விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7849 topics in this forum
-
பிராட்மேன், லாரா, சச்சினை பின்னுக்குத்தள்ளி விராட் கோலி சாதனை! இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கி நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய், விராட் கோலி ஜோடி 3- வது விக்கெட்டுக்கு 283 ரன்கள் குவித்தது. முதல்நாள் ஆட்டநேர இறுதியில் முரளி விஜய், 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது கோலி 156 ரன்களுடன் களத்தில் நின்றார். இதையடுத்து 2-ஆம் நாளில் தொடர்ந்து பேட் செய்த…
-
- 2 replies
- 606 views
-
-
கோலி 105 இன்னிங்ஸ்களில் 5,000 டெஸ்ட் ரன்கள்: இன்னமும் சுனில் கவாஸ்கர்தான் முதலிடம் விராட் கோலி. - படம். | சந்தீப் சக்சேனா. இந்திய கேப்டன் விராட் கோலி இன்று இலங்கைக்கு எதிரான டெல்லி டெஸ்ட்டில் 5,000 ரன்கள் மைல்கல்லை எட்டி சாதனை படைத்தார். விராட் கோலி இதனை 105 இன்னிங்ஸ்களில் எடுத்துள்ளார், இதன் மூலம் விரைவில் 5,000 ரன்கள் எடுத்த 4-வது வீரரானார் விராட் கோலி. அதே போல் 3 வடிவங்களிலும் 16,000 ரன்களைக் கடந்தார் விராட் கோலி. சுரங்க லக்மல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி இந்த மைல்கல்லை எட்டினார் கோலி. அதே போல் 5,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய 11-வது இந்திய வீரரும் ஆனார். …
-
- 1 reply
- 279 views
-
-
அஷ்வின் உலகின் தலைசிறந்த ஸ்பின்னரா...? எண்கள் சொல்லும் உண்மை! #Analysis #VikatanExclusive #INDvSL Chennai: வார்னேவால் முடியவில்லை... முரளிதரனால் முடியவில்லை... வாசிம் அக்ரம், மெக்ராத், டேல் ஸ்டெய்ன் எவராலும் முடியவில்லை. அதிவேகமாக 300 விக்கெட் எடுத்த பௌலர் என்ற டெனிஸ் லில்லியின் சாதனையை எவராலும் முறியடிக்க முடியவில்லை. 1981-ல் அரங்கேறிய அந்தச் சாதனையை சுழல் ஜாம்பவான்கள் என்று புகழப்பட்டவர்களாலும், வேகச் சூறாவளிகள் என்று வர்ணிக்கப்பட்டவர்களாலும் அசைக்க முடியவில்லை. கடந்த 24-ம் தேதி நாக்பூரில் அந்த 36 ஆண்டுகாலச் சாதனையை முறியடித்துவிட்டார் ரவிச்சந்திரன் அஷ்வின். 54 போட்டிகளில் 300 விக்கெட்டுகள். அந்த மைல்கல்லை எட்டிவிட்டார். டெனிஸ…
-
- 0 replies
- 548 views
-
-
அது வதந்தி நம்ப வேண்டாம் பாகிஸ் தான் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் குறித்து சமூக வலைத்தளத்தில் திடீரென பரபரப்பான தகவல்கள் பரவியுள்ளன. பயிற்சியாளருடனான மோதலால் பாகிஸ்தான் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் திடீரென பரபரப்பான தகவல்கள் பரவின. இதையடுத்து அவர் டுவிட்டரில் காணொளி ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் ‘கடவுளின் அருளால் நான் நலமுடன் நன்றாக இருக்கிறேன். சமூக வலைத்தளத்தில் என்னை பற்றி வந்த தகவல்கள் எல்லாமே தவறானவை. அதை யாரும் நம்ப வேண்டாம். இது போன்ற வதந்திகளை தயவு …
-
- 0 replies
- 564 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சயீத் அஜ்மல் ஓய்வுபெற்றார் சயீத் அஜ்மல் - AFP சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் சயீத் அஜ்மல் (வயது 40). 35 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 178 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும் 113 ஒருநாள் போட்டிகளில் 184 விக்கெட்களையும், 64 டி20 போட்டிகளில் 85 விக்கெட்களையும் அவர் வீழ்த்தியுள்ளார். 2014-ம் ஆண்டு இலங்கையில் நடந்த கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இவரது பந்துவீச்சு முறையில் சந்தேகம் இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் …
-
- 0 replies
- 183 views
-
-
ஹர்பஜன் சிங் அளவுக்கு அஸ்வின் தாக்குதலாக வீசுவதில்லை: ஹெய்டன் கருத்து அஸ்வின், ஹர்பஜன் சிங். - கோப்புப் படம். | கே.பாக்யபிரகாஷ். ஹர்பஜன் சிங் அளவுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தாக்குதல் பவுலர் அல்ல என்று ஆஸ்திரேலிய முன்னாள் தாக்குதல் தொடக்க வீரர் மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார். “புள்ளி விவரங்கள் எப்போதும் பொய்த்தோற்றத்தை அளிக்கும். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வினின் மைல்கல் அவர் மீதான மதிப்பை அதிகரித்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகள் அவர் ஆடினாலும் இவர் காலத்தின் கிரேட் வீரர்களில் ஒருவராக அஸ்வின் நினைவுகூரப்படுவார். ஹர்பஜன் போலவே அஸ்வினின் பந்து வீச்சுத் திறமை அபாரமானதுதான், ஆனால் ஹர்பஜன் அளவுக்கு அஸ்வின் தாக்குதல் பவுலர் அல்ல…
-
- 0 replies
- 306 views
-
-
அதிவேக 300 ரன்கள்: தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ மரைஸ் உலக சாதனை மார்கோ மரைஸ். - படம். | ட்விட்டர். முதல் தர கிரிக்கெட் போட்டியில் அதிவேகமான 300 ரன்களை எடுத்து தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ மரைஸ் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். 24 வயதான மார்கோ மரைஸ் 191 பந்துகளில் 300 ரன்கள் விளாசி இந்தச் சாதனையைச் செய்துள்ளார், முன்னதாக சார்லி மெக்கார்ட்னி என்ற ஆஸ்திரேலிய வீரர் 221 பந்துகளில் அடித்த முச்சதமே சாதனையாக இருந்தது. இவர் நாட்டிங்கம் அணிக்கு எதிராக இந்தச் சாதனையை நிகழ்த்தினார். 96 ஆண்டுகளாக இருந்து வந்த சாதனையை முறியடித்தார் காட்டடி மார்கோ மரைஸ். ஈஸ்ட் லண்டனில் நடைபெற்ற உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டியில் பார்டர்…
-
- 0 replies
- 456 views
-
-
சோதனை செய்தால் 90 சதவீத ஸ்பின்னர்கள் தோல்வியடைந்து விடுவார்கள்: ஐ.சி.சி. மீது அஜ்மல் கடும் தாக்கு பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அஜ்மல் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் ஐ.சி.சி. மீது கடுமையாக தாக்கியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் சயீத் அஜ்மல். 40 வயதாகும் இவர் 2008-ம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரின்போது பாகிஸ்தான் அணியில் அறிமுகமானார். 2011-ம் ஆண்டில் இருந்து மிஸ்பா-உல்-ஹக் கேப்டன் பதவியின் கீழ் முக்கியமான பந்து வீச்சாளராக திகழ்ந்தார். 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளார். …
-
- 0 replies
- 393 views
-
-
என்னை கல்யாணம் செய்து கொள்வீர்களா?: ரசிகர் கேள்விக்கு மரியா ஷரபோவாவின் ரியாக்சன் துருக்கியில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியின்போது ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவாவை நோக்கி ரசிகர் ஒருவர் என்னை திருமணம் கொள்வீர்களா? என்று கேட்டதற்கு அவரது ரியாக்சனைப் பார்ப்போம். ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. உலகளவில கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். டென்னிஸ் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதா…
-
- 0 replies
- 434 views
-
-
டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கிறது நாளை நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்குகிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வெலிங்டனில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது. சர்வதேசக் கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் நான்காமிடத்தில் நியூசிலாந்து இருப்பதுடன், எட்டாமிடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் காணப்படுகின்ற நிலையில் இத்தொடரின் முடிவு தரவரிசையில் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்தாது என்றபோதும் 1995ஆம் ஆண்டு பெப்ரவரிக்கு பிறகு நியூசிலாந்தில் டெஸ்ட் போட்டியொன்றை வெல்லாத மேற்கிந்தியத் தீவுகள், 22 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிபெற எதிர்பார்க்கிறது. மறுப…
-
- 9 replies
- 720 views
-
-
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குறித்து ருசிகர விவாதம் மத்தியபிரதேசத்தில் உள்ள புலிகள் சரணாலயத்திற்கு சென்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடர்பான புகைப்படங்களை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அஸ்வின் வெளியிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், சக வீரர் விஜய் சங்கருடன் மத்தியபிரதேசத்தில் உள்ள புலிகள் சரணாலயத்திற்கு சென்றார். அங்கு பாதுகாப்பு வாகனத்தில் பயணித்து புலிகளை பார்த்து ரசித்தனர். அது தொடர்பான புகைப்படங்களை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அஸ்வின் வெளியிட்…
-
- 0 replies
- 272 views
-
-
ட்விட்டரிலும் மோதல்: மிட்செல் ஜான்சனை ‘ப்ளாக்’ செய்த கெவின் பீட்டர்சன் ஜான்சன், பீட்டர்சன். - படம். | ராய்ட்டர்ஸ் களத்தில் தங்களிடையே பல மோதல்களைக் கண்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ஆகியோருக்கிடையே ட்விட்டரிலும் மோதல் தொடர்கிறது. 2014 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 5-0 என்று தோல்வி தழுவியதையடுத்து பலரது கிரிக்கெட் வாழ்க்கை இங்கிலாந்து அணியில் முடிவுக்கு வந்தது, அதில் குறிப்பிடத்தகுந்தவர் கெவின் பீட்டர்சன். இந்நிலையில் கெவின் பீட்டர்சன், மைக்கேல் வான் ஆகியோர் நடப்பு ஆஷஸ் தொடரில் வர்ணனை செய்து வருகின்றனர். அவர்கள் வர்ணனையை கேலி செய்யும் விதமாக மிட்…
-
- 0 replies
- 321 views
-
-
சச்சின் டெண்டுல்கர் அணிந்த 'நம்பர் 10' ஜெர்சிக்கு ஓய்வு? 2011 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸுக்கு கேட்ச் எடுத்த சச்சின் டெண்டுல்கர். - படம்.| ஏ.எப்.பி. சச்சின் டெண்டுல்கர் என்றால் நம்பர் 10; நம்பர் 10 என்றால் சச்சின் டெண்டுல்கர் என்று அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அவருடன் இணைந்திருப்பது அவர் அணிந்த நம்பர் 10 சீருடை. ஒருகாலத்தில் 99 என்ற எண்ணுடைய சீருடையை ஒருநாள் போட்டிகளில் அணிந்த சச்சின் டெண்டுல்கர் பிறகு அர்ஜெண்டீன கால்பந்து மேதை டீகோ மாரடோனாவின் தாக்கத்தில் நம்பர்10 என்ற சீருடையை அணிந்தார். அதோடு மட்டுமல்லாமல் 'Ten'dulkar' என்று அவர் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டதும் ஒரு காரணம்…
-
- 0 replies
- 500 views
-
-
ரஷ்யா 2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டம் உத்தியோகபூர்வ சுவரொட்டி அறிமுகம் ரஷ்யாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (பீபா) உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னிட்டு உத்தியோகபூர்வ சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது. உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான குலுக்கல் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்த அழகிய சுவரொட்டி அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஓவியர் இகோர் குரோவிச்சினால் வடிவமைக்கப்பட்ட இந்த சுவரொட்டியின் மத்தியில் ரஷ்யாவின் முன்னாள் கோல்காப்பாளர் லெவ் யாஷினின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. இவர் பெலன…
-
- 0 replies
- 287 views
-
-
விளையாட்டு கண்ணோட்டம் இலங்கை கிரிக்கெட் அணியின் மோசமான வரலாற்றுத் தோல்வி, கால்பந்து நடுவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் சர்வதேச அளவில் இடம்பெற்ற மிகப் பெரிய விருது வழங்கும் விழாக்கள் என்பன தொடர்பிலான தகவல்களுடன் வரும் இவ்வார விளையாட்டு கண்ணோட்டம் நிகழ்ச்சி.
-
- 0 replies
- 777 views
-
-
தேசிய கிரிக்கெட் அணிக்கு விளையாடிய முதல் மட்டக்களப்பு பெண் ஐடா எமது நாட்டில் மிகவும் ஜனரஞ்சகமான விளையாட்டாக காணப்படும் கிரிக்கெட்டில் தனது குறுகிய கால கடின பயிற்சிகள் மூலம் கிழக்கிலங்கையிலிருந்து வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தெரிவு செய்யப்பட்டு, இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்த மட்டு நகர், நாவற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த நொபெட் ஜோன்சன் ஜடா குறித்த பார்வையே இது.
-
- 0 replies
- 365 views
-
-
காயத்தின் தீவிரம் என்னால் எழுந்து நடக்க முடியுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியது: ரோஹித் சர்மா ரோஹித் சர்மா - படம். | பிடிஐ நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்குக் காரணம் அந்த அணி வீரர்கள் தேவையற்ற ஷாட்களை ஆடியதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், தன் சதம், டெஸ்ட் கிரிக்கெட் மீதான தன் தீராத நேயம் ஆகியவை பற்றியும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். “தனிப்பட்ட முறையில் இந்த நூறு எனக்கு முக்கியமானது. கிட்டத்தட்ட 500 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறேன். இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தேன், அதனால் ரன்கள் ஸ்கோர் செய்ய முடிந்தது எனக்கு திருப்தியைத…
-
- 0 replies
- 283 views
-
-
பெயர்: விராட் கோலி... வேலை: செஞ்சுரி அடிப்பது... ஹாபி: ரெக்கார்ட் பிரேக்கிங்! Chennai: ஜூலை 21, 2016 - ஆன்டிகுவா. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ். 28-வது ஓவர், புஜாரா அவுட். களமிறங்குகிறார் கேப்டன் விராட் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் கால் பதித்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருந்தன. 41 போட்டிகளில் 12 அரை சதங்களும், 11 சதங்களும் அடித்திருந்தார். 169 ரன்தான் அவரது அதிகபட்சம். ஆனால், ‘டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்' என்ற அந்தஸ்து அவருக்கு இல்லை. சில நல்ல இன்னிங்ஸ்கள் ஆடியிருந்தாலும், ஒரு நாள் போட்டிகளில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்ததுபோல், டெஸ்ட் அரங்கில் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. காரணம், 200 என…
-
- 0 replies
- 514 views
-
-
ஆஷஸ் தொடருக்கா சென்றார் பென் ஸ்டோக்ஸ்?: ரசிகர்களின் ஆர்வமும் ஏமாற்றமும்! பென் ஸ்டோக்ஸ் - கோப்புப் படம். பிரிஸ்பன் தோல்விக்குப் பிறகு நடப்பு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தைக் காப்பாற்றும் ஒரே மீட்பர் பென் ஸ்டோக்ஸ் என்ற கருத்து ரசிகார்களிடையே பெரிதும் பரவியுள்ள நிலையில், நேற்று லண்டன் விமானநிலையத்தில் பென் ஸ்டோக்ஸ் இருப்பதான புகைப்படம் ஆஷஸுக்குத்தான் அவர் செல்கிறார் என்ற ஊகங்களையும், ஆர்வங்களையும் ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியது. லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்தில் பென்ஸ்டோக்ஸ் பெட்டி படுக்கையுடன் புறப்படத் தயாராகும் புகைப்படம் ஒருவேளை பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை மீட்க ஆஷஸ் தொடருக்குத்தான் செல்கிறாரோ என்ற ஆர்…
-
- 0 replies
- 356 views
-
-
ஜானி பேர்ஸ்டோ - பேங்க்ராப்ட் ‘தலைமுட்டு’ சர்ச்சை: இங்கிலாந்து பயிற்சியாளர் பெய்லிஸ் காட்டம் இங்கிலாந்து பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ். - படம். | ஏ.எஃப்.பி. பெர்த்தில் கடந்த மாதம் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் பேங்கிராப்டை ‘பார்’ ஒன்றில் சந்தித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ அவரைத்தலையால் முட்டியதாக எழுந்த சர்ச்சை தற்போது பெரிதாகியுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, களத்துக்கு வெளியே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் இங்கிலாந்து வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் காட்டமாக கடிந்து கொண்டுள்ளார். அதுவும் பிரிஸ்பன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலா…
-
- 0 replies
- 246 views
-
-
இலங்கையுடனான ஒரு நாள் தொடரில் கோஹ்லி இல்லை : அணிக்கு புதிய தலைவர் இலங்கை அணியுடன் நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஓருநாள் தொடரில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு ஓய்வினை வழங்கியிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று திங்கட்கிழமை (27) தெரிவித்திருக்கின்றது. எனினும், தற்பொழுது நடைபெற்று வரும் இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினை தொடர்ந்து கோஹ்லி தலைமை தாங்கி வழிநடாத்துவார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி தர்மசாலாவில் ஆரம்பமாகும் போட்டியுடன…
-
- 26 replies
- 2.7k views
-
-
குறைந்த டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள்: அஸ்வின் உலக சாதனை! இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்று அஸ்வின் இலங்கை அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். இது, அந்த அணியின் 2-வது இன்னிங்ஸில் அவர் வீழ்த்தும் 4-வது விக்கெட்டாகும் இதையடுத்து டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட்டுகளை எட்டியுள்ளார் அஸ்வின். 31 வயது அஸ்வின், 54-வது டெஸ்டில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு டென்னிஸ் லில்லீ, 56 டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை அஸ்வி…
-
- 3 replies
- 496 views
-
-
இன்று கூடுகிறது தேர்வுக்குழு: கோலிக்கு ஓய்வு, ரஹானே கேப்டன்? தற்போது நடந்துவரும் இலங்கைத் தொடர், அடுத்து வரும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணியைத் தேர்வுசெய்ய, தேர்வுக்குழு இன்று கூடுகிறது. இதில், மீதம் இருக்கும் இலங்கைத் தொடரிலிருந்து கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. கடந்த ஐ.பி.எல் தொடர் முதல் தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடிவருகிறார் கேப்டன் கோலி. இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ‘தனக்கும் ஓய்வு தேவைப்படும். அது தேவைப்படும்போது அதைக் கேட்டுப் பெற்றுக்கொள்வேன்’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நான்க…
-
- 0 replies
- 271 views
-
-
றியல், அத்லெட்டிகோ வென்றன ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகள் வென்றுள்ளன. றியல் மட்ரிட், 3-2 என்ற கோல் கணக்கில் மலாகாவை வென்றது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கஸேமீரோ, கரிம் பென்ஸீமா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அத்லெட்டிகோ மட்ரிட், 5-0 என்ற கோல் கணக்கில், லெவன்டேயை வென்றது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, அந்தோனி கிறீஸ்மன், கெவின் கமெய்ரோ ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றதோடு, ஒரு கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. தோற்றது பெயார்ண் மியூனிச் …
-
- 2 replies
- 507 views
-
-
2017இல் உலகின் அதிசிறந்த மெய்வல்லுனர்களாக முடாஸ், தியாம் முடிசூடல் இவ்வாண்டுக்கான சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதை கட்டார் நாட்டைச் சேர்ந்த உயரம் பாய்தல் வீரரான முடாஸ் ஈசா பர்ஸிம் பெற்றுக்கொண்டார். இதன்படி உலக மெய்வல்லுனர் வரலாற்றில் முதற்தடவையாக ஆசிய நாட்டைச் சேர்ந்த வீரரொருவர் இவ்விருதை தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது. மெய்வல்லுனர் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பின் (IAAF) மெய்வல்லுனர் விருதுகள் வழங்கும் விழா மொனோக்கோவில் நேற்று (24) மிக விமர்சையாக நடைபெற்றது. இதன்படி, வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரர் மற்றும் வீராங்கனைக்கான மூவரடங்கிய பெயர்ப்பட்டியல் இம்மாத முற்பகுதியில் வெளியிடப்பட்டது. இதில் அதி சிறந்…
-
- 0 replies
- 308 views
-