விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
தென்ஆப்ரிக்கா எதிர் பங்களாதேஷ் ஒருநாள் & T20 போட்டி தொடர் செய்திகள் தென்னாப்ரிக்காவிற்கு எதிராக சதம் அடித்த முதல் வங்கதேச வீரர்... ரஹீம் சாதனை... வங்கதேச அணி சமீப காலமாக ஒருநாள் கிரிக்கெட் உலகில் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், வங்கதேச அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி தற்பொழுது நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. இதில் அனைத்து வீரர்களும் கணிசமான ரன் குவிக்க வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் மு…
-
- 8 replies
- 863 views
-
-
இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முரளி சொல்கின்ற ஆலோசனைகள் பலனளிக்குமா? சுமார் 140 வருட கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளவரும், இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றவருமாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தற்பொழுது கிரிக்கெட் ஆலோசகர் மற்றும் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் முரளிதரனை லங்காதீப சிங்கள வாரப் பத்திரிகை மேற்கொண்ட விசேட நேர்காணலின் தமிழ் ஆக்கத்தை இங்கு எமது நேயர்களுக்காக பகிர்ந்துகொள்கின்றோம். கேள்வி – …
-
- 1 reply
- 439 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு? இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவும் அவர்களை அதிகாரத்துக்கு கொண்டு வந்த விளையாட்டுக் கழக அதிகாரிகளுமே இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது அநேகமானவர்களின் கருத்தாகும். இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி தொடர்பான ஆராய்வு….. இலங்கை கிரிக்கெட் அணி இவ்வருடத்தில் மாத்திரம் 03 தொடர்களில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. இந்த வருடம் 26 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி அவற்றில் 12 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்தது. அதிலும் சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் தோல…
-
- 0 replies
- 422 views
-
-
மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றும் கனவுகளுடன் காத்திருக்கும் தர்ஷிகா திறமைக்கு வறுமை தடையல்ல...
-
- 0 replies
- 723 views
-
-
கவர் ட்ரைவ் கில்லி... ஃப்ளிக் ஷாட் புலி... கோலியின் பேட்டிங் ப்ளூ ப்ரின்ட்! #VikatanExclusive Chennai: "இந்திய அணியை 20 ஆண்டுகாலம் சுமந்திருந்தார். இது நாங்கள் அவரைச் சுமக்க வேண்டிய தருணம்" - 2011 உலகக்கோப்பையை வென்றதும், சச்சினைத் தன் தோள்களில் மைதானம் முழுதும் சுமந்து சென்ற விராட் கோலி கூறிய வார்த்தைகள். லிட்டில் மாஸ்டரை அன்று சுமந்த தோள்கள்தான், இன்று அவர் சுமந்த இந்தியக் கிரிக்கெட்டையும் சுமந்துகொண்டிருக்கிறது. டி-20யில் நம்பர் 1, ஒருநாள் போட்டியில் நம்பர் 2, டெஸ்டில் ஆறாம் இடம்... அனைத்து ஃபார்மட்களிலும் டாப் 10-ல் இருக்கும் மூன்று வீரர்களுள் முதன்மையானவர் விராட். போட்டிகளின்போது இவரோடு சேர்ந்தே களம் காண்கின்றன சாதனைகள். இந்த வாரமும் தன் சாதனைப் …
-
- 0 replies
- 532 views
-
-
கிரிக்கெட் வீரர்களை காவிமயமாக்கிய உத்திரபிரதேச யோகி அரசு இந்திய வந்துள்ள நியூசிலாந்து அணி கிரிக்கெட் வீரர்களுக்கு காவி துண்டு அணிவித்து, யோகி ஆதித்யநாத் அரசு வரவேற்பு கொடுத்துள்ளது. நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டீ20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முன்னதாக நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் ஆளுக்கொரு முறை வெற்றி பெற்றதால் தொடர் சம நிலையில் உள்ளது. இதனால் 3 வது போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 2 ஒரு நாள் தொடர் முடிந்து 3-வது ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக இரு அணிகளும் கான்பூர் மைதானத்துக்கு வந்தடைந்தது. அங்கு வந்த வீரர்கள் தீபாவளி முடிந்து வந்ததால், அவர்க…
-
- 0 replies
- 439 views
-
-
கோப்பை வெல்ல 10 பாயின்ட் தியரி..! கோலி படைக்கு வாழ்த்துகள் #IndVsNz கிரிக்கெட்டை நன்கு கவனித்து வரும் கடைக்கோடி ரசிகன் முதல், கிரிக்கெட்டையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் நிபுணர்கள் வரை அனைவரிடத்திலும் இருக்கும் ஒரே கேள்வி, "தற்போதுள்ள அணியை வைத்து, 2019-ல் இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பையை, கோலி தலைமையிலான இந்திய அணியால் வென்றுவிட முடியுமா?" இரண்டு வருடங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பையின், அரையிறுதியில், தொடரை நடத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்று, நாடு திரும்பியது தோனி தலைமையிலான இந்திய அணி . அதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டிகளிலும் (முத்தரப்பு தொடர்) இந்தியா, ஃபைனலுக்குத் தகுதி பெறவில்லை. நல்ல ஓப்பனர்கள், அனுபவ மிடில் ஆர்டர் பே…
-
- 0 replies
- 474 views
-
-
டுபாயில் பெண்ணுடன் முறையற்ற வகையில் உரையாடியாடியது யார் ? இலங்கை கிரிக்கெட் விளக்கம் இலங்கை கிரிக்கெட்டைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் பெண் ஒருவருடன் முறையற்ற வகையில் உரையாடியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நிராகித்துள்ளது. டுபாயைச் சேர்ந்த முனாஷா ஜிலானி என்ற பெண் ஊடகவியலாளர் ஒருவர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி இல்லையெனவும் அவர் தனியார் ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 364 views
-
-
சோதனைகளை தாண்டி சாதனை படைக்கும் யாழ். ஹார்ட்லியின் மெய்வல்லுனர்கள் 33 வருடகால வரலாற்றைக் கொண்ட அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் வட பகுதியைச் சேர்ந்த பாடசாலைகள் யுத்த சூழ்நிலை காரணமாக ஆரம்ப காலத்தில் பங்கேற்கவில்லை. எனினும், கடந்த 10 வருடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பாடசாலைகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்று வெற்றிகளைப் பதிவுசெய்து வருவதுடன், தேசிய மட்டத்தில் சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் நிறைவுக்கு வந்த 33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 158 புள்ளிகளைப் பெற்ற வடக்கு மாகாணம், தேசிய மெய்வல்லுனர் அரங்கில் முன்னிலை வகிக்கின்ற வட மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை பின்தள்ளி 6ஆவது இட…
-
- 0 replies
- 692 views
-
-
`தொடர்ச்சியாக சாதிப்பது எப்படி?' - ரகசியம் பகிர்கிறார் புவ்னேஷ்வர் குமார் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவ்னேஷ்வர் குமார் பெற்றார். போட்டி முடிந்த பின்னர் தன் வெற்றிக்கான ரகசியம் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான காரணத்தைப் பற்றி புவ்னேஷ்வர் குமார், `அமைதியாகவும் நம்பிக்கையுடனும் இருப்பது என் இயல்பு. அதை நான் எப்போதும் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. நான் பயிற்சி ச…
-
- 0 replies
- 791 views
-
-
எனது நீண்ட நாள் கனவு நனவாகியது – திசர பெரேரா தேசிய அணிக்கு தலைவராவது தனது நீண்ட நாள் கனவு எனவும், இலங்கை டி T20 அணியின் தலைவராக தான் நியமிக்கப்பட்டது தொடர்பில் பெருமையடைவதாக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா தெரிவித்துள்ளார். அனைத்து வீரர்களுக்கும் தலைமைப் பதவி என்பது ஒரு கனவாகும். அதே போன்று இதுவும் எனது நீண்ட நாள் கனவு என இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26ஆம் திக…
-
- 0 replies
- 408 views
-
-
‘பயிற்சிக்கு போல்ட் வரலாம்’ ஜேர்மனியக் கழகமான பொரிசியா டொட்டமுண்டின் பிரதம நிறைவேற்றதிகாரி ஹன்ஸ் ஜோச்சிம் வட்ஸ்கேயின் கருத்துப்படி, உலகின் வேகமான மனிதனான உசைன் போல்டை, தமது கழகத்தின் பயிற்சிக்கு வரவேற்க பொரிசியா டொட்டமுண்ட் தயாரகவுள்ளது. எப்போதாவது பயிற்சிக்காக போல்ட் இணைந்து கொள்ளலாம் என பொரிசியா டொட்டமுண்ட் கடந்தாண்டு நவம்பரில் தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போதும் அந்த வாய்ப்பை மீண்டும் போல்டுக்கு பொரிசியா டொட்டமுண்ட் தற்போது அளித்திருக்கின்றது. http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/பயிற்சிக்கு-போல்ட்-வரலாம்/44-206034
-
- 0 replies
- 453 views
-
-
திருட்டு வழக்கில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் நடுவர் டேரல் ஹேர் முரளீதரன் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறி ‘நோ-பால்’ கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டேரல் ஹேர் திருட்டு வழக்கில் மாட்டிக் கொண்டார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. கிரிக்கெட் நடுவர் டேரல் ஹேர். 65 வயதாகும் இவர் 1992 முதல் 2008 வரை 78 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 1995-ம் ஆண்டு நடைபெறும்போது முத்தையா முரளீதரன் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று அறிவித்…
-
- 1 reply
- 796 views
-
-
பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருது: ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார் ரொனால்டோ போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருதை ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார். போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். ரியல் மாட்ரிட் அணி இந்த வருடம் லா லிகா, ஸ்பெயின் சூப்பர் கோப்பை, ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியது. இதற்கு ரொனால்டோவின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த வருடத்திற்கான பிஃபாவின் சிறந்த வீரரருக்கான வி்ருது நேற்று அறிவிக்…
-
- 1 reply
- 980 views
-
-
பார்முலா-1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி பார்முலா-1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி 33 நிமிடம் 50.991 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார். ஆஸ்டின்: பார்முலா-1 கார் பந்தயத்தின் 17-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி போட்டி ஆஸ்டினில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ்) 1 மணி 33 நிமிடம் 50.991 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரீ) 2-வது இடம் பிடித்தார். இன்னும் 3 சுற்று பந்தயங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் லீவிஸ் ஹாமில்டன் 331 புள்ளிகளுடன் முதலிடத்தி…
-
- 1 reply
- 474 views
-
-
இதுவரை நீங்கள் பார்த்திராத `அற்புதமான' பெனால்டி கோல் (காணொளி) மிகவும் வியத்தகு முறையில் பெனால்டி கோல் அடித்த பாங்காக் விளையாட்டு கிளப், 20-19 என்ற கோல்கணக்கில் சாட்ரி ஆங்தொங் அணியை வென்றுள்ளது. மிகவும் அதிசயிக்கத்தக்க இந்த கோல் அடிக்கும் காணொளி, நீங்கள் ரசிக்க. http://www.bbc.com/tamil
-
- 0 replies
- 634 views
-
-
டி20 அணியில் சிராஜ், ஷ்ரேயஸ்; டெஸ்ட் அணியில் மீண்டும் முரளி விஜய் முரளி விஜய் - முகமது சிராஜ் | கோப்புப் படங்கள் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் மும்பையைச் சேர்ந்த பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இந்திய டி20 அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். டி20 அணியில் புதிய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 23 வயதான சிராஜ் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார். தென் ஆ…
-
- 1 reply
- 485 views
-
-
சகாப்தம் தாண்டிய ஒரு வீரன் “வி.ரி.மகாலிங்கம்” இலங்கையின் விளையாட்டுத்துறைசார் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவரான வி.ரி.மகாலிங்கம் யாழ்ப்பாணம் நாவலர் வீதியைச் சேர்ந்தவர். விளையாட்டுத் துறையோடு பொலிஸ் துறையில் இணைந்துகொண்ட இவர் எதிர்பாராத விபத்தொன்றில் சிக்கி 1966 ஆம் ஆண்டு உயிரிழந்தார். விளையாட்டுத்துறையில் துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், நீளம்பாய்தல், உயரம் பாய்தல் என பல்வகை ஆளுமை கொண்டவர். அன்றைய காலகட்டத்தில் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக திகழ்ந்தார். பொலிஸ் துறையில் இணைந்தபோதும் தனது விளையாட்டுத்துறைமீதான ஈடுபாடுகளைக் குறைத்துக்கொள்ளாத இவர் மரணிக்கும்வரை இலங்கையில் புகழ்பூத்த விளையாட்டு வீரராகவே திகழ்ந்தார். வி.ர…
-
- 3 replies
- 1.1k views
-
-
மலிங்கவுக்கு வாய்ப்பு இல்லை ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரில் மலிங்கவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மேற்படி போட்டித் தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பெயர்ப் பட்டியலை இலங்கை கிரிக்கெட் சபை சற்று முன் வெளியிட்டது. அதில், மலிங்கவின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பெரிதும் சோபிக்காத லஹிரு திரிமான்னே மற்றும் கௌஷல் சில்வா ஆகியோருக்குப் பதிலாக, ரோஷன் சில்வா அல்லது சதீர சமரவிக்கிரம இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர்களாகக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளியன்று ஆரம்பமாகும் இந்த டெஸ்ட் போட்டி இ…
-
- 19 replies
- 1.3k views
-
-
யாழ் அருணோதயா கல்லூரி நட்சத்திரங்ககளுடன் ஒரு நிமிடம் கோலூன்றிப் பாய்தலில் தேசிய மட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய யாழ்.அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவர்கள், தமது வெற்றியின் பின் ஒரு சில நிமிடங்கள் எம்மோடு இணைந்த வேளை
-
- 1 reply
- 745 views
-
-
BPL தொடரில் முதற்தடவையாக களமிறங்கவுள்ள மாலிங்க ஐந்தாவது தடவையாக நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) டி20 தொடரில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க முதற் தடவையாக களமிறங்கவுள்ளார். இதன்படி, மஷ்ரபி பின் முர்தஷா தலைமையிலான ராங்பூர் ரைடர்ஸ் அணியில் லசித் மாலிங்க களமிறங்கவுள்ளதாக அவ்வணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் டி20 குளோபல் லீக் தொடர், நிலையானதொரு தொலைக்காட்சி உரிம ஒப்பந்தத்தை பெறாமை, தொடருக்கான பிரதான உரிமைகள் அனுசரணையைப் பெறாமை போன்ற காரணத்தினால் ஒத்திவைப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எட…
-
- 0 replies
- 399 views
-
-
இரண்டு நாட்கள் கூட நீடிக்காத சந்தோஷம்! சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் நேர் செட்டில் தோற்று இரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார் மரியா ஷெரபோவா. ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா, ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி போட்டிகளில் ஆடத் தடை செய்யப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகாலப் போராட்டத்தின் பின் மீண்டும் டென்னிஸ் அரங்கில் மீள் பிரவேசம் செய்த அவர், தான் இன்னமும் ஒரு வெற்றி வீராங்கனைதான் என்று நிரூபித்தார். நீண்ட இடைவேளைக்குப் பின் டென்னிஸ் களமிறங்கிய ஷரபோவா, ‘தியான்ஜின் ஓப்பன்’ தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்தார். ஆனால், இந்த மகிழ்ச்சி இரண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லை. …
-
- 0 replies
- 523 views
-
-
618 விக்கெட்டுகள் எடுத்தால் அதுவே எனது கடைசி போட்டி: அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக அஸ்வின் திகழ்கிறார். இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார். இதனால் உலகளவில் தலைசிறந்த வீரராகத் திகழ்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 292 விக்கெட்டுகளும் (சராசரி 25.26), ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளும் (சராசரி 32.91) வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை மற்றும் அடுத்து நடைபெறவுள்ள நியூஸிலாந்து தொடர்களுக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை. இவ்விகாரம் தொடர்பாகவ…
-
- 0 replies
- 550 views
-
-
மெத்தியூஸுக்கு 5 ஆவது இடம் எதற்குத் தெரியுமா ? அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவரான ஸ்டீவன் ஸ்மித் உலகில் அதிக வருமானத்தை ஈட்டும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் எஞ்சலோ மெத்தியூஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளமை சிறப்பம்சமாகும். உலகில் அதிக வருமானத்தை ஈட்டும் கிரிக்கெட் வீரர்கள் நாடுகள் ரீதியாக கணிப்பிடப்பட்டது. இதன்படி அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டீவன் ஸ்மித்தும் இங்கிலாந்திலிருந்து ஜோய் ரூட்டும் இந்தியாவிலிருந்து விராட் கோஹ்லியும் தத்தம் நாடுகளில் அதிக வருமானத்தை ஈட்டும் வீரர்களாக காணப்படுகின்றனர். இதன்படி, தென்னாபிரிக்கவிலிருந்து டுப்பிளெஸிஸும் இலங்கையிலிருந்து அஞ்சலே…
-
- 1 reply
- 481 views
-
-
மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய வந்தவரை நிராகரித்த பாக். வீரர் சர்ஃபராஸ்: அதிகாரிகளிடம் புகார் சர்ஃபராஸ் அஹம்த் | கோப்புப் படம்: ஏபி துபாயில் தன்னைத் தொடர்பு கொண்டு மேட்ச் பிக்ஸிங் செய்ய முயன்றவரைப் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் சர்ஃபராஸ் அஹமத் கூறியுள்ளார். பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ஃபராஸ் அஹமதை ஒருவர் அணுகி மேட்ச் ஃபிக்ஸிங் குறித்து பேசியுள்ளார். ஆனால் அவரது கோரிக்கையை உடனடியாக மறுத்துள்ள சர்ஃபராஸ் சம்பந்தப்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றை சொல்லிய…
-
- 0 replies
- 455 views
-