Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். மனித அவலங்களை அம்பலப்படுத்த முயற்சித்த மதகுருமார் மூவர் கைது [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 18:37 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மனித அவலங்களை சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கத்தோலிக்க மதகுருமார் மூவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்தனர். யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரின் கொலைகள், கடத்தல்கள் உள்ளிட்ட பாரிய மனித அவலங்களை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்துவற்காக மக்களிடம் இருந்து 5,000 கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கையினை கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ். மறைமாவட்ட நீதி, சமாதானத்திற்கான அமைய…

    • 0 replies
    • 729 views
  2. தமிழக எதிர்ப்புப் போராட்டங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை தருகின்றது: மகிந்த ராஜபக்ச [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 18:30 ஈழம்] [கொழும்பு நிருபர்] தனது இந்திய வருகையை எதிர்த்து தமிழ்நாட்டில் நடத்தும் போராட்டங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வைத் தருவதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய பயணம் மேற்கொள்ளும் முன்பாக கொழும்பில் இந்திய ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாவது: 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நான் பல ஊர்வலங்களையும் முழக்கங்களையும் முன்நின்று நடத்தியிருக்கிறேன். இந்த ஊர்வலங்கள் ஒருவகையில் உண்மையிலேயே சில வேளைகளில் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வைத் தருகின்றன. ஆகவே தமிழ்நாட்டில் நடைபெறும் ஊர்வலங்க…

    • 0 replies
    • 691 views
  3. மகிந்தவின் தந்தைக்கு "உறக்க" மரியாதை செலுத்திய அமைச்சர்கள் [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 16:50 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரச தலைவரான மகிந்த ராஜபக்சவின் தந்தையும் சுதந்திரக் கட்சியின் நிறுவனத் தலைவர்களின் ஒருவருமான டி.ஏ.ராஜபக்சவின் நினைவுநாள் நிகழ்வில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் "வித்தியசமான" முறையில் செலுத்தினர். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏ.டி.ராஜபக்ச நினைவு நிகழ்வு நடைபெற்றது. சிறிலங்கா சுகாதாரத்துறை அமைச்சரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சுக்குழுத் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சமுர்த்தி திட்ட அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியும் "…

  4. மட்டக்களப்பின் வாகரையில் பட்டினிச்சாவுக்கு வயோதிபத் தாய் ஒருவர் பலி மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினி அவலத்தினை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் 6 பிள்ளைகளின் தாயாரான வி.பொன்னம்மா (வயது 60) என்ற வயோதிபத்தாய் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பட்டினியினால் உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்பினை வாகரை மருத்துவமனை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். Puthinam வாகரையில் தொடரும் வான்படைத் தாக்குதல் வாகரைப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகலில் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இரண்டு கிபி…

  5. அம்பாறையில் அதிரடிப்படையின் முன்நகர்வு முயற்சி முறியடிப்பு- 4 பேர் பலி [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 15:35 ஈழம்] [அம்பாறை நிருபர்] அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முன்நகர்வு முயற்சிக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் அதிரடிப்படையினர் நால்வர் கொல்லப்பட்டனர். ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தாண்டியடி காஞ்சிரங்குடா முகாமின் எறிகணைச் சூட்டாதரவுடன் இன்று சனிக்கிழமை காலை 7.30மணிக்கு தங்கவேலாயுதபுரம் பாவட்டாப் பிரதேசம் நோக்கி சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினர் முன்நகர்வை மேற்கொண்டனர். இதனை முறியடிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடைபெற்ற இடத்திலேயே சிறப்பு அதிரடிப்படையினர் நால…

  6. யாழில் கிணற்றிலிருந்து இளைஞரின் முண்டம் மீட்பு. யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கரம்பன் என்னும் இடத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஒரு இளைஞரின் முண்டம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட முண்டம் கால் கைகள் தலை வெட்டப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. நேற்று நன்பகல் இந்த சடலம் கிணற்றில் இருந்து வீசிய துர்நாற்றத்தைத் தொடர்ந்து மீட்க்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வயது மதிக்கத்தக்கவரான இச் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. குறிப்பிட்ட சடலம் முட்கம்பியினால் பினைக்கப்பட்டு கிணற்றில் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் கடந்த நாட்களில் இ…

  7. மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு யாழில் செய்தித் தணிக்கை. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு மாவீரார் நாள் நிகழ்வுகளை செய்திகளாகப் பிரசுரிக்கக் கூடாதென அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளதாகக தெரியவருகின்றது. மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றுடன் ஐந்தாம் நாள் இடம் பெறுகின்ற போதிலும் யாழ் குடாநாட்டில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளான எந்த வொரு பத்திரிகையும் வன்னியில் இடம்பெறும் நிகழ்வுகளை பிரசுரிக்கவில்லையென பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். அரசாங்கம் தாம் எந்த சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கு எந்த வகையான தடைகளையும் ஏற்படுத்தப் போவதில்லையென்று கூறிக் கொண்டு யாழ் குடாநாட்டுப் பத்திரிகைகளுக்கு வெளியிடப்படாத தணிக்கையொன்றை துப்பாக்கி முனையில் மேற்கொ…

  8. யாழ் மாவட்ட பாடசாலைகளில் மாவீரர் நாள் பதாதைகள். யாழ் குடாநாட்டுப் பாடசாலை வளாகங்களில் மாவீரர் நாள் பதாதைகள் மாணவர்களினால் கட்டப்பட்டு வருகின்றது பல பாடசாலைகளில் கட்டப்பட்ட பதாதைகள் இன்று இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ள போதிலும் மாணவர்கள் தொடர்ந்து இத்தகைய பதாதைகளை தொடர்ந்து கட்டிக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மாணவர்கள் கட்டும் பதாதைகளை அறுக்கும் நடவடிக்கையில் படைத்தரப்பினர் முழு மூச்சாக ஈடுபடுகின்ற போதிலும் மாணவர்களும் தமது முயற்சியை கைவிடாது பதாதைகளை தொடர்ந்து கட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் பாடசாலைகளில் மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகவும் எழுச்சிகரமாக நடத்த மாணவர்கள் முன்முயற்சிகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கத…

  9. ஏ-9 பாதையினை திறக்கும்படி மகிந்த நிர்ப்பந்திக்கப்படுவார். -வை.கோவிடம் மன்மோகன்சிங் உறுதி- யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான ஏ-9 வீதியை திறக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் வலியுறுத்துவேன் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயலாளர் வைகோவிடம் உறுதியளித்துள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று புதுடில்லியில் வைகோவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போதே ஏ 9 வீதியை திறக்குமாறு வலியுறுத்துவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின்போது இலங்கையில் தமிழ்மக்கள் அனுபவிக்கும் துன்பதுயரங்கள் குறித்து வைகோ எடுத்துக்கூறியுள்ளார். ஏ 9 வீதி மூடப்பட்டுள்ள…

  10. யாழ்பாணத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சல்-5000 பேர் பாதிப்பு. யாழ் பகுதியில் சிக்கின் குனியாவை ஒத்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிவருவதாகவும் இந்நோயினால் 5000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்பிரதி மாகாண சுகாதார சேவைகளின் பணிப்பாளர் டாக்ரர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வலிகாமம் பகுதியிலேயே இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாகவும், இந்நோயின் தாக்கத்தால் ஊரெலுவைச் சேர்ந்த கனகலிங்கம் சர்மிலா என்ற யுவதியே யாழ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்ததாகவும் அவர்மேலும் தெரிவித்தார். www.pathivu.com

  11. தாயகத்தில் தமிழீழ மாவீரர் நாள். தமிழீழ தாயகத்தில்; தமிழீழ மாவீரர்நாளின் ஆரம்பநாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பாமாகி உள்ளன தமிழீழ அரசியல்துறை நடுவகப்பணியகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் ஆரம்ப நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரர்தூயவனின் சகோதரனும், சிற்பக்கலைஞருமான விக்னேஸ்வரன் ஏற்றி வைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொதுப் படதிற்கான சுடர் ஏற்றிவைக்கப்பட்டு மலர்வணக்கம் செய்யப்பட்டதை அடுத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் வித்துக்களான மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கான ஈகைச்சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டன. நினைவுரையினை தூயவன் அரசறிவியற்க் கல்லூரி அதிபர் அரசன்னா ஆற்றினார். புகைப்படங…

  12. கிளிநொச்சியை அண்டிய பகுதியில் கிபீர்த் தாக்குதல் இன்று காலை 10.;;00மணியளவில் வன்னி வான்பரப்பில் நுழைந்த சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிகையொலி குண்டுவீச்சு விமானங்கள் கிளிநொச்சியை அண்டிய பகுதியில் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. சேதவிபரம் பற்றி இதுவரை தெரியவரவில்லை. www.sankathi.com

    • 3 replies
    • 1.1k views
  13. கிபிர் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன. இதன்போது மக்களிற்கு பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட்டனவா என்பது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

  14. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை 18,742 மாவீரர்கள் வீரச்சாவு. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை 18742 என தமிழீழ மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1982ம் ஆண்டு தொடக்கம் 20.11.2006ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு வெளிவந்துள்ளது. மாவீரர்கள் ஆண் மாவீரர்கள் - 14677 பெண் மாவீரர்கள் - 4065 மொத்த மாவீரர்கள் - 18742 கரும்புலிகள் தரைக் கரும்புலிகள் - 79 கடற்கரும்புலிகள் - 220 மொத்தக் கரும்புலிகள் - 299 எல்லைப்படை மாவீரர் - 279 நாட்டுப் பற்றாளர்கள் - 454 http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 12 replies
    • 2.4k views
  15. தீர்வுத திட்டத்தை விரைந்து முன்வைக்க இலங்கை அசுக்கு இந்தியா அழுத்தம்! சமாதான முயற்சியை முன்னகர்த்த இதையே புதுடில்லி எதிர்பார்க்கிறது. இலங்கைத் தமிழர்பிரச்சினைக்கு ஜனாதிபதி மஹிந்த அரசு வழங்கவிருக்கும் தீhவு என்ன என்பதை இனிமேலும் காலதாமதம் செய்யாமல் விரைந்து வெளிப்படுத்த வேண்டும் என்று கொழும்பு அரசுத் தலைமையிடம் புதுடில்லி நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாக அறியவருகிறது. கொழும்புக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் மஹிந்தவுடன் சுமார் ஒருமணி நேரம் தனியாக நடத்திய மந்திராலோசனையின் போது டில்லியின் இந்த வேண்டுகோளையே வற்புறுத்தினார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மஹிந்தவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம…

  16. தமிழரின் சுனாமி பணத்தில் படைவீரர்களுக்கு 20,000 வீடுகள். தமிழரின் சுனாமி பணத்தில் படைவீரர்களுக்கா முதன் முறையாக 20,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டவுள்ளன 4 கட்டமாக இவ் நிர்மாண பணிகள் இடம் பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்மாண பணிக்கான தமிழரின் சுனாமி பணமான 30,000 மில்லியன் ரூபாவினை இலங்கை வங்கி வழங்கவுள்ளது. அநுராதப்புரம் இப்பொல்லாகமவில் முதற்கட்டமாக 2000 வீடுகள் நிர்மாணிக்க தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழன் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது... இக் கலந்த்ரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க பாதுகாப்பு செயலாளார் கோதாய ராஜபக்ஷ நிதி அமைச்சின் செயலாளார் …

  17. முகமாலைப் பகுதியில் இருதரப்பும் பரஸ்பரம் கடும் ஷெல் தாக்குதல். தென்மராட்சி முகமாலைப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே பரஸ்பரம் கடும் ஷெல் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு பத்து மணியளவில் ஆரம்பமான இந்த ஷெல் தாக்குதல்கள் நேற்று நண்பகல் வரை கடுமையாகத் தொடர்ந்ததாக களமுனைத் தகவல்கள் தெரிவித்தன. புதன்கிழமை இரவு இடம்பெற்ற கடும் ஷெல் தாக்குதலில் மூன்று படையினர் படுகாயமடைந்து பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை நள்ளிரவும் நேற்று அதிகாலையும் இந்த பரஸ்பர ஷெல் தாக்குதல்கள் நடைபெற்று நண்பகல் வரை இந்த மோதல் தொடர்ந்தது. விடுதலைப்புலிகளே முகமாலையில் தங்கள் முன்னரங்கக் காவல் நிலைக…

  18. மனித அவலங்களும் இராணுவ அனுகூலங்களும். -அருஸ்- (வேல்ஸ்)- இராணுவ மேலான்மையை நிலைநிறுத்துவதற்காக சிங்கள அரசு யாழ். குடாவில் உள்ள ஆறு லட்சம் மக்களையும், கிழக்கில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களையும் படுகொலை செய்யத் தயாராகி வருகின்றது. இதன் அங்கமாகவே ஏ-9 பாதையை மூடியதுடன், வாகரையிலும் திட்டமிட்ட மனித அவலங்களை உருவாக்கி வருகின்றது. போரில் ஈடுபடும் தரப்புக்கள் துப்பாக்கி, வெடிமருந்துகளுக்கு இணையான ஆயுதமாக உணவையும்; பயன்படுத்துவதுண்டு. சாதாரண காலத்தைவிட போரின் போது அல்லது ஒரு அழுத்தமான சூழ்நிலையில் ஏற்படுத்தப்படும் உணவுத்தடைகள் அங்கு வாழும் மக்களுக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தவல்லது. ஏனெனில் போரின்போது மக்களின் விவசாய மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் பாதிப்பட…

  19. வாகரையில் தொடரும் வான்படைத் தாக்குதல் [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 05:26 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்] வாகரைப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகலில் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இரண்டு கிபிர் விமானங்கள் முற்பகல் 11.45 மணியளவில் வாகரைப்பகுதி மீது தாக்குதல் நடத்தின. அதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியிலிருந்து வாகரை மருத்துவமனையை இலக்குவைத்து கரடிக்குளம், வாழைச்சேனை, கல்லாறு சிறிலங்கா இராணுவ முகாம்களில் இருந்து தொடர் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் தணிகாசலம் செல்வரத்தினம் (வயது 35) என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். http://www.eelampage.com/?cn=29906

    • 0 replies
    • 798 views
  20. சிறிலங்காவிற்கு எதிரான ஐ.நா தீர்மானம் ஒத்திவைப்பு [சனிக்கிழமை, 25 நவம்பர் 2006, 06:00 ஈழம்] [பா.பார்த்தீபன்] சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை ஐ.நாவின் மனித உரிமை சபையில் ஐரோப்பிய ஓன்றியத்தால் கொண்டுவரப்படவிருந்த சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, மனித உரிமை மீறல்களை கட்டுப்படுப்படுத்துவதற்கும

    • 0 replies
    • 1k views
  21. தமிழக முதல்வருடன் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் ஆலோசனை. ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர். சிறிலங்காவிலிருந்து சென்னை வழியாக இந்தியா திரும்பிய சிவசங்கர் மேனன், எம்.கே.நாராயணனுடன் இணைந்து தமிழ்நாடு முதல்வர் கலைஞரை சந்தித்துப் பேசினார். சிறிலங்காவின் அரச தலைவர் உள்ளிட்டோருடன் நடத்திய ஆலோசனைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் கலைஞருடன் சிவசங்கர் மேனன் விளக்கம் அளித்தார். இச்சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது. இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய சிவசங்க…

  22. வவுனியாவில் தாக்குதல் - மூன்று படையினர் பலி. வவுனியா மாவட்டம், கல்மடுக்குளம் பகுதியில் இன்று மாலை 6.35 மணியளவில் நடைபெற்ற மோதல் ஒன்றில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் சிறிய ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், படையினர் பதில் தாக்குதல் நடத்தி சம்பவ இடத்திலிருந்து அவர்களை பின்வாங்கச் செய்ததாகவும் ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் விடுதலைப் புலிகளிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக வழமைபோன்று தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம், படையினர் மூவர் இந்த மோதலில் உயிரிழ…

  23. மாவீரர் தினம் முடியும் வரை முகமாலையில் மிதிவெடிகள் அகற்றப்படமாட்டாது. - சிறிலங்கா படைத் தளபதி. விடுதலைப் புலிகளால் அனுஸ்டிக்கப்படும் மாவீரர் நாள் காலப் பகுதியில் குடாநாட்டில் புலிகள் எத்தகைய தாக்குதல்களை நடத்தினாலும் அதனை முறியடிக்கக் கூடிய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு யாழ் குடா படைத்தளபதி டி.ஏ.சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார் இன்று பலாலிபடைத்தளத்தில் படைஉயர்மட்ட மாநாடு ஒன்றை நடத்திய தளபதி கீழ்நிலை அதிகாரிகளிற்கு இந்த உத்தரவை வழங்கி உள்ளனர். அத்துடன் ஏ-9ஊடாக குடாநாட்டிற்கு மாவீரர் தினம் முடியும் வரை உணவுப் பொருட்கள் கொண்டுவர அனுமதிக்க முடியாது எனவும் சிறிலங்கா படைத்தளபதி தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்தின் பின்னரே பாதையிலுள்ள மிதிவெடிகளை அகற்று…

  24. மகிந்தவின் டேராடூன் மாநாட்டை தமிழக மேயர்கள் புறக்கணிக்கவுள்ளனர். இந்தியாவின் டேராடூனில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தொடங்கி வைக்கவுள்ள மேயர்கள் மாநாட்டை தமிழ்நாட்டை சேர்ந்த 6 மேயர்களும் புறக்கணிக்கவுள்ளனர். ஆசிய நாடுகளின் மேயர்கள் மாநாடு டேராடூனில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது. 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 32 ஆசிய நாடுகளை சேர்ந்த மேயர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தொடங்கி வைக்கவுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ச கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அவர் தொடங்கி வைக்கும் மேயர்கள் மாநாட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்த மேயர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று பா.ம.க உள்ளிட்ட கட்…

  25. ரணிலின் திட்டமே ஜனாதிபதியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவது தான். -குற்றம் சாட்டுகிறார் கலாநிதி விக்கிரமபாகு- இந்தியா, அமெரிக்கா உட்பட சர்வதேச பாதுகாப்பு வலைப் பின்னலுக்குள் விடுதலைப் புலிகளை சிக்க வைத்து, `குள்ளநரி' என்ற சான்றிதழை பிரபாகரனிடம் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவின் திட்டமே தற்போது தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டும் இடதுசாரி முன்னணி மேற்கத்தைய நாடுகளுக்கு சார்பான ரணிலின் மீள் எழுச்சி பெறும் இலங்கையே, இம்முறை சமர்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டமாகும் இதற்கு தேசியவாதிகளென மார்தட்டும் ஜே.வி.பி.யும் ஆதரவு வழங்கியுள்ளமை வியப்பில் ஆழ்த்தியுள்ளதென்றும் தெரிவித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.