ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142604 topics in this forum
-
தேவை ஒரு சந்தர்ப்பம் மாவிலாறு நீர்ப்பாசனத்திட்ட நீர்விநியோகம் தடைப்படுத்தப்பட்டது தொடர்பான விவகாரத்தை அடுத்து சிறிலங்கா அரசதரப்பு விமானக் குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளது. இதில் கதிரவெளியில் இடம்பெற்ற குண்டுவீச்சில் ஆறு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர். ஆனால் நீர்விநியோகம் தொடர்பாக எழுந்த சர்ச்சை ஒன்றிற்கு விமானக்குண்டுவீச்சினால் தீர்வுகாண முடியுமா? அதாவது மதகு திறக்கப்பட்டு நீர் வருமா? அன்றி மாவிலாறு நீர் விநியோக விவகாரத்திற்கும் கதிரவெளியில் குண்டுவீச்சு நடத்துவதற்கும் உள்ள தொடர்பென்ன? விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது குண்டுவீசுவது யுத்தநிறுத்த உடன்பாட்டு மீறல் இல்லையா? இவை ஒருபுறம் இருக்க கதிரவெளியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சுத் தொடர…
-
- 2 replies
- 1.2k views
-
-
லண்டனில் நடைபெற்ற சாவிலும் வாழ்வோம் நிகழ்வுக்கூட்டத்தை பி.பி.சி தமிழோசை தனது செய்தி அரங்கில் சேர்க்கவில்லை. வேண்டும் என்றே புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியை இருட்டடிப்பு செய்கிறது. நேற்றைய செய்தி அரங்கில்(25.07.06) 83யூலை கலவர துயர நாள் பற்றி எந்த தகவலும் இல்லை. தமிழோசை சிறிலங்கா அரசாங்கத்தின் நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்குவது போன்று தனது செய்தி அரங்கை தயார்செய்து நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. இது பற்றி பி.பி.சி தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பி.பி.சி தமிழோசைக்கு பொறுப்பானவரின் புலம் பெயர்தமிழர் விரோதபோக்கை கண்டிக்க வேண்டும். .... லண்டனில் அதுவும் வேலை நாள் அன்று 20000 தமிழர் ஒன்று கூடுவது மிகப்பெரிய விடயம்.
-
- 19 replies
- 5.2k views
-
-
கரடியனாறு தேனகம் அலுவலகம் மீது இன்று பகல் 11.30 மணியளவில் சிறிலங்கா விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 7 போராளிகள் சாவடைந்துள்ளார்கள் தகவல்-தமிழ்நெற் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18968
-
- 16 replies
- 2.9k views
-
-
சென்ற கிழமை லண்டனுக்கு கோடை விடுமுறைக்கு சென்றேன் .ஒரு நண்பரின் வீட்டுக்கு விருந்துக்காக சென்றேன்.உண்மையாக நானும் அவரும் தொலைபேசியில் தாயக பிரச்சனைகளை அதிஉச்சமாக கதைப்போம். அப்போ எனக்கும் சந்தோசமாக இருந்தது.நண்பனும் விடுதலையையும் மக்களையும் எவ்வளவு நேசிக்கின்றான் என்று. அனால் வீடடுக்கு போனபோது ஒன்றுமே புரியவில்லை.வீட்டில் எந்தவிதமான தாயக அல்லது விடுதலைக்கான ஒரு ஞாபக சின்னங்கள் கூட இல்லை. சரி கதைத்து விட்டு சாப்பிட உட்கார்ந்தேன் அப்போ கேட்டேன் ஏன் ஒரு படம் ஞாபக பொருட்கள் ஒன்றையும் கானேன் என்று அவன் சொன்ன பதில் என்னை சாப்பிடவே விடவில்லை. அவர் சொன்னார் மச்சான் இங்கே அடிக்கடி சிங்கள நண்பர்கள் வந்து போறவர்கள் அவங்களுக்கு இதெல்லாம் பிடிக்காது. ஆதால தான் ஒன்றும் வீட்டை வாங்கி வ…
-
- 52 replies
- 7.8k views
-
-
உங்கள் முன்னால் குண்டுகள் வீசப்படுகின்றன, இப்போது என்ன கூறப்போகின்றீர்கள்?: கண்காணிப்புக் குழுவிடம் புலிகள் கேள்வி [சனிக்கிழமை, 29 யூலை 2006, 05:51 ஈழம்] [கொழும்பு நிருபர்] உங்கள் கண்முன்னாலேயே குண்டுகள் வீசப்படுவதை பாருங்கள். இது தொடர்பாக என்ன கூறப் போகின்றீர்கள் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக சி.எழிலன் கொழும்பு ஊடகமொன்றுக்கு கூறுகையில், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் உலப் ஹென்றிக்சனுடன் நேற்று மாலை 3.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தேன். எமது அலுவலகத்திற்கு 750 மீற்றர் தூரத்தில் விமானப்படை வி…
-
- 0 replies
- 869 views
-
-
மாவிலாறு விவகாரத்தின் உண்மையான பின்னணி! திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த மோதல்களுக்கு காரணமாக மாவிலாறு அணை விவகாரத்தை சிறிலங்கா அரசு கூறுகிறது. இலட்சக் கணக்கான தமிழ் மக்களின் விவசாய நிலங்களை அபகரித்தும் பல குளங்களை அழித்தும் நாசம் செய்த சிறிலங்கா அரசு மாவிலாற்றின் அணை மூடப்பட்டதற்காக போர் தொடுத்துள்ளது. இந்த அணை மூடப்பட்டதால் பாதிக்கப்படும் சில ஆயிரம் விவசாயிகள் சிங்களவர்களாக இருப்பதே சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது போர் தொடுத்துள்ளதற்கு காரணம் ஆகும். ஆனால் தமிழ் மக்கள் எதற்காக மாவிலாற்றின் அணையை மூடினார்கள்? இதன் பின்னணி என்ன? இந்தக் கேள்விகளோடு திருகோணமலை மாவட்டத்தின் அரசியற்துறைப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறுப் பகுதியைக் கைப்பற்றுவதற்கு சிறீலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7:30 மணிக்கு, ஆட்லறி சூட்டாதரவுடன், விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட மாவிலாறு பகுதியை நோக்கி பாரிய வலிந்த தாக்குதலை சிறீலங்கா படையினர் தொடுத்தனர். சிறீலங்கா படைகளின் தாக்குதல் அணிகளை, தோணி தாண்டமடுப் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் வழிமறித்து மூர்க்கத்தனமான பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டதை அடுத்து, இரு தரப்பினருக்கும் மத்தியில் உக்கிர நேரடி மோதல்கள் வெடித்தன. நீண்ட நேரத்திற்கு நடைபெற்ற மோதலில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலடி தாக்குதல்களுக்கு ஈடு…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழீழ தாயகப் பகுதிகள் மீது, சிறீலங்கா அரசாங்கம் முழு அளவிலான யுத்தப் பிரகடனத்தை மேற்கொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.இது குறித்து விளக்கமளித்திருக்கும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், தமிழீழ தாயகம் மீது தொடுத்துள்ள யுத்த நடவடிக்கைகளுக்கான எதிர்விளைவுகளை விரைவில் சிறீலங்கா அரசாங்கம் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். வலிந்த வான்வழித் தாக்குதல்களையும், படை நடவடிக்கைகளையும் சிறீலங்கா படைகள் முன்னெடுக்கும் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைதி காப்பது சாத்தியமில்லை என்றும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.
-
- 0 replies
- 920 views
-
-
விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளுக்குள் நேற்று வியாழக்கிழமை சிறீலங்கா வான்படையினர் நடத்திய தாக்குதல்கள் யுத்த நிறுத்த மீறல் என கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. சிறீலங்கா வான்படையினரின் தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்து கண்காணிப்புக் குழு பேச்சாளர் ஒமர்சன் விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட முல்லைத்தீவு மற்றும் திருமலையிலும் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலானது போர் நிறுத்த உடன்படிக்கையின் சரத்துக்களின் படி அரசாங்கம் யுத்த நிறுத்த மீறலை செய்துள்ளதாக ஒமர்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுமையான அறிக்கை ஒன்றை தாயாரித்துக்கொண்டிருப்பதா
-
- 0 replies
- 983 views
-
-
விமானத் தாக்குதலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி வன்மையான கண்டனம். தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் சிறீலங்கா விமானத் தாக்குதலை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை திருமலை மற்றும் முல்லைத் தீவு பகுதிகளில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலை கண்டிக்கும் பொழுது மகிந்த ராஜபக்ச நடத்தும் நாடக வலையினுள் இந்தியா விழுந்துவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் அரங்கில் மகிந்த ராஜபச்ச சிறந்த நடிகர் எனவும் சுட்டிக்காட்டிய ராமதாஸ் நோர்வேயின் அனுசரணையின் கீழ் இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கம் எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் http://www.pathivu.com/index.p…
-
- 0 replies
- 880 views
-
-
பதில் இராணுவத்தளபதி மீதான குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்று போய்விடும் வாய்ப்பு -வேலவன்- சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீதான தாக்குதலுக்குப்பின் சிரேஷ்ட மேஜர் ஜெனரல் ஒருவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை மறைக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டதாகத் தகவல் ஒன்று வெளியாகியது. இதனை ஏரிக்கரை வாரப் பத்திரிகையாகிய சண்டே ஒப்சேவர் சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் நடைபெற்றுச் சுமார் ஒரு மாதத்தில் வெளியிட்டது. அப்பத்திரிகையால் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரி வேறு யாருமல்ல. இராணுவத் தலைமைப்பீடத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவரும் தற்போது பதில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பவருமான நந்தா மல்லவரா…
-
- 0 replies
- 866 views
-
-
பொய்களால் உண்மைக்கு சமாதி கட்ட "ஆசியான்' என்ற வாய்ப்பான மேடை ` தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் ("ஆசியான்' அமைப்பின்) பிராந்திய குழுமக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கையும் பங்காளராகக் கலந்து கொள்வதற்கு அனுமதிப்பது என்ற முடிவை ஆசியான் அமைப்பு எடுத்திருப்பதாக அந்த அமைப்பின் சார்பில் மலே ஷிய வெளிவிவகார அமைச்சர் சயீட் ஹமீட் அல்பர் தகவல் வெளியிட்டிருக்கின்றார். புரூணை, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியன்மார் (பர்மா), பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய பத்து தென்கிழக்காசிய நாடு கள் ஆசியான் அமைப் பில் உள்ளன. ஆசியான் அமைப்பின் பிராந்தியக் குழுமத்தின் உறுப் புரிமை ஆசி…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை நிலைமைகள் தொடர்பில் மிக முக்கிய முடிவுகள்: ஜப்பானிய சிறப்புத் தூதுவர் அகாசி தகவல் இலங்கை நிலைமைகள் தொடர்பில் சில நாடுகள் மேற்கொண்டிருக்கும் மிக முக்கிய முடிவுகள் போன்று ஜப்பானும் பரிசீலித்து வருகிறது என்று இலங்கைக்கான ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூகி அகாசி தெரிவித்துள்ளார். இந்தோ-ஆசிய செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்: ஓகஸ்ட் மாதம் இலங்கைக்குச் செல்ல உள்ளேன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க விரும்புகிறேன். அவர் "திடநம்பிக்கை கொண்ட மனிதர்". அவரால் மட்டுமே மிக கடினமான முடிவுகளையும் எடுக்க முடியும். ஜப்பானிய அரசாங்கம் சில முக்கிய முடிவுகளை எடுத்திருப்பது தொடர்பாக அவரிடம் விளக்குவேன். வேறு சில நாடுகள் முடிவு செய்…
-
- 19 replies
- 4k views
-
-
முல்லைத்தீவில் கிபிர் விமானங்கள் குண்டுவீச்சு [வியாழக்கிழமை, 27 யூலை 2006, 14:52 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப் படையினரின் கிபிர் குண்டுவீச்சு விமானங்கள் இன்று வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளன. முற்பகல் 9.00 மணியளவில் முல்லைத்தீவு நகரையும் அதனை அண்டிய பிரதேசங்கள் மீதும் இரண்டு தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் எதுவித சேதமும் ஏற்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.eelampage.com/?cn=27826 SLAF Kfir bombers attack Mullaithivu village [TamilNet, July 27, 2006 08:12 GMT] Sri Lanka Air Force (SLAF) Kfir bombers Thursday mo…
-
- 7 replies
- 1.7k views
-
-
திருமலையில் கிபீர் குண்டு வீச்சில் 5 போராளிகள் வீரச்சாவு 4ம் கட்ட ஈழப்போர் எந்நேரமும் தொடங்கலாம். திருகோணமலை ஈச்சலம்பற்றுப் பகுதியில் சிறீலங்கா விமானப் படை விமானங்கள் இன்று மீண்டும் நடத்திய விமானக் குண்டு வீச்சில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். பொதுமக்கள் பலர் காயமடைந்ததுடன் பத்துக்கு மேற்பட்ட வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. பெருமளவு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். தமிழர் தாயகத்தின் மீது மேற் கொள்ளப்படும் விமானத்தாக்குதலோ அல்லது தரைத் தாக்குதலோ யுத்தப் பிரகடனமா கருதப்படும் என விடுதலைப் புலிகள் எச்சரித்த நிலையில் நடைபெற்ற இத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து 4ம் கட்ட ஈழப்போர் எந் நேரமும் தொடங்கலாம் என செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை முல்லை…
-
- 0 replies
- 1.2k views
-
-
அகதிகளாகச் செல்லாவிட்டால் இரவில் தமிழர்களை புலிகள் கொன்றுவிடுவர்: இந்திய பெண்களிடம் புளுகிய மகிந்த இந்தியாவுக்கு அகதிகளாகச் செல்லாவிட்டால் இரவு நேரங்களில் அவர்களை விடுதலைப் புலிகள் கொன்றுவிடுவர் என்று தன்னைச் சந்தித்த தமிழரல்லாத இந்தியப் பெண் ஊடகவியலாளர் குழுவிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச புளுகியுள்ளார். தமிழரல்லாத இந்தியப் பெண் ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்ச பேசியுள்ளதாவது: அண்மைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சியாம் சரணின் சிறிலங்கா பயணத்தின் போது கூட்டரசு போன்ற குறிப்பிட்ட சில யோசனைகளை முன்வைத்துள்ளார். அவற்றை நீங்கள் பரிசீலிக்கிறீர்களா? நாங்கள் நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அனைத்து அரசு அமைப்பு முறைகளையும் குறிப்பாக இந்திய அரசு முறை…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஐ.நா.செயலர் தெரிவில் இலங்கைக்கு ஆரம்பத்திலேயே பெரும் பின்னடைவு ஐக்கிய நாடுகள் சபையில் அடுத்த செயலாளர் நாயகம் பதவிக்கு தனது மூத்த இராஜதந்திரியான ஜயந்த தனபாலவை நிறுத்தியிருக்கும் இலங்கைக்கு அத்தெரிவிற்கான ஆரம்பச் சுற்றிலேயே பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. பதினைந்து நாடுகளைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களிடையே நடத்தப்பட்டபூர்வாங்க வாக்கெடுப்பு ஒன்றில் நான்காவது நிலையேகடைசி ஸ்தானமே ஜயந்த தனபாலவுக்குக் கிட்டியது. களத்தில் நிற்கும் நால்வரில் தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் பன் கீ மூன் முதலாவது நிலையையும், இந்தியப் பிரதி நிதி சஷி தரூர் இரண்டாமிடத்தையும், தாய் லாந்துப் பிரதிப் பிரதமர் சுரகிரத் சத்திராதி மூன்றாமிடத்தையும் பெற்றனர். ஐ.நா. செயலாளர் நாயகத்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவத் தளபதி பொறுப்பை மீண்டும் சரத் பொன்சேகா ஏற்றுள்ளார். கொழும்பு சிறிலங்கா இராணுவத் தலையமையகத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் சிங்கப்பூரில் சரத் பொன்சேகா சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று திங்கட்கிழமை கொழும்பு திரும்பிய சரத் பொன்சேகா, மீண்டும் இராணுவத் தளபதி பொறுப்பை ஏற்றுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா மீது கடந்த ஏப்ரல் 25 ஆம் நாள் தாக்குதல் நடத்தப்பட்டது. சரத் பொன்சேகா செயலிழந்த நிலையில் நந்தா மல்லவராச்சியை பதில் இராணுவத் தளபதியாக மகிந்த ராஜபக்ச நியமித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் சரத் பொன்சேகா பொறுப்பேற்றிருக்கிறார் -புதினம்
-
- 4 replies
- 2k views
-
-
தமிழர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதியினை அரசுடமையாக்க அரசாங்கம் முடிவு. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உரியவர்களால் பராமரிக்கப்படாமலிருக்கும் வங்கிக் கணக்குகளை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகளை இலங்கை வங்கி ஆரம்பித்துள்ளது. யாழ்.குடாநாட்டில் இந்த நடவடிக்கையை இலங்கை வங்கி ஆரம்பித்திருப்பதன் மூலம் குடா நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் பல்லாயிரக் கணக்கானோரின் பல கோடி ரூபா வைப்பு அரசுடைமையாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் இதன் முதற்கட்டமாக அதி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மயிலிட்டி காசநோய் ஆஸ்பத்திரி வளவிலுள்ள கோயிலின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு அரசுடைமையாக்கப் போவதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது. வடக்…
-
- 118 replies
- 13.7k views
-
-
கடினமான முடிவுகளை எடுக்கும் வல்லமை பொருந்தி ஒரே ஒரு மனிதராக பிரபாகரன் - அகாசி. கொள்கைக் பற்றில் உறுதி கொண்டவராக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் திகழ்வதாக யப்பானின் சிறப்புத் சமாதானத் தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். யப்பானில் தலைநகரில் வைத்து இந்திய ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திற்க வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். மிகவும் கடினமான முடிவுகளை எடுக்கும் வல்லமை பொருந்தி ஒரே ஒரு மனிதராக பிரபாகரன் விளங்குவதாக அகாசி தெரிவித்துள்ளார். அண்மையில் வன்னி சென்று எடுக்கவிருக்கும் முக்கிய தீர்மானங்கள் குறித்து பிரபாகரனுடன் எடுத்துரைக்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே சில அரசாங்கள் எடுத்து முடிவு போன்று தமிழிழ விடுதலைப…
-
- 2 replies
- 1.5k views
-
-
வடக்கு கிழக்கிலிருந்து படைகளை விலக்க அரசு தயார் ஆனால் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டுமாம்! இப்படிக் கூறுகிறார் பாதுகாப்பு அமைச்சுப் பேச்சாளர் ரம்புக்வெல வடக்கு கிழக்கில் இருந்து படைகளை விலக்க அரசு தயார். அதற்குமுன் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை அரசிடம் கையளிக்க வேண்டும். இப்படிக் கூறியுள்ளார் பாதுகாப்பு அமைச்சுப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல. ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதி நிதியாக கிளிநொச்சி சென்ற சுவீடனைச் சேர்ந்த சிறப்புத் தூதர் அன்ட்றோ ஒல்ஐன்ட் மூலம் அரசுக்கு விடுதலைப் புலிகள் அனுப்பியதாகக் கூறப்படும் செய்தி குறித்து ஊடகம் ஒன்றுக்குக் கருத்துக் கூறுகையில் அவர் இப்படித் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் மக்கள் வாழ்விடங் களில் இருந்து படையினர் அகற்றப்…
-
- 10 replies
- 2.6k views
-
-
ராஜீவின் தலைக்குத்தான் இலக்கு வைத்தேன்: கொழும்பில் தாக்குதல் நடத்திய ரோகன விஜயமுனி பகிரங்க வாக்குமூலம் 19 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையின் போது "இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் தலைக்குத்தான் இலக்கு வைத்துத் தாக்கினேன். அது மரணத்தை ஏற்படுத்தக் கூடியது- அதுவே என் நோக்கம்" என்று தாக்குதலை நடத்திய சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த பேரின வெறியரான விஜித ரோகன விஜயமுனி பகிரங்க வாக்குமூலம் அளித்துள்ளார். 1987 ஆம் ஆண்டு யூலை 29 ஆம் நாளன்று இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்தார். சிறிலங்கா அரச தலைவர் மாளிகையில் யூலை 30 ஆம் நாள் இந்தியாவு…
-
- 2 replies
- 1.5k views
-
-
கொழும்பில் மூத்த ஈ.பி.டி.பி. உறுப்பினர் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 24 யூலை 2006, 11:12 ஈழம்] [ம.சேரமான்] கொழும்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் கும்பலான ஈ.பி.டி.பி.யின் மூத்த உறுப்பினர் மகா கணபதிபிள்ளை (வயது 55) இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். வெள்ளவத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 6.45 மணிக்கு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈ.பி.டி.பி. கும்பலின் தலைவராகவும் மகிந்தவின் அமைச்சராகவும் உள்ள டக்ளசின் பொதுசனத் தொடர்பு அதிகாரியாக செயற்பட்டு வந்த மகா கணபதி பிள்ளை மீது வெள்ளவத்த ஐ.பி.சி. வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த மகா கணபதிபிள்ளை கலுபொவில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்…
-
- 2 replies
- 1.5k views
-
-
புலம்பெயர்ந்த படைப்பாளிகள், கலைஞர்கள் செய்யவேண்டியவை என்ன? என்பதினை புதுவை ரத்தினதுரை அவுச்திரெலியா இன்பத்தமிழோசைக்கு வழங்கிய நேர் காணல். http://www.tamilnaatham.com/interviews20060221.html
-
- 8 replies
- 2.4k views
-
-
- நேர்கண்டவர்: தமிழன்பன் (ஐவான்) - எமது விடுதலைப் போராட்டவரலாற்றில் அதிசயமான வியக்கத்தக்க எத்தனையோ சாதனைகள் நடந்திருக்கின்றன. எங்களுடைய தமிழீழ தேசியத் தலைவர் எங்களுடைய இனத்தை ஒரு சமத்துவமான சமதர்மமுடைய நல்ல பலமான ஒரு இனமாக கட்டி வளர்த்து வருகிறார். களங்களையும் புலங்களையும் கண்டு பேனா முனையிலும் துப்பாக்கி முனையிலும் ஏர்முனையிலும் நின்று தன்னை நிலை நிறுத்தி இன்று வரை அயராது உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு உயர்ந்த பெண்மணியைச் சந்திக்கின்றோம். தமிழன்பன் (ஐவான்): ஏகப்பட்ட தடைகளையும் நெருக்கடிகளையும் தாண்டி அயராது உழைத்து நிமிர்ந்து நிற்கும் ஒரு உயர்ந்த இலட்சிய வாதியாகவும் ஒரு போராளியாகவும் இருக்கிறியள். ஒரு எழுத்தாளராக இருக்கிறியள். எழுத்தாளர் எனும்பொழுத…
-
- 0 replies
- 1k views
-