ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
அண்மையில் அக்குறுகல கொடகம பிரதேசத்தில் பஸ் ஒன்று குண்டுவெடிப்புக்குள்ளாகிய சம்பவத்தில் உயிரிழந்த 11 நபர்களின் இறந்த உடல்களில் பெண்ணொருவரின் உடற்பகுதிகள் அடையாளம் காணப்படாத நிலையில் அதனைத் தற்கொலைக் குண்டுதாரிப் பெண்ணின் இறந்த உடல் என புலனாய்வுப் பிரிவு பொலிஸ் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் கடந்த 8 ஆம் திகதி மேற்படி பெண்ணின் இறந்த உடல் தெவிநுவர ரஸ்ஸன்தெரிய பிரதேசத்தைச் சேர்ந்த பறகஹவத்தேகெதர பகுதியில் வசித்து வந்த டெய்ஸி ஜயசிங்க எனப்படும் பெண்ணின் உடல் என அவருடைய உறவினர்களால் உடல் வைக்கப்பட்டிருந்த கறாப்பிட்டிய வைத்தியசாலையில் வைத்து அடையாளம் காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பெண் 69 வயதுடையவர் எனவும் இவருடைய உடலையே தற்கொலைக் குண்டுதாரிப் பெண் என முன்ன…
-
- 0 replies
- 700 views
-
-
யாழில் இருவேறு பகுதிகளில் கிளேமோர்த் தாக்குதல். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மறவன் புலப் பகுதியில் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்காப் படையினரை இலக்குவைத்து இன்று காலை 7.15மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கிளேமோர்த் தாக்குதலில் இரண்டு சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். இதே வேளை இன்று காலை 6.30மணியளவில் வடமராட்சி திக்கம்பகுதியில் ரோந்து சென்ற படையினர் மீதும் கிளேமோர்த் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலின் போது ஏற்பட்ட சேதவிபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. காயமடைந்த படையினர் இருவரையும் அவசரசிகிச்சைக்கா பலாலி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதா
-
- 0 replies
- 775 views
-
-
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைக்காக காத்திருக்கும் மகிந்த. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆதரவு வழங்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரவுக்காக காத்திருப்பதாகவும் அவர்களின் வரவால் நாடாளுமன்றத்தில் அரசின் பலம் 118 ஆக உயர்வடையும் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தனது அமைச்சர்களிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வரவு குறித்த ஏதேனும் தகவல்கள் உண்டா என மகிந்த கேட்டபோது, அப்படி எதுவும் தெரியாது எனவும் ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்வாங்குவதற்கு தங்கள் ஆதரவு உண்டு எனவும் அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும் அரசின் பக்கம் சார…
-
- 0 replies
- 761 views
-
-
அதிகாரப் பகிர்வு பற்றி தமிழர் தரப்பிலிருந்து தெளிவான உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் நாடாளுமன்றில் நேற்று ஹக்கீம் அறிவிப்பு. வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் நிபந்தனையின்றி ஆதரவு தரவேண்டும் என்றுகொருவதை ஏற்க முடியாது. இணைந்த வடக்கு, கிழக்கிற்குள் முஸ்லிம்களுக்கு வழங்கபடும் அதிகாரம் என்ன என்பது பற்றித் தமிழர் தலைமைகள் தெளிவான உறுதி மொழிகளைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இணைப்புக்கு ஆதரவு கோரினால் ஒருபோதும் நிபந்தனைகளற்ற முறையில் முஸ்லிம்கள் இணைப்புக்கு ஆதரவு வழங்க முன் வரமாட்டார்கள். சுடர் ஒளி தலைப்புச் செய்தியின் ஒரு பகுதி நன்றி சுடர் ஒளி 11 ஜன 2007
-
- 7 replies
- 2.2k views
-
-
9 நாட்களில் 17 பேர் குடாநாட்டில் கடத்தல் யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்பது நாட்களில் 17 பேர் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. குடாநாட்டில் கடத்தப்படுவோரினது எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் காணாமல் போனவர்களில் ஐவர் வீடுகளுக்குள் புகுந்த ஆயுத பாணிகளாலேயே கடத்தப்பட்டிருக்கின்றார்கள
-
- 0 replies
- 781 views
-
-
கெல உறுமய தேரே நாடாளுமன்றில் இப்படித் தெரிவிப்பு கிழக்கை நாம் புலிகளிடமிருந்து முற்றாகமீட்டுக் கொண்டோம். எனவே, இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்பொது புலிகளிடம் ஒரு முகாம் மீது கூட தாக்குதல் நடத்தும் பலம் இல்லை. அவர்களால் ஒரு பொலிஸ்காவலரண் மீது கூட தாக்குதல் நடத்த முடியாது. ஜாதிக கெல உறுமைய நாடாளுமன்றக குழுத் தலைவன் அதுரலியே ரத்ன தேரோ நேற்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார். வடக்குகிழக்கு இன்றைய நிலை மற்றும சமாதான முன்னெடுப்புக்கள் பற்றி சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும் போது கூறியதாவது :- போரிட முடியாத நிலையில் தான் புலிகள் தெற்கில் பஸ்களில் குண்டுகளை வைத்து பொது மக்களைக் கொலை செய்கின்றனர். பொதுமக்கள் கொலை செய்யப்பட்டது குறித்துக் கூட…
-
- 2 replies
- 1.6k views
-
-
காவல்துறை, இராணுவம் கூட்டாகத் தேடுதல் நவீன கருவிகளுடன் சோதனைக்கும் ஏற்பாடு. நாடளாவிய ரீதியில் கடந்த இரு தினங்களாக தேடுதல், சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, வீதிச்சோதனைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. காவல்துறையினரும், படையினரும் இணைந்து மேற்கொள்ளும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சிவில் குழுக்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டது. சுவீடன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகள், உபகரணங்களைத் தருவித்து தாமதங்களைத் தவிர்த்துக்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இலத்திரனியல் உபகரணங்களை மறைத்து எடுத்துச் செல்வதை சமிஞ்ஞை அறிவிப்பு மூலம் வெளிப்படுத்தும் கருவிகளைக்கொண்டு கண்டுபிடிக்கவும் ந…
-
- 0 replies
- 712 views
-
-
எதிர்வரும் 15 ஆம் நாள் சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா. தீர்மானம்: லக்ஸ்மன் கிரியெல்ல. சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தீர்மானம் ஒன்றை எதிர்வரும் 15 ஆம் நாள் கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் அவர் கூறியதாவது: இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த ஒரு சர்வதேச அமைப்புக்களோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானங்களை இதுவரையில் கொண்டு வந்தது இல்லை. பாதுகாப்புச் சபையின் அரசுக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றது? 1988, 1989 ஆண்ட…
-
- 3 replies
- 1.2k views
-
-
அப்பாவி பொதுமக்கள் படுகொலை தொடர்பில் நடவடிக்கை தேவை: மனித உரிமைகள் அமைப்பு இலங்கையில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை அனைத்துலக சமூகம் கண்டிக்க வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாகக்கொண்டு இயங்கும் ஹியுமன் றைட்ஸ் வோட்ச் அமைப்பான மனித உரிமைகள் அமைப்பு நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. சிறிலங்காப் படைகளாலும் விடுதலைப் புலிகளினாலும் அப்பாவி பொதுமக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கப்படுவதை தடுக்க அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு தேவை என்று அந்த அமைப்பின் ஆசியப் பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: மன்னாரில் இடம்பெற்ற தாக்குதலில் 50 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தெற்கில் அதற்கு எதிராக இடம்…
-
- 0 replies
- 748 views
-
-
தேசிய நாடக வருடத்தில் அரசியல் ஏமாற்று நாடகம் நாட்டின் நாடகத்துறையை மீள் எழுச்சிகொள்ள வைக்கும் நோக்குடன் இந்த ஆண்டைத் "தேசிய நாடக வருடம்' ஆகப் பிரகடனப்படுத்தியிருக்கின்ற
-
- 0 replies
- 880 views
-
-
சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் அமைச்சில் இரண்டாம் நிலைப் பதவியான வெளிவிவகாரத்துறைச் செயலாளர் வெற்றிடத்தை நிரப்ப, சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் சிறப்பு ஆலோசகரான பாலித கோகன்னவை நியமிக்கும் மகிந்தவின் யோசனையை மங்கள சமரவீர நிராகரித்துள்ளார். சிறிலங்கா அரச சமாதான செயலகப் பணிப்பாளராகவும், மகிந்தவின் சிறப்பு ஆலோசகராகவும் தற்போது பதவி வகித்து வரும் பாலித கோகன்னவை மகிந்தவின் பிரத்தியேக திட்டமிடலின்படி, புதிய வெளிவிவகாரத்துறை செயலாளராக நியமிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இருப்பினும் இந்த செய்தியில் உண்மை எதுவும் இல்லை என்று வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. மகிந்தவுடன் மங்கள சமரவீர கடந்த சனிக்கிழமை விரிவான பேச்சுக்களை நடத்திய போ…
-
- 1 reply
- 967 views
-
-
சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தீர்மானம் ஒன்றை எதிர்வரும் 15 ஆம் நாள் கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் அவர் கூறியதாவது: இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த ஒரு சர்வதேச அமைப்புக்களோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானங்களை இதுவரையில் கொண்டு வந்தது இல்லை. பாதுகாப்புச் சபையின் அரசுக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றது? 1988, 1989 ஆண்டுகளில் ஜெனீவாவில் மனித உரிமை மீறல் குறித்து கவனமெடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று ஐக்…
-
- 0 replies
- 1k views
-
-
வியாழக்கிழமை, 11 சனவரி 2007, 04:15 ஈழம் (க.நித்தியா) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பின் வாகரைப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பெரும் மனித அவலங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான பணிகளுக்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான பணிகளுக்கான ஆணைக்குழுவின் தலைவர் ஜுலியன் வில்சன் நேற்று புதன்கிழமை இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது: வாகரைப் பகுதிக்கான போக்குவரத்து மிகக் கடினமாக உள்ளது. அங்கு உணவுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. அண்மைக் காலங்களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையினால் 20இ000 மக்கள் வாகரைப் பிரதேசத்திலிருந்து வெளியேறியுள்ள போதும் மேலும் 15,000 மக்கள் அங்கு வசித்து வருகின்றனர். வாகரையி…
-
- 1 reply
- 993 views
-
-
தமிழ் முஸ்லீம் மோதல்களை உருவாக்க கருணா குழு சதி எழுதியவர் மட்டக்களப்பு - உதயகுமார் Wednesday, 10 January 2007 மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களில் தமிழ் முஸ்லீம் மக்களிடையே மோதல்களை உருவாக்குவதற்கு இராணுவத்தினருடன் இணைந்து செயற்படும் கருணா குழு சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஸ்ரீலங்கா இராணுவத்தினர் இச்சதி வேலைகளை திட்டமிட்டு அதை செயற்படுத்தும் பொறுப்பை கருணா குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்கள் அறியாது இராணுவத்தினரினதும் கருணா குழுவினரினதும் சதி வலைகளில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆரையம்பதி தமிழ் கிராம மக்களுக்கும் காத்தான் குடியில் உள்ள மு…
-
- 0 replies
- 885 views
-
-
திருகோணமலையிலும் கருணா குழுவால் தமிழ் பத்திரிகைகளுக்கு தடை. எழுதியவர் ஆர்த்தி Wednesday, 10 January 2007 திருகோணமலை மாவட்டத்தில் தினக்குரல் சுடர்ஒளி ஆகிய தமிழ் தினசரிப்பத்திரிகைகளை விற்பனை செய்வதற்கும் கொழும்பிலிருந்து திருமலைக்கு அப்பத்திரிகைளை எடுத்து செல்வதற்கும் இராணுவ ஒட்டுக்குழுவான கருணாகுழு தடை விதித்துள்ளது. தினக்குரல் சுடர்ஒளி ஆகிய பத்திரிகைகளை எடுத்து வரக்கூடாது என்றும் விற்பனை செய்யக்கூடாது என்றும் அதை மீறினால் சுட்டுக்கொல்லப்படுவீர்கள் என மேற்படி பத்திரிகைகளின் திருகோணமலை முகவர்களுக்கு கருணாகுழு அச்சுறுத்தல் விடுத்துள்ளது. தினக்குரல் சுடர்ஒளி ஆகிய பத்திரிகைகள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் விற்பனை செய்வதற்கு கருணாகுழு தடைவித்த…
-
- 0 replies
- 752 views
-
-
இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்ட மாணவன் விடுதலை. எழுதியவர் ஆர்த்தி Wednesday, 10 January 2007 யாழ். கொக்குவில் கிழக்கில் கடந்த புதன்கிழமை சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினராலும் ஈபிடிபியினராலும் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு விஞ்ஞானபீட மாணவன் மிகக்கொடூரமான சித்திரவதைகள் அச்சுறுத்தல்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற வேளையில் சிறிலங்கா இராணுவத்தினரின் நேரடி உதவியுடன் கொக்குவில் பகுதிக்கு வந்த ஈபிடிபி துணைக்குழு உறுப்பினர்கள், அருணகிரிநாதன் நிருபராஜ் என்ற இந்த மாணவனை, பலாத்காரமாக கடத்தி சென்றனர். இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில், அவரது வீட்டிற்கு முன்…
-
- 0 replies
- 621 views
-
-
மட்டக்களப்பில் கருணா கும்பலின் முகாம் மீது தாக்குதல் - பாண்டியன் றுநனநௌனயலஇ 10 துயரெயசல 2007 22:47 மட்டக்களப்பு கல்லடியில் சாந்தி திரையரங்கிற்கு முன்பாகவுள்ள ஒட்டுப்படை கருணா கும்பலின் முகாம் மீது இரவு 11.10 முதல் தாக்குதல் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவி;க்கின்றன. தொடர்ந்து குண்டுச் சத்தங்கள் அப்பகுதியில் கேட்டவண்ணமிருப்பதாக அத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த முழுமையான விபரங்கள் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை. நேற்று வாhழைச்சேனையில் கருணா கும்பலின் மூன்று முகாம்கள் அழிக்கப்பட்ட நிலையில் இன்று இத்தாக்குதல் இடம்பெறுவது என்பது குறிப்பிடத்தக்கது http://www.sankathi.org/news/index.php?opt...06&It…
-
- 7 replies
- 3.1k views
-
-
கருணாகுழு சிறிலங்கா பாதுகாப்பு படையின் ஒரு பகுதியென அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது. Sri Lankan government lye expose by them self. The international medias who gets their news about the conflict in Sri Lanka from The Sri Lankan defence ministry today writs that at episode has taken place between the LTTE and the Paramilitary Karuna group, and that the government forces has found 4 dead bodies of LTTE fighters. This news has also been broadcasted via the international AFP agency, but the Sri Lankan Media Centre for National Security and srilankan army website explains the same episode with the headline saying, 4 LTTE fighters killed by Security forces. Karuna g…
-
- 3 replies
- 1.9k views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவன் நிருராஜ் பற்றை ஒன்றினுள் குற்றுயிருடன் மீட்பு யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவின் இறுயாண்டு மாணவன் அருணகிரிநாதா நிருபராஜ் குற்ருயிருடன் உறவினர்களால் மீட்கப்பட்டுள்ளார். கடும் சித்திர வதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் இவர் பற்றை ஒன்றினுள் நேற்றிரவு மீட்கப்பட்டு யாழ் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக கல்விச் சமூகத்தின் பெரும் அழுத்தம் காரணமாக இவர் விடுவிக்கப்பட்டுள்ளார். http://www.pathivu.com
-
- 1 reply
- 1.1k views
-
-
புதன் 10-01-2007 17:04 மணி தமிழீழம் [முகிலன்] இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு இம்மாதம் 27ம் நாள் நடத்த காலியில் ஏற்பாடு இலங்கைக்கு உதவி வழங்கும நாடுகளின் மகாநாடு இந்த வருடம் ஸ்ரீலங்காவின் தென்பகுதி நகரான காலியில் நடத்தப்படவுள்ளது இம்மாதம் 27ம் திகதி முதல் 29ம் திகதி வரை காலியில் உள்ள வெளிச்ச வீட்டு விருந்தினர் விடுதியில் இந்த மகாநாடு நடத்தப்படவுள்ளது இதில் அமெரிக்கா பிரித்தானியா ஜப்பான் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல்வேறு நாடுகளினதும் 300 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த வருடம் இந்த நாடுகளினால் 120 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியினை ஸ்ரீலங்கா அரசாங்கம் பெற்றிருந்தது இந்த வருடம் அதனை விட கூடுதலான…
-
- 0 replies
- 802 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பினர் பேசுவது ஒரு விபசாரி தனது கற்பைப் பற்றி புகழ்ந்து பேசுவது போன்றதென அமைச்சர் சி.பி.இரட்நாயக்கா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; யாழ்ப்பாணத்தில் மக்கள் பசி, பட்டினி என்றும் படிப்பதற்கு கொப்பி, பென்சில்கள் இல்லையென்றும் அவதியுறுவதாகக் கூறும் தமிழ்க் கூட்டமைப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதிகளை விட்டு வெளியேறி கொழும்பில் இருந்தவாறு சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர். யாழ். குடாநாட்டு மக்களின் பிள்ளைகள் படிப்பதற்கு வசதியற்று இருக்கையில் புரட்சியாளர்களின் பிள்ளைகள் வெளிநா…
-
- 11 replies
- 3.2k views
-
-
மேர்வின் சில்வா கூறுகிறார் துட்டகைமுனு அரச பரம்பரையிலிருந்து வந்தவரே நாட்டில் இன்று ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். நானும் அப்பரம்பரையிலிருந்தே வந்தவன். எனவே, பயங்கரவாதத்திற்கு ஒரு போதும் அடிபணியப் போவதில்லையென பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். நுகேகொடையில் ஐக்கிய மக்கள் இயக்கம் நடத்தவிருந்த கூட்டம் அசம்பாவிதங்களால் நிறுத்தப்பட்ட பின்னர் அங்கிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே பிரதியமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் புலிகளின் ஆறு முகாம்களை எமது படையினர் கைப்பற்றியுள்ளனர். ஏனைய பகுதிகளையும் கைப்பற்றுவோம். நுகேகொடையில் இடம்பெறவிருந்த கூட்ட மேடைக்கு வந்த சிலர் அங்கு அசம்பாவிதங்களை மேற்கொண்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவிக்கான போட்டியில் இலங்கைக்கான வாய்ப்பை இந்தியா நாசமாக்கியதாக ஜயந்த தனபால தெரிவித்த குற்றச்சாட்டை இந்திய இராஜதந்திரி சசிதரூர் நிராகரித்திருக்கிறார். இலங்கை வேட்பாளருக்கு சிறிதளவு வாய்ப்பு இருக்குமென்று தான் கருதியிருந்தால் இந்த போட்டிக்குள் நுழைந்திருக்கவே மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகள் ஒன்றுபட்டு ஒரு வேட்பாளரின் பின் அணி திரண்டிருப்பது கட்டாயமானது. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் பரந்தளவு ஆதரவு இருப்பது சந்தர்ப்பம் கிடைப்பதற்கு அவசியமானதாகுமென தனபாலவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில் சசி தரூர் தெரிவித்திருக்கிறார். உறுதியான ஆதரவை எந்த வேட்பாளர் பெற்றிருக்கிறார் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரதியமைச்சர் மேர்வின் மீது ஏற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு யுத்தத்தை நிறுத்த வலியுறுத்தி ஐக்கிய மக்கள் இயக்கத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பு நுகேகொடை சந்தியில் நடத்தப்படவிருந்த பொதுக் கூட்டம் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் சென்ற கோஷ்டியினால் குழப்பப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.இச்சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் தாக்கப்பட்டுள்ளனர். நுகேகொடை சுப்பர்மார்க்கெட் சந்தியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்தப் பொதுக் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. யுத்தத்தை உடன் நிறுத்தி அதிகாரப் பரவலாக்கல் மூலம் வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியே இந்தப் பொதுக் கூட்டம் நடைபெறவிருந்தது. க…
-
- 1 reply
- 942 views
-
-
சிங்களத்தில் ஏசினால் கண்காணிப்புக் குழுவிற்கு விளங்குமா? ஹெகெலிய ரம்புக்வெல மீது விமல் வீரவன்ச சீற்றம். - பண்டார வன்னியன் Wednesday, 10 January 2007 12:20 யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை தேவையில்லாமல் தொடர்ந்தும் கடைப்பிடிக்காமல் கண்காணிப்புக் குழுவினரையும் நாட்டை விட்டு வெளியேற்றி புலிப் பயங்கரவாதத்தை தோற்கடிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும் என ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தம் புலிகளுக்கு சம அந்தஸ்த்து வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐந்து வருட காலம் நிறைவடையப்போகின்றது. இவ்வாறு அதி…
-
- 0 replies
- 1k views
-