ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142604 topics in this forum
-
விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை கண்காணிப்புப் பணி இடைநிறுத்தம்: கண்காணிப்புக் குழு [திங்கட்கிழமை, 31 யூலை 2006, 05:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை தமது கண்காணிப்புப் பணியை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு அறிவித்துள்ளது. விமானத் தாக்குதல்கள் மற்றும் ஏனைய படை நகர்வுகளுக்கும் தாக்குதல்களுக்கும் மத்தியில் கண்காணிப்பாளர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளமையினாலேயே இவ்வாறானதொரு முடிவை கண்காணிப்புக் குழு எடுத்துள்ளது என்று கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொஃப்பினூர் ஓமர்சன் கொழும்பு நாளேடு ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இருதரப்பிற்கும் இடைய…
-
- 0 replies
- 880 views
-
-
7 ஆயிரம் பேர் கொண்ட குழுவான புலிகளைத் தோற்கடிப்பது என்பது ஒரு பிரச்சனை அல்ல: சரத் பொன்சேகா [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 09:44 ஈழம்] [ச.விமலராஜா] 7 ஆயிரம் பேர் கொண்ட குழுவான புலிகளைத் தோற்கடிப்பது என்பது ஒரு பிரச்சனை அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். கொழும்பு சிறிலங்கா இராணுவத் தலைமையகத் தாக்குதலில் உயிர் தப்பிய சரத் பொன்சேகா சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பின்னர் சிறிலங்கா திரும்பியுள்ளார். கொழும்பில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல், சிறிலங்கா இராணுவத்தின் தற்போதையை நிலைமைகள், தொடரும் பல்வேறு தாக்குதல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அரசாங்க ஊடகமான சண்டே ஓப்சர்வருக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: கேள்…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஞாயிறு 30-07௨006 22:27 மணி தமிழீழம் [நிருபர் மகான்] வீரச்சாவடைந்த போராளிகளை நினைவுகூர்ந்து இன்றும் நாளையும் தமிழர் தாயகத்தில் துக்க முன்னெடுப்பு. மட்டக்களப்பு திருமலை மாவட்டங்களில் சிறீலங்கா வான்படையினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்த பேராளிகளை நினைவுகூர்ந்து தமிழர் தாயகப் பகுதியில் முழு அளவிலான துக்க முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீதிகள், வர்த்த நிலையங்கள், செயலகங்களில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு சோக கீதங்கள் ஒலிக்கப்படுகின்றன. நாளை தினமும் விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளையும் துக்க முன்னெடுப்புக்கள் கடைப்பிடிக்கப்படவுள்ளது. நன்றி-பதிவு
-
- 0 replies
- 1.1k views
-
-
ஞாயிறு 30-07-2006 20:41 மணி தமிழீழம் [நிருபர் செந்தூரன்] திருமலையில் படைநகர்வு ஆரம்பம் உக்கிர மோதல்கள் புலிகளால் முறியடிப்பு. திருமலை ஈச்சிலம்பற்று மாவியாற்றைக் கைப்பற்றும் நோக்குடன் சிறீலங்காப் படையினர் பாரியளவிலான வலிந்த தாக்கும் படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இன்று பகல் வான்படையினரின் உதவியுடன் கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளைப் போட கல்லாறுப் பகுதியிலிருந்து மாவிலாறு பகுதியை நோக்கி பாரிய படை நகர்வை சிறீலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளால் படையினரின் நகர்வு நோக்கியும் இராணுவ முகாங்கள் நோக்கியும் மூர்க்கமான எறிகணைத் தாக்குதி படையினரின் படையினரின் படைநகர்வை சூனியப் பிரதேசத்தில் வைத்து விடுதலைப் புலிகள் முறியடி…
-
- 4 replies
- 1.9k views
-
-
புலிகள் யாழ் குடாநாட்டை கைப்பற்ற எந்த நேரமும் தாக்குதலை தொடுக்கலாம்-கொழும்பு நாளோடு. திருமலையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் மற்றும் தேனகத்தின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் என்பற்றை அடுத்து விடுதலைப் புலிகள் எந்தநேரமும் யாழ் குடாநாட்டை கைப்பற்றும் தாக்குதலை தொடுக்கலாம் என சிறி லங்கா படைத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி கொழும்பு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறி லங்கா படையினரின் தாக்குதல்களில் இதுவரை 16 விடுதலைப் புலிகள் வீரச் சாவடைந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் மிகவும் மோசமாக இருக்கும் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகளின கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் எல்லை மீறி படையினர் நுழைந்தால் பதில் தாக்குதல்-ஐ.இளந் திரையன். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சிறிலங்காபடையினர் தரை வழியாக முன்னேறி தாக்குதல் நடத்தினால் அதனை போர்ப்பிரகடனமாகவே கருத வேண்டியிருக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஐ.இளந் திரையன் தெரிவித்தார். அதேநேரம், முன்னேறி தாக்குதல் நடத்தும்படையினரை விரட்டுவதற்கான தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய களநிலைவரம் தொடர்பாக கொழும்பு தமிழ் நாளோட்டிற்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொபி அனானின் சிறப்பு தூதுவராக சந்திரிகா? ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனானின் சிறப்பு தூதுவர் பொறுப்பை பெறுவதில் சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திலிருந்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு இது தொடர்பிலான கருத்து கேட்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தை மகிந்தவிடம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒப்படைத்துள்ளார். சந்திரிகாவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சந்திரிகாவின் நியமனம் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போதுதான் அவரது பணி குறித்த முழு விவரங்களும் வெளியாகும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்…
-
- 0 replies
- 956 views
-
-
துணை இராணுவ குழுக்களின் நடவடிக்கைகளால் துயரில் மூழ்கிக் கிடக்கும் அம்பாறை [30 - July - 2006] [Font Size - A - A - A] -மங்களன்- கிழக்கில் இராணுவத்தினரும் அவர்களோடு சேர்ந்தியங்கும் துணை ஆயுத கும்பல்களினதும் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அங்குள்ள மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அச்சத்துடனேயே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கமும் அதன் பேச்சாளர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இத்தகைய ஆயுத குழுக்களின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு ஊடக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்க, மறுபுறத்தே குறித்த பிரதேசங்களில் நிகழும் சம்பவங்கள் இதற்கு எத…
-
- 0 replies
- 798 views
-
-
சிறிலங்காவின் தாக்குதல்கள் போர் பிரகடனத்துக்குச் சமமானது: சி. எழிலன் [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 03:23 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா நடத்தி வரும் எறிகணைத் தாக்குதல் மற்றும் விமானக் குண்டு வீச்சு நடவடிக்கைகளானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தின் போர்ப் பிரகடனத்துக்குச் சமமானது என்று திருமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் சி. எழிலன் கூறியுள்ளார். இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சனுக்கு சனிக்கிழமை மாலை எழிலன் அனுப்பிய அவசர கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்கள்…
-
- 0 replies
- 922 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் செத்துவிட்டது: உல்ப் ஹென்றிக்சன் [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 03:36 ஈழம்] [ம.சேரமான்] இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. செத்துவிட்டது. ஆனால் பெயரளவிலும் உக்கிரமற்ற தணிவான போரும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் செத்துவிட்டது: உல்ப் ஹென்றிக்சன் இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. செத்துவிட்டது. ஆனால் பெயரளவிலும் உக்கிரமற்ற தணிவான போரும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவ…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்வோர் மீண்டும் அதிகரிப்பு ஆர்.புஷ்பபரன் வடமராட்சி வடக்கின் கரையோரக் கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்து விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சென்று குடியேறும் குடும்பங்களினது எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றது. அன்மைய நாட்களாக இப்பகுதிகளில் மீன்பிடித் தொழிலிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாகவும், தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மீனவ சங்கபிரதிநிதிகளது கடத்தல்களையடுத்துமே இவ் இடம்பெயர்வு முனைப்புப் பெற்றுள்ளது. குறிப்பாக வடமராட்சி வடக்கின் தொண்டைமானாறு முதல் பருத்தித்துறை கற்கோவளம் வரையிலான கரையோர கிராமங்களிலிருந்தே மீனவ குடும்பங்கள் தொடர்ந்தும் வெளியேறி வருகின்றன. குறிப்பாக இப்பகுதிகளில் விடுதலைப் பு…
-
- 0 replies
- 843 views
-
-
அபிவிருத்திக்கான குண்டுவீச்சா? நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத் திரன் கரடியனாற்றில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அரசாங்கம் என்ன காரணத்தை கற்பிக்கப் போகின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத் திரன் கேள்வி எழுப்பினார். அத்துடன் இந்தத் தாக்குதல் அபிவிருத்திக் கான குண்டுத்தாக்குதலா? என்றும் அவர் கேள்விஎழுப்பினார். மேற்படி தாக்குதல் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தப்பட்ட போது அது விமான ஓடுபாதையை இலக்கு வைத்துத் தாக்கப்பட்டதாக அரச தரப்பில் தெரி விக்கப்பட்டது. http://www.virakesari.lk/vira/html/pol_vie...iew.asp?key=993
-
- 0 replies
- 917 views
-
-
ஹெல உறுமயவால் சர்வமத பிரார்த்தனை குழம்பியது எம்.எஸ். குவால்தீன் கண்டி நகரில் சர்வமத தலைவர்களால் மேற் கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளை தொடரக் கோரும் பிரார்த்தனை சத்தியாக்கிரக நடவடிக் கைகளுக்கு எதிராக தேசிய ஹெல உறுமய ஆதர வாளர்கள் சிலர் இடையூறு விளைவித்ததால் இந்நிகழ்ச்சியை இடையில் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணி யளவில் இந்நிகழ்ச்சி கண்டி ஜோர்ஜ் ஈ. சில்வா கூரைப்பூங்காவில் நடைபெற்றது. நீதிக்கான சமாதான மனித அபிவிருத்தி மற் றும் மனித உரிமை ஆணைக்குழு செயலகத்தி னால் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. http://www.virakesari.lk/vira/html/pol_vie...iew.asp?key=994
-
- 0 replies
- 872 views
-
-
விடுதலைப் புலிகள் மீது மக்களின் அழுத்தங்கள் அதிகரிப்பு (த. தனுஷன்) விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் விமானத்தாக்குதல்கள், கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை அடுத்து விடுதலைப் புலிகள் மீது பொது மக்களின் அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக மீளவும் யுத்தத்தை ஆரம்பித்து தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து படையினரை விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மக்களின் கோரிக்கைக்கு இணங்க வேண்டிய நிலைமை உருவாகி வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/vira/html/head_vi...ew.asp?key=1556
-
- 0 replies
- 972 views
-
-
எல்லையை மீறி இராணுவம் நகர்வது போர் பிரகடனமாக கருதப்படும் புலிகளின் இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இலங்கை இராணுவத்தினர் தரைவழியாக முன்னேறி தாக்குதல் நடத்தினால் அதனை போர்ப்பிரகடனமாகவே கருத வேண்டியிருக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஐ.இளந் திரையன் தெரிவித்தார். அதேநேரம், முன்னேறி தாக்குதல் நடத்தும்படையினரை விரட்டுவதற்கான தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய களநிலைவரம் தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் இன்ன…
-
- 0 replies
- 892 views
-
-
இந்தியாவை எச்சரிக்க மன்னாரில் சீனா, ஜப்பானுக்கு சிறிலங்கா அனுமதி >>>>>>>>>>>>>>>>>>>>> http://www.eelampage.com/?cn=27875
-
- 0 replies
- 1.1k views
-
-
திருமலையில் தொடர்கிறது விமானக் குண்டுவீச்சு [சனிக்கிழமை, 29 யூலை 2006, 16:02 ஈழம்] [திருமலை நிருபர்] திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணை மற்றும் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலை இன்று நடத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வெருகல் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் மக்கள் குடியிருப்புக்கள் மீது கிபீர் விமானங்கள் தொடர் தாக்குதலாக நான்கு முறைக்கு மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் திருகோணமலை துறைமுக முகாமிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ச்சியான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களை மக்கள் குடியிப்புக்களை நோக்கி மேற்கொண்டுள்ளனர். இதனிடையே பாரிய படை நகர்வையும் மேற்கொள்ள சிறிலங்கா இராணுவத்தினர் கனரக ஆயுதங்கள் மற்…
-
- 4 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் சர்வதேச பாதுகாப்பு பொறி ஐ.நாவே தமிழர் மனித உரிமைகள் அமைப்பு தெரிவிப்பு. தமிழிழ மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்தை ஆராய்வோமானால், இது ஓர் ஆயுதப் போராட்டமாக வெளி உலகுக்கு இலகுவாக தெரிகிறது. அங்கு வெளிப்படையாக தெளிவாக உணராத உண்மையென்னவெனில், தமிழிழ மக்கள் 35 வருடகாலமாக சாத்வீக போராட்டம் பயங்கரவாதத்தினால் நசுக்கப்பட்டு தோல்வி கண்ட நிலையிலேயே, தமிழிழ மக்கள் தற்போதைய ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தார்களென்பது. “இலங்கை தீவில் வாழம் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவின் அரச பயங்கரவாதத்தின் நாசகார வேலைகளை, 1983ம் ஆண்டு யூலை மாதம் சர்வதேச சமூதாயம் வெளிப்படையாக கண்டும், சிறிலங்கா அரசு மீது ஒழுங்கான அழுத்தத்தை கொடுக்க தவறி விட்டது. அவ்வேளையில் சிறிலங்கா …
-
- 0 replies
- 907 views
-
-
மாவலியாறு விவகாரம்: பிரித்தானியா, இணைத் தலைமைநாடுகளிடம் சிறிலங்கா முறைப்பாடு [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 00:41 ஈழம்] [ம.சேரமான்] மாவலியாறு தொடர்பாக இணைத் தலைமை நாடுகளிடமும் பிரித்தானியாவிடமும் சிறிலங்கா அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளதாக சிறிலங்கா சமாதான செயலகப் பணி;ப்பாளர் பாலித கோஹொன தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பாக இந்த நாடுகளுக்கு தொலைபேசி ஊடாக அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளது. அந்தப் பிரதேசங்களின் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீh பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அந்த மக்கள் பெரும் துன்பங்களுக்கு இலக்காகி இருப்பதாகவும் அதனால் அவர்கள் கோபமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் இணைத் தலைமை நாடுகளிடம் தெரிவித்துள்ளது. http://www.eela…
-
- 0 replies
- 720 views
-
-
கிளைமோரிலிருந்து தப்பிக்க சிங்கள இராணுவத்துக்கு சீன வாகனங்கள் [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 00:42 ஈழம்] [ந.ரகுராம்] வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கிளேமோர் தாக்குதல்களிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் தப்பி பயணிக்க சீனாவில் தயாரிக்கப்பட்ட 25 நவீன பீ.ரி.ஆர். வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முடிவடைவதற்குள் படை வீரர்கள் பயணி;ப்பதற்கென 75 யுனிகொன் வாகனங்கள் தயாரிக்கப்படவுள்ளதாகவும் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கனமான தகடுகளைப் பயன்படுத்தி இந்த யுனிகொன் வாகனங்கள் தயாரிக்கப்படவுள்ளன. கிளேமோர் குண்டுகளினால் இந்த வாகனங்கள் பாதிப்படைய மாட்டாதென்பதால் இனிமேல் வாகனத் தொடரணிகளின் போது பேரூந்துலக்குப் பதிலாக இந்த பீ.ரி.ஆர். அல்லது யுனிகொன் …
-
- 0 replies
- 756 views
-
-
தேனகத்தைப் பார்வையிட கண்காணிப்புக் குழு மறுப்பு [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 00:16 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா விமானக் குண்டு வீச்சுக்குள்ளான தமிழீழ விடுதலைப் புலிகளின் தேனகம் மாநாட்டுச் செயலகத்தைப் பார்வையிட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் மறுத்துவிட்டனர். கரடியனாறு தேனகம் செயலகம் மீது சனிக்கிழமை சிங்கள விமானப் படையினர் நடத்திய விமான குண்டு வீச்சில் 8 போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். இந்நிலையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக சம்பவ இடத்தைத் தங்களால் பார்வையிட முடியாது என்று மட்டக்களப்பு கண்காணிப்புக் குழுவின் தலைவரான ராஸ்க்(பின்லாந்து), மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகனிடம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் வெள்ளிக்கிழமையன்று இலங…
-
- 0 replies
- 842 views
-
-
மாவிலாறு அணையை திறப்பதற்கு சகல இராணுவ உந்திகளையும் பயன்படுத்தும்படி மகிந்த உத்தரவு. மாவிலாறு அணைக்கட்டை கைப்பற்றுவதற்கு சகலவிதமான இராணுவ உந்திகளையும் பயன்படுத்தும் படி சிறிலங்காபடைகளிற்கு மகிந்த ராஜாபக்ச உத்தரவிட்டுள்ளார். மகிந்தவின் இவ் உத்தரவை அடுத்து விமான குண்டு வீச்சுக்களையும்,எறிகனைத் தாக்குதல்களையும் நேற்று மாலை சிறிலங்கா படைகள் தீவிரப்படுத்தியுள்ளன.இன்று மாலைக்குள் இப் பிரதேசத்தை கைப்பற்ற வேண்டும் என சிறிலங்கா அரசு தனது படைகளிற்கு காலக்கெடு விதித்திருந்தது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 1 reply
- 969 views
-
-
தலைவர் எடுக்கும் முடிவுகளை முழுமையாக நிறைவேற்ற எமது படையணிகள் தயார்-தயா மாஸ்ரர் எமது தேசியத்தலைவர் எடுக்கபோகும் சகல முடிவுகளையும் முழுமையாக நிறைவேற்ற எமது அனைத்து படையணிகளும் தயார் நிலையில் உள்ளன விடுதலைப்புலிகளின் வலிமை குறித்து எவரும் சந்தேககம் கொள்ளத் தேவையில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் தயாமாஸ்ரர் ஐ பி சி வானொலிக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் சிறீலங்கா அரசின் சகல படை எடுப்புக்களையும் முறியடிக்க புலிகள் தயார் நிலையில் உள்ள இவ்வேளையில் புலம்பெயர் மக்களை விரைவில் நல்ல செய்தி ஒன்று வந்து சேரும் என்ற நம்பிக்கையுடன் இருக்குமாறு உறுதிபட தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subactio…
-
- 0 replies
- 781 views
-
-
மாவிலாறு!!!! ... இச்சொல் இன்று எம்மையெல்லாம் முணுமுணுக்க வைக்கும் சொல் ... "தமிழ் மக்கள் மாவிலாற்று அணைகளை மூடி விட்டார்கள்! அதனால் நாம் விமானத் தாக்குதல்களை நடத்துகிறோம்" இது சிங்கள அரசின் ஓலமாகியிருக்கிறது!!! என்ன, ஒரு அணையை மூடியதற்கு விமானத் தாக்குதலா? அணையைத் திறந்து விடலாம்தானே? ...??? இப்படிப் பல கேள்விகள் எம்மத்தியில் எழத்தான் செய்யும்! இலங்கையை விட்டு பிரித்தானிய ஏகாதிபத்தியம் வெளியேறி, இலங்கையில் ஆட்சியில் அமர்ந்த முதல் சிங்கள அரசே மிக திட்டமிட்டு அன்றிலிருந்தே தமிழர் தாயகத்தை அபகரிக்கத் தொடங்கியது. இதேவேளை வட-தென் தமிழீழ நிலப்பரப்பை துண்டாடுவதற்கு திட்டமிட்டது. ,தன் முதற்படிகளாக எல்லையோரக் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவியது. அதில் குறிப்பாக தென் தமிழீ…
-
- 1 reply
- 1.1k views
-
-
நேற்று இராணுவம் நடத்திய இறந்த உடல் முலம் குண்டு தாக்குதல் §¿üÚ Áð¼ì¸ÇôÀ¢ø ¿¼ó¾ ÌñÎ ¦ÅÊôÒ ÀüÈ¢ ´Õ Ó츢 ¾¸Åø ¿ýÀ÷¸û ÓÄõ ¸¢¨¼òÐ........ 2 þ¨Çஞர்களை சுட்ட பின் அவர்கள் உடலை ஆட்டொ ஒன்றில் பின்சீறில் இருத்திவிட்டு குண்டுகள் பொருத்திய ஆட்டோவை வேரு ஒருவர் ஒட்டிச்சென்று புலிகளின் நிலைகளுக்கு போக முன் இறங்கி ஒடி வந்து விட்டார் அதன் பின் ரிமோல்கொன்றோலால் இராணுவத்தால் குண்டு வெடிக்கவைக்கப்பட்டது
-
- 4 replies
- 1.7k views
-