நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பால் தேத்தண்ணி தேவையான பொருட்கள்: பால் - 1 கப் தேயிலை - 1 தே.க சீனி - 2 தே.க சுடு நீர் 1/2 செய்முறை: 1. முதலில் நீரை கொதிக்க வைத்து சுட சுட 1/2 கப் எடுக்கவும். அதனுள் தேயிலையை போட்டு கலக்கிவிடுங்கள். 2 நீர் ஓரளவு கொதிக்க தொடங்கியதுமே பாலை எரியும் அடுப்பில் வைத்து காய்ச்ச ஆரம்பிக்க வேண்டும்.. பாலை நன்றாக காய்ச்சி எடுக்கவும். (பால் பொங்கி வர வேண்டும்.) 3. பால் கொதித்ததும், தேயிலை சாயத்தை பாலுடன் கலக்கவும். (வடிக்க மறக்க வேண்டாம்) 4. இதனுள் சீனியை போட்டு கலக்கலாம். (சுட சுட குடிக்க விருப்பம் இருப்பின்) / படங்களில் வருவது போல ஆற்றலாம். (சுட சுட வேணாம் என்பவர்கள்) கவனிக்க வேண்டியது: - பாலும் நீரும் ஒன்றன் பின் ஒன்றாக கொதிக்க விட வேண்டாம். - த…
-
- 68 replies
- 10.6k views
-
-
தமிழ் புது வருட தினமான இன்று, சுவையருவியில் இருந்து உங்களுக்காக ஒரு இலகுவான சர்க்கரை பொங்கல் செய்யும் முறை. அனைவருக்கும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுகின்றேன். சர்க்கரை பொங்கல் pic:nandyala தேவையான பொருட்கள்: அரிசி = 1 பேணி வறுத்த பாசி பயறு = 1/3 பேணி சர்க்கரை = 1 பேணி தேங்காய் பால் = இ பேணி நீர் = 3 பேணி Cashewnuts = 2 மே.க Raisins = 2 மே.க செய்முறை: 1. பொங்கல் பானையில் நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் கொதித்து வரும் போது அதில் பாலை சேர்க்கவும். 2. பால் பொங்கியதும், ஏற்கனவே சுத்தப்படுத்தி, நீரில் கழுவிய அரிசியை போடவும். அரிசி அரை பதத்திற்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்க்கவும். [சர்க்கரையை நீரிலோ பாலிலொ கரைத்துவிடுவது நல்லது…
-
- 3 replies
- 4.8k views
-
-
ஸ்பைசியான் மெக்ஸிக்கன் ஆட்டுக்கறி மிக விரைவில் தரவுகளுடன் வரவிருக்கிறது. நாக்குக்கு உறைப்பாகவும், நல்ல வாசமான் மூலிகைகள் கொண்டு தயாரிக்கபட்டது. அன்மையில் உள்ள உங்கள் மெக்ஸிக்கன் கடைகளினை கண்டு அதில் சில வகை மிளகாய்கள் வாங்குவதற்காக பார்த்து வையுங்கள். நாளை தொடர்கிறேன்.
-
- 20 replies
- 4.5k views
-
-
தேவையான பொருட்கள்:- கரட், கோதுமை பச்சைமா,கோதுமை அவித்தமா,சீனி,எண்ணை,தேவையான அளவு உப்பு,அடுப்பு,தாச்சிசட்டி,பண
-
- 6 replies
- 3.5k views
-
-
நான் உங்களுக்கு சொல்லட்டுமா? பழைய புதிய சமையல் முறைகள் என் சமையல் அனுபவமும் நான் பல வருடங்களாக சேமித்த தகவல்களும். 1. இட்லி மாவுடன் சிறிது நல்லெண்ணை கலந்து வார்க்கவும். இட்லி கட்டியாக இருக்காது பஞ்சு மாதிரி வருமுங்க. 2.தக்காளி ரசம் செய்யும் போது தக்காளியை அப்படியே சேர்க்காமல் தக்காளி, கொஞ்சம் சீரகம், கொத்தமல்லி இலை யாவற்றையும் அரைத்துச் செய்தால் சுப்பராய் இருக்கும். விரதம் இல்லாத நாட்களில் இதனுடன் 2, 3 பற்கள் பூண்டும் சேர்த்து அரத்துச் செய்தால் மிக ருசியாகவும், மணமாகவும் இருக்கும். சொல்லி வேலையில்லீங்க.
-
- 46 replies
- 7.6k views
-
-
தேவையான பொருட்கள்: 500 கிராம வறுத்த ரவை 400 கிராம் சீனி (சர்க்கரை) 1/2 தே.க கேசரி தூள் (coloring) 1/2 தே. க ஏலக்காய் தூள் 1 கப் பால் 2 கப் நீர் Cashew Nuts 2 மே.க Sultanas பட்டர் / நெய் (உங்களுக்கு எவ்வளவு விருப்பமோ அவ்வளவு) செய்முறை: 1. சட்டியில் நெய்யை போட்டு சூடாக்கி sultanas போட்டு பொரித்தெடுக்கவும். 2. அதே சட்டியில் பால், நீர் & கேசரி தூளை போட்டு கொதிக்கவிடவும். 3. கொதித்து வரும் போது அடுப்பை குறைக்கவும். பின்னர் சிறிது சிறிதாக வறுத்த ரவையை சேர்த்து நன்றாக கிளறவும். (கை வலிக்கும், இரண்டு பேர் என்றால் நல்லம்) 4. ரவையை போட்டதும் சிறிது சிறிதாக சீனியை சேர்க்கவும். உடனேயே நெய்யையும், சுல்டானஸையும், ஏலக்காய் தூளையும் போட்டு நன்றாக கிளறி…
-
- 51 replies
- 8.4k views
-
-
மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள் கறி -1 கிலோ பிரியாணி அரிசி -1 கிலோ வெள்ளைப் பூண்டு -75கி இஞ்ச -75கி பட்டை -5கி ஏலக்காய் -5கி கிராம்பு -5கி பச்சை மிளகாய் -50கி சின்ன வெங்காயம் -1/4 கிலோ பெரிய வெங்காயம் -1/4 கிலோ தக்காளி -1/4 கிலோ நெய் -1/4 லிட்டர் எண்ணெய் -3/4 லிட்டர் தயிர் -3/4 லிட்டர் கொத்தமல்லி,புதினா -சிறிதளவு எலுமிச்சம் பழம் செய்முறை கறியை உப்பு மஞ்சள் தூள் போட்டு குக்கரில் வைத்து 2 சத்தம் வந்தவுடன் இறக்கவும். வெள்ளைப் பூண்டு, இஞ்சி இரண்டையும் தனியாக அரைத்துக் கொள்ளவும். பட்டை ,ஏலக்காய், கிராம்பு மூன்றையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி இவைகள…
-
- 12 replies
- 3.7k views
-
-
பூண்டு( உள்ளி) ஊறுகாய் தேவையான் பொருட்கள்: வெள்ளைப்பூண்டு உரித்தது( உள்ளி)- 4 கோப்பை உப்பு தூளு- ஒரு கோப்பை தமிழீழ மிளகாய்த்தூள்- ஒரு கோப்பை வெந்தயம்- ஒரு மேஜைக்கரண்டி நற்சீரகம்- ஒரு மேஜைக்கரண்டி பெருங்காயப்பொடி- சிறிதளவு....அடடே மறந்திட்டேனுங்க மீண்டும் தக்காளி ரசத்துக்கு போரனுங்க மீண்டும் வாரன்...
-
- 18 replies
- 4.4k views
-
-
முந்திரி ஸ்வீட் இது அதிக கலோரி உள்ள ஸ்வீட்.நாளைக்கு ஸ்வீட் சாப்பிட்டு தான் எனக்கு வெயிட் போட்டிடுச்சு என்று யாரும் புகார் கொடுக்க கூடாது. முந்திரி பருப்பு -1கப் சர்க்கரை அதே கப்பில் -11/2கப் ரோஸ் எசன்ஸ்-1/2 ஸ்பூன். முந்திரி பருப்பை மிக்ஸியில் போட்டு முடியும் வரை நைசாக தூள் ஆக்கவும். இப்ப முந்திரி தூளையும்,சர்க்கரையையும் ஒன்றாக கலந்து அடுப்பில வையுங்கள். ஒரு நிமிடம் வறுத்து,லேசாக தண்ணீர் தெளிக்கவும்.விடாமல் கிண்டி கொண்டே இருக்கவும்,கலவை ஒன்று சேர்ந்தவுடன் சிறிதளவு எடுத்து கையில் உருட்டி பாருங்கள். கலவை கையில் ஒட்டாமல் உருட்ட வந்தால் உடனே அடுப்பில் இருந்து இறக்கி விடவும். இப்பொழுது எசன்ஸ் சேர்த்து கலவை ஆறும் வரை விடாம…
-
- 0 replies
- 1.9k views
-
-
சிவானந்தா ஆச்சிரம ஆரோக்கிய மான சாப்பாட்டு முறைகள். சிவானந்தா சைவச்சாப்பாட்டுக் கடை ஆக்கங்கள் கைகளில் உண்டு ஒவ்வொருநாளும் தொடர்ச்சியாக உங்களுக்கு தந்து கொண்டு இருப்பேன். தற்போது தமிழில் அதனை மொழிபெயர்த்துக்கொண்டு உள்ளேன். மீண்டும் நாளை வருக. நன்றிகள்.
-
- 0 replies
- 1.8k views
-
-
உள்ளி ரசம் அல்லது (இந்தியமக்கள் கூறும் பூண்டு ரசம்) கொலஸ்ட்ராலைக் குறக்குமுங்க ஆகவே இது நல்லமுங்க. தேவையானவை: -உள்ளி- 6 பீஸுகள் அல்லது பாகங்கள் -புளி- ஒரு எலுமிச்சை அளவு சைசு எடுத்துக்கொள்ல்ளுங்கள் -மிளகு-நற்சீரகம் ஒரு டீஸ்பூன் -உப்பு- தேவையான அளவு - மஞ்சள் பொடி- 2 தேக்கரண்டி -கடுகு- 1/2 டீஸ்பூன் -கொத்தமல்லி, கறிவேப்பில்லை- கொஞ்சம் - சிறிதளவு நெய் - புளியினை 2 டம்ளர் கொதிதண்ணீரில் இட்டு கரைத்துக் கொள்ளவும். - உப்பு, மஞ்சள் கலந்து தூள் போடவும். -மிளகு, சீரகம்,பூண்டு, 4 பீஸ் உள்ளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி முதலியவற்றை நன்கு இடித்துஅரைத்துக்கொள்ளவும். -மீதமுள்ள 2 பீஸ் உள்ளியை நசுக்கி 1/2 ஸ்பூன் நெய்யில் பிரட்டி எடுத்து புளி கரைத்த தண்ணீரில…
-
- 8 replies
- 3k views
-
-
மொருமொரு வாழைப்பழம் மொருமொரு வாழைப்பழம் தேவையான பொருட்கள் :- வாழைப்பழம் 6 முட்டை 1 உலர்ந்த ரொட்டித் தூள் 1 கப் நெய் 1/2 கப் சர்க்கரைத் தூள் 1 மேஜைக் கரண்டி செய்முறை 1. வாழைப்பழத்தை நான்காக வெட்டிக் கொள்ளவும். 2. ரொட்டித் தூளில் சர்க்கரை தூளை கலந்து கொள்ளவும். 3. அடித்த முட்டையில் வாழைப்பழத்தை தோய்த்து ரொட்டித் தூளில் புரட்டி வைக்கவும். 4. நெய் சூடானவுடன் அதில் வாழைப்பழத்தைப் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். 5. சூடாக பரிமாறவும்.
-
- 28 replies
- 5.2k views
-
-
தேவைப்படும் பொருட்கள்: (முதலில் பிஷ் மசாலா தயாரிக்க வேண்டும்) * கெட்டியான மீன்- 500 கிராம். * மிளகாய்த்தூள்- ஒரு மேஜைக்கரண்டி. * மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி. * இஞ்சி, பூண்டு அரைப்பு- ஒரு மேஜைக்கரண்டி. * எலுமிச்சை சாறு- ஒரு தேக்கரண்டி. * வெஜிடபிள் ஆயில்- வறுப்பதற்கு. (அனைத்து பொருட்களையும் ஒன்றாக்கி, மீனில் பூசி எண்ணையில் அதிகம் வெந்து போகாத அளவிற்கு வறுத்து வையுங்கள்) * பெ.வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது- இரண்டு கப். * இஞ்சி, பூண்டு நறுக்கியது- ஒரு மேஜைக் கரண்டி. * கேரட் சிறியதாக நறுக்கியது- இரண்டு கப். * குடை மிளகாய் சிறிதாக நறுக்கியது- இரண்டு மேஜைக்கரண்டி. * ப.மிளகாய் வட்டமாக நறுக்கியது- இரண்டு தேக்கரண்டி…
-
- 16 replies
- 4.2k views
-
-
இராமநாதபுரம், கீழக்கரை, காயல்பட்டினம் பகுதிகள்�ல் King fish (சென்னையில் வஞ்சிர மீண்) எனப்படும் மீனிலிருந்து மாசி கருவாடு செய்கிறார்கள்.. மாசி கருவாடு விலைஉயர்ந்தது. காய்ந்து கல் போல இருக்கும் மாசிகருவாட்டை தண்ணீரில் நனைத்து பின்னர் தேங்காய் துருவியால் துருவி 'சம்பல்' (துவையல்) செய்வார்கள். ஈக்கான் சம்பல் என்பது மீன் சம்பந்தப்பட்டது. ஊடாங் சம்பல் என்பது இராலுடன் செய்யப்படுவது. மீனை மசாலாவுடன் சேர்த்து உப்புப்போட்டு ஊறவைத்துவிட்டு, அதை அரைவேக்காடாகப் பொரிக்கவேண்டும். இஞ்சி, வெங்காயம், காய்ந்தமிளகாய், தக்காளிப்பழம் முதலியவற்றை அரைக்கவேண்டும். பெரிய வெங்காயத்தை ஸ்லைஸாக வெட்டிக்கொண்டு இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கிக்கொண்டு, இஞ்சி வகையறா…
-
- 6 replies
- 3.7k views
-
-
இனிப்பு அணுகுண்டு செய்முறை முதலில் கோதுமையை மிஷினில் கொடுத்து தீட்டி வந்து புடைக்க வேண்டும். புடைத்த கோதுமையை 2 மணிநேரம் ஊறவிடவும். ஊறியதும், நீரை வடித்து விட்டு தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இத்துடன் கால் கிலோ வெல்லம் போட்டு அரைக்கவும். அரைத்து வழித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். எள்ளை வறுத்து தண்ணீரில் கொட்டி அரித்து கல் நீக்கி, ஊறவைத்து, மேல் தோலை நீக்கி விட்டு, எள்ளு, பொட்டுக் கடலை, மீதியுள்ள அரைக் கிலோ வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு ஒரு சுற்று சுற்றி, எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும், அதில் தேங்காயை சிறுசிறு பல்லாக கீறிப் போடவும். இவை எல்லாவற்றையும் நன்றாகப் பிசைந்து, அத்துடன் ஏலக்காயைப் பொடி செய்துப் போட்டு இத்துடன் கசகசாவை வறுத்து (லேசாக)…
-
- 9 replies
- 3.2k views
-
-
கேரட் ரொட்டி தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கப் கேரட் துருவல் - 2 கப் கொத்துமல்லி இலை - 1 கப் ( நறுக்கியது ) மிளகாய்ப் பொடி - ஙூ தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி நெய் - தேவையான அளவு தயிர் - 2 மேசைக்கரண்டி செய்முறை 1. கோதுமை மாவில் உப்பு, மிளகாய்ப்பொடி, கேரட் துருவல், மல்லிக்கீரை அனைத்தையும் சேர்க்கவும். 2. தண்ணீரையும், தயிரையும், சமையல் எண்ணெயும் சேர்த்து நன்கு பிசையவும். 3. மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும். 4. உருட்டிய மாவை தேவைப்படும் அளவில் ரொட்டிகளாகத் தயாரித்து அதை நான்ஸ்டிக் டவாவில் போட்டு எடுக்கவும். 5. நன்றாக வெந்து பிரவுன் நிறமாகி விடும். 6. திர…
-
- 6 replies
- 2.8k views
-
-
வேர்க்கடலை பிஸ்கட் தேவையான பொருட்கள் : வேர்க்கடலை 1 கப் கோதுமை மாவு 1 கப் சர்க்கரை 1 கப் உப்பு 1 டீஸ்பூன் சமையல் சோடா 1 டீஸ்பூன் எசன்ஸ் 1/2 டீஸ்பூன் நெய் 2 டீஸ்பூன் செய்முறை : 1. வேர்க்கடலை தோலை எடுக்க சிறிதளவு வறுக்க வேண்டும். 2. பின்பு உடைத்து தோலை புடைத்து விட வேண்டும். 3. அதில் உள்ள முளையை எடுத்து விட வேண்டும். 4. பின் கடலையை ஒன்றும் இரண்டுமாக பொடி செய்ய வேண்டும். 5. ஒரு சர்க்கரையை எடுத்து தனியாக இடித்துக் கொள்ள வேண்டும். 6. வேர்க்கடலை, கோதுமை மாவு இரண்டையும் தனியாக இடித்துக் கொள்ள வேண்டும். 7. இவற்றுடன் ஒரு சிட்டிகை உப்பும், சமையல் சோடாவும் போட வேண்டும். 8. பின் அதில் தண்ணீர் சிறிதளவு ஊற்றி-கெட…
-
- 0 replies
- 1.4k views
-
-
உருளைக்கிழங்கு ஜிலேபி தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு 1/2 கிலோ தயிர் 1 கப் ஆரோரூட் பவுடர் 50 கிராம் எலுமிச்சம்பழம் 1 சிறிது நெய் 1/2 கிலோ சர்க்கரை 1/4 கிலோ குங்குமம்பூ 1 சிட்டிகை சதுரமான வெள்ளைத் துணி செய்முறை : 1. உருளைக்கிழங்கை வேக வைத்து, மேல் தோலை உரித்து ஒரு பாத்திரத்தில் போடவும். 2. அத்துடன் ஆரோரூட் பவுடர், தயிர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். 3. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சர்க்கரையை அதில் கொட்டி அடுப்பில் வைக்கவும். 4. சர்க்கரை கரைந்து, பாகாகக் கொதித்து வரும் 5. பாகு இருகி வரும்போது குங்குமம்பூவை சிறிது தண்ணீரில் கரைத்து, அதில் ஊற்றி இறக்கவும்…
-
- 0 replies
- 1.8k views
-
-
தக்காளி சாஸில் கோழி தேவையான பொருட்கள் : கோழி 1 கிலோ தண்ணீர் 4 கப் அரைத்த முந்திரி 150 கிராம் தக்காளி சா° 1/2 கோப்பை மிளகாய் வற்றல் 4 இஞ்சி, பூண்டு விழுது 2 தேக்கரண்டி தனியா தூள் 2 தேக்கரண்டி சீரகத் தூள் 2 தேக்கரண்டி மிளகாய் தூள் 2 தேக்கரண்டி எண்ணெய் 2 மேசைக்கரண்டி வறுத்த முந்திரி 10 உப்பு தேவைக்கேற்ப வேகவைத்து °லை° செய்த முட்டை- 2 செய்முறை : 1. 4 கோப்பை தண்ணீரில் கோழியை வேகவைக்கவும். 2. 4 கோப்பை தண்ணீர் சுண்டி, ஒரு கோப்பையாக மாறியவுடன் கோழியையும் மீதமுள்ள தண்ணீரையும் இறக்கி வைக்கவும். 3. எண்ணெயை சூடாக்கி, அதில் அரைத்த முந்திரி, தனியா தூள், சீரகத்தூள், மிளகாய்தூள், உப்பு, மிளகாய் வற்றல் இவற்றை சேர்த்து நன்ற…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிக்கன் பெல் பெப்பர் தேவையான பொருட்கள் : - கோழிக்கறி 1/4 கிலோ குடைமிளகாய் (பெல் பெப்பர்) 50 கிராம் பெரிய வெங்காயம் 50 கிராம் பச்சை மிளகாய் 10 கிராம் ஸோயா சாஸ் 1 தேக்கரண்டி மக்காச்சோள மாவு 50 கிராம் மைதா மாவு 50 கிராம் மிளகாய்த் தூள் தேவையான அளவு முட்டை 1 சர்க்கரை 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு தேவையான அளவு அஜினோமோட்டோ 1/4 தேக்கரண்டி செய்முறை : - வெங்காயத்தில் பாதியை வட்டமாகவும் மீதியை சிறு சிறு துண்டுகளாகவும் வெட்டிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயையும் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பிறகு குடை மிளகாயை நான்காகக் கீறிக்கொள்ள வேண்டும். கோழியில் எலும்பை நீக்கிவிட்டு சிறு சிறு து…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஈஸி முட்டை புலாவ் தேவையான பொருட்கள் புலாவ் அரிசி 500 கிராம் வெங்காயம் 3 முட்டை 4 பச்சை மிளகாய் 3 மஞ்சள் பொடி 1/4 தேக்கரண்டி உப்பு தேவைக்கேற்ப நெய் 2 மேஜைக் கரண்டி செய்முறை 1. வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். 2. உப்பு பச்சைமிளாகாய் மஞ்சள் பொடி ஆகியவற்றை முட்டையோடு சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும். 3. நெய் சூடானவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 4. பொன்னிறமானவுடன், முட்டை கலவையை சேர்த்து வதக்கவும். 5. முட்டை வேகும் போது நன்றாக கிண்டவும். 6. முட்டை வெந்து கட்டிகளானவுடன் இறக்கி வைக்கவும். 7. அரிசி எடுத்து உதிரியாக சாதம் செய்துக் கொள்ளவும். 8. சாதம் சூடாக இருக்கும்போது சமைத்த மு…
-
- 0 replies
- 1.9k views
-
-
முட்டை குருமா தேவையான பொருட்கள் : முட்டை 6 வெங்காயம் 6 பால் 1/4 கோப்பை முந்திரி 2 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் 8 தேங்காய் துறுவல் 1 மேஜைக்கரண்டி தனியா தூள் 3 மேஜைக்கரண்டி லவங்கம் 6 பட்டை 1 ஏலக்காய் 2 இஞ்சி 1 துண்டு மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி நெய் 3 மேஜைக்கரண்டி உப்பு தேவையான அளவு செய்முறை : 1.பச்சை மிளகாய், தேங்காய், தனியா தூள், ஏலக்காய், பட்டை, லவங்கம், இஞ்சி, மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். 2.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையின் வெள்ளைக் கருவை பிரித்தெடுத்து நன்றாக அடித்துக் கொள்ளவும். அத்துடன் மஞ்சள் கரு, பால் மற்றும் உப்பு சேர்க்கவும். 3.இந்தக் கலவை…
-
- 0 replies
- 2.4k views
-
-
மீன் ஊறுகாய் தேவையான பொருட்கள் மீன் (முள் நீக்கியது) - 1 கிலோ இஞ்சி - 125 கிராம் பூண்டு - 125 கிராம் கடுகு - 60 கிராம் மஞ்சள் பொடி - 1 மேஜைக்கரண்டி சர்க்கரை - 1 கோப்பை வினிகர் - 400 கிராம் மிளகாய் வற்றல் - 60 கிராம் சீரகம் - 35 கிராம் உப்பு - 2 மேஜைக்கரண்டி கடலை எண்ணெய் - 1/2 கிலோ மிளகாய்தூள் - 1 மேஜைக்கரண்டி செய்முறை 1. மீனை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2. உப்பு, மிளகாய்த்தூள் தடவி 1 மணிநேரம் ஊர வைக்கவும். 3. எண்ணெயை நன்றாக சூடாக்கி மீன் துண்டுகளை பொறித்தெடுக்கவும். 4. இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். 5. எண்ணெயை சூடாக்கி அரைத்த மசாலாவை நன்றாக வதக…
-
- 0 replies
- 1.5k views
-
-
இறால் - சைனீஸ் ஸ்டைல் இறால் - சைனீஸ் ஸ்டைல் தேவையான பொருட்கள் :- உரித்த இறால் - 500 கிராம் தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி மிளகாய் வற்றல் விழுது - 1 மேஜைக்கரண்டி சைனீஸ் உப்பு - 1 சிட்டிகை மோனோ சோடியம் குளுடோமேட் கார்ன்ஃபிளோர் - 4 மேஜைக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது - 2 ஙூ மேஜைக்கரண்டி முட்டையின் வெள்ளைப் பகுதி - 1 உப்பு - 1 தேக்கரண்டி தண்ணீர் - 4 மேஜைக்கரண்டி எண்ணெய் - 1 லிட்டர் செய்முறை :- முட்டையின் வெள்ளைப் பகுதி, 3 மேஜைக்கரண்டி கார்ன்ஃபிளோர், ஙூ தேக்கரண்டி உப்பு, தண்ணீர், எண்ணெய் இவற்றைச் சேர்த்து ஒரு கலவையைத் தயாரிக்கவும். அந்த கலவையில் இறாலை 20 நிமிடம் ஊர வைக்கவும். தக்காளி சாஸ், …
-
- 0 replies
- 2k views
-
-
] தேவையான பொருட்கள்: 8 சிக்கன் ட்ரம்ஸ்டிக் 3/4 கப் தயிர் 2 வெங்காயம் 2 தக்காளி 1 1/2" இஞ்சி 8 உள்ளி (வெள்ளை பூண்டு) 1/2 கப் பட்டர் (கொழுப்பு அதிகமானவங்க எண்ணெய் பாவியுங்கள்) 1 தே.க மஞ்சள் தூள் 1 1/2 தே.க மிளகாய் தூள் 1 தே.க காரம் மசாலா 1 தே.க khus khus 1 தே.க மல்லி 1 தே.க சின்ன சீரகம் 3 தே.க மின்ட் இலைகள் 3 கராம்பு 6 மிளகு செய்முறை: 1. தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், காரம் மசாலா தூள் & உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். சிக்கனை இந்த கலவையில் போட்டு நன்றாக கலக்கி 1 மணித்தியாலத்திற்கு ஊற வைக்கவும். (Marinate) 2. ஒரு சட்டியில் 2 மே.க பட்டரை சூடாக்கி, அதில் கராம்பு, மிளகு, Khus Khus, மல்லி & சீரகத்தை வறுக்கவும். ( Fry u…
-
- 13 replies
- 3.2k views
-