ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
தேசியத் தலைவருடன் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம்: பொட்டம்மான் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் தமிழீழத் தேசியத் தலைவருடன் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டம்மான் தெரிவித்துள்ளார். பாலா அண்ணன் "தேசத்தின் குரல்" என்ற உயர்ந்த விருதால் தமிழீழம் உள்ளவரை நினைவு கூரப்படுகின்ற ஒருவராக தன்னுடைய சுவடுகளை விட்டுச்சென்றுள்ளார் எனவும் பொட்டம்மான் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டிருக்கின்றார். அவர் மேலும் கூறுகையில் முக்கியமாகத் தெரிவித்ததாவது: தமிழீழம் உள்ளவரை அவருடைய நினைவுகள் தமிழ் மக்களுடைய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த…
-
- 6 replies
- 1.4k views
-
-
செவ்வாய் 19-12-2006 15:08 மணி தமிழீழம் (மயூரன்) தேசத்தின் குரலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை துக்கதினம் அனுஷ்டிக்குமாறு பொது அமைப்புகள் அழைப்பு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை துக்கதினம் அனுஷ்டிக்கும்படி யாழ்ப்பாண மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் கோரியுள்ளது. தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக கடந்த மூன்று தசாப்தமாக குரல் கொடுத்த "தேசத்தின் குரல்' கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு எமது கண்ணீர் வணக்கங்களைத்தெரிவிக்கும் முகமாக நாளை புதன்கிழமையன்று யாழ்ப்பாணக்குடாநாடு தழுவிய ரீதியில் பூரண துக்கதினமாக கடைப்பிடிப்போம். இதனூடாக எமது அஞ்சலிகளை எமக்காக உழைத்த கல்விமானும்இ தத்துவாசிரியரும்இ தமிழ் பேசும் ம…
-
- 0 replies
- 887 views
-
-
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுக்க இயலாது: முதல்வர் கருணாநிதி பேச்சு விழுப்புரம், டிச. 18: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ள இயலாது என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறினார். 2-வது கட்ட இலவச நிலம் வழங்கும் விழாவை விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது: "துணைக் கண்டமான இந்தியாவுக்கு, "கண்டம்" வராமல் பாதுகாக்க வேண்டும். பக்கத்து நாடால் "கண்டம்" வரக்கூடாது என்பதற்காகச் சிந்தித்துச் செயல்படுகிறோம். இலங்கைப் பிரச்சினையில் இதே நிலையைக் கையாள்கிறோம். இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதால், அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருவது தொடர்கிறது. அண்மையில் தில்லிக்குச் சென்றபோது இதுகுறித்து …
-
- 15 replies
- 3k views
-
-
இதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்கிறார் பழ.நெடுமாறன் இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசினதோ, தமிழகத்தினதோ நடவடிக்கைகள் போதுமானவையல்ல, இலங்கையில் ராணுவ நடவடிக்கையை நிறுத்தவேண்டும், ஏ9 வீதியை திறக்க வேண்டுமென இந்திய மத்திய அரசு கூறிவருகின்ற போதிலும் அது சாத்தியமாகவில்லை. எனவே சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இந்தியா இதனை மேற்கொள்ளவேண்டும். இதற்கான அழுத்தத்தை தமிழகம் கொடுக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறினார். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் குறித்து தமிழக மக்கள் முன்னர் ஒரு போதும் இல்லாத வகையில் மிகுந்த கவலை கொண்டு உள்ளனர். தமிழக மக்கள் மத்தியில் பெரும் உணர்வலைகள…
-
- 8 replies
- 1.6k views
-
-
வவுனியாவில் மூன்று இளைஞர்கள் சுட்டு கொலை வீரகேசரி இணையத்தளம் வுனியா சலபுத்துரம் பகுதியில் மூன்று இளைஞர்கள் இனந்தெரியாத நபர்களால் நேற்று திங்கள் இரவு சுட்டுக் கொல்லப்படடுள்ளனர் . பிரதேச வாசியான 27 வயதுடைய இளைஞனும் அவரது இரு நண்பர்களும் வீட்டில் இருந்து வேளை வீட்டினுள் நுழைந்து இனந் தெரியாத நபர்கள் பிரயோகம் செய்துள்ளனர் . வவுனியா பொலிஸார் இக் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற் கொள்கின்றனர்.
-
- 0 replies
- 787 views
-
-
குடாநாட்டில் மனிதாபிமான நெருக்கடி மத்தியில் சிக்குன் குனியா நான்கு மாதங்களுக்கு முன்பு ஏ-9 பாதையை அரசாங்கம் மூடியதைத் தொடர்ந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் தோன்றிய மனிதாபிமான நெருக்கடி மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்ற அதேவேளை சகல பொருட்களினதும் விலைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. குடாநாட்டு மனிதாபிமான நெருக்கடியைத் தணிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசாங்கம் உலகிற்கு கூறிக் கொண்டிருக்கிற போதிலும், அங்குள்ள நிலைவரங்களில் எத்தகைய மேம்பாட்டையுமே காணக் கூடியதாக இல்லை. மக்கள் பெரும் அவலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக அத்தியாவசிய …
-
- 1 reply
- 829 views
-
-
'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் எழுதிய 'விடுதலை' கட்டுரைத் தொகுப்பு தொடர்பாக தமிழகத்தமிழர் பத்ரியின் நயப்புரை அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை எழுதியவர்: பத்ரி (திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் விடுதலை நூல் பற்றிய இந்த நயப்புரை http://thoughtsintamil.blogspot.com என்னும் வலைப்பதிவில் இருந்து நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது. இந் நூல்நயம் பரந்த வாசிப்பு அனுபவமும், இணைய வலைத் தளங்களில் நன்கு அறிமுகமுமான தமிழகத் தமிழர் ஒருவரால் எழுதப்பட்டது என்பதில் முக்கியத்துவம் பெறுகின்றது. நூலின் அட்டை எம்மால் இணைக்கப்பட்டது.) அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 1 விடுதலை கட்டுரைத் தொகுப்பு அன்ரன் பாலசிங்கம் பெயர்மக்ஸ் பதிப்பகம் (Fairmax Publishing Ltd.), …
-
- 1 reply
- 2.5k views
-
-
"சர்வதேசத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு தேசத்தின் தூதுவருக்கு இணையானவர் அன்ரன் பாலசிங்கம்: "த இன்டிபென்டன்" நாளேடு லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில நாளேடான "த இன்டிபென்டன்" தமிழீழ விடுதலைப் புலிககளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தொடர்பான ஆய்வு ஒன்றை தனது நேற்றைய (18.12.06) நாளேட்டில் வெளியிட்டுள்ளது. ஜஸ்ரின் கூக்லர் (Justin Huggler) என்பவர் எழுதிய இந்த ஆய்வில், "போராளிக் குழுவின் சர்வதேச தொடர்பாடலுக்கு உரியவராக செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசியலில் பண்டாரநாயக்க குடும்பம் எவ்வளவு துரம் ஊடுருவி இருந்தார்களோ அதைவிட பலமடங்கு ஊடுருவ இவர் முயற்சிக்கிறார் என்றே தென்படுகிறது. அது எவ்வளவு தூரம் பலிக்கும் என்பது புலிகளின் கைகளில்தான் உள்ளது.
-
- 3 replies
- 1.6k views
-
-
இலங்கையையும் சொமாலியா போலவே கருதும் அமெரிக்கா! - பண்டார வன்னியன் Sunday, 17 December 2006 10:58 இலங்கை, சோமாலியா அகதிகளுக்கு உதவ 5.215 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஒதுக்கியுள்ளார். இலங்கை, சோமாலியா நாடுகளின் இனப்பிரச்சினையில் பாதிக்கப்பட்டு அகதிகளான மக்களுக்கு உதவ இந்த நிதி பயன்படுத்தப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சொந்த நாட்டின் போர்ச்சிக்கல்களால் பாதிக்கப்பட்டு தப்பித்த அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களின் எதிர்பாராத அவசரத் தேவைகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டுமென வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா றைசுக்கு கடந்த வியாழக்கிழமை எழுதிய அறிக்கையில் ஜனாதிபதி புஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதியை அனைத்துலக, அர…
-
- 2 replies
- 1.6k views
-
-
மதியுரைஞரின் இறுதி நிகழ்வுகள் தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள், எதிர்வரும் 20ஆம் நாள் புதன்கிழமையன்று லண்டனில் இடம்பெற இருக்கின்றன. அன்றைய நாளில், பின்வரும் மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை, மதியுரைஞரின் வித்துடல் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு வீர வணக்க நிகழ்வு நடைபெறும். வீர வணக்க நிகழ்வு இடம்பெறும் மண்டபம்: Alexandra Palace Alexandra Palace Way Wood Green London N22 7AY விடுதலைக் கனலை இதயத்தில் சுமந்து, தமிழ் மக்களையும், தமிழீழ மண்ணையும் ஆழமாக நேசித்து, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அயராது அரும் பணியாற்றி, தமிழினத்…
-
- 10 replies
- 2.8k views
-
-
கடந்த நான்கு மாதங்களாக யாழ் குடாநாட்டில் கைத்தொலைபேசியில் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. இன்றிலிருந்து கைத்தொலைபேசிகள் இயங்கும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதும் இதுகுறித்து தொலைபேசி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது படையினர் விதித்துள்ள முட்டுக்கட்டைகள் காரணமாக கைத்தொலைபேசிகள் இயக்குவதற்கு அனுமதி சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சிலிருந்து இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 764 views
-
-
அம்பாறை கல்முனையில் காவல்துறையில் கடமையாற்றும் சாஜன் தர காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுப் தற்கொலை செய்துள்ளார். இன்று மதியம் 1.20 மணிக்கு கல்முனை காவல்துறை தங்ககத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்துகொண்ட காவல்துறை அதிகாரி கல்முனை சாய்ந்தமருதடியைச் சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
-
- 0 replies
- 763 views
-
-
குடாநாட்டில் ஏப்ரல் மாதம் தொடக்கம் டிசம்பர் 14ம் நாள் வரை 702 பொதுமக்கள் பலி! [Monday December 18 2006 04:50:09 PM GMT] [tharan] யாழ் குடாநாட்டில் கடந்த ஒன்பது மாதங்களில் சிறீலங்காப் படைகளால் 702 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார் என யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றை விடுதிருக்கும் மனித உரிமைகள் ஆணையகம் கடந்த ஏப்ரல் மாதம் டிசம்பர் 14ம் நாள்வரை சிறீலங்காப் படைகள் நடத்திய பகிரங்கத் தாக்குதல், உந்துறுளிப் படுகொலைகள், வெள்ளை வான் ஆட்கடத்தல், போன்றவற்றில் 702 பேர் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/
-
- 3 replies
- 869 views
-
-
யாழ் குடாநாட்டில் குடிசார் கெடுபிடிகளில் தளர்வுகளை மேற்கொள்ளும் சந்தர்பங்களில் அவை பாதுகாப்பு விடயங்களுக்கு இசைவாக உள்ளனவா என்பதை உறுதி செய்யுமாறு யாழ் இராணுவத் தளபதிகளிடம் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வலியுறுத்தியுள்ளார். இன்று காலை 10 மணிக்கு பலாலி கூட்டுப் படைத் தளத்தில் மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தலைமையில் சிறீலங்காப் படைகள் உயர் அதிகாரிகளுக்கு இடையிலான உள்ளகப் பாதுகாப்பு மாநாடு இடம்பெற்றது. இதன்போது கருத்துரைத்திருக்கும் மேஜர் ஜெனரல் சந்திரசிறீ பாதுகாப்பு விடயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலமே படையினரின் இருப்பை உறுதிசெய்ய முடியும் எனக் கூறியுள்ளார். நன்றி - பதிவு.com
-
- 0 replies
- 711 views
-
-
அடையாளம் காணப்படாத நிலையில் இரு ஆண்களின் சடலங்கள். - பண்டார வன்னியன் Monday, 18 December 2006 19:28 மன்னார் பிச்சைக்குளம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படாதநிலையில் மன்னார் மருத்துவமனையின் பிரேத அறையில் உள்ளன. கடந்த 15ம் திகதி மன்னார். முருங்கன் பிரதேசத்திற்குட்பட்ட பிச்சைக்குளம் பகுதியில் கண்களும் கைகளும் கட்டப்பட்டு துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர். மன்னார் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. இச் சடலங்கள் இரண்டும் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மன்னார் மருத்துவமனை பிரேத அறையில் உள்ளது. http://www.sankathi.org
-
- 0 replies
- 817 views
-
-
சந்திரிக்காவின் ஐக்கிய நாடுகள் கல்வித்துறை ஆலோசகர் பதவி பறிமுதல்? ஐக்கிய நாடுகள் கல்வி-விஞ்ஞான - பண்பாட்டு அமைப்பில் சிறீலங்காவின் முன்னாள் அதிபருக்கு வழங்கப்பட்ட பதவி பறிமுதல் செய்யும் நிலை தோன்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாசியப் பிராந்தியத்தில் தற்போது சுற்றுப் பயணத்தில் இருக்கும் சந்திரிக்காவை பயணத்தை உடன்நிறுத்தி தலமைச்செயலகம் திரும்புமாறு ஐக்கிய நாடுகள் கல்வி-விஞ்ஞான-பண்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கொய்ச்சீரோ மற்சூரா பணிப்புரை விடுத்துள்ளார் சந்திரிக்கா கடந்த காலத்தில் மேற்கொண்ட பல மனித உரிமைகள் குறித்து பல மட்டங்களில் இருந்து வந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இதுகுறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 7 replies
- 2.2k views
-
-
வெள்ளை நிற வேட்டி, ஷேர்ட்டுடன் பாலாவின் உடல் மலர்ச்சாலையில்!லண்டனிலிருந்து ந.வித்தியாதரன் "தேசத்தின் குரல்' மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் உடல் நேற்று லண்டனில் உள்ள மலர்ச்சாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. பாலாவுக்கு மிகவும் விருப்பமான, வெள்ளைநிற வேட்டியும், வெள்ளை நிற ஷேர்ட்டும் அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்தது. பாலா தம்பதியினருக்கு மிகவும் நெருக்க மானவர்கள் மாத்திரமே குறித்த மலர்ச்சாலையில் நேற்று மதியுரைஞரின் உடலைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். திருமதி அடேல் பாலசிங்கம் மலர்ச்சாலையில் நின்று, தமக்கும் தமது கணவருக்கும் நெருங் கிய உறவுடையவர்கள், நண்பர்கள் சிலரைக் கூட்டிச் சென்று தமது கணவரின் உடலைக் காண்பித்தார். பாலாவுக்கு மிகவும் பிடித்தமான தமி ழர்களின் …
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்கா வான் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி . [திங்கட்கிழமை, 18 டிசெம்பர் 2006, 14:53 ஈழம்] [தெ.சந்திரநாதன்] சிறிலங்கா வான் படையைச் சேர்ந்த ஆறு அதிகாரிகளுக்கு அரசின் அண்மைய கொள்முதலான மிக்-27 ரக ஜெட் போர் விமானங்களை ஓட்டுவதற்கு இந்தியாவின் வான் படைப் பயிற்சி நிலையமான சண்டிகாரில் பயற்சி அளிக்கப்படுகிறது. கடந்த ஒக்ரோபரில் தொடங்கிய இந்தப் பயிற்சி எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழு பயிற்சி முடிந்து வந்ததும் மூன்றாவது குழு பயிற்சி பெறச் செல்லும் என இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா வான் படை 1999 முதல் 2000 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானில் பயிற்சி பெற்றது. தற்போது இந்தியாவில் பயிற்சி பெற…
-
- 1 reply
- 1.3k views
-
-
கிழக்கிலிருந்து வெளியேற்றப்படப் போவது விடுதலைப் புலிகள் அல்ல: இளந்திரையன் [திங்கட்கிழமை, 18 டிசெம்பர் 2006, 15:39 ஈழம்] [பூ.சிவமலர்] கிழக்கில் எமது பகுதியிலிருந்து எங்களை வெளியேற்ற சிறிலங்கா இராணுவம் திட்டத்தை அறிவித்தால், விடுதலைப் புலிகள் முன்தாக்குதலைத் தொடங்குவர் என தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகள், பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என குற்றம் சாட்டிய இராணுவம், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு எதிராக கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை விரட்டுவோம் என தெரிவித்துள்ளது. இராணுவத்தினரின் மோட்டார் மற்றும் எறிகணைத…
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த மூவர் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 18 டிசெம்பர் 2006, 14:22 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவைச் சேர்ந்த மூவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 1 reply
- 995 views
-
-
"தேசத்தின் குரல்' அன்டன் பாலசிங்கம், தேசியத் தலைவர் வே. பிரபாகரன் மீதும் போராளிகள் மீதும் கொண்டிருந்த பற்றை வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாது என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தான் படித்த விடுதலைத்தத்துவம், அதனூடாகதான் பார்க்கின்ற தமிழீழத்தை தேசியத் தலைவரின் சொல்லிலும் செயலும் தான் காண்கிறார் என்றும், அதனால் தான் தலைவரின்பால் கவரப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் ஆரம்ப காலத்திலேயே தன்னை இணைத்துக்கொண்டார் என்றும் அன்டன் பாலசிங்கம் தெரிவித்து வந்தார். "எமது போராட்டச் செயற்பாடுகளுடன் இணைவதற்கு முன்பாக இங்கிலாந்தில் ஒரு உளவியல் நிபுணராக உளவளத்துணை ஆலோசகராக இருந்து செயற்பட்ட அவர், ஆரம்பத்தில் சாதாரண பத்திரிக…
-
- 0 replies
- 691 views
-
-
டிராக்டரில் தப்பி ஓடியபோது சிங்கள ராணுவம் ராக்கெட் வீச்சு: 7 தமிழர்கள் பலி கொழும்பு, டிச. 18- இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதிகளில் தமிழர்கள் வீடுகளையும் விடுதலைப்புலிகளின் முகாம்களையும் ராணுவம் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ தாக்குதலுக்கு பயந்து பொதுமக்கள் வீடுகளை காலி செய்து காடுகளிலும், அகதிகள் முகாம்களிலும் தஞ்சம் புகுந்துஉள்ளனர். இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுவாசல்களை இழந்து தவிக்கிறார்கள். மட்டக்களப்பு மாகாணத்தில் இதர வெளியில் இருந்து வாகரைக்கு தமிழர்கள் குடும்பத்துடன் டிராக்டரில் சென்று கொண்டிருந்…
-
- 0 replies
- 815 views
-
-
வாகரையில் இருந்து இதுவரை 13ஆயிரம் பேர் இடம்பெயர்வு கடந்த 3 தினங்களில் மட்டும் ஆயிரம் பேர் அரச பகுதிக்கு கொழும்பு,டிசெ.18 வாகரையில் இருந்து கடந்த ஒரு மாத காலத்திற்குள் 13 ஆயிரத்து 220 பேர் மட்டக்களப்பு அரச கட்டுப்பாட் டுப் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்துள் ளனர் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சி.புண்ணியமூர்த்தி நேற்று தெரிவித்தார். கடந்த 3 தினங்களில் மாத்திரம் 3 ஆயிரத்து 446பேர் இவ்வாறு இடம் பெயர்ந்துள்ளனர் என்று அவர் குறிப் பிட்டிருக்கின்றார். இவர்கள் செங்கலடி, வாழைச்சேனை, கிரான், மட்டக்களப்பு, ஆரை யம்பதி மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கவைக்கப் பட்டிருக்கின்றனர் என்றும் அரச அதி பர் தெரிவித்தார். இடம்பெயர்ந்…
-
- 1 reply
- 759 views
-
-
இனக்குழும பிரச்சினைத் தீர்வு புதிய பாணி பீஷ்மர் தேசிய பாதுகாப்பு விடயங்கள் பற்றிப் பேசுவதற்கான புதிய உத்தியோகத்தரான ஹுலுகெல்ல என்பவர் ஜனாதிபதி இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இனக்குழுமப் பிரச்சினைக்கான ஒரு நல்ல தீர்வினை கொண்டு வந்து விடுவாரென தெரிவித்ததாக அரச ஊடகங்கள் சில கூறுகின்றன. இனக்குழும பிரச்சினைக்கான தீர்வினை அரசாங்கமே முன்வைக்க வேண்டும்- இந்தக் கட்டத்தில் அது அரசாங்கத்தின் பணி என்பது தென்னாசிய, சர்வதேசிய நிலைப்பாடாகும். கடந்த மாதம் இந்த நிலைப்பாடு மிக வன்மையாகவே பேசப்பட்டு வந்தது. ஜனாதிபதியும் தனக்கு சற்று அவகாசம் வேண்டுமென்றும் இந்த விடயங்களிலே தனது நிர்வாகம் புதிதாக பலவற்றை செய்யப்பார்க்கிறது என்கின்ற முறையிலே பதில்களை கூறி வந்துள்ளார். …
-
- 0 replies
- 1.1k views
-