ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142726 topics in this forum
-
ஜானக பெரேராவை பாதுகாப்பமைச்சின் துணைச் செயலாளராக நியமிக்க திட்டம் இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜானக பெரேராவிற்கு பாதுகாப்பு அமைச்சின் துணைச் செயலாளர் பதவி அல்லது அதற்கு இணையான பதவி நிலை ஒன்று வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நீண்ட காலம் இலங்கையில் இருந்திருக்கவில்லை, மற்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நுட்பங்கள் குறித்து போதிய அனுபவங்களை பெற்றிராமை ஆகியவற்றால் அவருடைய செயல்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து விடுதலைப் புலிகளின் தாக்குதல் தந்திரோபாயங்கள் குறித்து விசாலமான அறிவு மற்றும் அனுபவம் கொண்ட ஜானக பெரேராவை வரவழைத்து அவருடைய…
-
- 1 reply
- 995 views
-
-
தொடரும் வன்முறைகள் குறித்து நோர்வே ஆழ்ந்த கவலை பண்டிகை காலத்தை முன்னிட்டு தாக்குதலை நிறுத்துமாறும் கோரிக்கை [Tuesday December 19 2006 06:45:33 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையில் தொடரும் வன்முறைகள் தொடர்பில் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள நோர்வே பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதியாவது தற்காலிகமாகவேனும் இரு தரப்பினரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. சமாதான பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் நோர்வே உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமில்லை. இருதரப்பினரும் சமாதானத்துக்கான விருப்பத்தையோ சமிக்ஞைகளையோ வெளிப்படுத்தினால் மட்டுமே மீண்டும் சமாதான பேச்சுக்கள் சாத்தியமாகும் என்றும் …
-
- 0 replies
- 741 views
-
-
அனைத்துலக சமூகத்தின் பதில் என்ன?: விடுதலைப் புலிகள் [திங்கட்கிழமை, 18 டிசெம்பர் 2006, 16:22 ஈழம்] [பூ.சிவமலர்] வாகரையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிறிலங்கா அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு எவரும் ஏவுகணை விஞ்ஞானம் படிக்க வேண்டியதில்லை. வாகரையைத் தன்வசமாக்கும் திட்டத்தில் சிறிலங்கா அரசு, அனைத்துலக விதிமுறைகளை மீறியதுடன், மனிதாபிமான வேண்டுகோள்களையும் நிராகரித்துள்ளது என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் அறிக்கை விடுத்துள்ளது. வாகரையில் உள்ள மக்கள் நல சேவை புரியும் இடங்களை மட்டக்களப்புக்கான அனைத்துலக செஞ்சிலுவகைச் சங்கப் பிரதிநிதி காசேசி மார்யத்தை, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் க…
-
- 6 replies
- 1.9k views
-
-
மலையகத் தொழிலாளருக்கு ஆதரவாக நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போர்! அரசுக்கு ஜே.வி.பி. எச்சரிக்கை தோட்டத் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணும்படி ஜே.வி.பி., ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. தவறும் பட்சத்தில் நாடு முழுவதும் அரச, தனியார் துறைகளை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் வேலை நிறுத்தப் போராட் டமொன்றை நடத்தப்போவதாக அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜே.வி.பியின் கீழ் இயங்கும் 131 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஜே.வி.பி. தொழிற்சங்கங்களுக்குப் பொறுப் பான கே.டி, லால்காந்த ஆகியோருடன் நேற்றுக் காலை இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுச் செயலாளர் எஸ். சதாசிவம் பேச்சு நடத்தினார். தோட்டத் தொழிலாளரின…
-
- 0 replies
- 641 views
-
-
கடந்த 7 மாதத்தில் 210,000 பேர் அகதிகளாக இடப்பெயர்வு [செவ்வாய்க்கிழமை, 19 டிசெம்பர் 2006, 19:22 ஈழம்] [க.நித்தியா] கடந்த ஏழு மாத காலத்தில் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இருந்து மேலும் 210,000 பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். ஆழிப்பேரலை பேரழிவினால் தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய மக்கள் தொகையில் பாதி இது என முன்னணி பிரித்தானிய துயர் துடைப்பு அமைப்பு ஒன்று கவலை தெரிவித்துள்ளது. போரின் பயங்கரமான பாதிப்பும், நாட்டின் சில பகுதிகளில் போக்குவரத்துச் சேவை கட்டுப்படுத்தப்பட்டிருப்பத
-
- 0 replies
- 676 views
-
-
தேசியத் தலைவருடன் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம்: பொட்டம்மான் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் தமிழீழத் தேசியத் தலைவருடன் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டம்மான் தெரிவித்துள்ளார். பாலா அண்ணன் "தேசத்தின் குரல்" என்ற உயர்ந்த விருதால் தமிழீழம் உள்ளவரை நினைவு கூரப்படுகின்ற ஒருவராக தன்னுடைய சுவடுகளை விட்டுச்சென்றுள்ளார் எனவும் பொட்டம்மான் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டிருக்கின்றார். அவர் மேலும் கூறுகையில் முக்கியமாகத் தெரிவித்ததாவது: தமிழீழம் உள்ளவரை அவருடைய நினைவுகள் தமிழ் மக்களுடைய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த…
-
- 6 replies
- 1.4k views
-
-
செவ்வாய் 19-12-2006 15:08 மணி தமிழீழம் (மயூரன்) தேசத்தின் குரலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை துக்கதினம் அனுஷ்டிக்குமாறு பொது அமைப்புகள் அழைப்பு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை துக்கதினம் அனுஷ்டிக்கும்படி யாழ்ப்பாண மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் கோரியுள்ளது. தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக கடந்த மூன்று தசாப்தமாக குரல் கொடுத்த "தேசத்தின் குரல்' கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு எமது கண்ணீர் வணக்கங்களைத்தெரிவிக்கும் முகமாக நாளை புதன்கிழமையன்று யாழ்ப்பாணக்குடாநாடு தழுவிய ரீதியில் பூரண துக்கதினமாக கடைப்பிடிப்போம். இதனூடாக எமது அஞ்சலிகளை எமக்காக உழைத்த கல்விமானும்இ தத்துவாசிரியரும்இ தமிழ் பேசும் ம…
-
- 0 replies
- 871 views
-
-
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுக்க இயலாது: முதல்வர் கருணாநிதி பேச்சு விழுப்புரம், டிச. 18: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ள இயலாது என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறினார். 2-வது கட்ட இலவச நிலம் வழங்கும் விழாவை விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது: "துணைக் கண்டமான இந்தியாவுக்கு, "கண்டம்" வராமல் பாதுகாக்க வேண்டும். பக்கத்து நாடால் "கண்டம்" வரக்கூடாது என்பதற்காகச் சிந்தித்துச் செயல்படுகிறோம். இலங்கைப் பிரச்சினையில் இதே நிலையைக் கையாள்கிறோம். இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதால், அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருவது தொடர்கிறது. அண்மையில் தில்லிக்குச் சென்றபோது இதுகுறித்து …
-
- 15 replies
- 3k views
-
-
இதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்கிறார் பழ.நெடுமாறன் இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசினதோ, தமிழகத்தினதோ நடவடிக்கைகள் போதுமானவையல்ல, இலங்கையில் ராணுவ நடவடிக்கையை நிறுத்தவேண்டும், ஏ9 வீதியை திறக்க வேண்டுமென இந்திய மத்திய அரசு கூறிவருகின்ற போதிலும் அது சாத்தியமாகவில்லை. எனவே சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இந்தியா இதனை மேற்கொள்ளவேண்டும். இதற்கான அழுத்தத்தை தமிழகம் கொடுக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறினார். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் குறித்து தமிழக மக்கள் முன்னர் ஒரு போதும் இல்லாத வகையில் மிகுந்த கவலை கொண்டு உள்ளனர். தமிழக மக்கள் மத்தியில் பெரும் உணர்வலைகள…
-
- 8 replies
- 1.6k views
-
-
வவுனியாவில் மூன்று இளைஞர்கள் சுட்டு கொலை வீரகேசரி இணையத்தளம் வுனியா சலபுத்துரம் பகுதியில் மூன்று இளைஞர்கள் இனந்தெரியாத நபர்களால் நேற்று திங்கள் இரவு சுட்டுக் கொல்லப்படடுள்ளனர் . பிரதேச வாசியான 27 வயதுடைய இளைஞனும் அவரது இரு நண்பர்களும் வீட்டில் இருந்து வேளை வீட்டினுள் நுழைந்து இனந் தெரியாத நபர்கள் பிரயோகம் செய்துள்ளனர் . வவுனியா பொலிஸார் இக் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற் கொள்கின்றனர்.
-
- 0 replies
- 783 views
-
-
குடாநாட்டில் மனிதாபிமான நெருக்கடி மத்தியில் சிக்குன் குனியா நான்கு மாதங்களுக்கு முன்பு ஏ-9 பாதையை அரசாங்கம் மூடியதைத் தொடர்ந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் தோன்றிய மனிதாபிமான நெருக்கடி மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்ற அதேவேளை சகல பொருட்களினதும் விலைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. குடாநாட்டு மனிதாபிமான நெருக்கடியைத் தணிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசாங்கம் உலகிற்கு கூறிக் கொண்டிருக்கிற போதிலும், அங்குள்ள நிலைவரங்களில் எத்தகைய மேம்பாட்டையுமே காணக் கூடியதாக இல்லை. மக்கள் பெரும் அவலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக அத்தியாவசிய …
-
- 1 reply
- 822 views
-
-
'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் எழுதிய 'விடுதலை' கட்டுரைத் தொகுப்பு தொடர்பாக தமிழகத்தமிழர் பத்ரியின் நயப்புரை அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை எழுதியவர்: பத்ரி (திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் விடுதலை நூல் பற்றிய இந்த நயப்புரை http://thoughtsintamil.blogspot.com என்னும் வலைப்பதிவில் இருந்து நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது. இந் நூல்நயம் பரந்த வாசிப்பு அனுபவமும், இணைய வலைத் தளங்களில் நன்கு அறிமுகமுமான தமிழகத் தமிழர் ஒருவரால் எழுதப்பட்டது என்பதில் முக்கியத்துவம் பெறுகின்றது. நூலின் அட்டை எம்மால் இணைக்கப்பட்டது.) அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 1 விடுதலை கட்டுரைத் தொகுப்பு அன்ரன் பாலசிங்கம் பெயர்மக்ஸ் பதிப்பகம் (Fairmax Publishing Ltd.), …
-
- 1 reply
- 2.5k views
-
-
"சர்வதேசத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு தேசத்தின் தூதுவருக்கு இணையானவர் அன்ரன் பாலசிங்கம்: "த இன்டிபென்டன்" நாளேடு லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில நாளேடான "த இன்டிபென்டன்" தமிழீழ விடுதலைப் புலிககளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தொடர்பான ஆய்வு ஒன்றை தனது நேற்றைய (18.12.06) நாளேட்டில் வெளியிட்டுள்ளது. ஜஸ்ரின் கூக்லர் (Justin Huggler) என்பவர் எழுதிய இந்த ஆய்வில், "போராளிக் குழுவின் சர்வதேச தொடர்பாடலுக்கு உரியவராக செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசியலில் பண்டாரநாயக்க குடும்பம் எவ்வளவு துரம் ஊடுருவி இருந்தார்களோ அதைவிட பலமடங்கு ஊடுருவ இவர் முயற்சிக்கிறார் என்றே தென்படுகிறது. அது எவ்வளவு தூரம் பலிக்கும் என்பது புலிகளின் கைகளில்தான் உள்ளது.
-
- 3 replies
- 1.6k views
-
-
இலங்கையையும் சொமாலியா போலவே கருதும் அமெரிக்கா! - பண்டார வன்னியன் Sunday, 17 December 2006 10:58 இலங்கை, சோமாலியா அகதிகளுக்கு உதவ 5.215 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஒதுக்கியுள்ளார். இலங்கை, சோமாலியா நாடுகளின் இனப்பிரச்சினையில் பாதிக்கப்பட்டு அகதிகளான மக்களுக்கு உதவ இந்த நிதி பயன்படுத்தப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சொந்த நாட்டின் போர்ச்சிக்கல்களால் பாதிக்கப்பட்டு தப்பித்த அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களின் எதிர்பாராத அவசரத் தேவைகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டுமென வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா றைசுக்கு கடந்த வியாழக்கிழமை எழுதிய அறிக்கையில் ஜனாதிபதி புஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதியை அனைத்துலக, அர…
-
- 2 replies
- 1.6k views
-
-
மதியுரைஞரின் இறுதி நிகழ்வுகள் தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள், எதிர்வரும் 20ஆம் நாள் புதன்கிழமையன்று லண்டனில் இடம்பெற இருக்கின்றன. அன்றைய நாளில், பின்வரும் மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை, மதியுரைஞரின் வித்துடல் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு வீர வணக்க நிகழ்வு நடைபெறும். வீர வணக்க நிகழ்வு இடம்பெறும் மண்டபம்: Alexandra Palace Alexandra Palace Way Wood Green London N22 7AY விடுதலைக் கனலை இதயத்தில் சுமந்து, தமிழ் மக்களையும், தமிழீழ மண்ணையும் ஆழமாக நேசித்து, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அயராது அரும் பணியாற்றி, தமிழினத்…
-
- 10 replies
- 2.8k views
-
-
கடந்த நான்கு மாதங்களாக யாழ் குடாநாட்டில் கைத்தொலைபேசியில் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. இன்றிலிருந்து கைத்தொலைபேசிகள் இயங்கும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதும் இதுகுறித்து தொலைபேசி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது படையினர் விதித்துள்ள முட்டுக்கட்டைகள் காரணமாக கைத்தொலைபேசிகள் இயக்குவதற்கு அனுமதி சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சிலிருந்து இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 748 views
-
-
அம்பாறை கல்முனையில் காவல்துறையில் கடமையாற்றும் சாஜன் தர காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுப் தற்கொலை செய்துள்ளார். இன்று மதியம் 1.20 மணிக்கு கல்முனை காவல்துறை தங்ககத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்துகொண்ட காவல்துறை அதிகாரி கல்முனை சாய்ந்தமருதடியைச் சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
-
- 0 replies
- 752 views
-
-
குடாநாட்டில் ஏப்ரல் மாதம் தொடக்கம் டிசம்பர் 14ம் நாள் வரை 702 பொதுமக்கள் பலி! [Monday December 18 2006 04:50:09 PM GMT] [tharan] யாழ் குடாநாட்டில் கடந்த ஒன்பது மாதங்களில் சிறீலங்காப் படைகளால் 702 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார் என யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றை விடுதிருக்கும் மனித உரிமைகள் ஆணையகம் கடந்த ஏப்ரல் மாதம் டிசம்பர் 14ம் நாள்வரை சிறீலங்காப் படைகள் நடத்திய பகிரங்கத் தாக்குதல், உந்துறுளிப் படுகொலைகள், வெள்ளை வான் ஆட்கடத்தல், போன்றவற்றில் 702 பேர் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/
-
- 3 replies
- 861 views
-
-
யாழ் குடாநாட்டில் குடிசார் கெடுபிடிகளில் தளர்வுகளை மேற்கொள்ளும் சந்தர்பங்களில் அவை பாதுகாப்பு விடயங்களுக்கு இசைவாக உள்ளனவா என்பதை உறுதி செய்யுமாறு யாழ் இராணுவத் தளபதிகளிடம் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வலியுறுத்தியுள்ளார். இன்று காலை 10 மணிக்கு பலாலி கூட்டுப் படைத் தளத்தில் மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தலைமையில் சிறீலங்காப் படைகள் உயர் அதிகாரிகளுக்கு இடையிலான உள்ளகப் பாதுகாப்பு மாநாடு இடம்பெற்றது. இதன்போது கருத்துரைத்திருக்கும் மேஜர் ஜெனரல் சந்திரசிறீ பாதுகாப்பு விடயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலமே படையினரின் இருப்பை உறுதிசெய்ய முடியும் எனக் கூறியுள்ளார். நன்றி - பதிவு.com
-
- 0 replies
- 704 views
-
-
அடையாளம் காணப்படாத நிலையில் இரு ஆண்களின் சடலங்கள். - பண்டார வன்னியன் Monday, 18 December 2006 19:28 மன்னார் பிச்சைக்குளம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படாதநிலையில் மன்னார் மருத்துவமனையின் பிரேத அறையில் உள்ளன. கடந்த 15ம் திகதி மன்னார். முருங்கன் பிரதேசத்திற்குட்பட்ட பிச்சைக்குளம் பகுதியில் கண்களும் கைகளும் கட்டப்பட்டு துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர். மன்னார் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. இச் சடலங்கள் இரண்டும் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மன்னார் மருத்துவமனை பிரேத அறையில் உள்ளது. http://www.sankathi.org
-
- 0 replies
- 810 views
-
-
சந்திரிக்காவின் ஐக்கிய நாடுகள் கல்வித்துறை ஆலோசகர் பதவி பறிமுதல்? ஐக்கிய நாடுகள் கல்வி-விஞ்ஞான - பண்பாட்டு அமைப்பில் சிறீலங்காவின் முன்னாள் அதிபருக்கு வழங்கப்பட்ட பதவி பறிமுதல் செய்யும் நிலை தோன்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாசியப் பிராந்தியத்தில் தற்போது சுற்றுப் பயணத்தில் இருக்கும் சந்திரிக்காவை பயணத்தை உடன்நிறுத்தி தலமைச்செயலகம் திரும்புமாறு ஐக்கிய நாடுகள் கல்வி-விஞ்ஞான-பண்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கொய்ச்சீரோ மற்சூரா பணிப்புரை விடுத்துள்ளார் சந்திரிக்கா கடந்த காலத்தில் மேற்கொண்ட பல மனித உரிமைகள் குறித்து பல மட்டங்களில் இருந்து வந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இதுகுறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 7 replies
- 2.2k views
-
-
வெள்ளை நிற வேட்டி, ஷேர்ட்டுடன் பாலாவின் உடல் மலர்ச்சாலையில்!லண்டனிலிருந்து ந.வித்தியாதரன் "தேசத்தின் குரல்' மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் உடல் நேற்று லண்டனில் உள்ள மலர்ச்சாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. பாலாவுக்கு மிகவும் விருப்பமான, வெள்ளைநிற வேட்டியும், வெள்ளை நிற ஷேர்ட்டும் அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்தது. பாலா தம்பதியினருக்கு மிகவும் நெருக்க மானவர்கள் மாத்திரமே குறித்த மலர்ச்சாலையில் நேற்று மதியுரைஞரின் உடலைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். திருமதி அடேல் பாலசிங்கம் மலர்ச்சாலையில் நின்று, தமக்கும் தமது கணவருக்கும் நெருங் கிய உறவுடையவர்கள், நண்பர்கள் சிலரைக் கூட்டிச் சென்று தமது கணவரின் உடலைக் காண்பித்தார். பாலாவுக்கு மிகவும் பிடித்தமான தமி ழர்களின் …
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்கா வான் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி . [திங்கட்கிழமை, 18 டிசெம்பர் 2006, 14:53 ஈழம்] [தெ.சந்திரநாதன்] சிறிலங்கா வான் படையைச் சேர்ந்த ஆறு அதிகாரிகளுக்கு அரசின் அண்மைய கொள்முதலான மிக்-27 ரக ஜெட் போர் விமானங்களை ஓட்டுவதற்கு இந்தியாவின் வான் படைப் பயிற்சி நிலையமான சண்டிகாரில் பயற்சி அளிக்கப்படுகிறது. கடந்த ஒக்ரோபரில் தொடங்கிய இந்தப் பயிற்சி எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழு பயிற்சி முடிந்து வந்ததும் மூன்றாவது குழு பயிற்சி பெறச் செல்லும் என இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா வான் படை 1999 முதல் 2000 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானில் பயிற்சி பெற்றது. தற்போது இந்தியாவில் பயிற்சி பெற…
-
- 1 reply
- 1.2k views
-
-
கிழக்கிலிருந்து வெளியேற்றப்படப் போவது விடுதலைப் புலிகள் அல்ல: இளந்திரையன் [திங்கட்கிழமை, 18 டிசெம்பர் 2006, 15:39 ஈழம்] [பூ.சிவமலர்] கிழக்கில் எமது பகுதியிலிருந்து எங்களை வெளியேற்ற சிறிலங்கா இராணுவம் திட்டத்தை அறிவித்தால், விடுதலைப் புலிகள் முன்தாக்குதலைத் தொடங்குவர் என தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகள், பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என குற்றம் சாட்டிய இராணுவம், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு எதிராக கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை விரட்டுவோம் என தெரிவித்துள்ளது. இராணுவத்தினரின் மோட்டார் மற்றும் எறிகணைத…
-
- 0 replies
- 1.2k views
-