ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142738 topics in this forum
-
எட்டு நோயாளர்கள் கடல்வழியாக வாழைச்சேனை அனுப்பிவைப்பு. வாகரை மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த எட்டு நோயாளர்கள் நேற்று கடல்வழியாக வாழைச்சேனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சிறிலங்காப் படையினரின் முற்றுகைக்குள் தவிக்கும் வாகரை மக்களில் நோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்து ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்று எட்டு நோயாளர்களைப் படகுமூலமாக வாழைச்சேனைக்கு அனுப்பிவைத்துள்ளதாக வாகரை மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார். கடலில் கடும் மழைபெய்து கொண்டிருந்த நிலையில் கொந்தளிபான சூழலில் மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் நோயாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவ
-
- 0 replies
- 713 views
-
-
இந்திய நிலைப்பாட்டுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம்: கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமனம். வடக்கு-கிழக்கு மாகாணங்களைப் பிரிக்க வேண்டும் என்ற சிறிலங்கா உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று கிழக்கு மாகாணத்துக்கு தனி ஆளுநரை மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார். வட மாகாண ஆளுநராக இருந்த மோகன் விஜயவிக்கிரம நேற்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டது. வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பு செல்லாது என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இதற்கு இந்திய அரசாங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவின் விருப்ப…
-
- 1 reply
- 759 views
-
-
ெள்ளி 22-12-2006 22:18 மணி தமிழீழம் ஜமயூரன்ஸ கவலையளிக்கும் விதத்தில் இலங்கை சமாதான முயற்சிகள் - இந்தியா ரைம்ஸ் நேற்று இந்தியா - நோர்வே கூட்டு ஆணைகுழு கூட்டத்தில் வெளி விவாகர அமைச்சர் ஜோனால் கார் ஸ்டோரே இந்தியா வெளிவிவாகார அமைச்சர் பிரானாப் முகர்ஜியும் சந்தித்து கலந்துரையாடிய போது இலங்கையின் சமாதான முயற்சிகள் கவலையளிக்கும் விதத்தில் காணப்படுகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுதலைப்புலிகளிற்கும் அரசிற்கும் இடையேயான யுத்த நிறுத்த உடன் படிக்கை எழுத்தளவில் மட்டுமே காணப்படுகிறது. ஜரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை தடைசெய்தமையே எதிர்கால சமாதான முயற்சிக்கான பாரிய முட்டுக்கடையாகும் . இரு தரப்புடனும் பேசி எதிர்கால சமாதான முயற்சி தொடர்பாக கலந்துரையாடி சுமூகமான…
-
- 0 replies
- 757 views
-
-
சனி 23-12-2006 01:35 மணி தமிழீழம் (மயூரன்) இலங்கை பிரச்னையில் இந்தியா நேரடியாக தலையிடமாட்டாது என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மீண்டும் தெரிவித்துள்ளார். எனினும் அங்கு அமைதி நிலவ வேண்டும். தமிழர்கள் நிம்மதியுடன் வாழ தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதென அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியா தழுவிய கடவுச் சீட்டு அதிகாரிகளின் ஆண்டு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை பிரச்னை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உறுதியான பதில் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைப் பிரச்னை குறித்து தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த பிரச்னையில் இந்தியாவின் நிலை என்ன? என்ற…
-
- 0 replies
- 804 views
-
-
வாகரையை ஓரிருதினங்களில் கைப்பற்ற முடியும் பொதுமக்களுக்காக பொறுமை காத்து வருகின்றோம் பாலசிங்கத்தின் இழப்பு புலிகள் இயக்கத்திற்கே பாரிய இழப்பாகி விட்டது. ஜெனரல் சரத் பொன்சேகா [Friday December 22 2006 08:57:52 AM GMT] [virakesari.lk] இராணுவத் தளபதி கூறுகிறார் வாகரைப் பகுதியில் பொதுமக்கள் நிலைகொண்டிருப்பதனால் புலிகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்களை நடத்த முடியாதுள்ளது. தரை மார்க்கமாகவும் ஆகாயமார்க்கமாகவும் தாக்குதல் நடத்தி ஓரிரு தினங்களில் வாகரையை எம்மால் கைப்பற்ற முடியும். ஆனால் பொதுமக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பொறுமை காத்துவருகின்றோம் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித…
-
- 3 replies
- 2.1k views
-
-
வாகரையிலிருந்து புலிகளை வெளியேற்ற முற்பட்டால் முழுஅளவிலான யுத்தம் வெடிக்கும் விடுதலைப் புலிகள் எச்சரிக்கை கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றும் திட்டத்தில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டால் மிக மோசமான அழிவுகளைச் சந்திக்கும் யுத்தத்தை சந்திக்க நேரிடும் என விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்று ரொயிற்றர் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் இதனைத் தெரிவித்துள்ளார். வாகரையிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றும் படைநடவடிக்கை திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என சிறீலங்கா தேசியப் பாதுகாப்பு ஊடக மையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளிட்டதற்கு பதிலக்கும் வகையில் தமிழ்ச்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை: மும்பையில் கராத்தே பயிற்சிகாக இன்று காலை சென்னைக்கு விமானம் மூலம் வந்த இலங்கை ராணுவ வீரர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பிலிருந்து இன்று அதிகாலை வந்த தனியார் விமானத்தில் 18 இலங்கை வீரர்கள் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் அங்கிருந்த சிலர் இலங்கை ராணுவத்தை எதிர்த்தும், அவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் கூறி கோஷமிட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராணுவ வீரர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது லிய நாயககே என்பவர் தலைமையில் வந்த அந்த ராணுவ வீரர்கள் 18 பேரும் கராத்தேவில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் மேல் பயிற்சிக்காக மும்பை செல்ல வந்தனர் என்பது தெர…
-
- 1 reply
- 1k views
-
-
சிங்கள ஆய்வாளர்களின் கூற்று கொள்கையளவில் (வுhநழசல) சரியாகலாம் ஆனால் களத்தில் பிரதிகூலமானதே. இரண்டு பீரங்கிகளை ஒரு கலத்தில் பொருத்துவதைவிட இரு கலங்களில் பொருத்தி தாக்குவது தாக்குதல் கலங்களின் மற்றும் பீரங்கிகளின் இயங்குத்தன்மையை இரு மடங்காக அதிகரிப்பதுடன். கலங்கள் தாக்குதலில் சேதமடையின் இழப்பையும் 50 விகிதத்தால் குறைவடைய செய்துவிடும் என்பது தான் உண்மை. டோராக்களின் வீழ்ச்சியை தடுப்பதற்கு சிங்கள ஆய்வாளர்கள் முன்வைக்கும் முக்கியமான கருத்து யாதெனில். தாக்குதிறனிலும், தூரவீச்சிலும் கூடிய 30 மி.மீ பீரங்கிகளை டோராக்களில் தற்போது உள்ள 2,000 மீ தூரவீச்சுக் கொண்ட 23 மி.மீ பீரங்கிகளுக்கு மாற்றீடாக பொருத்துவதாகும். அதன் மூலம் டோராக்கள் களத்தில் எவ்வாறு மேலோங்கும் என்பதற்கு பின்வர…
-
- 0 replies
- 801 views
-
-
மட்டக்களப்பில் ஐ.நா அதிகாரிகள் - விடுதலைப் புலிகள் சந்திப்பு. ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலய உயர் அதிகாரிகள் குழுவினர் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று மதியம் 12 மணியளவில் சோலையகத்தில் நடைபெற்ற சந்திப்பில் வகரை மீதான பொருளாதாரத் தடை மற்றும் வாரைக்கான ஏ15 நெடுஞ்சாலையில் திறப்பு தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. சந்திப்பில் விடுதலைப் புலிகள் தரப்பில் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் மேம்பாட்டு செயலகப் பொறுப்பாளர் மனோஜ் ஆகியோர் பங்கேற்றனர். www.pathivu.com
-
- 1 reply
- 830 views
-
-
http://www.alaikal.com/index.php?option=co...view&id=467
-
- 2 replies
- 1.6k views
-
-
முல்லைத்தீவை அண்டிய கிராமப்புற பகுதிகளில் கிபிர் விமானத் தாக்குதல். இன்று வெள்ளிக்கிழமை காலை 8.50க்கும் 9.15க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான கிபிர் வான் கலங்கள் மூர்க்கமான வான்வெளித்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இதேவேளை கடந்த புதன் கிழமை கூட விடுதலைப்புலிகளின் தத்துவாசிரியர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வை பார்வையிட்டு கொண்டிருந்த மக்கள் மக்கள் மீதும் கூட புதுக்குடியிருப்பு பகுதியில் வான் வெளித்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருந்தது தெரிந்ததே. www.pathivu.com
-
- 0 replies
- 614 views
-
-
வெள்ளிக்கிழமை, 22 டிசெம்பர் 2006, 05:02 ஈழம் (புதினம் நிருபர்) இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடியல் ஏற்படும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ள பாடசாலை மாணவர்கள், தமிழகத்தில் பாடசாலை பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கிய முதல்மைச்சர் கலைஞர் கருணாநிதியை 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் கருணாநிதி பேசியதாவது: கடந்த பல ஆண்டுகளாக இலங்கையிலே நடைபெறுகின்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற காரியங்கள் எந்த அளவுக்கு தமிழ்நாட்டிலே உள்ள எங்களையெல்லா…
-
- 8 replies
- 1.8k views
-
-
மன்னாரில் பயணிகள் பேரூந்து விபத்து 14 பேர் படுகாயம். - பண்டார வன்னியன் Friday, 22 December 2006 15:45 மன்னாரில் இருந்து நானாட்டான் நோக்கிசென்று கொண்டிருந்த பயணிகள் பேரூந்து ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் படுகாயம் அடைந்து மன்னார் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பகல் 1.00 மணிக்கு மன்னாரில் இருந்து வங்காலைக்குடா நானாட்டான் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தே விபத்துக்கு உள்ளானது.
-
- 0 replies
- 726 views
-
-
தமிழ் அகதிகளின் நிலைமை வேதனை அளிக்கின்றது:- சு.ப.வீரப்பாண்டியன். தமிழ் அகதிகளின் நிலைமை வேதனை அளிக்கின்றது. சொந்த மண்ணிலேயே அகதிகளாகப் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களின் துயரைத் துடைக்க தமிழகம் விரைந்து செயற்பட வேண்டும். என தமிழகத்தில் தமிழக மக்கள் ஈழத் தமிழர்களின் துயர் கண்டு மனக் கொதிப்படைந்துள்ளனர். அந்த மக்களை காக்க தமிழகத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று திராவிட இயக்க தமிழர் பேரவை அமைப்பாளரும், பேராசிரியருமான சுப.வீரப்பாண்டியன் தெரிவித்தார். இலங்கையில் துயரால்வாடும் தமிழர்களைக் காக்கவேண்டுமென தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியள்ளார். சோனியாகாந்தி அம்மையாரும் இலங்கை இராணுவத்துக்கு ஆயுத உதவி …
-
- 0 replies
- 785 views
-
-
சிறிலங்கா முப்படையினரின் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து அறிக்கை:- மனிதஉரிமைகளுக்கான ஆசிய நிலையம். இலங்கையில் பொலிஸ், இராணுவம், கடற்படை என்பன இணைந்து தமிழ் மக்களுக்கெதிராக பல்வேறு வகையான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியுள்ளதுடன் பாதுகாப்புப் படையினர், கண்மூடித்தனமான தாக்குதல்களையும் படுகொலைகளையும், தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும் 2005 ஆம் ஆண்டு அதிகளவில் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஆசிய நிலையம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 13 ஆம் திகதி புதுடெல்லியில் வைத்து இந்த நிலையம் வெளியிட்ட 2005 ஆம் ஆண்டுக்கான சார்க் நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான தரப்படுத்தல் முறையிலான ஆய்வறிக்கையிலேயே இவ்வமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 802 views
-
-
ஹன்சன் பௌயர் கொழும்புக்கு வருகிறார். நோர்வேயின் சமாதான தூதுவர் ஹன்சன் பௌயர் அடுத்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது. அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே அவர் கொழும்புக்கு வரவுள்ளார். இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வரவுள்ள சமாதானதூதுவர் ஜோன் ஹன்ஸன் பௌயர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனையும் சந்திக்கவுள்ளார். அத்துடன் கொழும்பிலுள்ள இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதாக மேலும் தெரியவருகின்றது. www.virakesari.lk
-
- 0 replies
- 960 views
-
-
இலங்கையில் ஐந்து மணி நேரத்துக்கு ஒரு கொலை மெட்ரோ இலங்கையில் ஐந்து மணி நேரத்துக்கு ஒரு கொலை இடம்பெறுவதாக போருக்கு எதிரான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. மனித உரிமைக்கான இல்லம் (Home for Human Rights) நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அந்த முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. . இராணுவத்துக்கும் விடுதலைப் புலிக ளுக்குமிடையில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகியுள்ளனர் என வும் போருக்கு எதிரான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. அத்தோடு, ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தமது கல்வியை இழந்து முகாம்களில் சொல் லொணா துயரங்களை அனுபவித்து வரு கிறார்கள் எனவும் அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் தொடருமானால்,…
-
- 0 replies
- 680 views
-
-
கப்பல் பயணத்தில் பெண் ஒருவர் மரணம். - பண்டார வன்னியன் Friday, 22 December 2006 10:36 யாழ் குடாநாட்டுக்கான தரைவழிப்பாதைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் யாழ் மக்களின் போக்குவரத்துக்கள் முற்றாகத் துண்டிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந் நிலையில் பெரும் இராணுவக் கெடுபிடிகளிற்கும் நெருக்கடிகளிற்கும் மத்தியில் மக்கள் தமது போக்குவரத்துக்களை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மேற்கொள்கின்றனர். இந் நிலையில் திருகோணமலையில் இருந்து நேற்று காங்கேசன்துறைவந்து சேர்ந்த பயணிகள் கப்பலில் பயணித்த இணுவிலைச் சேர்ந்த கோபல் சிவவதனி (வயது 29) பெண் ஒருவர் மரணமானார். http://www.sankathi.org/
-
- 0 replies
- 775 views
-
-
மகிந்தவின் பெயரிலான விமான சேவைக்கு அமைச்சரவை ஒப்புதல். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சமஸ்கிருத பெயரிலான "மிகின்" ஏர் விமான சேவைக்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இப்புதிய விமான சேவைக்கான தொடக்க முதலீடாக ரூ. 500 மில்லியனும் ஒட்டுமொத்த முதலீடாக ரூ. 1550 மில்லியனும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையிலும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. www.puthinam.com
-
- 1 reply
- 795 views
-
-
த.தே.கூ இந்திய வருகை வெளியுறவுக் இந்திய இலங்கை கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் - எம்.ஆர்.நாராயணசாமி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்திய வருகையானது இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரும் இந்து ஆசிய செய்திசேவையின் செய்தியாளர் எம்.ஆர்.நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு கட்சி என்ற ரீதியிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பினரின் இந்த விஜயம் முக்கியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். சுட்டது பதிவு
-
- 1 reply
- 895 views
-
-
1987 ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒன்றாக இணைந்து செயற்பட்ட வடக்கு கிழக்கு மாகாணசபையை இரு நிர்வாக அலகுகளாக பிரிந்து செயற்பட வடக்கு கிழக்கு ஆளுநர் மோகன் விஜயவிக்கிரம உத்தரவிட்டுள்ளார். இதன்படி வவுனியாவை தலமையகமாக கொண்டு வடக்குமாகாணசபை அலகு நிர்வாகமும், கல்முனையை தலமையகமாக கொண்டு திருமலை தவிர்ந்த கிழக்கு மாகாணசபை நிர்வாகமும், திருமலை மாவட்டம் நேரடியாக ஆளுநரின் கீழ் செயற்படும் எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி : பதிவு
-
- 0 replies
- 951 views
-
-
இரட்டை வேடமிடுகிறது போர் நிறுத்த கண்காணிப்புக் குழு: கேகலிய ரம்புக்வெல குற்றச்சாட்டு. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு இரட்டை வேடமிடுவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பு ஊடகவியலாளர்களிடம் தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் பிரதேசத்தில்; மாணவர்களும் ஆசிரியர்களும் விடுதலைப் புலிகளினால் கடத்திச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை உலகுக்கு அறிவித்த ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். இதனால் ஏற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச அழுத்தம் காரணமாகவே அவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் 7 ஆண்களை…
-
- 2 replies
- 1.1k views
-
-
விடுதலைபுலிகள் என சந்தேகிக்கப்படும் 15 பேர் கிழக்கில் கைது. நிஷாந்தி வாகரையில் இருந்து இடம்பெயரும் மக்களுடன் அகதிகளாக ஊடுருவி செல்ல முயன்ற விடுதலை புலிகள் என சந்தேகிக்கப்படும் 15 பேரை கைது செய்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. . கிழக்கில் தொடரும் மோதல்களால் வாகரையிலிருந்து பாதுக்கப்பு கரிதி மக்கள் இடம்பெய்ருகின்றனர்.இன்னும் 10,000 இலிருந்து 15,000 வரையான மக்கள் வாகரையிலிருந்து இடம்பெயர விரும்புகின்றனர் என இராணுவ தரப்பு மேலும் தெரிவித்தது. http://www.virakesari.lk
-
- 1 reply
- 1.1k views
-
-
பாலசிங்கம் மறைவு ஏற்படுத்தும் கவலைகள் -பா. கிருஷ்ணன்- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர், சித்தாந்தவாதி என்று போற்றப்பட்ட அன்ரன் பாலசிங்கம் மறைவு இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் சமாதான முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமோ என்ற கவலை தோன்றியுள்ளது. அன்ரன் ஸ்ரனிஸ்லோஸ் பாலசிங்கம் தொடக்கத்தில் `வீரகேசரி' நாளேட்டில் பணிபுரிந்தவர். அதன் பின் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்திருக்கிறார். அவரது பின்னணியே புதுமையானது. பாலசிங்கத்தின் தந்தை இலங்கை கிழக்குப் பகுதியையும் தாய் வடக்குப் பகுதியையும் சேர்ந்தவர்கள். தந்தை இந்து. தாய் கிறிஸ்தவர். சிங்கள இனவாதத்தை எதிர்க்கும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த அவருக்கு புத்தரின் தத்துவங…
-
- 0 replies
- 996 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கருணாநிதி சந்திப்பு. தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் இன்று பிற்பகல் 12.15 மணி முதல் 1.15 வரை ஒரு மணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரமேச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். ஈழத் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாதச் செயல்கள் குறித்து கருணாநிதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்…
-
- 5 replies
- 1.8k views
-