ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
‘திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்... பேருந்து இயங்காது – இப்போதே ஊர்களுக்கு செல்லுங்கள்’: பேருந்து உரிமையாளர்கள் சங்கம்! நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில், கிடைக்கப்பெற்றுள்ள பேருந்துகளில் ஏறி தமது சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மக்களிடம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, போதிய எரிபொருள் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பேருந்துகளை இயக்க முடியாது என தெரிவித்தார். நாட்டில் கடந்த சில நாட்களாக தனியார் பேருந்து தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளதால்…
-
- 0 replies
- 287 views
-
-
ஜனாதிபதி கோட்டா – முன்னாள் பிரதமர் ரணில்... தனிப்பட்ட சந்திப்பு!! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதனை அடுத்து ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியம் தொடர்பான விடயங்கள், இலங்கையின் தற்போதைய நிதி நிலை மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு பலதடவைகள் கோட்டபாய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விட…
-
- 0 replies
- 208 views
-
-
அலரிமாளிகையினை... முற்றுகையிட்டு, போராட்டம் – பலப்படுத்தப்பட்டது பாதுகாப்பு! அலரிமளிகைக்கு முன்பாக தற்பொழுது பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான குறித்த போராட்டத்தின் போது வீதி தடைகளைத் தகர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி நகர முயற்சித்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275688
-
- 0 replies
- 182 views
-
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக... வைத்தியர்கள், போராட்டம் ! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பாக ஒன்றுகூடி வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தியாவசிய மருந்துகள் இல்லை, சுகாதார கட்டமைப்பு சீர்குலைவு, இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். அரசாங்கத்தின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ள…
-
- 0 replies
- 121 views
-
-
புத்தாண்டில்... மின்வெட்டு, அமுல் படுத்தப்படாது என அறிவிப்பு! ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14ம் திகதிகளில் மின்சாரம் தடை ஏற்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டு தினங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1275706
-
- 0 replies
- 235 views
-
-
26 அமைச்சர்களின் இராஜினாமா.... வர்த்தமானி, மூலம் அறிவிப்பு! 26 அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, வெளிவிவகார, கல்வி, நெடுஞ்சாலைகள் மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளுக்கு நான்கு அமைச்சர்களை நியமிப்பதற்கான மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275696
-
- 0 replies
- 177 views
-
-
மத்திய வங்கியின்... புதிய ஆளுநராக, நந்தலால் வீரசிங்க நியமனம் மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று(வியாழக்கிழமை) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்டார். அத்துடன், நிதியமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2022/1275680
-
- 0 replies
- 199 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு... விரைவில் கவிழும் – வீ. இராதாகிருஷ்ணன் தற்போது இலங்கை மக்களும் கொதித்தெழுந்துள்ளனர். எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரைவில் கவிழும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் தலவாக்கலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” மக்க…
-
- 0 replies
- 97 views
-
-
ஜோன்ஸ்டனின்... தலை முடியைக் கூட யாரையும், தொடுவதற்கு... அனுமதிக்க மாட்டோம் – குருநாகல் மேயர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமுடியைக்கூட யாரையும் தொடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என குருநாகல் மேயர் சவால் விடுத்துள்ளார். குருநாகலில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, குருநாகல் மேயர் அமைச்சருக்கு ஆதரவாக கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். இதன்போதே, ஜோன்ஸ்டன் தலைமுடியைகூட யாரையும் தொடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என சவால் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினைச் சேர்ந்த அல்லது யாரேனும் குருநாகலில் உள்ள ஜோன்ஸ்டனின் அலுவலகத்திற்கு வருமாறு தாங்கள் சவால் விடுவதாகவும் மேயர் கூற…
-
- 2 replies
- 303 views
-
-
76,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இலங்கை வந்தடைந்தன! இலங்கைக்கு 76,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 36,000 மெட்ரிக் தொன்பெற்றோல் மற்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் நேற்றும்,நேற்று முன்தினமும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்திய கடன் வசதியின் கீழ் இதுவரையில், 270,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1275485
-
- 5 replies
- 394 views
- 1 follower
-
-
நேற்று மட்டும்... 119.08 பில்லியன் ரூபாயை, அச்சிட்டது... மத்திய வங்கி ! கடும் பெருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்த பண புழக்கத்திற்கு மத்தியில் மத்திய வங்கி நேற்று (புதன்கிழமை) 119.08 பில்லியன் ரூபாயை அச்சடித்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 432.76 பில்லியன் ரூபாய் பணம் இலங்கை மத்திய வங்கியினால் அச்சிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275476
-
- 5 replies
- 455 views
- 1 follower
-
-
ஹர்ஷ டி சில்வாவை... தற்காலிக, ஜனாதிபதியாக்க... நாமல் ஆதரவு? ஹர்ஷ டி சில்வாவை தற்காலிக ஜனாதிபதியாக நியமிப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியதுடன் அதற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள சிங்கள ஊடகமொன்று, இன்று காலை சபை அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ விசேட அறிக்கையொன்றை விடுத்ததாக தெரிவித்துள்ளது. மேலும் ஹர்ஷ டி சில்வாவை தற்காலிக ஜனாதிபதியாக நியமிப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாமல் ராஜபக்ஷ கூறியதுடன் அதற…
-
- 1 reply
- 306 views
-
-
கோதுமை மாவின் விலையினை... மேலும் 50 ரூபாயினால், அதிகரிக்க நடவடிக்கை! ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை மேலும் 50 ரூபாயினால் அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன, தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மா 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன் விலை மேலும் 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுமாயின் மாவின் விலை 200 ரூபாயைவிட உயரும் என்பதுடன், தமது தொழிற்துறையினர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1275639
-
- 0 replies
- 219 views
-
-
11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை : அறிவிப்பு வெளியானது ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கும் சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275653
-
- 0 replies
- 137 views
-
-
கப்ரால்... நாட்டை விட்டு வெளியேறுவதற்கு, நீதிமன்றம் தடை ! இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அவருக்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. https://athavannews.com/2022/1275646
-
- 0 replies
- 203 views
-
-
அபிவிருத்தி அரசியலால்... எவ்வித பயனும் இல்லை, கொள்கை அரசியலை செயற்படுத்தி... நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் – ஜீவன் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி விளையாடும் கலாசாரத்தை முதலில் நிறுத்த வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டார். மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு பதிலாக நாட்டின் தற்போதைய பிரச்சினை குறித்து பேசி தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார். அபிவிருத்தி அரசியலால் எவ்வித பயனும் இல்லை கொள்கை அரசியலை செயற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். இதேவேளை #GoHomeGota என போராட்டம் நடத்தும் மக்கள் ராஜபக்ஷர்களையும் அரசாங்கத்தையும் மட்டும் வெளியேறுமாறு கோரவில…
-
- 0 replies
- 139 views
-
-
பிரதமர் உட்பட... அனைவரும், பதவி விலக வேண்டும் – விமல் வீரவன்ச அழைப்பு பிரதமர் உட்பட அனைவரும் பதவி விலகி புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய புதிய நிர்வாகம், குறைந்தபட்சம் 4 பில்லியன் டொலர்களையாவது கண்டுபிடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தி சர்வதேச தரத்தை உயர்த்தியதன் பின்னர், சர்வதேச சந்தைக்கு மீண்டும் டொலர் கடன்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1275624
-
- 0 replies
- 114 views
-
-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த... இருவரை, அமைச்சரவையில் இணைக்க கூடாது – எதிர்க்கட்சி முன்மொழிவு அமைச்சரவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இருக்க கூடாது என்ற முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன முன்வைத்துள்ளார். வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் கூட கணவனும் மனைவியும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் அமைச்சரவையில் மட்டும் ஏன் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள் என எரான் விக்ரமரத்ன கேள்வியெழுப்பினார். இன்று இடம்பெறும் விவாதத்தில் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் நம்பிக்கை இல்லை, ஸ்திரத்தன்மை இல்லை என்றால் சர்வதேச நாணய நிதியம் பேச…
-
- 0 replies
- 117 views
-
-
ஒரு வருடத்திற்கு... சம்பளம் பெறமாட்டேன் – ஹரீன் பெர்னாண்டோ கடிதம் ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறமாட்டேன் என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கடிதம் எழுதியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு சில தியாகங்களை மக்களுக்குக் காட்ட வேண்டிய கடமை உள்ளது என தெரிவித்திருந்தார். அதன்படி, ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறமாட்டேன் என்றும் நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு உட்கொள்ள மாட்டேன் என்றும் அவர் தெரிவித்திருந்தமை க…
-
- 0 replies
- 96 views
-
-
நாடளாவிய ரீதியில்... போராட்டம் இடம்பெறும் நிலையில், வடக்கில் காணி அபகரிப்பு – சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார் ஸ்ரீதரன் வடக்கில் அனலைதீவிலும் முல்லைத்தீவிலும் நில அளவையில் ஈடுபட்டு நில அபகரிப்பு செய்யும் இராணுவத்தினரின் நடவடிக்கை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தது. நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த இன்று இடம்பெறும் விவாதத்தின்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இதனை சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும் மக்களும் இளைஞர்களும் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக போராடிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான தருணத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக அவர் குற்றம் சாட்டினார். http…
-
- 0 replies
- 151 views
-
-
ஆர்ப்பாட்டங்களில்.. சிறுவர்கள் பங்கேற்பதை தடுக்குமாறு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலியுறுத்து. போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பதை தடுக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை வலியுறுத்தியுள்ளது. சமீபகாலமாக நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள் கலந்துகொண்டதை அவதானித்த பின்னரே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதால், குழந்தைகளின் அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதோடு, விபத்துக்கள் அல்லது உடல் அல்லது உளவியல் பாதிப்புகளைத் தடுப்பதற்கும் அது உறுதிபூண்ட…
-
- 0 replies
- 104 views
-
-
ஜனாதிபதியை... உடனடியாக பதவி விலகக் கோரி, கறுப்பு உடை அணிந்து... பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகக் கோரி கண்டியில் கறுப்பு உடை அணிந்த ஏராளமான பாடசாலை மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (வியாழக்கிழமை) காலை தலதா வீதியில் திரண்ட மாணவர்கள், ‘எங்களின் கனவுகளை எமக்கு கொடுங்கள்’ உள்ளிட்ட வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு குழந்தைகளை அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு பொலிஸார் அறிவித்திருந்த நிலையில், ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1989ஆம் ஆண்டு சில பாடசாலைகளில் அரச எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மாணவர்கள் தூ…
-
- 0 replies
- 138 views
-
-
நிறைவேற்று அதிகாரம் கொண்ட... ஜனாதிபதி முறைமையை, நீக்க பிரேரணை – எதிர்க்கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த இன்று இடம்பெறும் விவாதத்தின்போதே எதிர்க்கட்சி பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்தார். https://athavannews.com/2022/1275578
-
- 0 replies
- 116 views
-
-
மத்திய வங்கியின் ஆளுநராக... நந்தலால் வீரசிங்க – அலி சப்ரி தகவல் மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அவர் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பியதும் அவர் கடமைகளை பொறுப்பேற்பார் என்றும் அலி சப்ரி தெரிவித்தார். நந்தலால் வீரசிங்க முன்னர் 2011 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநராக பணியாற்றியுள்ளார். அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் உதவியை எதிர்பார்த்திருக்கும் சூழலில் இந்த நியமனம் இடம்பெறவுள்ளது. https://athavannews.com/2022/1275573
-
- 0 replies
- 264 views
-
-
மக்கள் கடுமையாக... பாதிக்கப் பட்டுள்ளனர், மக்களின் ஏமாற்றம் நியாயமானது – அலி சப்ரி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையை தாம் புரிந்துகொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் ஏமாற்றம் நியாயமானது என்பதையம் புரிந்துகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள இன்னல்களுக்கு தனிப்பட்டமுறையில் தான் மன்னிப்பு கோருவதாகவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி சிறந்த முறையில் நாட்டை மீட்டெடுப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1275565 Tags: Ali Sabry
-
- 0 replies
- 161 views
-