ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான... பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது – அரசாங்கம்! எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக தவிர்க்கப்பட்டு வருகின்றபோதும் எரிபொருள் போக்குவரத்தில் இன்னும் சிக்கல்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் எதிர்வரும் 10 நாட்களுக்கு தேவையான பெற்றோலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளதாக அவர்…
-
- 0 replies
- 95 views
-
-
அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கு... எதிராக, ஏறாவூரில் ஆர்ப்பாட்டம்! ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிசின் மட்டக்களப்பு மாவட்ட நபடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அமைப்புப் பொறுப்பைப் பெற்றுள்ளதற்கு அவரது சொந்த ஊரிலே மக்கள் எதிப்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு ஈடுபட்டிருந்தனர். அமைச்சரின் உருவப்படம் தாங்கிய பதாகைக்கு நாணையத்தாள்களின் மாலை இடப்பட்டு, பின்னர் பெட்டி ஒன்றின்மீது வைத்து வீதியில் வலம்வந்து நஸீர் அஹமட் ஒழிக என கோசமிட்டு, பின்னர் அதனை எரித்துள்ளனர். நாட்டுமக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்போதைய அரசில் அமைச்சுப் பொறுப்பை ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடாது என இதன்போது மக்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 2 replies
- 191 views
-
-
பெருந் தோட்டங்களின்... பல்வேறு பகுதிகளிலும், போராட்டங்கள் முன்னெடுப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று (புதன்கிழமை) பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சாலை மறியல் போராட்டம், ஒப்பாரி போராட்டம், பறை அடித்து முறையிடும் போராட்டம் என பல வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து, தமது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தினர். தமது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், போராட்டம் தீவிரம் அடையும் என எச்சரிக்கையும் விடுத்தனர். சில தோட்டங்களில் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லாமல், தமது எதிர்ப்பை வெளியிட்டனர். மேலும் சில இடங்களில் 12 மணிக்க…
-
- 0 replies
- 133 views
-
-
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு... எதிர்ப்பு தெரிவித்து, இன்றும் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய பதுளை – பசறை பிரதான வீதியின் யூரி தோட்டப் பகுதியில் பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் பலப்பிட்டிய நகர் பகுதியிலும் பொரலந்தை, வெலிமடை, ரெந்தபோல மற்றும் பூனாகலை தோட்டப் பகுதிகளிலும் இன்று காலை தோட்ட மக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் உடபுஸ்ஸலாவை – எம்.எஸ் தோட்டம் – கோல்டன் பகுதியில் தோட்ட மக்களால் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்ப…
-
- 0 replies
- 105 views
-
-
ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு... உண்மையைக் கண்டறியவும்: நாமல் ரம்புக்கனை சம்பவம் குறித்து சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனை செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ரம்புக்கனை சம்பவம் குறித்து கவலையடைகிறோம். இந்த சம்பவம் குறித்த உண்மைகளைக் கண்டறிய சாதாரண சோதனைகளை மேற்கொள்ள முடியும். முச்சக்கர வண்டிக்கு பொலிஸார் தீ வைப்பது, மற்றும் எரிபொருள் பவுசரை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக் காரர்களைக் காட்டும் காணொளிகள் வெளியாகின. இந்நிலையில் விசாரணைக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரவும் க…
-
- 0 replies
- 109 views
-
-
பிரச்சினைகளுக்கு... தீர்வு வழங்கப்படாவிட்டால், நாடு கலவரங்களை... சந்திக்க நேரிடும் – ரணில் எச்சரிக்கை ரம்புக்கனை அமைதியின்மையை அரசியலாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடு கலவரங்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக தற்போது இடம்பெறும் நாடாளுமன்ற அமரிவிலேயே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் ஆபத்தான சூழ்நிலை ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணைந்து கலந்துரையாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். h…
-
- 0 replies
- 122 views
-
-
மட்டக்களப்பை சேர்ந்த மூவர்... அகதிகளாக, தனுஷ்கோடியை சென்றடைந்தனர்! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு என ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்று (புதன்கிழமை) அதிகாலை சென்றடைந்துள்ளனர். தனுஷ்கோடியை சென்றடைந்த குறித்த இலங்கை தமிழர்களை மீட்ட மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மட்டக்களப்பில் இருந்து எவ்வாறு தனுஷ்கோடிக்கு சென்றார்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2022/1277559
-
- 1 reply
- 165 views
-
-
ரம்புக்கனை சம்பவம் : ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு... ஆளான, பிரதமர் ! ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார். இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் ரம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com…
-
- 7 replies
- 459 views
-
-
ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு- சபையில் அமைதியின்மை: நாடாளுமன்ற அமர்வுகள்... ஆரம்பமாகிய, 5 நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகிய 5 நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. சபை அமர்வுகள் ஆரம்பமாகியபோது ரம்புக்கனை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதுகுறித்து கேள்வியெழுப்பினார். இந்நிலையில், சபாநாயகர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர முற்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ரம்புக்கனையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்ப…
-
- 0 replies
- 141 views
-
-
நாட்டின் தற்போதைய நிலைமை, மிகவும் ஆபத்தானது – ரணில் நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோது ரம்புக்கனை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இன்று நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது. நாம் என்ன செய்கிறோம் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். இது மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்று நான் கேள்விப்பட்டேன். அதைப் பற்றி நாம் பேச வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கும் உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார். https://athavannews.co…
-
- 0 replies
- 215 views
-
-
ரம்புக்கனை ஆர்ப்பாட்டம்: கேகாலை நீதிமன்றில் முன்னிலையாகின்றது சட்டத்தரணிகள் சங்கம்! ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணை அவசியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. போராட்டக்காரர்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு பொலஸார் மற்றும் படையினர் கட்டுப்பாட்டுடன் செயற்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டத்தரணிகள் தொடர்ந்தும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள் என அச்சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானிப்பத…
-
- 0 replies
- 133 views
-
-
பிரதமர் மஹிந்தவின் வீட்டினை... மீண்டும் முற்றுகையிட்டு, போராட்டம் தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்திற்கு அருகாமையில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த 4 ஆம் திகதியும் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்ல வீதியில் ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர். https://athavannews.com/2022/1277479
-
- 0 replies
- 281 views
-
-
இலங்கைக்கு... அவசர உதவிகளை, வழங்கத் தயார் – உலக வங்கி இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வொஷிங்டனில் நிதியமைச்சர் அலி சப்ரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உலக வங்கியின் துணைத் தலைவர் Hartwig Schafer இதனைத் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சியை ஆதரிப்பதற்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது விவாதித்ததாக அவர் கூறினார். ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான நெருக்கடியின் தாக்கம் குறித்து உலக வங்கி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவி…
-
- 2 replies
- 405 views
-
-
120,000 மெட்ரிக் தொன், எரிபொருள்... இலங்கைக்கு! இரண்டு கப்பல்கள் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இறக்கும் பணி தொடங்கியுள்ளது. 38 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டதன் பின்னர் எரிபொருளை இறக்கும பணிகள் தொடங்கியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதில் விமான சேவைக்கு தேவையான எரிபொருள் மற்றும் டீசல் என்பன அடங்குவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் பருவ மழைக்கு முன் நிலக்கரி தேவையான நிலக்கரியும் கிடைத்துள்ளது என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1277472
-
- 0 replies
- 174 views
-
-
உரிமைக்காக போராடுகின்றவர்களை... சுட்டுக் கொல்வதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும் – இராதாகிருஷ்ணன் ரம்புக்கனையில் மக்களுக்காக குரல் கொடுத்த மக்களுக்காக போராடிய மக்களின் உரிமைகளுக்காக களத்தில் இறங்கிய இளைஞர்களை சுட்டுக்கொன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதோடு, அந்த குடும்பத்திற்கு மலையக மக்கள் சார்பாக ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணனின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைய…
-
- 0 replies
- 463 views
-
-
திருகோணமலை – கண்டி பிரதான வீதியை மறித்து, ஆர்ப்பாட்டம்: கடைகளுக்கும் பூட்டு! திருகோணமலை – கண்டி பிரதான வீதியானது அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதித் தடை போடப்பட்டு மறிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் பேருந்து ஒன்று வீதிக்கு குறுக்கே நிறுத்தப்பட்டுள்ளதுடன், உப்புவெளி பகுதிக்குச் செல்லும் வீதியும் மறிக்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் மத்திய மீன் சந்தை மூடப்பட்டுள்ள அதேவேளை பாடசாலைக்கும் மாணவர்கள் செல்லவில்லை என பாடசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காலை தொழில் நிமித்தம் சென்ற பலரும் திருப்பி அனுப்பப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தா…
-
- 2 replies
- 263 views
-
-
நாடளாவிய ரீதியில்... இன்று, “தேசிய கறுப்பு எதிர்ப்பு தினம்” பிரகடனம் – தொழிற்சங்கங்கள் பொதுத்துறை தொழிற்சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து இன்று (புதன்கிழமை) நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளன. இதற்கு “தேசிய கறுப்பு எதிர்ப்பு தினம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த ஹர்த்தாலில் பங்கேற்கின்றன என சுகாதார வல்லுநர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகுமாறு கோரியே இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நெருக்கடிக்கு தற்போதைய ஆளும் கட்சியே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இது இயற்கை …
-
- 0 replies
- 218 views
-
-
ரம்புக்கனை கலவரம் : 33 பேரில்... மூவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!! ரம்புக்கனை பகுதியில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் காயமடைந்த 33 பேர் தொடர்ந்து கேகாலை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பொதுமக்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர்களில் மூவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய அமைதியின்மையில் 20 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்புக்கனையில் நேற்று ஆர…
-
- 0 replies
- 126 views
-
-
ரம்புக்கனையில்... ஊரடங்கை தளர்த்துவது குறித்து, இதுவரையில்... தீர்மானிக்கவில்லை – பொலிஸ் ரம்புக்கனை பொலிஸ் பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இதனையடுா்அத்துடன், காயமடைந்த 28 பேர் கேகா…
-
- 0 replies
- 101 views
-
-
ரம்புக்கனை சம்பவம் குறித்து ஆராய... மனித உரிமைகள் ஆணைக்குழுவினால், குழு நியமனம் ரம்புக்கனை சம்பவம் குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார். அத்துடன், காயமடைந்த 28 பேர் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகி…
-
- 0 replies
- 89 views
-
-
புதிய பொதுமக்கள், பாதுகாப்பு அமைச்சர்... பிரசன்ன ரணதுங்க, உடன் பதவி விலக வேண்டும் – சாணக்கியன் கோரிக்கை புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ரயில் மார்க்கத்திற்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் ரயில்…
-
- 1 reply
- 228 views
-
-
போராட்டக்காரர்கள் மீதான... துப்பாக்கி பிரயோகத்திற்கு, செந்தில் தொண்டமான் கண்டனம்! எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு அதிகரிக்கப்பட்டமையை கண்டித்து ரம்புக்கனையில் பொதுமக்களால் இன்று(செவ்வாய்கிழமை) ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலையடுத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், இத்துப்பாக்கி சூட்டு …
-
- 0 replies
- 101 views
-
-
ரம்புக்கனையில்... பாரிய சேதங்களைத் தடுக்கும் வகையிலேயே, பொலிசார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்தனர் – பொலிஸ்மா அதிபர் ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது 30 ஆயிரம் லீற்றர் எரிபொருளைக் கொண்ட பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்கவும், அதனால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களைத் தடுக்கவும் பொலிசார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியிருந்ததாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது பொலிஸார் அதிக பலத்தை பிரயோகித்தனரா என்பது தொடர்பில் பொலிஸ் தலைமையக மட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தி…
-
- 0 replies
- 125 views
-
-
ரம்புக்கனையில்.... பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில், உயிரிழந்தவருக்கு... காலிமுகத்திடலில் அஞ்சலி – 12ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் போராட்டம்! ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவருக்கு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். றம்புக்கணையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த 24 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையிலேயே பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவருக்கு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதேநேரம், காலி ம…
-
- 0 replies
- 101 views
-
-
முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – நாட்டின் தற்போதைய சூழ்நிலையில்... அரசாங்கத்தின் முடிவு விவேகமற்றது என எச்சரிக்கை! வெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற முடிவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யுமாறு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், உலகின் பல்வேறு பகுதிகளில் புதிய பிறழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொற்றுநோய்களின் மற்றொரு அலையை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார். எனவே நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நமது பாதுகாப்பைக் கைவிடுவத…
-
- 0 replies
- 93 views
-