ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142635 topics in this forum
-
இலங்கை: தமிழ்ச்செல்வன் - கான்சன் போவர் சந்திப்பு Print தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை நோர்வேயின் சிறப்புத் தூதுவர் கான்சன் போவர் இன்று கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார். முற்பகல் 10.40 மணிக்கு தமிழீழ அரசியல்துறை நடுவகப் பணியகத்தில் இச்சந்திப்பு ஆரம்பமாகியது. தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் சீ. புலித்தேவன், இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் ஆகியொரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். நோர்வே சிறப்புத் தூதுவருடன் சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் கான்ஸ் பிரஸ்கரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்;. http://www.nerudal.com/content/view/3062/70/
-
- 0 replies
- 956 views
-
-
கொழும்பில் அடுத்த தாக்குதல்: அவுஸ்திரேலியா எச்சரிக்கை சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள சிறிலங்கா விமானப்படை கட்டமைப்பு அல்லது பிரதான சர்வதேச நிலையம் அடுத்த தாக்குதல் இலக்காகக் இருக்கக்கூடும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்துள்ளதால் இலங்கைப் பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய நாட்டவர் மீள் பரிசீலிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கொழும்பில் உள்ள சிறிலங்காவின் விமானப் படை கட்டமைப்புக்கள் அல்லது சிறிலங்காவின் பிரதான சர்வதேச விமான நிலையம் ஆகியவை இலக்கு வைக்கப்படக் கூடும். தற்கொலைத்தாக்கு…
-
- 3 replies
- 1.7k views
-
-
பல்குழல் எறிகணையால் அரசுக்கு நிமிடத்துக்கு 7 கோடி ரூபா செலவு! அரசு மேற்கொண்டுவரும் பல்குழல் எறிகணை (மல்டிபரல்) தாக்குதல் மூலம் ஒரு நிமிடத்துக்கு 7 கோடி 20 லட்சம் ரூபாவை அது அநியாயமாகச் செலவிடுகிறது. இதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கான நிதி அழிந்துபோவதற்கு இந்த நாட்டின் எதிர்காலமும் அழிந்துபோகிறது. இதை உடனடியாக நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்ட அரசு முன்வரவேண்டும். இவ்வாறு ஐ.தே.கவின் எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற இலங்கை சர்வதேச நாடுகளிடம் பெறும் கடன் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையில் உரையாற்றும்போது கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசு கண்மூடித்தனமான தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு நாளைக…
-
- 1 reply
- 1.7k views
-
-
மூன்று நிபந்தனைகளுக்கு புலிகளிடம் அரசாங்கம் இணக்கம் பெற்றதா? அத்துரலிய ரத்ன தேரர். சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் 3 நிபந்தனைகள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அரசாங்கம் இணக்கத்தை பெற்றுள்ளதா என ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். கொலைகள் நிறுத்தப்படுதல் ,சிறுவர்களை படைக்கு சேர்த்தல் மற்றும் ஆயுத சேகரிப்பு தொடர்பாக விடுதலைப்புலிகள் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரை ஒன்றை நிகழ்த்தும் போதே அவர் இதனை கூறினார். சர்வதேச சக்திகளுடன் இணைந்து அரசாங்கம் என்ன செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது எனவும் அவர் அரசாங்கத்திடம்…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
புலிகளின் கட்டுப்பாட்டு மட்டக்களப்பு பகுதியில் விமானக்குண்டு தாக்குதல் மட்டகளப்பு மாவட்டத்தில் இமுப்படிச்சேனை இனங்கானப்பட்ட விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது கிபிர் ரக விமானங்கள் இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் குண்டுகள் வீசியதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. மட்டகளப்பு கரயனறு தளைச்சேனைப்பகுதியில் மக்கள் குடியிருப்புகள் மீது சிறிலங்கா விமானப்படையினர் தாக்குதல் காரணமாக பெண் ஒருவர் கொல்லப்பட்டும் சிறுவன் உட்பட 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் புலிகள் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. காலி துறைமுகதாக்குதல் நடவெடிக்கைக்கு பதில் நடவெடிக்கையானது இது அமைந்திருக்கிறது என கருதப்படுகிறது எனினும் கிபிர் விமானங்கள் சுமார் 25 குண்டுகள் தளைச…
-
- 0 replies
- 803 views
-
-
ஹபரணையில் வெடித்துச் சிதறிய சம்பூர் ஆக்கிரமிப்பு நோக்கம் "பேசுங்கள்- போராடுங்கள்- போராடுங்கள்- பேசுங்கள்" என்ற வார்த்தைகளின் வழியாக பேச்சுவார்த்தைக்கான போராடுதலில் ஹபரண நிரந்த இடத்தைப் பிடித்துவிட்ட இடமாக நேற்று முன்தினம் பதியப்பட்டு விட்டது. ஏற்கப்பட்ட இழப்பு 102, கடுங்காயம் 150-ற்கும் மேல். இதற்கு மேலாக எந்தத் தகவலுமே வெளிவருவதில் சிறிலங்காவுக்கு உடன்பாடில்லை. இழப்புக்கள் குறித்த தகவல்களுக்கு சம்பவம் நடந்த சில மணிநேரத்திலேயே இரும்புத் திரையிடப்பட்டது. ஆம், இழப்பு அத்தகையது. கடுங்காயங்களுக்கு உள்ளானோர் என வர்ணிக்கப்பட்டோர் கொழும்பு மற்றும் குருநாகல் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட, "சுமாரான காயங்களுக்கு" உள்ளானோர் எனக் கருதப்பட்டு தம்புள்ள மருத்துவமனைய…
-
- 0 replies
- 848 views
-
-
-
தாக்குதல் செய்திகள்: ஊடகங்களுக்கு கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை ஜபுதன்கிழமைஇ 18 ஒக்ரொபர் 2006இ 17:15 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ தாக்குதல்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சாளரான அமைச்சர் கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் கேகலிய ரம்புக்வெல கூறியதாக சிறிலங்கா அரசாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி: காலித்துறைமுகத் தாக்குதல் தொடர்பாக சில வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளன. இலங்கையின் சுற்றுலா மையம் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி நிறுவனமும்இ முக்கிய வர்த்தக மையம் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக மறறும் ஒரு செய்தி நிறுவனமும் தகவல் வெளி…
-
- 4 replies
- 1.5k views
-
-
புதுக்குடியிருப்பில் விமானக் குண்டுத் தாக்குதல்: குழந்தை உட்பட இருவர் பலி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் ஒரு வயது குழந்தை மற்றும் 12 வயது சிறுமி பலியாயினர். மேலும் 15 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 5.15 முதல் 5.45 வரை இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. புதுக்குடியிருப்பு பரந்த வீதியில் மக்கள் குடியிருப்புக்கள் மீது 4 கிபீர் விமானங்கள் மூலம் 16 குண்டுகள் வீசப்பட்டன. இத்தாக்குதலில் ஒரு மாத கைக்குழந்தை உயிர் தப்பியது. 11 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் ஆறு ப…
-
- 6 replies
- 2.2k views
-
-
COLOMBO, Oct 18 (Reuters) - Riots broke out in the southern Sri Lankan port city of Galle on Wednesday after suspected Tamil Tiger rebels launched a suicide raid on a naval base there, residents and police said. Shops belonging to the minority Tamil community in the city were being targeted by the majority Sinhalese, they said. "We have instructed the police to bring it under control," one officer said, adding that a curfew had been imposed. At least three rebels on an apparent suicide mission were killed by troops when they attacked the naval base. http://www.alertnet.org/thenews/newsdesk/DEL85604.htm
-
- 8 replies
- 3.1k views
-
-
காந்தருபன் அறிவுச்சோலை சிறார் இல்லம் மீது வான்குண்டுத் தாக்குதல்- 216 சிறார்கள் உயிர் தப்பினர் [புதன்கிழமை, 18 ஒக்ரொபர் 2006, 03:37 ஈழம்] [ம.சேரமான்] முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ள காந்தரூபன் அறிவுச்சோலை சிறார் இல்லம் மீது சிறிலங்கா விமானப் படையினர் வான்குண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் 216 சிறார்கள் உயிர்தப்பினர். அறிவுச்சோலை இல்லம் மீது கடந்த திங்கட்கிழமை மாலை தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட்டனர். கைவிடப்பட்ட சிறார்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் அறிவுச்சோலை இல்லத்தின் விளையாட்டு மைதானம் மற்றும் குளியறை பகுதிகள் மீது தி…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் சிறிலங்கா அரசாங்கம் பலவீனத்தை வெளிப்படுத்தாது என்று அரசாங்க பேச்சுக் குழுத் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை வருகை தந்துள்ள நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் நேற்று செவ்வாய்க்கிழமை நிமல் சிறிபால டி சில்வாவை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிமல் சிறிபால டி சில்வா அலுவலகம், தாக்குதல்கள் நடைபெறுகிற போதும் பேச்சுவார்த்தைகளிலிருந்து அரசாங்கம் விலகிக்கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹபரணையில் கடற்படையினர் மீதான தாக்குதல் குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் ஜோன் ஹன்சன் பௌயர் …
-
- 1 reply
- 935 views
-
-
முகமாலையில் புலிகள் ஈட்டிய வெற்றியை இறுதி வெற்றி அல்ல ் வடபோர்முனையில் சிறீலங்கா அரசாங்கத்தின் நில ஆக்கிரமிப்பு படையெடுப்பு முறியடிக்கப்பட்டமைக்காக, தமிழ் மக்கள் இறுமாந்திருக்க முடியாது என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈழநாதம்| நாளேட்டிற்கு கருத்துரைத்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், வடபோர்முனையில் ஈட்டப்பட்ட வெற்றியை இறுதி வெற்றியாகக் கருதி தமிழ் மக்கள் இறுமாந்திருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றுமொரு படையெடுப்பிற்கான தயார்படுத்தல்களில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து தமிழ் மக்களும் அணிதிரள்வதன் மூலமே, ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்கொண்டு வெற்றியீட்ட முடியும் என்றும…
-
- 4 replies
- 1.8k views
-
-
வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான தரவுகளை தாக்கல் செய்ய அந்த நிறுவனங்களுக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. "நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்குள் அருகாமையில் உள்ள சிறிலங்கா காவல்நிலையங்களில் கடந்த 6 மாத கால வாகன விற்பனை தொடர்பான விவரங்களை கையளிக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விற்கப்பட்டது எந்த வாகனம்? வாகனத்தின் இலக்கம், மாதிரி மற்றும் யார் வாங்கியது உள்ளிட்ட விவரங்களை காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. http://www.eelampage.com/?cn=29359
-
- 0 replies
- 892 views
-
-
ஹபரனை தாக்குதல் குறித்து சிறிலங்கா கடற்படையினரும் காவல்துறையினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளனர். திருகோணமலை கடற்படை தளத்துக்குச் செல்வதற்காக காத்திருந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வெடிபொருட்கள் நிரப்பிய வாகனம் மோதியதில் இத்தாக்குதல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. சோதனைச் சாவடிகளில் அந்த வாகனத்தை உரிய முறையில் காவல்துறையினர் சோதனை நடத்தாமையினால்தான் இச்சம்பவம் நிகழ்ந்தது என்று கடற்படையினர் குற்றம்சாட்ட்யுள்ளனர். "திகம்பத்தன பகுதியில் நிறைய சோதனைச் சாவடிகள் உள்ளன. சில கிலோமீற்றர்களுக்கு அப்பால் தம்புள்ள நோக்கிய மிரிஸ்கொனியவ மற…
-
- 0 replies
- 963 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதலையும் நடத்துவோம் அவர்களுடன் பேச்சுக்களையும் நடத்துவோம் என்று சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பாலித கோகென்ன கூறியதாவது: பேச்சுக்களை நடத்துவது என்பதில் மறு சிந்தனையே இல்லை. பேச்சுக்களுக்குச் செல்ல வேண்டும் என்பதில் எமது அரச தலைவர் உறுதியாக இருக்கிரார். அவர்களுக்கு எதிரான எமது பதில் தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வோம். ஆனால் பேச்சுக்கும் செல்வோம். நிலைமைகள் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. இருதரப்பும் மோதலில் ஈடுபடுகின்ற போது அதனை எதிர்பார்க்கவும் முடியாது என்றார் பாலித கோகென்ன.
-
- 3 replies
- 1.1k views
-
-
http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/6050408.stm :P :P :P :P :P :P :P
-
- 22 replies
- 4.9k views
-
-
இலங்கை: மருத்துவமனைக்கு பணிக்கென வருகைதந்த மருத்துவ நிபுணர் குழுவை அரசாங்கம் பணிக்கு தடுத்துள்ளது. கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு பணிக்கென வருகைதந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்க சத்திர சிகிச்சை மருத்து நிபுணர் குழுவை அரசாங்கம் பணிக்கு அனுமதிக்காது தடுத்துள்ளது. கிளிநொச்சி பொது மருத்துவமனையில் குறைந்தது மகப்பேற்று, சத்திர சிகிச்சை, குழந்தை மருத்துவம், பொது மருத்துவம் ஆகிய துறைகளுக்கு மருத்து நிபுணர்கள் பணியில் இருக்க வேண்டிய சூழலில் அரசு ஒருவரைக் கூட பணிக்கு நியமிக்கவில்லை. இந்நிலையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் சத்திர சிகிச்சை நிபுணர் குழுவை அரசு திட்டமிட்ட ரீதியில் பணியில் ஈடுபடாமல் தடுத்துள்ளது. இதன் காரணமாக கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சத்திர சி…
-
- 0 replies
- 965 views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்: விமல் வீரவன்ச [செவ்வாய்க்கிழமை, 17 ஒக்ரொபர் 2006, 18:43 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சிறிலங்கா அரசாங்கத்தின் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று ஜே.வி.பி.யின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: வடக்கு-கிழக்கு இணைப்பான அரசியல் யாப்புக்கு விரோதமானது என்றும் சட்டவிரோதமானது என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் சட்டவிரோதம் என்று பிரகடனப்படுத்தி நோர்வேயை அனுசரணையாளர் பணியிலிருந்து உச்சநீதிமன்றம் வெளியேற்ற …
-
- 1 reply
- 932 views
-
-
புலிகளின் குரல்" வானொலியின் ஒலிபரப்பு நிலையம் மீது வான்குண்டுத் தாக்குதல் [Tuesday October 17 2006 10:59:57 AM GMT] [யாழ் வாணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகளின் குரல்" ஒலிபரப்பு நிலையமானது சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது. புலிகளின் குரல் தமிழீழ வானொலி ஒலிபரப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது கொக்காவிலில் உள்ள அதன் மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் இரண்டு குண்டுகளையும், றொக்கெற் குண்டுகளையும் ஏவின. புலிகளின்குரலின் ஒலிபரப்பு நிலையம், ஒலிபரப்புக் கோபுரம், இரண்டு கலையகங்கள் ஆகியவற்றின் மீதும் அதன் சுற்றா…
-
- 6 replies
- 2.4k views
-
-
அறிவுச்சோலை மீது விமானக்குண்டுத் தாக்குதல். ஒருவர் காயம். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த அறிவுச்சோலை ஆதரவற்றவர் இல்லம் மீது நடத்தப்பட்ட விமானக்குண்டு வீச்சிலிருந்து அதிர்ஷ்டவசமாக சிறார்கள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். நேற்று மாலை இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. செஞ்சோலை காப்பகத்தின் சகோதர காப்பாக இந்த அறிவுச்சோலை மையம் திகழ்கிறது. 216 சிறார்கள் தங்கியுள்ள இந்த காப்பகத்தில் ஸ்ரீலங்கா விமானப்படை விமானங்கள் வீசிய இரண்டு குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. விளையாட்டு மைதானத்தில் இந்தக்குண்டுகள் வீழ்ந்ததினால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒரு குழந்தை காயமடைந்துள்ளது. யுத்தநிறுத்தக் கண்காணிப்கழுவினர் இன்று சம்பவ இடத்…
-
- 0 replies
- 900 views
-
-
'நாங்கள் அங்கே வருவோம் என எங்களுக்காக அவர்கள் காத்திருந்தார்கள்- எங்களைக் கடுமையாகத் தண்டிப்பதற்காக- செய்து முடித்தார்கள்" இவ்வாறு முகமாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சமர் தொடர்பாக யாழ். குடாநாட்டிலுள்ள இராணுவ அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். முகமாலையில் வலிந்த தாக்குதல் நடத்துவதற்காக புலிகளின் நிலைகளுக்குள் நுழைந்த படையினருக்கு ஏற்பட்ட கதி சிங்கள ஆட்சித் தலைவரை சினமடைய வைத்திருக்கிறது. இராணுவ ஆய்வாளர்களை அவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகக் கொண்டிருந்த நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்யத்து}ண்டியிருக்கிறது. அதிலும் சிறிலங்கா இராணுவம் கைக்கொள்ளும் இராணுவ உத்திகளை மாத்திரமல்ல. அடிப்படைத் தந்திரோபாயம் சரியானது தானா? அவ்வாறானதொரு தந்திரோபாயம் அவர்களிடம் இருக்கிறதா?…
-
- 1 reply
- 1.7k views
-
-
யுத்த நிறுத்த உடன்பாட்டை உடனடியாக இரத்துச் செய்துவிட்டு யுத்தத்தை ஆரம்பிக்கவேண்டும்; நோர்வேத் தரப்பை உடனடியாக சமாதான முயற்சியில் இருந்தும், அடுத்த கட்டமாக சிறிலங்காவில் இருந்தும் வெளியேற்றவேண்டும் எனவும் கூச்சலிட்டு வந்த சிலரது பேச்சைக் கடந்த சில நாட்களாகக் காணவில்லை. குறிப்பாக முகமாலையில் சிறிலங்கா இராணுவம் பெரும் இழப்பைச் சந்தித்த பின்னர் இவர்களை வெளியில் காணவில்லை, பேச்சுக்களைக் கேட்க முடியவில்லை. அரசாங்கத்தரப்பில் இருந்து நாளாந்தம் ஊடகங்களைச் சந்தித்து வந்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவை சில நாட்களாக ஊடகங்களின் முன்னால் காணவில்லை. மாவிலாற்று விவகாரத்துடன் காலை மாலை எனப் பேசிவந்த அவர் சம்புூருடன் முழுநாளும் பேச்சையே தொழிலாக…
-
- 0 replies
- 1.5k views
-
-
சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குத் தயார் என்று அடிக்கடி சொல்லிக் கொள்கின்ற சிறிலங்கா அரசு தொடர்ந்தும் பிரகடனப்படுத்தாத போரை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாது பொருளாதார தடைகளையும் தமிழ் மக்கள்மீது பிரயோகித்து வருகின்றது. போர் தருகின்ற அல்லல்களையும் பொருளாதார தடைகள் கொடுக்கின்ற இன்னல்களையும் எதிர்கொள்கின்ற தமிழ்ப் பொதுமக்கள்மீது போக்குவரத்துத் தடைகளையும் உணவு மருந்துத் தடைகளையும் சிறிலங்கா அரசு இரக்கமின்றி விதித்து வருகின்றது. இவை மூலம் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களை பட்டினி மூலமும், நோய்நொடி மூலமும் அழித்து விடுவதற்கான முயற்சிகளை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. தமிழீழப் பகுதிகளில் அளப்பரிய புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற தமிழர் புனர்வ…
-
- 4 replies
- 1.6k views
-