ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143499 topics in this forum
-
புதிய ஐ. நா செயலாளருக்கு தமிழர்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் - சோழன் Thursday, 04 January 2007 22:41 ஐயா, முதற்கண் உங்களது ஐ. நா செயலாளருக்கன வெற்றிக்கு இலங்கைத் தமிழர்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த சமயத்தில் எமது இலங்கைத் தமிழர்களது சொல்லொனா துன்பங்களை உங்கள் முன் வைக்க வேண்டும் என தமிழ் மக்கள் உணர்கிறார்கள். எமது தாய்மார்கள், பிள்ளைகள், மற்றும் சகோதர சகோதரிகளை படுகொலைகளையும் பல்வேறுபட்ட இனோரன்ன கொடுமைகளையும் இலங்கைப் பயங்கரவாத அரசு தமிழ் மக்களுக்கு எதிராக தினமும் நடத்திக்கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாது அவர்களை மிகவும் கொடுமையான பட்டினிச்சாவுக்குள்ளும் திட்டமிட்டு தள்ளிவிட்டு கொண்று குவித்துக் கொண்டு இருக்கின்றது. இலங்கை அர…
-
- 0 replies
- 834 views
-
-
தமிழீழத் தேசிய அடையாள அட்டை வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை – பாதுகாப்பு அமைச்சு. அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கிய அடையாள அட்டைகளுடன் வருபவர்களை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் துரித சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை பாதுகாப்பு அதிகாரிகள் சந்திப்பொன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ள நிலையிலேயே இவ்வறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தமிழீழ தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளனர். அடையாளமாக புலிகளின் தலைவர் பிர…
-
- 0 replies
- 950 views
-
-
வாகரை மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: ஐ.நாவிடம் ஜெயானந்தமூர்த்தி அவசர கோரிக்கை. வாகரைப் பகுதியை மக்கள் வாழ்வதற்கு ஏற்ற பாதுகாப்பான பகுதியாக உறுதிப்படுத்த சிறிலங்கா அரசை வற்புறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். சிறிலங்காப் படையினரின் பீரங்கித் தாக்குதல், எறிகணைத் தாக்குதல், வான் குண்டுவீச்சுத் தாக்குதல்களிலிருந்து வாகரையில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் சபை வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். வாகரை மக்களின் பாதுகாப்புக்காக, வாகரை மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்புற…
-
- 0 replies
- 688 views
-
-
முல்லைத்தீவில் கிபிர் தாக்குதல். இன்று காலை 7.15 மணியளவில் சிறீலங்காவின் கிபிர் விமானங்கள் முல்லைத்தீவு கரையோர பகுதிகளில் குண்டுதாக்குதல்களை நிகழ்த்தியுள்ளன என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் செய்திகளை வெளியிட்டுள்ளன. இத் தாக்குதல் தொடர்பாள சேதவிபரங்கள் இன்னமும் பெறப்படவில்லை. -pathivu-
-
- 1 reply
- 1k views
-
-
வவுனியாவில் கிளேமோர்த் தாக்குதல். - பண்டார வன்னியன் Thursday, 04 January 2007 13:14 வவுனியாவில் சிறிலங்காப் படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து இன்று காலை 10.30மணியளவில் கிளேமோர்த்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் இரண்டு சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளேமோர்த் தாக்குதலின் பின்னர் அப்பகுதயில் சிறிலங்காப் படையினர் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டுள்ளனர். http://www.sankathi.org
-
- 0 replies
- 779 views
-
-
* மல்வத்த மகாநாயக்கரிடம் இராணுவத் தளபதி தெரிவிப்பு கிழக்கில் புலிகளின் பலம் பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் அவர்களது பலத்தை மேலும் பெருமளவில் கட்டுப்படுத்தி அப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு சுதந்திரமாக வாழும் நிலையை ஏற்படுத்தவும் நாம் திட சங்கற்பம் பூண்டுள்ளோம் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேக்கா மல்வத்த மகா நாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டின் புதிய பிறப்பையடுத்து இராணுவத் தளபதி நேற்று செவ்வாய்க்கிழமை காலை கண்டி ஷ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிப்பட்டதுடன் தியவதன நிலமேயுடனும் உரையாடினார். பின்னர் இராணுவத் தளபதி கண்டி மல்வத்த பௌத்த பீடத்திற்கு சென்று மகாநாயக்கர் திப்பட்டுவாவே சித்தார்த்த ஷ்ரீ சுமங…
-
- 4 replies
- 1.8k views
-
-
அரசுடன் இணையும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள்: ரணில் எதிர்கொள்ளும் புதிய பிரச்சினை. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி தலைவர்கள் பலரும் விரைவில் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசில் இணைந்து, அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என வெளியாகியிருக்கும் செய்திகள் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பெரும் தலையிடியைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றது. இம்மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்வதற்கு திட்டமிட்டுள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இவ்விதம் அரசுடன் இணைந்துகொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கும் தயாராகவிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணித் தலை…
-
- 0 replies
- 832 views
-
-
வாகரைநோக்கி சிறிலஙௌகாப் படையினர் எறிகணைவீச்சுத் தாக்குதல். மேலும்.
-
- 0 replies
- 800 views
-
-
மன்னார் வான் குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த இருவர் மரணம். [வியாழக்கிழமை, 4 சனவரி 2007, 04:40 ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னார் இலுப்பைக்கடவை படகுத்துறை கிராமத்தில் சிறிலங்கா வான் படையினர் நடத்திய கொடூர குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்த தாயும் அவரது 18 மாதக் குழந்தையும் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் திருமதி.மாலினி உதயகுமார் (வயது 27), அவரது பெண் குழந்தையான தர்சிகா உதயகுமார் (18 மாதம்) ஆகியோர் என்று கிளிநொச்சி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குண்டுவீச்சுத் தாக்குதலில் காயமடைந்த அவரது கணவர் உதயகுமாரும் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
-
- 0 replies
- 790 views
-
-
மவுஸாகல நீர்த்தேக்கத்தை படம் பிடித்த இரு தமிழ்ப் பெண்கள் கைது. மஸ்கெலிய மவுஸாகல நீர்தேக்க அணைக் கட்டை புகைப்படம் எடுத்த தமிழ் பெண்கள் இருவரை மஸ்கெலிய பொலிசார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். அதியுயர் பாதுகாப்பு வலயமான மவுஸாகல நீர்த்தேக்கப் பகுதிகளில் புகைப்படங்கள் எடுக்கவோ, ஒளிப்பதிவு செய்யவோ கூடாது என்று விளம்பர பலகைகள் இருக்கின்ற போதும் அந்த உத்தரவுகளை மீறி அவ்விருவரும் புகைப்படம் எடுத்ததாக மஸ்கெலிய பொலிசார் தெரிவித்தனர். தாய், மகளான இவ்விருவரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டவர்கள் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. இவ்விருவரும் சிவனொலி பாத மலைக்கு யாத்திரை மேற்கொண்டு விட்டு வீட்டுக்கு திரும்பிக…
-
- 0 replies
- 826 views
-
-
எதிர்கால இராணுவ நடவடிக்கை: வெலிக்கந்தையில் சிங்களப் படை அதிகாரிகள் ஆராய்வு. கிழக்கு மாகாணத்தில் அடுத்த கட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பாக வெலிக்கந்தையில் உள்ள 23 ஆம் படைப்பிரிவு கட்டளையகத்தில் கிழக்கு மாகாண படைத்தரப்பு அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நேற்று புதன்கிழமை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவும் முப்படைகளின் பிரதம அதிகாரியான ஏயார் மார்சல் டொனால்ட் பெரேராவும் வெலிக்கந்தையில் உள்ள 23 ஆம் படைப்பிரிவு கட்டளையகத்தில் சென்றனர். இச்சந்திப்பில் கிழக்குப் பிராந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய, 23 ஆம் படையணி கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் தயா ரட்ணாயக்க ஆகியோருடன் கிழக்குப் பிராந்திய உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். …
-
- 0 replies
- 825 views
-
-
மன்னார் கரையோரப்பகுதி மக்கள் அச்சத்தில் முற்றாக இடம்பெயர்வு [வியாழக்கிழமை, 4 சனவரி 2007, 08:37 ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கரையோரப் பிரதேச மக்கள் விமானத் தாக்குதல் அச்சம் காரணமாக அப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னார், இலுப்பைக்கடவை படகுத்துறைக் கிராமத்தின் மீது சிறிலங்கா விமானப் படையினர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடத்திய கண்மூடித்தனமான விமானத் தாக்குதலில் சுமார் 17 அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இப்பகுதி மக்கள் விமானத் தாக்குதல்கள் தொடரலாம் என்ற அச்சத்தால் இடம்பெயரத் தொடங்கியிருக்கின்றனர். முற்றுமுழுதாக கடற்றொழிலா…
-
- 0 replies
- 545 views
-
-
மருந்துகள் அற்ற கிளிநொச்சி மருத்துவமனை மன்னார் இலுப்பைக்கடவையில் சிறிலங்கா வான் படையினர் நடத்திய கொடூர வான் குண்டுவீச்சுத் தாக்குதலில் காயமடைந்த மக்கள் 50 கி.மீ. தூரத்தில் உள்ள கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு மருந்துப் பொருட்கள் தீர்ந்து போகும் நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் தீர்ந்து போகும் நிலையில் இருப்பதால் அவற்றை உடனடியாக அனுப்புமாறு பல மாதங்களாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது. காயமடையும் மக்களுக்கு அடிப்படையாக தேவைப்படும் மருந்துப் பொருட்களின் கையிருப்பு கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இலக்கம் மருந்தின் பெயர் …
-
- 0 replies
- 917 views
-
-
புதன் 03-01-2007 23:14 மணி தமிழீழம் (பதிவு நிருபர்) இலங்கை இனப்பிச்சினை தொடர்பாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்திய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் தலைவர் லால் கிருஷ்ண அத்வானிஇ முன்னாள் பிரதமர் அடல் பியாரி வாஜ்பாய்இ ஜஸ்வந்சிங்இ முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிர்ஜேஸ் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அத்துடன் இந்திய பிரதமருடன் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிஇ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்இ இந்திய பிரதமரின் தலைமை செயலாளர் டி.கே.ஏ.நாயர் இவெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந…
-
- 0 replies
- 728 views
-
-
புதன் 03-01-2007 23:12 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] வடமராட்சி பருத்தித்துறையில் யுவதி சுட்டுக்கொலை. யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்திதுறை பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்டவர் வல்லிபுர பரியாரியார் ஒழுங்கையை சேர்ந்த 30 வயதான கணபதிபிள்ளை கமலினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரது வீட்டுக்கு உந்துருளியில் சென்ற இரண்டு பேர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை புலொலி பகுதியில் 53 வயதாக குடும்பஸ்தரான கார்த்திகேசு கிருஸ்ணதாஸ் என்பர் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் …
-
- 0 replies
- 971 views
-
-
விடுதலைப்புலிகளிடம் 3ஹெலிகொப்டர் இருப்பதாக கெகலிய அச்சம். விடுதலைப்புலிகளிடம் ஒற்றை இயந்திரம் கொண்ட மூன்று ஹெலிகொப்ரர்கள் இருப்பதால் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும் போது கவனமாக இருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்கல இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஊடகமத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ரம்புக்கல இதனைத்தெரிவித்தார் சண்டே லீடர் ஆசிரியர் கைது செய்யப்படவில்லை. பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது அவதானமாக இருக்க வேண்டும் என அவர் சொன்னார். …
-
- 4 replies
- 3.1k views
-
-
அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க மஹிந்தவுக்கு இது இறுதிச் சந்தர்ப்பம்: ஜயலத் ஜெயவர்த்தன. தமிழ் மக்கள் படும் அவலங்களுக்கு முடிவு கட்டுவதற்கான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவே சுதந்திரக் கட்சியுடன் உடன்பாடு செய்தோம். ஒர் அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மகிந்தவுக்கு இதுவே இறுதிச்சந்தர்ப்பம் ஆகும். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டொக்டர் ஜயலத் ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் தமிழர்கள் படும் அவதி, அவர்கள் தென்னிந்தியாவுக்கு அகதிகளாகச் செல்கின்றமை, யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களால் தெற்கிற்கு வரமுடியாமை, அவர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றமை மற்றும் கொழும்பில் ஆட்கடத்தல்களுக்கு ஆளாகின்றமை என்பன போன்ற தமிழர்…
-
- 1 reply
- 959 views
-
-
அரசின் கொடூரத் தாக்குதலை சர்வதேசம் இனியும் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது மன்னார் தாக்குதலுக்கு தமிழ்க் கூட்டமைப்பு வன்மையான கண்டனம். மன்னார் படகுத்துறை மீது விமானப்படையின் கிபீர் விமானம் மூலம் குண்டுகளை வீசி அப்பாவித் தமிழ் மக்களைக் கொலைசெய்தமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. இச்சம்பவத்தைச் சர்வதேச சமூகம் பார்த்துக்கொண்டிராமல் இனிமேல் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாதவாறு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், மன்னார் படகுத்துறை மீது இலங்கை விமானப்படையினர் கிபீர் விமானம் மூலம் குண்டுகளை வீசி அப்பாவி மக்களைக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
* சாத்தியம் இருப்பதாக கூறுகிறார் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவ இரகசியங்களை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரியொருவருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனையை வழங்கும் சாத்தியம் தென்படுவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள கிரிமோதய மண்டபத்தில் இயங்கும் தேசிய பாதுகாப்பு தகவல் மைய கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற பாதுகாப்பு செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு இராணுவ இரகசியங்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் மூன்று இராணுவ அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் ஒருவர்…
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறிலங்காப் படையினரால் தாக்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் மந்திகை மருத்துவமனையில். யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கில் இன்று வீடுகளிற்குள் புகுந்த படையினர் பொதுமக்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் 5பேர் ஆபத்தான நிலையில் மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காப் படையினரின் தாக்குதலுக்கு இலக்கானவர்களான ரி.ரட்ணம்(64) அல்வாய், வி.அகிலன்(36) அல்வாய், ஆர்.நிதர்சன்(19)அல்வாய் ஆர்.நிரோசன்(21),வி.வைகுந்தன்(23) நெல்லியடிகரவெட்டி என்பவர்களே சிறிலங்காப் படையினரால் கடுமையாக தாக்கப்பட்டு மிக ஆபத்தான நிலையில் மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -sankathi-
-
- 0 replies
- 996 views
-
-
நலிந்து அவதியுறும் யாழ். மக்களை வாட்டி வதைத்து முடக்கியசிக்குன் குனியா! யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவலங்களுக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் மற்றும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம்கொடுத்துவரும் இவ்வேளையில் எங்கிருந்தோ வந்து இங்கு பரவிய சிக்குன் குனியா அவர்களை வாட்டி வதைத்து பிழிந்தெடுத்து விட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தச் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் நிரம்பி வழிந்ததை தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் மூலம் பார்க்க அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், அதன் விபரீதம் குறித்து நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை பின்னர் இலங்கையிலும் இந்நோய் பரவியுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறி…
-
- 0 replies
- 926 views
-
-
ஐ.தே.க.குற்றச்சாட்டு அரசாங்கம் புதிதாக ஆரம்பிக்க விருக்கும் `மிஹின்' விமான சேவைக்கு ஊழியர் சேமலாபநிதியிலிருந்து நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்திருப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, பாராளுமன்றத்தின் அங்கீகாரமின்றி அரசு தவறான செயற்பாடுகளிலீடுபட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்திருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார். அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; அரச துறை மற்றும் தனியார் ஊழியர்களின் வியர்வையாகக் கருதப்படும் அவர்களது ஊழியர் சேமலாபநிதியில் அரசு கைவைத்துள்ளது. அரசுக்க…
-
- 0 replies
- 1k views
-
-
விசாரணைக்கு கோருகிறது ஐ.தே.க. நிதியமைச்சின் செயலாளர் பாவிக்கும் கைக்கடிகாரத்தின் விலை 30 இலட்சம் ரூபாவெனவும் இவ்வளவு பெறுமதியான கைக்கடிகாரம் பெற்றுக் கொள்ளப்பட்ட முறை குறித்து விசாரிக்கப்பட வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் அரசை வலியுறுத்தியுள்ளார். அரசில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகள் பற்றி ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்த ஊடகப் பேச்சாளர் நிதியமைச்சின் செயலாளர் பாவிக்கும் கைக் கடிகாரத்தின் பெறுமதி 30 இலட்சம் ரூபாவெனவும் அது எவ்வாறு பெறப்பட்டது? ஓர் அரச அதிகாரி இவ்வளவு பெறுமதி மிக்க கடிகாரத்தைப் பாவிப்பதன் மூலம் பலத்த சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். இக் கைக்கடிகார விவ…
-
- 0 replies
- 899 views
-
-
பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பதன் மூலமே அமைதியை நிலைநாட்ட முடியும்: சரத் பொன்சேகா பிரிவினைவாதத்துக்கான பொது எதிரியை அழித்தொழிப்பதிலும் எமது தாய்நாட்டின் ஒருங்கிணைப்பைக் கட்டிகாப்பதிலும் நாங்கள் ஒன்று சேர்ந்து முன்வந்துள்ளோம் என்று சிறிலங்கா இராணுவத்தினருக்கான புத்தாண்டுச் செய்தியில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இந்த நாட்டைப் பிரிக்கும் நோக்கில் பல பயங்கரவாதச் செயல்கள் அரங்கேறுகின்றன காட்டுமிராண்டித்தனமான பிரிவினை சக்திகளால் முடிவற்ற குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன வருகின்றன என்று கூறிய அவர் இந்நிலையில் கட்டுப்பாடுடனும் ஒழுங்கோடும் மனித உரிமையைக் காக்கும் வகையில் செயற்படும் தமது இராணுவத்தினரை அவர் பாராட்டினார். நாட்டின் அனைத்துக் குடிமக்க…
-
- 6 replies
- 1.7k views
-
-
இராணுவ வேட்டைக்கு மத்தியில் பாலாவின் தலைமறைவு வாழ்க்கை திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தினால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் அப்போது இலங்கைக்கான இந்தியத் தூதுவராகவிருந்த டிக்ஷித்தை யாழ்ப்பாணம் அனுப்பி நிலைமையை ஆராய வைத்தது. கடும்போக்கு வாதியான டிக்ஷித்தை சந்தித்து பிரபாகரன் - பாலா பேச்சில் ஈடுபட்டனர். நிலைமையை புரிய வைத்தனர். எச்சரிக்கைவிடுத்தனர். அலட்சியம் செய்தார் டிக்ஷித் திலீபன் தியாக மரணமடைந்தார். குமாரப்பா, புலேந்திரனுக்கு சயனைட் கொடுத்த பாலா இதையடுத்து புலிகளின் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட 15 போராளிகளை இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை மீறி தமிழீழ கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்து இராணுவத்திடம் ஒப்படைத்தது. இவர்களை விடு…
-
- 2 replies
- 2.3k views
-