Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் ஆனார் வோஸ்னியாக்கி வோஸ்னியாக்கி | படம்: ஏஎப்பி. ஆஸ்திரேலியாவில் நடந்து வந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பல முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய வோஸ்னியாக்கி முதல் முறையாகப் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் மெல்போர்னில் நடந்து வருகிறது.மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்றும் நடந்த இறுதி ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கியும்,…

  2. தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்: பும்ரா உள்பட 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியா களம் இறங்குகிறது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா உடன் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கைக்கு எதிராக மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடி இருக்கிறது. டெஸ்ட் தொடர் முடிந்த உடன் ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 10-ந்தேதி 17-ந்தேதி வரையும், டி20 கிரிக்கெட் தொடர் 20-ந்தேதி உடன் 24-ந்தேதி வரையும் நடக்கிறது. அதன்பின் இந்திய அணி 28-ந்தேதி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. 30-ந்தேதி ம…

  3. பிரிவு இரண்டின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி பிரிவு இரண்டின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 13 வயதிற்கு உட்பட்ட பிரிவு இரண்டு (டிவிஷன்-2) அணிகளுக்கு இடையிலான 2017/18 பருவகாலப் போட்டித்தொடரின் அரையிறுதிப் போட்டியில் கொழும்பு, மஹாநாம கல்லூரி (B) அணியினை, அன்ரன் அபிஷேக்கின் சகலதுறை ஆட்டத்தின் துணையுடன் வெற்றி கொண்ட யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஒரு நாளில் 4 இன்னிங்ஸ்களைக் கொண்டமைந்த இந்தப் போட்டியானது அநுராதபுரம் மாவட்ட கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியி…

  4. பங்களாதேஷ், ஸிம்பாப்வே, மற்றும் இலங்கை கலந்துகொள்ளும் முக்கோண ஒருநாள் போட்டி செய்திகள் முக்கோண ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் ஸிம்பாப்வே ஆகிய நாடுகளை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்தப் போட்டிகள், எதிர்வரும் 15ஆம் திகதி திங்களன்று ஆரம்பமாகின்றன. இறுதிப் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும். 1. திங்கள்கிழமை 15.1.2018 பங்களாதேஷ் vs ஸிம்பாப்வே Shere Bangla National Stadium, Mirpur பகல் இரவு போட்டி மத்திய ஐரோப்பிய நேரம் 7.00 2. புதன்கிழமை 17.1.2018 இலங்கை vs ஸிம்பாப்வே Shere Bangla National Stadium, Mirpur பகல் இரவு போட்டி மத்திய ஐரோப்பிய நேரம் 7.00 …

  5. கம்பீர், தவான் வெளியே...சர்ஃபராஸ் உள்ளே.. அணிகளின் பிளான் என்ன? ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பகுதி -1 #IPLAuction Chennai: ஐ.பி.எல் தொடரின் 11-வது சீசன் இப்போதே தொடங்கிவிட்டது. ஸ்டார் broadcaster ஆகிவிட, retention கூட ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி, இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் கம்பேக் கொடுத்துள்ளதால், இப்போதே விசில்கள் பறக்கத்தொடங்கிவிட்டன. 4-ம் தேதி வெளியிடப்பட்ட தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில், சில ஆச்சர்யங்கள், சில அதிர்ச்சிகள்! #IPLAuction 2 முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த கௌதம் கம்பீர் கொல்கத்தா அணியா…

  6. கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு கிரிக்கெட்டில் சாதனைகள் புரிந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் டோனிக்கு, இந்த ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. #PadmaAwards #dhoni #Padmabushan புதுடெல்லி: ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்…

  7. வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடும் இலங்கையர்! இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு இலங்கையர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இலங்கையர் விளையாடியுள்ளார். 19 வயதிற்குட்பட்ட இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரராக களமிறங்கும் சவின் பெரேரா இலங்கையை சேர்ந்தவர் ஆவார். கொழும்பில் பிறந்த சவின் பெரேரா 13 வயதில் பிரித்தானியாவில் குடியேறினார். அங்கு அவர் கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய திறமை காரணமாக 19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு தெரிவாகியுள்ளார். கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் சவ…

  8. பாடசாலை கால்பந்தின் காலிறுதி மோதல்களில் உள்ள அணிகள் இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம் நடத்தும் 2017 ஆம் ஆண்டுக்கான பிரிவு ஒன்றுக்கான கால்பந்து தொடரின் குழு மட்டப் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், 24 ஆம் திகதி (புதன்கிழமை) காலிறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இம்முறை போட்டித் தொடரில் மொத்தமாக 14 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டியிட்டன. இதில் கடந்த முறை பிரிவு இரண்டுக்கான போட்டிகளில் முறையே முதல் இரண்டு இடங்களையும் பெற்ற திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகள் இம்முறை பிரிவு ஒன்றுக்கான போட்டிகளுக்கு தரமுயர்த்தப்பட்டன. குழு நிலையாக இ…

  9. இளையோர் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 9 ஆம் இடத்துக்கான கோப்பைப் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்ட இலங்கை இளையோர் அணி, விக்கெட் காப்பாளர் நிஷான் மதுஷ்கவின் அபார சதத்தின் உதவியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் கடந்த 13 ஆம் திகதி முதல் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இதில் D பிரிவில் இடம்பெற்ற இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் மற்றம் பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வியைத் தழுவி, காலிறுதியில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டது. …

  10. வியக்க வைக்கும் விராட் கோலி! 'கேப்டன் கூல்' என்றழைக்கப்பட்ட எம்.எஸ்.தோனிக்கு நேர் எதிரானவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. ஆட்டத்தின்போது பரபரப்பான நிமிடங்களில் பதற்றமான உணர்ச்சியை இவர் வெளிப்படுத்துவார். சில சமயங்களில் கோபமும் கொள்வார். இதனால், ரசிகர்களில் சிலருக்கு இவர் மீது வருத்தம் உண்டு. ஆனாலும், தனது அபார ஆட்டத் திறனால் அணியின் ஸ்கோரை சரசரவென இவர் உயர்த்திவிடுவதாலும், வெற்றிக்காக கடும் உழைப்பை செலுத்தி வருவதாலும் கோலி மீது வருத்தம் கொள்ளும் ரசிகர்களும் அவரைப் பாராட்டி பின்தொடர்ந்து வருபவர்களாக மாறிவிடுகின்றனர். அப்படி, கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட்டில் தனிப்பட்ட முறையிலும்…

  11. பார்சிலோனாவை விட்டுச் செல்கிறார் மஷரானோ ஆர்ஜென்டீனாவின் தேசிய கால்பந்தாட்ட அணியின் பின்கள வீரரான ஸ்கேவியர் மஷரானோ, ஏறத்தாழ எட்டு ஆண்டுகளின் பின்னர் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவிலிருந்து விலகவுள்ளதுடன், சீன சுப்பர் லீக் அணியான ஹெபெய் சைனா போர்ச்சுனேட் அணியுடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலிடமிருந்து 17 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு 2010ஆம் ஆண்டு பார்சிலோனாவால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்கேவியர் மஷரானோ இவ்வாரம் பார்சிலோனாவை விட்டு விலகவுள்ளார். பார்சிலோனாவுக்காக 334 போட்டிகளில் விளையாடி ஒரு கோலைப் பெற்ற ஸ்கேவியர் மஷரானோ, நா…

  12. இறுதிப் போட்டியில் மன்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கால்பந்தாட்ட லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதிபெற்றுள்ளது. பிறிஸ்டல் சிற்றியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியின் முடிவில், 5-3 என்ற மொத்த கோல்கள் அடிப்படையில் முன்னிலை பெற்றதைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றது. தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த மன்செஸ்டர் சிற்றி, நேற்று இடம்பெற்ற போட்டியின் 43ஆவது நிமிடத்தில் லெரோய் சனே பெற்ற கோலின் மூலமாக முன்னிலை பெற்றது.…

  13. மாலிங்கவைப் போல பந்துவீசும் தமிழ்நாட்டு வீரர் அதிசயராஜ் கிரிக்கெட் விளையாட்டில் வழக்கத்துக்கு மாறான பந்துவீச்சுப் பாணியைக் கொண்டவர்கள் எப்போதும் ரசிகர்களை மைதானத்துக்கு ஈர்ப்பவர்கள். மேற்கிந்திய தீவுகளின் ஜொயல் கார்னர், கொலின் க்ரொப்ட் முதல் இலங்கையின் லசித் மாலிங்க உட்பட தற்போது உருவெடுத்து வருகின்ற இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா வரை வித்தியாசமான பாணியில் பந்துவீசுபவர்களைப் பார்ப்பதற்கான ஆர்வம் எப்போதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகம், அதேநேரம் சுழல் பந்துவீச்சில் போல் ஆடம்ஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். இன்னும் எவ்வளவோ பந்துவீச்சாளர்கள் மைய நீரோட்டத்துக்கு வராமலேயே திறமையான பந்துவீச்சாளர்களாக…

  14. இலங்கையிலிருந்து புறப்படவுள்ள பிபா கிண்ணம் பிபா உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்­ணத்தை உலகம் பூரா­கவும் கொண்டு செல்லும் பய­ணத் திட்டத்தின் முத­லா­வது நாடாக இலங்கை திகழ்­கின்­றது. அந்தவகையில், பிபா உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்ணம் நாளை இலங்­கைக்கு எடுத்துவரப்படவுள்ளது. 21ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் இந்த வருடம் ஜூன் 14ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வெற்றிக் கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் நான்காவது முறையாக இடம்பெறும் இந்த வருட பயணம் இலங்கையில் இருந்து ஆரம்பிக்கின்றது. மொத்தம் 54 நாடு­க­…

  15. உலகின் பணக்கார கால்பந்து கிளப்பாக மான்செஸ்டர் யுனைடெட் அணி தேர்வு டெலாய்ட் நிறுவனம் வருமானம் அடிப்படையில் உலகின் தலைசிறந்த பணக்கார கால்பந்து கிளப்-ஐ தேர்வு செய்தது. இதில் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் மான்செஸ்ர் யுனைடெட் அணி 2-வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது. ரியல் மாட்ரிட் 2-வது இடத்தையும், பார்சிலோனா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் கிளப் 10-வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது. 2016-17 சீசனில் ஈட்டிய வருமானம் அடிப்படையில் கிளப்புகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. யூரோவில் கொடுக்கப்பட்டுள்ளது. 1. மான்செஸ்டர் யுனைடெட் (676.3 மில்லியன்) 2. ரியல் …

  16. கேப்டனாக கோலி நீண்ட காலம் நீடிப்பார் என்று தோன்றவில்லை: தெ.ஆ. முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கருத்து விராட் கோலி. - படம். | ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவின் வெற்றிகரமான கேப்டனான கிரேம் ஸ்மித், கோலியின் அணுகுமுறை அவரை நீண்ட கேப்டன்சி தெரிவாக வைத்திருக்க முடியுமா என்பதை உறுதி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். கோலி அடிக்கடி அணியை மாற்றுவதும், தன் மனம்போன போக்கில் முடிவுகளை எடுப்பதும் பல விமர்சனங்களை தருவித்துள்ளது. கிரிக்கெட் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா, பிசிசிஐ-யில் கோலியின் அதிகாரம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். கோலியை எதிர்த்து அவரைக் கண்டித்து அடக்கும் பயிற்சியாளர், நிர…

  17. 47-0ல் இருந்து 96-க்கு ஆல்அவுட்: 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ஆஸி. ஸ்பின்னர்! - வீடியோ ஜூனியர் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. Photo: Twitter/ICC நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாகக் கேப்டன் ஜேசன் சங்கா 58 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பாம்பர், பென்னிங்டன் மற்றும் ஜேக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 128 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, வெற்றிபெற்று அரையிற…

    • 1 reply
    • 181 views
  18. இரவு விடுதியில் ரசிகரை தாக்கியதால் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த கதி!!! இரவு விடுதி ஒன்றில் ரசிகரை தாக்கிய சம்பவம் தொடர்பாக பிறிஸ்ரோல் நீதவான் நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளித்த பின்னரே நியூஸிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணியில் இணைய முடியும் என்று சகலதுறை ஆட்டவீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். 28 வயதான பென் ஸ்டோக்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் பிறிஸ்ரோல் இரவு விடுதி ஒன்றில் ரசிகரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகளுக்கு முகம்கொடுத்துள்ளார். அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி விளக்கமளிப்பதற்காக பிறிஸ்ரோல் நீதவான் நீதிமன்றில் பென் ஸ்டொக்ஸ் ஆஜராகவுள்ளார். இந்நிலையில் "நீதிமன்றில் அஜராகும் வரை அணியின்…

  19. முதல் டி 20 ஆட்டம் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி சான்ட்னர் பந்தில் ஸ்டெம்பிங் ஆன பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது. - படம்: ஏஎப்பி பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெலிங்டனில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 5.4 ஓவர்களில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து கடும் சரிவை சந்தித்தது பாகிஸ்தான் அணி. தொடக்க வீரர்களான பஹர் ஸமான் 3, உமர் அமின் ரன் ஏதும் எட…

  20. செய்தித்துளிகள்: லண்டனுக்கு சென்ற உலகக் கோப்பை டிராபி! சென்னையில் நடைபெற்று வரும் மெக்பெரன் கோப்பைக்கான தேசிய கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை எப்சி பி - பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ஜெரின் 2 கோல்களும், தவா ஒரு கோலும் அடித்தனர். இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் ஜகார்த்தா நகரில் இன்று தொடங்குகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேஷியாவின் ஹன்னா ரமாதினியுடன் மோதுகிறார். ஆடவர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசியாவின் ஜூல்பட்லி ஜூல்க…

  21. தோல்வியை வார்த்தைகளால் மறைப்பவர் அல்ல கோலி: தோனி குறித்து ஆகாஷ் சோப்ரா சூசகம்? கோலி, தோனி - கோப்புப் படம். | விவேக் பெந்த்ரே. தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி சந்தித்த தோல்வி வழக்கமானதோ, எதிர்பார்க்கப்பட்டதோ அல்ல என்று முன்னால் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் இது பற்றி ஆய்ந்து எழுதியுள்ளார், அதில் விராட் கோலி தோல்விகளை வார்த்தைகளால் மறைப்பவர் அல்ல என்று கூறியதோடு முன்னாள் கேப்டன் தோனி அடிக்கடி பயன்படுத்தும் இரண்டு விஷயங்களை அவர் பெயரைக் குறிப்பிடாமல் சூசகமாகக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். …

  22. ஆரம்பமும் முடிவும் மும்பையில் ! ஏப்ரல் 7 முதல் மே 27 வரை ஐ.பி.எல். கொண்டாட்டம் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முதல் மே மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்ப போட்டியும் இறுதிப் போட்டியும் இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் நடத்தப்படும் ஐ.பி.எல். இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் 10 ஆண்டுகளை சிறப்பாக கடந்துள்ளது. 11 ஆவது சீசன் இந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்திருந்தன. அதில் வீ…

  23. லா லிகா: டெபோர்டிவோ அணியை 7-1 என துவம்சம் செய்தது ரியல் மாட்ரிட் ரொனால்டோ, கரேத் பேலேயின் சிறப்பான ஆட்டத்தால் டெபோர்டிவோ அணியை 7-1 என வீழ்த்தியது ரியல் மாட்ரிட். #Laliga #garethBele #Ronaldo #realMadrid லா லிகா கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் புகழ்வாய்ந்த ரியல் மாட்ரிட், டெபோர்டிவோ அணியை எதிர்த்து விளையாடியது. இந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி சொந்த மைதானத்தில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் சாம்பியன் பட்டத்தை இழக்கும் நிலையில் உள்ளது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண…

  24. தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடும் பார்சிலோனா: ரியல் பெட்டிஸ் அணியை 5-0 என வீழ்த்தியது ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றும் வரும் கால்பந்து லீக் போட்டியில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையுடன் பார்சிலோனா பயணம் செல்கிறது. #Laliga #Barcelona லா லிகா தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா, ரியல் பெட்டிஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது. சொந்த மைதானத்தில் அசுர பலத்துடன் விளையாடிய ரியல் பெட்டிஸ் அணி முதல் பாதி நேரம் வரை பார்சிலோனா அணியை கோல் அடிக்க விடவில்லை. 2-வது பா…

  25. ஆஸ்திரேலிய ஓப்பன் பதக்கம் யாருக்கு? - கலக்கத் தயாராகும் புதுமுகங்கள் வருடம் தொடங்கினாலே, டென்னிஸ் ரசிகர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஒரு வருடத்தின் டென்னிஸ் போட்டிகளை பிள்ளையார்சுழி போட்டு தொடங்கிவைப்பது ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடர். கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் தொடர் இன்று தொடங்கி (ஜனவரி 15), ஜனவரி 28-ம் தேதி வரை நடக்கிறது. அழகிய மெல்போர்ன் நகரில் நடைபெறும் இந்தத் தொடரில் உலகின் 49 நாடுகளிலிருந்து 256 வீரர்கள் பங்கேற்கின்றனர். 50 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பரிசுத்தொகையாகக்கொண்ட வருடத்தின் மாபெரும் முதல் கிராண்ட்ஸ்லாம், வீரர்களின் அந்த வருடத்துக்கான டென்னிஸ் பயணத்தைக் கணிப்பதாகவே அமையும். இந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.