கைச்சாத்திடும் ஆரம்ப வைபவம் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெறவுள்ளது. பலவந்தமாக ஆட்கள் காணாமல் போதல் உலகளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது. இந்த புதிய உடன்படிக்…
-
- 2 replies
- 1.1k views
-
-
எட்டு நோயாளர்கள் கடல்வழியாக வாழைச்சேனை அனுப்பிவைப்பு. வாகரை மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த எட்டு நோயாளர்கள் நேற்று கடல்வழியாக வாழைச்சேனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சிறிலங்காப் படையினரின் முற்றுகைக்குள் தவிக்கும் வாகரை மக்களில் நோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்து ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்று எட்டு நோயாளர்களைப் படகுமூலமாக வாழைச்சேனைக்கு அனுப்பிவைத்துள்ளதாக வாகரை மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார். கடலில் கடும் மழைபெய்து கொண்டிருந்த நிலையில் கொந்தளிபான சூழலில் மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் நோயாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவ
-
- 0 replies
- 713 views
-
-
இந்திய நிலைப்பாட்டுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம்: கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமனம். வடக்கு-கிழக்கு மாகாணங்களைப் பிரிக்க வேண்டும் என்ற சிறிலங்கா உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று கிழக்கு மாகாணத்துக்கு தனி ஆளுநரை மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார். வட மாகாண ஆளுநராக இருந்த மோகன் விஜயவிக்கிரம நேற்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டது. வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பு செல்லாது என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இதற்கு இந்திய அரசாங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவின் விருப்ப…
-
- 1 reply
- 759 views
-
-
ெள்ளி 22-12-2006 22:18 மணி தமிழீழம் ஜமயூரன்ஸ கவலையளிக்கும் விதத்தில் இலங்கை சமாதான முயற்சிகள் - இந்தியா ரைம்ஸ் நேற்று இந்தியா - நோர்வே கூட்டு ஆணைகுழு கூட்டத்தில் வெளி விவாகர அமைச்சர் ஜோனால் கார் ஸ்டோரே இந்தியா வெளிவிவாகார அமைச்சர் பிரானாப் முகர்ஜியும் சந்தித்து கலந்துரையாடிய போது இலங்கையின் சமாதான முயற்சிகள் கவலையளிக்கும் விதத்தில் காணப்படுகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுதலைப்புலிகளிற்கும் அரசிற்கும் இடையேயான யுத்த நிறுத்த உடன் படிக்கை எழுத்தளவில் மட்டுமே காணப்படுகிறது. ஜரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை தடைசெய்தமையே எதிர்கால சமாதான முயற்சிக்கான பாரிய முட்டுக்கடையாகும் . இரு தரப்புடனும் பேசி எதிர்கால சமாதான முயற்சி தொடர்பாக கலந்துரையாடி சுமூகமான…
-
- 0 replies
- 757 views
-
-
சனி 23-12-2006 01:35 மணி தமிழீழம் (மயூரன்) இலங்கை பிரச்னையில் இந்தியா நேரடியாக தலையிடமாட்டாது என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மீண்டும் தெரிவித்துள்ளார். எனினும் அங்கு அமைதி நிலவ வேண்டும். தமிழர்கள் நிம்மதியுடன் வாழ தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதென அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியா தழுவிய கடவுச் சீட்டு அதிகாரிகளின் ஆண்டு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை பிரச்னை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உறுதியான பதில் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைப் பிரச்னை குறித்து தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த பிரச்னையில் இந்தியாவின் நிலை என்ன? என்ற…
-
- 0 replies
- 804 views
-
-
வாகரையை ஓரிருதினங்களில் கைப்பற்ற முடியும் பொதுமக்களுக்காக பொறுமை காத்து வருகின்றோம் பாலசிங்கத்தின் இழப்பு புலிகள் இயக்கத்திற்கே பாரிய இழப்பாகி விட்டது. ஜெனரல் சரத் பொன்சேகா [Friday December 22 2006 08:57:52 AM GMT] [virakesari.lk] இராணுவத் தளபதி கூறுகிறார் வாகரைப் பகுதியில் பொதுமக்கள் நிலைகொண்டிருப்பதனால் புலிகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்களை நடத்த முடியாதுள்ளது. தரை மார்க்கமாகவும் ஆகாயமார்க்கமாகவும் தாக்குதல் நடத்தி ஓரிரு தினங்களில் வாகரையை எம்மால் கைப்பற்ற முடியும். ஆனால் பொதுமக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பொறுமை காத்துவருகின்றோம் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித…
-
- 3 replies
- 2.1k views
-
-
வாகரையிலிருந்து புலிகளை வெளியேற்ற முற்பட்டால் முழுஅளவிலான யுத்தம் வெடிக்கும் விடுதலைப் புலிகள் எச்சரிக்கை கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றும் திட்டத்தில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டால் மிக மோசமான அழிவுகளைச் சந்திக்கும் யுத்தத்தை சந்திக்க நேரிடும் என விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்று ரொயிற்றர் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் இதனைத் தெரிவித்துள்ளார். வாகரையிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றும் படைநடவடிக்கை திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என சிறீலங்கா தேசியப் பாதுகாப்பு ஊடக மையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளிட்டதற்கு பதிலக்கும் வகையில் தமிழ்ச்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை: மும்பையில் கராத்தே பயிற்சிகாக இன்று காலை சென்னைக்கு விமானம் மூலம் வந்த இலங்கை ராணுவ வீரர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பிலிருந்து இன்று அதிகாலை வந்த தனியார் விமானத்தில் 18 இலங்கை வீரர்கள் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் அங்கிருந்த சிலர் இலங்கை ராணுவத்தை எதிர்த்தும், அவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் கூறி கோஷமிட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராணுவ வீரர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது லிய நாயககே என்பவர் தலைமையில் வந்த அந்த ராணுவ வீரர்கள் 18 பேரும் கராத்தேவில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் மேல் பயிற்சிக்காக மும்பை செல்ல வந்தனர் என்பது தெர…
-
- 1 reply
- 1k views
-
-
சிங்கள ஆய்வாளர்களின் கூற்று கொள்கையளவில் (வுhநழசல) சரியாகலாம் ஆனால் களத்தில் பிரதிகூலமானதே. இரண்டு பீரங்கிகளை ஒரு கலத்தில் பொருத்துவதைவிட இரு கலங்களில் பொருத்தி தாக்குவது தாக்குதல் கலங்களின் மற்றும் பீரங்கிகளின் இயங்குத்தன்மையை இரு மடங்காக அதிகரிப்பதுடன். கலங்கள் தாக்குதலில் சேதமடையின் இழப்பையும் 50 விகிதத்தால் குறைவடைய செய்துவிடும் என்பது தான் உண்மை. டோராக்களின் வீழ்ச்சியை தடுப்பதற்கு சிங்கள ஆய்வாளர்கள் முன்வைக்கும் முக்கியமான கருத்து யாதெனில். தாக்குதிறனிலும், தூரவீச்சிலும் கூடிய 30 மி.மீ பீரங்கிகளை டோராக்களில் தற்போது உள்ள 2,000 மீ தூரவீச்சுக் கொண்ட 23 மி.மீ பீரங்கிகளுக்கு மாற்றீடாக பொருத்துவதாகும். அதன் மூலம் டோராக்கள் களத்தில் எவ்வாறு மேலோங்கும் என்பதற்கு பின்வர…
-
- 0 replies
- 801 views
-
-
மட்டக்களப்பில் ஐ.நா அதிகாரிகள் - விடுதலைப் புலிகள் சந்திப்பு. ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலய உயர் அதிகாரிகள் குழுவினர் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று மதியம் 12 மணியளவில் சோலையகத்தில் நடைபெற்ற சந்திப்பில் வகரை மீதான பொருளாதாரத் தடை மற்றும் வாரைக்கான ஏ15 நெடுஞ்சாலையில் திறப்பு தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. சந்திப்பில் விடுதலைப் புலிகள் தரப்பில் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் மேம்பாட்டு செயலகப் பொறுப்பாளர் மனோஜ் ஆகியோர் பங்கேற்றனர். www.pathivu.com
-
- 1 reply
- 830 views
-
-
http://www.alaikal.com/index.php?option=co...view&id=467
-
- 2 replies
- 1.6k views
-
-
முல்லைத்தீவை அண்டிய கிராமப்புற பகுதிகளில் கிபிர் விமானத் தாக்குதல். இன்று வெள்ளிக்கிழமை காலை 8.50க்கும் 9.15க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான கிபிர் வான் கலங்கள் மூர்க்கமான வான்வெளித்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இதேவேளை கடந்த புதன் கிழமை கூட விடுதலைப்புலிகளின் தத்துவாசிரியர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வை பார்வையிட்டு கொண்டிருந்த மக்கள் மக்கள் மீதும் கூட புதுக்குடியிருப்பு பகுதியில் வான் வெளித்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருந்தது தெரிந்ததே. www.pathivu.com
-
- 0 replies
- 614 views
-
-
வெள்ளிக்கிழமை, 22 டிசெம்பர் 2006, 05:02 ஈழம் (புதினம் நிருபர்) இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடியல் ஏற்படும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ள பாடசாலை மாணவர்கள், தமிழகத்தில் பாடசாலை பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கிய முதல்மைச்சர் கலைஞர் கருணாநிதியை 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் கருணாநிதி பேசியதாவது: கடந்த பல ஆண்டுகளாக இலங்கையிலே நடைபெறுகின்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற காரியங்கள் எந்த அளவுக்கு தமிழ்நாட்டிலே உள்ள எங்களையெல்லா…
-
- 8 replies
- 1.8k views
-