விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
சுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடர் மார்ச் 6 இல் ஆரம்பம் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மும்முனை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்கேற்கும் சுதந்திரக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் மும்முனைத் தொடர் கொழும்பில் இடம்பெறவுள்ளது. மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த கிரிக்கெட் போட்டித்தொடர் 18 ஆம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும். தொடரின் முதலாவது போட்டி இலங்கை - இந்திய அணிகளுக்கிடையில் மார்ச் மாதம் 6 ஆம் திகதி இடம்பெறும். http://www.virakesari.lk/article/30338
-
- 0 replies
- 181 views
-
-
மேலும் 2 மாதங்களுக்கு சானியா ஓய்வு சானியா மிர்சா - AFP டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் காயம் குணம் அடையாததால் அவரை மேலும் 2 மாதங்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில் சானியா மிர்ஸா காயமடைந்தார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் ஓய் வில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது காயம் குணம் அடையாததால் அவர் மேலும் 2 மாதங்கள் ஓய்வு எடுக்கவுள்ளார். இதுகுறித்து கிரேட்டர் நொய்டாவில் நேற்று சானியா கூறும்போது, “மேலும் 2 மாதங்கள் நான் ஓய்வு எடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். வலது மூட்டில் ஏற்பட்டு…
-
- 0 replies
- 543 views
-
-
சாஹலின் வெற்றியை அடுத்து லெக் ஸ்பின்னராகிறாரா அஸ்வின்? விஜய் ஹசாரே டிராபியில் குஜராத்துக்கு எதிராக லெக்ஸ்பின் (ரிஸ்ட்) வீசிய அஸ்வின். - படம். | ஆர்.ரகு. இந்திய ஒருநாள் போட்டி அணியிலிருந்து நீக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போதும் பரிசோதனை முறை பந்துவீச்சில் ஆரம்பம் முதலே சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலக்கட்டத்தில் அவர் ஆஃப் ஸ்பின்னை ஒரு திடீர் பந்தாகவே வைத்திருந்தார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் இரண்டு முனைகளிலும் இருவேறு பந்துகளில் வீச வேண்டியுள்ளதால் பந்து பெரும்பாலும் புதிதாகவே இருப்பதால் விரல்களால் ஸ்பின் செய்யும் வீச்சாளர்கள் குறைந்த ஓவர் போட்டிகளில் பழமையாகக…
-
- 0 replies
- 277 views
-
-
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் போலிங்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு கோப்புபடம்: டோவ் போலிங்கர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், இடதுகை வேகப்பந்துவீச்சாளருமான டக்கி போலிங்கர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். 36 வயதான போலிங்கர் கடந்த 2009ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமானார். இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள போலிங்கர் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்…
-
- 0 replies
- 205 views
-
-
52ஆவது சுப்பர் போல்: வென்றது பிலடெல்பியா ஈகிள்ஸ் தேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்கும் அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்குமிடையே நடைபெறும் சுப்பர் போலில், கடந்தாண்டுக்கான பருவகாலத்துக்கான போட்டியில் பிலடெல்பியா ஈகிள்ஸ் அணி வென்றது. தேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான பிலடெல்பியா ஈகிள்ஸ் அணியும் அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணியும் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு மினியோஸ்டா மினியோபோலிஸுள்ள ஐக்கிய அமெரிக்க பாங்க் அரங்கத்தில் மோதின. சுப்பர் போலின் 52ஆவது பருவகாலமாக அமைந்த இப்போட்டியில் பிலடெல்பியா ஈகிள்ஸ் அணியும் வலிந்த தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்ட…
-
- 0 replies
- 385 views
-
-
பிரிமியர் லீக் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி! பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றுள்ளது. பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரிமியர் லீக் போட்டி தரவரிசையில் புள்ளிகளின் அடிப்படையில் 2 ஆம் இடத்தில் உள்ள மான்செஸ்டா யுனைடெட் அணியும் ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணியும் மோதியுள்ளன. இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. அதனை தொடர்ந்து இடம்பெற்ற இறுதி பாதி ஆட்டத்தில் 55 மற்றும் 68 ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் ய…
-
- 2 replies
- 390 views
-
-
ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் 8வது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீராங்கனை ஹஜந்திகா அபேரத்ன தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இம்முறை ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இலங்கை ஒரு தங்கப்பதக்கத்தையும், 3 வெண்கலப்பதக்கங்களையும் வென்றுள்ளது. அதன்படி நீளம் பாய்தல் போட்டியில் ஜனக பிரசாத் விமலசிறியும், 800 மீற்றர்ஓட்டப் போட்டியில் நிமாலி லியனாரச்சியும், 400 மீற்றர் ஓட்டத்தில் உபமாலிகா ரத்னகுமாரியும் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர். இலங்கை ஆசிய உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் 3வது முறையாக கலந்துகொண்டுள்ளதுடன் ஆசிய உள்ளக மெய்வல்ல…
-
- 0 replies
- 204 views
-
-
சம்பியனானது அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் அவுஸ்திரேலிய உள்ளூர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 தொடராக பிக் பாஷ் லீக்கில், 2017/18ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான சம்பியனாக அடிலெய்ட் ஸ்ரைக்கஸ் தெரிவானது. அடிலெய்ட்டில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், ஹோபார்ட் ஹரிகேன்ஸை 25 ஓட்டங்களால் வென்றமையையடுத்தே அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் சம்பியனானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸின் அணித்தலைவர் ட்ரெவிஸ் ஹெட், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ், 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜக் வெதர்லான்ட் 115 (70), ட…
-
- 0 replies
- 237 views
-
-
தெ. ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் எய்டன் மார்க்ரம் உலகக் கோப்பைக்காக பட்டை தீட்டப்படுகிறார்! எய்டன் மார்க்கிராம் - படம் உதவி: கெட்டி இமேஜஸ் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்கு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இளம் வீரர் எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு உலகக்கோப்பையைப் போட்டியை மனிதில் கொண்டு மார்க்ரமை தென் ஆப்பிரிக்க வாரியம் தயார் செய்துள்ளது. சர்வதேசஅளவில் 2 போட்டிகள் மட்டுமே பங்கேற்ற அனுபவம் கொண்ட மார்க்ரம், 23 வயதில் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டாலும், உள்நாட்டில் நடந்த முதல் தரப்போட்டிகளில் மார்க்ரமின் செயல்பாடு சிறப…
-
- 0 replies
- 298 views
-
-
நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற இந்திய அணி! ஜூனியர் உலகக் கோப்பையில் அசத்தல் ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாகக் கோப்பையை வென்றது. Photo: Twitter/BCCI நியூசிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. பேட்டிங் தேர்வுசெய்த ஆஸ்திரேலிய அணிக்குத் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அந்த அணி 59 ரன்கள் சேர்ப்பதற்குள், 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் இஷான் பரோல் மற்றும் கமலேஷ் நகர்கோட்டி ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடிகொடுத்தனர். இதையடுத்து, 4-வது …
-
- 2 replies
- 652 views
-
-
டெஸ்ட் வாழ்வின் இறுதி நாளில் தோனி என்னிடம் கேப்டன்சியை வழங்கிய போது மறுத்தேன்: கங்குலி பகிர்வு கங்குலியின் கடைசி டெஸ்ட் போட்டியின் போது கேப்டன் தோனியும் கங்குலியும். - கோப்புப் படம். | எஸ்.சுப்பிரமணியம் சவுரவ் கங்குலி தனது கடைசி டெஸ்ட் போட்டியை நாக்பூரில் ஆடிய போது ஆட்டம் முடியும் தருணத்தில் கங்குலியை வழிநடத்துமாறு தோனி கேட்டுக் கொண்டார், அதனை ஏற்றுக் கொண்டார் கங்குலி, ஆனால் முன்னமேயே தன்னை கேப்டன்சி செய்யுமாறு தோனி கேட்டுக் கொண்டதையும் அதனை தான் மறுத்ததையும் தன் சுயசரிதையில் பதிவு செய்துள்ளார் சவுரவ் கங்குலி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2008-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்ட…
-
- 0 replies
- 386 views
-
-
500 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்த இலங்கை வீரர் இலங்கை பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இலங்கை- வங்கதேச அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வங்கதேசத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 513 ஓட்டங்களுக்கு ஆல் ஆவுட்டானது. இலங்கை பந்துவீச்சாளர் ரங்கன ஹெரத் இதில் 3 விக்கெட்களை கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்கள் வீழ்த்திய மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை ஹெரத் பெற்றுள்ளார். அவர் மொத்தமாக டெஸ்டில் 408 விக்கெட்களும், ஒருநாள் போட்டிகளில் 74 விக்கெட்களும், டி20 போட்டிகளில் …
-
- 0 replies
- 366 views
-
-
பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றத் தயாராகும் இலங்கையின் நட்சத்திர வீரர் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒரு வீரராக விளையாடுவதையும் பார்க்க பந்துவீச்சு ஆலோசகராக செயற்படுவது அணிக்கு பொருத்தமானது என இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவம் தீர்மானித்தால், எந்தவொரு தயக்கமும் இன்றி சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதற்கு தான் தயாராகவுள்ளதாக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான 34 வயதாகும் லசித் மாலிங்க கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு பாரிய சேவையாற்றிய முக்கிய வீரராவார். முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸுக்குப் பிற…
-
- 0 replies
- 425 views
-
-
இளம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ராகுல் திராவிட் போன்ற பயிற்சியாளர் தேவை; ரமீஸ் ராஜா வலியுறுத்தல் ராகுல் திராவிட் போல் ஒருவர் தேவை: ரமீஸ் ராஜா. - படம். | ராய்ட்டர்ஸ். நியூஸிலாந்தில் நடைபெறும் யு-19 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய இளம் வீரர்களிடம் பாக். இளம் வீரர்கள் 203 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தனது பார்வைகளை வெளியிட்டுள்ளார். இளம் இந்திய வீரர்களை வளர்த்தெடுப்பதில் ராகுல் திராவிடின் பங்கை விதந்தோதிய ரமீஸ் ராஜா, பாகிஸ்தானுக்கும் திராவிட் போல் ஒரு பயிற்சியாளர் தேவை என்பதை வலியுறுத்தினார். தோல்வியின் இடைவெளி அதிர்ச்சிகரமாக உள்ளது என்றார் ரமீஸ் ராஜா. “…
-
- 0 replies
- 172 views
-
-
நம்பமுடியாத ரன் அவுட்கள், ஸ்டம்பிங்குகள்: மேட்ச் ஃபிக்ஸிங்கா என பதறிய ஐசிசி! (விடியோ) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் டி20 போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஆச்சயத்துடன் கருத்து தெரிவித்திருப்பதும் போட்டியின் தன்மை மேட்ச் ஃபிக்ஸிங்குக்கு உகந்ததா என்று ஐசிசி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மனில் நடைபெற்ற அஜ்மன் ஆல் ஸ்டார்ஸ் லீக் என்கிற தனியார் டி20 போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது. இதில் துபாய் ஸ்டார் மற்றும் ஜார்ஜா வாரியர்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் புதிரான முறையில் …
-
- 0 replies
- 374 views
-
-
ஒரே போட்டியில் 1045 ரன்கள் குவித்து மும்பை பள்ளி மாணவர் சாதனை மும்பையில் 14-வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் இடையே நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் தனிஷ்க் கவாத் என்ற மாணவன் 1045 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளான். மும்பை: மும்பையில் 14-வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களிடையே நவி மும்பை கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதன் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் யஷ்வந்த்ராவ் சவான் லெவன் அணி சார்பாக விளையாடிய தனிஷ்க் கவாத் என்ற சிறுவன் 515 பந்துகளில் 1045 ரன்கள் குவித்து சாதனைப்படைத்துள்ளான். இதில் 149 பவுண்டரியும், 67 சிக்சரும் அடங்கும். இரண்டு நாட்கள் களத்தில் நின்ற…
-
- 0 replies
- 365 views
-
-
3 வருடங்களுக்குப் பிறகு தர்ஜினி சிவலிங்கத்துக்கு தேசிய அணியில் வாய்ப்பு வலைப்பந்தாட்ட உலகில் அதி சிறந்த சூட்டர் வீராங்கனை என்ற பெருமைக்குரியவரும் ஆசியாவிலேயே அதி உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையுமான இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம், சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு தேசிய வலைப்பந்தாட்ட குழாமில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 9ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 11ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இலங்கை அணியின் ஆரம்ப கட்ட குழாமுக்கான தெரிவுப் போட்டிகள் கடந்த வாரம் பண்டாரகம உள்ளக அரங்கில் இடம்பெற்றது. அதில் 30 வீராங்கனைகள் தேசிய வலைப்பந்து குழாமுக்காக தெரிவு செய்யப்பட்டனர். …
-
- 0 replies
- 339 views
-
-
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா வெற்றியை கொண்டாடும் இந்திய வீரர்கள் | படம்: Cricket World Cup ட்விட்டர் பக்கத்திலிருந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இந்திய அணி. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது அரை இறுதியில் கிறிஸ்ட்சர்ச் நகரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பிரித்வீ…
-
- 1 reply
- 312 views
-
-
2020 T20 உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியாவில்! 2020ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கான T20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதை, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி, பெண்களுக்கான தொடர் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரையிலும் ஆண்களுக்கான தொடர் அதே ஆண்டு அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரையும் நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முதலாவது உலகக் கிண்ண T20 போட்டித் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவின் எட்டு நகரங்களில் உள்ள பதின்மூன்று விளையாட்டு அரங்கங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. http://www.virakesari.lk/article…
-
- 0 replies
- 289 views
-
-
இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனை எதிர்கொள்ளவுள்ள யாழ் பத்திரிசியார் இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம் நடாத்தும் 2017ஆம் ஆண்டுக்கான பிரிவு ஒன்று கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகள் தெரிவாகியுள்ளன. மொறகஸ்முல்ல ஜனக ரனவக்க மைதானத்தில் நேற்று (25) இடம்பெற்ற தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் பலம் மிக்க அணிகளான ஸாஹிரா மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகளை வெற்றிகொண்டதன் மூலமே அவர்கள் இறுதி மோதலுக்கான வாய்ப்பைப் பெற்றனர். புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் ஸாஹிரா கல்லூரி, கொழும்பு போட்டியின் முதலாவது முயற்சியாக 14ஆவது நிமிடத்தில் ஸாஹிரா …
-
- 2 replies
- 356 views
-
-
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் ரொஜர் பெடரர் சம்பியனானார். அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியுள்ளார். மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் ரொஜர் பெடரர் nகுரோசிய வீரரான மரின் சிலிச்சை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் 6-2 – 7(7)-6(5) என்ற செட் கணக்கில் கைப்பற்றி சம்ப்pயன் பட்ட்ததினை கைப்பிறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/63862/
-
- 2 replies
- 409 views
-
-
வீரர்களுக்குள் நிற வேற்றுமை? சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிப் புகைப்படம்! ஜோஹன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்களுக்குள் நிற வேற்றுமை நிலவுகிறதா என்ற கேள்விகளை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வெற்றிப் புகைப்படம் ஒன்று எழுப்பியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணியானது ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற போதும், டெஸ்ட் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த வெற்றிற்குப் பின்னர் கோப்பையை கையில் வைத்துக் கொண்டு தென் ஆப…
-
- 0 replies
- 267 views
-
-
மதுசனின் சகலதுறை ஆட்டத்தோடு யாழ். மத்திய கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி 19 வயதின் கீழான டிவிஷன் – III பாடசாலை அணிகளான புத்தளம் புனித சேவியர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரின் (இரண்டு நாட்கள் கொண்ட) போட்டி சமநிலை அடைந்ததை அடுத்து முதல் இன்னிங்ஸ் வெற்றிக்கு சொந்தக்காரர்களாக யாழ் வீரர்கள் மாறியுள்ளனர். வெள்ளிக்கிழமை (26) யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி அடைந்த யாழ் மத்திய கல்லூரி அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை விருந்தினர்களான சேவியர் கல்லூரிக்கு வழங்கியிருந்தனர். இதன்படி முதலில் துடுப்பாடியிருந்த …
-
- 3 replies
- 428 views
-
-
அவுஸ்ரேலியா இங்கிலாந்து அணிகளுக்கான முதலாவது ஓடி நாளை ஆரம்பம் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள முதலாவது ஓடி போட்டி நாளை அவுஸ்ரேலியா மெல்பேர்ன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து அணி அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. இவ் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் அவுஸ்ரேலியா அணி வெற்றிபெற்றுள்ளதுடன் 1 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெறக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் சமநிலையில் முடிவடைந்துள்ளது. அதனால் டெஸ்ட் தொடரை அவுஸ்ரேலியா அணி கைப்பற்றியுள்ளது. இதனைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஓடி தொடரில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணி மோதவுள்…
-
- 8 replies
- 688 views
-
-
டி20 தொடர்: அணிக்கு திரும்பினார் ரெய்னா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா சுமார் ஓராண்டுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார். கடைசியாக அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு உடற்தகுதி பிரச்னைகள் காரணமாக அணிக்கு திரும்பாமல் நீடித்து வந்தவர், சமீபத்தில் சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். அத்துடன், உடற்தகுதிக்கான "யோ யோ' சோதனையிலும் தேர்ச்சி பெற்ற நிலையில் தற்போது அணிக்குத் திரும்பியுள்ளார். அவரோடு, இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட…
-
- 0 replies
- 199 views
-